Author: நிருபர் காவலன்
போதையில் அடுத்தவர் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த முன்னாள் எம்.பி.
போதையில் அடுத்தவர் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த முன்னாள் எம்.பி.
குடிபோதையில் அடுத்தவர் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. தாக்கப்பட்டதால் குன்னூரில் பரபரப்பு ஏற்பட்டது.
குடிபோதையில் அடுத்தவர் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த முன்னாள் எம்.பி.
குன்னூரில் ஒரு வீட்டிற்குள் நிர்வாணமாக புகுந்த முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 56). கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக
இருந்தார். மேலும் குன்னூர் நகர்மன்ற தலைவராக பதவி வகித்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி நாளில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் குடிபோதையில்
இரவு 10 மணியளவில் ஓட்டுப்பட்டறை அருகே முத்தாளம்மன் பேட்டை குடியிருப்பு பகுதியில் உள்ள கோபி(47) என்பவரது வீட்டுக்குள் ஆடையின்றி நிர்வாண கோலத்தில் திடீரென புகுந்தார்.
அப்போது வீட்டில் பெண்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரிடம், கோபி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவரை
கோபி தாக்கியதாக தெரிகிறது. இதனால் காயமடைந்ததாக கூறி குன்னூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கோபாலகிருஷ்ணன் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
இதையடுத்து முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் தனது வீட்டிற்குள் நிர்வாணமாக நுழைந்தது குறித்து குன்னூர் நகர போலீஸ் நிலையத்தில் கோபி புகார் அளித்தார். மேலும் தன்னை
தாக்கியதாக கோபி மீது கோபாலகிருஷ்ணன் புகார் கொடுத்தார். இதனால் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் நிர்வாணமாக
அடுத்தவர் வீட்டுக்குள் புகுந்த காட்சி செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சிறுவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடு
சிறுவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடு
பிள்ளைகளுக்கு பார்வைக் குறைபாடு இருந்தால் கல்வி கற்பது பெரும் பிரச்னையாக அமையும். அவ்வாறு பார்வைக் குறைபாடு உள்ளவர்களை அவர்களது செயல்பாடுகளை வைத்தே, நாம் எளிதில் கண்டு கொள்ளலாம்.
சிறுவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடுகளை எப்படிக் கண்டறிவது?
சிறுவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடு
மழலைப்பள்ளி மாணவர்கள்
பத்து மழலைப்பள்ளி மாணவர்களில் ஒருவருக்கு மருத்துவரீதியான பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது.
மற்றவர்களை விட, இவர்களையே நாம் அதிகம் கவனிக்க வேண்டும். ஏனெனில், அதுதான் கற்கத் தொடங்கும் பருவம். இவர்களுக்குப் பார்வைக் குறைபாடு இருந்தால் கல்வி கற்பது பெரும் பிரச்னையாக அமையும்.
அவ்வாறு பார்வைக் குறைபாடு உள்ளவர்களை அவர்களது செயல்பாடுகளை வைத்தே, நாம் எளிதில் கண்டு கொள்ளலாம்.
அவர்களால் ஓவியம் தீட்ட முடியாது. அவர்களது கவனிக்கும் திறன் குறைந்திருக்கும். உதாரணத்துக்கு, உட்கார்ந்து ஒரு கதை கேட்கக்கூட அவர்களால் இயலாது.
பள்ளியில் செயல்திறன் குறைவாக இருக்கும். இவற்றை வைத்தே நாம் அறிந்து கொள்ளலாம்.
மழலைப் பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்
மூன்று வயதில் பார்வைக்குறைபாடு இருக்கிறதா எனப் பரிசோதனை செய்தபிறகு, ஆறு வயதில் மீண்டும் கண் பரிசோதனை செய்வது மிகவும் அவசியமாகும்.
சிறுவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடு
இந்த வயதில் ஐந்தில் ஒரு மாணவருக்குப் பார்வை தொடர்பான பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவர்கள் அடிப்படை கண் சோதனையிலும்கூட தேறிவிடுவார்கள்.
ஆனால் பார்வைக் குறைபாட்டை உரிய நேரத்தில் கண்டுபிடிக்கவில்லை என்றால், அவர்களது பள்ளிப் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
பார்வைக் குறைபாட்டை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்
- அடிக்கடி வரும் தலைவலி
- அதிகப்படியாக கண்களைத் தேய்ப்பது
- புத்தகம் அல்லது செல்போனை அருகிலோ அல்லது தொலைவிலோ வைத்துப் பயன்படுத்துவது.
- ஒரு கண்ணை மூடிக்கொண்டு படிப்பது.
- கண்களைச் சுழற்றுவது
- வழக்கத்துக்கு மாறான செயல்பாடுகள்
- கவனம் செலுத்த இயலாமை
- திடீரென மதிப்பெண்கள் குறைவது
- வகுப்பறையில் கரும்பலகையில் உள்ள எழுத்துகளைப் பார்ப்பதில் பிரச்னை.
இவை அனைத்தும் பார்வைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக இருப்பதால், இந்த செயல்பாடுகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
கண்ணாடி
சிறுவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடுகளைத் தவிர்க்கும் வழிமுறைகள்!
- சிறுவர்களுக்கு பார்வைப் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால், அவர்களை உடனே கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று, முழுமையாகப் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.
- இரண்டு அடிக்கும் குறைவான தூரத்தில் அமர்ந்து டி.வி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அரைமணி நேரத்துக்கு மேல் இடைவிடாமல் தொடர்ச்சியாக புத்தகம் படிப்பதையும், அதிக நேரம் தொலைபேசி பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
- பிறந்த குழந்தைக்கு கட்டாயம் கண் பரிசோதனையை நாம் மேற்கொள்ளவேண்டும். அதன் பிறகு 6 முதல் 12 மாதத்துக்குள் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது.
- சிறுவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடு
- மூன்று வயது அடையும்போதும், பிறகு பள்ளிப்பருவ வயதிலும் நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
- இப்படி குழந்தைப் பருவம் முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் கண் பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.
- பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை வைத்தே பார்வைக் குறைபாடுகளை கண்டறியலாம்.
- பெற்றோரும் ஆசிரியர்களும் பிள்ளைகளின் பார்வை தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்படவேண்டும்.
- ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால், பிள்ளைகளுக்கு பார்வைக்குறைபாடு ஏற்படாமல் நாம் பாதுகாக்கலாம்.
கண் பரிசோதனை
பார்வைக் குறைபாடுகளைத் தவிர்க்கும் பொதுவான வழிமுறைகள்!
- கண்களுக்கோ அல்லது பார்வைக்கோ எந்த ஒரு பிரச்னை ஏற்பட்டாலும் உடனடியாக கண் மருத்துவரை அணுகவும்.
- இதனால், குளூக்கோமா எனும் கண் அழுத்த நோய் போன்ற பார்வை இழப்பு நிலையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த உதவும்.
- கண்களுக்கு எவ்விதக் கேடும் ஏற்படாதவகையில் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். கண்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் பணிகளை நாம் மேற்கொள்ளும்போது, அதற்கான பாதுகாப்பு முறைகளைக் கையாளவேண்டும்.
- பாதாள உலகக் கும்பல் தலைவருடன் தொடர்புடைய ரூ. 44.5 மில்லியன் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- உஸ்பெக் பெண்ணைக் கடத்திய வழக்கில் முச்சக்கர வண்டி ஓட்டுநருக்குத் தண்டனை
- கோழி உற்பத்திக்கு அச்சுறுத்தல்
- இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 1.2 மில்லியன் மோசடி
சாக்கில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
சாக்கில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
இலங்கையில் முஸ்லீம் குடும்ப பெண் ஒருவர் கோரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் குப்பைகள் கொட்டும் பகுதியில் சாக்கு மூடையில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் Fathima Mumtaz என்கின்ற ம் 44 வயதுடைய பெண்ணாகும் .
சாக்கில் இருந்து மீட்க பட்ட பெண்ணின் கணவர் இவர் தனது மனைவி என பெண்ணின் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.
கடலில் மிதந்த பெண்ணின் சடலம் வாலிபன் மாயம்
குறித்த பெண்ணின் கோர கொலை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
சூட்கேசில் பெண்ணின் சடலம் கொழும்பில் நடந்தேறிய பயங்கரம்
சாக்கு மூட்டையில் பெண் சடலமாக குப்பை மேட்டில் இருந்து மீட்க பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இந்த பெண் ஏன் இவ்வாறு கோரமாக கொலை செய்யப்பட்டார் என்கின்ற விடயம் உடனடியாக தெரியவரவிலை .
- பாதாள உலகக் கும்பல் தலைவருடன் தொடர்புடைய ரூ. 44.5 மில்லியன் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- உஸ்பெக் பெண்ணைக் கடத்திய வழக்கில் முச்சக்கர வண்டி ஓட்டுநருக்குத் தண்டனை
- கோழி உற்பத்திக்கு அச்சுறுத்தல்
- இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 1.2 மில்லியன் மோசடி
லண்டனில் அடித்து மூட பட்ட முதியோர் இல்லம்
லண்டனில் அடித்து மூட பட்ட முதியோர் இல்லம்
லண்டன் Optima-run Eastry Villas and the Gate House, both in Sandwich, and 37 Spenser Road in Herne Bay have all closed
பாதுகாப்பற்ற முறையில் இயங்கி வந்த முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்று அடித்து பூட்ட பட்டுள்ளது
இங்கு இதனை பார்வையிட சென்ற அதிகாரி அதற்கு சீல் வைத்து அடித்து மூட பட்டுள்ளது
மேற்படி சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
லண்டனில் பள்ளி பஸ் கத்தி முனையில் கடத்தல்
லண்டனில் பள்ளி பஸ் கத்தி முனையில் கடத்தல்
லண்டன் Broomfield, Herne Bay பகுதியில் பிளைக்கூட பேரூந்து ஒன்றை மூவர் கத்தி முனையில் மிரட்டி கடத்தியுள்ளனர் ,இங்கு இடம்பெற்ற இந்த பயங்கர சம்பவத்தை அடுத்து விரைந்து வந்த போலீசார் மூவரை கைது செய்தனர்
குறித்த பேரூந்து பத்திரமாக மீட்க பட்டதுடன் அனைவரும் காப்பாற்ற பட்டுள்ளனர்
மேற்படி வழிமறிப்பு செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடலில் மோதி சிதறிய அமெரிக்கா நீர்மூழ்கி
கடலில் மோதி சிதறிய அமெரிக்கா நீர்மூழ்கி
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் எப்படி விபத்தில் சிக்கியது? கடற்பகுதியில் அல்லது நீருக்கடியில் உள்ள மலை மீது மோதியதா? என்பது குறித்த முழுமையான விவரத்தை கடற்படை வெளியிடவில்லை.
அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் விபத்து- 2 உயர் அதிகாரிகளை நீக்கியது அமெரிக்க கடற்படை
விபத்துக்குள்ளான நீர்மூழ்கி கப்பல்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
வாஷிங்டன்:
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அணு ஆயுத திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பலான யூஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கி கப்பல் கடந்த மாதம் 2ம் தேதி தென்சீனக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத பொருள் மோதி சேதமடைந்துள்ளது. இதில் மாலுமிகள் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்த தகவலை 5 நாட்களுக்கு பிறகே கடற்படை வெளியிட்டது.
விபத்தில் கப்பலுக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அமெரிக்க பிராந்தியமான குவாமை நோக்கி கப்பல் பயணிப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.
இந்த விபத்து குறித்து அமெரிக்க கடற்படை விசாரணை நடத்தி வந்த நிலையில், 2 உயர் அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தளபதி மற்றும் நிர்வாக அதிகாரிக்கு ஆலோசகராக பணியாற்றிய ஒரு மாலுமியும் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
யுஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கிக் கப்பல் எப்படி விபத்தில் சிக்கியது? கடற்பகுதியில் அல்லது நீருக்கடியில் உள்ள மலை மீது மோதியதா? மற்றும் கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த முழுமையான விவரத்தை கடற்படை பகிரங்கமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளருக்கு அமோசான் கொடுத்த பேரதிர்ச்சி
வாடிக்கையாளருக்கு அமோசான் கொடுத்த பேரதிர்ச்சி
கேரள மாநிலம் வயநாட்டின் கனியம்பேட்டா கிராமத்தில் வசித்து வருபவர் மிதுன் பாபு. இவர் சமீபத்தில் தான் வாங்கிய பாஸ்போர்ட்டை வைப்பதற்காக கவர் ஒன்றை அமேசான் நிறுவனத்தில் ஆர்டர் செய்துள்ளார்.
சில தினங்களுக்குப் பிறகு அமேசன் நிறுவனத்தில் இருந்து நவம்பர் 1-ம் தேதி மிதுன் பாபுவுக்கு ஒரு பார்சல் வந்தது. அந்தப் பார்சலைப் பிரித்து பார்த்த மிதுனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்தப் பார்சலில் பாஸ்போர்ட் கவருக்கு பதிலாக உண்மையான பாஸ்போர்ட் இருந்ததைக் கண்டு மிதுன் பாபு அதிர்ச்சி அடைந்தார்.
இந்திய அரசால் வழங்கப்படும் பாஸ்போர்ட் அமேசான் மூலம் எப்படி வந்தது என்பது தெரியாமல் அவர் குழம்பினார்.
இதுகுறித்து அமேசான் நிறுவன வாடிக்கையாளர் சேவைப் பிரிவைத் தொடர்பு கொண்டார். அங்கு முறையான பதில் அளிக்கப்படவில்லை.
இதனால் குழம்பிய மிதுன் பாபு அந்த பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தார். அது திருச்சூரை சேர்ந்த முகமது சலீம் என்பவருடையது என்பதை கண்டுபிடித்தார். உடனே அதில் இருந்த முகவரியை
தொடர்பு கொண்டு பாஸ்போர்ட் விவகாரம் குறித்து விசாரித்தார். அந்த பாஸ்போர்ட் முகமது சலீமின் ஒரிஜினல் பாஸ்போர்ட் என தெரிந்தது.
விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன் அமேசானில் பாஸ்போர்ட் கவர் வாங்கிய சலீம், கவர் பிடிக்காததால் அதை மீண்டும் திருப்பி அனுப்பிவிட்டார். அப்படி அனுப்புகையில் கவரில் வைத்த பாஸ்போர்ட்டை எடுக்க மறந்தது தெரிய வந்தது.
முகமது சலீம் திருப்பி அனுப்பிய பாஸ்போர்ட் கவரை சோதிக்காத அமேசான் நிறுவனத்தினர் மீண்டும் அந்த பாஸ்போர்ட் கவரை மிதுன் பாபுவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பாஸ்போர்ட் கவருக்கு பதிலாக, ஒரிஜினல் பாஸ்போர்ட்டை டெலிவரி செய்த அமேசான் நிறுவனத்தின் செயல் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்கா வர்த்தக மையத்தில் தீபாவளி கொண்டாட்டம்
அமெரிக்கா வர்த்தக மையத்தில் தீபாவளி கொண்டாட்டம்
அமரிக்காவின் புகழ் பெற்ற இரட்டை கோபுரங்கள் அமைந்துள்ள
வர்த்தக மையத்தில் முதன் முதலாக தீபாவளி கொண்டாடட பட்டுள்ளது
இங்கு ஹிந்தி பாடல்கள் ஒலிக்க விட பட்டும் கப்பலில் இருந்து பட்டாசுகள் வெடிக்க பட்டு இந்த நிகழ்வு கொண்டாட பட்டுள்ளது குறிப்பிட தக்கது
கள்ள சாராயம் குடித்து 24 பேர் மரணம்
கள்ள சாராயம் குடித்து 24 பேர் மரணம்
இந்தியாவில் கடந்த மூன்று நாட்களில் கள்ள சாராயம் அருந்திய இருபத்தி நான்கு பேர் மரணமாகியுள்ளனர்
தீபாவளியை முன்னிட்டு பர பரப்பாக இடம்பெற்ற மகிழ்ச்சி கொண்டாடத்தின் பொழுது இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன
பிரிட்டனில் காந்தி நாணயம் வெளியீடு
பிரிட்டனில் காந்தி நாணயம் வெளியீடு
தீபாவளி பண்டிகையை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மகாத்மா காந்தியின் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரிட்டன் மந்திரி ரிஷி சுனக்.
மகாத்மா காந்தி நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரிட்டன் மந்திரி
பிரிட்டன் மந்திரி ரிஷி சுனக்
தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
பிரிட்டனில் உள்ள இந்தியர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், பிரிட்டன் அரசு தீபாவளி கொண்டாட்டம் நாளில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் மரபுகளை
போற்றும் வகையில், 5-பவுண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மந்திரி ரிஷி சுனக், மகாத்மா காந்தியின் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணம் பயன்படுத்த தடை
ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணம் பயன்படுத்த தடை
ஆப்கானிஸ்தானில் கடைகளில், சந்தைகளில் அமெரிக்க டாலர் பரவலாக புழக்கத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பணம் பயன்படுத்த தடை- தலிபான்கள் அதிரடியால் புதிய நெருக்கடி
ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது. எந்த நேரமும் துப்பாக்கியும், கையுமாக அலைந்து கொண்டிருக்கிற தலிபான்களின் நிர்வாகம் அங்கு வந்து
விட்டது. தலிபான்கள் அங்கு ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததைத்தொடர்ந்து, பல்லாயிரம் கோடி மதிப்பிலான ஆப்கானிஸ்தானின் வெளிநாட்டு சொத்துகளை அமெரிக்க ரிசர்வ் வங்கியும்,
ஐரோப்பிய மத்திய வங்கிகளும் முடக்கி உள்ளன. சர்வதேச நிதியமும், உலக வங்கியும் கூட ஆப்கானிஸ்தானுக்கு எந்த நிதி உதவியும் செய்ய முடியாது என கைவிரித்துவிட்டன.
இதனால் ஆப்கானிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது. இந்த நிலையில் புதிய நெருக்கடியாக, அங்கு வெளிநாட்டு பணத்தை பயன்படுத்துவதற்கு தலிபான்கள் அதிரடியாக
தடை விதித்து உள்ளனர். இதற்கான அறிவிப்பை தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் வெளியிட்டுள்ளார். அதில் அவர், “அனைத்து குடிமக்களும், கடைக்காரர்களும்,
வியாபாரிகளும், தொழில் அதிபர்களும், பொதுமக்களும் இனி எல்லா பரிமாற்றங்களையும் ஆப்கானியைக்கொண்டு (ஆப்கானிஸ்தான் பணம்) மட்டுமே செய்ய வேண்டும். வெளிநாட்டு
பணங்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. யாரேனும் மீறி பயன்படுத்தினால் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியது வரும்” என கூறி உள்ளார்.
பொருளாதார நிலைமையையும், தேசிய நலன்களையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலிபான்கள் கூறி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடைகளில், சந்தைகளில் அமெரிக்க டாலர் பரவலாக புழக்கத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் அகோர ஏவுகணை தாக்குதல்
சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் அகோர ஏவுகணை தாக்குதல்
சிரியாவின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தின
இதில் எதிரிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
லெபனான் போராளிகள் சிரியாவுக்குள் இருந்து ஆயுத கடத்தலில் ஈடுபட்டுள்ளதால் இந்த தாக்குதல் மேற்கொள்ள பட்டதாக தெரிவிக்க படுகிறது
வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் – பலர் மரணம்
வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம் – பலர் மரணம்
ரஷியாவில் பறந்து கொண்டிருந்த இலகு ரக பயணிகள் விமானம் ஒன்று திடீரென ராடரில் இருந்து மறைந்தது
இதனை அடுத்து மேற்படி விமானத்தை தேடும் பணிகள் ஆரம்பிக்க பட்டன
இதன் பொழுது காட்டு பகுதியில் ஒன்றில் வீழ்ந்து நொறுங்கிய நிலையில் விமானம் கண்டு பிடிக்க பட்டது
கால நிலை சீர்கேட்டினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
இதில் ஐவர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் ,காயமடைந்த நிலையில் இருவர் மீட்க பட்டுள்ளனர்
பனிப்புகார் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான் இராணுவம் – முறுகல் உச்சம்
அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான் இராணுவம் – முறுகல் உச்சம்
ஓமான் வளைகுடா பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சொந்தமான எண்ணெய்
கப்பல் ஒன்றினை ஈரானிய இராணுவத்தினர் சிறை பிடித்துள்ளனர்
மேற்படி கப்பலை ராடாரில் கண்காணிக்கும் இராணுவம் முதல் அதிரடி நடவடிக்கையாக உலங்குவானூர்தி மூலம் சென்று கப்பலுக்குள் இராணுவம் தரை இறங்குகிறது
அதன் பின்னர் வேக படகுகள் சுற்றி வளைத்து கப்பலை தமது கட்டு பாட்டுக்குள் கொண்டு வருகின்றன
பின்னர் கப்பல் அவர்களது பாதுகாப்பு பகுதிக்கு நகர்த்தி செல்ல படுகிறது
மேற்படி காணொளியினை அமெரிக்கா இராணுவ தலைமையகமான பென்டகோன் வெளியிட்டுள்ளது
மத்திய கிழக்கில் அமெரிக்கா எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.246 கோடி மோசடி
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.246 கோடி மோசடி
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.246 கோடி முறைகேடு- மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி
மத்திய மந்திரி எல்.முருகன்
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை இணை மந்திரி எல்.முருகன், சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் (100 நாள் வேலை திட்டம்) கீழ் தமிழக அரசுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை மத்திய அரசு வழங்கவில்லை என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
இந்த திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் தமிழகத்துக்கு ரூ.6 ஆயிரத்து 565 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான நிலுவைத்தொகை ரூ.1,178 கோடியை விடுவிக்க
வேண்டும் என்று அக்டோபர் 27-ந் தேதி மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரியை தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நேரில் சந்தித்து வலியுறுத்தியபோது ஒரு வாரத்தில் நிலுவைத்தொகை விடுவிக்கப்படும் என்று மத்திய மந்திரி உறுதி அளித்தார்.
ஆனால் 5 நாட்களிலேயே, தமிழக அரசு கோரியதைவிட அதிகமாக ரூ.1,361 கோடி நிதி விடுவிக்கப்பட்டது.
மத்திய அரசை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர். தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சுமார் ரூ.246 கோடி அளவுக்கு
முறைகேடு நடந்துள்ளதாக தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை வெறும் ரூ.1 கோடியே 85 லட்சம் வரை மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு 2 ஆயிரத்து 500 லட்சம் மனித வேலை நாட்கள் ஒதுக்கப்பட்டபோதிலும், தமிழக அரசு 2 ஆயிரத்து 190 லட்சம் மனித வேலை நாட்களை மட்டுமே
பயன்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின்படி மாவட்டத்துக்கு ஒரு குறைதீர் அதிகாரி, சமூக தணிக்கை குழு நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் அதுபோன்று எந்த ஒரு அதிகாரியும் நியமிக்கப்படவில்லை.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் குறித்த விவரங்களை தமிழக அரசிடம் மத்திய அரசு கோரியபோதிலும், கடந்த மாதம் 25-ந் தேதி வரை தமிழக அரசு இந்த விவரங்களை அளிக்கவில்லை. தமிழக அரசின் அலட்சியப் போக்கால் மீனவர்கள் விடுவிக்கப்படுவது தாமதமாகி வருகிறது.
கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருச்சியில் என்னைச் சந்தித்து முறையிட்டனர். மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடி
தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம்கூட நடைபெறவில்லை.
கடல்சார் மசோதாவால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அனைத்து கடலோர மாநிலங்கள் மற்றும் மீனவ சங்கங்களின் ஆலோசனை பெறப்பட்டு அனைவரையும் திருப்திப்படுத்தும் விதத்தில் இதற்கான சட்டம் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது சென்னை பத்திரிகை தகவல் மையத்தின் இயக்குனர் பி.குருபாபு உடன் இருந்தார்.
பிரான்சில் கத்தியுடன் உலவிய நபர் சுட்டு கொலை
பிரான்சில் கத்தியுடன் உலவிய நபர் சுட்டு கொலை
பிரான்ஸ் பாரிஸ் பகுதியில் உள்ள தொடரூந்து நிலையம் ஒன்றின் அருகே கத்தியுடன் நடமாடிய நபர் ஒருவர் காவல்துறையால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில் உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து உசார் நிலையில் போலீசா வைக்கபட்டிருந்த நிலையில் மேற்படி நபர் கொலை செய்ய பட்டுளளார்
இவர் தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டவர் என எதிர் பார்க்க பாடுகிறது ,மேற்படி சம்பவம் பிரான்ஸ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இராணுவ மருத்துமனை மீது தாக்குதல் 25 பேர் பலி -50 பேர் காயம்
இராணுவ மருத்துமனை மீது தாக்கல் 25 பேர் பலி -50 பேர் காயம்
ஆப்கான் தலைநகர் காபூல் பகுதியில் அமைந்துள்ள Sardar Mohammad Daud Khan இராணுவ
மருத்துவமனை மீது நடத்த பட்ட பெரும் குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டு தாக்குதலில்
சிக்கி சம்பவ இடத்தில 26 பேர் பலியாகினர் மேலும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் பாடுகாயமடைந்துள்ளனர்
இந்த தாக்குதல் உயிர் சேதம் மேலும் அதிகரிக்கலாம் எனஅஞ்ச படுகிறது ,இதுவரை இந்த
தாக்குதலுக்கு எவரும் உரிமை கோரவில்லை
செல்போன்களால் ஏற்பட போகும் உடல் நல பாதிப்பு
செல்போன்களால் ஏற்பட போகும் உடல் நல பாதிப்பு
செல்போன், கணினி போன்றவற்றில் அதிக நேரம் செலவிடும் நபர்களுக்கு மனிதர்களை முகத்தோடு முகம் பார்த்து இயல்பாக பேசும் திறனும், உண்மையான மனித தொடர்பியல் சார்ந்த திறன்களும் குறைகின்றன.
காலம் மாற மாற, புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றவாறு நோய்களும் வித விதமாக தோன்றி உருமாறுகின்றன. எலும்புகள் தொடர்பாக எத்தனையோ உடல் நல கோளாறுகள் ஏற்கனவே உண்டு.
அது தற்சமயம் வாட்ஸ்-அப் பைட்டிஸ் என்ற புதிய பெயரோடு புழக்கத்துக்கு வந்திருக்கிறது. இது வாட்ஸ்-அப் அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை என்பதால் அதையே
பெயரிலும் வைத்துவிட்டார்கள். எனவே இது வாட்ஸ்-அப் பயன்படுத்துகிற அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமாகிறது.
செல்போன் வருவதற்கு முன்பு தட்டச்சு எந்திரத்தில் அதிக நேரம் தட்டச்சு செய்பவர்களுக்கு அனைத்து விரல்களிலும் தேய்மானம் ஏற்பட்டு தசை மற்றும் எலும்புகளில் பிரச்சினைகள் ஏற்படுவதை ‘ஸ்டெனோகிராபர் தம்ப் டிசார்டர்’ என்று சொல்வது உண்டு. செல்போனில் வாட்ஸ்-
அப் போன்ற செயலிகளில் நாம் அதிக நேரம் தொடர்ந்து டைப் செய்து சாட்டிங் செய்கிற போது, நமது கையில் உள்ள விரல்களை அதிக அளவு பயன்படுத்துவதோடு நீண்ட நேரம் தலையை குனிந்த நிலையில் இருக்கிறோம்.
இதனால் உடல் நல பாதிப்பு ஏற்படக் கூடும். சிலர் செல்போனில் டைப் செய்வதற்கு ஒரு கையை மட்டுமே பயன்படுத்துவது உண்டு. இதனால் ஒரு கையில் மட்டும் அதிக பாதிப்பு ஏற்படும். இதற்கு பதிலாக இரண்டு கைகளாலும் டைப் செய்கிற போது கைகளில் ஏற்படுகிற பாதிப்புகள் சற்று
குறைய வாய்ப்புள்ளது. அதேபோல செல்போனின் அளவு பெரிதாக பெரிதாக டைப் செய்கிற பகுதி பெரிதாவதால் சற்று சுலபமாக டைப் செய்யலாம். டேப்லெட், லேப்டாப் போன்ற சற்று பெரிய திரையை உடைய கருவிகளை கீழே வைத்து பயன்படுத்தும் போது அதிக அளவு தலையை குனிந்து இருப்பதால் தோள்பட்டை, கழுத்து பகுதிகளில் அதிக வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தசைகள், எலும்புகள் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதோடு நீண்ட நேரம் செல்போன் மற்றும் கணினி திரைகளை பார்த்து கொண்டிருப்பதால் கண்கள் உலர்ந்து விடுகின்றன. இதுபோன்ற
டிஜிட்டல் திரைகளில் இருந்து வெளிப்படும் நீலநிற ஒளிக்கதிர்களால் தற்காலிக கண்பார்வை குறைபாடு ஏற்படுவதோடு கண் விழித்திரை குறைபாடும் உண்டாகிறது. இரவு நேரங்களில்
தூக்கத்தை தவிர்த்து இந்த கருவிகளை பயன்படுத்துவதால் தூக்கக் குறைபாடுகள் மற்றும் நினைவுத்திறன் குறைபாடுகள் ஏற்படுகின்றன.
செல்போன், கணினி போன்றவற்றில் அதிக நேரம் செலவிடும் நபர்களுக்கு மனிதர்களை முகத்தோடு முகம் பார்த்து இயல்பாக பேசும் திறனும், உண்மையான மனித தொடர்பியல் சார்ந்த
திறன்களும் குறைகின்றன. மேலும் இதனால் அதிக கோபமும், அதிக மன அழுத்தமும் உண்டாகிறது.
குழந்தை பருவத்தில் இதுபோன்ற டிஜிட்டல் திரைகளை அதிக அளவு பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு கவனக்குறைவு, மொழியை கற்றுக்கொள்ளும் திறனில் பிரச்சினை
ஏற்படுவதோடு கண்ணில் கிட்டப்பார்வை கோளாறு ஏற்படவும் வழிவகுக்கிறது. மேலும் இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பிரச்சினை ஏற்படவும் காரணமாகிறது. பெற்றோர்
குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்து வருவதோடு, அவர்களை அமைதிப்படுத்துவதற்காக செல்போனை கொடுத்து பழக்கப்படுத்துவதால், நாளடைவில் அவர்கள் அதற்கு அடிமை யாகிவிடும் நிலை உண்டாகிறது.
அமெரிக்காவில் வேட்டி-சேலை அணிந்து தமிழில் பாட்டுப்பாடிய தமிழர்கள்
அமெரிக்காவில் வேட்டி-சேலை அணிந்து தமிழில் பாட்டுப்பாடிய தமிழர்கள்
புளோரிஸ் யுனைடெட் மெதடிஸ்ட்’ தேவாலயத்தில் தமிழ் குடும்பங்களை சேர்ந்த பெண்கள்
பாரம்பரிய முறைப்படி சேலை, பாவாடை-தாவணி அணிந்தவாறும், ஆண்கள் வேட்டி-சட்டையிலும் பங்கேற்றனர்.
அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில் வேட்டி-சேலை அணிந்து தமிழில் பாட்டுப்பாடிய தமிழர்கள்
அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில் வேட்டி-சேலை அணிந்து தமிழில் பாட்டுப்பாடிய தமிழர்கள்
அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள ஹென்டன் என்ற இடத்தில் தமிழர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
ஹென்டன் நகரில் பிரசித்தி பெற்ற ‘புளோரிஸ் யுனைடெட் மெதடிஸ்ட்’ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் வழக்கம்போல பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தது. அப்போது, தமிழ்
குடும்பங்களை சேர்ந்த பெண்கள் பாரம்பரிய முறைப்படி சேலை, பாவாடை-தாவணி அணிந்தவாறும், ஆண்கள் வேட்டி-சட்டையிலும் பங்கேற்றனர்.
இதையடுத்து அவர்கள், தேவாலயத்தில் உள்ள பீடத்தில் நின்று தமிழ் பாடலை தங்களுக்கே
உரித்தான பாணியில் ஒருமித்த குரலில் பாடினர். இதனை தேவாலயத்தில் பிரார்த்தனையில் பங்கேற்ற அமெரிக்கர்கள் மற்றும் பிற நாடுகளை சேர்ந்தவர்களும் ரசித்து பாராட்டினர்.
கட்சியில் சேருங்கள் – பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு
கட்சியில் சேருங்கள் – பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு
பருவநிலை மாட்டின் இடையே பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
எங்கள் கட்சியில் சேருங்கள் – பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த இஸ்ரேல் பிரதமர்
இத்தாலி பிரதமருடன் பிரதமர் மோடி
ரோமில் நடந்த ஜி20 மாநாட்டை முடித்துக் கொண்டு கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல்வேறு உலக நாட்டு தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
மாநாட்டின் இடையே இந்திய பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்டை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது பிரதமர் மோடியிடம் கைகுலுக்கிய நப்தலி பென்னெட், எங்கள் நாட்டில் நீங்கள் மிகவும்
பிரபலமான நபர். எனவே, எங்கள் கட்சியில் வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என சிரித்தபடி அழைப்பு விடுத்தார். இதைக் கேட்ட பிரதமர் மோடியும் சிரித்தார்.
அதன்பின், இருவரும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.












