Author: நிருபர் காவலன்
துருக்கி மீது போர் தொடுக்க -சிரியாவில் குவிக்க படும் ரஷியா இராணுவம்
துருக்கி மீது போர் தொடுக்க -சிரியாவில் குவிக்க படும் ரஷியா இராணுவம்
சிரியாவின் எல்லை கடந்து துருக்கிய படைகள் பெருமளவு ஆயுத தள பாடங்களுடன் குவிக்க பட்டுள்ளன .
இட்லி பகுதியில் எப்பொழுதும் போர் வெடிக்கலாம் என்ற பதட்டம் தொடர்கிறது ,.
ரசியா மற்றும் சிரியா படைகளது இராணுவ விமானங்கள் மற்றும் கனரக ஆட்டி
லொறிகள் ,ஏவுகணைகள்,துருப்புக்கள் என்பன இட்லியை அண்மித்த பகுதியில் பெருமளவு குவிக்க பட்டுள்ளன
துருக்கியின் அத்து மீறிய நுழைவுக்கு பெருமடியாக இந்த பெரும் போரை தொடுக்க சிரியா ரசியா படைகள் தயாராகி வருகின்றன
வரும் மணித்தியாலங்களில் எவ்வேளையும் இங்கு பெரும் போர் வெடிக்கலாம்
எனவும் இது துருக்கிய படைகளிற்கு பெரும் அழிவை ஏற்படுத்தும் என அடித்து கூறலாம்
வலிந்து தாக்குதலை மேற்கொள்ளும் முகமாக துருக்கிய இராணுவத்தினர்
படை குவிப்பை நடத்தின , அதன் விளைவே இந்த போர் வெடித்து பறக்க போகிறது என கூறலாம்
பொல்லு கொடுத்து அடி வாங்கிய கதையாக துருக்கியின் நிலை வரும் காலங்களில் மாற போகிறது ,
துருக்கிக்கு அமெரிக்கா ,இஸ்ரேல் ஆதரவாக உள்ளன ,சிரியாவுக்கு ரஷியா ,ஈரான் ஆதரவாக உள்ளன
அப்படி என்றால் உலக போர் இங்கு ஆரம்பிக்க பட போகிறது அல்லது
அதற்கான ஓத்திகை இங்கே பார்க்க படுகிறது என்பதை கணித்து கொள்ளலாம்

உடல் பருமன் கர்ப்பமடைவதை பாதிக்குமா?
உடல் பருமன் கர்ப்பமடைவதை பாதிக்குமா?
உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள்
அதிகமாக ஏற்பட்டு, இதன் மூலமாக பெண்களுக்கு கருத்தரிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக அமைகிறது.
கருமுட்டைகள் உற்பத்தி திறன், உடல் பருமன் அதிகமாவதால் ஹார்மோன்
மாற்றங்கள் ஏற்பட்டு கருமுட்டைகள் வளர்வதில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
உடல் பருமன் அதிகரிப்பதால் கருமுட்டை வளர்ச்சி, கருமுட்டை முதிர்ச்சி, கருமுட்டை வெளியாக்கும் திறன், கருமுட்டை
கருவாக்கும் திறனை பாதித்து குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது.
இதற்கு முக்கிய காரணம் உடல் எடை அதிகமாவதால் பெண்களுக்கு இன்சுலின் சுரப்பில் மாறுபாடு ஏற்பட்டு கருமுட்டை
வளர்ச்சி, கரு வெளியாக்கும் திறன், கருமுட்டை உருவாக்கும் திறன் அனைத்தும் பாதிக்கப்படுகிறது.
உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள்
அதிகமாக ஏற்பட்டு, இதன் மூலமாக பெண்களுக்கு கருத்தரிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக அமைகிறது.

கொரோனா சாதி மதம் பார்க்காமல் கொல்கிறது பிரபல நடிகை
கொரோனா சாதி மதம் பார்க்காமல் கொல்கிறது பிரபல நடிகை
கொரோனா சாதி, மதம் பார்க்காமல் கொல்வதாகவும், அதற்கு எதிரான போரில் இணைந்து செயல்படுவோம் என்றும் நடிகை ராஷி கன்னா கூறியுள்ளார்.
மதசார்பற்ற கொரோனா…. சாதி, மதம் பார்க்காமல் கொல்கிறது –
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை
அளிக்கப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
டெல்லியில் சமீபத்தில் நடந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பிய பலருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது பரிசோதனையில்
உறுதியானது. இதையடுத்து அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தானாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும்படி மத்திய, மாநில அரசுகள் வற்புறுத்தி உள்ளன.
ராஷி கன்னா
இந்த நிலையில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள
ராஷிகன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 வைரஸ்
மதசார்பற்றது. மதத்தின் அடிப்படையில் மக்களை அது பிரிக்கவும் இல்லை. சாதி, மதம், சொத்து போன்ற எதையும் பார்க்காமல்
அவர்களை தொற்றிக்கொள்கிறது. கொல்லவும் செய்கிறது. எனவே ஒருவரையொருவர்
குற்றம் சொல்வதை விடுத்து கொரோனாவுக்கு எதிரான போரில் இணைந்து செயல்படுவோம்.
இவ்வாறு ராஷிகன்னா கூறியுள்ளார்.

கமல் மீது காயத்ரி ரகுராம் பாய்ச்சல்
கமல் மீது காயத்ரி ரகுராம் பாய்ச்சல்
பிரதமர் மோடியை விமர்சித்து கடிதம் எழுதிய கமல் மீது காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கமல் மீது காயத்ரி ரகுராம் பாய்ச்சல்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன்
இருப்பதை காண்பிக்கும் விதமாக விளக்கேற்ற சொன்ன பிரதமர் மோடியை விமர்சித்து கடிதம் எழுதினார்.
அதில் ‘எண்ணெய் இல்லை; விளக்கேற்ற முடியுமா?. உங்கள் தொலைநோக்கு பார்வை தோற்றுவிட்டது. கடந்த இரு முறை நாட்டு
மக்களுக்கு உரையாற்றிய நீங்கள் இந்த கடினமான சூழலில் பிரச்னைகளை சந்திக்கும் மக்களை சமாதானபடுத்தும்
முயற்சியில் இறங்கினீர்கள். தலைமேல் கூரையே இல்லாதோரின் நிலை என்னவாவது? நம் சமூகத்தில் அதிகமாக இருக்கும் ஏழை
மக்களை புறக்கணித்துவிட்டு பால்கனி மக்களுக்காக இயங்கும் அரசாக நீங்கள் உள்ளீர்கள்.’ என எழுதி இருந்தார்.
இதனை விமர்சித்து பா.ஜனதாவை சேர்ந்த காயத்திரி ரகுராம் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: நீங்கள் ஏன் சீன அதிபர்
ஜின்பிங்குக்கும், தப்லிக் இ ஜமாத்துக்கும் கடிதம் எழுதி அவர்களின் தோல்வியை சுட்டிக்காட்டக்கூடாது? அரசின் உத்தரவை மதிக்காத,
கீழ்படியாமல் இருக்கும் பொறுப்பற்ற குடிமக்களுக்கு கடிதம் எழுதுங்கள். தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர்
தோல்வியடைந்தார்கள் என கூறுகிறீர்களா? தமிழக எம்.எல்.ஏ., எம்.பி.,க்களுக்கு முதலில் கடிதம் எழுதி அவர்களிடம் முறையிடுங்கள்.
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவது ஒரு டிரெண்ட் ஆகி விட்டது. நேற்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் ஒற்றுமையை
காட்டினார்கள். அதில் நீங்கள் பங்கேற்கவில்லை என உங்களுக்கு உறுத்தவில்லையா? மத்திய மாநில அரசுகள் கடுமையாக
உழைத்து வருகின்றன. மேம்போக்காக எழுதாமல், உரிய தகவல்களோடு எழுதுங்கள். இவ்வாறு அவர் டுவிட்டரில் கமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நடிகையின் குடியிருப்புக்கு சீல் வைத்த அதிகாரிகள்
நடிகையின் குடியிருப்புக்கு சீல் வைத்த அதிகாரிகள்
பிரபல இந்தி நடிகை வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அதிகாரிகள் சீல் வைத்திருக்கிறார்கள்.
இந்தி நடிகையின் குடியிருப்புக்கு சீல் வைத்த அதிகாரிகள்
அங்கிதா லோகந்தே
பிரபல இந்தி நடிகை வசிகங்கனா ரனாவத் நடித்த ஜான்சி ராணி லட்சுமி பாய் வாழ்க்கை வரலாற்று படமான மணிகர்னிகாவில்,
ஜால்காரிபாய் எனும் போராளி வேடத்தில் நடித்தவர் நடிகை அங்கிதா லோகந்தே. டைகர் ஷெரப்பின் பாகி 3 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அங்கிதா வசித்து வருகிறார். அந்த குடியிருப்பில் உள்ள ஒருவருக்கு கொரோனா
நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டிற்கு சென்று திரும்பியதால் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவருக்கு தனிமை வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வரும் அதிகாரிகள், அங்கிதா வசித்து வரும் அடுக்குமாடி
குடியிருப்பை தனிமைப்படுத்தி சீல் வைத்துள்ளனர். மேலும், அந்த அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வரும் மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

Yemeni நாட்டின் மீது சவூதி விமானங்கள் அகோர குண்டு தாக்குதல்
Yemeni நாட்டின் மீது சவூதி விமானங்கள் அகோர குண்டு தாக்குதல்
எமன் நாட்டின் Marib, Habwah Al-Shaaf in Al-Jawf , Nim,பகுதிகள் மீது
சவூதி நாட்டி போர் விமானங்கள் இருபதுக்கு மேற்பட்ட தடவை அகோர குண்டு தாக்குதலை நடத்தியுள்ளன .
சவுதியின் எண்ணெய் கூதங்கள் மீது குறித்த நாட்டு ஆயுத படைகள் ஏவுகணை தாக்குதலை நடத்தி இருந்தன
அதற்கு பதிலடியாக சவூதி இந்த தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது
கொரனோ வைரஸ் மக்களை உள்நாட்டில் கொன்று குவித்து வரும் நிலையில்
மறுபுறத்தே சவூதி இந்த யுத்த களத்தை திறந்துள்ளது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
தமது மக்கள் மீது அக்கறை கொள்ளாது ,நாடுகள் மீது படையெடுப்பை
நடத்துவதில் செல்வந்த நாடுகள் முனைப்பு காட்டுவதை மேற்படி சம்பவங்கள் எடுத்து காட்டுகின்றன

கொரோனாவில் இருந்து மீண்டார் பாடகி கனிகா கபூர்
கொரோனாவில் இருந்து மீண்டார் பாடகி கனிகா கபூர்
பிரபல இந்தி திரைப்பட பாடகி கனிகா கபூர், 6-வது முறையாக பரிசோதனை
செய்ததில், கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி ஆகியுள்ளது.
கொரோனாவில் இருந்து மீண்டார் பாடகி கனிகா கபூர்
கனிகா கபூர்
பிரபல இந்தி திரைப்பட பாடகி கனிகா கபூர், லண்டனுக்கு சென்றுவிட்டு இந்தியா திரும்பிய நிலையில், வீட்டில் தன்னை
தனிமைப்படுத்திக் கொள்ளாமல் 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நட்சத்திர ஓட்டலிலும் தங்கி இருந்தார். பின்னர்
அவருக்கு உடல் நிலை குன்றியதால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதையடுத்து லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன்
நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள்.
கனிகாவை கைது செய்ய வேண்டும் என்றும் சிலர் வற்புறுத்தினர்.
கனிகா கபூர்
கொரோனா நோயாளிகளுக்கு 48 மணி நேரத்துக்கு ஒருமுறை பரிசோதனை நடத்தப்படும். கனிகாவுக்கு 5 முறை பரிசோதனை
செய்தும் கொரோனா தொற்று இருப்பதையே உறுதிப்படுத்தியது. தற்போது 6-வது முறையாக பரிசோதனை செய்தனர்.
அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை முடிவுகள் வெளிப்படுத்தின.
இதையடுத்து அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். வீட்டிலேயே
ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் கனிகா கபூருக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

இதை செய்தால் கொரோனாவை எளிதில் ஜெயிக்கலாம் – தமன்னா
இதை செய்தால் கொரோனாவை எளிதில் ஜெயிக்கலாம் – தமன்னா
தமிழில் பேசி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ள தமன்னா, இதை செய்தால்
கொரோனாவை எளிதில் ஜெயிக்க முடியும் என கூறியுள்ளார்.
இதை செய்தால் கொரோனாவை எளிதில் ஜெயிக்கலாம் – தமன்னா
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இதை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு
வீட்டில் முடங்கி உள்ளனர். சினிமா படப்பிடிப்புகள் ரத்தானதால் நடிகர்-நடிகைகள் வீட்டில் இருக்கிறார்கள்.
ஊரடங்கை மீறி சிலர் வெளியே சுற்றவும் செய்கின்றனர். அவர்களால்
கொரோனா மேலும் பரவலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
அவர்களுக்கு அறிவுரை சொல்லும் வகையில் நடிகர்-நடிகைகள் பலர் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை தமன்னா வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:- “நம்மால் கோவிட்-19 வைரசை எளிதாக
ஜெயிக்க முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது சின்ன சின்ன விஷயங்கள்தான்.
நாம் அனைவரும் இந்த நேரத்தில் வீட்டில்தான் இருக்க வேண்டும்.
தமன்னா
இப்போது அதுதான் நமக்கு பாதுகாப்பு. கொரோனா வைரசிடம் இருந்து ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது நமது கையில்தான்
இருக்கிறது. எனவே அரசாங்கம் சொல்வதை கேளுங்கள். சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். விலகி நின்று
ஒன்றிணைவோம். கொரோனா வைரசை ஒழிப்போம்”. இவ்வாறு தமன்னா கூறியுள்ளார்.
இந்த வீடியோவில் அவர் தமிழில் பேசி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் ரஜினி, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன்
கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் ரஜினி, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன்
கொரோனா விழிப்புணர்வுக்காக ரஜினி, அமிதாப், சிரஞ்சீவி நடித்த குறும்படம் இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் ரஜினி, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன்
அமிதாப்பச்சன், ரஜினி
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. மிகப்பெரிய அச்சுறுத்தலாக
உருவாகியிருக்கும் கொறோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சினிமா பிரபலங்களும் இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் குறும்படம் ஒன்றின் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நடிகர்கள் அமிதாப்
பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் முன்வந்துள்ளனர் . இந்த குறும்படத்திற்கு ‘ஃபேமிலி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
சிரஞ்சீவி
ஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, உடல் நலனைப் பேணுவது, வீட்டில் இருந்து பணிபுரிவது, சமூக விலகல்
உள்ளிட்ட விஷயங்களை பற்றி பேசும் இப்படத்தை ப்ரசூன் பாண்டே என்பவர் இயக்கியுள்ளார்.
இக்குறும்படம் இன்று (06.04.20) இரவு 9 மணி சோனி டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

தனது ஓட்டலில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கிய சூரி
தனது ஓட்டலில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கிய சூரி
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் சூரி, தனது ஓட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கியுள்ளார்.
தனது ஓட்டலில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கிய சூரி
‘கொரோனா வைரஸ்’ ஒட்டுமொத்த உலகையும் மிரட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அரசு பிறப்பித்துள்ள
ஊரடங்கால் பல்வேறு துறையினரும் வீட்டில் முடங்கி உள்ளனர். அந்த வகையில் பசி, தூக்கம் மறந்து வேலை செய்து வந்த பிரபல
நடிகர்-நடிகைகளுக்கும் கட்டாய ஓய்வு கிடைத்துள்ளது. இந்த ஒய்வு நேரத்தை
அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் செலவழித்து வருகின்றனர்.
இதுகுறித்து நகைச்சுவை நடிகர் சூரி கூறியதாவது: “மனைவி குழந்தைகளுடன் பேசக்கூட நேரம் இல்லாமல், ஓடி ஓடி உழைத்துக்
கொண்டிருந்த எனக்கு பயம் கலந்த ஓய்வு கிடைத்து இருக்கிறது. இந்த ஓய்வில், வீட்டு வேலைகளில் மனைவிக்கு எப்படியெல்லாம்
உதவ முடியுமோ, அப்படியெல்லாம் உதவுகிறேன். குழந்தைகளை குளிப்பாட்டி விடுகிறேன்.
சாப்பிட வைக்கிறேன். ஊரில் இருக்கும் உறவினர்களிடம் போன் மூலம் பேசி, நலம் விசாரிக்கிறேன்.
பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வீட்டை விட்டு வெளியே போகாதீர்கள்… அன்னியர்களை வீட்டுக்குள் விடாதீர்கள்
என்று கேட்டுக்கொள்கிறேன். நான் நடத்தி வரும் ஓட்டல்களில், மொத்தம் 350 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் விடுமுறை கொடுத்து விட்டேன். அவர்களின்
சம்பளத்தில் எந்த பிடித்தமும் செய்யாமல், முழு சம்பளத்தையும் கொடுத்து விட்டேன்.
இதேபோல் வறுமையில் வாடும் நாடக நடிகர்-நடிகைகளுக்கு நடிகர் சங்கம் மூலம்
ரூ.1 லட்சம் கொடுத்து இருக்கிறேன். மூன்றாம் உலகப்போர் வந்தது போல் ஒரு
அச்சத்தை கொரோனா ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் எல்லோரும்
பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

194 நாட்டு மருத்துவ மனை கணணிகளை செயலிழக்க வைத்த கைக்கிங் திருடர்கள்
194 நாட்டு மருத்துவ மனை கணணிகளை செயலிழக்க வைத்த கைக்கிங் திருடர்கள்
உலகில் 194 நாடுகளின் மருத்துவ மனைகளில் உள்ள கணணிகளுக்குள் மிக பெரும் கணனி கைக்கிங் திருடர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .
இவ்வாறு பிரிட்டனில் உள்ள மருத்துவ மனையின் கணணிகளுக்கும் சேதங்கள் ஏற் பட்டுள்ளனவாம் .
மருத்துவர்கள் பாவனைக்கு உட்படுத்த படும் கணனிகளை முற்றாக செயல் இழக்க வைக்கும் மிக பெரும் கைக்கிங் இவர்கள் புரிந்துள்ளனர் என இண்டர்போல் தெரிவித்துள்ளது
அது தவிர அந்த நாடுகளில் உள்ள சாதரண மக்களின் கணணிகளும் இவ்வாறு சேதமாக்க பட்டுள்ளன ,
கொரனோ ,மற்றும் கோவிட் 19 என்ற பெயர்களை பாவித்தும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன
எனேவ இவ்வாறான இணைய இணைப்புக்களை தேவையற்று திறக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இதே போல கடந்த ஆண்டு 150 நாடுகளுக்கு மேற்பட்டவை பாதிக்க பட்டு இருந்தன .
அப்பொழுது அந்த தாக்குதலை வடகொரியா மேற்கொண்டு இருந்ததாக தெரிவிக்க பட்டிருந்தமை குறிப்பிட தக்கது
எனவே மக்களே உசார் …எச்சரிக்கை ..!
இந்த தகவலை உங்களை நண்பர்கள் தப்பிக்க உடனே தெரிய படுத்துங்கள் ,
warning about malicious COVID-19 related cyber activity.

அமெரிக்கா தாக்குதல் அச்சம் – கடல் கரை பகுதியில் ஏவுகணைகளை குவிக்கும் ஈரான்
அமெரிக்கா தாக்குதல் அச்சம் – கடல் கரை பகுதியில் ஏவுகணைகளை குவிக்கும் ஈரான்
அமெரிக்காவின் தாக்குதல் அச்சம் காரணமாக ஈரானிய இராணுவத்தினர்
தமது ஏவுகணைகளை Strait of Hormuz கால்வாய் பகுதியில் குவித்து வருகின்றனர் .
அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் இந்த கால்வாய் பகுதியில் நுழையும்
நோக்குடன் முன்னேறி வருவதால் ஈரான் இந்த திடீர் ஏவுகணை குவிப்பை மேற் கொண்டுள்ளது
தமது இராணுவத்தின் எச்சரிக்கையை மீறி அமெரிக்காவின் போர்க் கப்பல்கள்
முன்னேறியதை அடுத்தே ஈரான் இந்த ஏவுகணைகளை திடீரென குவித்துள்ளது
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் அதிவேக விமானங்கள்
ஈரான் எல்லையில் ஊடுருவிய நிலையில் அதனை சுட்டு வீழ்த்துவோம்
என இறுதி எச்சரிக்கையை ஈரான் விடுத்த காட்சிகள் காணொளியாக வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன
அவ்வாறான அத்து மீறல் சம்பவம் ஒன்று தற்பொழுது அமெரிக்காவினால்
மேற்கொள்ள பட்டு வருகிறது ,,மேற்படி கால்வாய் பகுதியை ஈரான் தடை செய்தால்
சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிக்க படும் நிலை உருவாகலாம் என்ற நிலையில்
அமெரிக்கா இந்த முன் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது
முரண்டு பிடிக்கும் அமெரிக்காவும் ,அதை வீழ்த்த துடிக்கும் ஈரானின்
ஏவுகணைகளும் பெரு போரை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது

10 விமானங்களை சுட்டு வீழ்த்திய சிரியா-அதிரும் களமுனை
10 விமானங்களை சுட்டு வீழ்த்திய சிரியா-அதிரும் களமுனை
சிரியாவின் விமானங்களை சுட்டு வீழ்த்தும் முகமாக துருக்கி மிதக்கும்
இரட்சத கடல் படை கப்பலில் இருந்து திடீர் ஏவுகணை தாக்குதல் மேற் கொள்ள பட்டன .
இதில் Haftar’s விமானங்கள் தப்பித்து கொண்டன ,எனினும் டிரோன் ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுளளதாக தெரிவிக்க பட்டுள்ளது
சிரியா இட்லி பகுதியில் தொடர்ந்து இடம் பெற்ற மோதல்களில் துருக்கியின் பத்து டிரோன் ரக உளவு விமானங்களை சிரியா படைகள் சுட்டு வீழ்த்தி இருந்தன
இதனை தொடர்ந்து அங்கு மூண்ட பெரும் போரின் காரணமாக பலத்த இழப்புக்களை துருக்கிய படைகள் சந்தித்தன
அதன் பின்னர் தற்போது சமரச பேச்சு இடம்பெற்று ஓய்ந்திருந்த இட்லி கள முனையில் மீள பெரும் போர் வெடித்துள்ளது .
வரும் நாட்களில் இங்கு கடும் மோதல்கள் இடம்பெறலாம் என பர பரப்பாக எதிர் பார்க்க படுகிறது .
வலிந்து தாக்குதலை மேற்கொள்ளும் முகமாக துருக்கிய படைகள் இராணுவ குவிப்பை மேற் கொண்டுள்ளன .
இதன் வெளிப்படு விரைவில் பெரும் போர் அந்த பகுதியில் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது
முருங்கை இலை டீ குடித்தால் இந்த நோய்கள் பறக்கும்
முருங்கை இலை டீ குடித்தால் இந்த நோய்கள் பறக்கும்
மக்கள் முருங்கை இலையில் இருந்து டீயும் தயாரிக்கப்படுகிறது. தினமும் ஒரு கப் முருங்கை
டீ குடித்தால் உடல் எடை, ரத்த அழுத்தம் குறையும், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
முருங்கை இலை டீ குடித்தால் கிடைக்கும் பயன்கள்
இலை டீ
முருங்கை கீரையில் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் ஏராளம் இருக்கின்றன.
இருந்து டீயும் தயாரிக்கப்படுகிறது. இது ‘மோரிங்கா தேநீர்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் சாதாரண கீரையில் இருப்பதை விட
மூன்று மடங்கு இரும்பு சத்து நிறைந்திருக்கிறது. அதுபோல் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின், பி6, சி மற்றும் மெக்னீசியம்
, பீட்டா கரோட்டீன் ஆகியவையும் இருக்கிறது. தினமும் ஒரு கப் மோரிங்கா டீ குடித்தால் உடல் எடை, ரத்த அழுத்தம் குறையும், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
கீரையில் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளன. அவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்
தன்மைகொண்டவை. முருங்கைக்கீரையில் இருக்கும் புரதம் தலை மற்றும் கூந்தலுக்கு நீர் சத்தினை தருகிறது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் ஐசோதியோசயனேட்டுகள் இதில் அதிகமாக உள்ளன. இதனால் சர்க்கரை நோயாளிகள் இதனை பருகலாம்.
மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்ற மனநிலை சார்ந்த பிரச்சினை களுக்கு ஆளாகுபவர்களுக்கு மோரிங்கா டீ நன்மை
பயக்கும். அது மனதுக்கு தேவையான ஆற்றலை வழங்கி சோர்வை விரட்டும்.
முருங்கை இலை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் தன்மையும் அதற்கு
இருக்கிறது. பாக்டீரியா, பூஞ்சை போன்றவற்றை திறம்பட எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை. இந்த டீயை பருகுவதன் மூலம்
வாய்வழி நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். காலையிலோ அல்லது மாலையிலோ ஒருவேளையாவது மோரிங்கோ டீ பருகலாம்.
இந்த விடயங்களை தொடராக நீங்கள் புரிந்து வந்தால் அதில் நீங்கள் அதிக பலனை அடைய முடியும் ,முயன்றால் முடியும் என்பது இந்த மருத்துவ குறிப்பில் தெரிந்து கொள்ள முடியும் .
தினமும் 200 பேருக்கு உணவு வழங்கும் ரகுல் பிரீத் சிங்
தினமும் 200 பேருக்கு உணவு வழங்கும் ரகுல் பிரீத் சிங்
தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் தினமும் 200 பேருக்கு உணவு வழங்கி வருகிறார்.
தினமும் 200 பேருக்கு உணவு வழங்கும் ரகுல் பிரீத் சிங்
ரகுல் பிரீத் சிங்
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல்வேறு துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் தங்களால் முடிந்த உதவிகளைச் பிறருக்கு செய்து வருகிறார்கள்.
நடிகைகள் பொதுவாக இம்மாதிரியான நேரங்களில் எந்த விதமான உதவியும் செய்வதில்லை என்ற ஒரு பேச்சு உண்டு.
ஒரு சிலர் மட்டுமே நிதியுதவி செய்து வருகிறார்கள். ஆனால், சிலர் வேறு விதமான உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
நடிகை ரகுல் பிரீத் சிங் அவர் வசிக்கும் டில்லி குர்கான் நகரத்தில் தினமும் 200 பேருக்கு இரண்டு வேளை உணவு வழங்கி
வருகிறாராம். ஊரடங்கு தள்ளிப் போனாலும் அதுவரை வழங்குவேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

பிரபல நடிகையை நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள்
பிரபல நடிகையை நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள்
கொரோனா பீதியால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில் வெளியே நடைபயிற்சி செய்த நடிகையை தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவம் நடந்துள்ளது.
நடைபயிற்சி செய்த நடிகையை கடித்து குதறிய தெருநாய்கள்
நடிகை ஆஞ்சல் குரானா
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நடிகர்-நடிகைகள் வீட்டில் முடங்கி
உள்ளார்கள். உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்யும்படி அறிவுறுத்தி விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஊரடங்கில் வெளியே நடைபயிற்சி செய்த நடிகையை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் நடந்துள்ளது.
அந்த நடிகையின் பெயர் ஆஞ்சல் குரானா. இவர் ஏராளமான இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். டெல்லியில்
வசிக்கிறார். ஊரடங்கில் ஆஞ்சல் குரானா, தனது நாய் குட்டியுடன் வெறிச்சோடி கிடந்த சாலையில் நடைபயிற்சி செய்தார். சிறிது
தூரம் சென்றதும் மூன்று தெருநாய்கள் அவரை சுற்றி வளைத்து குரைத்தன. திடீரென்று அந்த நாய்கள் அவர் மீது பாய்ந்து இடது பக்க இடுப்பு, வலது கால் முட்டியில் கடித்து குதறின.
காயங்களுடன் நடிகை ஆஞ்சல் குரானா
இதனால் அவர் அலறினார். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஊசி போடப்பட்டது.
இதுகுறித்து ஆஞ்சல் குரானா கூறும்போது, “நான் நடைபயிற்சி செய்த போது ஊரடங்கால் சாலையில் யாரும் இல்லை. அப்போது நாய்கள் சுற்றி வளைத்து என்னை கடித்து விட்டன” என்றார்.

தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பு வலிப்பதற்கான காரணங்கள்
தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பு வலிப்பதற்கான காரணங்கள்
தாய்ப்பால் கட்டு இருப்பதால் தான் மார்பில் வலி என்பதை உணராமல் தாய்ப்பால் கொடுப்பதால் தான் வலி என்று தவறாக புரிந்துகொள்பவர்களும் உண்டு.
முதல் பிரசவத்தை சந்திக்கும் இளம்பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது சிலருக்கு தாய்ப்பால் கட்டு
உண்டாகி மார்பில் அதிக வலி உண்டாகும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கும் முறைகளை தெளிவாக
தெரிந்து வைத்திருக்க வேண்டும். மருத்துவரிடமோ வீட்டில் இருக்கும் பெரியவர்களிடமோ கேட்டு அதன்படி செய்ய
வேண்டும்.இல்லையெனில் தாய்ப்பால் கட்டு உண்டாகும். அப்படி தாய்ப்பால் கட்டிகொள்ளும் போது காய்ச்சல், மார்பில் வலி,
மீண்டும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கமுடியாத அளவு வலி, குழந்தைக்கு தாய்ப்பால் வராமல் அடைத்துகொள்வது, மார்புபகுதி
சிவந்தும் தடித்தும் இருப்பதும் கூட உண்டாகும். தாய்ப்பால் கட்டிலிருந்து குணமாக்க செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.
மார்பு வலி அல்லது வீக்கம் இருந்தால் சுடுநீர் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் வலியை குறைக்க முடியும். பொறுக்கும் சூட்டில் வெந்நீரை
கொண்டு ஒத்தடம் செய்யலாம். அல்லது மெல்லிய காட்டன் துணியை வெந்நீரில் பிழிந்து மார்பு பகுதியில் ஒத்தடம்
கொடுக்கலாம். வலி இருக்கும் பக்கம் மட்டும் இல்லாமல் இரண்டு பக்கமும் இந்த ஒத்தடம் கொடுக்கும் போது வலி வேகமாக
குறையும். பால் கட்டு தளர்ந்து வெளியேறும். வெந்நீரை போன்று ஐஸ் கட்டிகள் கொண்டும் ஒத்தடம் கொடுக்கலாம்.
மார்பு பகுதி இறுக்கமாகும் போது பால் கட்டு தளர்ந்து விரைவாக வெளியேற உதவும்.
தாய்ப்பால் கட்டு இருக்கும் போது மார்பில் கை வைக்க முடியாத அளவுக்கு வலி இருக்கும். சிறு வலி இருக்கும் போதே மசாஜ் செய்ய தொடங்குங்கள். வலி அதிகமானால் மசாஜ் செய்வது அதிக
சிரமத்தை உண்டாக்கும். உள்ளங்கைகளால் வட்ட வடிவில் மார்பின் மீது கைவைத்து மசாஜ் செய்யுங்கள். அழுத்தமாக இல்லாமல்
மிதமாக 5 லிருந்து 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்தாலே போதுமானது. இதனால் வலி குறைவதோடு பால் கட்டும் குறைய தொடங்கும்.
எப்போதும் படுக்கும் போது ஒருக்களித்து படுங்கள்.மல்லாந்து படுக்கும் போது தாய்ப்பால் கட்டு தளராது. மேலும் அதிகரித்து
மார்பகங்களை மேலும் கனமாக மாற்றும். இதனால் மறுநாள் காலை எழும் போது மேலும் வலியும் அதிகரிக்கும். குழந்தையால்
பாலும் குடிக்க முடியாது. அதனால் எப்போது படுத்தாலும் ஒருக்களித்து படுங்கள்.
தாய்ப்பால் கட்டு இல்லையென்றாலும் இதை பின்பற்றுங்கள். ஆனால் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது ஒருக்களித்து
படுத்தபடி கொடுக்க கூடாது. இதனால் பால் வேகமாக வருவதோடு குழந்தைக்கு மூச்சுத்திணறலும் உண்டாகும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.பற்று போடலாம்.
தாய்ப்பால் கட்டுக்கு மல்லிப்பூவை அரைத்து பற்று போடுவார்கள் நம் முன்னோர்கள். ஆனால் இவை தாய்ப்பால் சுரப்பை கட்டுப்படுத்திவிடும் என்பதால் தாய்ப்பால் கட்டுக்கு பிறகு
குழந்தைக்கு தாய்ப்பால் கிடைப்பதில் சிக்கல் உண்டாகும். மல்லிகைப்பூக்கு பதிலாக பச்சைபயறு அல்லது கடலை பருப்பு
அரைத்து சுத்தமான தண்ணீரில் குழைத்து மார்பின் மீது பற்று போடுங்கள். நன்றாக உலர்ந்ததும் மார்பை மிதமான நீரில்
கழுவினால் பால் எளிதாக வெளியேற்ற முடியும். மீண்டும் தாய்ப்பால் சுரப்பதிலும் பிரச்சனை இருக்காது.
தாய்ப்பால் கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டும் அல்லாமல் குழந்தை பெற்ற உடல் பலம் பெறுவதற்கும் சத்துமிக்க உணவை
எடுத்துகொள்வதுண்டு ஆனால் தாய்ப்பால் கட்டு இருக்கும் போது உணவையும் குறைத்து எடுக்கவேண்டும். இல்லையெனில் பால் சுரப்பு அதிகரித்து மார்பிலும் வலியை உண்டாக்கிவிடும்.
இவையெல்லாம் 15 வருடங்களுக்கு முன்புவரை இளம் தாய்மார்கள் அதிகம் சந்தித்திருக்கிறார்கள். தற்போது பெரும்பாலான பெண்கள்
குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரப்பதில்லை என்று தான் தெரிவிக்கிறார்கள். எனினும் குழந்தை பிறந்த முதல் மூன்று
மாதங்களில் இந்த தாய்ப்பால் கட்டுக்கு உள்ளாவதுண்டு. ஆனால் தாய்ப்பால் கட்டு இருப்பதால் தான் மார்பில் வலி என்பதை
உணராமல் தாய்ப்பால் கொடுப்பதால் தான் வலி என்று தவறாக புரிந்துகொள்பவர்களும் உண்டு. பிரசவத்துக்கு பிறகு தாய்ப்பால்
கொடுக்கும் போதும்மருத்துவரின் ஆலோசனையை பெறுவதன் மூலம் தாய் சேய் இருவரது ஆரோக்கியமும் மேம்படும்.
பெண்களின் உள்ளாடையால் ஏற்படும் உடல் நலக் கேடு
பெண்களின் உள்ளாடையால் ஏற்படும் உடல் நலக் கேடு
நிறைய பெண்கள் நைலான், பாலியெஸ்டர், லைக்ரா போன்ற காற்று உட்புக அனுமதிக்காத செயற்கை உள்ளாடைகளை
அணிகிறார்கள். அவை ஆரோக்கியத்திற்கும், சுகாதாரத்திற்கும் நல்லதல்ல.
உள்ளாடைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. நிறைய பேர் உள்ளாடை விஷயத்தில்
அலட்சியமாக இருந்துவிடுகிறார்கள். ஈரமான,
இறுக்கமான உள்ளாடைகளை அணிவது நல்லதல்ல.
அது சருமத்தில் எரிச்சல் ஏற்படுத்துவதோடு நோய் தொற்று ஏற்படகாரணமாகிவிடும்.
துணிகளை துவைத்தபின்பு நறுமணம் வீசச்செய்யும் ‘டிடர்ஜெண்டுகளை’
நிறைய பேர் பயன்படுத்துகிறார்கள். அவை சருமத்திற்கு தீங்குவிளைவிக்காததாக இருக்க வேண்டும்.
பெண்கள் நிறைய பேர் இடுப்பு தசையை குறைக்கும் நோக்கத்துடனும், கட்டுடல் அழகை தக்கவைக்கவும் ‘ஷேப்வேர்’
எனப்படும் உள்ளாடையை அணிகிறார்கள். அதனை நீண்ட நேரம் அணிந்தால் ரத்த ஓட்டம் தடைப்படும்.
அதோடு வாயு, உடல் வீக்கம், அஜீரணம் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.
சிலருக்கு உடல் பகுதியில் தேவையற்ற முடி வளரும். முடியை சூழ்ந்து வீக்கம், தடிப்பு போன்ற பிரச்சினையும் உருவாகும்.
இறுக்கமான உள்ளாடை அணிபவர்களுக்கே இத்தகைய பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
நீண்டகாலமாக இறுக்கமான உள்ளாடை அணிபவர்களுக்கு ஈஸ்ட் நோய்தொற்று பாதிப்பு அதிகரிக்கும்.
உள்ளாடைகள் வழியே சருமத்திற்கு போதுமான அளவு காற்று ஊடுருவி செல்ல வேண்டும்.
நிறைய பெண்கள் நைலான், பாலியெஸ்டர், லைக்ரா போன்ற காற்று உட்புக அனுமதிக்காத செயற்கை உள்ளாடைகளை அணிகிறார்கள்.
அவை ஆரோக்கியத்திற்கும், சுகாதாரத்திற்கும் நல்லதல்ல. பருத்தி போன்ற காற்று ஊடுருவக்கூடிய உள்ளாடைகளே சிறந்தது.
பெண்களின் உள்ளாடையால் ஏற்படும் நாளாந்த உடல் நலக் கேட்டில் இருந்து விடுதலை பெற்றுக்கொள்ள என்ன செய்யலாம் ..?
பெண்களின் அந்தரங்க பகுதிகளால் அதிக வேர்வை அதனால் ஏற்படும் நாற்றம் ,அருகில் சக மனிதர்களுடன் உலாவரும் போது அவர்களுக்கு அந்த நாற்றம் அடிக்கும் நிலையை கணப்பித்து முகம் சுளிக்க வைத்து விடுகிறது .
இந்த நாற்றத்தை தடுக்க நாள் தோறும் புது உள்ளாடைகள் அணிவதன் ஊடாகவும் ,உடலை சுத்தமாக வைத்து கொளவதன் மூலமும் ,உரோமங்களை அகற்றி நாற்றத்தில் இருந்து உடலை தற்காத்து கொள்ள முடியும் .
முடிகளை அகற்றி விட்டால் இந்த நாற்றத்தில் இருந்து பாதி விடுதலை பெற்று விடலாமா என்பது இங்கே கவனிக்க தக்கது .
கொரோனா நிவாரணம்: அர்னால்டு, டிகாப்ரியோ ரூ.98 கோடி உதவி
கொரோனா நிவாரணம்: அர்னால்டு, டிகாப்ரியோ ரூ.98 கோடி உதவி
ஹாலிவுட் பிரபலங்கள் அர்னால்டு, டிகாப்ரியோ ஆகியோர் ரூ.98 கோடி கொரோனாவுக்கு நிதி கொடுத்துள்ளார்கள்.
கொரோனா நிவாரணம்: அர்னால்டு, டிகாப்ரியோ ரூ.98 கோடி உதவி
அர்னால்டு, டிகாப்ரியோ
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் இதற்கு 5 ஆயிரத்துக்கும் மேல் பலியாகி உள்ளனர்.
2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிறார்கள். கொரோனா பரவலை தடுக்கவும், வைரஸ் தடுப்பு
மருந்துகளை கண்டுபிடிக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு உதவவும் அங்கு பலர் நிதி வழங்கி வருகிறார்கள்.
‘டைட்டானிக்’ உள்பட பல படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமான லியானர்டோ டிகாப்ரியோ, தனது அறைக்கட்டளை
மூலம் கொரோனா நிதியாக இந்திய மதிப்பில் ரூ.91 கோடி திரட்டி உள்ளார். இந்த தொகையை ஏழைகளுக்கு உணவு வழங்கவும்,
ஆதரவற்ற முதியோர், குழந்தைகளுக்கு பயன்படுத்தவும் வழங்குகிறார்.
இது போல் ஹாலிவுட் நடிகரும், முன்னாள் கலிபோர்னியா கவர்னருமான அர்னால்டு இந்திய மதிப்பில் ரூ.7.5 கோடி நிதி
வழங்கி உள்ளார். ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த போராடும் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு
உபகரணங்கள் வாங்குவதற்காக இந்த நன்கொடையை வழங்கி இருக்கிறார். “கொரோனாவை எதிர்த்து மருத்துமனைகளில்
போராடும் உண்மையான கதாநாயகர்களை பாதுகாக்க இந்த நிதியை வழங்கியதில் பெருமைப்படுகிறேன். தற்போதைய
மோசமான சூழ்நிலையில் வீட்டில் இருந்து குறை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை” என்று அர்னால்டு கூறியுள்ளா

பெப்சி தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கிய நயன்தாரா
பெப்சி தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கிய நயன்தாரா
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா பெப்சி தொழிலாளர்களுக்கு உதவி தொகை வழங்கி உள்ளார்.
பெப்சி தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கிய நயன்தாரா
நயன்தாரா
கொரோனா பாதிப்பால் திரைப்பட துறை முடங்கிப்போய் உள்ளது. திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த 25 ஆயிரம்
உறுப்பினர்களில், 18 ஆயிரம் பேர் தினக்கூலிகள். இவர்களுக்கு ரேஷன் கார்டுகள் இல்லை. இதனால் அரசு அறிவித்த இலவச
பொருட்களையும், பணத்தையும் வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.
எனவே அவர்களுக்கு பெப்சி மூலமாகவோ அல்லது திரைப்பட நலவாரியம் மூலமாகவோ அரசு உதவி வழங்க வேண்டும் என்று
பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்படி, பலர் உதவி செய்து வருகிறார்கள்.
தற்போது தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா பெப்சி தொழிலாளர்களுக்கு ரூபாய் 20 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.








