Posted in இலங்கை செய்திகள்

சிறலங்கா நீதிமன்றங்களை களமாக்கிய மாவீரர்கள் !

சிறலங்கா நீதிமன்றங்களை களமாக்கிய மாவீரர்கள் !

சிறிலங்காவின் உள்நாட்டு நீதிப்பொறிமுறையில் தமிழர்களுக்கான நீதி கிடையாது என்பதோடு, தமிழர்களுக்கான அரசியல்வெளி

இல்லை என்பதனை சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும் ஓர் களமாக, மாவீரர் நாளுக்கான சிறிலங்காவின் அரச

கட்டமைப்புக்களின் தடைகள் அமைந்துள்ளன என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு சிறிலங்காவின் அரச கட்டமைப்புக்கள் ஏற்படுத்தி வரும் தடைகள் தொடர்பிலும், தாயக தமிழ் அரசியல்

தலைவர்கள் அடுத்து எடுக்க வேண்டிய நிலைப்பாடு தொடர்பிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகார அமைச்சு

அறிக்கையொன்றினை விடுத்துள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இனநாயக மயப்படுத்தப்பட்ட சிறலங்காவின் அரச கட்டமைப்புக்களின்

ஒன்றான நீதித்துறை, போர்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை தண்டிக்காது அவர்களை விடுத்து,நீதிவேண்டி போராடும்

பாதிப்புக்கு உள்ளான மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கும் செயல்களையே முன்னெடுத்து வருகின்றது.

இனநாயகத்தின் பிரதிபலிப்பாகவுள்ள சிறிலங்காவின் நீதித்துறை என்பது,சிங்களவர்களுக்கு இடையிலான பிரச்சனைகளுக்கு நீதியினை நிலைநாட்டலாம். ஆனால் தமிழர்களுக்கும்

சிங்களவர்களுக்கு இடையிலான பிரச்சனைகள் எனும் போது, அது இனநாயகத்தின் ஓர் கருவியாகவே சுதந்திர காலம் தொட்டு இயங்கி வருகின்றது.

தமிழர்கள் ஈடுசெய் நீதியினை வேண்டிவந்த நிலையில், சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்பட்ட நிலைமாறுகால நீதியின் முறையே, தமிழர்களுக்கான நீதிக்கு சிறிலங்காவில் இடம் இல்லை

என்பதனையே இவைகள் வெளிக்காட்டி வருகின்றன. ஐ.நா மனித உரிமைச்சபையின் தீர்மானங்களில் இருந்து சிறிலங்கா விலகிய நிலையானது நிலைமாறுகால நீதியினை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

தமிழின அழிப்பின் முதன்மைக் குற்றவாளியாக சிறிலங்கா அரசே இருக்கும் நிலையில் தமிழர்களுக்கான நீதிப்பொறிமுறையோ, அரசியல் விருப்போ அல்லது ஐக்கியநாடுகள் செயலாளர்

நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிட்டவாறு நீதியை நிலை நிறுத்தக் கூடியவகையிலான விசாரணைகளுக்கான சூழலோ சிறிலங்காவில் கிடையாது என்கின்றது.

இந்நிலையில் தமிழர்களுக்கான நீதிக்கான பொறிமுறை உள்ளநாட்டில் இல்லை என்பதும் மீண்டும் மீண்டும் நிருபணமாவதோடு, சர்வதேச நீதிப்பொறிமுறையே

தமிழர்களக்கான நீதிக்கான பொறிமுறையாக இருக்கின்றது என்பதனை மாவீரர் நாளுக்கான வெளிக்காட்டுகின்றன.


இவ்வேளையில் தமிழர் தாயக அரசியல் தலைவர்களை நோக்கி வேண்டுகோள் ஒன்றினை விடுக்கின்றோம்.

சிறிலங்காவின் நீதிமன்றங்களை, பாராளுமன்றத்தை யாவற்றையும் ஒரு களமாக கொண்டு, தமிழர்களுக்கான நீதியோ, அரசியல் வெளியோ இல்லை என்பதனை இன்னும் வீச்சாக

சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்த வேண்டுவதோடு, சர்வதேச நீதிப்பொறிமுறையே தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுதரும் என்பதனை இடித்துரையுங்கள். மக்கள்மயப்பட்ட அரசியற்

போராட்ட களமே அனைத்து தடைகளையும் உடைக்கின்ற ஆயுதமாக மாறும். தமிழர்களுக்கான நீதியையும் , அரசியல்

உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான புதிய புதிய களங்களாக இவைகள் உருவாகட்டும் என்பதனையும் உரிமையோடு

வேண்டுகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

ஐ.நாவின் கவனத்தில் மாவீரர் நாளுக்கான தடை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுப்பு

ஐ.நாவின் கவனத்தில் மாவீரர் நாளுக்கான தடை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுப்பு

மாவீரர்நாளுக்கு சிறிலங்கா அரச கட்டமைப்புக்கள் விதித்துள்ள தடைகளை தொடர்பில் ஐ.நாவின் இரண்டு சிறப்பு

அறிக்கையாளர்களின் கவனத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது.

ஒன்றுகூடும் சுதந்திரத்துக்கான சிறப்பு அறிக்கையாளர், கருத்துச் சுதந்திரத்துக்கான சிறப்பு அறிக்கையாளர்களின் கவனத்துக்கு

சர்வதேச மனித உரிமைகள்,சட்டங்களுக்கான வல்லுனர்கள் Global Diligence LLP filed மையத்தின் ஊடாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.

முன்னராக தியாகி லெப்.கேணல் திலீபனினின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு சிறிலங்கா அரச கட்டமைப்புக்கள் விதித்த தடை தொடர்பிலும், இவ்வாறான முறைப்பாட்டை ஐ.நாவின் இவ்விரு

சிறப்பு அறிக்கையாளர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்ததோடு, இது தொடர்பில் சிறிலங்கா அரசு தனது

கடுமையான எதிர்வினையை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு எதிராக வெளிப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் அதன் தொடர்சியாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மாவீரர் நாளுக்கு விதிக்கப்பட்டு வரும் தடைகள் தொடர்பில் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்களுக்கு மேற்கொண்ட

முறையீட்டில்,
இலங்கைத்தீவில் சிங்கள பௌத்த பேரினவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவே தமிழர்கள் ஆயுத வழியிலும்,

அமைதி வழியிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ‘மாவீர்ர் நாள்’ என்பது இத்தகைய அரச பயங்கரவாத அடக்குமுறையை

எதிர்த்துப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவேந்துவதற்காக நடத்தப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல்

களப்பலியான மாவீரன் லெப்டினண்ட் சங்கர் உயிர்நீத்த நாளே மாவீரர் நாளாக ஆண்டுதோறும் தமிழ்மக்களால் நினைவேந்தப்படுகின்றது.

தமிழ்மக்களின் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகளை விதிப்பதும், அச்சுறுத்துவதும் ஐ.நாவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச குடியியல் அரசியல் உரிமைகள் பற்றிய பன்னாட்டு

ஒப்பந்தத்தின் முறையே உறுப்பு 21 மற்றும் 19ல் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ள ஒன்றுகூடும் உரிமையையும் பேச்சுரிமையையும் மீறுவதாகும் என்று முறையீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் பயங்கரவாத பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளை இட்டிருப்பதானது, நினைவேந்தும் செயல்கள் உறுப்பு

21இன் கீழ் சொல்லப்படும் கட்டுத்தளைகளுக்கு இடம்தரா விட்டால் , இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த விடாமல் மக்களைத் தடை

செய்வதை நியாயப்படுத்த முடியாது எனவும் முறையீட்டில் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.

போரில் இறந்தவர்களுக்கும் அவர்களின் கல்லறைகளுக்கும் மரியாதை செய்வது என்பது சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்களின்

படி, குறிப்பாக மானிட கண்ணியத்துக்கான உரிமையின் படி பாதுகாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கான சுகாதார கட்டுப்பாடுகளை காரணங்காட்டி, தமிழ்மக்களதது அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் அதனை தவறாகப்

சிறிலங்காவின் அரச கட்டமைப்பு பயன்படுத்தி வருவதாக மீளவும் ஐ.நாவுக்கு சுட்டிக்காட்டியுள்ள இந்த முறையீட்டில்,

நினைவேந்தலைத் தடை செய்யும் நீதிபதிகளின் முடிவுகள் என்பது தமிழர்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறையிலும், இனப்

பாகுபாட்டிலும் வேர்கொண்டிருக்கக் காணலாம் எனவும் தெரிவித்துள்ளது.

நீதிமன்றங்களின் தடைக்கு அடிப்படையாக இருப்பது ‘பங்கேற்பாளர்களின் இன அடையாளமும் அதிகாரிகளோடு அவர்களுக்குள்ள உறவுமே’ ஆகும். காவல்துறையும் நீதிபதிகளும்

அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவது ‘பாகுபாடான உரிமைமீறலும் தாக்குதலும்’ ஆகும். ‘சட்டங்களும் அவற்றுக்கான பொருள்விளக்கமும் பயன்பாடும் அமைதியான முறையில்

ஒன்றுகூடும் உரிமையைத் துய்ப்பதில் ‘இனம்’ போன்ற அடிப்படையில் பாகுபாட்டைத் தோற்றுவிக்காத படி’ சிறிலங்கா உறுதி செய்ய வேண்டும்.’ மாவீர்ர் நாள் நினைவேந்தலைப்

பொறுத்த வரை அமைதியாக நினைவேந்தும் கூட்டங்கூடும் உரிமையையும் கருத்துரிமையையும் ‘மதிக்கவும் உறுதி செய்யவும்’ வேண்டிய கடமையை சிறிலங்கா மீறுவது தெளிவாகத் தெரிகிறது

எனவும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்களுக்கான முறையீட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச போர் நியமங்களுக்கு மாறாக தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் கல்லறைத் தோட்டங்கள் சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளினால் இடித்து

தரைமட்டமாக்கப்பட்டுள்ளதோடு, சர்வதேச கடப்பாடுகளுக்கு கட்டுப்படாத நிலையே காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

Posted in இலங்கை செய்திகள்

நினைவுகூரலை மறுக்கும் கோத்தாவின் கோமாளி அரசு. – மனோ கணேசன்

நினைவுகூரலை மறுக்கும் கோத்தாவின் கோமாளி அரசு. – மனோ கணேசன்

1971-ல் உயிரிழந்தவர்களை ஏப்ரல் மாதத்தில் “விரூ தின” என்றும், அதே போல 1989-ல் உயிரிழந்தவர்களை நவம்பர் மாதத்தில் “இல் தின” எனவும், JVPயினர் நினைவு கூருகின்றனர். ஆனால், உயிரிழந்த

தமிழ் போராளிகளையும், தமிழ் பொதுமக்களையும் நினைவுகூர முடியாது என கோத்தா அரசு தடை போடுகிறது. இப்படி ஒவ்வோர்

மாகாணங்களுக்கும், வெவ்வேறு சட்டங்களை போடும், இதே அரசுதான் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்றும் கோமாளித்தனமாக

சொல்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றிற்கு மனோ கணேச எம்பி வழங்கியுள்ள நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது;

தொகுப்பாளர்:

நீங்கள் அண்மையில் தமிழ் ஊடகமொன்றுக்கு, “ஒரே நாடு ஒரே சட்டம்” என்பது கேலிக்குரிய விடயமாக இருக்கின்றது என

கூறியிருந்தீர்கள். அதாவது ஆயுதம் ஏந்தியவர்களை நினைவுகூருவதை நியாயப்படுத்த முயல்வது போலவே அது தோன்றியது. என்ன கதை இது?

மனோ கணேசன்:

நான் எனது Twitter மற்றும் Facebook ஊடாக இந்த கருத்தினை பதிவேற்றியிருந்தேன். அது தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்களிலும் பிரசுரிக்கப்படுகின்றது.

நான் சொல்ல முயல்வது இதுதான். அதாவது இந்த நாட்டில் யுத்தத்தினால் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் பிரச்சினை, வடகிற்கும், தெற்கிற்கும் இடையில் இருந்து வருகின்றது. இது ஒரு புதிய பிரச்சினையல்ல.

பாருங்கள், பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? தேர்தல்களின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதங்கள் ஏந்தி போராட்டங்களை மேற்கொள்பவர்கள்தான் பயங்கரவாதிகள் என கூறப்படுகிறார்கள். இதுபற்றிய எளிமையான விளக்கம் அவ்வளவுதான்.

நாம் இப்படி பார்க்கின்ற போது, 1971, 1989 ம் ஆண்டுகளில் ஆயுதம் ஏந்திய JVPயினர் பயங்கரவாதிகள். LTTEயினரும் பயங்கரவாதிகள். மற்றும் இன்று அமைச்சு பதவி வகிக்கும் டக்லஸ் தேவானந்தவின் EPDP, PLOT, TELO ஆகிய அமைப்புகளும் பயங்கரவாத அமைப்புகளாகத்தான் செயற்பட்டுள்ளன.

ஆனால் இப்போதுள்ள கேள்வி, JVP இன்று தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. அதன் தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது. ஆனால் LTTE யிற்கு இன்னும் தடையுள்ளது. அதனால், வடக்கில் யுத்தத்தின் போது உயிரிழந்த போராளிகளாக இருக்கட்டும், பொதுமக்களாக இருக்கட்டும் அவர்களை, LTTEயின் பெயரை பயன்படுத்தி நினைவு கூறுவது சட்ட விரோதமானது என அரசாங்கமாக இருக்கட்டும், அல்லது தெற்கில் யாராவது கூறினால் அதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

ஆனால் இதனை ஒரு காரணமாக கொண்டு உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதை நிறுத்துவது என்பது அநீதியானது, பிழையானது, மனிதாபிமானமற்றது என நான் நினைக்கிறேன்.

தொகுப்பாளர்:

ஆனால் பிரபல நாடுகளில், அதாவது யுத்தம் நடைபெறுகின்ற நாடுகளில், உதாரணமாக தலிபான் இயக்கங்களை நினைவு கூருவதற்கு இடமளிப்பதில்லையே?

மனோ கணேசன்: (உடனடியாக இடைமறித்து..)

அப்போது எவ்வாறு தெற்கில் JVP நினைவு கூருகின்றது?

தொகுப்பாளர்:

JVPக்கு நினைவு கூர இடமளிக்கப்படுகின்றதா?

மனோ கணேசன்:

நினைவு கூருகின்றனர். ஏன் இல்லை, உங்களுக்கு தெரியாதா?

1971-ல் உயிரிழந்தவர்களை ஏப்ரல் மாதத்தில் “விரூ தின” என்றும், அதே போல 1989-ல் உயிரிழந்தவர்களை நவம்பர் மாதத்தில் “இல் தின” எனவும், JVPயினர் நினைவு கூருகின்றனர்.

தொகுப்பாளர்:

ஆம். ஆம். JVPயினர் மாவீரர்களை நினைவு கூருகின்றனர்தாம்.

மனோ கணேசன்:

இவர்கள் பிரசித்தமாக நாட்டில், கொழும்பு தலைநகரில், மேடை அமைத்து, போஸ்டர்களை ஓட்டி, பாதயாத்திரைகளை நடத்தி, ரோஹன விஜயவீர மற்றும் உபதிஸ்ச கமநாயக்க ஆகியோரை நினைவுக்கூறுகின்றனர்

தொகுப்பாளர்:

அப்போது நீங்கள் அந்த அந்தஸ்துக்கு LTTE தலைவர் பிரபாகரனையும் வைக்கின்றீர்களா?

மனோ கனேசன்:

நான் JVPயின் ஆயுத கொள்கையினை ஏற்றுகொள்பவனல்ல. நான் இந்நாட்டின் பிரச்சினைகளை ஒருபோதும் ஆயுதம் ஏந்தி தீர்க்க முடியும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவன் அல்ல.

பேச்சுவார்தை. பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை, கலந்துரையாடல், கலந்துரையாடல், கலந்துரையாடல். வேறு வழிமுறைகள் இல்லை.

அப்போது நான் எப்படி JVPயின் ஆயுத கொள்கையினை ஏற்றுக்கொள்வது? நான் எப்படி வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுத கொள்கையினை ஏற்றுக்கொள்வது? முடியாதுதானே! ஆயுத போராட்டம் வேண்டாம்! சண்டையிட வேண்டாம்! அடித்து கொள்ள வேண்டாம்! சாகடிக்க வேண்டாம்!

அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றாலும், உயிரிழந்தவர்களை நினைவு கூர வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

அது எங்களுக்கு இல்லை. ஆனால், அது JVPக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றே ஒன்று, JVPயின் தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது.

ஆனால் சிலர், ஜேவிபியினர் பயங்கரவாதிகள் அல்ல, அவர்கள் கலகக்காரர்கள், ஆனால், LTTE பயங்ரவாதிகள் என்று கூற முயல்கின்றனர்.

அதை நான் ஏற்க மாட்டேன். இதை தாங்கள் தேவைகளுக்காக சொல்லுகின்றனர். அதை நான் ஏற்றுகொள்ள மாட்டேன். அதில் பாரபட்சம் உள்ளது.

தொகுப்பாளர்:

அப்படியென்றால் இரு சாராரினதும் நோக்குகள் ஒன்றா?

மனோ கணேசன்:

ஒன்றாகும்! ஒன்றாகும்!

ஆயுத போராட்டம் என்பது, ஆட்சியதிகாரத்தை பெற்றுக்கொள்வேண்டி ஆகும். புலிகளின் நோக்கம் வடகிழக்கில் வேறொறு நாட்டை உருவாக்குவது என்று சொல்கிறார்கள்.

1971, 1989களில் தெற்கில் சில பிரதேசங்களை JVP பிடித்து தம்வசம் வைத்திருந்தனர். உங்களுக்கு தெரியுமாயிருக்க வேண்டும். அப்பிரதேசங்களை அவர்கள் ஆட்சி செய்தார்கள். அந்த கிராமங்களில் அவர்களது நீதிமன்றங்களை நடத்தினர். தெரியும்தானே!

LTTE மற்றும் தமிழ் அமைப்புகள், வடக்கையும் கிழக்கை மட்டும் ஆக்கிரமிக்க முயன்றனர். ஜேவிபினர் முழு நாட்டையும் பிடிக்க முற்பட்டனர்.

LTTE மற்றும் ஆயுதம் ஏந்திய ஏனைய தமிழ் அமைப்புகளுக்கும் இடையிலும், JVPக்கு இடையிலும் கொள்கை வித்தியாசங்கள் உள்ளன. அதை நான் இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால், அதை காரணமாக கொண்டு, தமிழ் அமைப்புகள் பயங்கரவாதிகள். JVPயினர் கெளதம புத்தர்கள் என்று சொல்ல முயல்வதை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன்.

எல்லோருமே ஆயுதங்களை ஏந்திதான் போராட்டங்களை செய்தனர். அதிலிருந்துதான் என் கொள்கை நிலைப்பாட்டை நான் ஆரம்பிக்கிறேன்.

ஆயுத அமைப்புகளின் போக்கினை நான் ஏற்றுகொள்வதும் இல்லை, அதை சரியென நான் சொல்வதும் இல்லை. அங்கீகரிப்பதும் இல்லை.

ஆனால் அவர்கள் உயிரிழந்தனர்.

அதனால் அவர்களின் தாய், தந்தை, மனைவிமார்களுக்கு. பிள்ளைகளுக்கு தமது பிள்ளைகளை, கணவர்மார்களை, பெரியோரை, உறவினர்களை, நினைவுகூர இடமளிக்கப்பட வேண்டும். இது இவ்வுலகில் யாருக்கும் இருக்க வேண்டிய உரிமை.

அதனால் LTTE ஒரு தடை செய்யப்பட இயக்கம் என்பதால்…, அந்த தடை என்றாவது ஒருநாள் நீக்கப்பட முடியும், அதுவரை அந்த அமைப்பின் பெயர் குறிப்பிடாமல், அவர்களது கொள்கைகளை பற்றி பேசாமல், இறந்தோரை நினைவுக்கூர அவர்களுக்கு இடமளிக்கபட வேண்டும்.

தொகுப்பாளர்:

ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லையே. அவர்கள் படங்களை பிரசுரிக்கின்றனர்?

மனோ கணேசன்:

அதை நீங்கள் தெரிவிக்க வேண்டும். தற்போது அரசாங்கம் மற்றும் தெற்கில் இருக்கும் அடிப்படைவாதிகள் சம்பூரணமாக நினைவுகூரவே கூடாது என்று கூறுகிறார்கள்.

இங்கே LTTE போராளிகள் மட்டுமல்ல, சதாரண மக்களும் யுத்தத்தின் இறுதி காலகட்டத்தில் உயிரிழந்துள்ளனர். அப்படியானால், அவர்களை எவ்வாறு நினைவு கூறுவது? அதற்கு இடமளிக்க வேண்டும் அல்லவா?

ஜேவிபியினருக்கு நினைவுகூர இடமளிக்கப்பட்டுள்ளதே. இங்கே கொழும்பில், எம் தலைநகரத்தில் பாருங்கள். இம்மாதம் பாருங்கள். அவர்கள் நினைவு கூருவார்கள்.

இதற்கு ஒரு கலந்துரையாடல் அவசியம். என்னுடைய டுவீட்டர் செய்தி மூலம் இதுபற்றிய ஒரு தேசிய கலந்துரையாடலையே நான் எதிர்பார்க்கின்றேன். ஒரு தேசிய விவாதத்தையே எதிர்பார்க்கின்றேன்.

சிலர் என்னிடம் வந்து, LTTE வேறு, JVP வேறு என்று சொல்லுகின்றனர் அதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அதை பற்றி நான் கதைக்க போவதில்லை. அவர்கள் ஆயுத போராட்டம் செய்தார்களா? இல்லையா? “லெஜிடிமேட் கவர்ன்மன்ட் ஒப் ஸ்ரீலங்கா”, சட்டபூர்வமான இலங்கை அரசாங்கம், என்பதற்கு எதிராக அவர்கள் ஆயுத போராட்டம் செய்தார்களா? இல்லையா?

இப்போது இந்நாட்டில் ஆயுதம் வைத்திருக்க யாருக்கு உரிமை உள்ளது? காவல்துறைக்கும், இராணுவத்திற்கும்தான் உள்ளது. வேறு யாருக்கும் கிடையாது.

எனக்கும் மந்திரி என்பதால் அனுமதி பெற்ற பிஸ்டல் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் எனக்கு அந்த அவசியம் இல்லை. ஆகவே என்னிடம் துப்பாக்கி இப்போது இல்லை. மற்றவர்களுக்கும் அதை வைத்திருக்க முடியும் ஆனால் அதற்கு அரசாங்கத்தின் அனுமதி தேவை.

தவிர, அமைப்புரீதியாக யாருக்கும் ஆயுத போராட்டம் நடத்த முடியுமா? ஆயுதங்கள் சேகரிக்க முடியுமா? அதைதான், அதை மட்டும்தான் நான் பார்க்கின்றேன் இவர்களின் கொள்கைகளை நான் பார்க்கவில்லை. யுத்தத்தினை இருசாராரும்தானே செய்தார்கள்? நாம் இவர்களுக்கு இடமளிக்கின்றோம். அவர்களுக்கு இடமில்லை. அப்படியானால், தமிழ் மக்களின் மனம் புண்படுமல்லவா?

இப்போது பாருங்கள். தெற்கிலுள்ள தாய், தந்தையர்களுக்கு மற்றும் மக்களுக்கு தங்களுடைய உயிரிழந்த புத்திரர்களை நினைவுகூர உரிமை உண்டு. இந்த புத்திரர்களில் பெரும்பாலோர் JVP போராளிகள். தேசபிரேமி போராளிகள். அவர்கள் இந்நாட்டில் என்ன செய்தார்கள்?

ஸ்ரீலங்கா இராணுவத்தினரை கொன்றார்கள். ஸ்ரீலங்கா பொலிஸ்காரர்களை கொன்றார்கள். அரசியல்வாதிகளை கொன்றார்கள். ஊடகவியலாளர்களை கொன்றார்கள்.

நடந்ததுதானே? இல்லை என சொல்ல முடியுமா? 1971,1989ம் ஆண்டுகளில் நடந்ததா? இல்லையா? சொல்லுங்கள். இல்லையென கூற முடியுமா? இப்போது அந்த வழியை கைவிட்டு, மனம் மாறி, பாராளுமன்றத்திற்கு வந்திருக்கின்றார்கள். நல்லது மற்றும் அழகானது.

தொகுப்பாளர்:

கருணா அம்மானும் வந்திருக்கின்றார்.

மனோ கணேசன்:

EPDPயினர் வந்திருக்கின்றனர். PLOT தலைவர் சித்தார்த்தன் வந்திருக்கின்றார். TELO அமைப்பின், தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை பாராளுமன்றத்தில், குழுக்களின் பிரதி தலைவராக இருந்திருக்கின்றார். இன்னமும் புதிதாக பலர் பாராளுமன்றம் வந்திருக்கின்றார்கள். இவர்கள் PLOT, EPDP, TELO, EPRLF அமைப்புகளில் இருந்தவர்கள். அவர்களும் ஆயுத போராட்டம் மேற்கொண்டவர்கள். அதேபோல LTTEகாரர்களும் வரலாம். ஏன், கருணா வந்து போனார். இப்போது பிள்ளையான் வந்திருக்கின்றார்.

தொகுப்பாளர்:

உங்கள் வாதம் தர்க்கரீதியாக சரி. ஆனால், நாங்கள் இரண்டையும் நிறுத்து பார்தோமானால், LTTEயின் ஆயுத போராட்டத்தினால் ஏற்பட்ட சேதங்கள் அதிகம். அதனால் தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும், நாட்டிற்கும் ஏற்பட்ட சேதம் அதிகம் அல்லவா? அதை நீங்கள் ஏற்றுகொள்ளுகின்றீரகளா?

மனோ கணேசன்:

இல்லையில்லை. யுத்தம் நடக்கும் போது… JVPயின் காலத்தில் தொழிநுட்பங்கள் அதிகம் இருக்கவில்லை. அவர்கள் சாதாரண காட்டுத்துப்பாக்கிகளை பாவித்தனர். பின்னர் 1989ல் அவர்களும் முன்னேறி இயந்திர துப்பாக்கிகளையும் பாவித்தனர். இப்போது அல்லது எதிர்காலத்தில் இன்னொரு யுத்தம் வந்தால் அவர்கள் இன்னமும் முன்னேறுவார்கள்.

ஆயுத போராட்டம் நடந்தால், யுத்தம் நடந்தால் சேதம் ஏற்படத்தானே செய்யும். நான் அதை ஏற்றுக்கொள்பவன் அல்லவே. எனக்கு அது வேண்டாமே! நான் கதைப்பது அதையல்லவே.

அங்கு சேதம் அதிகம். ஆகவே அவர்களுக்கு இடமளிக்க முடியாது. இங்கு சேதம் குறைவு. அதனால் இங்கே இடமளிப்போம். இந்த தர்க்கம் பிழையானது. இது ஒரு பாரபட்சமான தர்க்கம். அப்படி செய்ய முடியாது. ஏன் தெற்கிற்கு மட்டும் ஒரு நீதி?

இப்போ பாருங்கள். இந்த அரசாங்க காலத்தில்தான் அதிகம் சொல்லப்படுகின்றது. “ஒரே நாடு: ஒரே சட்டம்” எனப்படுகிறது.

ஒரே நாடு, என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். எனக்கு யாரும் அதுபற்றி வகுப்பு எடுக்க தேவையில்லை. நான் சொல்கிறேன். இது ஒரே நாடுதான். அதற்குள் வேறொறு நாட்டை உருவாக்க முடியாது.

இது ஒரு நாடாகவும் இருக்க வேண்டும். அரசியல் இலக்குகளை அடைய ஆயுத வழியற்ற பயணத்தையும் மேற்கொள்ள வேண்டும். இவை என் பிரதான இரண்டு நோக்கங்கள். ஒன்று, இது ஒரே நாடு. இரண்டாவது, அரசியல் நோக்குகளை அடைய ஜனநாயகமற்ற பாதையில் செல்லாமல் இருப்பது. இது இரண்டும் எனது அடிப்படை. அதற்குள்ளேதான், நான் எல்லாவற்றையும் அளந்து, நிறுத்து பார்க்கின்றேன்.

அதற்குள் எல்லாமே வருகிறதுதானே? “ஒரே நாடு, ஒரே சட்டம்“ என்று இந்த அரசாங்கம்தானே சொல்கின்றது? ஒரே சட்டத்தை கொண்டுவர முடியுமோ என எனக்கு தெரியவில்லை. அதற்கு வெவ்வேறு பிரச்சனைகள் உள்ளன.

கண்டியில் “மலைநாட்டு சிங்கள சட்டம்” உள்ளது. வடக்கில் “தேசவழமை சட்டம்” இருக்கின்றது. “முஸ்லிம் சட்டம்” இருக்கின்றது. இவற்றையெல்லாம் கலந்துரையாடி ஓரிடத்திற்கு கொண்டு வரவேண்டும். அப்படியென்றால் நல்லது. அப்படி ஒரே சட்டம் கொண்டு வரும் போது, அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்க வேண்டும்.

நான் சொல்வது அதனையல்ல. இப்படி சொல்லும் அரசாங்கம், இப்போது பாருங்கள், வடக்கிற்கும், கிழக்கிற்கும் வேறு சட்டத்தை அமுல் செய்வது போல் தெரிகிறதே. அங்கே நினைவுக்கூர முடியாது. தெற்கில் நினைவுக்கூர முடியும்.

அப்போது அது வேறொரு நாடா? வேறு நாடு இல்லை என நாங்கள் சொல்லுகின்றோம். ஆனால் இதன் முலமாக வெவ்வேறு நாடுகள் என அரசாங்கம் சொல்லுகின்றது.

நாங்கள் இதை மனிதாபிமான கோணத்தில், மனிதாபிமான பிரச்சினையாக பார்க்க வேண்டும். அவர்களுக்கு நினைவுகூர இடமளிப்பது, அவர்களுடைய கொள்கைகளை அப்படியே ஏற்கின்றோம் என்பதல்ல.

சரி…, எனக்கு சொல்லுங்களேன். LTTE இப்போது எங்கு இருக்கின்றது?

2009 மே மாதம் 19 தினம் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் என உத்தியோகபூர்வமாக அக்காலத்தில் ஜனாதிபதி இப்போது பிரதமராக இருக்கின்றவர் பாராளுமன்றம் வந்து அறிவித்தார். அந்நேரத்தில் LTTE முற்றாக அழிக்கப்பட்டது எனவும், யுத்தத்தில் வெற்றி பெற்றோம் எனவும் தெரிவித்தார்கள்.

இப்போது சில இடங்களில், சில நேரங்களில், LTTE கொடிகளை ஏந்தி, சிலர் வெளிநாடுகளில் போராட்டங்களை மேற்கொள்ளுகின்றனர். அவற்றை வைத்துக்கொண்டு, அதை ஒரு பயங்கர பூதமாக காட்டி, காலம்பூராவும் சாதாரண தமிழ் மக்களை அடிமைப்படுத்தி வைக்க முடியாது. இப்போது LTTE இல்லை.

மற்றபடி, வட-கிழக்கு மக்களின் இன்றைய மனப்பான்மையை நான் நன்கறிவேன். அவர்கள் இன்னுமொரு பயங்கர யுத்தத்திற்கு தயார் இல்லை. இப்பொழுது யாராவது ஆயுத போராட்டத்தை பற்றி பேசினால், பொலிஸ், ராணுவத்துக்கு முன், வட-கிழக்கு தமிழ் மக்கள் அதை எதிர்ப்பார்கள்.

ஆகவே இந்த பின்னணியில்தான் இவற்றை நாம் பார்க்க வேண்டு

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் 26 லட்சம் மக்கள் வேலை இழந்து தவிப்பு

பிரிட்டனில் 26 லட்சம் மக்கள் வேலை இழந்து தவிப்பு

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கோரனோ நோயின் தாக்குதலில் சிக்கி மக்கள் பாதிக்க பட்ட நிலையில் ,அடித்து பூட்டும்

நிகழ்வுகள் தொடரும் நிலையில் வேலையிழந்து மக்கள் தொகை சுமார் 26 லட்சம் என தெரிவிக்க பட்டுள்ள்த்து

மேலும் இது அதிகரிக்க கூடும் என்பதால் அதனை தடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது

புதிய வியாபாரிகளை உருவாக்குதல் ,மற்றும் சலுகைகள் வழங்குதல் ,வரிக்குறைப்பு அல்லதுவிலக்கு அளித்தால் ஊடாக

சரிந்த பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் நகர்வில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது

அதற்கான அறிவிப்புக்களி நிதி அமைச்சர் அறிவித்து வருவதை காணலாம்

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 778,000 பேர் வேலை அற்று உதவி கோரல்

அமெரிக்காவில் 778,000 பேர் வேலை அற்று உதவி கோரல்

அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பல்லாயிரம்

பேர் பலியாகியும் பாதிக்க ,பட்ட நிலையில் மக்கள் வேலை

வாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர்

இதனால் ,தற்போது 778,000 பேர் வேலை அற்ற நிலையில் அரசிடம்

உதவி கோரி விண்ணப்பித்துள்ளனர்

மேலும் இந்த மக்கள் விண்ணப்பங்கள் வரும் வாரங்களில் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

Posted in உலக செய்திகள்

புயலால் சேதமடைந்த பிரபல இயக்குனரின் கார்

புயலால் சேதமடைந்த பிரபல இயக்குனரின் கார்

தற்போது உருவாகியிருக்கும் நிவர் புயல் காற்றால் பிரபல இயக்குனர் ஒருவரின் கார் மீது மரம் விழுந்து சேதம் அடைந்துள்ளது.

நிவர் புயலால் சேதமடைந்த பிரபல இயக்குனரின் கார்
சேதமடைந்த கார்


தற்போது உருவாகி இருக்கும் நிவர் புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ள

நிலையில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக

சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

சாலைகளில் அதிக அளவில் தேங்கியிருக்கும் தண்ணீர் ஒரு சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளது. ஒருபுறம் காற்று வேகமாக வீசுவதால் மரங்களும் சாய்ந்து வருகின்றன. இதனால்

சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களும் பெரிதும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

இயக்குனர் கண்ணன்

இந்நிலையில் கண்டேன் காதலை, வந்தான் வென்றான், பிஸ்கோத் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கண்ணன், வீட்டுக்கு

வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது கார் மீது மரம் விழுந்ததில் காரின் முன் பக்கம் சேதமடைந்துள்ளது

இயக்குனரின் கார்
இயக்குனரின் கார்
Posted in உலக செய்திகள்

கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை -இம்ரான்

கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை -இம்ரான்

பாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மைநீக்க தண்டனை வழங்குவது தொடர்பாக கொள்கை அடிப்படையில் பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் அளித்துள்ளார்.

பாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க தண்டனை -இம்ரான் கான் ஒப்புதல்

பாகிஸ்தானில் கற்பழிப்பு வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டது.

இந்நிலையில், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கி தண்டனை வழங்குவதற்கும், கற்பழிப்பு வழக்குகளை விரைவாக

விசாரிப்பதற்கும் பிரதமர் இம்ரான் கான் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான அவசர சட்ட வரைவை அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்தபோது, இந்த கடுமையான தண்டனை குறித்து முடிவு

எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

காவல்துறையில் பெண்களை அதிக அளவில் சேர்ப்பது, கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பது, சாட்சிகளின் பாதுகாப்பு

ஆகிய அம்சங்கள் இந்த வரைவு சட்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என்று சில மந்திரிகள் பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆண்மை நீக்க தண்டனை ஒரு தொடக்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள ஆளுங்கட்சி செனட்டர் பைசல் ஜாவேத் கான்,

விரைவில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என கூறி உள்ளார்

Posted in உலக செய்திகள்

கால்பந்து ஜாம்பவான் மரடோனா மரணம்

கால்பந்து ஜாம்பவான் மரடோனா மரணம்

கால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவையொட்டி அர்ஜென்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கால்பந்து ஜாம்பவான் மரடோனா மரணம் – அர்ஜென்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு


1986-ம் ஆண்டு வென்ற உலக கோப்பையுடன் மரடோனா.
பியூனஸ் அயர்ஸ்:

அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான மரடோனா 1977முதல் 1994-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சர்வதேச கால்பந்து அரங்கில்

கலக்கியவர். தனது வேகம் மற்றும் விவேகம் நிறைந்த நளினமான ஆட்டத்தால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின்

உள்ளத்தை கொள்ளை கொண்ட கால்பந்து கதாநாயகனாக ஜொலித்தார்.

1986-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டனாக இருந்த மரடோனா உலக கால்பந்து அரங்கில் பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு நிகராக பார்க்கப்பட்டவர். 4 உலக

கோப்பை போட்டியில் (1982, 1986, 1990, 1994) பங்கேற்றவரான அவர் அர்ஜென்டினா அணிக்காக 91 சர்வதேச போட்டிகளில் விளையாடி 34 கோல்கள் அடித்துள்ளார். பார்சிலோனா, நபோலி, செவில்லா

உள்ளிட்ட கிளப் அணிகளுக்காக களம் கண்டு இருக்கும் அவர் மொத்தம் 491 கிளப் போட்டிகளில் ஆடி 259 கோல்கள் அடித்து இருக்கிறார்.

10-ம் நம்பர் சீருடைக்கு தனி மரியாதை சேர்த்த அவர் ஓய்வுக்கு பிறகு அர்ஜென்டினா உள்பட பல்வேறு அணிகளின் பயிற்சியாளராக பணியாற்றினார். அத்துடன் போதை

பழக்கத்துக்கு அடிமையாகி உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சையும் பெற்றார். இந்த நிலையில் 60 வயதான மரடோனா கடந்த 2-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக பியூனஸ் அயர்சில்

உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்ததை அடுத்து

அவசரமாக ஆபரேஷன் செய்யப்பட்டு ரத்த உறைவு அகற்றப்பட்டது. ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் மரடோனாவுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது திடீர் மறைவு கால்பந்து ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது

மறைவையொட்டி அர்ஜென்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் உள்பட பலரும் மரடோனா மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கான அறிவிப்பு.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கான அறிவிப்பு.

சிகிச்சைப் புத்தகத்தைப் பொலிஸ் சாவடியில் வழங்கி வீடுகளுக்கே மருந்து வகைகளை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மாவட்டங்களில் தற்போது

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், கொழும்பு மாநகர எல்லை பகுதிக்குள் வட கொழும்பு மற்றும் மத்திய கொழும்பு பிரதேசங்களில் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்ட சில

பிரதேசங்கள் உண்டு. இந்த தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில், அதி உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட ஏனைய நோய்களுக்காக சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளும் நோயாளிகள் இருப்பார்களாயின் அவர்கள் கொழும்பு மாநகர

எல்லைக்குள் அருகாமையில் உள்ள சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்காக தம்மை பதிவு செய்ய வேண்டும். இல்லையாயின் தமது கிளினிக் புத்தகத்தை அருகாமையில் உள்ள பொலிஸ்

சாவடியில் வழங்கினால் உங்களுக்கு தேவையான மருந்துகளை உங்கள் வீடுகளுக்கே கிடைக்கக் கூடிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் பல வைத்திய குழுக்களை ஈடுபடுத்தி நடமாடும் சிகிச்சை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நடமாடும் சிகிச்சை குழுக்களிடம் சிகிச்சை

ஆவணத்தை வழங்கினால் சம்பந்தப்பட்ட வைத்தியசாலையிலிருந்து தேவையான மருந்து வகைகளை வீடுகளுக்கே கொண்டு வந்து வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம். யாராவது அல்லது நோயாளிகளுக்கு

சிகிச்சைக்கு சமூகமளிக்க முடியவில்லையாயின் இந்த நடவடிக்கையை பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

நேற்றைய தினம் 335 கோவிட் தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களுள் 167 பேர் கொழும்பு பிரதேச எல்லைக்கு உட்பட்டவர்கள். ஆகக்கூடுதலான நோயாளர்கள்

தனிமைப்படுத்தப்பட்டுள்ள அடுளுகம கிராம உத்தியோகத்தர் பிரிவிலேயே பதிவாகியுள்ளனர். அங்குள்ள ஏனைய

நோயாளர்களை இனங்காண்பதற்காக இன்றைய தினம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

8 ஆவது நாளாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி ஆஜர்

8 ஆவது நாளாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (25) 8 ஆவது நாளாக ஆஜராகியுள்ளார்.

அவர் இன்று முற்பகல் 10.00 மணியளவில் ஆணைக்குழுவில் ஆஜரானதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத்

தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்க அவர் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினமும் (24) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ஒரு மாணவன் மாத்திரம் கல்வி கற்கும் பாடசாலை

இலங்கையில் ஒரு மாணவன் மாத்திரம் கல்வி கற்கும் பாடசாலை

ஒரு மாணவன் மாத்திரம் கல்வி கற்கும் பாடசாலை உண்டு.

.இரண்டு மாணவர்களைக்கொண்ட பாடசாலையும் உண்டு. 5 மாணர்களைக்கொண்ட பாடசாலையும் இந்த பாசாலைகள் அனைத்திற்கும் ஆசிரியர்கள் இருக்கின்றனர்.இவ்வாறான

அனைத்து பாடசாலைகளில் விசேட வசதிகளை மேற்கொள்வதற்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாடசாலைகளுக்கு போதுமான நிதி

வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் செயவாளர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரத்து 165 பாடசாலைகளுக்கு 480 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மாறுபட்ட உலகில் மாறுபட்ட வகையில் இன்று செயல்படவேண்டியிருப்பதாக தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, பாடசாலைகளை

ஆரம்பிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆரம் ஏற்பாடுகள் இங்கு குறிப்பிட்ட அவர் கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் ஒன்றிணைந்து பாடசாலைகளுக்கான 15 2020 என்ற சுற்றறிக்கை

அன்று தயாரிக்கப்பட்டது.இது தற்போது சட்டமாக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்றை தடுத்தல் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை தயார்படுத்துவதற்கான

இந்த சுற்றறிக்கைக்கு அமைவாக இதன் உத்தியோகபூர்வ குழு 15 – 2020யின் படி மாகாண மட்டத்தில் பாடசாலைகளுக்கான சுகாதார

குழுவை நடைமுறையில் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதில் உள்ளடக்கப்பட வேண்டியவர்கள் மற்றும் மாணவர்களின் போக்குவரத்து குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த சுற்றறிக்கை 2020.05.11ஆம்திகதி அதாவது முதலாவது கொவிட் 19 அலை ஆரம்பமானபோது விடுக்கப்ட்டதாகும்.

இதில் 19 பக்கத்தில் பாடசாலைகள் எவ்வாறு கல்வி நடவடிக்கைகளுக்காக தயார் செய்யப்ட வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அப்போது கல்வி அமைச்சில் இருந்து

இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. நாம் கண்ட அனுபவங்களின் அடிப்படையில் பாடசாலைகளை கேந்திரமாகக்கொண்டு அதாவது மாணவர்களை – மாணவர்கள் என்பவர்களை நாம் நாட்டின் இரத்தினங்களாகவே கருதி தீர்மானத்தை மேற்கொண்டோம்.

அவர்களது உரிமை என்பது அவர்களுக்கான கல்வியாகும். இதேபோன்று இரத்தினமான மதிக்கப்படும் மாணவர்களை

பாதுகாப்பவர்கள் பெற்றோர். இதனால் தான் கல்வி அமைச்சர் இந்த பாடசாலைகள் தொடர்பில் சுதந்திரமான தீர்மானத்தை மேற்கொள்வதற்கான உரிமையை வழங்குமாறு ஆலோசனை வழங்கினார்.

இதற்கு பொறுத்தமானவர்கள் பெற்றோர் பழைய மாணவர்சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், அதிபர் ,ஆசிரியர், கிராம

உத்தியோகத்தர் பாடசாலையை கேந்திரமாகக்கொண்ட சுகாதார அதிகாரி போக்குவரத்து பிரிவினர் ஆகியோரை உதவுமாறு கூறினோம்.

இதற்கமைவாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பதில்லையென நேற்று தீர்மானங்களை மேற்கொண்டனர். இந்த நடைமுறையின் கீழ் இதற்கு கிடைத்த

பயன். இதேபோன்று தமது பிள்ளைகளின் கல்விக்காக காத்திருந்த பெற்றோர் தமது பிள்ளைகளை ஆர்வமாக நேற்றைய தினம்

காடசாலைகளுக்கு அனுப்ப முடிந்தமை அந்த பெற்றோருக்கு கிடைத்த பலன்களாகும்.

குறைகாடுகள் தொடர்பில் காத்திரமான விமர்சனங்களை வரவேற்கிறோம்.அவற்கு தீர்வை வழங்கவும் நாம் தயாராகவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

ஓகஸ்ட் மாதத்திலிருந்து சில பாடசாலைகளுக்கு தலா 110,000 வரை வழங்கியுள்ளோம். ஒரு சில பாடசாலைகள் சுகாதார அதிகாரி ஒப்புதல் அளிக்கும் வரை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது.

தற்போது முடக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் பாடசாலைகளை மீண்டும் திறக்கும்போது கடுமையான நெறிமுறைகள்

பின்பற்றப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்

Posted in இலங்கை செய்திகள்

கோட்டா அரசில் பெண்களின் மாதவிடாய்க்கு வரி

கோட்டா அரசில் பெண்களின் மாதவிடாய்க்கு வரி

அரசாங்கம் அறவிடவிருக்கும் புதிய வரி, “மாதவிடாய் வரி” எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ரோஹினி கவிரத்ன, பெண்களை துன்ப படுத்தவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

வரவு-செலவுத் திட்டம் மீதான இன்றைய (24) குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“பிரித்தானியர்கள் உடலுக்கு வரி அறிவிட்டனர். தற்போது, மாதவிடாய்க்கு 15 சதவீதம் வரி அறிவிடப்படுகின்றது. அதனூடாக

பெண்களின் மாத சுழற்சியில் வருமானத்தை திரட்டுவதற்கு முயலுகின்றனர்” என்றார்.

“பிரித்தானியாவின் டொரின்டன் ஆளுநர், உடலுக்கு வரி, நாய் வரி உள்ளிட்ட மிகமோசமான ஏழு வரிகளை 1848 ஆம் ஆண்டு

விதித்தார். இந்த அரசாங்கம், பெண்களின் மாத சுழற்சிக்கு வரி அறவிட்டது என வரலாற்றில் பதிவாகும்” என்றார்

“உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகள்,பாடசாலை மாணவிகள், ஏழ்மையானவர்களுக்கு “அணையடை ஆடை” (Sanitary towels) இலவசமாக வழங்கப்படுகிறது. நிவாரண விலையில்

வழங்கப்படுகின்றது. சௌபாக்கிய அரசாங்கம், செல்வந்தர்களிடம் வரியை நீக்கிவிட்டு, அன்றாட தேவையான பொருட்களுக்கு வரியை அறவிடுகின்றது” என்றார்.

நல்லாட்சி அரசாங்கத்தில், அணையடை ஆடைக்கான (Sanitary towels)வரியை 40 சதவீதம் குறைத்தது. அதற்கு மக்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது எனத் தெரிவித்த அவர், இந்த

அரசாங்கம் அணையடை ஆடைக்கு 15 சதவீதமான வரியை அதிகரித்துள்ளது. மாதவிடாய் வரியின் மூலமாக பெண்கள் மட்டும் பாதிக்கப்படமாட்டார் என்றார்.

ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் சிலர் இருக்கின்றனர். “அணையடை ஆடையை வாங்கமுடியாத காரணத்தால் பாடசாலைக்குச் செல்லமுடியாத மாணவிகள் பலர் இருக்கின்றனர்.

ஏழ்மையின் காரணமாக ஒவ்வொரு மாதமும் 50 சதவீதமான மாணவிகள் பாடசாலைகளுக்குச் செல்வதில்லை. அகையால், அந்த வரியை நீக்குமாறு, ரோஹினி கவிரத்ன கோரிக்கை விடுத்தார்.

Posted in இலங்கை செய்திகள்

பெண் உத்தியோகத்தரை தாக்கிய முகாமையாளர் கைது

பெண் உத்தியோகத்தரை தாக்கிய முகாமையாளர் கைது

நிர்வாக உதவியாளர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய மேல்மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின்

உடுகம்பொல அலுவலகத்தின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலுவலகமொன்றில் பணிப்புரியும் பெண் மீது உயர் அதிகாரியொருவர்

தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு

பெண்ணை தாக்கிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Posted in உலக செய்திகள்

இந்தியா எல்லை அருகே சீனாவின் மிக பெரும் பதுங்கு குழிகள் கண்டு பிடிப்பு

இந்தியா எல்லை அருகே சீனாவின் மிக பெரும் பதுங்கு குழிகள் கண்டு பிடிப்பு

சீனா இந்தியா எல்லை அருகே மிக இரகசியமாக அமைக்க பட்ட

பதுங்குகுழிகள் செய்மதி படங்கள் ஊடக வெளியிட பட்டுள்ளது

இந்தியா எல்லையில் இருந்து தாம் விலகுவதாக கூறிய சீனாவின்

உரு மறைக்க பட்ட மேற்படி பதுங்கு குழிகள் இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேற்படி சம்பவம் தொடர்பில் இரு நாடுகளும் பேச உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

Posted in உலக செய்திகள்

இந்தியாவில் 46 கைபேசி செயலிகளுக்கு தடை – அதிர்ச்சியில் பாவனையாளர்கள்

இந்தியாவில் 46 கைபேசி செயலிகளுக்கு தடை – அதிர்ச்சியில் பாவனையாளர்கள்

இந்தியாவில் புதிதாக 43 கைபேசி செயலிகளை அந்த நாடு திடீர் தடை உத்தரவை

பிறப்பித்துள்ளது ,நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் சமூகங்களுக்கு

இடையிகள் முரண்களை ஏற்படுத்துவது போன்ற குற்ற சாற்றட்டுக்கள் முதன்மையாக வைக்க பட்டு தடை விதிக்க பட்டுள்ளது

மேற்படி செயலிகளில் அதிகமானவை சீனாவை தளமாக கொண்டு இயங்கி வந்தவை

அதனால் இந்த திடீர் தடை உத்தரவை இந்தியா பிறப்பித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

Posted in உலக செய்திகள்

கூகுள் நிறுவனம் மீது ரஷிய அரசு வழக்கு- நடந்தது என்ன ..?

கூகுள் நிறுவனம் மீது ரஷிய அரசு வழக்கு- நடந்தது என்ன ..?

ரஷியாவில் ‘கூகுள் சர்ச்’ தேடுபொறி தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்களை நீக்க தவறி விட்டதாக கூறி கூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

கூகுள் நிறுவனம் மீது ரஷிய அரசு வழக்கு

இணைய தேடலில் அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் ‘கூகுள் சர்ச்’ தேடுபொறி பயனாளர்களின் முதன்மையான தேர்வாக

இருந்து வருகிறது. இந்த நிலையில் ரஷியாவில் ‘கூகுள் சர்ச்’ தேடுபொறி தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்களை நீக்க தவறி

விட்டதாக கூறி கூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுகுறித்து ரஷியாவின் தகவல் கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் “பயங்கரவாதம், ஆபாசம் மற்றும் தற்கொலையை

தூண்டுவது உள்ளிட்ட ஆபத்தான உள்ளடக்கங்களை அகற்ற கூகுள் தவறிவிட்டது. எனவே கூகுள் நிறுவனத்துக்கு எதிராக ரஷிய அரசு

நிர்வாக நடவடிக்கைகளை திறந்துள்ளது. கோர்ட்டில் வழக்கு தொடர்வது மட்டுமல்லாமல் 65 ஆயிரத்து 670 அமெரிக்க டாலர்

(இந்திய மதிப்பில் சுமார் 48 லட்சத்து 60 ஆயிரம்) அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

Posted in உலக செய்திகள்

பிரசவத்தில் மனைவி பலி – 8 மாதங்களுக்கு பிறகு குழந்தையை பார்த்த கணவன்

பிரசவத்தில் மனைவி பலி – 8 மாதங்களுக்கு பிறகு குழந்தையை பார்த்த கணவன்

கொரோனா பரவல் காரணமாக பிரசவத்தில் மனைவியை இழந்த நிலையில் 8 மாதங்கள் கழித்து நேபாள வாலிபர் தனது குழந்தையை சந்தித்த சம்பவம் பலரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

பிரசவத்தில் மனைவி பலி : கொரோனா பரவல் காரணமாக 8 மாதங்களுக்கு பிறகு குழந்தையை சந்தித்த நேபாள வாலிபர்

நேபாள நாட்டில் காட்மண்டு பகுதியை சேர்ந்தவர் யுப்ராஜ் பூசல் (வயது 30). துபாயில் உள்ள தனியார் கல்லூரியில் நீச்சல் குளத்தின் பாதுகாப்பு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கர்ப்பிணி

மனைவி மினா சொந்த ஊரில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் யுப்ராஜின் மனைவிக்கு ஜலந்தா என்ற அழகிய

பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த ஒரு சில நாட்களில் மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு பலியானார்.

அப்போது கொரோனா பரவல் காரணமாக அனைத்து நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடுவதாக அறிவித்திருந்தது.

இதனால் அவர் தனது சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை. தொடர்ந்து 8 மாதங்கள் மனைவியை இழந்து தனது குழந்தையை காணாமல் தவித்து வந்தார்.

இதற்கிடையே சக ஊழியர்கள் உதவியுடன் பண உதவி பெற்று சொந்த ஊருக்கு சென்றார். அங்கு காட்மண்டு பகுதியில்

மலைக்கிராமம் ஒன்றில் சிறிய குடிசையில் தனது குழந்தை ஜலந்தாவுடன் விடுமுறையை கழித்து வருகிறார்.

தொழிலாளியான இவர் அடுத்த மாதம் இறுதியில் துபாய் திரும்ப உள்ளார். மனைவியை இழந்த நிலையில் 8 மாதங்கள் கழித்து

குழந்தையை சந்தித்த சம்பவம் துபாயில் பலரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது

பிரசவத்தில் மனைவி பலி
பிரசவத்தில் மனைவி பலி
செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாண உணவகமொன்றிலிருந்து சடலம் ஒன்று கண்டுபிடிப்பு

யாழ்ப்பாண உணவகமொன்றிலிருந்து சடலம் ஒன்று கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள, உணவகமொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர், உணவகத்தில் பணியாற்றுவதற்காக, மூன்று

தினங்களுக்கு முன்னர், தென்னிலங்கையிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் மீட்கப்பட்ட உணவகத்தில் கடமையாற்றும், பணியாளர்கள் வெளியேறுவதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு,

பொலிஸாரின் தீவிர கண்கானிப்புக்குள் உணவகம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

தென்னிலங்கையிலிருந்து வருகை தந்தவர் என்ற அடிப்படையில், மாதிரிகள்

எடுக்கப்பட்டு, பி.சி.ஆர் பரிசோதனைகள் இன்று (24) மேற்கொள்ளப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

இரண்டு துண்டுகளாக கண்டுபிடிக்கப்பட்ட சடலம்- கடித்து தின்ற முதலை

இரண்டு துண்டுகளாக கண்டுபிடிக்கப்பட்ட சடலம்- கடித்து தின்ற முதலை

திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடிச்சலாறு கலப்பு பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றவர் முதலை

கடித்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சடலம் இன்று (24) காலை மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் தம்பலகாமம்- புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கணபதிப்பிள்ளை யோகேஸ்வரன் (55 வயது) என்பவருடையது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது:

தம்பலகாமம்-வடிச்சலாறு கலப்பு பகுதிக்கு நேற்று (23) பிற்பகல் மீன்பிடிக்கச் சென்ற நபர் வீட்டுக்கு வரவில்லை என தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் காணாமல் போன நபரின் உறவினர்கள் குறித்த கலப்பு பகுதியில் தேடுதல் நடாத்திய போது முதலை கடித்த

நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம்

உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

தமிழகத்தில் சிக்கியிருப்போரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு திட்டம்- டக்கிளஸ்

தமிழகத்தில் சிக்கியிருப்போரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு திட்டம்- டக்கிளஸ்

கொவிட் 19 காரணமாக நாட்டிற்கு திரும்ப முடியாமல் தமிழகத்தில் சிக்கியிருபோரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடடிவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர்

டக்ளஸ் தேவானந்தா, நாட்டிற்கு வருவதற்கு விரும்புகின்றவர்கள் தொடர்பான விபரங்களை அறியத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பல்வேறு தேவைகள் நிமித்தம், இந்தியாவிற்கு – குறிப்பாத தமிழகத்திற்கு சென்றிருந்த நிலையில் கொவிட் 19 காரணமாக ஏற்பட்ட கொறோனா பரவலினால் போக்குவரத்து தடங்கல்

காரணமாக சுமார் 1500 பேர் வரையில் தமிழகத்தில் அவதிப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு

வரப்பட்ட நிலையிலேயே அமைச்சரினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறுகிய காலத் திட்டமிடலுடன் சென்றவர்கள் திட்டமிட்டவாறு நாட்டுக்கு திரும்ப முடியாமையினால், கடந்த பல மாதங்களாக எதிர்கொள்ளக் கூடிய இன்னல்களை தன்னால் உணர்ந்து கொள்ளக்

கூடியதாக இருக்கின்றது என்று குறித்த அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த

இன்னல்களில் இருந்து பாதிக்கப்பட்டிருக்கின்றவர்களை மீட்க வேண்டியது தன்னுடைய தார்மீகக் கடமை எனவும் தெரிவித்தார்.

மேலும், இதுதொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபஷவுடன் கலந்துரையாடி, பாதுகாப்பான முறையில் உங்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான

ஏற்பாடுகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், நாட்டிற்கு வருவதற்கு ஆவலாக இருப்போர் +94760225167, +94769122831, +919003067621 ஆகிய இலக்கங்களில் ஒன்றிற்கு தொலைபேசி

ஊடாகவோக அல்லது வட்ஸ்அப் செயலி ஊடாகவோ தொடர்பு கொண்டு தங்களில் விபரங்களை வழங்கினால் அழைத்து

வருவதற்கான திட்டமிடல்களை மேற்கொள்வதற்கு இலகுவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.