Author: நிருபர் காவலன்
பிரிட்டன் தபாற்கந்தோரை முடக்கிய ரசியா கைக்கர்கள்
பிரிட்டன் தபாற்கந்தோரை முடக்கிய ரசியா கைக்கர்கள்
பிரிட்டன் தபால் கந்தோர் சில நாட்களாக .
சர்வதேச பொது சேவைகள் ,தபால் சேவைகள் என்பனவும் முடங்கியுள்ளன.
ராயல் மெயில் பிரதான கணணிக்குள் நுழைந்த கைக்கர்கள் ,அதன் சேவைகளில் தடங்களை ஏற்படுத்தி ,சேவைகளை முடக்கின .
இதனால் அதன் சேவையில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது .
இந்த தடங்களை புரிந்தது ரசியா நாட்டை சேர்ந்த ,
கைக்கர்கள் என ராயல் மெயில் தெரிவித்துள்ளது .
ரசியா நாட்டின் மீது போரை நடத்தி வருவதில் ,
பிரிட்டன் ஆயுதங்கள் முக்கியமானதாகும் .
அதற்க்கு பழிவாங்கும் தாக்குதலாக முக்கிய நிறுவனங்களை ,
இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டு வருகின்றமை அம்பலமாகியுள்ளது .
அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாட்டில் தமிழ்க் கட்சிகள்
அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாட்டில் தமிழ்க் கட்சிகள்
தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டு மக்களின் நலன்சார்தவை அல்ல என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழில் இன்றைய தினம் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டு மக்களின் நலன்சார்தவை அல்ல வாக்குகளை எவ்வாறு அபகரிப்பது என்பதே அவர்களின் நோக்கமாகும். அங்கு மக்கள் நலன் பின்தள்ளப்படுகிறது.
அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாடுகளையே தமிழ்க் கட்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளகின்றன என்றார்.
இஸ்ரேல் வெறியாட்டம் பாலஸ்தீனத்தில் 3 சுட்டு கொலை
.
இஸ்ரேல் வெறியாட்டம் பாலஸ்தீனத்தில் 3 சுட்டு கொலை
பலஸ்தீனம் மேற்குகரை பகுதியில் இஸ்ரேல் நடத்திய வெறியாட்டத்தில் ,
மூன்று அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர் .
தனது மகனை பாதுகாக்க போராடிய தந்தை மீது தாக்குதல் நடத்தி ,
சுட்டு கொன்றுள்ளனர் .
இஸ்ரேல் இராணுவத்தால் பலஸ்தீன மக்கள்,
தொடர்ந்து சொல்லென்னா
துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
இந்த இஸ்ரேல் வெறியர்கள் புரிந்த ,
இனப் படு கொலைக்கு இதுவரை சர்வதேச கூண்டில் நிறுத்தப்படவில்லை .
தொடராக நடத்தி வரும் மனித படுகொலைகளுக்கு .
இதுவரை ஐக்கிய நாடுகள் சபை கண்டிக்காது உள்ளமையும் ,
சர்வதே நீதிமன்றில் நிறுத்து தண்டிக்காது உள்ள செயல் மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
ரஷ்ய துருப்புக்களுக்கு மேம்படுத்தப்பட்ட டாங்கி
ரஷ்ய துருப்புக்களுக்கு மேம்படுத்தப்பட்ட டாங்கி
ரஷ்ய துருப்புக்களுக்கு மேம்படுத்தப்பட்ட T-90M ப்ரோரிவ் ,
பிரதான போர் டாங்கிகளின் புதிய தொகுப்பை வழங்கியுள்ளது .
இந்த டாங்கிகளில்
அடுத்த தலைமுறை ரியாக்டிவ் கவசம்,
புதிய பீரங்கி, மேம்பட்ட தகவல் தொடர்பு மற்றும்,
அதிக சக்தி வாய்ந்த எஞ்சின் ஆகியவை உள்ளன.
இதன் தாக்குதல் திறனும் ஐந்து மைல்களுக்கு உள்ளான நிலைகளை ,
துல்லியமாக தகர்த்து அழிக்கும் ,
வல்லமை பொருந்தியது எனப்படுகிறது .
அவ்வாறான முக்கிய ஆயுத கவச டாங்கிகள்,
முன் அரண் கள நிலைகளுக்கு அனுப்ப பட்டுள்ளது .
இந்த டாங்கிகளினால் ,உக்கிரேன் இராணுவத்தினருக்கு ,
மிக பெரும் நெருக்கடியை தருவிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த டாங்கிகள் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டவற்றை ,
உற்பத்தி செய்த்திட ரசியா கவனம் செலுத்தி வருகிறது .
போரை முடிவுக்கு கொண்டுவர உக்கிரேன் துருக்கி பாதுகாப்பு அமைச்சர் திடீர் பேச்சு
போரை முடிவுக்கு கொண்டுவர உக்கிரேன் துருக்கி பாதுகாப்பு அமைச்சர் திடீர் பேச்சு
ரசியா உக்கிரேன் இராணுவத்தினர் 310நாட்கள் கடந்து நடத்தி வரும் போரை,
முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுக்களை .ஆரம்பித்துள்ளன
அதற்கு முன்னோடியாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சர் ,
மற்றும் துருக்கிய பாதுகாப்பு அமைச்சர்கள் .தொலைபேசிசியில் உரையாடினார்கள் .
விரைவில் போரை நிறுத்தி ,
சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பேச்சு
இடம்பெற்றுள்ளது .
வேறு ஒரு நாட்டில் ரசியா உக்ரேன் நாடுகள் ,
அதிகாரிகள் பேச்சு மேசையில் கலந்து கொண்ட விடயங்களும் வெளியாகியுள்ளன .
ரசியா உக்கிரேன் போர் முடிவுக்கு வரும் ,
என்கின்ற தகவல் இதன் மூலம் உறுதியாகிறது .
ரெஜினோல்ட் குரே காலமானார்
ரெஜினோல்ட் குரே காலமானார்
வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார்.
வாத்துவையில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று (12) இரவு இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகயீனமடைந்ததையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.
பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் நோயாளர் காவு வண்டி மூலம் களுத்துறை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு,
வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதே அவருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்து விபத்து
பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்து விபத்து
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, இன்று காலை சிறுப்பிட்டி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த குறித்த பேருந்து சிறுப்பிட்டி பகுதியில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்துக்குள் சென்று மோதி விபத்துக்குள்ளாக்கி உள்ளது.
இதனால் வாகனத்தின் முன்பக்கம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான விரிவான விசாரணைகளை அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை வழங்குவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்
உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை வழங்குவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை வழங்குவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அமைச்சுக்களில் கூட நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்ட வேளையில் தேர்தலுக்குத் தேவையான
பணத்தைக் கொண்டுள்ளமையால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தேர்தல்கள் ஆணைக்குழு அழைத்துள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
உள்ளூhராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கமும் பொஹொட்டுவவும் சதி செய்வதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை
நிராகரித்த அமைச்சர், தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கோ பொஹொட்டுவாவுக்கோ இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரமுனவின் கம்பஹா மாவட்டத்தின் வேட்பு மனுவில் கையொப்பமிடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
உடுகம்பலையில் அமைந்துள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அலுவலகத்தில் (12) வேட்புமனு கையொப்பமிடப்பட்டது.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை 19 ஆகும். இதன்படி 413 பிரதேசங்களுக்கான வேட்புமனுவில் 417 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது 11 மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களில் கையெழுத்திட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை வழங்குவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்
கம்பஹா, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களில் இன்று வேட்புமனுக்கள் கைச்சாத்திடப்பட்டன. எதிர்வரும் சனிக்கிழமைக்குள் பொஹொட்டுவ தனது வேட்பாளர் நியமனப் பட்டியலை கையொப்பமிட்டு இறுதி செய்யவுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த திரு.பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியதாவது,
“பொஹொட்டுவ என்பது கிராம மட்டத்தில் வலுவான அடித்தளத்தில் இருந்து உருவாக்கப்பட்ட கட்சியாகும். இத்தேர்தலில், மற்ற அனைத்து அரசியல் கட்சிகளை விடவும் எதிர்கொள்ளக்கூடிய வலுவான அணி எங்களிடம் உள்ளது
. அந்த வேட்பாளர்கள் அனைவரும் கிராமங்களில் பணிபுரிந்து பொதுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அனுபவமுள்ள, மக்களுக்கு சேவை யாற்றிய, உழைத்த ஒரு குழுவினர் இத்தேர்தலில் முன்னிறுத்தப் பட்டுள்ளனர்.
எங்கள் அணி வாய்ப்பேச்சு மட்டும் கொண்டவர்கள் அல்ல. இந்த தேர்தலில் போட்டியிடுவது ஆணவமும், பயனற்றவர்களும் அல்ல. வேலை செய்து காட்டியவர்கள் தான் போட்டியிடுகிறார்கள்.
இந்த தேர்தலில் எங்களுக்கு எந்த சவாலும் இல்லை. மிகவும் கடினமான காலங்களில் இதுபோன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளோம்.
அரசு என்ற முறையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் தேர்தல் ஆணையம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இரண்டு. அரசாங்கம் என்ற வகையில், இந்த பொருளாதார நெருக்கடியுடன் கூடிய அரசாங்க
ஊழியர்களின் சம்பளம், சுபீட்ச சலுகைகள் மற்றும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் கடந்த காலங்களில் எதிர்நோக்கிய பிரச்சனைகளை நாங்கள் அறிவோம். இன்று பொருளாதாரம் ஓரளவுக்கு நிர்வகிக்கப்பட்டு
மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வரும் இவ்வேளையில் தேர்தலை நடத்துவதா வேண்டாமா என்பதை இந்நாட்டு மக்கள் தீர்மானிக்கின்றனர்.
தேர்தலில் பணம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த காலங்களில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இல்லாமல் அரசாங்க ஊழியர்கள் தேர்தலுக்கு தயாராகி வருவதாக கூறப்பட்டது.
அதற்கு தேர்தல் ஆணையாளர் பொறுப்பேற்கத் தயாராக இருந்தால், நாங்கள் தேர்தலைச் சந்திக்கத் தயார். ஒதுக்கீட்டில் சிக்கல் இருப்பதால், எங்கள் அமைச்சுக்களில் பல நிதிக் குறைப்புக்கள் செலவு குறைப்புக்கள் ஏற்பட்டதன்
பின்னணியில் இந்தத் தேர்தலைப் பற்றி பேசுகிறோம். தேர்தல் ஆணையத்திடம் பணம் இருப்பதால், வேட்புமனுத் தாக்கல் செய்கின்றனர்.
தேர்தலுக்குத் தேவையான பணத்தைக் கண்டுபிடிப்பது அவர்களின் பொறுப்பு.
கட்சி என்ற வகையில் தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்.
யாழில் மீனவர்கள் போராட்டம்
யாழில் மீனவர்கள் போராட்டம்
இந்திய மீனவர்களின் அத்துமீளல்களை கண்டித்தும் அத்தகைய அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் யாழில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் குருநகர் மீனவ சங்கத்தின் ஏற்பாட்டில் குருநகரில் இன்று காலை இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து பேரணியாகச் சென்று பல தரப்பினர்களிடமும் மகஜர்களை கையளித்துள்ளனர்.
குருநகரில் ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டமானது தொடர்ந்து பேரணியாக சென்று யாழ் நகரிலுள்ள கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திலும்,
அதனைத் தொடர்ந்து கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடம் மகஜர்களை கையெழுத்துள்ளனர்.
ரஷ்யா கப்பலை துரத்தி செல்லும் பிரிட்டன் கப்பல்
ரஷ்யா கப்பலை துரத்தி செல்லும் பிரிட்டன் கப்பல்
சர்வதேச வட கடல் பகுதியில் பயணித்து கொண்டிருக்கும் ,ரஷ்ய போர்க் கப்பல் அட்மிரல் கோர்ஷ்கோவ் மற்றும் டேங்கர் கமா ஆகியவற்றை பிரிட்டன் போர்க் கப்பல் கண்காணித்த வண்ணம் உள்ளது .
ரஸ்யா கப்பல் அணிகளில் அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் கப்பலாக .
இந்த விமான தங்கி கப்பல் அணிகளுடன் 11 கப்பல்கள் பாதுகாப்பு அணிகளாக பயணிக்கின்றன .
இந்த கப்பல் அணிகளையே பிரிட்டன் போர் கப்பல்கள் ,துரத்தி கண்காணித்த வண்ணம் உள்ளன .
இதனால் கடலுக்குள் பிரிட்டன் ரசியா மோதி கொள்ளும் நிலை ஏற்படுமோ, என்கின்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது .
கொழும்பு குண்டு வெடிப்பு மைத்திரி உள்ளிட்டவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு
கொழும்பு குண்டு வெடிப்பு மைத்திரி உள்ளிட்டவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு
இலங்கை கொழுப்பு தேவாலயங்களில் நடத்த பட்ட குண்டு தாக்குதலை தடுக்க தவறினார்கள் என்கின்ற குற்ற சாட்டில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
மைத்திரிக்கு 100 மில்லியன் ரூபா மற்றும் முன்னாள் அரச புலனாய்வாளர் தலைவர் நிலந்த ஜேவர்த்தன 75 மில்லியன் ,முன்னாள் காவல்துறை அதிபர் பூஜித்த ஜேசுந்தர 75 மில்லியன் ,முன்னாள் பாதுகாப்பபு செயலர் கோமஸ்ரீ பெர்னாண்டோ 50மில்லியன் ,
கொழும்பு குண்டு வெடிப்பு மைத்திரி உள்ளிட்டவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு
முன்னாள் குற்ற புலனாய்வு தலைவர் சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் , இழப்பீடு வழங்க உத்தரவிட பட்டுள்ளது .
மேலும் காயமடைந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து லட்சம் ரூபா வழங்க வேண்டும் என உத்தரவிட பட்டுள்ளது .
இந்த குண்டு வெடிப்பில் 269 பேர் பலியாகியும் 500 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தமை குறிப்பிட தக்கது .
கனடா தமிழர் காதை அடித்து கிழித்த பெண்
கனடா தமிழர் காதை அடித்து கிழித்த பெண்
யாழ்ப்பாணத்தில் கனடாவில் இருந்து சென்ற ஆண் ஒருவரது காதை அடித்து கிழித்துள்ளார் ,அங்கிருந்த பெண் ஒருவர் .
காரைநகர் கசூரினா பீச்சில் குளித்து கொண்டிருந்த கனடா நபர் போதையில் ,இளம் பெண் ஒருவரிடம் தகாத வார்த்தைகளை பேசி சீண்டியுள்ளார் .
ஆத்திரமுற்ற பெண் அவர் குளித்துவிட்டு வெளியில் வரும் வரை காத்திருந்து அவரது கன்னத்தில் ஓங்கி விட்ட அறையில் ,அவரது காது கிழிந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார் .
வீர மங்கைக்கு வாழ்த்துக்கள் என நெட்டிசன்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பறக்க விட்ட வண்ணம் உள்ளனர்.
Featured
பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வு கழக நிதி உதவி பொருட்களை இராணுவம் வழங்கியது
பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வு கழக நிதி உதவி பொருட்களை இராணுவம் வழங்கியது
ஊரியன்கட்டு பிரதேச மக்களுக்கு பொங்கல் பரிசு
தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு வாகரை, ஊரியன்கட்டு பிரதேச மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கு நிகழ்வு, ஊரியன்கட்டு பாடசாலை மண்டபத்தில் நேற்று முன்தினம் (10) நடைபெற்றது.
பாடசாலை அதிபர் வை. மங்களதர்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கௌரவ அதிதிகளாக வாகரை பிரதேச 233 ஆவது படைப் பிரிவின் பிரிக்கேடியர் வசந்த கேவகே, நாவலடி கஜபா ரெஜிமன்ட படைப்பிரிவின் உயர் அதிகாரி லசந்த, கல்குடா வலயக் உளவளத் துறை உதவி கல்விப் பணிப்பாளர் விஷ்வ ஜித்தன் ஆகயோர் கலந்து கொண்டனர்.
இதன்போது சுமார் 200 குடும்பங்களுக்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தினர் இதற்கான நிதி அனுசரனையை வழங்கியிருந்தனர்.
இலங்கையில் வெளிநாட்டு ஆடம்பர கப்பல் 785 பேருடன் தரிப்பு
இலங்கையில் வெளிநாட்டு ஆடம்பர கப்பல் 785 பேருடன் தரிப்பு
உலகில் மிக பெரும் ஆடம்பர பயணிகள் கப்பல் ஒன்று 785 பயணிகளுடன் இலங்கை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது .
இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த இந்த கப்பல் இலங்கையில் ,
இரண்டு நாட்கள் தரித்து நின்று தனது திசை நோக்கி பயணிக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது.
கைதானவர் மரணம் விசாரணைகள் ஆரம்பம்
கைதானவர் மரணம் விசாரணைகள் ஆரம்பம்
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த நபர், நேற்று முன்தினம் நாரஹேன்பிட்டி பகுதியில் வைத்து 15 கிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதானவர் மரணம் விசாரணைகள் ஆரம்பம்
இந்த நிலையில், பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்து மருதானை பகுதியில் வைத்து சந்தேக நபர் தப்பிச்செல்ல முயற்சித்தபோது, காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்தாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நாரஹேன்பிட்டி தொழிற்பயிற்சி அதிகாரசபையின் உதவி முகாமையாளராக பணியாற்றிய,
ஹிக்கடுவை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரிட்டன் தபாற்கந்தோர் மீது சைபர் தாக்குதல் தபால் வினியோகம் தடை
பிரிட்டன் தபாற்கந்தோர் மீது சைபர் தாக்குதல் தபால் வினியோகம் தடை
பிரிட்டனில் உள்ள தபால் கந்தோரின் பிரதான கணினி கட்டமைப்புக்குள் நுழைந்து சைபர் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இதனால் சர்வதேச பொதி அனுப்புதல் ,மற்றும் கடிதங்கள் வினியோகம் தடை பட்டுள்ளது .
,பொதி சேவைகளும் தாமதகமாகியுள்ளாதால் இழப்புகள் ஏற்பட்டுள்ளன .
இராணுவத்தை உக்கிரைனில் விலக்க தயாராகும் ரசியா
இராணுவத்தை உக்கிரைனில் விலக்க தயாராகும் ரசியா
உக்கிரேன் நாட்டில் இருந்து தமது இராணுவத்தை விலக்கிட ,
ரசியா ஜனாதிபதி புட்டீன் தயாராகி வருகிவதாக முக்கிய ஊடக நபர் தெரிவித்துள்ளார் .
இது உறுதி எனவும் ,பேச்சுக்களின் மூலம் இது சாத்தியமாகும் என அவர் அடித்து கூறியுள்ளார் .
அப்படி என்றால் ரசியா விதிக்க போகும் விதிகளுக்கு கட்டுப்பட்டு,
உக்கிரைன் பேச்சுக்கு செல்லுமா என்பதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
புட்டீன் நெருங்கிய ஊடக நபர் வெளியிட்டுள்ள,
இந்த தகவல் போரால் பாதிக்க பட்ட நாடுகளும் ,
மக்களும் வரவேற்று கொள்கின்றனர் .
அடம் பிடிக்கும் உக்கிரேன் அதிபர் ஜெலன்ஸி அமைதிக்கு
திரும்புவரா .
உக்கிரைனில் காணாமல் போன பிரிட்டன் சிப்பாய் சடலமாக மீட்பு
உக்கிரைனில் காணாமல் போன பிரிட்டன் சிப்பாய் சடலமாக மீட்பு
உக்கிரைன் நாட்டின் சொலிடர் பகுதியில் காணாமல் போன ,பிரிட்டன் நாட்டை சேர்ந்த இரண்டு இராணுவ சிப்பாய்களில் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவர்கள் இறந்துள்ளதை ரசியாவின் ஆதரவு ஊடகம் ,ஒன்று காட்சிகளுடன் காண்பித்து ,குறித்த விடயத்தை அறிவித்துள்ளது .
இவ்விதம் ஏற்படலாம் என்பதை ,கடந்த தினம் நாம தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
வாள்வெட்டு தாக்குதலை நடத்திய தெரு ரவுடி கைது
வாள்வெட்டு தாக்குதலை நடத்திய தெரு ரவுடி கைது
இலங்கை இருபாலை பகுதியில் வீடு புகுந்து கணவன் மனைவிக்கு வாள்வெட்டு தாக்குதலை நடத்திய தெரு ரவுடி கைது செய்யப் பட்டுள்ளார் .
பாத்து நாட்களாக ரகசிய இடம் ஒன்றில் மறந்திருந்த பொழுது ,காவல்துறையினரால் குறித்த நபர் மடக்கி பிடிக்க பட்டுள்ளார் .
இவரது கோழிக்கூட்டுக்குள் மறைத்து வைக்க பட்ட நிலையில் ,வாள் ஒன்றும் மீட்க பட்டுள்ளது .
யாழ்ப்பாணத்தில் தற்போது வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணபடுகிறது .
குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்
குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதல்களில் சிக்கி சம்பவ இதில் 20 பேர் பலியாகினர் .
மேலும் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் யாவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
இந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு ஈரான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது .








































