Posted in சினிமா

கொரோனாவால் பல கோடி ரூபாய் வட்டி கட்டிய சிரஞ்சீவி

கொரோனாவால் பல கோடி ரூபாய் வட்டி கட்டிய சிரஞ்சீவி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, ராம் சரண் இருவரும் இணைந்து நடித்திருக்கும் படத்திற்காக சிரஞ்சீவி பல கோடி வட்டி கட்டியுள்ளார்.

கொரோனாவால் பல கோடி ரூபாய் வட்டி கட்டிய சிரஞ்சீவி
சிரஞ்சீவி


தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, ராம் சரண் இருவரும் சேர்ந்து நடித்திருக்கும் படம் ஆச்சார்யா. கொரட்டால சிவா இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தை மேட்டினி என்டர்டெயின்மென்ட் மற்றும் கொனிடேலா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது .இந்த படத்தில் ராம் சரணும், நீலாம்பரியாக பூஜா ஹெக்டே

மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மணி சர்மா இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் இன்று (29.04.2022) வெளியாகியுள்ளது.

ஆந்திராவின் மிகப்பெரிய ஸ்டாரான அவருக்கும் படத்தை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல் வந்திருக்கிறது. ஐதராபாத்தில் இந்த படத்தின் விழாவில் இது குறித்து பேசிய

சிரஞ்சீவி ‘ஆச்சார்யா’ திரைப்படம் ஊரடங்கு காரணமாக பல மாதங்கள் தாமதம் ஆனது என்றும் அதனால் வட்டி மட்டுமே 50 கோடி ரூபாய் கட்டினேன் என்றும்,


இந்த பணத்தில் ஒரு மீடியம் பட்ஜெட் படமே எடுத்து இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

    Posted in சினிமா

    சாய் பல்லவியுடன் டூயட் பாட விருப்பம்…. ஓப்பனாக சொன்ன சிரஞ்சீவி

    சாய் பல்லவியுடன் டூயட் பாட விருப்பம்…. ஓப்பனாக சொன்ன சிரஞ்சீவி

    சாய் பல்லவி நடித்துள்ள லவ் ஸ்டோரி படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

    சாய் பல்லவியுடன் டூயட் பாட விருப்பம்…. ஓப்பனாக சொன்ன சிரஞ்சீவி
    சாய் பல்லவி, சிரஞ்சீவி


    தெலுங்கில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘லவ் ஸ்டோரி’. காதல் கதையம்சம் கொண்ட இப்படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.

    இந்நிலையில் லவ் ஸ்டோரி படத்தின் அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    “நல்லவேளை போலா ஷங்கர் படத்தில் சாய் பல்லவி நடிக்கவில்லை. ஏனென்றால், அவருடன் ஜோடியாக நடித்து, டூயட் பாடவே நான் விரும்புகிறேன். அவருக்கு அண்ணனாக நடிக்க விருப்பமில்லை என்று வேடிக்கையாக கூறினார்.

    போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க முதலில் சாய் பல்லவியை தான் படக்குழு அணுகியது. அவர் நடிக்க மறுத்துவிட்டதால், அக்கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

      Posted in சினிமா

      முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சிரஞ்சீவி

      முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சிரஞ்சீவி

      தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நேரில் சந்தித்து வாழ்த்து கூறியிருக்கிறார்.

      முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சிரஞ்சீவி
      சிரஞ்சீவி
      இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

      தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் அவரை மரியாதை நிமித்தமாக பலர்

      சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழ் நாட்டில் சிறப்பாக ஆட்சி செய்வதாக வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் முதலமைச்சரை பாராட்டி வருகின்றனர்.

      நேற்று நடிகர் பவன் கல்யாண், தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘அன்புக்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

      மேலும், ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, அரசியல் செய்யக்கூடாது என்பதை வார்த்தைகளால் அல்லாமல் செயல்களால் செய்து வருவதாகவும் ஸ்டாலினை, பவன் கல்யாண் பாராட்டி இருந்தார்.

      இந்நிலையில், முன்னணி நடிகர் சிரஞ்சீவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில்

      சந்தித்து வாழ்த்து கூறியிருக்கிறார். இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

        Posted in சினிமா

        முதல் அமைச்சர் மகளாக நடிக்கும் நயன்தாரா

        முதல் அமைச்சர் மகளாக நடிக்கும் நயன்தாரா

        தமிழில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

        முதல் அமைச்சர் மகளாக நடிக்கும் நயன்தாரா
        நயன்தாரா


        மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள‌ வைத்த இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும்,

        அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணிகளை துவங்கிவிட்டார் பிருத்விராஜ்.

        தற்போது லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். பிரபல இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்தை இயக்கவிருக்கிறார். சுமார் 200

        கோடி ரூபாய் செலவில் தயாரிக்கவுள்ள இப்படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதமே தொடங்கவிருந்த இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக இன்னும் தொடங்கப்படவில்லை.

        மோகன்ராஜா, மோகன்லால், சிரஞ்சீவி

        இந்தப் படத்தில் மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்த முதலமைச்சர் மகள் கதாபாத்திரத்திற்கு, நயன்தாராவை நடிக்க வைக்க முதலில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

        னால் கால்ஷீட் பிரச்சினையால் நயன்தாரா மறுத்துவிட்டார். அதன்பிறகு சில நடிகைகளை பரிசீலித்து வந்தனர்.

        இந்நிலையில், தற்போது நயன்தாராவையே நடிக்க வைக்க மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தில் நயன்தாரா இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

          Posted in சினிமா

          1.50 கோடிக்கு திருமண பரிசு – நடிகை நிஹாரிகாவுக்கு வாரிவழங்கிய சிரஞ்சீவி

          .1.50 கோடிக்கு திருமண பரிசு – நடிகை நிஹாரிகாவுக்கு வாரிவழங்கிய சிரஞ்சீவி

          நடிகை நிஹாரிகாவுக்கு ரூ.1.50 கோடி மதிப்பிலான திருமண பரிசுகளை நடிகர் சிரஞ்சீவி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

          ரூ.1.50 கோடிக்கு திருமண பரிசு – நடிகை நிஹாரிகாவுக்கு வாரிவழங்கிய சிரஞ்சீவி
          நிஹாரிகாவுக்கு சிரஞ்சீவி திருமண பரிசு வழங்கியபோது எடுத்த புகைப்படம்


          தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபு. இவரது மகள் நிஹாரிகா. தெலுங்கில் சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் விஜய்சேதுபதி நடித்த ‘ஒரு நல்ல நாள்

          பார்த்து சொல்றேன்’ படத்தில் நடித்திருந்தார். இவர் தொழில் அதிபர் வெங்கட சைதன்யா என்பவரை காதலித்து வந்தார். இவர்கள்

          திருமணம் செய்ய விரும்பினர். திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதித்தனர்.

          நிஹாரிகா, சிரஞ்சீவி

          இதையடுத்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஓபராய் பேலஸ் நட்சத்திர ஓட்டலில் இவர்களின் திருமணம் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. திருமணத்தையொட்டி ஐதராபாத்தில் நேற்று

          முன்தினம் திருமண சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி நிஹாரிகாவுக்கு சிரஞ்சீவி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

          சிரஞ்சீவி
          சிரஞ்சீவி
          Posted in சினிமா

          கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் ரஜினி, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன்

          கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் ரஜினி, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன்

          கொரோனா விழிப்புணர்வுக்காக ரஜினி, அமிதாப், சிரஞ்சீவி நடித்த குறும்படம் இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

          கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் ரஜினி, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன்
          அமிதாப்பச்சன், ரஜினி


          கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. மிகப்பெரிய அச்சுறுத்தலாக

          உருவாகியிருக்கும் கொறோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

          சினிமா பிரபலங்களும் இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள்.

          இந்நிலையில் குறும்படம் ஒன்றின் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நடிகர்கள் அமிதாப்

          பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் முன்வந்துள்ளனர் . இந்த குறும்படத்திற்கு ‘ஃபேமிலி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

          சிரஞ்சீவி

          ஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, உடல் நலனைப் பேணுவது, வீட்டில் இருந்து பணிபுரிவது, சமூக விலகல்

          உள்ளிட்ட வி‌ஷயங்களை பற்றி பேசும் இப்படத்தை ப்ரசூன் பாண்டே என்பவர் இயக்கியுள்ளார்.

          இக்குறும்படம் இன்று (06.04.20) இரவு 9 மணி சோனி டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

          கொரோனா விழிப்புணர்வு
          கொரோனா விழிப்புணர்வு