சாரதிகளுக்கு பொலிஸார் முக்கிய அறிவித்தல்
Posted in இலங்கை செய்திகள்

சாரதிகளுக்கு பொலிஸார் முக்கிய அறிவித்தல்

சாரதிகளுக்கு பொலிஸார் முக்கிய அறிவித்தல்

பெல்லன்வில ரஜமகா விகாரையில் வருடாந்த பெர​ஹெரா நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளமை தொடர்பில் பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.

இந்த பெர​ஹெரா நாளை (17) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இரவு 7.00 மணிக்கு பெல்லன்வில விகாரையில் ஆரம்பித்து வீதி உலா செல்லவுள்ளது.

இதன்படி நாளை முதல் 20ஆம் திகதி வரையில் இடம்பெறும் ஊர்வலத்தின் போது விகாரைக்கு அருகில் உள்ள வீதிகள் மூடப்படவுள்ளதால் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்
Posted in இலங்கை செய்திகள்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும், இனப்படு கொலையாளியுமாகிய கோத்தபாய இராஜபக்சவினை கைது செய்யக்கோரும் கையெழுத்து

போராட்டத்தில், பொதுமக்கள் இலகுவாக ஒப்பமிடும் வகையில் புதியதொரு இணைய தொடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த இந்த http://tgte-us.org/ இணையப்பகத்துக்கு சென்று (தொடுப்பு : https://tgte-us.org/?page_id=4340 ) இலகுவாக ஒப்பமிட முடியும் என அறிவித்துள்ள

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு, தாமதிக்காமல் ஒப்பமிட்டு நீதிக்கான போராட்டத்துக்கு வலுவூட்டுமாறு அனைவரையும் கோருவதாக தெரிவித்துள்ளது.

உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்துமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரை நோக்கிய இந்தக் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்

இனப்படுகொலை, மானிடத்திற்கெதிரான குற்றம் மற்றும் போர்க் குற்றங்களைப் புரிந்ததற்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக ஐக்கிய

நாடுகள் அறிக்கைகள் கூறியுள்ளன. 1948ம் ஆண்டு இன அழிப்புச் சட்டத்தின் கீழும், 1949ம் ஆண்டு ஜெனீவாச் சட்டங்களின் கீழும் மற்றும் 1977ம் ஆண்டு

Additional protocol 1 இன் கீழும் சர்வதேச சட்டங்களின் கீழ் சிங்கப்பூர் சட்டமா அதிபரினை நோக்கி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழர் தாயகத்திலும் கோத்தாவை கைது செய்யக் கோரும் கையெழுத்துப் போராட்டம்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

    Posted in இலங்கை செய்திகள்

    தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதி பொதுமக்களுகான முக்கிய அறிவித்தல்

    தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதி பொதுமக்களுகான முக்கிய அறிவித்தல்

    கொரோனா தொற்றின் காரணமாக பொது மக்களின் சுகாதார நலன் கருதி காத்தான்குடி நகரம் கடந்த ஒரு வார காலமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

    கடந்த நாட்களாக பிரதேசத்தில் எடுக்கப்படுகின்ற ரபிட் அன்டிஜன் பரிசோதனையின் படி தொடர்ச்சியாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது மிகப் பெரும் கவலையை

    ஏற்படுத்தியுள்ளது. இது மிக அவசியமான சுகாதார நடைமுறைகளை பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.

    உஎனவேதான் இவ்வாறான தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு தொடர்ச்சியாக காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் முடக்க நிலையினை முறையாக பின்பற்றப்படாமையினை எல்லோராலும் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டதுடன் இது சம்மந்தமாக இன்றைய மாவட்ட செயலக கூட்டத்திலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

    அதனால் இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் சில இறுக்கமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தினை மாவட்ட கொரோனா

    தடுப்பு செயலணியினர் எடுத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

    இதனால் இன்று இரவிலிருந்து மிகக் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    வீட்டைவிட்டு அனாவசியமாக வெளியேறல், தேவையற்ற நடமாட்டம் என்பன கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். நாட்டின் பிற மாவட்டங்களில் இவ்வாறான நிலை

    காணப்பட்டதனாலேயே பிரதேச முடக்கம் வாரங்கள் கடந்து மாதங்களாக நீண்டமையை நாமறிவோம்.

    எனவே அனுமதியின்றி வீதியில் நடமாடுகின்றவர்கள் வீட்டுக்கு வெளியே வருகின்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பொலீசாருக்கு இறுக்கமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன

    . அத்தோடு அனுமதியின்றி வெளியில் வாகனங்களில் நடமாடுகின்றவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமை ஆக்கப்படும்.

    அனுமதியின்றி கடைகளைத் திறந்து வியாபாரம் செய்கின்றவர்களுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இன்று இரவிலிருந்து முழுமையான இராணுவ பாதுகாப்பு நடைமுறைகளும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

    இவ் நடைமுறைகளை பின்பற்றாத பட்சத்தில் வருகின்ற வாரங்களில் கூட எமது பிரதேசத்தில் சாதாரண வியாபார

    நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது துரதிர்ஷ்டவசமான நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.

    எனவே எமது பிரதேசத்தின் பொருளாதார நிலையினைக் கருத்தில் கொண்டும் எமது மக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொது முடக்கத்துக்கு

    பூரணமான ஒத்துழைப்பினை தருமாறு மிகவும் பணிவன்புடன் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியினர் கேட்டுக்கொள்கின்றேன்.

    சமூகப் பொறுப்பு சகலருக்கும் உண்டு என்பதனையும், நாம் தொற்றுக்குள்ளாகாமலும் பிறரையும் தொற்றுக்குள்ளாக்காமலும்

    செயற்பட்டு பொறுப்புடன் நடந்துகொள்வோம் என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.