Author: நலன் விரும்பி
முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை
முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை
கொவிட் சூழ்நிலை காரணமாக முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டிருந்த போதிலும், தற்போது முகக்கவசம்
அணியாமல் இருப்பது என்பது பொதுமக்களிடேயே மிகவும் சாதாரண நிலைமையாக மாறி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன கருத்து தெரிவிக்கையில், தற்போதைய கொவிட் நிலைமையை கட்டுப்படுத்த இது
ஒருபோதும் பொருத்தமானதல்ல என்றும் இன்று முதல் முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்ட
சட்ட நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதுவரையில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான ஆண்டிஜன் பரிசோதனைகள் இதற்குப் பின்னர் ஏனைய
மாகாணங்களிலும் மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இதுவரையில் இலங்கையில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 45,000 க்கும்
அதிகமாகவுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 467 நபர்கள்; இவ்வாறு பதிவாகியுள்ளனர். இதன்படி இதுவரையிலும்
இலங்கையில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 45,242 ஆகும்.
ஐ.நா மனித உரிமைச்சபையும் தமிழர்களின் நிலைப்பாடும் :
ஐ.நா மனித உரிமைச்சபையும் தமிழர்களின் நிலைப்பாடும் :
ஜெனீவா- ஐ.நா மனித உரிமைச்சபையினை மையப்படுத்தி தமிழர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு தொடர்பில்
தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் விவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் வரும் ஞாயிறன்று இணையவழி
கருத்தாடல் ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட
காலநீடிப்பு, எதிர்வரும் மார்ச் மாத ஜெனீவா ஐ.நா அமர்வுடன் நிறைவடைகின்றது.
இந்நிலையில் இத்தீர்மானத்தின் அடுத்த கட்டம் என்ன என்ற நிலையில், சிறிலங்கா அரசாங்கம், சர்வதேச சமூகம் தனது
நலன்களின் அடிப்படையில் தம்மை தயார்படுத்தி வரும் நிலையில், தமிழர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
இந்நிலையில் வரும் ஞாயிறு ஜனவரி 4ம் நாள், ஐரோப்பிய நேரம், 20h00 நியு யோர்க் நேரம் 2:00 pm இணையவழியூடாக ஏற்பாடு
செய்யப்பட்டுள்ள இக்கருத்தாடலில் ZOOM செயலிமூலமாக பங்கெடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய தமிழார்களின் ஒற்றுமையின் அடையாளம் கிழிஞ்சு தொங்குது.
கனடிய தமிழார்களின் ஒற்றுமையின் அடையாளம் கிழிஞ்சு தொங்குது.
இதில் எந்த மந்திங்கள் சுவரொட்டி உத்தியோகபுர்வமானது (The Official poster of Tamil Heritage Month 2021).
கனடாவில் தமிழர் மரபுரிமை மாதம் இரண்டு குரங்குகளின் கையில் அகப்பட்ட பூமாலையின் நிலை.
ஒன்று விக்கிரமதாத்தனின் கதையில் வரும் வேதாளம் போல் தனது 15 ஆவது
தேர்தலுக்கும் மற்றையது தனது இருப்பை காட்டுவதுக்கும் தமிழர் மரபுரிமை மாதத்தை
பிச்சு பிடுங்குதுகள். படுகொலை செய்யப்பட தமிழ் மக்களின் பிணத்தில் தமது தனிப்பட்ட அரசியல் செய்யும் நாதாரிகள்.
இவர்களை காக்கைகள் மன்று கண்டறிந்து தகுந்த தணடனை வழங்க வேண்டும் என்பதே தேசிய நாளான சார்தவர்களின் ஏக்கமாகவும் .
என்று திருந்தும் இந்த வியாபார குழுக்கள் ..?


கொரனோ கொலைவெறி – அமெரிக்காவில் 1,650 மற்றும் பிரிட்டனில் 407 பேர் பலி
கொரனோ கொலைவெறி – அமெரிக்காவில் 1,650 மற்றும் பிரிட்டனில் 407 பேர் பலி
அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 1,650 பேர் மரணமாகியுள்ளனர்
,அதே நாளில் 163,375 பேர் பாதிக்க பட்டுள்ளனர் இவர்களுடன் 29,447 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
இவ்விதம் பிரிட்டனில் 407 பேர் பலியாகியும் ,வழமைக்கு மாறாக இன்று அதி
உச்சமாக ஒரே நாளில் 58,784 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இதுவரை
பாதிக்க பட்ட மக்கள் தொகையில் இதுவே உச்சம் தொட்டுள்ளது
இதனை அடுத்து நாடு தழுவிய நிலையில் ஆறு வாராம் அடித்து பூட்டும் நிகழ்வு அறிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்- விடுவிக்க படுவார்களா மீனவர்கள் ..?
இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்- விடுவிக்க படுவார்களா மீனவர்கள் ..?
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். .
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் இங்கு வருகை தருவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்இ தனது
விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஇ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சரோடும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இரு நாடுகளிலும் நிலவும் கொவிட் -19 பயண கட்டுப்பாடுகளுக்கு
மத்தியில் இந்த விஜயம்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இவ்வேளை சிங்கள இராணுவத்தால் பிடிக்க பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை தொடர்பாக பேச படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது
கடும் சினோ பொழிவு – 120 விமான பயணங்கள் தாமதம்
கடும் சினோ பொழிவு – 120 விமான பயணங்கள் தாமதம்
ரசியா தலைநகர் மோஸ்கோவில் உள்ள Domodedovo விமான
தளத்தில் அதிக பனி மழை பொழிவை அடுத்து 120 விமான பயணங்கள் தாமதமாகின
இதனால் பயணிகள் மிகவும் அவதியுற்றன
எனினும் விமானங்கள் எவையும் பாதிப்பில்லாது தரை இறக்கத்தை
மேற்கொண்டதாக விமான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

அமெரிக்கா இராணுவம் மீது வெடிகுண்டு தாக்குதல்
அமெரிக்கா இராணுவம் மீது வெடிகுண்டு தாக்குதல்
வடக்கு ஈராக்கில் உள்ள Salah al-Din பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த
அமெரிக்கா இராணுவத்தை இலக்கு வைத்து கண்ணிவெடி தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,
இதில் அமெரிக்கா படைகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க
படுகின்ற பொழுதும் ,அமெரிக்கா இராணுவம் இதுவரை இதில்
ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக தெரிவிக்கவில்லை

பிரிட்டனில் நாடு தழுவிய நிலையில் 6 வாரம் அடித்து பூட்டு – மக்கள் நடமாட தடை
பிரிட்டனில் நாடு தழுவிய நிலையில் 6 வாரம் அடித்து பூட்டு – மக்கள் நடமாட தடை
பிரிட்டனில் நாடு தழுவிய நிலையில் பரவி வரும் நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து இன்று முதல் எதிர் வரும் ஆறு
வாரத்திற்கு நாடளாவிய ரீதியில் முழு லொக்கடவுன் பிறப்பிக்க பட்டுள்ளது ,
பாடசாலைகள்,ஆடம்பர கடைகள் உள்ளிட்டவை அடித்து பூட்ட படுகின்றன டேக்கவே மட்டும் அனுமதிக்க பட்டுள்ளது
நோயினை கருத்தில் கொண்டு அடுத்து மேலும் அடித்து பூட்டுவதா
இல்லையா என்பது தீர்மாணிக்க படும் ,மாணவர்கள் ஆன்லைன் மூலம் கற்றல் நடவடிக்கை இடம்பெறும்
விதிக்க பட்ட புதிய விதிகளை மீறி செயல் படுபவர்கள் மீது நடவடிகை மேற் கொள்ள படுவதுடன் ,தண்டம் அறவிட படும் ,
மக்கள் தேவையற்று வெளியில் செல்ல தடைகள் உள்ளன ,அத்தியாவசிய ,
அவசிய தேவையுள்ளவர்கள் மட்டும் வெளியில் செல்ல முடியும் ,உணவு
பொருட்கள் வாங்கிட செல்லவும் முடியும் ,அது தவிர
அயலவர்களுடனோ ,அன்றி வீதியிலோ தேவையற்று நடமாட தடை விதிக்க பட்டுள்ளது
மக்களே உசார்
முரசுமோட்டையில் கருணாவை வெட்ட சென்ற நபர் – தப்பிய கருணா
முரசுமோட்டையில் கருணாவை வெட்ட சென்ற நபர் – தப்பிய கருணா
கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி
முரளிதரனை கத்திகளுடன் சந்திக்க சென்ற நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முரசுமோட்டை பகுதியில் தங்கியிருந்த கருணா அம்மானை, நேற்றைய தினம் சந்திக்க சென்ற நபரை கடமையில் நின்ற
பொலிஸார் சோதனைக்குட்படுத்திய வேளை அவரிடமிருந்து கூரிய ஆயுதங்கள் இரண்டை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வயலிற்கு பசைளை இடுவதற்காக செல்கையில், கத்தி மற்றும் அரிவாள்
ஆகியவற்றை எடுத்து சென்றதாகவும் வயலில் இருந்து திரும்புகையில்
கருணடி அம்மானை சந்தித்து செல்வதற்காகவே வந்ததாகவும் குறித்த சந்தேக
நபர் தெரிவித்துள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்
கொழும்பு, கம்பஹா – சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு
கொழும்பு, கம்பஹா – சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு
இன்று கொழும்பு, கம்பஹா மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை 5.00 மணிக்கு கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்களில் முகத்துவாரம் பொலிஸ் பிரிவு, வாழைத்தோட்டத்தில் புதுக்கடை மேற்கு கிராம உத்தியோத்தர் பிரிவு, புதுக்கடை கிழக்கு கிராம உத்தியோத்தர் பிரிவு, பொரளையில் வனாத்தமுல்ல கிராம உத்தியோத்தர் பிரிவு, மிரிஹானையில் தெமலவத்த ஆகியவை அடங்கும்.
கம்பஹா மாவட்டத்தின் பேலியகொட பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பேலியகொட கிராம உத்தியோத்தர் பிரிவு, மீகஹவத்த கிராம உத்தியோத்தர் பிரிவு, பட்டிய வடக்கு கிராம உத்தியோத்தர் பிரிவின் ரோஹன விஹார மாவத்தை, பேலியகொட கங்கபட கிராம உத்தியோத்தர் பிரிவில் நெல்லிய-கஹ-வத்த, பூரண கொட்டுவத்த, கிரிபத்கொட பொலிஸ் பிரிவில் விலேகொட-வடக்கு கிராம உத்தியோத்தர் பிரிவு ஆகிய இடங்களும் இன்று அதிகாலை 5.00 மணிக்கு தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
புலம்பெயர் புலிகளை காட்டி கொடுத்த சுமந்திரன்
புலம்பெயர் புலிகளை காட்டி கொடுத்த சுமந்திரன்
ஜெனீவா விவகாரம் தொடர்பில் நான் முன்னர் கையளித்த வரைவு புலம்பெயர் அமைப்புக்கள் வரைந்த வரைபு. அது எனது வரைபு
இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா விவகாரங்களை கையாள்வது தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று (03.01) இடம்பெற்ற பின்
ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜெனீவா விவகாரங்களை கையாள்வது தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம் கிளிநொச்சியில் அண்மையில் இடம்பெற்றது. அதனையடுத்து இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னனியினருடன்
சேர்ந்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலுக்கு பின்னர் இங்குள்ள அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பாதிக்கப்பட்டவர்களின் தரப்புக்கள் எல்லோரும்
இணைந்து ஜெனீவா அமர்வு நடைபெறுகிற போது பொதுவான நிலைப்பாட்டை எடுப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்து உள்ளன.
அதை வருகிற சிலநாட்களில் அமர்ந்திருந்து ஒரு வரைபை தயாரித்து அதற்கு பின்னர் அனைத்து தரப்புகளிடத்திலுரும் பேசி ஒரு தீர்மானத்தை எடுக்கலாம் என நினைக்கின்றேன்.
முன்னர் வெளியான ஜெனீவா தொடர்பான வரைபு நான் வரைந்த வரைபு அல்ல. அது புலம்பெயர் அமைப்புக்கள் வரைந்த வரைபு. அவர்கள் எங்களுக்கு அனுப்பினார்கள். மற்றைய இரண்டு
கட்சிகளுக்கும் கொடுக்கும்படி சொன்னார்கள். அவர்கள் நான் வரைந்ததாக நினைத்து நிராகரித்து உள்ளார்கள். அதனை பின்னர் விக்கினேஸ்வரன் ஐயா ஏற்றுக் கொண்டுள்ளதாக மின்னஞ்சல்
ஒன்று பார்த்தேன். அது வேற கதை. நாங்கள் அடுத்த சில நாட்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோர்
இணைந்து இங்கு பேசி இணைக்கப்பாட்டுக்கு வந்த விடயங்களை பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு அனைவரும் வரலாமா என ஆராயவுள்ளோம் என்றார்.
இதன்போது மாகாணசபை முறையை அரசாங்கம் நீக்குவது குறித்து பேசுவது தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது,
அரசாங்கத்திடம் கையளித்த அரசியலமைப்பு தொடர்பான எமது யோசனையில் மாகாணசபை முறை தொடர்பில் தீர்க்கமாக குறிப்பிட்டுள்ளோம். மாகாணசபையை முறையை ஒழிக்க
இடம்கொடுக்க முடியாது. அதில் பாரிய பின்விளைவுகள் இருக்கிறது. அரசாங்கம் வேறு வேறு ஜனாதிபதிகளின் கீழ் சர்வதேசம், இந்தியா மற்றும் பல தரப்புகளுக்கு தமது
வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்கள். அதை எல்லாம் மீறி செயற்பட முடியாது. அதை மீறி செயற்படுமாக இருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் முடிவுகள் எடுப்போம் என்றார்..
22 ஆம் திகதி விமான நிலையங்கள் திறப்பு
22 ஆம் திகதி விமான நிலையங்கள் திறப்பு
வௌிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட அனைத்து வணிக விமானங்களுக்காக ஜனவரி 22 ஆம் திகதி தொடக்கம் விமான
நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரதம் தொடர்பில் அவதானம் செலுத்தி சுகாதார பிரிவுகளின் விசேட கண்காணிப்பின் கீழ் விமான
நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஜனவரி 22 ஆம் திகதியின் பின்னர் நாட்டிற்கு வருவதற்கு அனைத்து வர்த்தக
விமானங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்க நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்
. பாதுகாப்பு முறைமைகளை கடைப்பிடித்து நாட்டை திறக்க வேண்டும்”. என்றார்
வௌ்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு
வௌ்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக
பெய்துவரும் இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட நொச்சிமுனை, நாவற்குடா, வேலூர்,
கூழாவடி, மாமாங்கம், குமாரபுரம், புன்னைச்சோலை, இருதயபுரம்,
கறுவப்பங்கேணி, பாரதி வீதி, எல்லை வீதி உட்பட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் பலர் உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதை காணமுடிகின்றது.
இதேநேரம் படுவான்கரையின் பல பகுதிகளில் வெள்ள அபாயம் காணப்படுவதாக அங்கிருந்துவரும் தெரிவிக்கின்றன.
போரதீவுப்பற்று, பட்டிப்பளை, வவுணதீவு, ஏறாவூர்ப்பற்று, கிரான் பிரதேச செயலகப்பரிவுகளில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது.
மக்கள் மீதுகார் குண்டு தாக்குதல் – பலர் பலி
மக்கள் மீதுகார் குண்டு தாக்குதல் – பலர் பலி
வடகிழக்கு சிரியாவின் Ras al Ain town பகுதியில் உள்ள மரக்கறி
சந்தையை இலக்கு வைத்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இதில் சமப்வ இடத்தில இருவர் பலியாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
,இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை ,
சிரியாவில் கடந்த ஒன்பது ஆண்டுகள் கழிந்து கடும் யுத்தம்
இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

வெடித்தி சிதறிய எண்ணெய் கூடம் – ஏழு பேர் காயம் – நடந்தது என்ன ..?
வெடித்தி சிதறிய எண்ணெய் கூடம் – ஏழு பேர் காயம் – நடந்தது என்ன ..?
சிரியா லெபனான் எல்லையி உள்ள al-Qasr, கிராமத்தில் சேமித்து வைக்க
பட்டிருந்த எண்ணெய் களஞ்சியம் வெடித்து சிதறியது ,இதில் அங்கு பணியாற்றிய ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்
குறித்த களஞ்சியம் முற்றாக எரிந்து நாசமாகியது
இந்த தீ பற்றால் திட்டமிட்ட பட்டசெயலா அல்லது குண்டு தாக்குதலா
என தெரியவரவில்லை ,லெபனான் இராணுவத்தினர் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்

வீட்டில் பதுக்கி வைக்க பட்ட 50000 cryptocurrency- சுற்றி வளைத்த பொலிஸ்
வீட்டில் பதுக்கி வைக்க பட்ட 50000 cryptocurrency- சுற்றி வளைத்த பொலிஸ்
பிரிட்டனில் வீடு ஒன்றுக்குள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்க படித்திருந்த
£78,000 ($100,000) in cryptocurrency
மற்றும் ஐந்து லட்சம் பவுண்டுகள் பணம் என்பன மீட்க பட்டன
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து நடத்த
பட்ட தேடுதலில் மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது
47 வயதுடைய நபர் கைது செய்ய பட்டு தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த
பட்டுள்ளார் .,இவர் மீது மணிலாண்டரி குற்ற சட்டு சுமத்த பட்டுள்ளது ,
பண கையாடல் புரிந்த இவர் அதற்குரிய வரி செலுத்தாமை இருந்துள்ளது
கண்டு பிடிக்க பட்டுள்ளது ,குற்றங்கள் நிரூபிக்க பட்டால் பல்லாண்டு சிறை தண்டனை கிடைக்க பெறும் என எதிர் பார்க்க படுகிறது
காரை திருடிய வாலிபனை துரத்தி பிடித்த லண்டன் போலீஸ்
காரை திருடிய வாலிபனை துரத்தி பிடித்த லண்டன் போலீஸ்
பிரிட்டனில் புத்தாண்டு தினம் இரவு 8.30 மணியளவில் கடைக்கு வெளியில்
நிறுத்தி வைக்க பட்டிருந்த ஆடம்பர புதிய ரக Mercedes C350 sports car ஒன்று திருடி செல்ல பட்டது
மேற்படி விடயத்தை அறிந்த போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்
அப்பொழுது குறிப்பிட்ட சில நிமிடங்களில் காருடன் குறித்த வாலிபன் கைது செய்ய பட்டார்
சாரதி அனுமதி பாத்திரம் இன்றி கார் ஓடியது கண்டு போலீசார் திகைத்து
போயினர் .கார் மீட்க பட்டதுடன் ,17 வயது வாலிபனை கைது செய்த
போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பிரிட்டனில் கார் திருட்டு அதிகம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
கத்தி முனையில் பெண்ணை மிரட்டி – கடையில் பணத்தை கொள்ளையடித்து தப்பிய கொள்ளையர்கள்
கத்தி முனையில் பெண்ணை மிரட்டி – கடையில் பணத்தை கொள்ளையடித்து தப்பிய கொள்ளையர்கள்
பிரிட்டன் நோட்டிங்கம் பகுதியில் Montpelier Road உள்ள கடை ஒன்றுக்குள்
புகுந்த திருடர்கள் அந்த கவுண்டரில் வேலை செய்த பெண்ணை கத்தி
முனையில் மிரட்டி டில்லுக்குள் இருந்த பனத்ததை திருடி கொண்டு தப்பித்து சென்றனர்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இதுவரை திருடர்கள் கைது செய்யப் படவில்லை ,அங்கிருந்த கமராவில்
பதிவான காட்சிகளை வைத்து குறித்த திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர் என தெரிவிக்க படுகிறது
இலங்கையில் 188 பேருக்கு கொரோனா
இலங்கையில் 188 பேருக்கு கொரோனா
இலங்கையில் மேலும் 188 பேருக்கு கொரோனா தொற்று
உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு
உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ
தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரனோவில் இருந்து தப்பிட – கொத்து உண்ண தடை
கொரனோவில் இருந்து தப்பிட – கொத்து உண்ண தடை
கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறு வேண்டுமாயின்
கொத்து ரொட்டி உள்ளிட்ட துரித உணவுகளை உண்பதைத் தவிர்க்குமாறு; வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சிலரது உடலில் கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுவதற்கான
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதென, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்
நுண்ணுயிரியல் பீடத்தின் பேராசிரியர் நீலிகா மலாவிகா தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்கள் தேகாரோக்கியத்துடனும் சுகாதார ஆரோக்கியமான
உணவுகளையும் விற்றமின் நிறைந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.







