எல்லோரும் துரோகி |நான் மட்டும் நல்லவன் அர்ச்சுனா mp |Dr Archuna News
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

எல்லோரும் துரோகி |நான் மட்டும் நல்லவன் அர்ச்சுனா mp |Dr Archuna News

எல்லோரும் துரோகி |நான் மட்டும் நல்லவன் அர்ச்சுனா mp |Dr Archuna News

எல்லோரும் துரோகி |நான் மட்டும் நல்லவன் அர்ச்சுனா mp |Dr Archuna News

வீடியோ

அர்ச்சுனா இரகசிய திட்டம் |உடைத்தமுக்கிய புள்ளிகள் | அர்ச்சுனா செய்தி அர்ச்சுனா mp |Dr Archuna News
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனா இரகசிய திட்டம் |உடைத்தமுக்கிய புள்ளிகள் | அர்ச்சுனா செய்தி அர்ச்சுனா mp |Dr Archuna News

அர்ச்சுனா இரகசிய திட்டம் |உடைத்தமுக்கிய புள்ளிகள் | அர்ச்சுனா செய்தி அர்ச்சுனா mp |Dr Archuna News

அர்ச்சுனா இரகசிய திட்டம் |உடைத்தமுக்கிய புள்ளிகள் | அர்ச்சுனா செய்தி அர்ச்சுனா mp |Dr Archuna News

வீடியோ

Posted in இலங்கை செய்திகள்

பெண்ணொருவர் சுட்டுக்கொலை

பெண்ணொருவர் சுட்டுக்கொலை

பெண்ணொருவர் சுட்டுக்கொலை மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் வீடொன்றில் இருந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (05) இரவு பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண், பதவிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பாலயாவெவ, போகஹவெவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்காக டி56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

பதவிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காலக்கெடு இன்றுடன் நிறைவு
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காலக்கெடு இன்றுடன் நிறைவு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காலக்கெடு இன்றுடன் நிறைவு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காலக்கெடு இன்றுடன் நிறைவு 2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான காலக்கெடு இன்று (06) நள்ளிரவுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலில் போட்டியிட்ட 8361 வேட்பாளர்களில் 1985 பேர் மட்டுமே அந்த அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.எல்ஏ.ரத்நாயக்க குறிப்பிட்டார்.

குறித்த காலத்திற்குள் உரிய அறிக்கைகளை வழங்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் உள்ளுராட்சி சபை தேர்தலை விரைந்து நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மாபியாவை விரைவில் ஒழிப்போம் அநுர குமார திசாநாயக்க
Posted in இலங்கை செய்திகள்

மாபியாவை விரைவில் ஒழிப்போம் அநுர குமார திசாநாயக்க

மாபியாவை விரைவில் ஒழிப்போம் அநுர குமார திசாநாயக்க

மாபியாவை விரைவில் ஒழிப்போம் அநுர குமார திசாநாயக்க அரிசி நெருக்கடியை தீர்ப்பதற்காக கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திற்கு இம்மாதம் 20ஆம் திகதிக்குள்

50,000 மெற்றிக் தொன் அரிசி கிடைக்கப்பெறவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரிசி கையிருப்பு தொடர்பான அறிக்கைகள் தொடர்பில் சிக்கல் நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் அரிசி மாபியாவை முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் தயாராகி வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

“நாங்கள் வந்து சிறிது காலத்தில் நாட்டினுள் போதுமான அரிசி உள்ளதாக விவசாயத் திணைக்களத்திடம் இருந்து எங்களுக்குத் தகவல் வந்தது.

ஆனால் நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய கணக்கெடுப்பின்படி அரிசிக்கு தட்டுப்பாடு இருப்பது தெரியவந்துள்ளது.

எனவே அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்தோம்.

“இரண்டு அல்லது மூன்று பேரின் ஏகபோக உரிமைக்கு இது அனுமதிக்கப்படவில்லை.

இப்போது அந்த பலம் அவர்களிடம் உள்ளது. ஏனென்றால் நம்மிடம் கட்டுப்படுத்த எந்த கருவியும் இல்லை.

நாங்கள் கடினமான நிலையில் இருக்கிறோம். தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். ஆனால் அதற்கு சிறிது காலம் எடுக்கும்” என்றார்.

காவலாளியை கொலை செய்து கொள்ளை
Posted in இலங்கை செய்திகள்

காவலாளியை கொலை செய்து கொள்ளை

காவலாளியை கொலை செய்து கொள்ளை

காவலாளியை கொலை செய்து கொள்ளை நுவரெலியா, டிப்போவில் பணிபுரிந்த காவலாளி ஒருவரைக் கொன்று, டிப்போவில் இருந்த 9 இலட்சம் ரூபா பணத்தை சிலர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

டிப்போவில் காவலராகப் பணியாற்றிய நுவரெலியா கல்பாய பிரதேசத்தைச் சேர்ந்த 85 வயதான கே.லோகேஸ்வரன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிலர் காவலரை கொன்றுவிட்டு டிப்போவின் அலமாரியில் இருந்த சுமார் 9 லட்சம் ரூபாயை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காவலர் தனது பாதுகாப்பு அறையில் தங்கியிருந்ததாகவும், அப்போது சிலர் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கி கொன்று பணத்தை கொள்ளையிட்டுச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவத்தின் போது டிப்போவிற்குப் பொறுப்பான அதிகாரியும் காசாளரும் டிப்போவில் தங்கியிருந்த போதிலும் அவர்கள் உறங்கிக்

கொண்டிருந்த வேளையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா டிப்போவில் நேற்று (05) ஓடிய பேருந்துகளின் வருமானம், வங்கிப் பணிகளுக்காக அலமாரியில் வைக்கப்பட்டிருந்ததாக நுவரெலியா டிப்போவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை

அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை

அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை… சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து தாக்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை

நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்று (03) இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத் தொடருக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இனவாதத்தை தூண்டும் சதித்திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இனவாதத்தை தூண்டும் சதித்திட்டம்

இனவாதத்தை தூண்டும் சதித்திட்டம்

இனவாதத்தை தூண்டும் சதித்திட்டம் வடக்கில் மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்யப்பட்டு வரும் காணொளிகளானது கடந்த காலங்களில் வௌிநாடுகளில் நடைபெற்ற

வைபவங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இன்று (04) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வௌியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் வடக்கில் புலிகளின் கொண்டாட்டங்களுக்கு அனுமதியளித்ததாக சிலர் நம்ப வைக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

விசாரணையில் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சி இது போன்ற செயல்களில் ஈடுபட்டது உறுதியானது என்றும், இது தொடர்பாக பலரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலங்கள்
Posted in இலங்கை செய்திகள்

விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலங்கள்

விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலங்கள்

விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலங்கள் திருடப்பட்ட சொத்துக்களை மீட்பது தொடர்பான 3 புதிய சட்டமூலங்கள் எதிர்வரும்

காலாண்டில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குற்றச் சட்டமூலம், மீட்பு, புனர்வாழ்வு மற்றும் திவால் சட்டமூலம், கணக்காய்வு சட்டமூலம் ஆகியவற்றுக்கான திருத்தங்கள் இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே தெரிவித்தார்.

புஸ்ஸ சிறைச்சாலை வளாகத்தில் தொலைபேசி உபகரணங்கள்
Posted in இலங்கை செய்திகள்

புஸ்ஸ சிறைச்சாலை வளாகத்தில் தொலைபேசி உபகரணங்கள்

புஸ்ஸ சிறைச்சாலை வளாகத்தில் தொலைபேசி உபகரணங்கள்

புஸ்ஸ சிறைச்சாலை வைத்தியசாலை வளாகத்திலும் சிறைச்சாலை வளாகத்திலும் ஏராளமான கையடக்க தொலைபேசி உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படை புஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறைச்சாலை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சிறைச்சாலை வைத்தியசாலை மைதானத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை

நடவடிக்கையின் போதே குறித்த உபகரணத் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலை வைத்தியசாலை மற்றும் சிறைச்சாலையில் 5 கையடக்கத் தொலைபேசி சார்ஜர்களும் 8 டேட்டா கேபிள்களும் காணப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசி பாகங்கள் மேலதிக விசாரணைகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

ஒருவருக்கு ஒரு துப்பாக்கி
Posted in இலங்கை செய்திகள்

ஒருவருக்கு ஒரு துப்பாக்கி

ஒருவருக்கு ஒரு துப்பாக்கி


ஒருவருக்கு ஒரு துப்பாக்கி தற்காப்புக்காக துப்பாக்கிகளை வழங்கும்போது, ஒருவருக்கு ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

துப்பாக்கிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஒரு நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், பாதுகாப்பு பகுப்பாய்வு நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

எனினும், அந்த பகுப்பாய்வின் பின்னர் மற்றொரு துப்பாக்கி வழங்குவதா, இல்லையா? என்பது தொடர்பான இறுதி முடிவு பாதுகாப்பு அமைச்சிடம் தான் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பான ஆய்வுகள் தற்போது பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் நடத்தப்படுகின்றன.

பொதுமக்களுக்கு 1500இற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், சில நபர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது
Posted in இலங்கை செய்திகள்

பிரபல கசினோ விடுதி சுற்றிவளைப்பு

பிரபல கசினோ விடுதி சுற்றிவளைப்பு

பிரபல கசினோ விடுதி சுற்றிவளைப்பு கொள்ளுப்பிட்டியில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனயை முன்னெடுத்து வந்த பிரபல கசினோ விடுதியொன்று மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுங்கவரியில்லா 100 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதோடு, அவற்றின் மொத்த பெறுமதி 25 இலட்சம் ரூபாவுக்கு அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

ஐந்து மாடிகளைக் கொண்ட விடுதியில் ஒவ்வொரு தளத்திற்கும் வருகை தரும் உறுப்பினர்களுக்கு இலவச மதுபானம் வழங்கப்படுகின்றன.

எவ்வாறாயினும், அந்தந்த இடத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உரிமத்தின் மூலம் ஒரு மதுபானக் கூடத்தை மாத்திரமே இயக்க முடியும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டுக்கு பாரிய வரி இழப்பு ஏற்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் பணிப்புரையின் பேரில், தலைமை அலுவலகம் மற்றும் கொழும்பு நகர மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

லொஹான் மற்றும் ஷஷிக்கு மீண்டும் விளக்கமறியல்
Posted in இலங்கை செய்திகள்

8 இந்தோனேசிய பிரஜைகள் கைது

8 இந்தோனேசிய பிரஜைகள் கைது

8 இந்தோனேசிய பிரஜைகள் கைது விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த 08 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாவா எலியா பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 மற்றும் 65 வயதுடைய இந்தோனேசிய பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இராணுவ முகாமில் சுகயீனம்
Posted in இலங்கை செய்திகள்

54 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

54 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

54 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 5 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் 35 சிரேஷ்ட பொலிஸ்

அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தவிர 7 பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் 7 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக இருந்த மகளிர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.டபிள்யூ.ஐ.எஸ்.முத்துமால

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எம்.எம்.எஸ் தெஹிதெனிய, நுகேகொட பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி பதவிப்பிரமாணம்

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி பதவிப்பிரமாணம்

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி பதவிப்பிரமாணம் ,முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி ​தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எஸ். எம். நளீம் இன்று (03)

சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது.

இதன்படி, கட்சிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ளதுடன், அந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இவரை நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தது.

இவர் இதற்கு முன்பு ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 வருடங்களாக தீவு ஒன்றில் சிக்கித் தவித்த 60 இலங்கைத் தமிழர்கள்
Posted in இலங்கை செய்திகள்

3 வருடங்களாக தீவு ஒன்றில் சிக்கித் தவித்த 60 இலங்கைத் தமிழர்கள்

3 வருடங்களாக தீவு ஒன்றில் சிக்கித் தவித்த 60 இலங்கைத் தமிழர்கள்

3 வருடங்களாக தீவு ஒன்றில் சிக்கித் தவித்த 60 இலங்கைத் தமிழர்கள் இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த புலம்பெயர்ந்த இலங்கைர்கள் குழுவொன்று இங்கிலாந்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

16 குழந்தைகள் உட்பட 60 பேர் அடங்கிய இலங்கைத் தமிழர்கள் குழுவொன்றே இவ்வாறு இங்கிலாந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

கடந்த 2021 நவம்பர் மாதம் முதல் இந்த குழுவினர் டியாகோ கார்சியா தீவில் அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் மோசமான நிலையில் வசித்து வந்துள்ளனர்.

இவ்வாறு, இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள், அந்நாட்டில் 6 மாதக்காலம் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த ஆறு மாதங்களுக்கு தேவையான நிதி வசதியையும் அந்நாட்டு வௌிவிவகார அமைச்சு வழங்க தீர்மானித்துள்ளது.

இவர்கள் தீவில் இருந்த காலப்பகுதியில், பல உண்ணாவிரதங்கள் மற்றும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் அதில் சிலர் சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முகாமுக்குள் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுகளும் பதிவாகியுள்ளதாக ‘பிபிசி’ தெரிவித்துள்ளது.

விலை அதிகரிப்பால் மக்கள் கவலை
Posted in இலங்கை செய்திகள்

மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு நேர்ந்த கதி

மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு நேர்ந்த கதி

மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு நேர்ந்த கதி கலால் கட்டளைச் சட்டத்தின்படி, கலால் வரி செலுத்துவதை தொடர்ந்தும் புறக்கணிக்கும் நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகளை இடைநிறுத்தவும், உற்பத்தி

உரிமத்தை அடுத்த வருடத்திற்கு நீடிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு 23 மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு உற்பத்தி உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கலால் வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை செலுத்த நவம்பர் 30ஆம் திகதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று

நிறுவனங்களைத் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் தங்கள் மதுபான உரிமம் தொடர்பான கலால் நிலுவையை செலுத்தியதாக கூறப்படுகிறது.

அதன்படி, வெலிசர டபிள்யூ எம் மெண்டிஸ் அன்ட் கோ லிமிடெட், குருநாகல் ரோயல் சிலோன் டிஸ்டில்லரீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மீகொட மெக்கல்லம் ப்ரூவரி லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் வரி செலுத்தாததால் அந்த

நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த வழக்கு தீர்ப்புகளுக்கு அமைய, அந்த நிறுவனங்கள் மீது மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

தற்போது செயலிழந்துள்ள லுனுவில க்ளோ பிளெண்டர்ஸ், வயம்ப ஸ்பிரிட் கம்பனி மற்றும் பயாகல கூட்டுறவு டிஸ்டில்லரிஸ் ஆகிய நிறுவனங்களின்

உரிமைகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும், அதன்பின் அவற்றுக்கான வரி நிலுவையை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுதவிர வடமாகாணத்தின் வான்கானைவில் அமைந்துள்ள வலிகாமம் மதுபான தொழிற்சாலை தொடர்பான கலால் வரி நிலுவையை செலுத்தும்

வரை மதுபான உற்பத்தியை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் சலுகைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

அமைச்சர்களின் சலுகைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

அமைச்சர்களின் சலுகைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

அமைச்சர்களின் சலுகைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகளை மீள்பரிசீலனை

செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.டி. சித்ரசிறி தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை

திங்கட்கிழமை (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு,கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டால், பரீட்சையின் போது வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளை தொடங்குவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது பரீட்சைக்கு இடையூறு ஏற்படும் என்பதால் பரீட்சை முடியும் வரை தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக, பரீட்சை சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நடவடிக்கை இந்த வாரம் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட கட்சித் தலைவர் கூட்டம் நாளை (03) நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான வேட்புமனுக்களை மீள அழைப்பது தொடர்பிலும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் கட்சி மாறியதாலும், சிலர் வெளிநாடு சென்றுள்ளதாலும், மேலும் சிலர் அரசியலில் இருந்து விலகியதாலும் உள்ளூராட்சி
மன்றத் தேர்தலுக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்ய அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சஜித் பிரேமதாச ஜப்பானிய தூதுவரிடம் கோரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

சஜித் பிரேமதாச ஜப்பானிய தூதுவரிடம் கோரிக்கை

சஜித் பிரேமதாச ஜப்பானிய தூதுவரிடம் கோரிக்கை

சஜித் பிரேமதாச ஜப்பானிய தூதுவரிடம் கோரிக்கை இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜப்பானிய தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜப்பானிய தூதுவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றபோது, ​​எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவைப் பேணுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கு தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த காலங்களில் ஜப்பானினால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்குத்
தேவையான அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது உறுதியளித்துள்ளார்.