இலங்கையில் கொவிட் 19: உயிரிழப்பு 87 ஆக அதிகரிப்பு

Spread the love

இலங்கையில் கொவிட் 19: உயிரிழப்பு 87 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர்களின் உயிரிழப்பு 87 ஆக அதிகரித்துள்ளது.

கீழ் குறிப்பிட்ட விபரங்களுக்கு அமைவாக கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் நால்வரின் (04) மரணங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று முன்னர்

உறுதிசெய்துள்ளதுடன் இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 87 ஆகும்.

  1. கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான பெண் ஆவார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார். மரணம் 2020 நவம்பர் மாதம்
  2. 21ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  3. கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதான ஆண் நபர்
  4. ஆவார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் 2020 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
  5. மரணத்திற்கான காரணம் நாள்பட்ட நுரையீரல் நோய் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதினால் அதிகரித்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  6. பொரள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதான பெண். வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணம் 2020 நவம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. மரணத்திற்கான காரணம் கொவிட் 19 வைரசு
  7. தொற்றுக்குள்ளானதுடன் ஏற்பட்ட நிமோனியா நிலைமை ஆகும்.
  8. கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான ஆண் நபர் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட
  9. பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்
  10. பெற்று வந்த வேளையில் 2020 நவம்பர் மாதம் 22ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19
  11. தொற்றுக்குள்ளானதுடன் நிமோனியா நிலை அதிகரித்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply