ரஷியா இராணுவம்
Posted in Uncategorized உலக செய்திகள்

உக்கிரேன் எல்லையில் பதட்டம் குவிக்க படும் ரஷியா இராணுவம்

உக்கிரேன் எல்லையில் பதட்டம் குவிக்க படும் ரஷியா இராணுவம்

உக்கிரேன் எல்லையில் ரயில்களில் இருந்து ரசியா இராணுவத்தின் ஆயுத வண்டிகள் இறக்க பட்டு


குவிக்க பட்டு வருவதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

ரசியா உக்கிரேன் மீது திடீர் போர் நடவடிக்கை மேற்கொண்டு அந்த நாட்டை கைப்பற்றலாம் என்ற பீதி நிலவி வருகிறது

இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன

    வெடித்த குண்டு
    Posted in Uncategorized

    வெடித்த குண்டு 10 பேர் மரணம் – 17 பேர் காயம்

    வெடித்த குண்டு 10 பேர் மரணம் – 17 பேர் காயம்

    ஆப்கானிஸ்தான் Herat பகுதியில் இடம்பெற்ற பெரும் குண்டு தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில பத்து
    பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்

    காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

    தலிபான்கள் ஆட்சியில் அவர்கள் புரிந்தே அதே தாக்குதல்கள் இவர்களுக்கு எதிராக எதிரி

    படையினரால் தொடுக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

      இராணுவம்
      Posted in Uncategorized

      அமெரிக்காவில் 2 இராணுவம் பலி -17 பேர் காயம்

      அமெரிக்காவில் 2 இராணுவம் பலி -17 பேர் காயம்

      வடக்கு கரோலினா பகுதியில் இராணுவத்தின் மறேன் படையினர் சென்ற வாகனம் விபத்தில்

      சிக்கியதில் அதில் பயணித்த இருவர் பலியாகினர் ,மேலும் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்

      மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,இது சதியா அல்லது விபத்தா

      என்பது தொடர்பில் தெரியவரவில்லை

        ஜெயராம்
        Posted in சினிமா

        நடிகர் ஜெயராமுக்கு கொரனோ

        நடிகர் ஜெயராமுக்கு கொரனோ


        மலையாளம், தமிழ் போன்ற பல மொழி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் ஜெயராமுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

        கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் ஜெயராம்
        ஜெயராம்


        தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால்

        பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் சினிமா பிரபலங்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

        ஜெயராம்

        நடிகைகள் மீனா, திரிஷா, லட்சுமி மஞ்சு, செரீன், கீர்த்தி சுரேஷ் ஆகியோரும், நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், சத்யராஜ், விஷ்ணு விஷால், இயக்குனர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர்

        தமன் உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி வருகிறார்கள். இந்நிலையில், பிரபல நடிகர் ஜெயராமுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

          அர்னால்டு
          Posted in Uncategorized

          கார் விபத்தில் சிக்கிய நடிகர்

          கார் விபத்தில் சிக்கிய நடிகர்

          பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர் பெரிய கார் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து இருக்கிறார்.

          கார் விபத்தில் சிக்கிய நடிகர் அர்னால்டு
          அர்னால்டு


          பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர். ஹாலிவுட் திரைப்படங்களின் மூலம் புகழ் பெற்ற இவர் தற்போது படங்களில் நடிப்பதை விடுத்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

          அர்னால்டு சென்ற கார் தற்போது விபத்தில் சிக்கியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள சாலையில் அர்னால்டு கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

          அர்னால்டு காருக்கு முன்னதாக சென்ற இரு கார்கள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதனால் பின்னாடி வந்த வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக மோதின.

          மொத்தம் நான்கு கார்கள் இந்த விபத்தில் சிக்கின. அர்னால்டின் எஸ்யூவி மாடல் கார் ஒரு சிறிய

          காரின் மீது மேலே ஏறி நின்றது. சீட் பெல்ட் அணிந்திருந்தால் அதிர்ஷ்டவசமாக அர்னால்டுக்கு எந்த பெரிய காயங்களும் ஏற்படவில்லை.

          அர்னால்டு

          விபத்து தொடர்பான பல படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விபத்தில் பெண்

          ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

          Posted in Uncategorized உலக செய்திகள்

          அமெரிக்காவில் எகிறிய கொரனோ மரணம் -2,777 பலி

          அமெரிக்காவில் எகிறிய கொரனோ மரணம் -2,777 பலி

          அமெரிக்காவில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த

          தினம் மட்டும் சுமார் 2,777 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் அதே நாளில் 779,036 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

          இதே போன்று பிரிட்டனில் 288 பேர் பலியாகியும் ,95,787 பேர் பாதிக்க பட்டுள்ளனர் என சுகாதார

          அமைச்சு தெரிவித்துள்ளது

            கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
            Posted in உலக செய்திகள்

            பாடசாலைக்குள் மாணவன் சுட்டு கொலை

            பாடசாலைக்குள் மாணவன் சுட்டு கொலை

            அமெரிக்கா Maryland high school வளாகத்தில் மாணவன் ஒருவர் ஆயுத தாரி சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்
            இவ்வாறு கொலை செய்ய பட்ட நபர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

            இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்ய பட்டு விளக்கக்க மறியலில் வைக்க பட்டுள்ளார்

              எரிந்த அடுக்குமாடி
              Posted in உலக செய்திகள்

              இந்தியாவில் பற்றி எரிந்த அடுக்குமாடி 7 பேர் மரணம் -15 பேர் காயம்

              இந்தியாவில் பற்றி எரிந்த அடுக்குமாடி 7 பேர் மரணம் -15 பேர் காயம்

              இந்தியா மும்பை பகுதியில் அடுக்கு மாடியில் ஏற்பட்ட திடீர் தி விபத்தில் சிக்கி ஏழுபேர்

              பலியாகியுள்ளனர் ,மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்

              குறித்த தி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                Posted in சினிமா

                வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்கா சோப்ரா.

                வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்கா சோப்ரா.

                வாடகைத் தாய் மூலம் கிடைத்த குழந்தையால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம் என்று பிரியங்கா சோப்ராவும் அவரது கணவர் நிக் ஜோனாசும் தெரிவித்துள்ளனர்.

                வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா
                பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ்

                பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

                உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ்

                இதழ் தேர்ந்தெடுத்திருந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார்.

                இந்த நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் முதல் குழந்தைக்கு தாய் ஆகி உள்ளார். இந்த தகவலை அவரது கணவர் நிக் ஜோனஸ் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

                பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் நிக்கை டேக் செய்து ஒரு குறிப்பைப் பகிர்ந்துள்ள பிரியங்கா, “நாங்கள் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை வரவேற்றோம் என்பதை உறுதிப்படுத்துவதில்

                மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த சிறப்பு நேரத்தில் நாங்கள் எங்கள் குடும்பம் குறித்து கவனம் செலுத்துவதால் தனியுரிமையை விரும்புகிறோம், மிக்க நன்றி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

                  ஆண்ட்ரியா
                  Posted in சினிமா

                  குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா

                  குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா

                  தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் முன்னணி நடிகையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                  குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா
                  ஆண்ட்ரியா


                  தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. விஜய், அஜித், கமல், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர்

                  , தற்போது வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.

                  ஆண்ட்ரியா

                  இவர் கைவசம் கா, பிசாசு 2 போன்ற படங்கள் உள்ளன. இவர் அடிக்கடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் பாத்ரூம் டப்பில் குளிக்கும்

                  புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

                    Posted in உலக செய்திகள்

                    மதம் மாற வற்புறுத்தியதால் – தற்கொலை புரிந்த 17 வயது பெண்

                    மதம் மாற வற்புறுத்தியதால் – தற்கொலை புரிந்த 17 வயது பெண்

                    மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா ஆகியோரிடம் திருவையாறு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜ்மோகன் விசாரணை நடத்தினார்.

                    மதம் மாறும்படி வற்புறுத்தியதே லாவண்யாவின் தற்கொலைக்கு காரணம்- சித்தி பகிரங்க குற்றச்சாட்டு
                    லாவண்யாவின் சித்தி சரண்யா
                    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (17) என்ற மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

                    பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யாவை, மதம் மாறும்படி கூறி வற்புறுத்தியதாலும், தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாலும் அவர் தற்கொலை

                    செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக லாவண்யா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

                    லாவண்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்து விசாரணை

                    மேற்கொண்டு வருகின்றனர். லாவண்யாவின் மரணத்துக்கு நீதி வழங்கக் கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில்

                    ஈடுபட்டனர். லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு, டுவிட்டரில் #JusticeforLavanya என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

                    இந்நிலையில் மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா ஆகியோரிடம் திருவையாறு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜ்மோகன் விசாரணை நடத்தினார்.

                    பின்னர் லாவண்யாவின் சித்தி சரண்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

                    மதமாற்றம் செய்யக்கோரி 2 ஆண்டுகளாக லாவண்யாவை வற்புறுத்தி வந்தனர். விடுதி கழிவறையை சுத்தம் செய்ய சொல்லியும்


                    பாத்திரம் கழுவச் சொல்லியும் தொந்தரவு செய்துள்ளனர். தொடர்ந்து மதம் மாறும்படி வற்புறுத்தியதால் லாவண்யா தற்கொலை செய்திருக்கிறாள். மதம் மாறச்சொல்லி வற்புறுத்திய 2

                    பேரை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம். எங்கள் பெண்ணுக்கு நடந்த கொடுமை வேறு யாருக்கும் நடக்கக் கூடாது.

                    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

                      Posted in Uncategorized

                      யாழில் சிக்கிய நகை கொள்ளையர்கள்

                      யாழில் சிக்கிய நகை கொள்ளையர்கள்

                      யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் நடமாடும் மக்களிடம் நகைகளை இலக்கு வைத்து

                      கொள்ளையடித்து வந்த ஐவர் அடங்கிய குழு ஒன்று காவல்துறையிடம் சிக்கியுள்ளது

                      நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த மேற்படி குற்ற செயல் தொடர்பாக போலீசார் மேற்க்கண்ட

                      கண்காணிப்பு தேடுதல் வேட்டையின் பொழுதே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது

                        பிரதமரின் தலைமையில் கொழும்பு றோயல் கல்லூரிக்கு புதிய பேருந்து
                        Posted in இலங்கை செய்திகள்

                        பிரதமரின் தலைமையில் கொழும்பு றோயல் கல்லூரிக்கு புதிய பேருந்து

                        பிரதமரின் தலைமையில் கொழும்பு றோயல் கல்லூரிக்கு புதிய பேருந்து

                        கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (21) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து கொழும்பு றோயல் கல்லூரிக்கு புதிய பேருந்தொன்று வழங்கிவைக்கப்பட்டது.

                        கீர்த்தி மந்த்ரிரத்ன அவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இப்பேருந்து ஜப்பானில் தயாரிக்கப்பட்ட 54 ஆசனங்களை கொண்ட சொகுசு பேருந்தாகும்.

                        கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் கொழும்பு றோயல் கல்லூரியின் அதிபர் எம்.வீ.எஸ்.குணதிலக அவர்களிடம் பேருந்தின் திறவுகோலினை வழங்கிவைத்தார்.

                        அதனை தொடர்ந்து பேருந்திலுள்ள வசதிகளை கௌரவ பிரதமர் பார்வையிட்டார்.

                        இப்பேருந்தினை அன்பளிப்பாக வழங்கிய கீர்த்தி மந்த்ரிரத்ன அவர்களுக்கு கௌரவ பிரதமர் நினைவு சின்னமொன்றை வழங்கியதுடன், கொழும்பு றோயல் கல்லூரியின் அதிபர்

                        எம்.வீ.எஸ்.குணதிலக அவர்களினால் கௌரவ பிரதமருக்கும் நினைவு பரிசொன்று வழங்கப்பட்டது.

                        கௌரவ பிரதமர் அவர்கள் நிதியமைச்சராக பணியாற்றிய காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமனாத் சீ தொலவத்த அவர்களின் தலையீட்டின் கீழ் இப்பேருந்திற்கான வரி

                        நிவாரணங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தன. ஓய்வுபெற்ற உதவி அதிபர் அஷோக கலஹிடியாவ இத்திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.

                        குறித்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமனாத் சீ தொலவத்த, கொழும்பு றோயல் கல்லூரியின்

                        துணை அதிபர் கிரிஷாந்த சில்வா, கல்லூரியின் பெற்றோரை பிரதிநிதித்துவப்படுத்தி மஹேஷ் குணரத்ன அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

                          மனித உரிமை
                          Posted in Uncategorized

                          இலங்கை மனித உரிமையில் மோசமான நாடு – கொதிக்கும் அமைச்சர்கள்

                          இலங்கை மந்த உரிமையில் மோசமான நாடு – கொதிக்கும் அமைச்சர்கள்

                          மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இலங்கைப் பிரிவான ‘உலக அறிக்கை 2022’ நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமையை மிகைப்படுத்தப்பட்ட மற்றும் தேவையற்ற எதிர்மறையான வகையில் சித்தரிப்பதாக வெளிநாட்டு அமைச்சு வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளது.

                          மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட சர்வதேச சமூகத்துடன் ஆக்கபூர்வமாக

                          ஈடுபடுவதற்கான கொள்கையை இலங்கை பின்பற்றுகின்றது. எவ்வாறாயினும், குறிப்பாக சவாலான உலகளாவிய பொருளாதார மற்றும் சமூக சூழலின் போது பரபரப்பான மற்றும் பக்கச்சார்பான அறிக்கையிடல் உள்நாட்டு முரண்பாடுகளை தீவிரப்படுத்தி மோசமான

                          நிலைமையைத் தோற்றுவிக்கின்றது. பொறுப்பான, சமநிலையான மற்றும் பாரபட்சமற்ற அறிக்கையிடலின் முக்கியத்துவத்தை நாங்கள் முன்னிலைப்படுத்துகின்றோம்.

                          உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மற்றும் நிறைவேற்றப்பட்ட நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயன்முறையின் மூலம் நிலையான சமாதானத்தை நிலைநாட்டுவதில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற மனித

                          உரிமைகள் பேரவையில் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். எமது சொந்த அரசியலமைப்பு மற்றும் எமது சர்வதேசக் கடமைகளுக்கு இணங்க மனித உரிமைகளை

                          மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் இலங்கை தனது நீண்டகால அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

                          2022 ஜனவரி 18ஆந் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தின் 9ஆவது கூட்டத் தொடரின் தொடக்கத்தில் அதிமேதகு ஜனாதிபதியினால் அண்மையில் இந்தச் செய்தி மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

                          இலங்கை அரசாங்கம் பொருளாதார, சமூக மற்றும் மனித அபிவிருத்தி மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைதல் உட்பட அனைத்து துறைகளிலும் தனது ஆணையை நிறைவேற்றுவதில் அதன் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். அதே நேரத்தில், கோவிட்-19

                          தொற்றுநோயால் ஏற்பட்ட செயற்பாட்டு, பொருளாதார மற்றும் மனிதத் தடைகள் இருந்தபோதிலும், இலங்கை மக்களின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் சர்வதேச ரீதியாக வலியுறுத்தப்பட்ட போருக்குப் பிந்தைய நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித

                          உரிமைகளை வழங்குவதில் அரசாங்கம் முக்கியமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. சுதந்திரமான உள்நாட்டு நிறுவனங்கள், காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகள் அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய ஒருமைப்பாடு மற்றும்

                          நல்லிணக்க அலுவலகம் மற்றும் இலங்கையின் நிலைபேறான அபிவிருத்தி சபை ஆகியன இந்த முயற்சிக்கு முக்கிய உறுதுணையாக உள்ளன. இந்த நிறுவனங்களின் சுதந்திரமான சட்டபூர்வ ஆணைகளை நிறைவேற்றுவதற்காக நிதி மற்றும் ஏனைய ஆதரவுடன் நாங்கள் அதிகாரம்

                          பெற்றுள்ளோம். மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் குறித்த உள்நாட்டு செயன்முறைகளின் மூலம் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பான வழக்கமான புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையிலான இலங்கையின் அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

                          மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு நாங்கள் அளித்த பதிலில், பயங்கரவாத தடைச் சட்டத்திலான திருத்தம், பொறுப்புக்கூறல், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதிகளை

                          விடுவித்தல், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், கோவிட் தொற்றுநோய் மற்றும் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் போன்ற பல துறைகள் தொடர்பான சமீபத்திய மாதங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாங்கள் முன்னிலைப்படுத்தியுள்ளோம்.

                          சர்வதேச செயற்பாட்டாளர்களைப் பொறுத்தமட்டில், எமது சர்வதேச பங்காளிகளான ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேசத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நல்லெண்ணம் மற்றும் ஆலோசனைகளை அரசாங்கம் பெரிதும் மதிப்பதாக நாம்

                          குறிப்பிட்டுள்ளோம். அவர்களுடனான எமது தொடர்ச்சியான தொடர்புகளைத் தொடர்ந்துள்ள அதே வேளையில், இலங்கையுடனான அவர்களது வழக்கமான ஈடுபாட்டையும் ஊக்குவித்துள்ளோம். விஜயங்களை மேற்கொள்ளும் இருதரப்பு உயரதிகாரிகள், ஐக்கிய நாடுகள்

                          சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் விஷேட ஆணையுடையவர்கள் உட்பட பல பரிமாற்றங்களின் போது, நாம் அனைத்து வகையான உள்நாட்டு உரையாடல்களையும் அணுகுவதற்கு வசதிகளை ஏற்படுத்தி, அவர்களது ஊக்கம்,

                          ஆலோசனை மற்றும் கரிசனைகளுக்கு திறந்த நிலையில் இடமளித்துள்ளோம். அபிவிருத்தி நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பல விடயங்களில் நிறுவப்பட்ட தொடர்பு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் எமது உள்நாட்டு சிவில் சமூகப்

                          பங்காளிகளுடனான எமது தொடர்புகளை நாம் குறிப்பாக மதிக்கின்றோம். நிலையான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்களை அடைந்து

                          கொள்வதற்கான எமது முயற்சிகளில் அவர்களை ஈடுபடுத்தியுள்ளோம். ஒரு பரந்த முனையில், நாம் முன்னோக்கிச் செல்லும்போது எம்முடன் பங்காளியாக ஈடுபடுவதற்காக இலங்கையின் புலம்பெயர் குழுக்களுக்கும் நாம் அழிப்பு விடுத்துள்ளோம்.

                          மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிலைப்பாடு தொடர்பாக, 2021 செப்டெம்பர் மாத சபை அமர்வில் நாம் குறிப்பிட்டது போல, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பொறிமுறைகள் மற்றும் சபையுடன் இலங்கை தனது நீண்டகால ஒத்துழைப்பைத் தொடரும். உள்நாட்டு

                          செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான எமது உறுதிப்பாட்டை நாம் வழங்குகின்றோம். வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் குறிப்பிட்டது போல, ‘எமது சவால்களை ஒப்புக்கொள்வதில் நாங்கள் திறந்த

                          நிலையில் காணப்படும் அதே வேளை, பொறுப்பான மற்றும் ஜனநாயக அரசாங்கம் என்ற வகையில், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள், சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான முழு அளவிலான பிரச்சினைகளிலும் உறுதியான முன்னேற்றத்தை

                          அடைந்து கொள்வதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்’. தீர்மானம் 46/1 இல் உள்ள சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையானது சபையில் பிளவுக்கு வழிவகுத்தமையானது

                          தேவையற்றதும், உதவியற்றதும் மற்றும் இலங்கையில் அரசியல்மயமாக்கல் மற்றும் துருவமுனைப்புக்கு வழிவகுக்கும் என இலங்கை கருதுகின்றது

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு உதவிய மு.க.ஸ்டாலின்

                          இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு உதவிய மு.க.ஸ்டாலின்

                          இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

                          இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 20.01.2022 அன்று தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். மீனவர்களது அனைத்துக் கோரிக்கைகளின் மீதும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த முதல்வர், மீனவர்களது கோரிக்கைகள் தொடர்பான கீழ்க்காணும் அறிவிப்புகளை வெளியிட்டார்:

                          1. இலங்கை அரசினால் பறிமுதல் செய்யப்பட்டு தற்பொழுது இலங்கையில் பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள தமிழகத்தைச் சார்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தினை காத்திடும் பொருட்டு, 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் வீதமும், 17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 இலட்சம் வீதமும், மொத்தம் ரூ.5.66 கோடி வழங்கப்படும்.
                          2. கடந்த வடகிழக்கு பருவமழைக்காலத்தில் சேதமடைந்த 105 மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு இழப்பீடாக ரூ.5.66 கோடி வழங்கப்படும்.
                          3. இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களின் விடுதலை குறித்து மீனவர் சங்கப் பிரதிநிதிகள் முதல்வரிடம் வலியுறுத்தினார்கள். கைது செய்யப்பட்ட மீனவர்களில் மீதமுள்ள மீனவர்களை
                          4. விடுதலை செய்ய கடிதம் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் இந்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும், எம்.பி.க்கள் மூலம் வலியுறுத்தியதையும் மீனவ சங்க பிரதிநிதிகளுக்கு முதல்வர் விளக்கி கூறினார்.

                          மேலும் இது தொடர்பாக நாடாளுமன்றக் குழு துணை தலைவர் கனிமொழி எம்.பியை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் நேரம் பெற்று – தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருடன், மீனவ பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று

                          தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலையை விரைவுபடுத்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும்படி முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

                          இந்நிகழ்வில் மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா. ஆர். இராதாகிருஷ்ணன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்

                          கழகத்தின் தலைவர் ந.கௌதமன், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர், காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

                          கூடுதல் தலைமைச் செயலாளர், தெ.சு.ஜவஹர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் கே.சு.பழனிசாமி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

                            கஞ்சா கடத்திய கணவன்
                            Posted in இலங்கை செய்திகள்

                            யாழில் கஞ்சா கடத்திய கணவன் ,மனைவி கைது

                            யாழில் கஞ்சா கடத்திய கணவன் ,மனைவி கைது

                            கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுழிபுரத்தைச் சேர்ந்த தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                            காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவும் கடற்படையும் இணைந்து இன்று நடத்திய தேடுதல் நடவடிக்கையில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

                            மூன்று உரப்பைகளில் பொதியிடப்பட்ட நிலையில் சுமார் 85 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                            சுழிபுரம் பறாளை பகுதியில் உள்ள வீட்டு வளாகத்திலிருந்து கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில் 36 வயதுடைய கணவரும் அவருடைய மனைவியும் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் கூறினர்.

                            சந்தேக நபர்கள் இருவரும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்..

                              தீ குளித்த
                              Posted in Uncategorized

                              வீட்டுக்குள் எரிந்த நிலையில் தாய் மகள் சடலமாக மீட்பு

                              வீட்டுக்குள் எரிந்த நிலையில் தாய் மகள் சடலமாக மீட்பு

                              இலங்கை தர்மபுரம் பகுதியில் உள்ள நாதன் குடியிருப்பு பகுதியில்


                              தாய் மற்றும் அவரது 17 வயது மகள் ஆகியோர் தீயில் எரிந்த நிலையில் சடலங்களாக மீட்க பட்டுள்ளனர்

                              இது கொலையா அல்லது தற் கொலையா என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

                              மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                முல்லைத்தீவில் -கணவனை கொன்று கிணற்றில் வீசிய மனைவி –

                                முல்லைத்தீவில் -கணவனை கொன்று கிணற்றில் வீசிய மனைவி –

                                முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவல் காட்டு கிராமத்தில் பாழடைந்த கிணற்றிலிருந்து 30.12.2020 அன்று மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

                                குறித்த பகுதியில் உயிரிழந்த நபர் தொடர்பிலான விசாரணைகளை முள்ளியளை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எம்.அன்வர்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டனர்.

                                இதனையடுத்து, கொலை குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் நீண்டகாலத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

                                இவர்கள் நேற்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளனர் என முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

                                உயிரிழந்த நபரின் மனைவி, உயிரிழந்தவரின் நண்பர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

                                பொன்னகர் பகுதியினை சேர்ந்த இருவரும் கேப்பாபிலவினை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு

                                கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

                                  கோட்டா அழைப்பு
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  லண்டன் தமிழர் குழுவுடன் இணைந்தது செயல்பட தயார் -கோட்டா அழைப்பு

                                  லண்டன் தமிழர் குழுவுடன் இணைந்தது செயல்பட தயார் -கோட்டா அழைப்பு

                                  இலங்கை எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதுடன், மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கு, ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்துச்

                                  செயற்பட விருப்பம் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதற்காகப் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பம் வழங்குமாறும் லோர்ட் தாரிக் அஹமட்டிடம்

                                  கேட்டுக்கொண்டார்.த உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளன என்று, ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட் (Lord Tariq Ahmad) தெரிவித்தார்.

                                  அதனை மேலும் வலுப்படுத்துவதற்கு, நடைமுறை மற்றும் இலக்குகளை அடையக்கூடிய

                                  அணுகுமுறைகளுடன் முன்னோக்கிச் செல்வதன் மூலம் இலங்கையில் உள்ள அனைத்து மனித உரிமை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

                                  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை, நேற்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாற்றும் போதே, அமைச்சர் தாரிக் அஹமட் இதனைத் தெரிவித்தார்.

                                  தெற்காசியா, ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பொதுநலவாய அமைப்புக்கான இராஜாங்க அமைச்சர் என்ற வகையில், இந்து சமுத்திரப் பிராந்தியம், மத்திய

                                  ஆசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கிடையிலான ஒத்துழைப்புகளை ஏற்படுத்துவதற்கான பல்வேறு துறைகள் சார்ந்த பொறுப்புகள், லோர்ட் தாரிக் அஹமட்டிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.

                                  இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்திவலுத் துறையின் இலக்குகளை அடைவதற்கும் தொழில்நுட்பம்சார் தடைகளை வெற்றிகொள்வதற்கும் உதவுமாறு ஜனாதிபதி விடுத்த

                                  கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த லோர்ட் அஹமட், தனது நாட்டுக்குச் சென்றவுடன் இந்த விடயம் பற்றி கூடிய விரைவில் ஆராய்ந்து, அது தொடர்பான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகத் தெரிவித்தார்.

                                  இலங்கைக்கான முதலீட்டு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும்

                                  எனச் சுட்டிக்காட்டிய அவர், ஐக்கிய இராச்சியத்தில் வாழும் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

                                  இலங்கையின் சுகாதார ஊழியர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பொருளாதாரத் துறைக்கான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும், லோர்ட் உறுதியளித்தார்.

                                  இலங்கை எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதுடன், மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

                                  அதற்கு, ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்துச் செயற்பட விருப்பம் தெரிவித்த ஜனாதிபதி , அதற்காகப் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பம் வழங்குமாறும் லோர்ட் தாரிக் அஹமட்டிடம் கேட்டுக்கொண்டார்.

                                  இலங்கையின் நெருங்கிய மற்றும் நடைமுறை நண்பராக ஒத்துழைக்க, ஐக்கிய இராச்சியம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

                                  ஐக்கிய இராச்சியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 2023 ஆம் ஆண்டில் 75 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இதற்காக ஒரு விழாவை நடத்துவதற்குத்

                                  திட்டமிடப்பட்டுள்ளது. அதில், இரு நாடுகளின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை, கலாசார நிகழ்வுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்தும் வகையிலான நிகழ்வுகளை நடத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

                                  இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் (Sarah Hulton), முதன்மைச் செயலாளர் மேத்யூ டெய்த் (Mathew Deith), லோர்ட் தாரிக் அஹமட், உதவியாளர் இசபெல் ஸ்கொட்

                                  (Isabelle Scott), வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார

                                  அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    மைத்திரியை தமது கட்சியில் இருந்து நீக்க வேண்டும் சந்திரிக்கா முழக்கம்

                                    மைத்திரியை தமது கட்சியில் இருந்து நீக்க வேண்டும் சந்திரிக்கா முழக்கம்

                                    ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டமைக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்

                                    தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

                                    தாம் உருவாக்கிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் அழித்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

                                    ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அழிந்துவிடும் என்பதால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைய வேண்டாம் என இரண்டு வருடங்களாக விடுத்த கோரிக்கைக்கு மைத்திரிபால சிறிசேன

                                    செவிசாய்க்கவில்லை எனவும் அதனை வலியுறுத்தியதால் கட்சியின் அரசியல் குழு மற்றும் ஏற்பாட்டுக் குழுவில் இருந்து தாம் நீக்கப்பட்டதாகவும் குமாரதுங்க தெரிவித்தார்.

                                    தான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூறியதையே தற்போது மைத்திரிபால சிறிசேன மீண்டும் கூறுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

                                    யுத்த காலத்திலும் நாட்டின் பொருளாதாரத்தை சிறப்பாக நிர்வகித்ததாகத் தெரிவித்த குமாரதுங்க, இன்று நாட்டைப் பார்க்கும் போது அழுவதற்கோ சிரிப்பதற்கோ நினைத்துப் பார்க்க முடியாது என்றும் கூறினார்.