Posted in சினிமா

மத்திய அரசை விமர்சிக்க விஜய்க்கு பயம்

மத்திய அரசை விமர்சிக்க விஜய்க்கு பயம்

மத்திய அரசு பற்றி விஜய் விமர்சனமே செய்வதில்லை… பயந்து போய் விட்டார் என்று பிரபல தயாரிப்பாளர் பட விழாவில் பேசி இருக்கிறார்.

மத்திய அரசை விமர்சிக்க விஜய்க்கு பயம் – பிரபல தயாரிப்பாளர் காட்டம்
விஜய்


ருத்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ₹2000 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. புதுமுக நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் 2016ம்

ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உயர் மதிப்பு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தயாரிப்பாளர் கே.ராஜன் கலந்து கொண்டார்.

இதில் அவர் பேசும் போது, “மணல் கொள்ளை, ஆணவக் கொலையை எதிர்த்து படம் எடுத்தால் சென்சார் பிரச்சனை வருவது இயல்பானதுதான்.

ராஜன்
தயாரிப்பாளர் ராஜன்

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக சிறிய விமர்சனத்தை முன்வைத்ததால் நடிகர் விஜய்க்கு 12 மணி நேரம் மன உளைச்சல் கொடுத்து விட்டார்கள். நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்தவரை

சென்னை அழைத்து வந்து விசாரித்தார்கள். அவர்களுடைய காரில் அழைத்துவரும்போது விஜயை என்ன என்ன செய்தார்களோ, அந்த படத்திற்கு பிறகு மத்திய அரசு பற்றி விஜய் விமர்சனமே

செய்வதில்லை… விஜய் பயந்து போய் விட்டார். ஏனென்றால் அவர் கோடீசுவரர். பணம் அதிகம் சேர்த்துள்ளவர்களுக்கு ஆண்மை போய்விடுகிறது. கொடுமையை எதிர்க்கும் தன்மை போய்விடும். எங்களைப் போன்ற ஏழைகள்தான் எதிர்த்து நிற்போம் என்றார்

Posted in சினிமா

ருத்ர தாண்டவம்’ இருமடங்கு வரவேற்பை பெறும் – ராதா ரவி

ருத்ர தாண்டவம்’ இருமடங்கு வரவேற்பை பெறும் – ராதா ரவி

மோகன் ஜி இயக்கி உள்ள ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 1-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஜி.எம்.ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன் ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின்

நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி இராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஃபாருக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜுபின் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. இதில் இயக்குனர் மோகன்ஜி, டத்தோ ராதாரவி, நடிகை தர்ஷா குப்தா, இசையமைப்பாளர் ஜுபின், கலை

இயக்குனர் ஆனந்த், விளம்பர வடிவமைப்பாளர் பிரவீன், நடிகர் ஜே.எஸ்.கே கோபி, படத்தொகுப்பாளர் தேவராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நடிகர் ‘டத்தோ’ ராதா ரவி பேசுகையில், “இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் முதலில் மறுப்பு தெரிவித்தேன். ஏனெனில் ‘ருத்ரதாண்டவம்’ என்ற பெயரில் வி. கே. ராமசாமி,

நாகேஷ் நடித்திருக்கும் படத்தில் நானும் நடித்திருக்கிறேன். நாங்கள்‘ருத்ரதாண்டவம்’ என்ற பெயரில் படத்தை எடுக்க திட்டமிட்டு விவாதித்தோம். பிறகு சில காரணங்களால் அதனைத் தொடர முடியவில்லை.

இந்நிலையில் நண்பர் ஜேஎஸ்கே கோபியின் உதவியுடன் இயக்குனர் மோகன் ஜி என்னை சந்தித்தார். நீங்கள் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என இயக்குனர் தெரிவித்தார்

அப்போது நான் ஒரு தொகையை சம்பளமாக கேட்டேன் அதைக் கேட்டு அதிர்ந்து சென்றவர்தான் அதன் பிறகு திரும்பி வரவே இல்லை. பிறகு அவர் ஒரு சம்பளத்தை நிர்ணயித்து சொன்னார். அதன் பின் நடித்தேன்.

இந்தப்படத்தில் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை. எது நியாயமானதோ அதை இயக்குனர் பேசியிருக்கிறார். இந்தப் படம் சிறப்பான படம். அனைவருக்கும் பொதுவான படம்.

படம் 1ஆம் தேதி வெளியான பிறகு, இதுதான் டாக் ஆஃப் த டவுனாக இருக்கும். தனுஷ் நடித்ததால் கர்ணன் படம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ருத்ர தாண்டவம் படம் ரிச்சர்ட்

நடித்ததால் இரண்டு மடங்கு வரவேற்பைப் பெறும். அவருக்கும் இப்படத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும்” என்றார்.

Posted in சினிமா

மெழுகு சிலை – பிரபல நடிகையை புகழ்ந்த ரோபோ சங்கர்

மெழுகு சிலை – பிரபல நடிகையை புகழ்ந்த ரோபோ சங்கர்

தமிழ் சினிமாவில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரோபோ சங்கர், பிரபல நடிகை ஒருவரை புகழ்ந்து பேசி இருக்கிறார்.

மெழுகு சிலை – பிரபல நடிகையை புகழ்ந்த ரோபோ சங்கர்
ரோபோ சங்கர்
ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சிண்ட்ரெல்லா. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் ரோபா சங்கர் பேசும் போது, சிண்ட்ரெல்லா திரைப்படம் சிறப்பாக இருக்கும். இப்படம் தியேட்டரில் வருவது மகிழ்ச்சி. இப்படத்தில் ராய் லட்சுமியுடன் ஒரு காட்சி இருக்கிறது.

அதில் இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கும். நான் பேசும் போது, எந்த நடிகையாக இருந்தாலும் அந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால், ராய் லட்சுமி அந்த வசனங்களை ரசித்தார். ஒரு மெழுகு சிலை போல் அழகாக இருக்கிறார் ராய் லட்சுமி. அவரை பார்த்துக் கொண்டே இருக்கணும் போல இருக்கிறது என்றார்.

Posted in சினிமா

அஜித்தின் அசத்தல் வசனங்கள்…. மிரள வைக்கும் பைக் சேஸிங்

அஜித்தின் அசத்தல் வசனங்கள்…. மிரள வைக்கும் பைக் சேஸிங்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்

இந்நிலையில், வலிமை படத்தின் முன்னோட்ட காட்சிகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியிடப்பட்டு உள்ளன. இந்த வீடியோவில் அஜித்தின் அசத்தல் வசனங்கள் மற்றும் மாஸான

பைக் ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இந்த முன்னோட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Posted in Uncategorized

80 வயது ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோகன்லால்

80 வயது ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோகன்லால்

மோகன்லாலின் தீவிர ரசிகையான ருக்மிணி, அழுதபடி பேசிய வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

அழுதபடி வீடியோ வெளியிட்ட 80 வயது ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோகன்லால்
மோகன்லால், ருக்மிணி


மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் மோகன்லால். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்நிலையில், நடிகர் மோகன்லால் தனது ரசிகை ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கேரளாவின் புன்குன்னம் என்கிற பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் இருப்பவர் ருக்மிணி(வயது 80). மோகன்லாலின் தீவிர ரசிகையான இவர், அழுதபடி பேசிய வீடியோ சமீபத்தில்

வைரலானது. அதில், மோகன்லால் பெயரை வைத்து தன்னைப் பலரும் கிண்டல் செய்வதாகவும், அவரை சந்திக்க முடியவில்லை என்பது குறித்தும் அவர் பேசி இருந்தார்.

ருக்மிணியுடன் நடிகர் மோகன்லால் வீடியோ காலில் பேசியபோது எடுத்த புகைப்படம்
ருக்மிணியுடன் நடிகர் மோகன்லால் வீடியோ காலில் பேசியபோது எடுத்த புகைப்படம்

இதுகுறித்து அறிந்த நடிகர் மோகன்லால், ருக்மிணியை வீடியோ காலில் அழைத்துப் பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அப்போது உங்களை சந்திக்க வேண்டும் என ஆசையுடன் கேட்ட

ருக்மிணியிடம், கொரோனா அச்சுறுத்தல் முடிந்த பிறகு, நேரில் வந்து சந்திப்பதாக நடிகர் மோகன்லால் உறுதி அளித்துள்ளார்.

    Posted in Uncategorized

    காதலனுடன் காரில் பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு

    காதலனுடன் காரில் பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு

    பிரபல நடிகை உயிரிழந்த சம்பவம் அவரின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காதலனுடன் காரில் சுற்றுலா சென்ற பிரபல நடிகை நீரில் மூழ்கி உயிரிழப்பு
    நீரில் மூழ்கிய நடிகையின் காரை மீட்கும் தீயணைப்பு வீரர்


    மராத்தி மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் ஈஸ்வரி தேஷ்பாண்டே (வயது 25). இவர் கடந்த 15-ம் தேதி தனது காதலன் சுப்பம் டெஜ் (வயது 28) உடன் கோவாவுக்கு காரில் சுற்றுலா சென்றிருந்தார்.

    அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு, நேற்று முன்தினம் இருவரும் மும்பை திரும்பியுள்ளனர். கோவாவின் அர்போரா கிராமத்திற்கு அருகில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் உள்ள குட்டையில் மூழ்கியது.

    காரில் இருந்து வெளியே வரமுடியாததால் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஈஸ்வரி தேஷ்பாண்டேவுக்கும் அவரது காதலனுக்கும் அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடக்க

    இருந்ததாம். இந்த நிலையில் இருவரும் உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

      Posted in சினிமா

      இந்தி வெப் தொடரில் விஜய் சேதுபதி

      இந்தி வெப் தொடரில் விஜய் சேதுபதி

      தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, அடுத்ததாக இந்தியில் தயாராகும் வெப் தொடரில் நடித்து வருகிறார்.

      இந்தி வெப் தொடரில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல தமிழ் நடிகை
      விஜய் சேதுபதி


      கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தற்போது இந்தியில் தயாராகும் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரை பிரபல பாலிவுட் இயக்குனர்களான ராஜ்

      மற்றும் டீகே இணைந்து இயக்குகின்றனர். இந்த வெப் தொடரில் விஜய் சேதுபதியுடன் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரும் இணைந்து நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று

      வருகிறது. இந்த வெப் தொடரில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஷி கண்ணா நடிக்கிறார்.

      அதேபோல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. இந்நிலையில், அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல தமிழ் நடிகை

      ரெஜினா கசன்ட்ரா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நடிகை ரெஜினா நடிக்கும் முதல் வெப் தொடர் இதுவாகும். நடிகர் விஜய் சேதுபதியும், ரெஜினாவும் ஏற்கனவே ‘முகிழ்’ என்கிற தமிழ் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

        Posted in Uncategorized

        கடற்கரையில் 40 அடி நீள திமிங்கலம் செத்து கரை ஒதுங்கியது

        கடற்கரையில் 40 அடி நீள திமிங்கலம் செத்து கரை ஒதுங்கியது

        வசாய் கடற்கரையில் செத்து கரை ஒதுங்கிய 40 அடி நீள திமிங்கலத்தின் உடல் மாதிாிகளை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

        வசாய் கடற்கரையில் 40 அடி நீள திமிங்கலம் செத்து கரை ஒதுங்கியது
        செத்து கரை ஒதுங்கிய 40 அடி நீள திமிங்கலம்
        வசாய்:

        பால்கர் மாவட்டம் வசாய் மேற்கு மார்டெஸ் கடற்கரையில் நேற்றுமுன்தினம் திமிங்கலம் ஒன்று செத்து கரை ஒதுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த மாநகராட்சியினர் மற்றும் மீன்வளத்துறை

        அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். இதில் 30 டன் எடையுள்ள 40 அடி நீளமுள்ள திமிங்கலம் எனவும், கடலில் உயிரிழந்து பல நாட்கள் ஆனதால் உடல் அழுகிய நிலையில்

        காணப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த திமிங்கலத்தின் உடல் மாதிாிகளை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

          Posted in Uncategorized

          காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் – கோட்டா அறிவிப்பு

          காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் – கோட்டா அறிவிப்பு

          காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கொடுப்பார் என்றால், அவர்களை படுகொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்குவார் என தமிழ்த்

          தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் கேள்வி எழுப்பினார்.

          பாராளுமன்றத்தின் நேற்றைய (22) பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

          இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், சரணடைந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டுமென ஐ.நா. சாசனத்தில் கூறப்பட்டுள்ளது. ஐ.நா.வுக்கு சென்றுள்ள

          கோட்டாபய ராஜபக்‌ஷ, இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் கொடுக்கப் போவதாக கூறுகின்றார்.

          அப்படி என்றால் கண் கண்ட சாட்சிகளுடன் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் எல்லாம் கொல்லப்பட்டார்கள் என்றே ஜனாதிபதி கூறுகிறார் எனவும் அவர் தெரிவித்தார்,

          கொல்லப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ்கள் என்றால், ​​கொன்றவர்களுக்கு என்ன தண்டனையை கொடுப்பீர்கள் என்றும் வினவினார்.

            Posted in Uncategorized

            பாடசாலைகள் திறக்க படுமா – நாளை அறிவிப்பு

            பாடசாலைகள் திறக்க படுமா – நாளை அறிவிப்பு

            கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள்

            முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில், பாடசாலைகளை மீளவும் திறப்பது தொடர்பில் நாளை (24) முக்கிய அறிவிப்பொன்று விடுக்கப்படவுள்ளது.

            இதுதொடர்பில், இன்று பல கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெறும் இந்தக் கூட்டங்களில் சுகாதார அதிகாரிகளும் பங்குபற்றுவர்.

            பாடசாலை​களை திறப்பது தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள், கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் நாளை (24) அறிவிக்கப்படும்.

              Posted in Uncategorized

              இலங்கை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து

              இலங்கை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து


              வடக்கு மற்றும் கிழக்கினை மையப்படுத்தி இலங்கை மற்றும் காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தினை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

              இந்தியாவிற்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும்

              பிரதமரின் இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமியுடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

              இரு நாட்டு மீனவர் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு கண்டு, நல்லுறவை வளர்ப்பது தொடர்பாகவும்

              இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

                Posted in இலங்கை செய்திகள்

                நாமல் ராஜபக்ஷ தலைமையில் விளையாட்டு மைதானங்கள் பொது மக்களிடம் கையளிப்பு

                நாமல் ராஜபக்ஷ தலைமையில் விளையாட்டு மைதானங்கள் பொது மக்களிடம் கையளிப்பு

                ஆரோக்கியமான தலைமுறையொன்றை கட்டி எழுப்பும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் 335 கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானங்கள் பல

                இன்று(23) இளைஞர் மற்றும் விளையாட்டு ,அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டன .


                கோமரன்கடவெல, குச்சவெளி நாவற்சோலை, திருகோணமலை பட்டணமும் சூழலும் வெள்ளைமணல் ,கந்தளாய் லீலாரத்ன மைதானம், சேருவில மற்றும் வெருகல் ஆகிய

                பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானங்கள் இவ்வாறு அமைச்சர் அவர்களினால் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டன.


                ஒரு மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கு 15 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


                கிராமிய மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழு

                தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரல, மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, பிரதேச அரச அதிகாரிகள் உட்பட விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.

                Posted in Uncategorized

                பறக்கும் படை வேட்டை -491 பேர் கைது

                பறக்கும் படை வேட்டை -491 பேர் கைது

                தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 491 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

                கடந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 55 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

                இதனையடுத்து, கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 636 ஆக உயர்ந்துள்ளது.

                இதேவேளை, மேல் மாகாணத்தில் நுழைய முற்பட்ட 739 வாகனங்கள் மற்றும் 1072 பேர் மற்றும் வெளியேற முற்பட்ட 1195 பேர் மற்றும் 742 வானங்கள் நேற்று சோதனையிடப்பட்டுள்ளன.

                  Posted in இலங்கை செய்திகள்

                  68 மில்லியன் ரூபா கஞ்சா மீட்பு

                  68 மில்லியன் ரூபா கஞ்சா மீட்பு

                  நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம்-நறுவிலிக்குளம் கடற்கரை

                  பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 68 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப் பொதிகளை நேற்று முன்தினம் (21) வங்காலைக் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

                  கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையிலேயே இக்கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

                  இதன்போது சுமார் 228 கிலோகிராம் நிறை கொண்ட கேரள கஞ்சாப் பொதிகள் மீட் கப்பட்டுள்ளதாகவும், எனினும் இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  சங்கிலி திருடன் மடக்கி பிடிப்பு

                  சங்கிலி திருடன் மடக்கி பிடிப்பு

                  வவுனியாவில் வீதியால் சென்ற பெண் ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு மோட்டர் சைக்கிளில் தப்பியோடிய இளைஞன் மடிக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

                  நேற்று (21) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் கடைக்கு சென்று விட்டு வீதியால் நடந்து சென்ற பெண் ஒருவரை பின்

                  தொடர்ந்து மோட்டர் சைக்கிளில் சென்ற இளைஞன் ஒருவர் அவர் அணிந்திருந்த இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை இழுத்து அறுதுக் கொண்டு பல்சர் ரக மோட்டர் சைக்கிளில் தப்பியோடிய போது, குறித்த பெண் கூக்குரல் இட்டு கத்தியுள்ளார்.

                  இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் குறித்த இஞைனை கார் ஒன்றில் விரட்டிச் சென்றதுடன், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.

                  திருட்டில் ஈடுபட்ட நபர் வவுனியா, வேப்பங்குளம் சந்தியில் ஏற முற்பட்ட போது அங்கிருந்த வந்த பொலிஸாரும், விரட்டிச் சென்ற இளைஞர்களும் இணைந்து திருட்டில் ஈடுபட்டவரை மடக்கிப் பிடித்து வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

                  மோட்டர் சைக்கிளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார், குறித்த நபரிடம் இருந்து அறுத்தச் செல்லப்பட்ட இரண்டரைப் பவுண் சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளது.

                  மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

                  செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                  Posted in இலங்கை செய்திகள்

                  வவுனியாவில் ஒரே நாளில் 8 கொரோனா சடலங்கள் தகனம்

                  வவுனியாவில் ஒரே நாளில் 8 கொரோனா சடலங்கள் தகனம்

                  வவுனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றால் மரணித்தவர்களின் சடலங்கள் அதிரித்து செல்லும் நிலையில் நிலமையை சீர் செய்யும் முகமாக சுகாதாரப் பிரிவினரும், நகரசபையினரும் இணைந்து நேற்று (21) 8 சடலங்களை தகனம் செய்யதனர்.

                  வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் காரணமாக தொடர்ந்தும் பலர் மரணித்து வரும் நிலையில் கொவிட்டால் மரணமடைந்தவர்களின் சடலங்கள் தேக்கமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

                  இந்நிலையில், சடலங்கள் தேக்கமடைவதை தவிர்க்கும் பொருட்டு வவுனியா சுகாதாரப் பிரிவினரும், நகர சபையினரும் இணைந்து காலை 7 மணியில் இருந்து மாலை 8 மணி வரை சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கை பூந்தோட்டம் மின் மாயானத்தில் முன்னெடுத்திருந்தனர்.

                  இதன்படி 8 சடலங்கள் அதிகபட்சமாக ஒரே நாளில் தகனம் செய்யப்பட்டப்பட்டன.

                  வழமையாக நாள் ஒன்றுக்கு மின் தகன இயந்திரத்தின் வினைததிறனை கருத்தில் கொண்டு அதிகபட்சமாக 6 வரையிலான சடலங்களே எரியூட்டப்பட்டு வந்தன. அத்துடன் இயந்திரமும் அவ்வப்போது பழுதடைந்தமையாலும், கோவிட் உயிரிழப்புக்கள் தொடர்கின்றமையாலும், ஏனைய மாவட்டங்களில் இருந்தும் சடலங்கள் வருவதானாலும் வவுனியாவில் பல சடலங்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் அதனை துரிதமாக தகனம் செய்யும் முகமாக இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  பேய்’ கதை- மைத்திரி காட்டம்

                  பேய்’ கதை- மைத்திரி காட்டம்

                  மதுபானசாலைகளை திறக்குமாறு அரசாங்கம் உத்தி​யோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் கலால் வரி திணைக்களமே தன்னிச்சையாக தீர்மானம் எடுத்துள்ளதாக அரசாங்கத் தரப்பினரால் பதிலளிக்கப்பட்டு வருகின்றது.

                  இந்நிலையில், அரசாங்கத்தின் பிரதான பங்காளி கட்சிகளில் ஒன்றான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறி​சேன எம்.பி, புதுக்
                  கதையொன்றை கூறியுள்ளார்.

                  மதுபான நிலையங்களை திறப்பதற்கு உத்தரவு வழங்கியது யார் எனக் கேள்வியெழுப்பிய அவர், பேயாக இருக்கலாம் என கிண்டல் செய்தார். மதுபான நிலையங்களை திறப்பதற்கு உத்தரவிட்டது யார் என்றக்கேள்விக்கு சரியான பதில் தெரியாவிட்டால் இதுவே
                  பதிலாகும் என்றார்.

                  நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கத்திற்கு பணம் இல்லையெனவும் அதனாலேயே மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர், எனவே மதுபான நிலையங்கள்
                  திறக்கப்பட்டமையானது ஒரு அருவருப்பான செயல் என்றார்.

                  Posted in Uncategorized

                  தமிழ் கைதிகளுக்கு பாலியல் சித்திரவதை

                  தமிழ் கைதிகளுக்கு பாலியல் சித்திரவதை

                  பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டு 540 நாள்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட 12


                  தமிழ் இளைஞர்களின் அந்தரங்க உறுப்புகள் மிகவும் கேவலமான முறையில் சோதனை செய்யப்பட்டதாகவும், இதுவொரு பாலியல் சித்திரவதை எனவும் பாராளுமன்ற
                  உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

                  பாராளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அனுராதபுர சிறைச்சாலைக்குள் சென்று தமிழ் அரசியல் கைதிகளிடம்
                  வெறியாட்டம் ஒன்றை ஆடியிருக்கிறார்.

                  2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி தடுத்து வைக்கப்பட்டவர்களிடமே இவ்வாறு லொஹான் ரத்வத்தை இவ்வாறு நடந்து கொண்டிருந்துள்ளார். இவர்களுக்கு எதிரான வழக்குகள் எதுவும் விசாரணைக்கு
                  எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தால் 5 அல்லது 6 வருடங்களுக்கு முன்பே அவர்கள் குற்றமற்றவர்கள் எனவிடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் எனவும் அவர் இதன்போது கூறினார்.

                  தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது
                  செய்யப்பட்டுள்ளனர். இதுவரைக்கும் லொஹான் ரத்வத்தை செய்த குற்றச்சாட்டுகளுக்காக அவரின் அமைச்சுப் பதவி பறிக்கப்படவில்லை.

                  இவ்வாறான நிலையில் அரசாங்கம் லொஹான் ரத்வத்தைக்கு துணைநிற்கிறதா? என்கிற
                  சந்தேகம் ஏற்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார். லொஹான் ரத்வத்தவிடமிருந்து அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டு, பாராளுமன்றத்திலிருந்தும் அவரை வெளியேற்றி சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

                  சம்பவம் நடைபெற்று 6 நாள்களுக்குப் பின்னரே சிறைச்சாலைகள் அதிகாரிகள்
                  கைதிகளிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்றால், 6 நாள்களாக இந்த விசாரணைகளை தடுத்தவர் யார்? எனவும் அவர் இதன்போது வினவினார்.

                  பயங்கரவாதத் தடைச்சத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 12 தமிழ் இளைஞர்கள், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 26ஆம் திகதி அந்த சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்ட இந்த இளைஞர்களை 29ஆம் திகதி நிர்வாணமாக்கி
                  சோதனையிட்டுள்ளனர்.

                  540 நாள்களாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள்,
                  பல்வேறு கொடூரமான சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்து உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

                  Posted in Uncategorized

                  பிரித்தானியாவில் அதிர்ந்த அமெரிக்க தூதரகம் – சுதந்திர வேட்டை – photo

                  பிரித்தானியாவில் அதிர்ந்த அமெரிக்க தூதரகம் – சுதந்திர வேட்டை – photo

                  இன்று பிரித்தானியாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் இலங்கை பாதுகாப்புப் படையினரின் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு போராட்டத்தை

                  தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் ஏற்பாடு செய்திருந்தனர் . , (21 :09 :2021 )செவ்வாய் கிழமை12 மணியளவில் , அமைதியான முறையில் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் .தமிழர்களுக்கான

                  சுதந்திர வேட்டைக்காரர்கள் “இலங்கை இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா என்ற பெயரிடப்பட்ட இலங்கைப் போர்க்குற்றவாளி மீது பயணத் தடையை விதிக்குமாறு இங்கிலாந்து

                  அரசாங்கத்தை அமெரிக்க அரசாங்கம் அழுத்தம் கொடுக்குமாறும் ,ஐ .நா சபையே கால தாமதமில்லாமல் தமிழர்களுக்கு நீதியை துரித படுத்தி வழங்குமாறும் ,ஸ்ரீலங்காவுக்கு இனியும்

                  காலம் கொடுக்காது தமிழ். மக்களுக்கு சரியான நீதி கிடைக்க செய்யுமாறும் பல கோரிக்கை களை முன்வைத்து கோவிட் விதிகளை பின் பற்றி செய்வனவே செய்திருந்தனர்

                    Posted in Uncategorized

                    ஐக்கிய நாடுகள் முன்பாக தமிழர்கள் போராட்டம் – பறந்த புலிக்கொடி படங்கள் உள்ளே

                    ஐக்கிய நாடுகள் முன்பாக தமிழர்கள் போராட்டம் – பறந்த புலிக்கொடி படங்கள் உள்ளே

                    சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பின் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு ஐ.நாவில் சமர்பிக்க வேண்டும் என ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) தமிழர்கள் அறைகூவல்.

                    48வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) பெரும் எழுச்சியாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. காலை (20/09/2021) ஐக்கிய

                    நாடுகள் அவையின் ஆணையாளர் வதிவிடத்தில் மனித நேய ஈருருளிப்பயணம் மேற்கொண்டவர்களால் மனு கையழிக்கப்பட்டது. குறிப்பாக சிங்களப் பேரினவாத அரசினால்

                    மெற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே தமிழருக்கான உறுதியான தீர்வு என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்தோடு சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பின் சாட்சி ஆவணங்களும் கையளிக்கப்பட்டது.

                    தொடர்ந்தும் ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) எழுச்சிக்கோசங்களோடு கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி தமிழீழத் தேசியக்கொடி பட்டொளிவீசிப் பறக்க எழுச்சிகரமான மக்கள் வெள்ளத்தோடு மேலும் நிகழ்வுகள் தொடர்ந்தன.

                    கடந்த 02/09/2021 பிரித்தானியாவில் ஆரம்பித்து 6 ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்தும் 1280 Km பயணித்து முக்கிய பல அரசியல் மையங்களின் ஊடாக ஐரோப்பிய நாடுகள் தமிழர்களின்

                    நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வேண்டும் என 23ம் தடவையாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் மேற்கொண்டவர்கள் தம் விடுதலைப்பயணத்தில் தாம் கண்ட அரசியல் முன்னேற்றத்தினையும் அனுபவங்களினையும் மக்களோடு பகிர்ந்து கொண்டனர். சிறிலங்காப்

                    பேரினவாத அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றால் தமிழர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினவழிப்பின் சாட்சிகள் சேகரிக்கப்பட்டு ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட

                    வேண்டும். எனவே அனைத்து தமிழ் உறவுகளும் தங்கள்
                    சாட்சியங்களை வாய்மூலமோ எழுத்துமூலமோ நிரூபிப்பதன் ஊடாக கால தாமதமின்றி சிங்களப் பேரினவாத அரசினை சர்வதேச சமூகம் தண்டிக்க முடியும். எனவே அதற்கான முன்னேற்பாடுகளுக்கான அறைகூவலும் மனித நேய செயற்பாட்டாளர்களால் விடப்பட்டது.

                    தொடர்ந்தும் நடைபெற்ற நிகழ்வில் எழுச்சிகரமான கவிதைகளும் , தமிழ் , டச்சு,பிரஞ்சு, மற்றும் ஆங்கில மொழியிலுமாக இளையோர்களால் எழுச்சி உரை நிகழ்த்தப்பட்டது. பன்னாட்டு வாழிட உறவும் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் எதிரொலியினை அழுத்தம் திருத்தமாக இடித்துரைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

                    இன்று (20/09/2021) தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 6வது நினைவு நாளின் 34 ம் ஆண்டில் நாம் நின்றுகொண்டு இருக்கின்றோம் ஆனால் இன்னும் விடுதலைப் பசி தீராத எம் திலீபன் அண்ணாவின் கனவும் அற்பணிப்பின் நோக்கமும் ஈடேற வேண்டும் என்றால் தமிழ்

                    மக்கள் அனைவரும் தம் வாழிட நாடுகளில் தொடர்ந்தும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுத்து வெளி நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடாக தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு

                    நாம் வாழும் நாடுகள் செவிமடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும். காலம் தந்த அரிய வாய்பினை தவறவிட்டு வரலாற்றுப் பெரும் துயருக்கு சொந்தமாகாது இனிதே எம் தமிழீழ மண்ணை மீட்டெடுப்போம் வாரீர் என முழக்கங்கள் எழுப்பியவாறே நம்புங்கள் தமிழீழம் பாடலோடு இன்றைய அறவழிப்போராட்டம் நிறைவு பெற்றது.

                    எம் அன்பான தமிழீழ உறவுகளே நாம் அனைவரும் சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட தமிழின அழிப்பின் வடுக்களை சுமந்து கொண்டே வாழ்கின்றோம். அவ்விழப்புக்களை சாட்சியங்களாக சமர்பித்தலின் மூலம் நிச்சயம் சர்வதேச மட்டத்தில் சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதி விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம் தமிழீழ சுதந்திர தேசத்தினை நாம் விரைவாக மீட்டெடுக்க முடியும். எனவே உங்கள் வாழிட நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடாக சாட்சியங்களை சமர்ப்பிக்க தவறாதீர்கள்.

                    “காலத்தின் தேவைக்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கமைய போராட்ட வழிமுறைகள் மாறலாம் , நாம் கொண்ட இலட்சிய நோக்கம் என்றும் மாறாது”

                    • தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்

                    மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்.

                    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.