Author: நிருபர் காவலன்
HSBC வங்கியின் மனேஜர் புரிந்த ஒரு மில்லியன் மோசடி அம்பலம்
HSBC வங்கியின் மனேஜர் புரிந்த ஒரு மில்லியன் மோசடி அம்பலம்
பிரிட்டனில் மிக பிரபலமாக பேச ப்படும் வாங்கி HSBC ஆகும் ,மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது
இந்த வங்கியின் கிளை ஒன்றில் மனேஜர் ஆக பணிபுரிந்த ஒருவர் மற்றும் அவரது கூட்டாளியுடன்
இணைந்து பெரும் செல்வந்தர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் கொள்ளையடிக்க பட்டது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்வாறு ஏழுமுறை இவர்கள் புரிந்த சதிகள் மூலம் சுமார் ஒரு மில்லியன் பணம் கொள்ளையடிக்க பட்டுள்ளது
கண்டு பிடிக்க பட்டுள்ளது
குறித்த வங்கியின் உள் கட்டமைப்பு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் மேற்படி
விடயம் கண்டு பிடிக்க பட்டுள்ளது
தற்போது இவர்கள் இருவருக்கும் 12 வருடம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது
லண்டனுக்குள் ஒரே நாளில் 700 அகதிகள் கடல்வழியாக நுழைதல் தடுப்பு
லண்டனுக்குள் ஒரே நாளில் 700 அகதிகள் கடல்வழியாக நுழைதல் தடுப்பு
பிரான்சுக்கு பிரிட்டனுக்கும் இடையில் முறுகல் உச்சம் பெற்றுள்ள நிலையில் மீனவர்கள்
அத்துமீறல் மற்றும் அகதிகள் நுழைவு பெரும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது
நேற்று மட்டும் பிரிட்டனுக்குள் கடல்வழியாக 700 அகதிகள் நுழைய முயன்றனர் எனவும் அவை
தடுத்து நிறுத்த பட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது
பிரான்ஸ் டோவர் கடல்வழியூடாக நுழைய முயன்ற பொழுதே இந்த தடுத்தல் இடம்பெற்றுள்ளது
என தெரிவிக்க பட்டுள்ளது .
மனைவி 3 பிள்ளைளை கொன்ற கணவனுக்கு சிறை தண்டனை
மனைவி 3 பிள்ளைளை கொன்ற கணவனுக்கு சிறை தண்டனை
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் குழப்பத்தில் காணப்பட்ட கணவர் ஒருவர் தனது மனைவி
மற்றும் மூன்று பிள்ளைகளை கொன்றுள்ளார்
மேற்படி குற்ற சாட்டில் கைது செய்ய பட்ட கணவருக்கு சாகும்வரையிலான ஆயூள் தண்டனை
வழங்க பட்டுள்ளது
அதி குற்ற செயல்களுடன் தொடர்பு பட்ட சிறையில் இவர் அடைக்க பட்டுள்ளார்
குருதீஸ் போராளிகளை சந்தித்து பேசிய -ஈரான் இராணுவ தளபதி
குருதீஸ் போராளிகளை சந்தித்து பேசிய -ஈரான் இராணுவ தளபதி
ஈரான்,துருக்கி சிரியா ,ஈராக் என்ற நான்கு நாடுகளுடனும் போராடி வருகிறது குருதீஸ்
போராளிகள் ,இவ்வாறான நிலையில் புலிகளை போன்று அழிவு நிலையில் இருந்த குருதீஸ்
போராளிகளை ஈரானிய இராணுவ தளபதி திடீரென சந்தித்து பேசியுள்ளார்
இவரது இந்த சந்திப்பு பெரும் திருப்புமுனையாக குருதீஸ் போராளிகளுக்கு அமைய பெறும் என
எதிர் பார்க்க படுகிறது
சவூதி மீது ஏமன் இராணுவம் ஏவுகணை தாக்குதல்
சவூதி மீது ஏமன் இராணுவம் ஏவுகணை தாக்குதல்
சவுதியின் தென்மேற்கு பகுதியை இலக்கு வைத்துஏமான் இராணுவ படைகள்
ஏவுகணை தாகுதல் நடத்தியுள்ளனர்
மூன்று பாலிஸ்டி ஏவுகணைகள் அங்கு வீழ்ந்து வெடித்துள்ளதாக சவூதி தெரிவித்துள்ளது ,
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை
கல்வி போராளி மலாலாவுக்கு திருமணம்
கல்வி போராளி மலாலாவுக்கு திருமணம்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்ந்த மலாலா, 2020ம் ஆண்டு தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (24), கடந்த 2012-ம் ஆண்டு பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பகிரங்கமாக பேசியதற்காக, தலிபான் பயங்கரவாதிகள் அவர் மீது தாக்குதல்
நடத்தினர். இதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மலாலா, பல மாத சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறினார்.
பிறகு, தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடிபெயர்ந்த மலாலா, பெண் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி, 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மேலும், மலாலா, பெண் குழந்தைகளின் கல்வி எதிர்காலத்திற்கு உதவும் வகையில், தனது பெயரில் நிதி நிறுவனம் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
பின்னர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்ந்த மலாலா, 2020ம் ஆண்டு தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றார்.
இந்நிலையில், இங்கிலாந்து பிர்மிங்காமில் அமைந்துள்ள அவரது வீட்டில் நேற்று எளிய முறையில் அசார் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார்.
தனது திருமண நிகழ்வு குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், “இன்று என் வாழ்வின் பொன்னான நாளாகும். அசாரும், நானும் வாழ்க்கையில் இணைய முடிவு செய்து திருமணம் செய்து கொண்டோம்.
எங்கள் நிக்கா குடும்பத்தினர் முன்னிலையில் எளிய முறையில் பிர்மிங்காமில் உள்ள வீட்டில் நடந்தது. உங்களது ஆசீர்வாதத்தை எங்களுக்கு அனுப்புங்கள் ” என்று குறிப்பிட்டிருந்தார்.
17 வயதில் காதல்… 18 வயதில் கர்ப்பம்
17 வயதில் காதல்… 18 வயதில் கர்ப்பம்
இளம் வயது கர்ப்பிணிகள் குறைப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். அந்த குழந்தைகளின் எடை குறைவாக இருக்கும்.
18 வயதில் கர்ப்பம்
பெண்கள் ஒருபுறத்தில் கல்வி, ஆரோக்கியத்தில் அதிக விழிப்புணர்வு பெற்று முன்னேறிக்கொண்டிருந்தாலும், இன்னொரு புறத்தில் பழைய சோக கதைகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
பள்ளிப் பருவம் முடியும் 17 வயதிலே காதல்வசப்படுவது, 18 வயதானதும் ரகசிய திருமணம் செய்துகொண்டு, அவசரமாய் தாய்மை அடைவது போன்றவை இப்போதும் அன்றாட செய்திகளாகிக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்த சூழ்நிலைக்கு உள்ளாகும் அவசர ஜோடிகளுக்கு சமூகநெருக்கடிகளும், பொருளாதார நெருக்கடிகளும் ஏற்பட்டு அவர்களது வாழ்க்கையை
சின்னாபின்னப்படுத்திவிடுவது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகிறது.
சுகாதாரத்துறை நிபுணர்கள் 20 வயதுக்கு கீழ் உள்ள எல்லா கர்ப்பிணிகளையும் ‘இளம் வயது கர்ப்பிணிகள்’ என்ற பட்டியலில் சேர்க்கிறார்கள்.
இந்த வயதுகளில் பிரசவிக்கும் பெண்கள் அதிகபட்சமான மனஅழுத்தத்திற்கும், ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் உள்ளாகிறார்கள்.
17 வயதில் காதல்… 18 வயதில் கர்ப்பம்
19 வயதுக்கு கீழ்உள்ள பெண்கள் எந்தவிதமான கர்ப்பத்தடை முறைகளையும் கடைப்பிடிக்காமல் தாம்பத்ய உறவுகொண்டால் ஒரு வருடத்திற்குள் அவர்கள் கர்ப்பிணியாகிவிடும் வாய்ப்பு 90 சதவீதம் இருக்கிறது.
இந்த பருவத்தில் உள்ள டீன்ஏஜ் பெண்களில் 33 சதவீதம் பேர் பாலியல் உறவில் அதிக வேட்கையுடனும் இருப்பார்கள்.
இத்தகைய சூழ்நிலைகளால் இளம் வயது கர்ப்பம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
இளம் வயதிலே திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் உடனே கர்ப்பமாவதை தவிர்க்கவேண்டும்.
அவர்கள் இருவருக்குள்ளும் மானசீக நெருக்கம் ஏற்பட்ட பின்பே அவர்கள் தாய்மையை பற்றி பரிசீலிக்கவேண்டும். 20 வயதுக்கு பிறகு 24 வயது வரை தலைபிரசவத்திற்கு ஏற்ற காலமாக இருப்பதால் அது வரை பொறுமை காக்கவேண்டும்.
கர்ப்பத்தடை உறைகள், மாத்திரைகள், ஊசி மருந்துகள் போன்ற பலவகை தடுப்பு முறைகள் இருக்கின்றன.
டாக்டரின் ஆலோசனைபடி அதில் பொருத்தமானவற்றை தேர்ந்தெடுத்து கடைப்பிடித்து இளம் வயது கர்ப்பத்தை தவிர்க்கவேண்டும்.
இதனை மேற்கொள்ளாமல் 20 வயதுக்கு முன்பே பிரசவித்துவிடும் பெண்களுக்கு ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம், பிரசவத்திற்கு பின்பு ஏற்படும் ரத்தப்போக்கு போன்ற பல்வேறு பாதிப்புகள் உருவாகக்கூடும்.
17 வயதில் காதல்… 18 வயதில் கர்ப்பம்
பிரசவம் நடந்த உடனே அல்லது அடுத்த 24 மணிநேரத்திற்குள் ஏற்படக்கூடிய அசாதாரணமான ரத்தப்போக்கு சில நேரங்களில் அந்த பெண்களின் கருப்பையை நீக்கம் செய்யும் அளவுக்கு நிலைமையை சிக்கலாக்கிவிடுகிறது.
இளம் வயது கர்ப்பிணிகள் குறைப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். அந்த குழந்தைகளின் எடை குறைவாக இருக்கும். குழந்தைகளின் எடை 2 கிலோவிற்கும் குறையாமல் இருக்கவேண்டும்.
எடைகுறைவாக பிறக்கும் குழந்தைகளை தொற்றுகளும், நோய்களும் தாக்கும் வாய்ப்பு அதிகம். எதிர்காலத்தில் அவர்களுக்கு உடல் வளர்ச்சி மற்றும் மனோவளர்ச்சி பாதிக்கப்படும் வாய்ப்பும் உண்டு.
இளம் வயது கர்ப்பிணிகள் பல்வேறுவிதமான சமூக நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இளம் வயதிலே காதலிப்பவர்களாக இருக்கிறார்கள்.
அவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், வீட்டைவிட்டு வெளியேறிச் செல்கிறார்கள். பெற்றோர் தேடிவந்து தங்களை பிரித்துவிடக்கூடாது என்பதற்காக, அவசரப்பட்டு திருமணம் செய்துகொள்கிறார்கள்.
அதன் பின்புதான் அவர்களுக்கு அவசரப்பட்டுவிட்டதும், குடும்பத்தினர் யாருடைய அனுசரனை இல்லாமல் இருப்பதும் தெரிகிறது. அதனால் தவித்துப்போகும் அவர்கள் மீண்டும் குடும்பத்தினரின் அன்புக்கு ஏங்குகிறார்கள்.
‘தாய்மையடைந்து ஒரு குழந்தையை பெற்றெடுத்துவிட்டால், அந்த குழந்தை இரண்டு குடும்பத்தினையும் இணைக்கும் பாலமாகிவிடும்’ என்று உடனடியாக கர்ப்பிணியாகிவிடுகிறார்கள்.
ஆனால் அவர்களது அந்த செயல் மிகப்பெரிய தப்புக்கணக்காகிவிடுகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தை பிறந்த பின்பும் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை என்பதுதான் நிஜம்.
கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி
பீகாரில் கடந்த சில தினங்களுக்கு முன் கள்ளக்சாராயம் குடித்து 25க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
பீகாரில் தொடரும் சோகம் – கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி
பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு கடந்த 5 ஆண்டாக அமலில் உள்ளது. மது விலக்கு அமலில் உள்ளதால் சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சி குடிப்பது அரங்கேறி வருகிறது.
போதை அதிகமாக சாராயத்தில் ரசாயனப் பொருட்கள் அதிக அளவில் கலக்கப்படுகிறது. இதனால் சாராயம் கள்ளச்சாராயமாகி அப்பாவி மக்களின் உயிரை குடித்துவிடுகிறது.
இந்நிலையில், பீகார் மாநிலம் முசாபர்பூரின் கண்டி பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
இப்படி வாழ்ந்து இறந்து போ ..!
இப்படி வாழ்ந்து இறந்து போ ..!
சின்னம் சிறு எறும்பிடை கற்றுக்கொள்ளு – அதன்
நிகழ்ச்சி நிரல் மெல்ல வந்து எடுத்து கொள்ளு
உடலை விட பன்மடங்கு சுமக்குது பார்
உலகிலேறி தன் புகழை விதைக்குது பார்
பார்வையிலே சிறிதென்று ஒதுக்கி வைத்தார் – இவர்
பலத்தை கண்டேன் வியந்து நின்றார் ..?
போர்வைக்குள்ளே மறைந்திருந்தால் சூடுவரும் – குளிர்
போர்வை விட்டு எழுந்துவிட்டால் தெரிந்து விடும்
சிந்தையுளார் மன்றில் வந்து பேசிடுவார் – சபை
சிரிக்கும் படி தன்பேச்சை வைத்திடுவார்
அறிவு தன்னை அறிந்துவைத்து அவிழ்த்திடுவார்
அதனாலே உச்சி புகழ் பெற்றுவிட்டார்
வறுமையுளார் வலிகள் தன்னை படித்திடுவார்
வலி சுமந்தார் வாழ்வினிலே வென்று நிற்பார்
ஆணவத்தை தலைமேல வைத்து விட்டார்
ஆணிவேர் அறுத்தெறிந்து வீழ்ந்திருப்பார்
உன்னிடத்தில் உள்ளதை கொடுத்து பார் – இவர்
உள்ளம் மகிழ உன்னை நினைத்திருப்பார்
இறந்த பின்னும் இவ்வையம் வாழ்ந்திருப்பார்- இவர்
இறைவனாக மக்கள் மனம் போற்றிடுவார் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 09-11-2021
புதிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு
புதிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு
குளிர்பதன பெட்டியில் வைக்க தேவையில்லாத புதிய கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவின்
பாஸ்டன் நகரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியை சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர் உருவாக்கி உள்ளனர்.
குளிரூட்டும் வசதி தேவைப்படாத புதிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு
கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளன. இந்த தடுப்பூசிகளை குளிர்பதன
அறையிலோ அல்லது குளிர்பதன பெட்டியிலோ வைத்து பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், தடுப்பு மருந்தின் செயல்திறன் போய்விடும்.
ஆனால், குளிர்பதன பெட்டியில் வைக்க தேவையில்லாத புதிய கொரோனா தடுப்பூசி
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியை சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர் இந்த தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர்.
வைரசின் முனைப்பகுதியில் உள்ள புரோட்டினை கொண்டு தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.
இதை தயாரிப்பது எளிது. கொரோனாவை உருவாக்கும் சார்ஸ் வைரஸ் மற்றும் அதன் உருமாறிய ரகங்களுக்கு எதிராக சிறப்பான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
அறை வெப்பநிலையிலேயே 7 நாட்கள்வரை வைத்திருந்து இதை பயன்படுத்தலாம். அதுவரை சீராகவும், செயல்திறன் மிக்கதாகவும் தடுப்பூசி இருக்கும்.
மற்ற நோய்களுக்கான தடுப்பூசி உற்பத்திக்கும் இந்த வழிமுறையை பயன்படுத்தலாம். இந்த
தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை கோரி விஞ்ஞானிகள் விண்ணப்பித்துள்ளனர். மேலும், தடுப்பூசியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த மருந்து நிறுவனங்களை அணுக உள்ளனர்
அமெரிக்கா கப்பல் வருகை – ஈரான் திடீர் போர் ஒத்திகை
அமெரிக்கா கப்பல் வருகை – ஈரான் திடீர் போர் ஒத்திகை
ஈரான் கடல் பகுதியை அண்மித்து அமெரிக்கா போர் கப்பல் வருகையை அடுத்து தற்போது
ஈரானின் முப்படைகள் இணைந்து மிக பெரும் இராணுவ போர் ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளனர்
இந்த போர் ஒத்திகை மூலம் அமெரிக்காவை எவ்வேளையும் நாம் தாக்குவோம் என்பதாக ஈரான்
தெரிவித்துள்ளது
ஈரானின் இந்த நகர்வை அடுத்து அமெரிக்கா தனது படை நகர்வை நிறுத்துமா என்ற கேள்வி
எழுந்துள்ளது
அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 447 பேர் மரணம் – 778 பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 447 பேர் மரணம் – 778 பேர் காயம்
அமெரிக்காவில் தற்போது துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன
இவற்றில் 447 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டும் 778 பேர் காயமடைந்துள்ளனர்
கடந்த ஆண்டில் மட்டும் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக புதிய புள்ளி விபரம் தெரிவித்துள்ளது
,தொடர்ந்து அத்துமீறி செல்லும் இந்த ஆயுத கலாச்சாரத்தை கட்டு படுத்தும் நடவடிக்கை முடுக்கி
விட படலாம் என எதிர் பார்க்க படுகிறது
பிரான்சில் போலீசார் மீது கத்தி வெட்டு – அதிர்ச்சியில் மக்கள்
பிரான்சில் போலீசார் மீது கத்தி வெட்டு – அதிர்ச்சியில் மக்கள்
பிரான்ஸ் Cannes பகுதியில் போலீஸ் நிலையம் முன்பாக நின்று கொண்டிருந்த போலீசார் ஒருவர்
மீது மர்ம நபர் ஒருவர் திடீரென கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டார்
,அவரை அடுத்து மறு போலீசார் மீது வெட்டு தாக்குதலை மேற்கொள்ள முற்பட்ட பொழுது
மூன்றாவது காவல்துறை சிப்பாய் ,தீவிரவாதி மீது துப்பாக்கி சூட்டு தாக்குதலை மேற்கொண்டார்
இதில் பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் ,குறித்த நபர்
தொடர்பான விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை
ஏன் என்னை விட்டு விலகினாய் ..?
ஏன் என்னை விட்டு விலகினாய் ..?
நித்தம் உன்னை பாடிட தானே
நிகழ் காலம் துடிக்கிறேன்
கத்தும் கடல் போல உன்னை
காண தானே தவிக்கிறேன்
பட்ட துயர் மறைந்திட தானே
பகலே உன்னை அழைக்கிறேன்
வித்துடல் ஆகிட முன்னே
விழி காட்டு அழைக்கிறேன்
ஒருமைக்கும் பன்மைக்கும் இடையிலே
ஓடி உறவாடினாய் – இன்று
ஓடி ஓடி மறைவதென்ன
ஒரு தரம் பதில் சொல்லாய்
விடியுமா அந்த கிழக்கு – ஒளி
தருமா வந்து எனக்கு
ஏனோ வானில் மறைந்தாய்
இருளை அள்ளி விதைத்தாய் ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 08-11-2021
குருதிஸ் பகுதிக்குள் குவிக்க படும் அமெரிக்கா இராணுவம் – ஈரானுடன் யுத்தமா …?
குருதிஸ் பகுதிக்குள் குவிக்க படும் அமெரிக்கா இராணுவம் – ஈரானுடன் யுத்தமா …?
ஈராக்கில் இருந்து ஆயுத தளபாடங்களை பின்வாங்கும் அமெரிக்கா இராணுவம் அவற்றை
குருதிஸ் போராளிகள் குவிக்க பட்டுள்ள Kharab al-Jir இராணுவ விமான தளத்தில் தரை இறக்க படுகின்றன
கனரக ஆட்டிலொறிகள் ,ஏவுகணைகள் டாங்கிகள் ,டிரக்குகள் கவச வாகனங்கள் என்பன இதில் அடங்க படும்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டு
வரும் நிலையில் இந்த பின்வாங்கல் நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது
எனினும் இவை குருதீஸ் போராளிகள் பகுதியில் குவிக்க படுவதால் மீள் துருக்கி மற்றும் ஈரானுடன்
அமெரிக்கா மோதலை ஏற்படுத்த இங்கு தயராகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது
ஈராக் அதிபர் வீடு மீது விமான தாக்குதல்
ஈராக் அதிபர் வீடு மீது விமான தாக்குதல்
ஈராக்கிய ஆளும் அதிபர் residence of Mustafa Al-Kadhimi, Iraqi Prime Minister
இல்லம் மீதுமர்ம டிரோன் திடீர் குண்டு தாக்குதலை நடத்தியது
இந்த தாக்குதலினால் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ள அவர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்
இவரே அமெரிக்காவை நாட்டை விட்டு அகன்று செல்லும் படி வலியுறுத்தியவர் ,அவ்வாறான நிலையில்
இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
தாய்வானுக்குள் நுழைந்த சீனாவின் 16 போர் விமானங்கள்
தாய்வானுக்குள் நுழைந்த சீனாவின் 16 போர் விமானங்கள்
தாய்வானுக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்ட காலமாக முறுகல் நிலை இடம்பெற்ற வண்ணம்,
உள்ளது ,இந்த முறுகளை அடுத்து தாய்வானுக்குள் அமெரிக்கா படைகள் நுழைந்து தளம்
அமைத்து காத்துள்ளனர்
இதனால் சீற்றம் அடைந்த சீனா தனது 16 போர் விமானங்களை தாய்வானுக்குள் அனுப்பியது
மேற்படி விமானங்கள் பறந்து வட்டமிட்டு நாடு திரும்பின
இந்த சம்பவம் நாடுகளுக்கு இடையில் பெரும் போர் பதட்டத்தை உருவாக்காகியுள்ளது
மகளை கர்ப்பமாக்கிய தந்தை – சிசுவை கொன்று வீசிய கொடூரம்
மகளை கர்ப்பமாக்கிய தந்தை – சிசுவை கொன்று வீசிய கொடூரம்
பிறந்து மூன்று நாள்களேயான சிசுவின் சடலம், கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (05) பொலிஸாரால் மீட்கப்பட்டது.
சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அம்பாறை மாவட்டத்தின் சொறிக் கல்முனை – சம்மாந்துறை பிரதான வீதியின் கிட்டங்கி ஆற்றில் இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.
இது தொடர்பாக, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்னல் கிராமம் – 01 கிராம சேவையாளர் பிரிவில் வசித்துவரும் பக்கீர் தம்பி அஸ்பர் (வயது-41) என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
தனது 19 வயதுடைய மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டு பிறந்த சிசுவையே இவ்வாறு ஆற்றுக்குள் வீசியதாக கைதாகிய சந்தேகநபர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபருடன் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் மற்றும் அம்பாறை மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர், இராணுவத்தினர் ஒன்றிணைந்து வீசப்பட்ட சிசுவின் சடலத்தை மீட்டெடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான், உயிரிழந்து சிசுவை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து, அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு சிசுவின் சடலம் எடுத்துச்செல்லப்பட்டது.
நாளாந்த கூலி தொழிலாளியான சந்தேக நபர், இரண்டு திருமணம் செய்தவர் என்பதுடன், தற்போது மனைவிமார்களுடன் இல்லாத நிலையில், முதல் திருமணத்தில் பிறந்த 19 வயதுடைய தனது மகள் மற்றும் இரண்டாவது திருமணத்தில் பிறந்த 2 பிள்ளைகளுடனும் வாழ்ந்து வந்த நிலையில், இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை, சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல் தாங்கி வெடித்து சிதறி 100 பேர் மரணம்
பெட்ரோல் தாங்கி வெடித்து சிதறி 100 பேர் மரணம்
Sierra Leone பகுதியில் பெட்ரோல் காவி சென்ற தாங்கி ஒன்று ரக் ஒன்றுடன் மோதி சிதறி வெடித்தது
,இந்த சம்பவத்தில் சிக்கி இதுவரை நூறு பேர் பலியாகியுள்ளனர் மேலும் நூற்றுக்கு
மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ண உள்ளனர்
மேற்படி விபத்து தொடர்பில் பூரண விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
போலி நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் மோசடி
போலி நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் மோசடி
தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து வாடிக்கையாளர்கள் கடன் பெற்று இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக 2 ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் தனியார் நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் மோசடி
நகைகள்
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு எஸ்.பி. எப்.சி. எனும் பெயரில் தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனம் காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் ஆண்டுதோறும் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்வது வழக்கம். கடந்த சில தினங்களாக நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் தலைமை நிறுவனத்தில் இருந்து வந்த அதிகாரிகள் கணக்குகளை தணிக்கை செய்த போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து வாடிக்கையாளர்கள் கடன் பெற்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்து வங்கியில் பணிபுரியும் ஊழியர்களான காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், மகேஷ் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் இருவரும் வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றதாக கணக்கு காட்டி பல லட்சம் பணத்தை எடுத்து மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து தனியார் நகை கடன் நிறுவன தலைமை அதிகாரி விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தனியார் நகை கடன் வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த இரு ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







