பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்

பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்

பொலிஸாரின் முக்கிய அறிவித்தல் ,அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் நிந்தவூர், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை, காரைதீவு, சாய்ந்தமருது, பெரிய நீலாவணை, உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக

வீரமுனை ,மருதமுனை, மண்டூர் , பகுதிகளிலும் அதிகளவான வீடு உடைத்து நகை, பணம் திருடுதல் மற்றும் மோட்டார் சைக்கிள் காணாமல் போன சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

குறித்த சட்டவிரோத சம்பவங்களில் வீடுகள் உடைத்து திருடும் சம்பவம் இரவு 1:00 மணிக்கும் அதிகாலை 4:30 மணிக்கும் இடையில் இடம்பெற்று வருவதுடன்

வீட்டின் ஜன்னல் கம்பிகள் மற்றும் ஓடுகள் பிரிக்கப்பட்டு வீட்டு உரிமையாளர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது இடம் பெறுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தவிர மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் சம காலங்களில் பல்வேறு பொலிஸ் நிலைய பகுதிகளிலும் அதிகரித்துள்ளன. பெரும்பாலும் பொது இடங்களில் தரித்து வைக்கப்பட்ட நிலையிலும் வயல் வேலை காரணமாக வீதி

ஓரங்களில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டியில் வைத்து விட்டு செல்லும் பொருட்கள் உள்ளிட்டவைகள் திருடப்பட்டு வருகின்றன.

மேலும் சில பொலிஸ் பிரிவுகளில் வைத்தியசாலை, பொதுச்சந்தை, நகரப் பகுதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளமை சிசிடிவி காணொளிகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

எனவே இரவு நேரத்தில் வீட்டின் மறைவான இடங்களை பரீட்சித்து பெறுமதியான பொருட்களை பொதுமக்கள் பாதுகாப்பதுடன், வீட்டின் ஜன்னலுக்காக பொருத்தப்படும் கம்பியை உறுதியான வகையில் பொருத்தி

கொள்ளுமாறும், கூரை மின் விசிறி பயன்படுத்தும் வீடுகளில் அதிக திருட்டுகள் இடம்பெறுவதனால் அதிக சத்தம் இடும் இவ்வாறான மின் விசிறிகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுள்ளனர்.

அத்துடன் பகல் நேரத்திலோ, இரவு நேரத்திலோ தேவையற்ற முறையில் சந்தேகத்திற்கிடமாக முகக்கவசம் மற்றும் தொப்பி அல்லது தலைக்கவசம்

அணிந்து நடமாடுபவர்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சட்டவிரோத செயற்பாடுகள் சம்பந்தமாக அவதானமாக இருப்பதுடன் சந்தேக நபர்கள் தொடர்பாக தகவல் ஏதேனும் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தெரியப்படுத்தமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் சுமுகமாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் சுமுகமாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு

முல்லைத்தீவில் சுமுகமாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு

முல்லைத்தீவில் சுமுகமாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு ,பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் பரிசோதகர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்துவதற்காக

இன்று சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு சுமுகமாக இடம்பெற்று வருகிறது.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம், முல்லைத்தீவு தேர்தல்கள் அலுவலகம், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான பொலிஸ் நிலையம், நட்டாங்கண்டல், ஜயன்கன்குளம், மல்லாவி , மாங்குளம், ஒட்டுசுட்டான்,

புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, கொக்கிளாய் , வெலிஓயா ஆகிய பொலிஸ் நிலையங்களிலும் இன்று தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகிறது.

யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன் மனைவி
Posted in இலங்கை செய்திகள்

யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன் மனைவி

யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன் மனைவி

யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன் மனைவி ,யாழ்ப்பாணம் – பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்கோவளம் – புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மாணிக்கம் சுப்பிரமணியம், சுப்பிரமணியம் மேரி ரீட்டா ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வீட்டிற்கு இன்று (30) புதன்கிழமை காலை சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

50 மற்றும் 51 வயதான 2 பிள்ளைகளின் பெற்றோரே மிகவும் கொரூரமான நிலையில் கற்களால் தலையில் குற்றிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பருத்தித்துறை நீதிவானுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் கொங்கிறீட் கல்லினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பருத்தித்துறை நீதவானின் பிரசன்னத்திற்கு பின்னரே சடலங்களை மீட்டு மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ,காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது காணாமல் ஆக்கப்பட்டோரின் பிள்ளைகளின் படங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீதி வேண்டி அரை மணித்தியாலங்கள் வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காதலியை கல்லால் தாக்கி கொன்ற காதலன்
Posted in இலங்கை செய்திகள்

காதலியை கல்லால் தாக்கி கொன்ற காதலன்

காதலியை கல்லால் தாக்கி கொன்ற காதலன்

காதலியை கல்லால் தாக்கி கொன்ற காதலன் யுவதியின் தலையில் கருங்கல்லினால் தாக்கி கொலை செய்த சந்தேகநபரான அவரது காதலன் இன்று (30) கைது செய்யப்பட்டதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.

பஹலகொட, பயாகல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

நேற்று (29) இரவு பயாகல தியலகொட பிரதேச கடற்கரையில் இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின் அது நீண்ட நேரம் இடம்பெற்றதாகவும், இதன்போது கோபமுற்ற காதலன் காதலியை கல்லால் தாக்கியதாக சந்தேகநபரின் வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் தலையில் தாக்கியதாக கருதப்படும் சிறிய கருங்கல்லையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக குறித்த இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலின் பின்னர் சந்தேகநபர் தனது நண்பருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, காதலியை களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு ‘1990 சுவசரிய’ அம்பியூலன்ஸ் ஊடாக கொண்டு வந்ததாகவும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

களுத்துறை பிரிவு குற்றத்தடுப்பு விசாரணை அதிகாரிகள் மற்றும் பயாகல பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய பயாகல, மகொன பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் கசிவு
Posted in இலங்கை செய்திகள்

எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் கசிவு

எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் கசிவு

எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் கசிவு ,இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கொலன்னாவ முனையத்தில் எரிபொருள் குழாய் வெடித்ததன் காரணமாக தற்போது பல இடங்களில் எரிபொருள் கசிந்து வருகின்றது.

கொழும்பு துறைமுகத்திலிருந்து எரிபொருளை ஏற்றிச் செல்லும் புகையிரத பாதைக்கு அருகில் அமைந்துள்ள குழாயொன்று இவ்வாறு சேதமடைந்துள்ளதுடன், இது JET A1 விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளை ஏற்றிச் செல்லும் குழாய் என்பது தெரியவந்துள்ளது.

கொலன்னாவ அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த குழாய் மீதொட்டமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழாயை அண்மித்த பகுதிகளில் 33,000 வோட் உயர் மின்னழுத்த மின் இணைப்பு அமைப்பு மற்றும் வீடுகள் அமைந்துள்ளன.

தற்போது பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் பவுசர் மூலம் கசியும் எரிபொருள் அகற்றப்பட்டு வருகின்றது.

இதற்கிடையில், குழாயை சீரமைக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு டிஜிட்டல் திரைகளை பயன்படுத்த தடை
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்திற்கு டிஜிட்டல் திரைகளை பயன்படுத்த தடை

தேர்தல் பிரச்சாரத்திற்கு டிஜிட்டல் திரைகளை பயன்படுத்த தடை

தேர்தல் பிரச்சாரத்திற்கு டிஜிட்டல் திரைகளை பயன்படுத்த தடை ,எந்த ஒரு மாவட்டத்திலோ அல்லது நகரத்திலோ டிஜிட்டல் திரையைப் பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்வது சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறான பிரசார நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், எந்தவொரு வேட்பாளரும் தேவையற்ற செல்வாக்கின் ஊடாக வாக்குகளைப் பெற முயற்சித்தால் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கோ அல்லது பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 869 ஆக அதிகரித்துள்ளது.

வன்முறைச் செயல்கள் தொடர்பான 8 முறைப்பாடுகள் அவற்றில் அடங்குவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவிற்கு நேற்று மட்டும் 78 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதுவரை பெறப்பட்ட 869 முறைப்பாடுகளில் 723 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க வௌியான விசேட வர்த்தமானி
Posted in இலங்கை செய்திகள்

பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க வௌியான விசேட வர்த்தமானி

பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க வௌியான விசேட வர்த்தமானி

பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க வௌியான விசேட வர்த்தமானி ,இலங்கையின் அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தொற்று அல்லது அபாயகரமான பகுதிகள் என பெயரிட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் சந்திரிகா ஹேமாலி அபேரத்னவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த 25ஆம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக காய்ச்சல், பன்றி இனப்பெருக்கம் மற்றும் சுவாச மற்றும் நோய் அறிகுறிகளை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் தேவையான பின்வரும் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன. .

  • ஆபத்தில் உள்ள பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் தயாரிப்புகள் அல்லது நோயை உண்டாக்கும் பொருட்களை தொற்று அல்லது ஆபத்தில் உள்ள பகுதிகளின் வௌியே கொண்டு செல்வது, அகற்றுவது அல்லது விரட்டுவது.
  • பாதிக்கப்பட்ட விலங்குகளை கொலை செய்தல்.

  • நோய் அபாயத்தில் உள்ள விலங்குகளுக்கு செயற்கை இனப்பெருக்க முறைக்கு பயன்படுத்துதல்.

  • ஆபத்தான விலங்குகளைப் பயன்படுத்தி நேரடி விலங்கு சந்தைகள், கண்காட்சிகள் மற்றும் போட்டிகளை நடத்துதல்.

  • பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் அதன் தயாரிப்புகள் மற்றும் நோயை உண்டாக்கும் பொருட்களை விற்பனை செய்தல், மற்றும் பன்றி இறைச்சியிலிருந்து பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்தல் அல்லது விநியோகித்தல்.

  • குறித்த நோய் தொற்று காரணமாக இறந்ததாகவோ அல்லது பாதிக்கப்பட்டதாகவோ சந்தேகிக்கப்படும் விலங்குகளின் சடலம் அல்லது பாகங்களை தண்ணீர் சம்பந்தப்பட்ட எந்த இடத்திலும் விட்டுச் செல்லுதல்.

  • குறித்த நோய் தொற்று காரணமாக இறந்ததாகவோ அல்லது பாதிக்கப்பட்டதாகவோ சந்தேகிக்கப்படும் விலங்குகளின் சடலம் அல்லது பாகங்களை ஏனைய விலங்குகளால் வேறு இடத்திற்கு அல்லது பகுதிக்கு எடுத்துச் செல்லக்கூடிய இடத்தில் வைப்பது அல்லது நிலைப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் படுகொலை

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் படுகொலை

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் படுகொலை ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கிருஷாந்த புலஸ்தி தனது வீட்டில் கட்டிலில் கைகால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கேகாலை, கொஸ்ஸின்ன பிரதேசத்தில் நேற்று (28) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

75 வயதுடைய குறித்த நபர் ஹெட்டிமுல்ல – புலுருப்ப பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

அவரது மனைவி வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டு, வீட்டில் இருந்த அலமாரிகள் அனைத்தும் திறந்திருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களின் தாக்குதலால் குறித்த பெண்ணும் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் பொலிஸாரால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர்களது திருடப்பட்ட கார் பின்தெனிய பொலிஸ் பிரிவில் விட்டுச் செல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பணம் எதுவும் அச்சிடப்படவில்லை
Posted in இலங்கை செய்திகள்

புதிய பணம் எதுவும் அச்சிடப்படவில்லை

புதிய பணம் எதுவும் அச்சிடப்படவில்லை

புதிய பணம் எதுவும் அச்சிடப்படவில்லை ,புதிய அரசாங்கம் இதுவரை பணம் அச்சிடவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், தாம் இதுவரை எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்தும் வெளிநாட்டுக் கடனைப் பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“பொதுவாக, புதிய திரைச்சேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள் காலாவதியாகும் போது விகிதாசார முறையில் புதியவற்றை வெளியிடும் முறையை மத்திய வங்கி கொண்டுள்ளது. அந்த செயல்முறை தினமும்

நடக்கும் ஒன்று. மேலும், பணம் அச்சிடுவதை எடுத்துக் கொண்டால், உண்மையில் புதிய பணம் எதுவும் அச்சிடப்படவில்லை, அதைச் செய்ய முடியாது. புதிய பணத்தை அச்சிட முடியாது என்பது தௌிவாக உள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் நாணயத்தாள் ஒன்றை பார்க்க எனக்கும் விருப்பம்தான். ஆனால் இதுவரை அது வெளியிடப்படவில்லை.

வன்னி மைந்தன் யார் அர்ச்சுனா சொன்ன முக்கிய விடயம்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

கிழிந்த முகமூடி உரித்த அர்ச்சுனா

கிழிந்த முகமூடி உரித்த அர்ச்சுனா

கிழிந்த முகமூடி உரித்த அர்ச்சுனா ,ஊடக நபர் என தன்னை அறிமுகம் செய்து செவ்வி கண்ட ஒருவரை அர்ச்சுனா இராமநாதன் கேள்விகளினால் உரித்துள்ளார் .

சற்றும் எதிர்பாராத நெத்தியடி கேள்வியாக இது காணப்படுகிறது .

கேள்வியின் வருகையை அறிந்து அதற்கு ஏற்ப தகுந்த பதிலடியை ,கொடுத்துள்ளார் .

அர்ச்சுனா இராமநாதன் இங்கே தான் இருக்கிறார் .வாழ்த்துக்கள் எங்கள் கட்சி தலைவரே . படைப்போம் வரலாறு ,வெல்லட்டும் தமிழ் .

அந்த காணொளியை நீங்க பாருங்கள்

வீடியோ

அர்ச்சுனா நல்லவரா கெட்டவரா |ஆரம்பித்த குத்து சண்டை
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனா நல்லவரா கெட்டவரா |ஆரம்பித்த குத்து சண்டை

அர்ச்சுனா நல்லவரா கெட்டவரா |ஆரம்பித்த குத்து சண்டை

அர்ச்சுனா நல்லவரா கெட்டவரா |ஆரம்பித்த குத்து சண்டை

வீடியோ

வாகன இறக்குமதி: டீலர்கள் 90 நாட்களுக்குள் பதிவு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு கூடுதல் வரி
Posted in இலங்கை செய்திகள்

வாகன இறக்குமதி: டீலர்கள் 90 நாட்களுக்குள் பதிவு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு கூடுதல் வரி

வாகன இறக்குமதி: டீலர்கள் 90 நாட்களுக்குள் பதிவு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு கூடுதல் வரி

வாகன இறக்குமதி: டீலர்கள் 90 நாட்களுக்குள் பதிவு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு கூடுதல் வரி புதிதாக இறக்குமதி செய்யப்படும் வாகனத்தின் விலை, காப்பீடு மற்றும் சரக்கு (CIF) மதிப்பில் 3 சதவீதத்திற்கு சமமான வரி, வாகன

இறக்குமதியாளர்களிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 90 நாட்களுக்குள் வாகனத்தை பதிவு செய்யத் தவறினால், இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான புதிய விதிமுறைகளின் கீழ் விதிக்கப்படும்.


டீலர்கள் மொத்தமாக வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை நிலையங்களில் இருப்பு வைப்பதைத் தடுக்கும் நோக்கில் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது

நாட்டிற்கு பெரும் டாலர் பிரச்சினையை உருவாக்கும் என்றும் கருவூலத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“எங்கள் USD நிலைமை இன்னும் அதிக எண்ணிக்கையில் வாகனங்களை இறக்குமதி செய்து வாகன விற்பனை நிலையங்களில் வைத்திருக்கும் அளவுக்கு நல்ல நிலையில் இல்லை” என்று அந்த அதிகாரி வலியுறுத்தினார்.

வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதற்கான நடவடிக்கையானது, இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து இறக்குமதி

கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) இலங்கை வழங்கிய உறுதிமொழிகளுக்கு இணங்க, அதிகாரி வெளிப்படுத்தினார்.

பல்வேறு வகைகளுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் படிப்படியாக நீக்கும் என்றார். முதல் கட்டமாக, இலங்கை மத்திய வங்கியின் (CBSL) உடன்படிக்கையுடன், அடுத்த மாதம் முதல் சுற்றுலாப் பெட்டிகள் மற்றும் பிற

பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அமைச்சரவையின்

ஒப்புதலுக்குப் பிறகு, கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்படும்.

நவம்பரில், மீண்டும் மத்திய வங்கியின் ஒப்புதலுடன், லாரிகள், டிப்பர் லாரிகள் மற்றும் பேக்ஹோ போன்ற தொழில்துறை வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க மற்றொரு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும், என்றார்.

இந்த செயல்முறை அடுத்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் மீண்டும் செய்யப்படும், பிப்ரவரியில் தொடங்கும் கார்கள், வேன்கள் மற்றும் ஜீப்கள் போன்ற தனிப்பட்ட

பயன்பாட்டு வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்று அதிகாரி கூறினார்.

அமெரிக்க தூதரகத்தின் பயங்கரவாத எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்க தூதரகத்தின் பயங்கரவாத எச்சரிக்கை

அமெரிக்க தூதரகத்தின் பயங்கரவாத எச்சரிக்கை

அமெரிக்க தூதரகத்தின் பயங்கரவாத எச்சரிக்கைக்கு மக்கள் போராட்டக் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது

முன்னணி சோசலிஸ்ட் கட்சி (FLSP) தலைமையிலான மக்கள் போராட்டக் கூட்டணி (PSA), கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தரும் தனது குடிமக்களுக்கு, இலங்கையில், குறிப்பாக சுற்றுலா மையமான அருகாமையில்

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரிக்கும் சமீபத்திய அமெரிக்க தூதரக அறிவிப்பு குறித்து கடுமையான கவலைகளை தெரிவித்தது. விரிகுடா.

செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய PSA கொழும்பு மாவட்ட வேட்பாளர் தரிந்து உடுவரகெதர, தூதரகத்தின் அறிக்கையின் நேரம் மற்றும் இலங்கை

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பதில் இல்லாமை ஆகிய இரண்டையும் கேள்வி எழுப்பினார்.

ஒரு காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னணி பங்களிப்பாளராக இருந்த சுற்றுலாத்துறையின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.

2018 ஆம் ஆண்டில், தொழில்துறை 4.3 பில்லியன் டாலர்களை ஈட்டியது, இது அடுத்த ஆண்டு 5 பில்லியன் டாலராக உயர்ந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

சமீபத்திய சவால்கள் இருந்தபோதிலும், இலங்கை இந்த ஆண்டு சுற்றுலாத்துறையில் இருந்து 3 பில்லியன் டாலர் வருவாயை எதிர்பார்க்கிறது,

முதன்மையாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிக சீசன் மாதங்களில்.

அதற்கிணங்க, அமெரிக்காவின் சமீபத்திய எச்சரிக்கையானது இந்த முன்னறிவிக்கப்பட்ட வருமானத்தை பாதிக்கக்கூடியது, சுற்றுலாப் பயணிகளை விரட்டியடிக்கும் மற்றும் சுற்றுலாத்துறையை நம்பியிருக்கும் பல

இலங்கையர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது. “இந்த எச்சரிக்கை கவனிக்கப்படாமல் போனால், அது இந்தத் துறையின் சரிவுக்கு வழிவகுக்கும்,

மேலும் உயிர்வாழ்வதற்காக அதைச் சார்ந்திருப்பவர்களை மேலும் வறிய நிலைக்குத் தள்ளும்” என்று அவர் வலியுறுத்தினார்.

சர்வதேச மோதல்களில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு, குறிப்பாக இஸ்ரேலிய படைவீரர்களுக்கு, இலங்கையின் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களைப் பயன்படுத்துவது குறித்து அவர் கேள்விகளை எழுப்பினார்.

அறுகம் குடாவில் நடந்த சமீபத்திய இஸ்ரேலிய திரைப்படத்தை மேற்கோள் காட்டி, அவர் இலங்கை நிலப்பரப்புகளைப் பயன்படுத்தி வெளிநாட்டில் இன மோதல்களை நியாயப்படுத்தும் முயற்சி என்று அவர் விவரித்தார்.

பெரும்பான்மை இல்லாமல் நான் ஜனாதிபதியாக இருந்தேன் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

பெரும்பான்மை இல்லாமல் நான் ஜனாதிபதியாக இருந்தேன் ரணில்

பெரும்பான்மை இல்லாமல் நான் ஜனாதிபதியாக இருந்தேன் ரணில்

பெரும்பான்மை இல்லாமல் நான் ஜனாதிபதியாக இருந்தேன் ரணில் ,ரணில் ஏகேடியை இலக்காகக் கொள்கிறார்; பெரும்பான்மை இல்லாமல் நான் ஜனாதிபதியாக இருந்தேன், அவரும் அப்படித்தான்

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, நீர்கொழும்பில் நடைபெற்ற தேர்தல் பேரணியொன்றில்,

தற்போதைய அரசாங்கத்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவுடன் போராட்டத்தை முன்னிலைப்படுத்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பெரும்பான்மை இல்லாதது குறித்து விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியதுடன், அவர் பதவியில் இருந்தபோது அவரது பதவிக்கு ஒப்பிட்டுப் பார்த்தார். “பெரும்பான்மை இல்லாத முன்னாள்

ஜனாதிபதி நான். புதிய ஜனநாயக முன்னணியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து நடத்தப்பட்ட பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பெரும்பான்மை இல்லாத தற்போதைய ஜனாதிபதியாகும்.

இந்த ஆண்டு பொதுத் தேர்தல் பிரச்சாரத்திற்காக விக்கிரமசிங்கவின் முதல் பொதுத் தோற்றம் இந்த பேரணியாக இருந்தது. கம்பஹா மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதில் ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றுப் பங்கை அவர்

வலியுறுத்தினார், பிரதேசத்தில் தனது ஆரம்பகால அரசியல் ஆரம்பம் மற்றும் கட்டுநாயக்க மற்றும் பியகமவில் சுதந்திர வர்த்தக வலயங்களை நிறுவுதல் போன்ற சாதனைகளை நினைவுபடுத்தினார்.

“இந்த மாவட்டம், ஒரு காலத்தில் வளர்ச்சியடையாத நிலையில், உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் அடுத்தடுத்த அரசாங்கங்களால்

உருவாக்கப்பட்ட பொருளாதார வாய்ப்புகள் மூலம் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது,” என்று அவர் கூறினார், மாவட்டமானது இப்போது கொழும்புடன் ஒரு முக்கிய பொருளாதார மையமாக போட்டியிட முடியும்.

வாக்காளர்களுக்கு விக்கிரமசிங்க விடுத்த வேண்டுகோள், அழுத்தமான தேசிய பிரச்சினைகளை, குறிப்பாக பொருளாதார மீட்சி மற்றும் காலநிலை மாற்றத்தை கையாள்வதில் வேட்பாளர்களின் திறமையை மையமாகக் கொண்டது.

அவர் ருவான் விஜேவர்தனவை காலநிலை மாற்றத்தில் நிபுணராக அங்கீகரித்தார், சர்வதேச மாநாடுகளில் அனுபவம் பெற்றவர், அவரை தேசிய மக்கள் சக்தி (NPP) வேட்பாளர்களுடன் ஒப்பிடுகிறார்.

அமைச்சர்களான லசந்த மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு முறையே போக்குவரத்து மற்றும் விவசாயத்தில் நடைமுறை அனுபவம் இருப்பதாகவும் அவர் பாராட்டினார்.

“காஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களித்து அனுபவம் வாய்ந்த இந்த நபர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள்” என்று அவர் வலியுறுத்தினார்.

கொழும்பு-கேகேஎஸ் ரயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பமானது
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு-கேகேஎஸ் ரயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பமானது

கொழும்பு-கேகேஎஸ் ரயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பமானது

கொழும்பு-கேகேஎஸ் ரயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பமானது ,வடக்கு புகையிரத பாதையின் புனரமைக்கப்பட்ட மஹவ – அனுராதபுரம் பகுதி மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், கொழும்பு கோட்டையில் இருந்து

காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவைகள் இன்று (28) மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பராமரிப்பு மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மீண்டும்

ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரதிப் பணிப்பாளர் எம்.ஜே.இண்டிபோலகே தெரிவித்தார்.

மஹவ மற்றும் அநுராதபுரத்திற்கு இடையிலான புகையிரத பாதை நவீனமயப்படுத்தப்பட்டதன் பின்னர் கொழும்பு கோட்டையிலிருந்து

காங்கேசன்துறை வரையிலான புகையிரத நேரம் மாற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இன்று முதல் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை மற்றும் அனுராதபுரத்திற்கு இரண்டு புகையிரத பயணங்களும், கொழும்பு

கோட்டையில் இருந்து காலை 5:45 மணிக்கு ஒரு புகையிரதமும், இரவு 7:45 மணிக்கு மற்றுமொரு புகையிரதமும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். தயார் செய்யப்பட்டுள்ளன.

காங்கசந்துறை மற்றும் அனுராதபுரத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை இன்று முதல் இரண்டு ரயில் பயணங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கோட்டை-திருகோணமலை மற்றும் கோட்டை-மட்டக்களப்பு புகையிரதங்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கோட்டையில் இருந்து காலை 6:05 மணிக்கு புறப்படும் ரயில் 12:38 மணிக்கு திருகோணமலை சென்றடையும் என்றும் அவர் குறிப்பிட்டார். மற்றும் 1:30

மணிக்கு திருகோணமலையில் இருந்து புறப்படும் ரயில். 7:59க்கு கொழும்பை சென்றடையும்.

கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை இரண்டு புகையிரத பயணங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த ரயில்கள் காலை 6:50 மற்றும் மாலை 3:15 மணிக்கு கோட்டையில் இருந்து புறப்படும் எனவும் அவர் கூறினார்.

மற்றும் மட்டக்களப்பில் இருந்து கோட்டை வரை இரண்டு ரயில் பயணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

புகையிரத சேவைகள் மீளமைக்கப்படும் அதேவேளை, புகையிரத கடவைகளுக்கு பாதுகாப்பு கதவுகள் பொருத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கடவுப்பாதைகளில் எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் ரயில்வே துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.

வெள்ளை கொடி காட்டி கொடுப்பு |வெளியானபுதுஆதாரம் 
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

வெள்ளை கொடி காட்டி கொடுப்பு |வெளியானபுதுஆதாரம் 

வெள்ளை கொடி காட்டி கொடுப்பு |வெளியானபுதுஆதாரம் 

வெள்ளை கொடி காட்டி கொடுப்பு |வெளியானபுதுஆதாரம் ,செல்வராசா கையேந்திரன் சைக்கிள் கட்சிகள் செய்த காட்டி கொடுப்பு செயல்கள் தற்பொழுது அம்பலமாகியுள்ளது .

வாருங்கள் பேசலாம் ,இது பேசுவதற்கான நேரம் ,காணொளியை பாருங்கள் ,எவ்வாறு காட்டி கொடுக்க பட்டது முழுமையான விபரம் வெளியிட பட்டுள்ளது .

வீடியோ

பெண்ணை கொலைச்செய்ய ஒரு கோடி
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணை கொலைச்செய்ய ஒரு கோடி

பெண்ணை கொலைச்செய்ய ஒரு கோடி

பெண்ணை கொலைச்செய்ய ஒரு கோடி ,ஒரு கோடி ரூபா ஒப்பந்தத்திற்காக பெண்ணொருவரை கொல்ல தயாரான நபர் துப்பாக்கி மற்றும் 6

தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் டி-56 துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 6 ரவைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையான நபருக்கு பெண் ஒருவரைக்

கொல்வதற்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாகவும், அவருக்கு ஒரு கோடி ரூபா பணம் தருவதாகவும் உறுதியளித்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் ,யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரந்தன் பகுதியில் நேற்று மாலை தேர்தல்

பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரந்தன் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் நேற்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஓட்டோவில் வந்த நால்வர் அடங்கிய குழு ஒன்று, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு பெண்ணும், இரு ஆண்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்

வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்

வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம் ,2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு அட்டை விநியோகம் இன்று (27) ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

வாக்குச் சீட்டு விநியோகத்திற்காக தபால் திணைக்களம் அட்டைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க உறுதிப்படுத்தினார்.

இந்த வாக்காளர் அட்டைகளை வீடு வீடாக விநியோகிக்கும் பணி இன்று பல பகுதிகளில் ஆரம்பமாகியுள்ளது.

எனினும் சில தாமதங்களின் பொருட்டு கொழும்பு மாவட்டத்தில் வாக்காளர் அட்டைகள் விநியோகம் இடம்பெறாது.

நவம்பர் 3ம் திகதி காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாக்காளர் அட்டைகள் விநியோகம் செய்யப்படும்.