மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி இப்படி செஞ்சா வீடே மணக்கும்

மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி இப்படி செஞ்சா வீடே மணக்கும்.இலகுவான மீன் குழம்பு செய்முறை எச்சி ஊறும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க
Spread the love

மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி இப்படி செஞ்சா வீடே மணக்கும்

மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி ..? இது போல மீன் செஞ்சா வீடே மணக்கும் ,
அவ்வாறான தரணமான மிகவும் சுவை தரவல்ல மீன் குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

மீன் குழம்பு செய்வது எப்படி .

மீனை நனறாக வெட்டி கழுவி ,அதன் பின்னர் மஞ்சள் தூள் போட்டு கலக்கி நன்றாக ஊற வைத்திடுங்க .


சுவையாக மீன் குழம்பு வருவதற்கு காரணம் புளி தாங்க .அவ்வாறான புளியை நீரில் போட்டு ஊற வைத்து வடித்து எடுத்து வைத்திடுங்க .

கரைத்து வடித்த புளிக்குள்ள இப்போ ,மஞ்சள் தூள் ,இரண்டு கரண்டி மிளகாய் தூள் ,மூணு கரண்டி மல்லி தூள் ,ஒரு கரண்டி சீராக தூள் ,அரை கரண்டி சோம்பு தூள் ,
ஒரு கரண்டி உப்பு ,சேர்த்து இப்போ எல்லாத்தையும் நன்றாக் கலக்கிடுங்க .

நன்றாக் கலக்கிய பின்னர் ,அதற்குள் தேவையான பச்சை மிளகாய் ,கூடவே கருவேப்பிலை சேர்த்திடுங்க .

மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி இப்படி செஞ்சா வீடே மணக்கும்

அதன் பின்னர் இரண்டு தக்காளி நனறாக பொடியாகி வெட்டி தட்டு ஒன்றில் வைத்திடுங்க .

இப்போ மீன் குழம்பு செய்வதற்கு ,அடுப்பில கடாய வைத்து அதில் மூன்று கரண்டி எண்ணெய் ஊற்றி நன்றாகா சூடாக்கிடுங்க .

எண்ணெய் சூடானதும் வெந்தயம் ,கடுகு ,சோம்பு சேர்த்து பெரிய வைத்திருங்க ,அதுகூட பெரிய வெங்காயம் ,பூண்டு நன்றாக பொடியாக்கி ,அது கூடவே பச்சை மிளகாய் ,கருவேப்பிலை ,யாவரும் போட்டு நன்றாக வதக்கி வாங்க .

வெங்காயம் கலர் மாறி வந்ததும் ,மசித்து வைத்த தக்காளியை சேர்த்திடுங்க .அதன் பின்னர் கரைத்து வைத்த புளிகூட்டு கலவையை இப்போ ஊற்றி நன்றாக கலக்கிடுங்க .

மசாலா பச்சை வாசம் போனதன் பின்னர் ,இப்போ மாங்காய் ,மற்றும் மீனை போட்டு நன்றாக கலக்கி விடுங்க .

இப்போ மீனும் மாங்காயும் ,வேகி வருவதற்கு ஐந்து நிமிடம் விட்டிருங்க .
அதன் பின்னர்,தாளிப்பு வடகம் ,வெங்காய வடகம் எண்ணையில் பெரிய வைத்து, இப்போ இதில சேர்த்திடுங்க .

இப்போ மிக சுவையான மீன் குழம்பு ரெடியாடிச்சு .

இதனை சாதம் ,இட்லி ,தோசை கூட சேர்த்து சாப்பிட்டா சும்மா பிச்சுக்கிட்டு போகும் தலைவரே .

Leave a Reply