8லட்சம் கோடி ரூபா கடனில் தவிக்கும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

80லட்சம் கோடி ரூபா கடனில் தவிக்கும் இலங்கை

80லட்சம் கோடி ரூபா கடனில் தவிக்கும் இலங்கை

80லட்சம் கோடி ரூபா கடனில் தவிக்கும் இலங்கை ஆளும் அனுரா அரசு அதனை நிவர்த்தி செய்ய என்ன வழி செய்ய போகிறது என்பதே கேள்வியாக உள்ளது .

இலங்கை ரூபாய்

நிமிடம் ஒன்றுக்கு இலங்கை 225.000 இலங்கை ரூபாய்களை வெளி நாடுகளுக்கு வட்டியாக செலுத்திய வண்ணம் உள்ளது .

இந்த வட்டி விகிதம் என்பது மிக பெரும் நெருக்கடியை இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ளது .

இதன் தொடர்ச்சியாக 2028 ஆம் ஆண்டு இலங்கை வெளி நாடுகளுக்கு வட்டியை மீள திருப்பி செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளது .

இதனால் 2028 ஆம் ஆண்டு பதினொறாயிரம் கோடி இலங்கை ரூபாய்களாக இந்த விட்டி விகிதம் உயர்ந்து விடும் .

இலங்கை சோமாலியா,ருவாண்டா ,சூடான்

அப்பொழுது நாட்டின் பொருளாதரம் சிதைந்து இலங்கை சோமாலியா,ருவாண்டா ,சூடான் போன்ற நிலைக்கு தள்ள பட்டு விடும் .

இப்பொழுது மக்களே சொல்லுங்கள் அனுரா அரசு மக்களுக்கு தேவையா இலையா என்பதை மக்களே முடிவெடுத்து கொள்ளுங்கள் .

சொல்வது நாம் தீர்மானிப்பது நீங்கள்

6 கோடி ரூபா சொத்துக்களை கொள்ளையடித்த 9 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

6 கோடி ரூபா சொத்துக்களை கொள்ளையடித்த 9 பேர் கைது

6 கோடி ரூபா சொத்துக்களை கொள்ளையடித்த 9 பேர் கைது

6 கோடி ரூபா சொத்துக்களை கொள்ளையடித்த 9 பேர் கைது ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி, 6 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான நீல மாணிக்கக்கல், தங்கப் பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டமை தொடர்பில் 9 பேர் நேற்று (29) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த நவம்பர் 10ஆம் திகதி லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மாவத்தகம மற்றும் பொல்பித்திகம பொலிஸ் பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம், 7 பவுண் தங்கம் மற்றும் 2 பொம்மை கைத்துப்பாக்கிகள், கத்தி மற்றும் வேன் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் தேரர் ஒருவரும் அடங்குவதாக தெரியவருகிறது.

சந்தேகநபர்கள் வத்தேகம, சபுகஸ்கந்த, பொல்பித்திகம, குருநாகல், இரத்தினபுரி மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக்

கொண்ட 38 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்

432 கோடி ரூபாவுக்கு பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா
Posted in உலக செய்திகள்

432 கோடி ரூபாவுக்கு பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா

432 கோடி ரூபாவுக்கு பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா

432 கோடி ரூபாவுக்கு பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா ,தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் ஜொலித்து வருபவர் சூர்யா. அவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி இருக்கிறது. அப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார்.

வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமான இதை ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பொலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார்.

கங்குவா திரைப்படம் வருகிற ஒக்டோபர் மாதம் 10- ஆம் திகதி திரைக்கு வர உள்ளது.

அதுமட்டுமின்றி அவர் தயாரிப்பில் தற்போது இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்று தான் மெய்யழகன். இப்படத்தை 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கி இருக்கிறார்.

இப்படத்தில் சூர்யாவின் சகோதரர் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து உள்ளார். மெய்யழகன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 27 ஆம் திகதி திரைக்கு வருகிறது.

இதுதவிர சூர்யா தயாரிப்பில் மற்றொரு படமும் தயாராகி வருகிறது. அப்படத்தில் சூர்யா தான் கதாநாயகனாக நடிக்கிறார். அப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

சூர்யா 44 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படி பிசியான நடிகராக வலம் வரும் சூர்யா, தற்போது சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருக்கிறாராம். Dassault Falcon என்கிற அந்த பிரைவேட் ஜெட்டின் விலை 120 கோடிரூபாய் (இலங்கை மதிப்பில் 432 கோடி ரூபாய்) இருக்குமாம்.

இந்த தனி விமானத்தில் நவீன தொழில்நுட்பமும், பாதுகாப்பு வசதிகளும் அதிகளவில் உள்ளதாம்.

தமிழ் திரையுலகில் முன்னதாக நயன்தாரா, ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் தனி விமானம் வைத்திருக்கும் நிலையில், தற்போது சூர்யாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

5 கோடி ரூபா நிதியில் மருத்துவ நிலையம் திறந்து வைப்பு
Posted in இலங்கை செய்திகள்

5 கோடி ரூபா நிதியில் மருத்துவ நிலையம் திறந்து வைப்பு

5 கோடி ரூபா நிதியில் மருத்துவ நிலையம் திறந்து வைப்பு

லண்டன் Benefit Mankind நிறுவனத்தினால் 5 கோடி ரூபா நிதியின் கீழ் கிண்ணியா பூவரசடித்தீவில் நிர்மானிக்கப்பட்ட மருத்துவ நிலையம் நேற்று மாலை (01) திறந்து வைக்கப்பட்டது.

அல்-மினா மகா வித்தியாலய அதிபர் எம்.வை.ஹதியத்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்த திறப்பு விழாவுக்கு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் வி.எச்.என்.ஜயவிக்ரம மற்றும் கிழக்கு மாகாண சுகாதார

அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு மருத்துவ நிலையத்தை திறந்து வைத்தனர்.

நெடுந்தீவு, சமாவச்சந்தித்தீவு, ஈச்சந்தீவு, பூவரசடித்தீவு, ஆளங்கேணி போன்ற கிராமங்களில் வசிக்கின்ற மக்கள் இக்கிராமம் உருவாக்கப்பட்ட காலம்தொட்டு மருத்துவ சேவைகளை பெற்றுக்கொள்வதில் பல கஷ்டங்களை எதிர்கொண்டு வந்துள்ளனர்.

இவர்கள் மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதாக இருந்தால் சுமார் 30 கிலோ மீற்றர் தூரம் சென்று வரவேண்டும். அவ்வாறு செல்கின்ற வீதிகள் யாவும் குண்றும் குழியுமாக காணப்படுகின்றதும் பெரும் கவலைக்குரிய விடயமாகவும், வாகன போக்குவரத்து அற்ற நிலைமையிலும் வாழ்ந்து வந்துள்ளனர்.

5 கோடி ரூபா நிதியில் மருத்துவ நிலையம் திறந்து வைப்பு

குறிப்பாக, இங்கு வசிக்கின்ற மக்கள் அவசர சிகிச்சையை பெற்றுக்கொள்ள பாரிய சவால்களையும் எதிர்கொண்டே வந்துள்ளனர். இந்நிலைமையை கருத்திற்கொண்ட அல் ஹிக்மா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்

வைத்திய கலாநிதி அப்பாஸ் இபாதுல்லாஹ், இக்கிராம மக்களின் நிலைமைகளைப் பற்றி லண்டன் Benefit Mankind நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்தியர் ஹாபீஸ் அப்துஸ்சமட் முல்லாஹ்வின் கவனத்திற்கு

கொண்டு வந்ததையடுத்து இந்த தனியார் மருத்துவ நிலையம் நிர்மானிக்கப்பட்டு நேற்றயதினம் பொதுமக்கள் பாவனைக்கு கையளித்து வைக்கப்பட்டது.

இவ்விழாவுக்கு, லண்டன் Benefit Mankind நிறுவனத்தின் நிறைவேற்றுப்
பணிப்பாளர் வைத்தியர் ஹாபீஸ் அப்துஸ்சமட் முல்லாஹ் மற்றும் றிஸ்வான் ஹர்தா,கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் மாகாண சமூகநல மருத்துவ ஆலோகர் வைத்தியர் எஸ்.


அருள்குமரன், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.கணி, மூதூர் தள வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர்


வைத்தியர் ஆர்.ரோஹான் குமார், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.எம்.அஜித் உள்ளிட்ட பல அதிதிகளும்,
பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அபு அலா

No posts found.