Author: நலன் விரும்பி
வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கான விஷேட அறிவிப்பு
வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கான விஷேட அறிவிப்பு
வௌிநாட்டில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக
எதிர்வரும் வாரம் முதல் விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளது.
டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பணம் செலுத்தி தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை
எனவும் வருகை தரும் அனைவருக்கும் அரசாங்கத்தினால்
தனிமைப்படுத்தல் வசதி ஏற்படுத்தி தரப்படும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் கல்வி மேம்பாட்டுக்கு இராணுவத்தினர் உதவி
கிளிநொச்சியில் கல்வி மேம்பாட்டுக்கு இராணுவத்தினர் உதவி
கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு உதவும் வகையில் கிளிநொச்சி பாதுகாப்புப் படை
தலைமையகத்தினால் அப்பகுதியில் வசிக்கும் 300 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் வாசிப்பு உசாத்துணை நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மகாதேவ சுவாமிகள் சிறுவர் இல்லம் மற்றும் அறிவுச்சோலை சிறுவர் இல்லம் ஆகிய சிறுவர் இல்லங்களை சேர்ந்த
மாணவர்களுக்கே இவ்வாறு கற்றல் உபகரணங்கள் மற்றும் உசாத்துணை வாசிப்பு நூல்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக நன்கொடையாளர்
ஒருவரினால் வழங்கப்பட்ட நிதியுதவி மூலம் தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினர் உதவி அளித்தனர்.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி, இலங்கை பீரங்கிப்படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி,
நன்கொடையாளர்கள், அதிதிகள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதி பொதுமக்களுகான முக்கிய அறிவித்தல்
தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதி பொதுமக்களுகான முக்கிய அறிவித்தல்
கொரோனா தொற்றின் காரணமாக பொது மக்களின் சுகாதார நலன் கருதி காத்தான்குடி நகரம் கடந்த ஒரு வார காலமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
கடந்த நாட்களாக பிரதேசத்தில் எடுக்கப்படுகின்ற ரபிட் அன்டிஜன் பரிசோதனையின் படி தொடர்ச்சியாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது மிகப் பெரும் கவலையை
ஏற்படுத்தியுள்ளது. இது மிக அவசியமான சுகாதார நடைமுறைகளை பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.
உஎனவேதான் இவ்வாறான தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு தொடர்ச்சியாக காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் முடக்க நிலையினை முறையாக பின்பற்றப்படாமையினை எல்லோராலும் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டதுடன் இது சம்மந்தமாக இன்றைய மாவட்ட செயலக கூட்டத்திலும் கலந்தாலோசிக்கப்பட்டது.
அதனால் இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் சில இறுக்கமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தினை மாவட்ட கொரோனா
தடுப்பு செயலணியினர் எடுத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
இதனால் இன்று இரவிலிருந்து மிகக் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வீட்டைவிட்டு அனாவசியமாக வெளியேறல், தேவையற்ற நடமாட்டம் என்பன கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். நாட்டின் பிற மாவட்டங்களில் இவ்வாறான நிலை
காணப்பட்டதனாலேயே பிரதேச முடக்கம் வாரங்கள் கடந்து மாதங்களாக நீண்டமையை நாமறிவோம்.
எனவே அனுமதியின்றி வீதியில் நடமாடுகின்றவர்கள் வீட்டுக்கு வெளியே வருகின்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பொலீசாருக்கு இறுக்கமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன
. அத்தோடு அனுமதியின்றி வெளியில் வாகனங்களில் நடமாடுகின்றவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமை ஆக்கப்படும்.
அனுமதியின்றி கடைகளைத் திறந்து வியாபாரம் செய்கின்றவர்களுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இன்று இரவிலிருந்து முழுமையான இராணுவ பாதுகாப்பு நடைமுறைகளும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இவ் நடைமுறைகளை பின்பற்றாத பட்சத்தில் வருகின்ற வாரங்களில் கூட எமது பிரதேசத்தில் சாதாரண வியாபார
நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது துரதிர்ஷ்டவசமான நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.
எனவே எமது பிரதேசத்தின் பொருளாதார நிலையினைக் கருத்தில் கொண்டும் எமது மக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொது முடக்கத்துக்கு
பூரணமான ஒத்துழைப்பினை தருமாறு மிகவும் பணிவன்புடன் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியினர் கேட்டுக்கொள்கின்றேன்.
சமூகப் பொறுப்பு சகலருக்கும் உண்டு என்பதனையும், நாம் தொற்றுக்குள்ளாகாமலும் பிறரையும் தொற்றுக்குள்ளாக்காமலும்
செயற்பட்டு பொறுப்புடன் நடந்துகொள்வோம் என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய எவருக்கும் மன்னிப்பு இல்லை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய எவருக்கும் மன்னிப்பு இல்லை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய எவருக்கும்
ஜனாதிபதி மன்னிப்பு அளிக்கப் போவதில்லை என்று நீதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய எந்தவொரு குற்றவாளிக்கும்
ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப் போவதில்லை என்று நீதி அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சட்டமா அதிபருக்கு உரிய தகவல்கள் கிடைத்ததும், உரியவர்களுக்கு
எதிராக குற்றப் பத்திரத்தை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு சீருடை- கல்வி அமைச்சர்
மாணவர்களுக்கு சீருடை- கல்வி அமைச்சர்
பாடசாலைகள் ஆரம்பித்ததும் மாணவர்களுக்கு சீருடைத் துணிகளை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க நேற்றைய தினம் வாய்மூல பதிலை எதிர்பார்த்து கேள்வியொன்றை சமர்ப்பித்த
போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இடைக்கேள்வி ஒன்றை கேட்டார். மாணவர்களுக்கு புது வருடத்திற்கான சீருடைத் துணி இன்னமும் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர், சீருடைத் துணி வழங்கும் வேலைத்திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது.
பாடசாலைகளை தொடங்காமல், சீருடையை விநியோகிப்பது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல.
தரம் ஒன்று முதல் தரம் 11 வரையான வகுப்புக்களுக்குரிய பாடப்புத்தகங்கள் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ
இணையத்தளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகள் ஆரம்பமானவுடன், புதிய புத்தகங்கள்
மாணவர்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்கா தலைநகரில் துப்பாக்கி சூடு ஐவர் காயம்
அமெரிக்கா தலைநகரில் துப்பாக்கி சூடு ஐவர் காயம்
அமெரிக்கா தலைநகரில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பாவத்தில்
சிக்கி ஐவர் படுகாயமடைந்துள்ளனர் ,மேலும் காயமடைந்தவர்களில்
இருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
தானே தேர்தலிலவென்றதாக கூறி இதே பகுதியில் டிரம்பின்
ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்
எதிர்வரும் இருவாரத்தில் பதவியை விட்டு விலக உள்ள நிலையில் டிரம்
பைடனுக்கு எதிராக பல போராட்டங்களை தூண்டிய வண்ணம் உள்ளார் என்பது குறிப்பிட தக்கது
சிறுவர்களுடன் காரினை கடத்திய நபர்கள்
சிறுவர்களுடன் காரினை கடத்திய நபர்கள்
Sungai Liang பகுதியில் கார் ஒன்று திருடர்களினால் திருட பட்டுள்ளது ,அவ்வேளை
அந்த காருக்குள் மூன்று சிறார்கள் இருந்துள்ளனர் ,மேற்படி சம்பவம் தொடர்பாக
பொலிசாருக்கு விரைந்து தெரிவிக்க பட்ட நிலையில் காரும் ,சிறார்களும் மீட்க பட்டுள்ளனர்
இந்த கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்ய
பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
விமான நிலையத்தில் சிக்கிய 73 கிலோ தங்கம்
விமான நிலையத்தில் சிக்கிய 73 கிலோ தங்கம்
ஆப்பிரிக்காவின் Tambo விமான நிலையத்தில் பெரும் பொதி ஒன்றுக்குள்
மறைத்து எடுத்து வரப்பட்ட நிலையில் சுமார் 73.5 கிலோ தாக்கம் மடக்கி பிடிக்க பட்டுள்ளது
இதன் மொத்த அமெரிக்கா டொலர் பெறுமதி சுமார் நான்கு மில்லியன்
டொலர்கள் என கணக்கிட பட்டுள்ளது ,இந்த மாபெரும் கடத்தலில்
ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

பிரிட்டனில் 30 வருடத்தின் பின்னர் கார் விற்பனையில் பாரிய வீழ்ச்சி
பிரிட்டனில் 30 வருடத்தின் பின்னர் கார் விற்பனையில் பாரிய வீழ்ச்சி
பிருத்தானில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து பொருளாதரத்தில்
பெரும் இடி வீழ்ந்துள்ளது ,இவ்வேளை கடந்த முப்பது வருடங்களின்
பின்னர் கடந்த வருடம் காரின் விற்பனை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது
2019 ஆண்டு மட்டும் 16 லட்சம் கார்கள் விற்பனை செய்ய பட்டன ,ஆனல்
அதுவே கடந்த ஆண்டு மிக கீழ் நிலை விற்பனையில் பாரிய சரிவை சந்தித்துள்ளது
இதனை சீர் செய்திட வேண்டுமெனின் மக்கள் ,வழமை போன்ற
செயலுக்கு திரும்ப வேண்டும் என நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்
எகிறிய கொரனோ மரணம் அமெரிக்காவில் 3,276 மற்றும் பிரிட்டனில் 1,041 பேர் பலி
எகிறிய கொரனோ மரணம் அமெரிக்காவில் 3,276 மற்றும் பிரிட்டனில் 1,041 பேர் பலி
இரண்டாம் அலையாக பரவி வரும் கொன்றானோ நோயின் தாக்குதலில்
சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அமெரிக்காவில் 3,276 பேர் பலியாகியுள்ளனர்,
மேலும் இதே நாளில் புதிதாக 214,567 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
,தொடர்ந்து 29,813 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
அதுபோலவே பிரிட்டனில் அதி உச்சமாக 1.041 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 62,322 பேர் புதிதாக பாதிக்க பட்டுள்ளனர் ,இவர்களுடன் 2,645 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
எதிர் வரும் நாள் ஒன்றுக்கு 5000 பேர் பலியாகும் நிலை ஏற்படலாம்
என அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
வாகன விபத்தில் இலங்கையில் 1844 பேர் பலி
வாகன விபத்தில் இலங்கையில் 1844 பேர் பலி
இலங்கையில் நடந்து முடிந்த ஆண்டில் சாலை விபத்துக்களில்
மட்டும் சிக்கி சுமார் 1844 பேர் பலியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
மேலும் இவ்வாறன விபத்துக்களில் சுமார் 5384 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ,
சிலர் முற்றாக செயல் முடக்க நிலைக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது
சாலை விதிகளை கடை பிடிக்க தவறுவதன் விளைவே இந்த
விபத்துக்கள் அதிகம் இடம்பெற காரணம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்
கொலண்டில் இளம் தமிழ் பெண் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் உறவுகள்
கொலண்டில் இளம் தமிழ் பெண் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் உறவுகள்
கொலண்ட் நாட்டில் ,பிறேடா பகுதியில் யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த இளம் தமிழ் பெண் ஒருவர் வீட்டில் தூக்கு மாட்டி நேற்று தற்கொலை செய்துள்ளார்
32 வயது மதிக்க தக்க ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு தற்கொலை புரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது ,
மேற்படி தற்கொலை தொடர்பாக விசேட குற்ற தடுப்பு போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த வண்ணம் உள்ளனர்
அழகிய ,மிகுந்த ஆற்றல் நிறைந்த இவர் ,தனி திறன் வாயிலாக உயர் தர பணியில் இடம்பெற்று சிறப்பான பொருளாதார
கட்டமைப்புடன் வசித்து வந்தவேளை இந்த எதிர்பாராத விபரீத சம்பவம் இடம்பெற்றுள்ளது
இந்த இளம் பெண்ணின் தற்கொலை அந்த பகுதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,
நல்ல நட்புக்கள் கிடைந்திருந்தால் இவ்வாறான பெண்கள் ,இவ்விதமான
முடிவுகளை எடுக்க தடுத்திருக்க கூடும் ,ஆறாத மன உளைச்சல் ,அதனால்
ஏற்பட்ட விரக்தி நிலையில் இவர் இந்த முடிவுக்கு சென்றுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது
இவரது இந்த தற்கொலைக்கான பின்னணி என்ன என்பது
தொடர்பாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வர கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இவ்வாறான தற்கொலை சமப்வங்கள் புலம் பெயர் நாடுகளில் சமீப காலமாக தமிழர்கள் மத்தியில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
ஏறி ஆடும் கொரனோ – முடக்க பட்ட முக்கிய பகுதிகள்
ஏறி ஆடும் கொரனோ – முடக்க பட்ட முக்கிய பகுதிகள்
இலங்கையில் கொன்றானோ நோயின் அதிகமாக பரவி வருகிறது ,இதனால்
மேலும் இந்த நோய் பரவலை தடுக்க அரசு புதிய முடக்க நிலைகளை
அறிவித்து வருகிறது அவ்விதம் இன்று தற்போது பாதிக்க பட பகுதிகள்
என அடையாளம் காணப்பட்ட கண்டி மற்றும் இரத்தினபுரி பகுதியில் சில பிரேதேசங்கள் முடக்க பட்டுள்ளன
இலங்கையில் முக கவசம் அணிய மறுத்து உலவியவர்களுக்கு கொரனோ
இலங்கையில் முக கவசம் அணிய மறுத்து உலவியவர்களுக்கு கொரனோ
இலங்கையில் மேல மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயில் இருந்து
மக்களை காப்பாற்ற பல்வேறு பட்ட வழிமுறைகள் செய்ய பட்டுள்ள
பொழுதும் ,அரசு கூறும் விதிகளை மீறி மக்கள் முகக்கவசம் அணியாமல் சுற்றி வருகின்றன
இவ்விதம் வெளியில் நடமாடிய இரண்டு டசினுக்கு மேற்பட்டவர்கள் நோயின்
தாக்குதல் அறிகுறியுடன் இனம் காணப்பட்டு தனிமை படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
மேலும் ,இவ்வாறு திரிபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய பட்டு வருகிறது
இலங்கையில் கரும்புலி – சடலமாக மீட்பு
இலங்கையில் கரும்புலி – சடலமாக மீட்பு
இலங்கை மாத்தளை பகுதியில் நீர் தொட்டி அருகாமையில் கரும்புலி
ஒன்று நஞ்சு வைத்து கொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளது
மேற்படி கொலையை புரிந்தவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
கரும்புலிகள் சிங்களத்தை வெடி வைத்து அழித்து வந்த நிலையில்
,இங்கே இந்த கரும்புலி நஞ்சு வைத்து கொலை செய்ய பட்டுள்ளது
புலி பீதியி கிளப்பிட மாபியா கும்பல்கள் இவ்வேளையில் ஈடுபட்டு இருக்க கூடும் என சந்தேகிக்க படுகிறது
ஈரான் கடல் அருகே தென் கொரியா கப்பல்கள் – போர் வெடிக்குமா …?
ஈரான் கடல் அருகே தென் கொரியா கப்பல்கள் – போர் வெடிக்குமா …?
ஈரானால் தென் கொரியாவின் எண்ணெய் கப்பல் ஒன்று சிறை பைடிக்க
பட்ட நிலையில் தற்போது பாரசீக வளைகுடா பகுதியில் தென் கொரியா தமது போர் கப்பல்களை அனுப்பியுள்ளது
ஈரானால் எப்பொழுதும் சர்வதேச கடல் போக்குவரது தடுக்க படலாம் என்ற
பதட்டம் நிலவி வரும் வேளையில் தற்பொழுது தென்கொரிய மற்றும்
அமெரிக்கா போர் கப்பல்கள் அந்த கடல் பகுதியில் சுற்று காவலில்
ஈடுபட்டுள்ளது நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது

பிரிட்டினில் 50பேரில் ஒருவருக்கு கொரனோ – வெளியான அதிர்ச்சி தகவல்
பிரிட்டினில் 50பேரில் ஒருவருக்கு கொரனோ – வெளியான அதிர்ச்சி தகவல்
பிரிட்டனில் உள்ள மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் ஐம்பது
பேரில் ஒருவருக்கு கொரனோ நோயானது பரவியுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது
இந்த நோயினை தடுக்கும் தடுப்பூசி கண்டு பிடிக்க பட்டுள்ள பொழுதும் ,
மேற்படி நோயின் தாக்குதல் அச்சமும் ,மரண எண்ணிக்கையும் குறையவில்லை
அதிகரித்து வரும் நோயினை கட்டு படுத்த மக்களை வீடுகளுக்குள் முடக்கி
வைக்க பட்டுள்ள பொழுதும்
நோயின் தாக்குதல் வீச்சு அதிகரித்து செல்கின்றமை கவலையளிக்கிறது
கொரனோ வெறிக்கு -அமெரிக்காவில் 2,705 மற்றும் பிரிட்டனில் 830 பேர் பலி
கொரனோ வெறிக்கு -அமெரிக்காவில் 2,705 மற்றும் பிரிட்டனில் 830 பேர் பலி
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் கொலை
வெறி தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 2,075
பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் அதே நாளில் 164,440 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,
இவர்களுடன் 29,606 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
அவ்வாறே பிரிட்டனில் 830 பேர் பலியாகியும் 60,916 பேர் ஒரே நாளில் புதிய நோயாளார்களாக பாதிக்க பட்டுள்ளனர்
எதிர் வரும் நாட்களில் மரண எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கு மேல்
அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
மருத்துவமனைகள் நோயாளர்களினால் நிரம்பி வழிவதாக தெரிவிக்க படுகிறது
பிக்கு கடத்தி கொலை – நடந்தது என்ன …?
பிக்கு கடத்தி கொலை – நடந்தது என்ன …?
கொட்டதெனியாவ நாவான மையானத்தில் நேற்று(04) கண்டெடுக்கப்பட்ட சடலம் இரண்டு நாட்களுக்கு முன்ன
ர் கடத்தப்பட்ட தேரர் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
65 வயதுடைய உடுவில தம்மசிறி தேரர், தனிப்பட்ட விரோதம் காரணமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நீர்கொழும்பு வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மரண
விசாரணைகளை இன்று முன்னெடுக்கவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர்களை அவிசாவளை நீதிமன்றில் இன்று(05) முன்னிலைப்படுத்தி 48 மணிநேரம் தடுத்துவைத்து விசாரிக்கும்
உத்தரவை பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல மற்றும் கொட்டதெனியாவ பொலிஸாருடன் மிரிஹான தெற்கு குற்றவிசாரணை
அதிகாரிகளும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
யாழின் ஒருபகுதி முடங்கும் அபாயம்
யாழின் ஒருபகுதி முடங்கும் அபாயம்
வடமராட்சி கொத்தணிக்கான அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத் தரப்பினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – வடமராட்சி, புலோலியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, வடமராட்சி கொத்தணிக்கான
அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தனர்.









