Tag: நாமல் ராஜபக்
நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம்
நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம்
நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியபின்னர் அங்கிருந்து வெளியேறினார்.
இன்று காலை 09.00 மணியளவில் நாமல் ராஜபக்ஷ, வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்திருந்தார்.
“ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, முன்னைய அரசாங்கத்தில் இருந்தவர்களை அழைத்து, அவர்களைக் கேள்வி கேட்பது நம் நாட்டின் அரசியல் கலாசாரமாகிவிட்டது
எங்களை வரச் சொன்னால், நாங்கள் வருகிறோம், நாட்டு மக்களுக்கு எங்களைப் பற்றி தவறான ஒரு படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை பொய்யாக்கவே நான் இன்று வந்தேன்.
2010 – 2015 ஒருவர் என் அலுவலகத்துக்கு வந்து பணம் வழங்கியதாக கூறப்பட்ட புகார் தொடர்பில் வாக்குமூலம் பெறவே எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது” என்று நாமல் கூறினார்.
- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு

- லெபனானின் மர்ஜாயூன் மற்றும் நபாத்தியா பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்கள்

- டிரம்ப் தாக்குதல் ரத்து

- உயர் இரத்த அழுத்தம் கடுமையான நோய்களுக்கு ஒரு முக்கிய காரணம் சிறப்பு மருத்துவர்

நாமல் ராஜபக்ஷ தலைமையில் விளையாட்டு மைதானங்கள் பொது மக்களிடம் கையளிப்பு
நாமல் ராஜபக்ஷ தலைமையில் விளையாட்டு மைதானங்கள் பொது மக்களிடம் கையளிப்பு
ஆரோக்கியமான தலைமுறையொன்றை கட்டி எழுப்பும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் 335 கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானங்கள் பல
இன்று(23) இளைஞர் மற்றும் விளையாட்டு ,அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டன .
கோமரன்கடவெல, குச்சவெளி நாவற்சோலை, திருகோணமலை பட்டணமும் சூழலும் வெள்ளைமணல் ,கந்தளாய் லீலாரத்ன மைதானம், சேருவில மற்றும் வெருகல் ஆகிய
பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானங்கள் இவ்வாறு அமைச்சர் அவர்களினால் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டன.
ஒரு மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கு 15 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிராமிய மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழு
தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரல, மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, பிரதேச அரச அதிகாரிகள் உட்பட விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.







