Posted in சினிமா

விஜய்யின் ஜாலி வாக்… வைரலாகும் வீடியோ

விஜய்யின் ஜாலி வாக்… வைரலாகும் வீடியோ

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பிற்காக டெல்லி சென்றிருக்கும் நடிகர் விஜய், அங்குள்ள ஷாப்பிங் மாலில் கூலாக நடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பீஸ்ட். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கி

வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க, செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அடுத்த கட்டமாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் விஜய் சில தினங்களுக்கு

முன்பு டெல்லி சென்றார். விமான நிலையத்திற்குள் விஜய் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

விஜய்

இந்நிலையில் விஜய், டெல்லியில் உள்ள ஷாப்பிங் மாலில் கூலாக நடந்து செல்லும் வீடியோ

வெளியாகியுள்ளது. பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் அமைதியாக விஜய் வலம் வரும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    Posted in Uncategorized

    திலீபன் நினைவை நடத்த முல்லையில் தடை

    திலீபன் நினைவை நடத்த முல்லையில் தடை

    இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளின் மண் மீட்பு போரில் தண்னி ஈகம் செய்த தியாக தீபம்

    திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவு நாளை நினைவு கூற முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது

    சட்டம் ஒழுங்கு கெட்டுவிட கூடாது என்பதற்காக இந்த தடை உத்தரவை பிறப்பிக்க பட்டுள்ளதாம்

      Posted in Uncategorized

      தனிமையில் இருந்து பெண் வெட்டி கொலை – எகிறும் கொலைகள்

      தனிமையில் இருந்து பெண் வெட்டி கொலை – எகிறும் கொலைகள்

      இலங்கை வெலிக்கடை பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவபர் மர்ம நபர்களினால் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்

      இவரது அலறல் சதம் கேட்டு அயலவர்கள் ஓடி சென்று பார்த்த பொழுது அவர் சடலமாக காணப்பட்டுள்ளார் .

      சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

      மகிந்த ,கோட்டா ஆட்சியில் இவ்வாறான படுகொலைகள் அதிகரித்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது

        செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் பிரிட்டன் நபர் – கொட்டலில் சடலமாக மீட்பு

        இலங்கையில் பிரிட்டன் நபர் – கொட்டலில் சடலமாக மீட்பு

        பிரித்தானிய நாட்டு குடிமகன் ஒருவர் இலங்கை கொட்டல் ஒன்றில் தங்கி இருந்த வேளை சடலமாக மீட்க பட்டுள்ளார்

        இவர் சம்பவ தினம் அன்று முதல் தினம் விருந்து நிகழ்வு ஒன்றிற்கு கலந்து விட்டு கொட்டல் திரும்பிய நிலையில் இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார்

        குறித்த நபரது மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன என போலீசார் தெரிவித்துள்ளனர்

          Posted in Uncategorized

          கயேந்திரகுமார் கைதிற்கு சுமந்திரன் கண்டனம்

          கயேந்திரகுமார் கைதிற்கு சுமந்திரன் கண்டனம்

          இலங்கையில் ஆளும் கோட்டாபய ஆட்சியில் எம்பியாக விளங்கி வரும் செல்வராசா கயேந்திரன்

          சிங்கள காவல்துறையால் கைது செய்ய பட்டு இழுத்து செல்ல பட்டார்

          மேற்படி சம்பவத்திற்கு கூட்டமைப்பின் பேச்சளார் சுமந்திரன் கடும் கணடனம் தெரிவித்துள்ளார்


          தியாக தீபம் நினைவு நாளில் கலந்து கொண்ட பொழுதே கயேந்திரகுமார் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிட தக்கது

            Posted in சினிமா

            கான்ட்ராக்டர் நேசமணி’ ஆக களமிறங்கும் யோகிபாபு

            கான்ட்ராக்டர் நேசமணி’ ஆக களமிறங்கும் யோகிபாபு

            யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.

            ‘கான்ட்ராக்டர் நேசமணி’ ஆக களமிறங்கும் யோகிபாபு
            கான்ட்ராக்டர் நேசமணி படக்குழு


            தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பல படங்களில் பிசியாக நடித்து

            வருகிறார். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கோலமாவு கோகிலா, கூர்கா, மண்டேலா போன்ற படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

            இந்நிலையில், நடிகர் யோகிபாபு அடுத்ததாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என

            தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பிரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு கான்ட்ராக்டர் நேசமணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

            இப்படத்தில் ஓவியா, ஜிபி முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இப்படத்தை ஸ்வதீஸ் எம்.எஸ் இயக்க உள்ளார். தர்ம பிரகாஷ் இசையமைக்கும்

            இப்படத்திற்கு சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.

              Posted in சினிமா

              சமந்தாவுடன் விவாகரத்தா

              சமந்தாவுடன் விவாகரத்தா

              நடிகை சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக வெகுநாட்களாகவே தகவல் பரவி வருகிறது.

              சமந்தாவுடன் விவாகரத்தா? – முதன் முறையாக மவுனம் கலைத்த நாக சைதன்யா
              சமந்தா, நாக சைதன்யா


              நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும்

              நடித்து வருகிறார். தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

              நடிகை சமந்தாவுக்கும், அவரது கணவர் நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு, இருவரும் பிரியப் போகிறார்கள் என்ற வதந்தி வெகுநாட்களாகவே உலவுகிறது. சமீபத்தில்

              திருப்பதி வந்த சமந்தாவிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, பதில் அளிக்காமல் கோபப்பட்டார்.

              இந்த விவகாரம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்த நாகசைதன்யா, சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: “நான் சிறுவயதில் இருந்தே

              திரைத்துறை வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதை பார்த்து வளர்த்தவன். இந்த பழக்கம் என்னுடைய தாய், தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது. அவர்கள் இருவரும் படப்பிடிப்பு

              முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சினிமா பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அது நல்ல பழக்கம் என்பதால் நானும் அதை கடைபிடித்து வருகிறேன்.

              சமந்தாவுடனான விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது, எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க இன்னொரு செய்தி உடனே

              வந்து விடுகிறது. இன்று ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டால், நாளை இன்னொரு செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்படும், முந்தைய நாள் செய்திகள் மறந்து விடுகின்றன. இந்த புரிதல் எனக்குள் வந்தவுடன், நானும் இதுகுறித்து கவலைப்படுவதை நிறுத்தி விட்டேன்” என்று கூறியுள்ளார்.

                Posted in சினிமா

                சாதனைப்பாடகர் எஸ்.பி.பி. முதலாம் ஆண்டு நினைவு தினம்

                சாதனைப்பாடகர் எஸ்.பி.பி. முதலாம் ஆண்டு நினைவு தினம்

                மறைந்த பாடகரும், இசையமைப்பாளருமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று கடைபிடிக்கப்படுகிறது.

                சாதனைப்பாடகர் எஸ்.பி.பி. முதலாம் ஆண்டு நினைவு தினம்
                எஸ்.பி.பாலசுப்ரமணியம்
                தமிழ் திரையிசை வரலாற்றில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு என்று தனிப் பெருமை இருக்கிறது. ரசிகர்கள் இவருக்கு பாடும்நிலா என்று பட்டம் கொடுத்து அழைத்தாலும் திரையுலகில் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்துக்குப் பிறகு அதிகம் நேசிக்கப்பட்ட மூன்றெழுத்து எஸ்.பி.பி. என்ற மூன்றெழுத்தாகதான் இருக்கும்.

                1966ல் கோதண்டபாணி இசையில் மரியாதை ராமண்ணா என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் எஸ்.பி.பி. 19964ம் ஆண்டுகளில் மெல்லிசைக்குழு வைத்து நடத்தி வந்தார். இவரது இசைக்குழுவில்தான் இளையராஜா கிடார் வாசித்து வந்தார். அன்று முதல் பாவலர் சகோதரர்களுடன் நெருங்கிய நட்புடன் இருந்தார் எஸ்.பி.பி. முதல் பாடலாக ஓட்டல் ரம்பா படத்தில் அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு என்ற பாடினார். ஆனால் அந்தப்படம் வெளிவரவில்லை. 1966ல் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் சாந்தி நிலையம் படத்தில் இயற்கை என்னும் இளையகன்னி என்ற பாடலைப்பாடினார்.

                எஸ்.பி.பாலசுப்ரமணியம்

                எஸ்.ஜானகியோடு முதல் பாடலாக கன்னிப்பெண் படத்தில் பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் என்ற முதல் பாடலை பாடத்தொடங்கி அவருடன் அதிக பாடலை பாடி முடித்தார். சங்கராபரனம் படத்திற்காக முதல் தேடிய விருதைப் பெற்ற எஸ்.பி.பி. தொடர்ந்து பல விருதுகளை வாங்கிக்குவித்தார். ஏக்துஜே கேலியே பாடலும் சங்கை ஒலி படத்தின் பாடலுக்கும் தேசிய விருதகளைப்பெற்றார்.

                எஸ்.பி.பாலசுப்ரமணியம்

                இந்தியாவின் பதினாறு மொழிகளிலும், நாற்பதாயிரம் பாடல்களுக்குமேல் பாடல் பாடிய கின்னஸ் சாதனைப் பாடகராக இருப்பவர் பாலசுப்ரமணியம். இளையராஜாவின் இசையில் இவர் பாடிய பாடல்கள் மட்டும் தனிக்கவனம் பெற்றன. இதனால் வெற்றிகரமாக இளையராஜாவோடு பயணத்தைத்தொடர்ந்தார். சிகரம் உள்பட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். எஸ்.பி.பி. ஒரு நல்ல மிமிக்ரி கலைஞரும் கூட ரஜினி, கமல் படங்கள் பிற மொழியில் மாற்றம் செய்யும் போது அவர்கள் குரல் போலவே பேசி டப்பிங் செய்து கொடுப்பார்.

                திருவண்ணாமலை முதல் சீரடி, திருப்பதி, மந்த்ராலயம் என்று பல கோவில்களில் பக்தி பாடல்களாக இவர் குரலே ஒலித்துக்கொண்டிருக்கிறது. எந்த பாடகருக்கும் அமையாத ஒரு வரமாக இவரது பாடல்களே அவர் வாழ்க்கையை பிரதிபலித்தது.

                எஸ்.பி.பாலசுப்ரமணியம்

                கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டபோதும் கடைசியாக கொரோனா விழிப்புணர்வுக்காக ஒரு பாடலைப் பாடிவிட்டுப் போனார். உதயகீதம் பாடுவேன் உயிர்களை நான் தொடுவேன் என்ற பாடலின் வரிகள் இப்போது கேட்டாலும் நம்மை கலங்க வைக்கும்.

                கண்ணே தீரும் சோதனை
                இரு கண்ணில் என்ன வேதனை
                தந்தேன் எந்தன் ஜீவனை
                என் சாவில் கூட சாதனை

                என்ற வரிகள் எஸ்.பி.பி. அவருக்காக பாடிய வரிகளாக மாறிப்போனது. கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதம் 25ம் தீவிர கொரோனா பாதிப்பால் பாடுவதை நிறுத்திக்கொண்டார் எஸ்.பி.பி. அவர் மறைந்தாலும் பாடும் நிலவாக ரசிகர்களை தன் பாடல் மூலம் காலம் முழுவதும் சந்தோஷப்படுத்திக்கொண்டிருப்பார் எஸ்.பி.பி.

                எஸ்.பி.பி.யின் நினைவு தினத்தை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் அவரது புகைப்படங்கள், பாடல்கள் மற்றும் அவரது நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

                Posted in சினிமா

                சாய் பல்லவியுடன் டூயட் பாட விருப்பம்…. ஓப்பனாக சொன்ன சிரஞ்சீவி

                சாய் பல்லவியுடன் டூயட் பாட விருப்பம்…. ஓப்பனாக சொன்ன சிரஞ்சீவி

                சாய் பல்லவி நடித்துள்ள லவ் ஸ்டோரி படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

                சாய் பல்லவியுடன் டூயட் பாட விருப்பம்…. ஓப்பனாக சொன்ன சிரஞ்சீவி
                சாய் பல்லவி, சிரஞ்சீவி


                தெலுங்கில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘லவ் ஸ்டோரி’. காதல் கதையம்சம் கொண்ட இப்படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.

                இந்நிலையில் லவ் ஸ்டோரி படத்தின் அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

                “நல்லவேளை போலா ஷங்கர் படத்தில் சாய் பல்லவி நடிக்கவில்லை. ஏனென்றால், அவருடன் ஜோடியாக நடித்து, டூயட் பாடவே நான் விரும்புகிறேன். அவருக்கு அண்ணனாக நடிக்க விருப்பமில்லை என்று வேடிக்கையாக கூறினார்.

                போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க முதலில் சாய் பல்லவியை தான் படக்குழு அணுகியது. அவர் நடிக்க மறுத்துவிட்டதால், அக்கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

                  Posted in Uncategorized

                  50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி

                  50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி

                  எதிர்வரும் காலத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியின் மூன்றாம் டோஸான பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த வேண்டி ஏற்படும் என ஸ்ரீ ஜயவர்தனபுர

                  பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்தார்.

                  சினோபார்ம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளம் வயதினருக்கு பூஸ்டர் தடுப்பூசி தேவைபடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

                  அதனடிப்படையில் 50 வயதிற்கு குறைந்தவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்த வேண்டியது இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

                    Posted in Uncategorized

                    சிறையில் இருந்து சித்தி பெற்ற புலிகள் கைதி

                    சிறையில் இருந்து சித்தி பெற்ற புலிகள் கைதி

                    தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் ​பேரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில், பரீட்சைக்குத் தோற்றியவர், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

                    2020 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் வட்டரெக்க மற்றும் மெகசின் சிறைச்சாலைகளில் இருந்து நான்கு கைதிகள் சிறைச்சாலைக்குள் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

                    இவர்களில் மெகசின் சிறைச்சாலையில் இருந்து பரீட்சையில் தோற்றிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் சிறையிலிருக்கும் கைதி ஒருவரும் மற்றுமொரு கைதியும் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளனர் என சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான
                    சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

                    கைதிகளின் திறமைகள் குறித்து ஆராய்ந்து அவர்களது திறமையை மேம்படுத்தும் நோக்கில் தொழில் பயிற்சி, மத, கல்வி, சமூக ரீதியிலான செயற்பாடுகளை முன்னெடுத்து, அவர்களை சமூகமயப்படுத்தி வருவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

                      Posted in Uncategorized

                      கடுமையான கட்டுப்பாடுகளுடன், ஒக்டோபர் 1ஆம் திகதி நாடு திறப்பு

                      கடுமையான கட்டுப்பாடுகளுடன், ஒக்டோபர் 1ஆம் திகதி நாடு திறப்பு

                      ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்டதைப் போல் இல்லாமல், கடுமையான கட்டுப்பாடுகளுடன், ஒக்டோபர் 1ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் நாடு திறக்கப்படக்கூடுமென தகவல்கள் வெளியாககியுள்ளன.

                      ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 76ஆவது கூட்டத்தொடரில் பங்​​​​கேற்பதற்காக, நியூயோர்க் சென்றுள்ளார். அதனால், கொவிட்-19 தொற்றொழிப்பின் ஜனாதிபதி செயலணியின் நேற்றைய (24) கூட்டம் நடைபெறவில்லை.

                      எனினும், ஒக்டோபர் முதலாம் திகதிக்குப் பின்னர் நாட்டை திறப்பதற்கு தேவையான கட்டுப்பாடுகளை ஆராய்ந்து அறிக்கையிடுமாறு கட்ட கூட்டத்தின் போது, விடயதானத்துக்குப்
                      பொறுப்பானவர்களிடம் ஜனாதிபதி பணித்திருந்தார்.

                      கொவிட்-19 தொற்றொழிப்பின் ஜனாதிபதி செயலணி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூடி ஆராய்ந்து முடிவெடிக்கும். எனினும், ஜனாதிபதி நாடு திரும்பியதன் பின்னர், ஒக்டோபர் 1ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர், பிறிதொருநாளில் அச்செயலணி கூடி
                      முடிவெடுக்கக்கூடும் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

                      இதே​வேளை, நாடு, தொடர்ச்சியாக மூடப்பட்டிருந்ததன் ஊடாக நல்ல பெறுபேறுகள் கிடைத்துள்ளன எனத் தெரிவித்த ராகம வைத்திய பீடத்தில் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜூன டி சில்வா, கடுமையாக கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறப்பதற்கான ஏற்பாடுகளை
                      முன்னெடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

                      எவ்வாறாயினும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பணியாளர்களை அழைப்பது 25 சதவீதத்தில் மட்டுப்படுத்தவேண்டும். பொது போக்குவரத்தில் பயணிகளை ஏற்றிச்செல்வது 50 சதவீதமாக இருக்கவேண்டும் என்றும் பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.

                      திருமண வைபவங்கள் உள்ளிட்ட மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்றுகூடும் நிகழ்வுகளை முழுமையாக தடைசெய்யமுடியும் எனத் தெரிவித்துள்ள அவர், நாட்டை முழுமையாக திறக்கவேண்டுமாயின் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றும் செயற்றிட்டம் 70-80 சதவீதங்களுக்கு அண்மித்திருக்க வேண்டும்.

                      நாட்டை முடக்கியிருந்த இந்தக்காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனா தொற்றால் மரணிப்போரின் எண்ணிக்கை திருப்தியடையும் வகையில் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

                      Posted in Uncategorized

                      யாழில் விபத்து – மூவர் காயம் – வண்டி சேதம்

                      யாழில் விபத்து – மூவர் காயம் – வண்டி சேதம்

                      வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                      அராலி மத்தியில் வசிக்கும் நபர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பேரூந்தில் செல்லும்போது அரச மரத்துடன் மோதி விபத்திற்குள்ளானது.

                      இதில் அறுவர் பயணித்த நிலையில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் மற்றைய இருவர் சாதாரண காயங்களுக்கு உள்ளாகினர்.

                      காயமடைந்த மூவரும் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                      பேருந்தானது வேகக்கட்டுப்பாட்டினை இழந்தமையே விபத்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது

                        Posted in Uncategorized

                        யாழில் வலையில் சிக்கிய இராட்சத மீன்

                        யாழில் வலையில் சிக்கிய இராட்சத மீன்

                        வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்றுமாலை கரைவலை சம்மாட்டியான டொன்ஸ் என்பவரின் வலையில் பாரிய கோமராசி மீன் பிடிபட்டுள்ளது.

                        சுமார் 8 அடி நீளம் கொண்ட குறித்த மீனை இயந்திரம் மூலம் கரைக்கு மீனவர்கள் கட்டியிழுத்தனர்.

                        கோமராசி அல்லது புள்ளிச் சுறா என அழைக்கப்படும் குறித்த மீனை வலையில் இருந்து அகற்றி மீனவர்களால் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது.

                        வலைகளுக்கு நடுவே அதிகளவான மீன்கள் வந்த போதிலும் கோமராசி மீனின் வருகையால் மீன்கள் எதுவும் பிடிபடவில்லை

                        சில நாட்களுக்கு முன்பு மேலும் ஒரு கோமராசி மீன் குறித்த சம்மாட்டியின் வலையில் அகப்பட்டதோடு நேற்று இரண்டாவது முறையாகவும் பிடிபட்டுள்ளது.

                        ஆழ்கடலில் வசிக்கும் இம் மீன்கள் சில நாட்களாக கரைக்கு வந்து போவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

                          Posted in Uncategorized

                          சவால்களுக்கு தீர்வுகாண ஒன்றாகச் செயற்படுவோம்-கோட்டாபய

                          சவால்களுக்கு தீர்வுகாண ஒன்றாகச் செயற்படுவோம்-கோட்டாபய

                          உலகளாவிய சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு, உணவுக் கட்டமைப்பை மிகச் சிறந்த நிலையான முன்னேற்றத்தை நோக்கிக் கொண்டுசெல்வது அத்தியாவசியம் என்று தெரிவித்த

                          ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , அதற்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்துச் செயற்படுவது அவசியமெனக் குறிப்பிட்டார்.

                          ஐக்கிய நாடுகள் உணவுத் திட்ட மாநாட்டில், இணையவழியூடாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                          ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது கூட்டத்தொடரின் ஓர் அங்கமாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால், இந்த உணவுத் திட்ட மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

                          ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகள் 17ஐ அடைவது தொடர்பில், உலக உணவு உற்பத்தி மற்றும் நுகர்வு தொடர்பில், முக்கியமான சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

                          கொவிட் தொற்றுப் பரவலானது, உலகளாவிய உணவுப் பாதுகாப்பில் காணப்படும் குறைபாடுகளை எடுத்துக்காட்டியுள்ளதெனத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த நிலைமையானது, காலநிலை மாற்றங்கள் காரணமாக மேலும் மோசமான நிலைமைக்குத் திரும்பவும் வாய்ப்பிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

                          நிலையான உணவுக் கட்டமைப்பானது, இலங்கையின் வளமான சமூகக் கலாசாரம் மற்றும் பாரம்பரியப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக விளங்குகின்றது.

                          மனிதச் சுகாதாரத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை
                          ஏற்படுத்தும் இரசாயனப் பசளை, களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைத் தடை செய்ய தனது அரசாங்கம் அண்மையில் எடுத்தத் தீர்மானமானது, நிலையான அபிவிருத்தி தொடர்பான அரச கொள்கையொன்றில் காணப்படும் பிரதான மைல்கல்லாகும் என்று, ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

                          நீண்ட காலமாக இரசாயனப் பசளைப் பயன்பாட்டுக்குப் பழக்கப்பட்ட விவசாயிகளின் மனநிலைகளை மாற்றுவது கடினமாகியுள்ளதென்றும் சேதனப் பசளையைத் தேவையானளவு உள்ளூர் மட்டத்தில் உற்பத்தி செய்துகொள்வது சவாலானதாக அமைந்திருக்கின்றது என்றும் எடுத்துரைத்த ஜனாதிபதி, இது தொடர்பிலான தொழில்நுட்ப மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புகளை, இலங்கை அன்புடன் வரவேற்கிறது என்றும் குறிப்பிட்டார்.

                          சேதனமுறை விவசாயத்தை ஊக்குவிக்கும் போது, கிராமிய வறுமையைக் குறைக்கும் வகையில் சந்தைகளை இலக்கு வைக்கும் உணவுச் சங்கிலியை மேம்படுத்தும் தேவை காணப்படுவதோடு, இலங்கையின் உணவுக் கட்டமைப்பை நிலையான வகையில் மேம்படுத்துவதற்கும் மிகச் சிறந்த உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியுமென்று, ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

                          உணவு மற்றும் விவசாயத்துறை அமைப்புகள் மற்றும் உலக உணவு வேலைத்திட்டத்தினால் இலங்கைக்குப் பெற்றுக்கொடுக்கப்படும் தொழில்நுட்ப உதவியைப் பாராட்டிய ஜனாதிபதி, ஏனைய உலகளாவிய அமைப்புகள் மற்றும் அறிவியல் ரீதியிலான நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தார்.

                          தன்னுடைய நாட்டின் பிரஜைகள் மற்றும் உலகத்துக்குச் சிறந்த எதிர்காலத்தை உறுதியளித்தல், அனைத்து உலகத் தலைவர்களதும் நோக்கமாக இருக்க வேண்டுமென்றும் எடுத்துரைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இது விடயத்தில் எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கு, அனைவரும் ஒன்றிணைந்துச் செயற்பட வேண்டுமென்றுத் தெரிவித்தார்.

                          மனிதர்களைப் போன்றே இந்தப் பூமியின் சுகாதார நலனுக்கான போஷாக்கை வழங்கக்கூடிய வகையில், உலகளாவிய உணவுக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கு, இந்த ஐ.நா உணவுத்திட்ட மாநாடு வழிசமைக்குமென, ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்

                          Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                          சம்பிக்க ரணவக்க CID-இல் முன்னிலை

                          சம்பிக்க ரணவக்க CID-இல் முன்னிலை

                          பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, குற்றப்புலானாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

                          வாக்குமூலம் வழங்குவதற்கு வருமாறு குற்றப்புலானாய்வு பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர் அங்கு ஆஜராகியுள்ளார்.

                          Posted in Uncategorized

                          தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை

                          தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை

                          தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ விரைவாக நடவடிக்கை எடுத்து வருகின்றார் எனத் தெரிவித்த இளைஞர்

                          விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ இளைஞர்களை கைதுசெய்து தடுத்து வைக்கவேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை
                          என்றார்.

                          ராஜபக்‌ஷ குடும்ப பெயர்களைப் பயன்படுத்தி சட்டவிரோத மணல் அகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எமது அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆதரவளிக்காது என்றார்.

                          கிராமிய விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 15 இலட்சம் ரூபாய் நிதியில் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு வந்தாறுமூலை டயமன் விளையாட்டுக்கழக மைதானம் கையளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (23) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே
                          இவ்வாறு தெரிவித்தார்.

                          மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் சு.ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சரகளான் சதாசிவம் வியாழேந்திரன், தேனுக விதானகே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட், அரசாங்க அதிபர் எஸ்.கருணாகரன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

                          அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைகையில், தேவையற்ற விதத்தில் இளைஞர்களை கைதுசெய்து தடுத்துவைக்க வேண்டிய அவசியம் எமது அரசாங்கத்துக்கு இல்லை. தெரியாமல் செய்த குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை
                          விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த
                          நாமல் ராஜபக்‌ஷ இளைஞர்கள் நாட்டின் பெறுமதிளான சொத்துக்கள“
                          என“றத​ை“ஃ

                          “தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தால் அதிகமான விடங்களைச் செய்ய முடியவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பல விடங்களைப் பின்பற்ற வேண்டும்” என்றார்.

                          ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். அதனடிப்படையில் இதுவரை 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.
                          பேஸ்புக்கில், புகைப்படங்களை பதிவிட்ட குற்றங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து நீதித்துறையுடன் பேசி, அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படும். குறித்த கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

                          சட்டவிரோத மணல் அகழ்விற்கு எமது அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலர் குற்றம் சுமத்துகிறார்கள். இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கூச்சல் இடுவதானாலோ அல்லது ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்துவதனால் எவ்விதமான பயனும் கிடைக்காது என்றார்.

                          சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் தெரியவந்தால் பொலிஸில் முறைப்பாடு செய்யுங்கள் அவ்வாறான நிலையில் சாட்சியமளிக்க நாங்களும் வருகிறோம். எமக்கு எதிராக கூச்சலிடுவது பொலிஸாரின் புத்தகங்களில் பதியப்படுவதில்லை. சட்டரீதியன நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முன்வரவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அழைப்பு விடுத்தார்.

                          Posted in Uncategorized

                          418 பேர் கைது

                          418 பேர் கைது

                          தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 418 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                          முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

                          இதன்போது 48 வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

                          அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 77,543 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                          இந்த சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் நாடு பூராகவும் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

                          Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                          துப்பாக்கி வெடித்ததில் இருவர் பலி – ஒருவர் காயம்

                          துப்பாக்கி வெடித்ததில் இருவர் பலி – ஒருவர் காயம்

                          மிருக வேட்டைக்காக பயன்படுத்தப்படும் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                          நேற்று (23) மாலை திருப்பனே பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முரியாகல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

                          60 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

                          மூவர் குறித்த பகுதியால் நடந்து சென்ற சந்தர்பத்தில் இருவர் மீது துப்பாக்கி சுடப்பட்டுள்ளது.

                          இதனை ஊர்மக்களுக்கு அறியத்தருவதற்காக ஓடி சென்ற மூன்றாவது நபர் மீது வேறு ஒரு கட்டுத் துப்பாக்கி வெடித்து அவரும் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                          சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                          Posted in Uncategorized

                          மாகாண சபைத் தேர்தலை விரைவில்

                          மாகாண சபைத் தேர்தலை விரைவில்

                          மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டும் என்பதே பாராளுமன்ற விசேட குழுவின் பொதுவான நிலைப்பாடாகும் என அக் குழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

                          இந்தத் தேர்தலை விரைவில் நடத்த முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

                          தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் கூட்டம், நேற்று முன்தினம் (22) நடைபெற்றது. இதன்போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                          பொதுவான நிலைப்பாடு என அக்குழுவின் தலைவர், சபை முதல்வர்
                          அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நேற்று (22) தெரிவித்தார்.‘எங்கள் மக்கள் சக்தி கட்சி’ தனது கருத்துக்களை முன்வைத்ததுடன், இந்தக் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தார். தற்பொழுது நடைமுறையில் உள்ள விருப்புவாக்கு முறையை முழுமையாக நீக்குவது பொருத்தமானது எனச் சுட்டிக்காட்டிய அவர், தொகுதிக்குப் பொறுப்பான உறுப்பினர் இருப்பது அவசியமானது என்றும் தெரிவித்தார்.

                          சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், கொள்கை ரீதியாக அரசியலை முன்னெடுக்கும் கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அத்துரலிய ரத்ன தேரர் இங்கு குறிப்பிட்டார்.

                          20வது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றத்தின் அதிகாரம் வேறு தரப்பினருக்கு வழங்கப்பட்டிருப்பதாக இந்தக் குழு முன்னிலையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சரும், கட்சியின் நிறைவேற்று அதிகாரியுமான அஜித்.பி.பெரேரா குறிப்பிட்டார்.

                          நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் மற்றும் நீதிமன்றம் ஆகிய துறைகளுக்கிடையிலான சமநிலைத் தன்மை பேணப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். அனைத்துத் தேர்தல்களும் சுதந்திரமாகவும், நியாயமான முறையிலும் நடத்தப்படுவது அவசியமானதாகும். பாராளுமன்ற, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் யாவும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்றும் அஜித்.பி.பெரேரா விசேட குழு முன்னிலையில் வலியுறுத்தினார்.

                          இதேவேளை, தேர்தல்கள் குறித்த கால அட்டவணையொன்று நாட்டில் காணப்பட வேண்டும் என்று வலியுறுத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர், இதனூடா மக்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்த முடியும் என்றார்.