Posted in சினிமா

தேர்தலில் போட்டியிடுவேன் – பிக்பாஸ் சண்டைக்காரி

தேர்தலில் போட்டியிடுவேன் – காயத்ரி ரகுராம்

கட்சி மேலிடம் கட்டளையிட்டால் நான் தேர்தலில் போட்டியிடுவேன் என்று நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கூறியிருக்கிறார்.

கட்டளையிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் – காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்
மறைந்த டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகள், காயத்ரி ரகுராம்.

இவரும் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிப் படங்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார்.

சார்லி சாப்ளின் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, பரசுராம், விசில், வை ராஜா வை, யாதுமாகி நின்றாய்

உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். இப்போது அவர் நடித்துக்கொண்டே, டான்ஸ் மாஸ்டராகவும் பணிபுரிந்து வருகிறார்.

காயத்ரி ரகுராம் பா.ஜனதா கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார். வருகிற சட்டசபை தேர்தலில், பா.ஜனதாவுக்காக

பிரசாரம் செய்ய முடிவு செய்து இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

“வருகிற தேர்தலில் பா.ஜனதா கட்சியின் வெற்றிக்காக தமிழ்நாடு முழுவதும் நான் பிரசாரம் செய்வேன். இந்தத் தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும்.

கட்சி மேலிடம் கட்டளையிட்டால் நான் தேர்தலில் போட்டியிடுவேன். வெற்றியும் பெறுவேன். சினிமாவில் பணிபுரிந்து கொண்டே அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன்”

இவ்வாறு அவர் கூறினார்..

Posted in சினிமா

கமல் மீது காயத்ரி ரகுராம் பாய்ச்சல்

கமல் மீது காயத்ரி ரகுராம் பாய்ச்சல்

பிரதமர் மோடியை விமர்சித்து கடிதம் எழுதிய கமல் மீது காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கமல் மீது காயத்ரி ரகுராம் பாய்ச்சல்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன்

இருப்பதை காண்பிக்கும் விதமாக விளக்கேற்ற சொன்ன பிரதமர் மோடியை விமர்சித்து கடிதம் எழுதினார்.

அதில் ‘எண்ணெய் இல்லை; விளக்கேற்ற முடியுமா?. உங்கள் தொலைநோக்கு பார்வை தோற்றுவிட்டது. கடந்த இரு முறை நாட்டு

மக்களுக்கு உரையாற்றிய நீங்கள் இந்த கடினமான சூழலில் பிரச்னைகளை சந்திக்கும் மக்களை சமாதானபடுத்தும்

முயற்சியில் இறங்கினீர்கள். தலைமேல் கூரையே இல்லாதோரின் நிலை என்னவாவது? நம் சமூகத்தில் அதிகமாக இருக்கும் ஏழை

மக்களை புறக்கணித்துவிட்டு பால்கனி மக்களுக்காக இயங்கும் அரசாக நீங்கள் உள்ளீர்கள்.’ என எழுதி இருந்தார்.

இதனை விமர்சித்து பா.ஜனதாவை சேர்ந்த காயத்திரி ரகுராம் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: நீங்கள் ஏன் சீன அதிபர்

ஜின்பிங்குக்கும், தப்லிக் இ ஜமாத்துக்கும் கடிதம் எழுதி அவர்களின் தோல்வியை சுட்டிக்காட்டக்கூடாது? அரசின் உத்தரவை மதிக்காத,

கீழ்படியாமல் இருக்கும் பொறுப்பற்ற குடிமக்களுக்கு கடிதம் எழுதுங்கள். தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர்

தோல்வியடைந்தார்கள் என கூறுகிறீர்களா? தமிழக எம்.எல்.ஏ., எம்.பி.,க்களுக்கு முதலில் கடிதம் எழுதி அவர்களிடம் முறையிடுங்கள்.

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவது ஒரு டிரெண்ட் ஆகி விட்டது. நேற்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் ஒற்றுமையை

காட்டினார்கள். அதில் நீங்கள் பங்கேற்கவில்லை என உங்களுக்கு உறுத்தவில்லையா? மத்திய மாநில அரசுகள் கடுமையாக

உழைத்து வருகின்றன. மேம்போக்காக எழுதாமல், உரிய தகவல்களோடு எழுதுங்கள். இவ்வாறு அவர் டுவிட்டரில் கமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்