Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு,கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டால், பரீட்சையின் போது வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளை தொடங்குவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது பரீட்சைக்கு இடையூறு ஏற்படும் என்பதால் பரீட்சை முடியும் வரை தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக, பரீட்சை சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நடவடிக்கை இந்த வாரம் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட கட்சித் தலைவர் கூட்டம் நாளை (03) நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான வேட்புமனுக்களை மீள அழைப்பது தொடர்பிலும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் கட்சி மாறியதாலும், சிலர் வெளிநாடு சென்றுள்ளதாலும், மேலும் சிலர் அரசியலில் இருந்து விலகியதாலும் உள்ளூராட்சி
மன்றத் தேர்தலுக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்ய அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சஜித் பிரேமதாச ஜப்பானிய தூதுவரிடம் கோரிக்கை
சஜித் பிரேமதாச ஜப்பானிய தூதுவரிடம் கோரிக்கை
சஜித் பிரேமதாச ஜப்பானிய தூதுவரிடம் கோரிக்கை இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜப்பானிய தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜப்பானிய தூதுவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றபோது, எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவைப் பேணுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கு தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த காலங்களில் ஜப்பானினால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்குத்
தேவையான அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது உறுதியளித்துள்ளார்.
கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்து
கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்து
கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்து மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதான வீதியில் ராஹூல சந்திக்கு அருகில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து நேற்று (01) இரவு இடம்பெற்றுள்ளதுடன், காரில் பயணித்த மூவர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கார் அக்குரஸ்ஸவிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததால், சாரதியால் காரைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்து இடம்பெற்றுள்ளதுடன் கார் பலத்த சேதமடைந்துள்ளது.
இந்த விபத்தில் வீதியின் ஓரத்தில் இருந்த மின்கம்பமும் சேதமடைந்துள்ளதுடன்,
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லொஹான் மற்றும் ஷஷிக்கு மீண்டும் விளக்கமறியல்
லொஹான் மற்றும் ஷஷிக்கு மீண்டும் விளக்கமறியல்
லொஹான் மற்றும் ஷஷிக்கு மீண்டும் விளக்கமறியல் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது
செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது மனைவியை டிசம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியான ஷஷி பிரபா ரத்வத்தவிற்குச் சொந்தமான மிரிஹான அம்முதெனிய சாலாவ
வீதியிலுள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்படி குறித்த கார் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அது சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட கார் என தெரியவந்துள்ளது.
ஒக்டோபர் 30 ஆம் திகதி லொஹான் ரத்வத்த, அந்த காரை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கட்டுகஸ்தோட்டையில் வைத்து மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் ரத்வத்தவின் மனைவியான ஷஷி பிரபா ரத்வத்தவும் நவம்பர் 4ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதுடன், குறித்த கார் தொடர்பில் அவர் அறிந்திருக்கவில்லை என தெரிவித்தாக மிரிஹான
பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து, சந்தேகநபர் ஷஷி ரத்வத்தவையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சந்தேகநபர்கள் இன்று காலை நுகேகொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது சந்தேகநபர்களான
இருவரையும் டிசம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம்
பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம்
பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம் இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று காலை (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி
அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கையின் பிரதம நீதியரசர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்ணாகவும், இலங்கையின் 48ஆவது பிரதம நீதியரசராகவும் முர்து பெர்னாண்டோ வரலாற்றில் இணைகிறார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஓய்வுபெற்றதையடுத்து வெற்றிடமானபதவிக்கு அவரது பெயர் அரசியலமைப்பு சபையினால் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது.
1985 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்ட அவர் 1997 ஆம் ஆண்டு பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும் 2014 ஆம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி உயர்வு பெற்றார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரசதரப்புச் சட்டத்தரணியாக இணைந்து 30 வருடங்களுக்கும் மேலாக அங்கு பணியாற்றியுள்ள முர்து பெர்னாண்டோ, 2018 மார்ச் மாதம் உச்ச நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.முர்து
பெர்னாண்டோ சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக கடமையாற்றியதுடன், உச்ச நீதிமன்றத்தின் தற்போது பணியாற்றும் சிரேஷ்ட நீதிபதி இவராவார்.
மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் பழைய மாணவியான முர்து பெர்னாண்டோ, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் சட்டத்துறை இளமானிப் பட்டம் பெற்றுள்ளார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.
இருவர் வெட்டிக் கொலை
இருவர் வெட்டிக் கொலை
இருவர் வெட்டிக் கொலை நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓயாமடுவ – நவோதகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பண்டாரகம, பேமதுவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (01) பிற்பகல் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு அதிகரித்து கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலை தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓயாமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, ஓமந்தை – பரசன்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை கெப் வண்டியில் வந்த குழுவினர் தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில், வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன், அவர் பயணித்த கெப் வண்டியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
அநுரவுக்கு ரணில் பாராட்டு.
அநுரவுக்கு ரணில் பாராட்டு.
அநுரவுக்கு ரணில் பாராட்டு. ஜனாதிபதி அநுரவுக்க ரணில் பாராட்டு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும்
இணங்கி வருவதற்கு ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (01) பிற்பகல் அமாரி ஹோட்டல் குழுமத்துக்கு சொந்தமான அமாரி கொழும்பு ஹோட்டலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
அமாரி கொழும்பு ஹோட்டல் குழுமமானது கொழும்பில் உள்ள இலங்கை தொழிலதிபர் ஒருவருக்க சொந்தமான முதல் ஐந்து நட்சத்திர சர்வதேச ஹோட்டலாகும்.
வினில் மெனிக் நிறுவனத்தின் உரிமையாளர் டபிள்யூ.வினில் தலைமை தாங்குகிறார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் விஜித ஹேரத், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல அதிதிகள் ஹோட்டல் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.
வாகன விபத்துக்களில் மூவர் பலி
வாகன விபத்துக்களில் மூவர் பலி
வாகன விபத்துக்களில் மூவர் பலி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு வாகன விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (30) பேலியகொட, சீகிரியா மற்றும் குட்டிகல பொலிஸ் பிரிவுகளில் குறித்த விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கொழும்பு – கண்டி வீதியில் களனி பாலத்திற்கு அருகில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் பலத்த காயமடைந்து வீதியில் விழுந்துள்ளதாக பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, விரைந்து செயற்பட்ட பொலிஸ் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் காயமடைந்தவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், குறித்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
களனியில் தற்காலிகமாக வசித்து வந்த அம்பாறை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, தம்புள்ளை – ஹபரணை வீதியின் இனாமலுவ பிரதேசத்தில் வீதியைக் கடந்த பாதசாரி ஒருவர் மீது லொறியொன்று மோதியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த நபர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இனாமலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
பெல்மடுல்ல – நோனாகம வீதியின் ஹாகல பிரதேசத்தில் உழவு இயந்திரத்தின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 45 வயதுடைய பெரலனாதர பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்
வானிலையால் லட்சக்கணக்கானோர் இன்னும் பாதிப்பு
வானிலையால் லட்சக்கணக்கானோர் இன்னும் பாதிப்பு
வானிலையால் லட்சக்கணக்கானோர் இன்னும் பாதிப்பு ,சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் 53,888 குடும்பங்களைச் சேர்ந்த 143,726 பேர் இன்னும் பாதுகாப்பான இடங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
இதன்படி 45,418 குடும்பங்களைச் சேர்ந்த 116,209 பேர் உறவினர் வீடுகளிலும், 8470 குடும்பங்களைச் சேர்ந்த 27,517 பேர் 229 பாதுகாப்பான இடங்களில்
தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 103 வீடுகள் முழுமையாகவும் 2635 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இதுவரை 24 மாவட்டங்களில் 142,624 குடும்பங்களைச் சேர்ந்த 479,871 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டின் பல மாகாணங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டன.
கடும் மழை காரணமாக தெதுரு ஓயா, பேராறு, உல்ஹிட்டிய ரத்கிந்த, பொல்கொல்ல, நாச்சதுவ, ராஜாங்கனை, கலாவெவ மற்றும் வெஹெரகல ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மகாவலி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் சில நாட்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியானது தற்போது இலகு ரக வாகன போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக ஹாலிஎல உடுவர மேல்பகுதியில் விழுந்த மண் மற்றும் கற்கள் அகற்றப்பட்டு வருவதாகவும், பதுளை மற்றும் எல்லயிக்கு இடையே
ரயில் சேவையை இயக்க இன்னும் சில நாட்கள் ஆகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கலா ஓயா, மல்வத்து ஓயா, ஹெட ஓயா, தெதுருஓயா, மஹாவலி கங்கை மற்றும் முந்தேனி ஆற்றுப்படுகை ஆகியவற்றுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய அறிவிப்புகள் தொடர்ந்தும் அமுலில் உள்ளன.
சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக, 09 மாவட்டங்களில் உள்ள 72 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது பிரித்தானிய நாட்டில் பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்த நபர் ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரால் சேகரிக்கப்பட்ட பணம் கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் குறித்த சந்தேகநபர், 2009 ஆம் ஆண்டு நாட்டை விட்டுச் சென்று பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் பெற்ற பயணத்தடை உத்தரவிற்கு அமைய சந்தேகநபர் நேற்று (30)
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவினரால் பொறுப்பேற்று விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அதன்படி விமான நிலைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மற்றும் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
யானை தாக்கி கடற்படை அதிகாரி மரணம்
யானை தாக்கி கடற்படை அதிகாரி மரணம்
யானை தாக்கி கடற்படை அதிகாரி மரணம் வவுனியாவில் கடற்படை லெப்டினன்ட் தர அதிகாரி ஒருவர் காட்டு யானை தாக்குதலால் மரணமடைந்துள்ளதாக பூனாவ பொலிஸார் தெரிவித்தனர்.
பணி நிமித்தமாக கொழும்புக்கு சென்று விட்டு பேருந்தில் முகாமிற்கு திரும்பிய அதிகாரி வாகனத்தில் இருந்து இறங்கி முகாமிற்கு சென்று
கொண்டிருந்த போது நேற்று இரவு (29) யானை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பூனாவ கடற்படை முகாமில் கடமையாற்றிய மத்தலான, நிட்டம்புவவில் வசிக்கும் கடற்படை வீரரான லெப்டினன்ட் தர அதிகாரியே யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
யானை தாக்கியதில் பலத்த காயம் அடைந்த அவரை, கடற்படையினர் மற்றும் உள்ளூர் மக்களும் இணைந்து வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு
சென்றனர். பலத்த காயமடைந்த அதிகாரி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனை வவுனியா பொது
வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளது. பூனாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ் ஒருங்கிணைப்பு தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம்
யாழ் ஒருங்கிணைப்பு தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம்
யாழ் ஒருங்கிணைப்பு தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றோழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் கடந்த 28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக பாராளுமன்ற
உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது நியமனம் தொடர்பாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் போராசிரியர் ஏ. எச்.எம்.எச். அபயரத்ன
அவர்களினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருக்கு முகவரியிடப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் அறியத்தரப்பட்டுள்ளது.
இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது
இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது
இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரை இலஞ்ச பெற்ற
குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட மோட்டார் வாகனம் தொடர்பான பிரச்சினையை விசாரிப்பதற்கும் நீதிமன்றத்தினால் மோட்டார் வாகனத்தை
மீளப் பெற்றுக் கொள்வதற்கு உதவுவதற்கும் குறித்த பொலிஸ் அதிகாரி 270,000 ரூபா பெறுமதியான குளிரூட்டியை இலஞ்சமாக கேட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
முறைப்பாட்டாளரால் குளிரூட்டியை கொள்வனவு செய்த விற்பனை நிலையத்தின் முகாமையாளரின் கணக்கில் குறித்த தொகை வரவு
வைக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த கைது செய்யப்பட்டுள்ளது.
பன்றிக் காய்ச்சல் தொடர்பான அறிவிப்பு
பன்றிக் காய்ச்சல் தொடர்பான அறிவிப்பு
பன்றிக் காய்ச்சல் தொடர்பான அறிவிப்பு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நோயினால் பாதிக்கப்படாத பண்ணைகளில் உள்ள இறைச்சியை பாதுகாப்பான முறையில் மனித பாவனைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் மருத்துவர் சிசிர பியசிறி தெரிவித்தார்.
இதேவேளை, ஆபிரிக்க பன்றிக்காய்ச்சலால் பல பண்ணைகள் முற்றாக அழிந்துள்ளதாக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே தமது தொழில்களை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தீயில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு
தீயில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு
தீயில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு முல்லைத்தீவு-சிலாவத்துறை பகுதியில் தீயில் சிக்கி ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 75 வயதுடையவர் என்பதுடன், அவர் தனது மகனின் வீட்டிற்கு அருகிலுள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்துள்ளார்.
குளிரான காலநிலை காரணமாக வீட்டுக்குள் பற்றவைக்கப்பட்ட தீ பரவியதில் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புயலின் தற்போதைய நிலை
புயலின் தற்போதைய நிலை
புயலின் தற்போதைய நிலை தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் நேற்று (29) இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 360 கிலோமீற்றர் தொலைவிலும், காங்கசன்துறையிலிருந்து வடகிழக்கே 280
கிலோமீற்றர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு திசையில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வட தமிழகம்-புதுச்சேரி கடற்கரையை இன்று (30) மாலை அடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதன்படி, நாட்டின் வானிலையில் இந்த அமைப்பின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதாக திணைக்களம் இன்று காலை தெரிவித்துள்ளது.
எனினும் வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.
குறிப்பாக வட மாகாணத்தில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் அதேவேளை, மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது 50-55 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்களை அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது
உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது
உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது அம்பன்பொல-நெகுன்னேவ பிரதேசத்தில் உள்ளாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அம்பன்பொல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான நபர் 63 வயதுடைய அம்பன்பொல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர்.
6 கோடி ரூபா சொத்துக்களை கொள்ளையடித்த 9 பேர் கைது
6 கோடி ரூபா சொத்துக்களை கொள்ளையடித்த 9 பேர் கைது
6 கோடி ரூபா சொத்துக்களை கொள்ளையடித்த 9 பேர் கைது ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி, 6 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான நீல மாணிக்கக்கல், தங்கப் பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டமை தொடர்பில் 9 பேர் நேற்று (29) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த நவம்பர் 10ஆம் திகதி லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மாவத்தகம மற்றும் பொல்பித்திகம பொலிஸ் பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம், 7 பவுண் தங்கம் மற்றும் 2 பொம்மை கைத்துப்பாக்கிகள், கத்தி மற்றும் வேன் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் தேரர் ஒருவரும் அடங்குவதாக தெரியவருகிறது.
சந்தேகநபர்கள் வத்தேகம, சபுகஸ்கந்த, பொல்பித்திகம, குருநாகல், இரத்தினபுரி மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக்
கொண்ட 38 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்
திருடனை பிடித்த பொது மக்கள்
திருடனை பிடித்த பொது மக்கள்
திருடனை பிடித்த பொது மக்கள் ,திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொது மக்கள் இராணுவத்தினரின் உதவியுடன் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையாளபுரம் பகுதியில் குறித்த சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது.
வீதியால் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம் குறித்த சந்தேக நபரும் மற்றொரு சந்தேக நபரும் தொலைபேசியை கேட்டு உதவி கோரியுள்ளனர்.
தமது மோட்டார் சைக்கிளில் எரிபொருள் தீர்ந்துவிட்டதாகவும் நண்பர்களின் உதவியை கோர தொலைபேசியை கோரியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பெண் உதவ முன்வந்தபோது அப்பெண்ணின் கைப்பையை பறிக்க முற்பட்டுள்ளனர். இதன்போது உதவி கோரி குறித்த பெண் சத்தமிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் இராணுவ முகாம் இருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு படையினர் சென்று அப்பெண்ணிற்கு உதவ முயன்றனர்.
அச்சமயம் ஒருவர் குறித்த பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்துத் தப்பி சென்றுள்ளதாக அப்பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மற்றைய சந்தேக நபரை இராணுவத்தினர் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்தில் பொதுமக்கள் பலரும் கூடியிருந்ததுடன், மற்றைய சந்தேக நபரை தேடி வருகின்றனர். பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் நடந்த பகுதியில் பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெறுவதாகவும், அப்பகுதியில் மின்விளக்கு ஒன்றை பொருத்தி உதவுமாறும் பொது மக்கள் இராணுவத்தினரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
உடனடியாக அப்பகுதியில் மின்விளக் கொன்றை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக குறித்த இராணுவ முகாமின் பொறுப்பு நிலை அதிகாரி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது
வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்
வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்
வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வடக்கு- கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, வைத்தியர் ஆர்.முரளிஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியர் ஜி.சுகுணன் மட்டக்களப்பு கல்முனை வடக்கு வைத்தியசாலையின் பணிப்பாளராகவும், வைத்தியர் டி.வினோதன் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், வைத்தியர்
கே.ஜி.சீ.வை.எஸ்.வீ.வீரக்கோன் ஊவா மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், திருமதி பி.எஸ்.என்.விமலரட்ண கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும்,
என்.சீ.டி.ஆரியரட்ண வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும், டபிள்யூ.ஏ.நி. நிச்சங்க அம்பாறை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், எம்.எச்.எம்.அசாத் மன்னார் மாவட்ட பொது
வைத்தியசாலை பணிப்பாளராகவும், டபிள்யூ.கே.சீ.பீ.வீரவத்த கிளிநொச்சி பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும், டி.எம.ஏ.கே.திசாநாயக்க கிளிநொச்சி மாவட்ட பிரந்திய சுகாதார சேவைகள் திணைக்கள
பணிப்பாளராகவும், எஸ்.என்.வீ.பிரேமதாச முல்லைத்தீவு பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 2 ஆம் திகதிக்கு பின் அமுலுக்கு வரும் வகையில் இவ் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.


























