Author: நலன் விரும்பி
அமெரிக்க விமானம் – இமயமலை பகுதியில் கண்டுபிடிப்பு
அமெரிக்க விமானம் – இமயமலை பகுதியில் கண்டுபிடிப்பு
சீனாவின் குன்மிங் பகுதியில் இருந்து 1945ம் ஆண்டு 13 பேரை ஏற்றிக்கொண்டு பறந்த அந்த விமானம் அருணாச்சலப் பிரதேச மலைப்பகுதியில் காணாமல் போனது.
இரண்டாம் உலகப்போரின் போது விபத்துக்குள்ளான அமெரிக்க விமானம் – இமயமலை பகுதியில் கண்டுபிடிப்பு
இரண்டாம் உலகப் போரின் போது காணாமல் போன விமானம்
இரண்டாம் உலகப் போரின் போது இந்தியா, சீனா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் நூற்றுக்கணக்கான அமெரிக்க இராணுவ விமானங்கள் காணாமல் போயின.
சீனாவின் குன்மிங்கில் இருந்து 1945 ஆம் ஆண்டு 13 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சி-46 ரக அமெரிக்க விமானம், மோசமான வானிலை காரணமாக அருணாச்சலப் பிரதேச இமயமலைப்
பகுதியில் காணாமல் போனது. அந்த விமானத்தை கண்டு பிடிக்கும் முயற்சியில் அதில் பயணம் செய்த ஒருவரின் மகன் ஈடுபட்டார். நியூயார்க் நகரை சேர்ந்த பில் ஸ்கேர் என்ற அந்த நபர் , விமான தேடுதல் பணியை, அமெரிக்க மலையேற்ற சாகச வீரர் கிளேட்டன் குஹ்லெஸ் இடம் ஒப்படைத்திருந்தார்.
இரண்டாம் உலக போர் விமான பாகங்கள் கண்டு பிடிப்பு
அதன் அடிப்படையில் தனது குழுவினருடன் குஹ்லெஸ் இமயமலை பகுதியில் விமானம் குறித்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். இந்த பயணத்தில் குஹ்லேஸ் மற்றும் உள்ளூர்
வழிகாட்டிகள் குழுவும் இடம் பெற்றிருந்தது. இமயமலை உச்சியில் உறைபனி ஆபத்து நிறைந்த பகுதியில் முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கடும் முயற்சிக்கு பின்னர் பனி மூடிய
பகுதியில் கிடந்த போர் விமான பாகத்தை இந்த குழு கண்டுபிடித்துள்ளது. இடிபாடுகளுக்கு இடையே விமான வால்பகுதியில் இருந்த குறியீட்டு எண்ணைக் கொண்டு அடையாளம் காண முடிந்தததாக கிளேட்டன் குஹ்லெஸ் தெரிவித்துள்ளார்.
சிதைந்த நிலையில் எஞ்சியிருந்த விமான பாகங்களில் மனிதர்கள் இருந்ததற்கான எந்த அடையாளங்களும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் உலகப்போரில்
பயன்படுத்தப்பட்ட விமானம் 77 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது வரலாற்று ஆய்வாளர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டில் விமானம் குறித்த தேடுதல் வேட்டையின் போது
பனிப்புயலில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் எதையும் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை
ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை
தமிழ் திரையுலகில் கண்டேன் படத்தின் மூலமாக அறியப்பட்ட நடிகை ராஷ்மி கவுதம் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவிவருகிறது.
ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை ராஷ்மி கவுதம்?
ராஷ்மி கவுதம்
நடிகர் சாந்தனு நடித்து வெளியான கண்டேன் படத்தில் அவருக்கு இணையாக நடித்தவர் நடிகை ராஷ்மி கவுதம். இவர் தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.
தற்போது நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் ’போலா சங்கர்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட உள்ளார்.
ராஷ்மி கவுதமும் தெலுங்கு நடிகர் சுடிகள்ளி சுதீரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகி வந்தன. ஆனால், இதனை மறுத்த இருவரும் நாங்கள் நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம்
என்றனர். இந்நிலையில், தொழில் அதிபர் ஒருவரை நடிகை ராஷ்மி கவுதம் ரகசிய திருமணம்
செய்துகொண்டதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி வருகிறது. இதுபற்றி ராஷ்மி எந்தவொரு விளக்கமோ மறுப்போ தெரிவிக்கவில்லை.
ராஷ்மி கவுதம்
ராஷ்மி கவுதம்
சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் பகிர்ந்து வரும் ராஷ்மி கவுதம், அவருடைய
திருமணத்தை ஏன் மறைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மல்லாவியில் கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபன் சடலம் மீட்பு
மல்லாவியில் கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபன் சடலம் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர் ஒருவர் அவரின் வீட்டு
வளவினுள் உள்ள கிணற்றினுள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மல்லாவி தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த கணேசன் புஸ்பராஜ் (23) என்ற இளைஞரே சடலமாக
மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் கொலையா?தற்கொலையா என்ற கோணத்தில் மல்லாவி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரிந்த பிறகு ஒரே ஹோட்டலில் தங்கிய தனுஷ்–ஐஸ்வர்யா!
பிரிந்த பிறகு ஒரே ஹோட்டலில் தங்கிய தனுஷ்–ஐஸ்வர்யா!
நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அண்மையில் அறிவித்தனர்.
பிரிவை அறிவித்த பிறகு ஐதராபாத்தில் பிஸியாக இருக்கும் ஒரே ஹோட்டலில் இருவரும் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது பற்றி விசாரித்த போது, பிரிவை அறிவித்த பிறகு அவர் மீண்டும் தனது வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனராம்.
அந்த வேலைகளுக்காக இருவரும் ஐதராபாத்தில் தங்கி இருக்கிறார்களாம். தனுஷ் நடித்த 3 உள்ளிட்ட சில படங்களை இயக்கி உள்ள ஐஸ்வர்யா தற்போது மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பி உள்ளாராம்.
லேட்டஸ்ட் தகவலின்படி காதலர் தினத்திற்காக ரொமான்டிக் பாடல் ஒன்றை இயக்கி வருகிறாராம் ஐஸ்வர்யா. இதற்கான ஷுட்டிங் ஜனவரி 25ம் திகதி துவங்கி 27ம் திகதி நிறைவடைய உள்ளதாம்.
இதே போல் தனுஷும் மாறன், திருச்சிற்றலம்பலம், வாத்தி உள்ளிட்ட பல படங்களில் ஒரே சமயத்தில் நடித்து வருகிறார்.
இதற்கான ஷுட்டிங்கிற்காக அவரும் ஐதராபாத் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா – தனுஷ் இருவருமே தங்களின் வேலைகளில் பிஸியாக இருப்பதாக கூறப்பட்டது.
ஆசை காட்டி மோசம் செய்த பெண் -இப்படியும் கொள்ளை
ஆசை காட்டி மோசம் செய்த பெண் -இப்படியும் கொள்ளை
பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவதாகக் கூறி, முதியவர் ஒருவரை தன் வலைக்குள் வீழ்த்திய கர்ப்பிணி பெண்ணொருவர், அந்த முதியவரிடம் இருந்த பணம் உள்ளிட்ட உடமைகளை அபகரித்துச் சென்றுள்ளார்.
பணம், கையடக்கதொலைபேசி, வங்கி அட்டை, உள்ளிட்டவற்றை அப்பெண் கொள்ளையிட்டு சென்றுள்ளார். அப்பெண்ணுக்கு உதவியதாகக் கூறப்படும், அப்பெண்ணின் முன்னாள் காதலன், கர்ப்பிணிப் பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம், பேலியகொடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. களனிப் பிரதேசத்தில் வைத்தே, அவ்விருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்படும் போது, அவ்விருவரிடமிருந்தும் 10 கிராம் 425 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொருட்களை இழந்த முதியவர், பெலியகொடை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலியல் தேவைகளைப் பூர்த்திச்செய்வதாக கூறிய கர்ப்பிணி பெண், அந்த முதியவரிடம்
விருப்பத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். அதன்பிரகாரம், அம்முதியவருடன் செல்வதற்கு இன்றைக்கு இரண்டொரு நாட்களுக்கு முன்னர், அப்பெண் இணங்கியுள்ளார்.
தன்னுடைய கணவனுக்கு களவாக இந்த வேலையைச் செய்வதாக தெரிவித்துள்ள அந்த கர்ப்பிணி
பெண், தூர இடங்களுக்குச் செல்லமுடியாது. அருகிலேயே செல்வோமென முதியவரை அழைத்துக்கொண்டு பேலியகொட, மேவெல்ல, ஆற்றுக்கரையோரத்துக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்திருந்த நபரொருவர் தன்னுடைய மனைவியுடன் இருந்ததாகக் கூறி,
முதியவரை அச்சுறுத்தி, அவர் மீது தாக்குதல் நடத்தி, மேலே குறிப்பிட்ட பொருட்களை எல்லாம் கொள்ளையடித்துக்கொண்டு சென்றுள்ளார். அவ்விளைஞனுடன் அப்பெண்ணும் சென்றுவிட்டார்.
பொலிஸ் விசாரணைகளில் அவ்விளைஞன், அப்பெண்ணின் முன்னாள் காதலன் என கண்டறியப்பட்டுள்ளது. இவிருவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞனிடமிருந்து 5230 மில்லிகிராம் ஹெரோய்னும், கர்ப்பிணி பெண்ணிடமிருந்து 5195 மில்லிகிராம் ஹெரோய்னும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் முதியவரிடமிருந்து
கொள்ளையடிக்கப்பட்ட கையடக்க தொலைபேசி மற்றும் வங்கி அட்டை ஆகியன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பல்வேறான கொள்ளைகளுடன் தொடர்புடைய இவ்விருவருக்கு எதிராக, புதுக்கடை, மஹர ஆகிய நீதிமன்றங்களில் திறந்த
பிடிவிறாந்துகள் பிறக்கப்பட்டுள்ளன. கர்ப்பிணிப் பெண்ணுக்கு எதிராக ஐந்து பிடிவிறாந்துகளும், இளைஞனுக்கு எதிராக ஏழு பிடிவிறாந்துகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் எகிறும் வாகன விபத்து – மூவர் மரணம்
இலங்கையில் எகிறும் வாகன விபத்து – மூவர் மரணம்
இலங்கையில் நாள்தோறும் வாகன விபத்து அதிகரித்து செல்கிறது ,நாடளாவிய ஈதியில் ஏற்பட்ட
இந்த விபத்துகளில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர்
மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர் .சாரதிகளின் அலட்சிய போக்கே இந்த
விபத்துக்கு கரணம் என தெரிவிக்க படுகிறது
தீயில் எரிந்த வீடு – சொத்துக்கள் நாசம்
தீயில் எரிந்த வீடு – சொத்துக்கள் நாசம்
இலங்கை தயக்கமா பகுதியில் உள்ள குடியிருப்பு திட்டம் ஒன்றில் உள்ள வீடொன்றில் திடீரென தீ
பற்றியது ,இதில் அந்த வீடு முற்றாக எரிந்து அழிந்துள்ளது
இதன் போது அந்த வீட்டில் இருந்த தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து அழிந்துள்ளன
,எனினும் அங்கிருந்த ஐவர் தப்பித்துள்ளனர் ,மேற்படி தீ விபத்து தொடபிள் விசாரணைகள்
ஆரம்பிக்க பட்டுள்ளன
நீரில் மூழ்கிய நான்கு பெண்கள் – இருவரை காணவில்லை
நீரில் மூழ்கிய நான்கு பெண்கள் – இருவரை காணவில்லை
இலங்கை வெலிகம பகுதியில் உள்ள பீச்சில் நீராடிய நான்கு இளம் பெண்களில் இருவர் மீட்க
பட்டுள்ளனர்
மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்
நீரில் அடித்து செல்ல பட்ட இருவரையும் தேடி கண்டு பிடிக்கும் பணியில் சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர்
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
உலகில் சுற்றுலாப் பயணங்களைமேற்கொள்வதற்கு பொருத்தமான ஐந்து நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.
தற்போது சுற்றுலாப் பயணிகளின்வருகை வெகுவாக அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் அமைச்சர்பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாரிய பின்புலமாகும். தடுப்பூசி விடயத்தில் இலங்கை பெரும்பாலும்முன்னணியில் காணப்படுகின்றது.
பின்னடைவு கண்டுள்ள நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில்அனைத்துக் கட்சிகளினதும்
ஒத்துழைப்பை அதிகரிப்பதன் தேவையையும் அமைச்சர் பிரசன்னரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
கவர்ச்சி உடையில் கலக்கும் இலியானா
கவர்ச்சி உடையில் கலக்கும் இலியானா
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை இலியானாவின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ஹிட் அடித்து வருகிறது.
கவர்ச்சி உடையில் கலக்கும் இலியானா… வைரலாகும் புகைப்படம்
இலியானா
நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’
திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். மேலும் தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
இலியானாஇலியானா
இவர் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது அவருடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இலியானா, தற்போது அவருடைய புதிய கவர்ச்சி
புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.
இலியானா
இலியானா
இவர் தற்போது இந்தி படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஐ எஸ் வெறியாட்டம் 120 பேர் படுகொலை
ஐ எஸ் வெறியாட்டம் 120 பேர் படுகொலை
சிரியாவின் Hasaka பகுதியில் ஐ எஸ் படிகளிற்கும் இராணுவத்திற்கும் இடையில் ஏற்பட்ட மோதலில்
இரு தரப்பு படைகள் உள்ளிட்ட நூற்றி இருபது பேர் பலியாகியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது
தொடர்ந்து மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளது ,தொடரும் பத்து வருடங்களுக்கு மேலான
மோதலில் 30 ஆயிரம் மக்கள் அகதிகளாக இடம்பெயரந்துள்ளமை குறிப்பிட தக்கது
பிரான்ஸ் இராணுவ முகாம் மீது தாக்குதல் – 20 படைகள் காயம்
பிரான்ஸ் இராணுவ முகாம் மீது தாக்குதல் – 20 படைகள் காயம்
மாலியில் அமைந்துள்ள பிரான்ஸ் இராணுவ முகம் மீது போராளிகள் நடத்திய தாக்குதலில்
சிக்கி அந்த முகாம் பலத்த சேதமடைந்துள்ளது
மேலும் அங்கிருந்த கூட்டு படைகளை சேர்ந்த இருபது இத்தாலிய இராணுவத்தினர்
காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்
எனினும் இழப்பு இதைவிட பலமடங்கு என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன
வெடித்து சிதறும் அமெரிக்கா இராணுவ வண்டிகள் – துரத்தி தாக்கும் போராளிகள்
வெடித்து சிதறும் அமெரிக்கா இராணுவ வண்டிகள் – துரத்தி தாக்கும் போராளிகள்
வெடித்து சிதறும் அமெரிக்கா இராணுவ வண்டிகள் – போராளிகள்
ஈராக் பப்பில் பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவ வண்டிகளை
இலக்கு வைத்து போராளிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு அழிந்துள்ளது
இதில் அமெரிக்கா படைகளிற்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை
,பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என
ஈரான் அறிவித்த நிலையில் மேற்படி தாக்குதல்கள் தொடர்கின்றமை குறிப்பிட தக்கது
சீனாவில் பாரிய நில நடுக்கம் – மக்கள் ஓட்டம்
சீனாவில் பாரிய நில நடுக்கம் – மக்கள் ஓட்டம்
இன்று சீனாவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த நில நடுக்கத்தின் அளவு 5.8 ஆக
பதிவாகியுள்ளது
எனினும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை
மக்கள் பீதியில் ஓடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
பேரூந்து டிப்பர் மோதல் – ஒருவர் மரணம் – 10 பேர் காயம்
பேரூந்து டிப்பர் மோதல் – ஒருவர் மரணம் – 10 பேர் காயம்
இலங்கை அரச பேரூந்து ஒன்று குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ளது
மேற்படி பேரூந்து டிப்பர் ஒன்றுடன் மோதி விபத்தில் சிக்கியதில் சம்பவ இடத்தில ஒருவர் பலியானார்
மேலும் பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்
பாதிக்க பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
இந்திய மீனவர்கள் 105 படகுகளை ஏலம் விடும் சிங்கள அரசு
இந்திய மீனவர்கள் 105 படகுகளை ஏலம் விடும் சிங்கள அரசு
இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைதான
இந்திய மீனவர்கள் படகுகளை சிங்கள அரசு பறிமுதல் செய்தது
மேற்படி படகுகளை வரும் திங்களில் ஏலம்விட உள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது
காதல் தகராறு – கழுத்து வெட்டி நபர் கொலை
காதல் தகராறு – கழுத்து வெட்டி கொலை
இலங்கை கடவத்த பகுதியில் 19 வயதுடைய நபர் ஒருவர் கழுத்து வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்
இருவருக்கு இடையில் எழுந்த காதல் தகராரே இந்த கொலையில் முடிந்துள்ளது
குறித்த நபரின் கழுத்தை வெட்டிய நபர் கைது செய்ய பட்டுள்ளார்
இறந்த நபரது சடலம் ராகம வைத்திய சாலையில் வைக்க பட்டுள்ளது ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இலங்கையில் வேகமாக பரவும் புதிய வைரஸ்
இலங்கையில் வேகமாக பரவும் புதிய வைரஸ்
இலங்கையில் கடந்த தினங்களில் மட்டும் 78 பேர் புதிய ஓமிக்கிறோன் நோயினால் பாதிக்க பட்ட
நிலையில் அடையாளம் காண பட்டுள்ளனர்
இவ்வாறு கணபட்டவர்கள் தனிமை படுத்த பட்டு சிகிச்சை அளிக்க பட்டு வருவதக தெரிவிக்க படுகிறது
தனியார் ஊழியர்க்ளுக்கும் 5000 ரூபா வழங்கும் அரசு
தனியார் ஊழியர்க்ளுக்கும் 5000 ரூபா வழங்கும் அரசு
இலங்கையில் அரச அனுசரணையுடன் இயங்கி வரும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும்
ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அரசு தீர்மானித்துள்ளது
இவை எதிர்வ்ரும் நாட்களில் வழங்க படவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது அந்த ஊழியர்களுக்கு
மகிழ்ச்சியை தருவித்துள்ளது
மனைவிக்கு போன் அடித்த வாலிபரை நிர்வாணமாக்கி இழுத்து செல்லும் தம்பதிகள்
மனைவிக்கு போன் அடித்த வாலிபரை நிர்வாணமாக்கி இழுத்து செல்லும் தம்பதிகள்
இலங்கை சியம்பலாண்டுவ பகுதியில் வாலிபர் ஒருவர் தனது மனைவிக்கு நாள் தோறும் போன்
செய்து தொந்தரவு கொடுத்து வந்துள்ள்ளார்
மேற்படி வாலிபரை கைது செய்து தாக்கிட திட்டம் வகுக்க பட்டது ,அதன் படி மனைவி வாலிபரை
லாவகமாக பேசி வீட்டுக்கு அழைத்துள்ளார் ,அங்கு வந்த வாலிபரை கயிற்றால் கட்டி நிரணவமாக இழுத்து செல்லும் காட்சிகள் வைரலாக பரவி வருகிறது
மேற்படி குற்ற செயலை புரிந்த தம்பதிகள் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளனர்
















