Author: நிருபர் காவலன்
இந்த காரசட்னிக்கு எத்தன இட்லி,தோசை சாப்டீங்கன்னு உங்களுக்கே தெரியாது
இந்த காரசட்னிக்கு எத்தன இட்லி,தோசை சாப்டீங்கன்னு உங்களுக்கே தெரியாது
இந்த காரசட்னிக்கு எத்தன இட்லி,தோசை சாப்டீங்கன்னு உங்களுக்கே தெரியாது.அம்புட்டு சுவையாக இருக்கும் .ஒருமுறை செஞ்சு பாருங்க மக்களே .
இந்த கார சட்னி செய்வது எப்படி ..?
கார சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?
சுவையான காரச்சட்னி செய்முறை ஒன்று .
காஞ்ச மிளகாய் நான்கு , காஸ்மீர் மிளகாய் 3 ,வெள்ளம் சின்ன கட்டி ,சீரகம் ,உப்பு ,100 கிராம் சின்ன வெங்காயம் ,ஐந்து பல்லு பூண்டு ,பொடியாக வெட்டிய இரண்டு தக்காளி .ஒரு பெரிய வெங்காயம் .எல்லாத்தையும் மிக்சியில் போட்டு அரைத்து எடுங்க .
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,கருவேப்பிலை போட்டு தாளித்து எடுங்க .அரைத்து வைத்த பேஸ்டை போட்டு கலக்கி எடுங்க ,ஐந்து நிமிடம் மூடி போட்டு மூடி வைத்து எண்ணெய் பிரிந்து தொக்கு பதம் வந்ததும் எடுத்திடுங்க
அவ்வளவு தாங்க சூப்பரான கார சட்னி ரெடியாடிச்சு ,இதனை இப்போ சாதம் ,தோசை,இட்லி கூட சாப்பிட்டு பாருங்க செமை சுவையாக இருக்கும் .
இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் அருமையான Sidedish ஒரு மாதம் ஆனாலும் கெடாது
இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் அருமையான Sidedish ஒரு மாதம் ஆனாலும் கெடாது
இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் அருமையான Sidedish ஒரு மாதம் ஆனாலும் கெடாது
தோசை,சாதம் எல்லாத்துக்கும் அருமையான சூப்பரான அட்டகாசமான Sidedish .ஒரு மாதம் ஆனாலும் கெடாது அப்டியே இருக்கும் சமைத்து சாப்பிடுங்க மக்களே .
இந்த கார பொடி செய்வது எப்படி
காரப்பொடி செய்முறை ஒன்று .
இந்த காரப்பொடி செய்வதற்கு 20 வறுமிளகாய் ,எடுதியொடுங்க
அடுப்பில கடாய வைத்து இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு ,இந்த மிளகாயை வறுத்தெடுங்க .
இப்போ அதே கடாயில் எண்ணெய் ஊற்றி உருண்டை உழுத்தம் பருப்பு ,மல்லி ,போட்டு வறுங்க ,நன்றாக வறு பட்டு வந்ததும் புளி ,கருவேப்பில்லை .சேர்த்து நன்றாக வறுத்து வாங்க .
இட்லி,தோசை,சாதம் எல்லாத்துக்கும் அருமையான Sidedish ஒரு மாதம் ஆனாலும் கெடாது
ஸ்கூடவே சீரகம் ,போட்டு எல்லாத்தயும் எடுத்து ஆற வைத்து ,மிக்சியில் போட்டு அரைக்கணும் .
இப்போ கொஞ்ச பூண்டு எடுத்து கொள்ளுங்க .
இப்போ மிளகாய் போட்டு அரைத்து எடுங்க .அதன் பின்னர் மல்லி கூட்டிடுகளை அரைத்து எடுங்க .
ஒப்போ உப்பு சேர்த்து எல்லாத்தையும் நன்றாக ரசித்து எடுத்திருங்க .
இப்போ சுவையான கார பிடி ரெடியாடிச்சு .ஒரு மாதம் வரை வைத்து சாப்பிடலாம் .அப்புறம் என்ன மக்களே இன்றே முயற்சித்து பாருங்க.
10 நிமிடத்தில் இட்லி,தோசைக்கு இப்படி செஞ்சு பாருங்க
10 நிமிடத்தில் இட்லி,தோசைக்கு இப்படி செஞ்சு பாருங்க
நம்ம வீட்டில இட்லி,தோசைக்கு இப்படி சுவையாக செஞ்சு பாருங்க,ரெம்ப அசத்தலா இருக்கும் .குறைந்த நிமிடத்தில் தரமான இட்லி தோசைக்கு ஏற்ப சாம்பார் .
வாங்க இப்போ இந்த சாம்பார் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் .
சாம்பார் செய்முறை ஒன்று
அடுப்பில கடாய வைத்து அதில பொடியாக வெட்டிய தக்காளி ,வெங்காயம் ஒன்று ,நான்கு பச்சை மிளகாய் ,ஐந்து பூண்டு ,சோம்பு தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்திருங்க .
நன்றாக வெந்த பின்னர் ,தண்ணியை வடித்து ,அதனை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்து எடுங்க .
இப்போ அதே குக்கர் வைத்து கடாயில எண்ணெய் ஊற்றி கடுகு ,வெந்தயம் , சீரகம் ,கருவேப்பிலை .வெங்காயம் பொடியாக வெட்டி வதக்கி வாங்க .
வெங்காயம் வதங்கிய பின்னர் அரைத்து வைத்தவற்றை ஊற்றி கலக்கிடுங்க .இது கூட தேவையான தண்ணீர் விடுங்க .
இப்போ இதுகூட கடலை மாவு ,மஞ்சள் ,உப்பு ,சாம்பாரு தூள் இரண்டு கரண்டி போட்டு நன்றாக கலக்கி விடுங்க .
மூன்று நிமிடம் அப்படியே கொதிக்க விடுங்க .
ரோட்டு கடை சாம்பாரு போல நன்றாக இருக்கும் ,கொத்தமல்லி போட்டு கலக்கி அதனை இறக்கிடுங்க .
இப்போ 10 நிமிடத்தில் இட்லி,தோசைக்கு இப்படி செஞ்சு பாருங்க செமையாக இருக்கும் .
இட்லி,தோசை கூட இந்த சாம்பார் சேர்த்து சாப்பிடுங்க செம சுவியாகி இருக்கும் மக்களே .
10 இலங்கையர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம்
10 இலங்கையர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை, மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்ட 2 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள் 10 பேர், தனுஷ்கோடி வந்து இறங்கினர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக
தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.
ஓமானில் உள்ள இலங்கை பெண்கள் குறித்த அறிவிப்பு
ஓமானில் உள்ள இலங்கை பெண்கள் குறித்த அறிவிப்பு
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தற்போது தங்கியுள்ள இலங்கைப் பெண்கள் தொடர்பிலான அறிவிப்பை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 77 இலங்கைப் பெண்களில் 12 பேர் மாத்திரமே வெளிநாட்டு
வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பாடசாலைகளை சுற்றி பொலிஸார்
பாடசாலைகளை சுற்றி பொலிஸார்
பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்களிடம் இருந்து போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகள் மற்றும் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அந்த போதைப்பொருட்களை விற்பனை செய்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதன்படி, பாடசாலைகளைச் சுற்றி புலனாய்வுப் பிரிவினர் வழமையாக கடமையில் ஈடுபடுத்தப்பட்டு, போதைப் பொருள் வர்த்தகர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு
காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம், வல்லைப் பாலத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் தவறி விழுந்து நீரில் மூழ்கி காணாமல்போன நிலையில் இன்று (23) காலை கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புத்தூர், கலைமதி பகுதியைச் சேர்ந்த 19 வயதான பாஸ்கரன் திலக்சன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் கைகள் தங்கூசி வலையினால் பின்னப்பட்டிருப்பாதலும் முகத்தில் காயங்கள் இருப்பதாலும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பின்னரே உயிரிழப்பிற்கான காரணம் தெரியவருமென எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் தவறி விழுந்து காணாமல் போன நிலையில் நேற்று மாலை முதல் அவரைத் தேடும் பணிகள் இடம்பெற்றன.
காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு
இந்நிலையில் தவறிவிழுந்த இளைஞனை தேடும் பணியில் இரவு முழுவதும் அச்சுவேலி பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்ட போதும் முயற்சி பலனளிக்காத நிலையில் கடற்படையினரின் உதவியுடன் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
செவ்வாய்க்கிழமை மாலை வேளையில் சில இளைஞர்கள் தூண்டில் போட்டு மீன் பிடியில் ஈடுபட்டனர். இதன்போது ஒரு இளைஞன் தவறி விழவே ஏனையவர்கள் அச்சத்தில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தப்பி சென்ற இளைஞர்கள் பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாராளுமன்றத்தில் பதற்றம் – சபாநாயகரின் அறிவிப்பு
பாராளுமன்றத்தில் பதற்றம் – சபாநாயகரின் அறிவிப்பு
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை சபையை விட்டு வெளியேறுமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இன்று காலை பாராளுமன்றம் ஆரம்பமானதும் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா உரையாற்றினார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நிமல் லான்சாவை தாக்க முயற்சித்ததன் காரணமாக சபாநாயகர்
சமிந்த விஜேசிறியை சபையை விட்டு வெளியேறுமாறு அறிவித்துள்ளார்.
போதை மாத்திரைகளுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது
போதை மாத்திரைகளுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பொலிஸாரினால் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளின் போது , 19 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்கள் 8 மற்றும் 10 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போது , தமக்கு, மல்லாகம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் என தெரிவித்துள்ளனர்.
அவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மல்லாகம் பகுதிக்கு விரைந்த பொலிஸார் , போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 36 வயதுடைய பெண்ணொருவரை 40 போதை மாத்திரைகளுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
அமெரிக்கா மூன்று கடற்படை சிப்பாய்கள் பலி
அமெரிக்கா மூன்று கடற்படை சிப்பாய்கள் பலி
அமெரிக்கா கடற்படை சிப்பாய்கள் மூவர் ஒரு வாரத்தில் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்கா Norfolk’s கடற்படை ததளத்தில் இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது .
குறித்த தற்கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
தலமை அதிகாரிகள் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்கள் காரணமாக ,இந்த தற்கொலைகள் இடம்பெற்று இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .
எனினு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
400 பேருடன் கிரேக்கில் ஒதுங்கிய அகதி கப்பல்
400 பேருடன் கிரேக்கில் ஒதுங்கிய அகதி கப்பல்
கிரேக்கத்தில் 400 பேருடன் அகதகிகள் கப்பல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது .கிரேக் Palaiochora துறைமுகத்தில் இந்த கப்பல் தரித்துள்ளது .
பல் நாட்டு அகதிகள் .ஐரோப்பவுக்குள் நுழையும் முகமாக இவ்விதம் ,கடல் வழியாக பயணம் செய்துள்ளமை கண்டுபிடிக்க பட்டுள்ளது .
பிரிட்டனுக்குள் நுழையுமுகமாக ஐரோப்பிய துறைமுக பகுதிகளை இலக்கு வைத்து ,அகதிகள் நுழைந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
உன்னால் தவிக்கிறோம்
வெடித்து சிதறிய காஸ் 41 பேர் மரணம்
வெடித்து சிதறிய காஸ் 41 பேர் மரணம்
வடக்கு ஈராக் Duhok பகுதியில் எரிவாயு வெடித்து சிதறியதில் 41 பேர் படு காயமடைந்துள்ளனர் .
திடீரென ஏற்பட்ட எரிவாயு கசிவினால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .
குறித்த கட்டடம் முற்றாக வெடித்து சிதறிய நிலையில் காண படுகிறது .
இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
சீனாவில் வெடித்து சிதறிய பக்டரி 38 பேர் மரணம்
சீனாவில் வெடித்து சிதறிய பக்டரி 38 பேர் மரணம்
சீனா மத்திய Henan மாகாணத்தில் அமைய பெற்றுள்ள பக்டரீ ஒன்று வெடித்து சிதறியதில் ,சம்பவ இடத்தில 38 பேர் பலியாகியும் ,.டசின் கணக்கானோர் படு காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் சில ஆபத்தான நிலையில் உள்ளனர் .
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .இந்த வெடிப்பு சம்பவத்தால் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது .
தீவிரவாதிகளினால் 100 பேர் கடத்தல்
தீவிரவாதிகளினால் 100 பேர் கடத்தல்
நையீரியாவில் தீவிரவாதிகள் 100 பேர் கடத்தி செல்ல பட்டுள்ளனர் .
ஆயுத முனையில் நுழைந்த தீவிரவாதிகள் 14 வயது முதலான இளம் பெண்களையும் கடத்தி சென்றுள்ளனர் .
மூன்று கிராமங்களை சேர்ந்த 100 க்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு கடத்தி செல்ல பட்டுள்ளனர் .
காணமல் போனவர்களை மீட்கும் பணியில் அரச இராணுவம் ஈடுபட்டுள்ளது.
முரசுமோட்டையில் சாமி கும்பிட்ட பெண் மரணம்
முரசுமோட்டையில் சாமி கும்பிட்ட பெண் மரணம்
முரசுமோட்டையில் சாமி கும்பிட்ட பெண் ஒருவர் மரணமான துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
முரசுமோட்டை மூன்றாம் யூனிட் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு பலியாகியுள்ளார் .
மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் பொழுது அங்கு பலியாகியுள்ளார் .
வாழ் நாளில் பிற் பகுதிகளில் தன்னை முழுமையாக சிவ தொண்டு பணிகளில் ஈடுபடுத்தி வந்த ,இவரே இவ்வாறு மரணித்துள்ள சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .
கடவுள் பணி செய்து வந்த சிவ தொண்டர் அவர் பாதத்தில் வீழ்ந்து மரணித்துள்ள சம்பவம் ,மக்களை துயரில் ஆழ்த்தியுள்ளது .
விமான நிலையத்தில் VIP சேவைக்கு கட்டணம் செலுத்தாத பசில்
விமான நிலையத்தில் VIP சேவைக்கு கட்டணம் செலுத்தாத பசில்
ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை வந்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விமான நிலையத்தில் VIP சேவைகளைப் பயன்படுத்தியதற்கான கட்டணத்தையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுக்கான கட்டணத்தையும் இன்னும் செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பசில் அமைச்சராகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராகவோ இல்லாத நிலையில், விமான நிலையத்தில் பிரமுகர் ஓய்வறையைப் பயன்படுத்துவதற்கு அவருக்கு உரிமை இல்லை.
விமான நிலையத்தில் VIP சேவைக்கு கட்டணம் செலுத்தாத பசில்
பசில் ராஜபக்சவின் பிரமாண்ட வருகைக்காக விமான நிலையத்தில் விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கான கட்டணமும் செலுத்தப்படவில்லை.
மேலும், பசில் விமான நிலையத்தில் Gold Route சேவையை பெற்றிருந்தார். இதற்காக ஒரு நபருக்கு 200 அமெரிக்க டொலர் அறவிடப்படும். எனினும் இதையும் அவர் செலுத்தவில்லை.
இன்றுவரை பணம் செலுத்தாமல் ராஜபக்சேவும் அவரது பரிவாரங்களும் VIP ஓய்வறையை பயன்படுத்தியதை
விமான நிலையத்தின் உள் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல்
ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல்
யாழ்ப்பாணத்திலுள்ள கல்லூரி ஒன்றின் ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த ஆசிரியர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (22) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பாடசாலை மலசல கூடத்திற்கு செல்வதாக சென்ற மாணவன் நீண்ட நேரமாகியும் வராததால், மாணவனை தேடி குறித்த ஆசிரியர் சென்றுள்ளார்
அங்கு மாணவன் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்டமையால் மாணவனை ஆசிரியர் விசாரித்த போது மாணவன் அங்கிருந்து தப்பி சென்று , தனது தந்தையாரை அழைத்துக்கொண்டு பாடசாலைக்கு வந்துள்ளார் என்று அறியமுடிகின்றது.
பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த மாணவனின் தந்தை , ஆசிரியர்களின் ஓய்வறையில் இருந்தபோது, அந்த ஆசிரியர் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த ஆசிரியரை சக ஆசிரியர் அங்கிருந்து மீட்டு , வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு
அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஒரே இரவில் 5 வீடுகளில் திருட்டு
ஒரே இரவில் 5 வீடுகளில் திருட்டு
இலங்கை பயாகல காவல்துறை பகுதியில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் திருட்டு இடம்பெற்றுள்ளது .
இந்த திருட்டு அங்குள்ள கமராவில் பதிவான நிலையில் திருடனை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரன் கைது
பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரன் கைது
வவுனியா பட்டக்காடு பகுதியில் 16 வயதுடைய தங்கையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரனை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தந்தை இன்றி தாயின் அரவணைப்பில் சகோதரன், தங்கை வசித்து வந்த நிலையில் தனிமையில் இருந்த தங்கையை சகோதரன் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சகோதரி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிப்பட்டதுடன் 26
வயதுடைய சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.














































































































