Author: நிருபர் காவலன்
இது முறையோ …?
இது முறையோ …?
மெல்லென விரியும் கிழக்கு -முன்னே
மெலிந்தது அதன் விளக்கு
ஒத்திகை பார்த்தே பின்னே
ஒளியிடல் இன்றே விலக்கு
அழையா இல்லம் நுளைந்து
ஆடை உள்ளே புகுந்து
துயிலை உரிப்பது முறையோ – இந்த
துணிவை தந்தது யாரோ …?
பாருக்கு நீயோ விலக்கு -இந்த
பகலும் இரவும் விளக்கு
உன்னை வைத்தே இந்த
உலகில் பிறந்தது கணக்கு
உயிரை படைத்தவன் கடவுள் – இந்த
உயர்வை படைத்தவன் கடவுள்
நிலைகளே செய்தே நன்றே
நிகழ்வுகள் வைத்தான் அன்றே
இரவும் பகலும் இரண்டு – அந்த
இன்பமும் துன்பமும் இரண்டு
ஏழையும் செல்வமும் இரண்டு – இந்த
இயல்புகள் திரிப்பு நன்றோ ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 02-11-2021
இருளர் பழங்குடி மாணவர்களின் கல்வி நலனுக்காக ரூ.1 கோடி வழங்கினார் சூர்யா
இருளர் பழங்குடி மாணவர்களின் கல்வி நலனுக்காக ரூ.1 கோடி வழங்கினார் சூர்யா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, ஜெய் பீம் படத்தில் பழங்குடி மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார்.
இருளர் பழங்குடி மாணவர்களின் கல்வி நலனுக்காக ரூ.1 கோடி வழங்கினார் சூர்யா
முதல்வர் முன்னிலையில் காசோலை வழங்கிய சூர்யா
சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் நாளை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. த.செ.ஞானவேல் இயக்கி இருக்கும் இப்படம் இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை
மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா, பழங்குடி
மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், இருளர் பழங்குடியை சேர்ந்த மாணவர்களின் கல்வி நலனுக்காக சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ரூ.1
கோடிக்கான காசோலையை நடிகர் சூர்யா வழங்கினார். அப்போது ஜோதிகா, துர்கா ஸ்டாலின் மற்றும் இருளர் பழங்குடியை சேர்ந்த மக்கள் சிலரும் உடனிருந்தனர். நடிகர் சூர்யாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன
இந்துக்களுக்கு அயோத்தி பயணம் இலவசம் – கெஜ்ரிவால்
இந்துக்களுக்கு அயோத்தி பயணம் இலவசம் – கெஜ்ரிவால்
கோவா சென்றுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில் காங்கிரசும், பா.ஜ.க.வும் ஊழல் கட்சிகள் என தெரிவித்தார்.
இந்துக்களுக்கு அயோத்தி பயணம் இலவசம் – கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி
அரவிந்த் கெஜ்ரிவால்
உத்தர பிரதேசம், கோவா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ், பா.ஜக கட்சிகள் நேருக்கு நேர் மோதிய மாநிலங்களில்
காங்கிரஸ் வலுவிழந்து காணப்படுகிறது. மேலும், மத்தியில் பா.ஜ.க.வை எதிர்த்து வலுவான கூட்டணி அமைக்க முடியாமல் தவிக்கிறது.
இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சியும் இந்த களத்தில் குதித்துள்ளது. கோவாவில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியில் இறங்கியுள்ளது.
இந்நிலையில், கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கோவா சென்றார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரசும், பா.ஜ.க.வும் ஊழல் கட்சிகள். அதனால் தான் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேச காங்கிரஸ் அஞ்சுகிறது. பா.ஜ.க. குறித்து பேசினால் சிறைக்குச் செல்ல நேரிடும் என காங்கிரசுக்கும் தெரியும்.
கடந்த 10 ஆண்டாக பா.ஜ.க. ஆட்சியில் காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் முதல் மந்திரிகள் மீதோ, அமைச்சர்கள் மீதோ ஏன் ஒரு வழக்கு கூட இல்லை என தெரிகிறதா?
இரு கட்சிகளும் கூட்டுசேர்ந்து செயல்படுகின்றன. இருவரில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஒப்பந்தமிட்டுள்ளன.
கோவாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களை அயோத்திக்கும், கிறிஸ்தவர்களை வேளாங்கண்ணிக்கும், முஸ்லிம்களை அஜ்மீர் ஷெரீப்புக்கும், சாய்பாபாவை வணங்குபவர்களை
ஷீரடி சாய்பாபா கோவிலுக்கும் யாத்திரை செல்ல இலவசமாக ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.
2 மணித்தியாலத்தில் 500 இலாபம் -forex trade tamil video
2 மணித்தியாலத்தில் 500 இலாபம் -forex trade tamil video
பங்கு சந்தையின் ஒரு பகுதியான நாணயமாற்று பகுதியில் மூவாயிரம் டொலர்கள் முதலீடு
செய்ய பட்டது ,அதில் இருந்து இரு மணித்தியாலங்களில் மட்டும் சுமார் 500 டொலருக்கு மேலே இலாபமாக பெற பட்டுள்ளது
காத்திருந்து உயிரிய நுழைதல் வரும் பொழுது நாம் வாங்கவோ அல்லது விற்றால் நமது இலக்கு
சென்று அதிக பணத்தை அள்ளிட முடியும் ,இதற்கு பண கையாடல் மூலோபாயம்
முதன்மையானது ,சந்தை எமக்கு எதிராக சென்றாலும் நாம் அச்சம் இன்றி பணத்தை அள்ளி கொள்ள முடியும்
எமது காணொளிகள் யாவற்றையும் பாருங்கள் பின்னர் நீங்களே அதன் தன்மையை விளங்கி கொள்ள முடியும்
மீண்டு ஒரு காணொளியுடன் விரைவில் சந்திப்போம்
click here full video
லண்டன் வீட்டுக்குள் நுழைந்த பொலிஸ் – ஒரு லட்சம் பவுண்டு மீட்பு
லண்டன் வீட்டுக்குள் நுழைந்த பொலிஸ் – ஒரு லட்சம் பவுண்டு மீட்பு
லண்டன் Chorister Crescent பகுதியில் ஆடம்பர வீடொன்றுக்குள் இடம்பெற்று வந்த போதைவஸ்து ,மற்றும் புடவை விற்பனை என்பன கண்டு பிக்க பட்டுள்ளது
பொலிசுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இடம்பெற்ற திடீர் முற்றுகையின் பொழுது குறித்த வீட்டிற்குள் இருந்து ஒரு லட்சம் பவுண்டுகள் மற்றும் ஆடம்பர ஆடை வடிவமைப்பு என்பன மீட்க பட்டுள்ளது
2 hour 500+ profit-2 மணித்தியாலத்தில் 500 இலாபம் forex trade tamil video
தந்தை ,மகன் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளனர் ,கொரனோ லொக் டவுன் காலத்தில் இவ்விதமான பல போதைவஸ்து கும்பல் காவல்துறை வேட்டைக்கு உள்ளாக்க பட்டமை குறிப்பிட தக்கது
லண்டனில் கவிழ்ந்த கார் – ஒருவர் மரணம்
லண்டனில் கவிழ்ந்த கார் – ஒருவர் மரணம்
லண்டன் London Road, Strood பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று கவிழ்ந்ததில் சம்பவ நேரத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்
இந்த வாரத்தில் இடம்பெற்ற மோசமான விபத்தாக இது பார்க்க படுகிறது ,மேலும் எம் 20
சாலையில் ஐந்து கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி
விபத்தில் சிக்கியதில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது ,மேலும் இங்கும் சிலர்
படுகாயமடைந்துள்ளனர் என தெரிவிக்க படுகிறது
அமெரிக்காவில் மக்களுக்குள் துப்பாக்கி சூடு 7 பேர் மரணம் -பலர் காயம்
அமெரிக்காவில் மக்களுக்குள் துப்பாக்கி சூடு 7 பேர் மரணம் -பலர் காயம்
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் இடம்பெற்று கொண்டிருந்த கலவன் நிகழ்வில் கலந்து
கொண்ட மக்களுக்குள் நுழைந்த ஆயுத தாரிகள் திடீர் சூட்டு தாக்குதலை நடத்தினர் ,.இதில்
சம்பவ இடத்தில் ஏழு பேர் பலியாகினர் மேலும் பலர் பாடுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
தொடர்ந்து இவ்வாறான சூட்டு தாக்குதல்கள் கலிபோனியாவில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
ஏமான் விமான நிலையத்தில் குண்டு தாக்குதல் – 12 பேர் மரணம் – 38 பேர் காயம்
ஏமான் விமான நிலையத்தில் குண்டு தாக்குதல் – 12 பேர் மரணம் – 38 பேர் காயம்
ஏமான் நாட்டின் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்த பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி
சம்பவ இடத்தில 12 பேர் உடல் சிதறி பலியாகினர்
மேலும் 38 பேர் படுகாயமடைந்துள்ளனர் .,தற்போது மறு அhttps://www.youtube.com/user/ethiricom1றிவித்தல் வரை குறித்த விமான
நிலையம் அடித்து மூட பட்டுள்ளது ,இந்த தாக்குதலில் விமானங்களும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்க படுகிறது
முழுமையான சேத விபரங்கள் வெளிவரவில்லை
அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பதட்டம்
அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பதட்டம்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது திடீரென ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
இந்த ஏவுகணைகள் அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள் தங்கியுள்ள கிரீன் சூன் பகுதிகளை
இலக்கு வைத்து வீழ்ந்து வெடித்துள்ளன
இந்த தாக்குதலில் பலமான பாதிப்பு அமெரிக்கா படைகளிற்கு ஏற்பட்டுள்ளதாக ஈராக்கிய
தகவல்கள் தெரிவிக்கின்ற பொழுதும் அமெரிக்கா இதுவரை எவ்வித கருத்தையும்
தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது
- பாதாள உலகக் கும்பல் தலைவருடன் தொடர்புடைய ரூ. 44.5 மில்லியன் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- உஸ்பெக் பெண்ணைக் கடத்திய வழக்கில் முச்சக்கர வண்டி ஓட்டுநருக்குத் தண்டனை
- கோழி உற்பத்திக்கு அச்சுறுத்தல்
- இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 1.2 மில்லியன் மோசடி
ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
சிரியா நாட்டின் வான் பரப்புக்குள் நுழைந்த இஸ்ரேல் விமானங்கள் இரண்டு எட்டு
ஏவுகணைகளை ஏவினர் ,எனினும் இதனை சிரியா நாட்டு இராணுவத்தின் விமான தடுப்பு
ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக சிரியா தெரிவித்துள்ளது
இஸ்ரேல் தொடர்ந்து நாடுகளுக்குள் அத்துமீறி நுழைந்த்து பெரும் தாக்குதல்களை நடத்தி
வருகின்றமை குறிப்பிட தக்கது
மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை
மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை
மார்பக அறுவைசிகிச்சை என்பது, மார்பகத்தை காப்பதாகவோ அல்லது ஒட்டுமொத்த மார்பகத்தையும் நீக்கி, அதையடுத்து மறுகட்டமைப்பு செய்யக்கூடியதாகவோ இருக்கலாம்.
ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை
மார்பக புற்றுநோய்
ஒவ்வொரு மார்பக புற்றுநோயும், மார்பகத்திற்குள் (5 செ.மீக்கும் குறைவான) அடங்கியுள்ள ஊடுருவும் புற்றுநோய் ஆகும். மேலும், மார்பகத்தில் அல்லது அக்குளிலுள்ள நிணநீர்
கணுக்களுக்கு இது பரவியிருக்கலாம் அல்லது பரவாமலும் இருக்கலாம். மார்பகத்தை அகற்றாமல் அப்படியே பராமரிப்பதை இலக்காகக்கொண்டு புற்றுநோய் கட்டியை மட்டும் நீக்குவதே, ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதன் நோக்கமாகும்.
ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சையில் பின்வருவன உள்ளடங்கும்
- மார்பக அறுவைசிகிச்சை (Breast Surgery)
- வேதியியல் சிகிச்சை (Chemotherapy)
- கதிரியக்க சிகிச்சை (Radio Therapy)
- இலக்குடைய சிகிச்சை (Targeted Therapy)
- ஹார்மோன் சிகிச்சை (Hormone Therapy).
மார்பக அறுவைசிகிச்சை என்பது, மார்பகத்தை காப்பதாகவோ அல்லது ஒட்டுமொத்த மார்பகத்தையும் நீக்கி, அதையடுத்து மறுகட்டமைப்பு செய்யக்கூடியதாகவோ இருக்கலாம்.
மார்பக காப்பு அறுவை சிகிச்சையையடுத்து கதிரியக்க சிகிச்சை செய்வது என்பது, ஆரம்பகால
மார்ப புற்றுநோய் உடைய பெரும்பாலான பெண்களுக்கு எவ்வளவு சீக்கிரத்தில் ஒட்டுமொத்த மார்பகத்தை அப்புறப்படுத்துவது என்பது நல்லதொரு பயனளிப்பதாக இருக்கும்.
அறுவைசிகிச்சையில், அக்குளிலுள்ள நிணநீர்க்கணுக்களை அப்புறப்படுத்துவதும் உள்ளடங்கும்.
மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை
அக்குளில் உண்டாகும் கணுக்களை ஒரு சென்டினல் நிணநீர் கணு உடல்திசு ஆய்வுசெய்து, கணு பாசிட்டிவ் ஆக இருந்தால் மட்டுமே ஒரு முழு அக்குள் பிளப்பாய்வு (Axillary dissection) செய்வது சமீபத்திய சிகிச்சை முன்னேற்றமாக இருக்கிறது. கீமோதெரபி சிகிச்சை முறை – ஆரம்பகால
மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு கீமோதெரபி சிகிச்சையளிப்பது மார்பக புற்றுநோய் மீண்டும் வருவதற்கான அல்லது உடலின் இதர பாகங்களுக்கு பரவுவதற்கான ஆபத்தை
குறைக்கக்கூடும். கீமோதெரபி சிகிச்சையானது, மார்பக புற்றுநோயிலிருந்து குணமடைந்து உயிர்பிழைப்பதற்குரிய வாய்ப்பையும் அதிகரிக்கக்கூடும்.
கீமோதெரபி சிகிச்சைக்கு பிறகு மட்டுமே இதர சிகிச்சை முறைகள் தொடங்கப்படுகின்றன.
கதிரியக்க சிகிச்சைமுறை – பெரும்பாலும் ஆரம்பகால மார்பக புற்றுநோய் உள்ள பெண்களுக்கு, மார்பக பாதுகாப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, கதிரியக்க சிகிச்சை எப்போதும்
பரிந்துரைக்கப்படுகிறது. சில சமயங்களில், ஒட்டுமொத்த மார்பக நீக்க சிகிச்சைக்குப் பிறகு கதிரியக்க சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
ஹார்மோன் சிகிச்சைமுறை- தங்களுடைய மார்பக புற்றுநோய் செல்களில் ஹார்மோன் ரிசப்டர்கள் (ஹார்மோன் ஏற்பிகள்) (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்டிரோன் ரிசப்டர்கள்) கொண்டுள்ள ஆரம்பகால மார்பக புற்றுநோய் உடைய பெண்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
இவை தனியாகவோ அல்லது மற்ற மார்பக புற்றுநோய் சிகிச்சைகளுடனோ சேர்த்து பயன்படுத்தப்படலாம்.
ஒரு ஹார்மோன் சிகிச்சை முறையுடன் கூடிய ஒரு சிகிச்சைக்கு பரிந்துரைக்கலாமா மற்றும் எந்த ஹார்மோன் சார்ந்த சிகிச்சைக்கு பரிந்துரைக்கலாம் என்பது குறித்த முடிவு பின்வருவனவற்றை சார்ந்திருக்கும்:
- மார்பக புற்றுநோய் செல்களில் ஹார்மோன் ரிசப்டர்கள் உள்ளனவா
- அந்தப்பெண் மாதவிடாயின் இறுதி நிலையை (மெனோபாஸ்) அடைந்துவிட்டாரா?
ஹார்மோன் சிகிச்சைகள், மார்பக புற்றுநோய் (மார்பகங்களிலும் மற்றும் உடலின் மற்ற பாகங்களில்) மீண்டும் வரும் ஆபத்தை குறைக்கிறது. சில ஹார்மோன் சிகிச்சைகள் மார்பக
புற்றுநோய் உள்ள பெண்களுக்கு குணமடைந்து உயிர்வாழும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்வதாகவும் அறியப்பட்டுள்ளது. இலக்குடைய சிகிச்சை (Targetted Therapy) அல்லது உயிரியியல்
சிகிச்சை குறிப்பிட்ட வகை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை நிறுத்தக்கூடிய மருந்துகள் ஆகும். ஆரம்பகால மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு மிகவும் பொதுவான
பயன்படுத்தப்படும் இலக்குடைய சிகிச்சை Trastuzumab ஆகும். அதாவது HER 2 ரிசப்டர்களுக்கு எதிராக Herceptin மருந்து செலுத்துவது
புயலில் உடைந்த தோட்டம் 100 மில்லியன் நட்டம்
உலக
புயலில் உடைந்த தோட்டம் 100 மில்லியன் நட்டம்
அவுஸ்ரேலியா தெற்கு பகுதியில் பலமாக வீசிய கோர புயலின் காரணாமாக பெரும் தோட்டத்தின் கண்ணாடிகள் உடைந்து வீழ்ந்துள்ளன
இந்த புயலின் சேத விபரம் சுமார் நூறு மில்லியன் என மதிப்பிட பட்டுள்ளது
பாதிக்க பட்டவர்களுக்கு ஆளும் அரசு விரைந்து உதவ வேண்டு என்ற கோரிக்கை விடுக்க
பட்டுள்ளது ,பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் ,மற்றும் கணக்கெடுப்பு ஆரம்பிக்க பட்டுள்ளது
அவுஸ்ரேலியா கிரிக்கட் வீரர் மரணம்
அவுஸ்ரேலியா கிரிக்கட் வீரர் மரணம்
அவுஸ்ரேலிய நாட்டின் முன்தன்மை மிகு மட்டை பந்து வீச்சாளராக விளங்கிய Ashley Mallett
அவர்கள் தனது 76 ஆவது வயதில் மரணமாகியுள்ளார் இவர் தனது முதலாவது ஆட்டத்தை
இந்தியாவுக்கு எதிராக ஆடி அசத்தி இருந்தமை இங்கே பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது
சிறுவயதில் பெண்கள் வயதுக்கு வருவது ஏன் தெரியுமா
சிறுவயதில் பெண்கள் வயதுக்கு வருவது ஏன் தெரியுமா
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பெண் குழந்தைகளின் பருவமடையும் வயது 9 மற்றும் 11 ஆக இருக்கும் நிலையில், இந்தியாவிலும் சிறுவயதில் பருவமடையும் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது
குழந்தைப் பருவத்திலிருந்து நடுத்தர வயதிற்கு மாறும் இடைப்பட்ட காலத்தில் உள்ள வளர்ச்சி நிலையே வளரிளம்பருவம் எனப்படுகிறது. பின்பள்ளிப் பருவத்தைத் தொடர்ந்து 10 முதல் 20 வயது
வரை வளரிளம் பருவமாகக் கருதப்பட்டு மூன்று வித நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளது. அவை 10 முதல் 14 வருடங்கள் – முன் வளரிளம் பருவம், 12 முதல் 16 வருடங்கள் – இடை வளரிளம் பருவம், 16 முதல் 20 வருடங்கள் – பின் வளரிளம் பருவம் என்பதாகும்.
பருவ வயதில் ஏற்படும் ஹார்மோன்களின் செயல்பாட்டால், இருபாலருக்கும் உடலியங்கியல் மாற்றங்கள் ஏற்படுகிறது என்றாலும், மிக முக்கியமான கவனிக்கத்தக்க உடலளவிலான
மாற்றங்கள் பெண் குழந்தைகளுக்கே அதிகம் ஏற்படுகிறது. வளர்ச்சி விகிதமும் பருவப் பெண்களுக்கு வேகமாக நிகழ்கிறது. இந்த வயதில்தான் பெண்குழந்தைகள் பருவமடைகிறார்கள்.
பெண்குழந்தைகளின் பருவமடையும் வயது 50 அல்லது 60 வருடங்களுக்கு முன்னர், 14 முதல் 16 வயதாகத்தான் இருந்தது. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்னர் 12 மற்றும் 13 வயதில் பருவடைதல் ஏற்பட்டு, தற்போது 9 மற்றும் பத்து வயதாக மாறி இருப்பது கவலையளிக்கிறது.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பெண் குழந்தைகளின் பருவமடையும் வயது 9 மற்றும் 11 ஆக இருக்கும் நிலையில், இந்தியாவிலும் சிறுவயதில் பருவமடையும் பெண்குழந்தைகளின்
எண்ணிக்கை மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஆனாலும், இன்றளவிலும் கிராமப்புறங்களிலுள்ள பெண்குழந்தைகள் 14 முதல் 16 வயதில்தான்
பருவமடைகிறார்கள் என்பது சற்றே நிம்மதியளிக்கும் செய்திதான். இதற்கு மிக முக்கியக் காரணம், வாழ்க்கை முறையும் உணவும்தான் என்பதை மறுப்பதற்கில்லை.
ஒரு பெண்குழந்தையின் தாய் எந்த வயதில் பருவமடைந்தாரோ, அதே வயதில்தான் அவர்களுடைய பெண்ணும் பருவமடைவாள் என்பது வாய்மொழியாகக் கூறக்கேட்டதெல்லாம் இப்போது மாறிவிட்டது. இதுபற்றி நடத்தப்பட்ட ஆய்வில், வளரிளம் பருவவயதுப் பெண்ணின்
பாட்டியும், அம்மாவும் ஒரு குறிப்பிட்ட வயதில் பருவமடைந்து இருந்தாலும், மகளும் அதே வயதில் பருவமடைவாள் என்று உறுதியாகக் கூறிவிடமுடியாது. அது அப்பெண்ணின் உடல் வளர்ச்சி,
சமூகப் பொருளாதார நிலை, பரம்பரையாக இருக்கும் உடல் ஆரோக்கியம், மனநிலை போன்றவற்றைப் பொருத்தும் மாறுபடுகிறது என்ற முடிவு கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான புரத உணவு, தொடர்ச்சியான துரித உணவு என்று உணவுமுறை மாற்றமடைந்து இருப்பதும் ஒரு காரணம் என்று குழந்தைகள்நல மருத்துவர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் எச்சரிக்கைக் கொடுக்கின்றனர். ஒருபுறம், சிறுவயதில் பூப்படைதலே தவிர்க்க முடியாத
நிலையாக இருக்க, மறுபுறம் அப்பெண் குழந்தையை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்ற அதிக அக்கறையில், அக்குழந்தையின் வயதுக்கேற்ப இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கும் அதிகமான உணவும் ஊட்டமும் கொடுக்கப்படுகிறது என்ற
நிலையும் இருக்கிறது. இதனால், அக்குழந்தை, 7 ஆம் வகுப்புப் படிக்கும்போதே, 13 அல்லது 14 வயதில் இருக்க வேண்டிய உடல் எடையைவிட அதிக எடையுடன் இருப்பதும் காரணமாகக் கூறப்படுகிறது.
சிறுவயதிலேயே பருவமடைதல் என்பது, அப்பெண்குழந்தையை மட்டும் பாதிக்கும் தனிப்பட்ட உடல்நல சிக்கலல்ல. அவளுடைய பெற்றோர், பள்ளிச் சூழல், உறவினர்கள், சமூகம் என்று அனைத்திற்கும் மிக நெருங்கியத் தொடர்புடைய ஒரு சிக்கலாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.
வாழ்க்கையையும், உலகத்தையும் அறிந்துகொள்ளும் ஒரு நுழைவாயிலாகவே வளரிளம்பருவம் பார்க்கப்படுவதால், வளரிளம் பருவம் என்பது பெரும்பாலும் “வாய்ப்புகளின் வயது” என்று அழகாகக் கூறப்படுகிறது. உடலியங்கியல் மாற்றங்களுடன் சேர்ந்து சம அளவில் உளரீதியான
மாற்றங்களும் ஏற்படும் மிக முக்கியமான மனிதவளர்ச்சி நிலைதான் இந்த வளரிளம்பருவம். உடல், மன, சமூக ரீதியான பல விஷயங்களுக்குப் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அவர்களைச்
சுற்றியுள்ளவர்களால் பல்வேறு நிலைகளில் தெளிவு கொடுக்கப்பட்டு, பக்குவப்படவேண்டிய வயதாகவும் இருக்கிறது.
“பருவ வயதில் தங்களுடைய உண்மையான, நம்பகத்தன்மையுள்ள, தீர்க்கமான நிலையை ஒரு பக்கம் ஒதுக்கி வைப்பதற்காக பல்வேறு சமூக அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், அதிலிருந்து ஒரு சிறு பகுதியை மட்டுமே தங்கள் வாழ்க்கையின் வரமாகவும் பரிசாகவும் நினைத்துக் கொள்கிறார்கள் என்று உளவியல் வல்லுனர் மேரி பைபர் கூறுகிறார்.
ஆனால், இதே வயதில்தான், உடலளவில் ஏற்படும் மாற்றமான பருவமடைதல் நிகழ்வதால், அனைத்து விதத்திலும் நெருக்கடிகளுக்கு உள்ளாகி விடுகிறார்கள். சராசரி வயதான 13 அல்லது 14 வயதில் பெண்குழந்தைகள் பருவமடைந்தாலே அவர்கள் உடலளவிலும், மனதளவிலும்
பக்குவமடைதலுக்கு ஏறக்குறைய 5 வருடங்கள் ஆகிவிடும். இந்நிலையில், எப்போதும் மகிழ்ச்சியாக ஓடியாடி விளையாட வேண்டிய குழந்தைகள் பருவமடைந்து விடுவதால்,
அப்பருவத்திற்கே உரிய இயற்கையான குணநலன்களையும், துறுதுறுவென்ற குழந்தைத் தன்மையையும் அவர்களும் அவர்களின் பெற்றேர்களும் அனுபவிக்க இயலாமல் போய்விடுகிறது.
மனஅழுத்தம் என்றால் என்னவென்றே தெரியாத அந்தப் பெண் குழந்தைகள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்று அவர்களுடைய அன்றாட செயல்கள் மூலமாகவும், குடும்ப உறுப்பினர்கள்
மற்றும் அவர்கள் சந்திக்கும் பிற மனிதர்களிடம் வெளிப்படுத்தும் குணாதிசயங்கள் வழியாகவும் வெளிப்படுகிறது.
மனநலம் தொடர்பான சிறுசிறு பிரச்சினைகளுக்கும் ஆளாகிறார்கள் என்பதும் சிறுவயதில் பருவமடைந்த பெண் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில்
பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஒரு வீட்டிலுள்ள குழந்தை 9 அல்லது 10 வயதில் பூப்படைந்து விட்டால், தனது குழந்தையும் அதே போல் சிறுவயதிலேயே பருவமடைந்து விடுவாளோ என்று பயந்து, அவர்களுக்குள்ளாகவே குழப்பிக்கொண்டு பெற்றோர்களும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
பருவமடைந்த பெண்களுக்கான முதல் உடலியங்கியல் பிரச்சினை என்பது மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியும், அதனால் ஏற்படும் வயிற்றுவலி, மற்றும் அதனுடன்
தொடர்புடைய சிறுசிறு உடல் உபாதைகளும்தான். இவை, சரிவர கவனிக்கப்படாதபோது, உடலளவிலும் மனதளவிலும் பெரிய சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.
தற்போதைய காலத்தில், திருமணமான பெண்களே, மாதவிடாய் தொடர்பான நெருக்கடிகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ள இயலாமல் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், இக்குழந்தைகள் என்ன செய்வார்கள்? இதுகுறித்து ஏதும் தெரியாத வெகுளித் தன்மையுடன் மேலும் இரண்டு, மூன்று
வருடங்கள் கடக்க நேரிடுகிறது. சிறுவயதில் பருவமடைந்த பெண்குழந்தைகள் ஒவ்வொரு மாதவிடாயின்போதும், உடலளவில் சொல்லொண்ணா துயரத்தை அனுபவிக்கிறார்கள் என்பதைப் பள்ளியிலும், மருத்துவமனையிலும் கண்கூடாகக் காணமுடிகிறது.
மாதவிடாயின்போது, சாதாரண அளவிற்கும் அதிகமான இரத்தப்போக்கு அல்லது மூன்று, நான்கு மாதங்களுக்கு மாதவிடாய் வராமலிருப்பது அல்லது அசாதாரண மாதவிடாய் சுழற்சி போன்ற பிரச்சினைகள் இவர்களிடத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.
சிறுவயதில் பெண்கள் வயதுக்கு வருவது ஏன் தெரியுமா
இந்தியப் பெண்களில் 71 சதவிகிதத்தினருக்கு முதல் மாதவிடாய் ஏற்படும் வரை, அதுபற்றிய சரியான விழிப்புணர்வு கிடையாது என்ற கவலையளிக்கும் நிலையில், இச்சிறு குழந்தைகளுக்கு மாதவிடாய் மேம்பாடு பற்றி எவ்வாறு தெரிந்திருக்கும்? சிறு வயதிலேயே மாதவிடாய் வயிற்றுவலி,
கர்ப்பப்பை சுவர் தடித்து விடுதல், சிறு சிறு நீர்க்கட்டிகள் போன்ற காரணங்களுக்காக மருத்துவம் எடுத்துக் கொள்ளும்போது ஹார்மோன்களைத் தூண்டும் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.
இதுவும் பிற்காலத்தில், கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கும் காரணமாகிவிடுகிறது.
இவ்வாறான அசாதாரண மாதவிடாய் இருக்கும் நிலையில், பதறிக்கொண்டு தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாமல், உணவுமுறை மாற்றத்தைக் கடைபிடிப்பதாலும்,
உடல் உறுப்புகள் நன்றாக இயங்கி, உடல் வளர்ச்சிதை மாற்றங்களுக்கான அனைத்து நொதிகளும் ஹார்மோன்களும் கிடைக்குமாறு செய்வதும் பெற்றோர்களின் கடமையென உணரவேண்டும்.
சிறுவயதில் பெண்கள் வயதுக்கு வருவது ஏன் தெரியுமா
ஒரு பெண் குழந்தைக்கு, பிறக்கும் போதே, 1 முதல் 2 மில்லியன் சினைமுட்டைகள் சினைப்பைக்குள் இருக்கும் நிலையில், பருவமடையும் வயதில், தோராயமாக 3 லட்சம் சினைமுட்டைகளே இருக்கின்றன.
அப்பெண்ணின் இனப்பெருக்க மண்டல செயல்பாடுகளான மாதவிடாய், கர்ப்பகாலம் என்று கணக்கிடும்போது, அடுத்த 30 முதல் 40 வயது வரையில், இந்த சினைமுட்டை எண்ணிக்கையும் குறைந்து, பின்னர் முழுவதும் தீர்ந்துவிடும் நிலையில்தான் மாதவிடாய் சுழற்சி நிற்கும்காலம் (மெனோபாஸ்) ஏற்படுகிறது.
இந்தியப் பெண்களின் மெனோபாஸ் சராசரியாக 45 முதல் 55 வயதாக முன்பு இருந்தது. பின்னர் 41 முதல் 49 வயதாகக் குறைந்தது. ஆனால், சமீபத்தில், பேராசிரியர் வி.கே.வி.ஆர். ராவ் அவர்களின்
சமூக மற்றும் பொருளாராதார மாற்றத்திற்கான நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்த மாதவிடாய் நிற்கும் காலம் 35 வயது முதல் 39 வயதாகக் குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிறுவயதிலேயே பருவமடையும் பெண்களின் மாதவிடாய் சுழற்சியும் வெகு விரைவாகவே முடிவடையும் நிலையில், மாதவிடாய் நிற்கும் காலமும் 28 முதல் 35 வயதிற்குள் ஏற்பட்டுவிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனால், குழந்தைப்பேறு ஏற்படும் வயதிலேயே
சிறுவயதில் பெண்கள் வயதுக்கு வருவது ஏன் தெரியுமா
சினைமுட்டை எண்ணிக்கையும் குறைந்து, அப்பெண்ணின் இனப்பெருக்கத்திறனை பாதித்து, தாய்மையடைவதில் தாமதமோ அல்லது குழந்தைப்பேறு என்பதே இல்லாத நிலையோ உருவாகலாம் என்று மகப்பேறு இயல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குறைந்துகொண்டு வரும் உடற்பயிற்சி, தகவல் தொடர்பு சாதனங்களுடன் நேரம் செலவழித்தல், அதிகரித்துவரும் மிதவாழ்க்கை முறை போன்றவை உடற்பருமனை அதிகரித்து வருகின்றன என்ற எச்சரிக்கைமணி ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. பதினோறு வயதில் 40 முதல் 45 கிலோ உட
ல் எடை இருக்க வேண்டிய பெண்குழந்தைகள் 50 கிலோவும் அதற்கு மேலும் இருப்பது தற்போது அதிகரித்துள்ளது. இடைப்பட்ட வளரிளம்பருவ வயதை அடையும்போதே, அதாவது 15 வயதில் 50
முதல் 52 கிலோ உடல் எடையும், 18 வயதில் 54 முதல் 56 கிலோ உடல் எடையும் இருக்க வேண்டிய பெண் குழந்தைகள் முறையே, 60 கிலோ மற்றும் 70 கிலோவிற்கும் கூடுதலாக இருக்கிறார்கள்.
சிறு வயதிலேயே உடல் எடை அதிகரிப்பதால், கர்ப்பப்பையில் சுரக்கும் முக்கிய ஹார்மோன்களான follicle stimulation hormone மற்றும் luteinizing hormone என்ற இரண்டையும்
பாதிக்கிறது. இதுவும், சிறுவயதில் பருவமடையும் பெண்குழந்தைகளுக்கு சினைப்பை நோய்க்குறி றிசிளிஷி ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது.
சிறுவயதில் பருவமடைதலால் ஏற்படும் உடற்பருமன் ஒருபுறமிருக்க, அதிக உடற்பருமனாலும், சிறுவயதில் பருவமடைதல் நிகழ்கிறது என்ற இரண்டு வகையான நெருக்கடிகளையும் 9 முதல் 12 வயதுவரையுள்ள பெண்குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் சந்திக்கும் சூழல் உருவாகி
இருப்பது வருதத்திற்குரியதே. என்றாலும், முறையான உணவுப்பழக்கம், சரியான உடற்பயிற்சி மற்றும் தூக்கம் போன்றவற்றால், குழந்தைப்பருவ வயதிற்குரிய சரியான உயரம், உடல்
எடையைப் பராமரிக்கலாம். பெண் குழந்தைகளை நன்றாக விளையாட விடுவதால், இரத்த ஓட்டம் சீராகி, உடல் உறுப்புகள் பலப்படுவதுடன், எண்ணங்கள் சிதறாமல் ஒருங்கிணைக்கப்பட்டு, மனநலனும் காக்கப்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், வேதிப்பொருட்கள் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து, இயற்கையில் கிடைக்கும் காய்கள், பழங்கள், தானியங்கள், நார்ச்சத்தும் நுண்சத்துகளும் நிறைந்த உணவுகள் போன்றவற்றை குழந்தைப் பருவத்திலேயே சரியான
அளவில் கொடுக்க வேண்டும். ஊட்டச்சத்து மற்றும் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் தனிப்பட்ட முறையிலும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாகவும் பெண் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
வளரிளம்பருவப் பெண்களின் ஆரோக்கியத்திற்காக நலவழித்துறை, அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் கொடுத்துவரும் செயல்பாடுகளை, 8 முதல் 12 வயது வரையிலுள்ள பெண்குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டியக் கட்டாயத்தில் சமூகம் இருப்பதை உணர்ந்து
அனைவரும் செயல்பட்டால், பலவிதங்களில் நன்மை கிடைக்கும். இவ்வாறான ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் மூலமாக, சிறுவயது பூப்படைதல் ஓரளவிற்குத் தவிர்க்கப்பட்டு சரியான வயதில்
பெண் குழந்தைகள் பருவமடைதல் ஏற்படுவதுடன், அவர்களின் எதிர்கால வாழ்க்கையும் ஆரோக்கியமாக அமையும்.
இத்தாலி பிரதமருடன் மோடி சந்திப்பு
இத்தாலி பிரதமருடன் மோடி சந்திப்பு
இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள பிரதமர் மோடி ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மற்றும்கமிஷன் தலைவர்களையும் சந்தித்தார்.
இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டில்
ரோம் நகரில் 2 நாட்கள் நடக்கிறது. இத்தாலி பிரதமர் மரியோ டிராகி அழைப்பின்பேரில், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
மேலும், இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான உலக தலைவர்கள் மாநாடு வரும் 1 மற்றும் 2-ம் தேதிகளில் நடக்கிறது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பின்பேரில் இந்த மாநாட்டிலும் மோடி கலந்து கொள்கிறார்.
இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று தனி விமானத்தில் இத்தாலி
புறப்பட்டு தலைநகர் ரோம் சென்றடைந்தார். ரோம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இத்தாலிய பிரதமர் மரியோ டிராகியை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பயணத்தில் நேபாளம், இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகளில் புதிதாக பொறுப்பேற்ற
பிரதமர்களையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இங்கிலாந்தில் நடைபெறும் பருவநிலை மாறுபாடு உச்சிமாநாட்டிலும் பங்கேற்கிறார்.
லண்டன் மீன்பிடி படகை சிறை பிடித்த பிரான்ஸ் – முறுகல் உச்சம்
லண்டன் மீன்பிடி படகை சிறை பிடித்த பிரான்ஸ் – முறுகல் உச்சம்
பிரிட்டன் நாட்டுக்கு சொந்தமான ரோலர் படகு ஒன்று மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்தது
,இந்த படகு அத்துமீறி பிரான்ஸ் கடல் பரப்புக்கள் மீன் பிடித்ததை அடுத்து பிரான்ஸ் எல்லையோர காவல்படையினரால் சிறை பிடிக்க பட்டுள்ளது
இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தியுள்ளது
ரஜனி மருத்துவனையில் அனுமதி – அதிர்ச்சியில் ரசிகர்கள்
ரஜனி மருத்துவனையில் அனுமதி – அதிர்ச்சியில் ரசிகர்கள்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு, நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிக்கு இப்படி ஒரு பாதிப்பா? – வெளியான புதிய தகவல்
ரஜினிகாந்த்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் முழு உடல்
பரிசோதனை மேற்கொண்டபோது ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து
சிகிச்சைப்பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ரஜினிகாந்த்
இந்நிலையில், ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்த நாள பாதிப்பை சரிசெய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும், நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை
அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவை
சிகிச்சை செய்திருப்பதால், பிற உறுப்புகளின் செயல்பாடுகளையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பேஸ்புக்’கின் பெயர் மாற்றம் Facebook – Meta
பேஸ்புக்’கின் பெயர் மாற்றம் Facebook – Meta
பேஸ்புக்’கின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதன் புதிய பெயர் மெட்டா என பேஸ்புக்’கின் தலைமை
அதிகாரி (CEO ) Mark Zuckerberg மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், மெய்நிகர் ஒன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி
தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகவும், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் வெல்வோம் ..!
ஒரு நாள் வெல்வோம் ..!
சில்லென ஓடி காற்று
சிலுக்காய் ஆடிய நேற்று
வீழ்ந்தது தமிழின கூற்று
விடுதலை போனது தோற்று
மலரிலே வீழ்ந்தொரு வண்டு
மகிழ்ந்தது கலவி நன்று
கொடியோன் செயலாது கண்டு
கொதித்தான் தலைமகன் அன்று
வெடித்தது சேனை நன்று
வெறியுடன் துரத்தின அன்று
ஓடினான் தப்பி மன்று
ஒடித்தான் முழுவதும் கொன்று
இடிந்தது தமிழ் மனம் இன்று
இடிந்தது செயல் நிலம் ஒன்று
முளைக்குமா தலை இனி ஒன்று
முழு தமிழ் நிலை இது இன்று
வெடிக்குமா போர் மண் ஒன்று
வெடி நிலைக்குமா இனி நன்று
தென் திசை பகைவர் வீழ்ந்திட
செழிக்குமா தமிழ் மண் நன்று …?
கொத்திய கழுகு உதடும்
கொடி நட்டே ஆடிய வாளும்
விட்டே ஓடிடும் காலம் – நிலம்
விடுதலை பெற்றே ஆடும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 28-10-2021
ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை ஐகோர்ட்
ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை ஐகோர்ட்
ஆர்யன் கானின் ஜாமீன் மனுக்கள் கீழ் நீதிமன்றத்தில் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
போதைப் பொருள் வழக்கு- ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை ஐகோர்ட்
ஆர்யன் கான்
சொகுசு கப்பலில் போதை விருந்து தொடர்பாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்,
அர்பாஸ் மெர்சன்ட், முன்முன் தமேச்சா உள்ளிட்ட சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கான் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் வழங்கக்கோரி 2 முறை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால், 2 முறையும் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் ஜாமீன் வழங்கக் கோரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதேபோல் அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா ஆகியோர் சார்பிலும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆர்யன் கான் சார்பில் முகுல் ரோகத்கி, முன்முன் தமேச்சா சார்பில் அலி காஷிப் கான் தேஷ்முக், அர்பாஸ் மெர்ச்சன்ட் சார்பில் அமித் தேசாய் ஆகியோர் வாதாடினர்.
மூன்று நாட்களாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் ஆர்யன் கானுக்கு இன்று ஜாமீன் வழங்கி
மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது. அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா கியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.












