Author: நலன் விரும்பி
மாவீரர்நாள் – மெல்பேர்ண் – 2020 அறிவித்தல்
மாவீரர்நாள் – மெல்பேர்ண் – 2020 அறிவித்தல்
அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே,
தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்துப் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை எழுச்சியுடன் நினைவு கொள்ளும்
தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும், 2020ஆம் ஆண்டு மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்றது.
கடந்த காலங்களைப் போலன்றி இவ்வாண்டு நோய்த்தொற்றையும் அதற்காக நடைமுறை-யிலுள்ள கட்டுப்பாடுகளையும் கருத்திற்கொண்டு ஒவ்வொரு மாநிலமும் தமக்குரிய முறையில்
மாவீரர்நாள் நிகழ்வை ஏற்பாடு செய்கின்றது. அவ்வகையில் விக்ரோறிய மாநிலத்தின் நடைமுறைகளைக் கருத்திற்கொண்டு மெல்பேர்ண் மாவீரர்நாள் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
கடந்த காலங்களைப் போலன்றி இம்முறை திறந்த மைதானத்தில் நிகழ்வு நடைபெறும். நவம்பர் 27ம் நாள் மதியம் 1.30 மணியிலிருந்து மாவீரர் திருவுருவப் படங்களுக்கு மலர் வணக்கம் செலுத்துவதற்கு
மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு அரைமணிநேர இடைவெளிக்கும் அதிகபட்சம் 50 பேர்வரை சமூக இடைவெளியுட்பட, ஏனைய சுகாதார நடைமுறைகளைக்
கடைப்பிடித்து மாவீரர் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும் மண்டபத்திற்குச் சென்று மலர்வணக்கம் செலுத்திச் செல்லலாம்.
மதியம் 1.30 மணியிலிருந்து இரவு 8 மணிவரை பொதுமக்கள் மைதானத்துக்கு வருகை தந்து மலர்வணக்கம் செலுத்தலாம். நடைமுறையிலிருக்கும் கட்டுப்பாடுகளைக் கருத்திற் கொண்டு
, அரைமணிநேர இடைவெளிக்கு அதிகபட்சம் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படு-வார்கள். ஒரேநேரத்தில் அதிகமானவர்கள் வருகைதந்து சுகாதார நடைமுறைகளை மீறாமலிருப்பதை
உறுதிசெய்யும் முகமாக முற்கூட்டியே தங்கள் வருகையையும், நேரத்தையும் பதிவு செய்யும்வண்ணம் அன்புடன்
வேண்டப்படுகிறீர்கள். பதிவு செய்து நிகழ்விடத்திற்கு வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
மதியம் 1.30 தொடக்கம் 2 வரை, பின்பு 2 தொடக்கம் 2.30 வரை என்று ஒவ்வொரு அரைமணி நேர இடைவெளிக்கும் முன்பதிவை எதிர்பார்க்கின்றோம்.
உங்கள் வரவை kaanthalbook@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 0433002619 என்ற தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவோ (SMS) அனுப்பி வைக்கவும்.
பெயர் –
தொலைபேசி எண் / மின்னஞ்சல் முகவரி –
வதிவிட முகவரி-
வருகைதரும் நபர்களின் எண்ணிக்கை –
வரப்போகும் அரைமணிநேர இடைவெளி – (Eg: 2-2.30 pm)
என்ற விபரங்களை அரசாங்க விதிதுறைகளிற்கமைய அனுப்பி, முன்பதிவு செய்து கொள்ளவும். ஒரு குடும்பத்திற்கு ஒரு பதிவு (வருகின்ற நபர்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டு) போதுமானது. 50 பேர்வரை ஒரு நேர இடைவெளிக்குள் பதிவு செய்யப்பட்டால் அதன்பின்னர் பதிவுக்கு வருவோர் வேறு நேரத்தைத் தெரிவு செய்யும்படி அறிவுறுத்தப்படுவார்கள்.
முன்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரையோ அல்லது தரப்பட்டிருக்கும் மின்னஞ்சல், தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொள்ளவும்.
நிகழ்வு நடைபெறும் இடம் :– BURWOOD East Reserve, Burwood Hwy, Burwood East – Victoria 3151 (Melway Ref: 62 B 7). நேரம்:– 1.30 – 8PM, Friday, 27th November 2020.
இவ்வண்ணம்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – அவுஸ்திரேலியா
===============================
—
மெல்பேர்ண் தமிழ் ஊடகம்.
அவுஸ்திரேலியா.
தொடர்புகள்:
மாவீரர் வாரத்தை கையிலெடுத்த புலம்பெயர் இளந்தலைமுறை !
மாவீரர் வாரத்தை கையிலெடுத்த புலம்பெயர் இளந்தலைமுறை !
தாயகம், தேசியம், அரசியல் இறையாண்மை எனும் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பினை நெஞ்சினில் ஏந்தியவாறு
ஆகுதியாகிய மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் வாரத்தினை புலம்பெயர் இளந்தலைமுறையினர் கையில் எடுத்துள்ளனர்.
பிரித்தானியா, பெல்ஜியம், அமெரிக்கா, கனடா, ஒஸ்றேலியா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, நோர்வே என புலம்பெயர் தேசங்களில் பிறந்து வளர்ந்து வரும் இளந்தலைமுறையினர்,
உணர்வெழுச்சியுடன் மாவீரர் வாரத்தினை இணைவழிமூலம் தொடங்கினர்.நொவெம்பர் 21-27 ஆகிய நாட்கள் மாவீரர் வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
தமது உரிமைகளுக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவேந்த முடியாத சவாலான நிலையினை தாயக தமிழர்கள் சிறிலங்கா ஆட்சியாளாகளினால் எதிர்கொண்டுள்ளனர். மறுபுறம் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பொதுஇடங்களில் ஒன்றுகூடமுடியாத அவசரகால சுகாதார நெருக்கடி நிலை புலம்பெயர் நாடுகளில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்களின் உணர்வெழுச்சியின் வடிவமாக இணையவழி தொழில்நுட்ப மூலமாக மாவீரர் வாரத்தினை புலம்பெயர் இளந்தலைமுறையினர் தொடங்கினர்.
தியாகம், ஒழுக்கம், வீரம், அர்ப்பணிப்பு என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொனிப்பொருளில் இடம்பெறுகின்ற இளந்தலைமுறையினரின் மாவீரர் வார நிகழ்வுகளை ஐரோப்பிய நேரம் இரவு 11 மணிக்கு நேரஞ்சலாக காணமுடியும். ( live on : https://tgte.tv/ , https://www.facebook.com/tgteofficial
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடுத்ததலைமுறையாக விளங்கும் ‘அலைகள்’ இதனை முன்னெடுத்து வருவதோடு, பெண்களே முன்னின்று இதனை செயலாற்றிவருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது..
பிரிட்டனில் ஒவ்வொரு வீட்டுக்கும் 200 இலவச பணம் வழங்கும் அரசு
பிரிட்டனில் ஒவ்வொரு வீட்டுக்கும் 200 இலவச பணம் வழங்கும் அரசு
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் காரணமாக
ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஆளும் அரசு 95 பில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது
இதன் பிரகாரம் வீடு ஓவொன்றுக்கும் 200 பவுண்டுகள் வழங்கும் சட்டம் அமுலுக்கு வருகிறது
நத்தர் தினத்தை முன்னிட்டு இவை மக்களுக்கு வழங்க படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது
பிரிட்டனில் தள்ளாடும் பிரபல சினி வோர்ல்ட் திரை அரங்கு
பிரிட்டனில் தள்ளாடும் பிரபல சினி வோர்ல்ட் திரை அரங்கு
லண்டனில் மிக பிரபலம் ஆன சினிவேல்ட் திரை அரங்கு
நடப்பாண்டு நிகழ்கால வைரஸ் நோயின் தாக்குதல் அச்சறுத்தல் காரணமாக மூட பட்டுள்ளது
இதனால் இதுவரை 750 மில்லியன் பவுண்டுகள் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
மேலும் இது பெற்றுள்ள கடன் தொகையும் மீள செலுத்த முடியாத நெருக்கடி
நிலை இடம்பெற்று வருகிறது ,தொடர்ந்து அடித்து பூட்டும் நிகழ்வு இடம்பெற்றால்
அரங்குகள் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என ஐயம் வெளியிட படுகிறது
பேரறிவாளன் ஒருவாரம் விடுதலை
பேரறிவாளன் ஒருவாரம் விடுதலை
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்த பட்டு முப்பது ஆண்டுகளுக்கு
மேலாக சிறையில் அடைக்க பட்டுள்ள
பேரறிவாளனை விடுதலை செய்ய கோரி வழக்கு இடம் பெற்று வருகிறது
நீதிமன்ற உத்தரவு மதிக்காது ஆளுநர் அமைதியாக உறக்கம் இட்டுள்ளார்
இவ்விதம் நகர்வுகள் நகர்ந்து கொண்டிருக்க ஒருவாரம் மேலும் மருத்துவ சிகிச்சைக்காக விடுவிக்க வேண்டும் என கோர பட்ட
நிலையில் நீதிமன்ற அதற்கும் ஒப்புதல் அளித்து விடுதலை செய்துள்ளது
எனினும் நிரந்தர விடுதலை உறக்கத்தில் போட பட்டுள்ளது குறிப்பிட தக்கது
நடிகர் தவசி மரணம்
நடிகர் தவசி மரணம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசி, சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருவதாகவும் தனக்கு உதவுமாறும்
அவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்
வெளியாகி வைரலானது. இதையடுத்து அவருக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வந்தனர்.
நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன்,விஜய் சேதுபதி, சௌந்தர ராஜா, சிம்பு ஆகியோர் பணவுதவி செய்தனர்.
சீக்கிரம் உடல் நலம் பெற்று வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில்
நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
பொல்லால் தாக்கி ஒருவர் கொலை
பொல்லால் தாக்கி ஒருவர் கொலை
தனமல்வில பொலிஸ் பிரிவின் ஊவ குடாஒய பிரதேசத்தில் இரு
தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு நீண்டதில் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (22) 7.30 மணியளவில் குறித்த நபருக்கு பொல்லு ஒன்றால் தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
34 வயதுடைய ஊவ குடாஒய பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தொடர்பான ஆரம்பகட்ட நீதவான் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் இன்று (23) இடம்பெறவுள்ளன.
சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்காக தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குழந்தைக்கு தொட்டில் கட்ட முயன்ற தந்தை பலி
குழந்தைக்கு தொட்டில் கட்ட முயன்ற தந்தை பலி
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட இருட்டுமடு பகுதியில் பிறந்த தனது குழந்தைக்கு
தொட்டில் கட்ட வீட்டில் ஏறிய குடும்பஸ்தர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இருட்டு மடுவினை சேர்ந்த 36 அகவையுடைய இராமசாமி மோகன்றாச் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு
உயிரிழந்துள்ள சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
குறித்த விபத்தின் போது காயமடைந்த குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்கைக்காக யாழ்போதனா வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டு பின்னர் மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குழந்தை பிறந்து பத்து நாட்கள் கூட ஆகாத நிலையில் தொட்டில் கட்ட ஏறியபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது இதனால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
24 மணி நேரத்தில் புயல் – மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- எச்சரிக்கை
24 மணி நேரத்தில் புயல் – மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- எச்சரிக்கை
தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.
இன்று காலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 740 கிமீ தொலைவில் நிலை
கொண்டுள்ளதாகவும் இதன் நகர்வை சென்னை வானிலை ஆய்வு நிலையம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்பகுதியை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த
புயலானது நாளை மறுநாள் பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே குறைந்த பலத்துடன் கரையை கடக்கலாம் என்றும், அப்போது கடலோர மாவட்டங்களில் கடுமையான காற்றும், கடல்
பகுதியில் சூறாவளி காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. புயல் காரணமாக அதிக சேதம் ஏற்படும்
பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு படையின் 6 குழுக்களைச் சேர்ந்த 120 வீரர்கள் புறப்பட்டுச்
சென்றிருப்பதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவர்கள் கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். மேலும் கடலோர கிராம மக்கள்
பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தல்களை வழங்குவார்கள். சேதம் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டால், அப்பகுதி மக்களை
பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைப்பார்கள்.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளதால் 26 ஆம் திகதி வரையில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை ஆரம்பம்
மாணவர்களுக்கு மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை ஆரம்பம்
தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கு மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் இன்று (23) காலை ஆரம்பமானது.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டன. ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.
மலையகத்திலுள்ள பாடசாலைகளிலும் கல்விச் செயற்பாடுகள் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இடம்பெற்றது.
மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி வழமைபோல் பாடசாலைகளுக்கு வந்திருந்தனர்,
மாணவர்கள் பாடசாலை வளாகத்துக்குள் வந்ததும் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கைகளை கழுவிய பின்னர் வகுப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சுகாதார இடைவெளியைப் பின்பற்றும் விதத்தில் வகுப்பறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அட்டன் கல்வி வலயத்தில் உள்ள, அட்டன் வெளிஓயா மலைமகள் தமிழ் வித்தியாலயம், ஆக்ரோயா தமிழ் வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளும் இன்று திறக்கப்படவில்லை.
இப்பகுதிகளில் நேற்று (22) கொரோனா தொற்றாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொவிட் 19: உயிரிழப்பு 87 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொவிட் 19: உயிரிழப்பு 87 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர்களின் உயிரிழப்பு 87 ஆக அதிகரித்துள்ளது.
கீழ் குறிப்பிட்ட விபரங்களுக்கு அமைவாக கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் நால்வரின் (04) மரணங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று முன்னர்
உறுதிசெய்துள்ளதுடன் இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 87 ஆகும்.
- கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான பெண் ஆவார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார். மரணம் 2020 நவம்பர் மாதம்
- 21ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதான ஆண் நபர்
- ஆவார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் 2020 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
- மரணத்திற்கான காரணம் நாள்பட்ட நுரையீரல் நோய் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதினால் அதிகரித்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொரள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதான பெண். வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணம் 2020 நவம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. மரணத்திற்கான காரணம் கொவிட் 19 வைரசு
- தொற்றுக்குள்ளானதுடன் ஏற்பட்ட நிமோனியா நிலைமை ஆகும்.
- கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான ஆண் நபர் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட
- பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்
- பெற்று வந்த வேளையில் 2020 நவம்பர் மாதம் 22ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19
- தொற்றுக்குள்ளானதுடன் நிமோனியா நிலை அதிகரித்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்கம் அமைத்து இந்தியாவுக்குள் புகுந்த தீவிரவாதிகள்
சுரங்கம் அமைத்து இந்தியாவுக்குள் புகுந்த தீவிரவாதிகள்
இந்தியாவுக்குள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் சுரங்கம்
அமைத்து புகுந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்வாறு தீவிரவாதிகள் நுழைந்தமை இரகசிய தகவல்கள் ஊடக கிடைக்க
பெற்றதை அடுத்து குறித்த சுரங்க பாதை கண்டுபிடிக்க பட்டு அழிக்க பட்டுள்ளது என இந்தியா இராணுவம் அறிவித்துள்ளது
பிரிட்டனில் 2000 அகதிகள் பொய்யான வயது வழங்கியது விசாரணையில் அம்பலம்
பிரிட்டனில் 2000 அகதிகள் பொய்யான வயது வழங்கியது விசாரணையில் அம்பலம்
பிரிட்டனில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த அகதிகள் தமது
வயதை மறைத்து குறைத்து வழங்கி வந்தது விசாரணைகள் மூலம் அம்பலமாகியுள்ளது
சிறகை என்ற பிரிவுக்குள் தம்மை அடக்கிட இவ்விதம் பொய்யான
வயதை அவர்கள் வழங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது
நீண்டகாலமாக இடம்பெற்று வந்த விசாரணையில் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது ,
தொடர்ந்து இரண்டாயிரம் பேரிடமும் அது தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்,பெற்ற வண்ணம் உள்ளது
குறைந்தது கொரனோ – குத்துகாரணம் அடிக்கும் லண்டன்
குறைந்தது கொரனோ – குத்துகாரணம் அடிக்கும் லண்டன்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வந்த வைரஸ் நோயின் தாக்குதல்
குறைந்து வருவதாகவும் அதனால் டிசம்பர் இரண்டாம் திகதி
லொக்கடவுன் நீக்க படுவதன் பேச்சுக்கள் வெளியிட பட்ட வண்ணம் உள்ளன
இவை இவ்விதம் நகர நாள் தோறும் மக்கள் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது என தெரிவிக்கும் அரசு
அதனால் மீள மக்களை வெளியில் நடமாட அனுமதித்து வீழ்ந்து போன பொருளாதாரத்தை நிமிர்த்திட முயற்சிப்பதன் நோக்கத்தை காண முடிகிறது
அதற்காக நத்தார் தினத்திற்குள் நமக்கு வீடுகள் ஒன்றிணைந்து சிறப்பிக்க
அனுமதி தரப்படுகிறது என கருத்து வெளியிட பட்டு வருகிறது இங்கே கவனிக்க தக்கது
போதையில் மகளை கர்ப்பம் ஆக்கிய தந்தை
போதையில் மகளை கர்ப்பம் ஆக்கிய தந்தை
இந்திய தமிழகத்தில் தந்தை ஒருவர் தனது 14 வயது மக்களை
கர்ப்பம் ஆக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மகள் உடல் நிலையில் ஏற்பட்ட மறுதலை அடுத்து அவரை
மருத்துவமனைக்கு அழைத்துசென்ற பொழுது மேற்படி சம்பவம் தெரியவந்துள்ளது
தயார் வழங்கிய முறைப்படடினை அடுத்து தந்தை கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்
14 வயது மாணவனுக்கு அகோர கத்தி குத்து – பூட்ட பட்ட பாடசாலை
14 வயது மாணவனுக்கு அகோர கத்தி குத்து – பூட்ட பட்ட பாடசாலை
Arthur Phillip High School in Parramatta, western Sydney பகுதியில் உள்ள
பாடசாலையில் கல்வி கற்று வந்த 14 வயது மாணவன் மீது சரமாரி
கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த தாக்குதலில் சிக்கி பலத்த காயமடைந்த வாலிபன் வைத்திய சாலையில்
அனுமதிக்க பட்டார் ,மேலும் பாடசாலை அடித்து பூட்ட பட்டது
,மேற்படி சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது
தமிழர் பகுதியில் எழுச்சி கொள்ளும் மாவீரர் நாள்
தமிழர் பகுதியில் எழுச்சி கொள்ளும் மாவீரர் நாள்
இலங்கையில் தாயக விடுதலைக்கு போராடி காவியமான மாவீரர்களை நினைவு கூறும் நாள் இன்று
இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மாவீரர் நாள்கள் சிறப்பாகக நினைவு கூற படும்
அவ்விதம் தமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் தீவிரமாக முன்னெடுக்க பட்டு வருகிறது
அதேபோலவே புலம் பெயர் நாடுகளில் இம் முறை மக்கள் வீடுகளில் நினைவுகூற தயராகி வருகின்றனர்
இலங்கையில் 20,000 கொரோனா நோயாளிகள்
இலங்கையில் 20,000 கொரோனா நோயாளிகள்
நேற்றைய தினம் 491 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை
அடுத்து இலங்கையில் 19,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றை தினம் இனங்காணப்பட்டவர்களுள் 487 பேர் மினுவங்கொட
மற்றும் பேலியகொட கொத்தணியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
ஏனையவர்களுள் இத்தாலியில் இருந்தும் மூவரும் துருக்கியில் இருந்து வந்த ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழில் எறிகணைகள் மீட்பு – குவிக்க பட்ட இராணுவம்
யாழில் எறிகணைகள் மீட்பு – குவிக்க பட்ட இராணுவம்
அண்டனி புரத்தில் தனியார் காணியின் உரிமையாளர் தனது
காணியை துப்பரவு செய்யும் போது குறித்த குண்டுகளை கண்டுள்ளார்.
உடனடியாக துப்புரவு பணியை நிறுத்திவிட்டு பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு அறிவித்துள்ளார்.
பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
குண்டுகளை செயலிழப்பதற்காக வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள தரவை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
யாழில் நீரில் மூழ்கி இரு சகோதரர்கள் பலி
யாழில் நீரில் மூழ்கி இரு சகோதரர்கள் பலி
யாழ்ப்பாணம் மண்டை தீவு பகுதியில் ஏழு வயது மற்றும் ஐந்து
வயதுடைய இரு சிறுவர்கள் குளம் ஒன்றில் மூழ்கி பலியான சம்பவம் இடம் பெற்றுள்ளது
குறித்த இருவர் சடலங்கள் மீட்க பட்டு விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது









