கூட்டமைப்பு நிலைப்பாட்டுக்கு ஆதரவு அரசியலமைப்பு பேரவை நியமனம் தொடர்பில் மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு தேரரை ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள்

மட்டக்களப்பு தேரரை ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள்

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்” என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கதறுகிறார் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்​கையில்,

இவரை ஒன்றில் ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அல்லது பிடித்துக்கொண்டு போய் அங்கொடையில் அடைக்க வேண்டும்.

ஜனாதிபதியை தூற்றிய ராஜாங்கன தேரரை, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை, நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரியவை, ICCPR சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் அரசு கைது செய்தது.

இன்று தமிழ் மக்களை கொல்லுவேன்,வெட்டுவேன் என்று பகிரங்கமாக கொலைவெறி கூச்சல் எழுப்பும் இவரை ஜனாதிபதியின் அரசு கைது செய்யாதா என கேட்க விரும்புகிறேன்.

எல்லாவற்றையும் கடந்து செல்வதைப்போல் ஜனாதிபதி ரணில் இதையும் கடந்து போக முயற்சிக்க கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தனது முகநூல், எக்ஸ் சமூக ஊடகங்களிலும் கருத்து கூறியுள்ள மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

மட்டக்களப்பு தேரரை ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள்

அம்பிட்டிய சுமனரத்தின தேரருக்கு தனது தாயின் கல்லறை தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட எம்பிக்களுடன் அல்லது மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருடன் ஏதும் பிரச்சினை இருக்குமாயின், அவை பற்றி அவர் பொலிசில் புகார் செய்ய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இதை கலந்து பேசும்படி மட்டக்களப்பு மாவட்ட செயலாளரை கடிதம் மூலம் கோர வேண்டும். அடுத்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்ட நிகழ்ச்சி நிரலில் இதை இடம்பெற செய்து, பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் சட்டப்படியான நாகரீக நடைமுறை.

இதைவிடுத்து சண்டியன் மாதிரியும். மனநோயாளி மாதிரியும் நடுதெருவுக்கு வந்து, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன், தெற்கில் வாழும் தமிழரை கொல்லுவேன்” என்றி ஹிஸ்டீரியாகாரனாக கத்துவது எந்த வகையில் நியாயம்?

ICCPR சட்டத்தின் கீழ் ஜனாதிபதி தன்னை தூற்றிய ராஜாங்கன தேரரை கைது செய்தார். இன்று தமிழ் மக்களை கொல்லுவேன்,வெட்டுவேன் என்று பகிரங்கமாக கூறும் இவரை கைது செய்ய மாட்டாரா என கேட்க விரும்புகிறேன்.

தமிழ் ஊடகங்களை அழைத்து, தமிழில் மொழிமாற்றி சொல்லுங்கள் என்றே ஆணவத்திமிருடன் கூறும் இவரை கைது செய்ய மாட்டாரா என கேட்க விரும்புகிறேன். அல்லது இவர் ஒரு மனநோயாளி என அங்கொடையில் அடைத்து விடுங்கள்.

சில காலம் முன் ஜெரோம் பெர்னாண்டோ என்ற ஒரு போதகரையும், நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய ஆகியோரை கைது செய்ய முடியுமானால், ஏன் இவரை கைது செய்ய முடியாது? பார்க்கப்போனால், ஜெரோம் பெர்னாண்டோ, நடாஷா எதிரிசூரிய ஆகியோர் பேசிய பேச்சுகளை விட இவரது பேச்சு ஆயிரம் மடங்கு மோசமானது.

மட்டக்களப்பு தேரரை ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள்

இன்று இந்த அம்பிட்டிய சுமனரத்தின தேரரின் மட்டக்களப்பு விகாரையை நடத்த இலங்கை ராணுவம் உதவுகிறது. நாட்டின் இராணுவம் இவருக்கு சோறாக்கி சாப்பாடு போடுகிறது. இவை பற்றிய தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளன. மக்களின் வரிப்பணத்தில் சாப்பிடும் இவர் பல ஆண்டுகளாகவே இப்படி துவேசமாக பேசி வருகிறார்.

பொலிஸ் அதிகாரிகளின் கன்னத்தில் அடிக்கிறார். பொலிஸ் அதிகாரிகளின் சட்டையை பிடிக்கிறார். பொலிஸ் அதிகாரிகளின் தொப்பியை தட்டி விடுகிறார். மாற்று மத போதகர்களின் கன்னத்தில் அடிக்கிறார். அரச அதிகாரிகளை கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார். அப்படியானால், இவர் யார்? என பாராளுமன்ற உறுப்பினர் மனோ

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

நிதி நிறுவனம் ஊடாக 990 கோடி ரூபாய் நிதி மோசடி

நிதி நிறுவனம் ஊடாக 990 கோடி ரூபாய் நிதி மோசடி

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி நிதி நிறுவனமொன்றை நடத்தி 990 கோடி ரூபாய் நிதி மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (26) கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக நிதி முறைக்கேடு , நம்பிக்கை துரோகம் மற்றும் பண மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நிதி நிறுவனம் ஊடாக 990 கோடி ரூபாய் நிதி மோசடி

சந்தேக நபர் நிதி நிறுவனத்தின் பணிப்பாளராகவும் பங்குதாரராகவும் பணியாற்றியுள்ளார்.

சந்தேக நபர் கண்டி – கெண்டி வியூகார்டன் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.

காணிகளில் எவ்வித வசதிகளும் இல்லை மக்கள் விசனம்
Posted in இலங்கை செய்திகள்

காணிகளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உரிமை கோரியதால் குழப்பம்

காணிகளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உரிமை கோரியதால் குழப்பம்


யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தனியார் காணி பெற்றோலிய கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான காணி என அதிகாரிகள் உரிமை கோரி வந்தமையால், காணி உரிமையாளர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டது.

அது தொடர்பில் தெரிய வருவதாவது,

கடந்த 33 வருட காலத்திற்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த மாங்கொல்லை பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியதை அடுத்து, அப்பகுதி மக்கள் தமது காணிகளை அடையாளப்படுத்தி, எல்லைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.

அந்நிலையில் நேற்று (26) பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலர் அப்பகுதிக்கு வந்து, இந்த காணிகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உரியது, நாம் கடந்த 40 வருட காலத்திற்கு முன்பே காணி உரிமையாளர்களிடம் இருந்து காணிகளை கொள்வனவு செய்து கொண்டு விட்டோம் என கூறி தனியாரின் காணிகளை தமது காணிகள் என கூறியுள்ளனர்.

காணியை நாம் யாருக்கும் விற்கவில்லை இது எங்களின் காணிகள். பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணி தமது காணிகளில் இருந்து சற்று தொலைவில் உள்ள காணிகளே என காணி உரிமையாளர்கள் கூறி இருந்தனர்.

அதனை ஏற்க மறுத்த அதிகாரிகள். இந்த காணிகளையும் தமது நிறுவனம் கொள்வனவு செய்து விட்டதாக கூறி, இது உங்கள் காணி தான் என்பதற்கு எங்களுக்கு உறுதியை காண்பித்து, உறுதிப்படுத்துங்கள் என கூறியுள்ளனர்.

அதற்கு காணி உரிமையாளர்கள் நாங்கள் எதற்கு உங்களுக்கு உறுதி காட்ட வேண்டும்? உங்களின் உறுதிகளை பரிசீலித்து உங்கள் காணி எங்கே இருக்கிறது என்பதனை உறுதிப்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு என கூறினர்.

அதனை அடுத்து , இந்த காணிகளையும் கொள்வனவு செய்து விட்டோம். அதற்கான உறுதிகள் எங்களிடம் உள்ளது. அதன் ஆதாரங்களுடன் வருகிறோம் என அங்கிருந்து சென்றனர்.

காணிகளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உரிமை கோரியதால் குழப்பம்

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை ஊழியர் தங்குமிடம் இருந்த பகுதிக்கு அருகில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணி இருந்தது. அந்த காணி எமது காணிகளில் இருந்து சற்று தொலைவில் உள்ளது.

ஆனால் நாங்கள் தற்போது துப்பரவு செய்து அறிக்கைப்படுத்தும் காணிகள் எமது சொந்த காணிகளே, அந்த காணிகளை நாம் எந்த காலத்திலும் எவருக்கும் விற்கவில்லை.

அதிகாரிகள் காணி இடத்தினை மாறி விளங்கிக்கொண்டு வந்து எம்முடன் கதைத்தார்களா ? அல்லது 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் எமது காணி அகப்பட்டு இருந்த கால பகுதியில் எமது காணிகளை மோசடியாக அபகரித்து விட்டார்களா எனும் சந்தேகம் எமக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

தாம் காணிகளை கொள்வனவு செய்த ஆதாரத்துடன் வருகிறோம் என அதிகாரிகள் கூறி சென்றுள்ளனர். இனி அவர்கள் வந்தாலே எமக்கு உண்மை நிலை தெரிய வரும் என அக்காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்

துப்பாக்கி தயாரிக்கும் இடத்தை சுற்றிவளைத்து பொலிஸார்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கியை வைக்கச்சென்ற அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை

துப்பாக்கியை வைக்கச்சென்ற அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கைத்துப்பாக்கி ஒன்று தாமாக இயங்கியதில் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இவ்வாறு காயமடைந்த குறித்த பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிளை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

துப்பாக்கியை வைக்கச்சென்ற அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை

குறித்த கைத்துப்பாக்கியை பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்புப் பெட்டியில் வைக்கச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் சிலாபம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

இளம் தாய் துஷ்பிரயோகம் மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி
Posted in இலங்கை செய்திகள்

இளம் தாய் துஷ்பிரயோகம் மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி

இளம் தாய் துஷ்பிரயோகம் மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி

பூகொடை – பெபிலி​வல, அம்பகஹவத்த பிரதேசத்தில் குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டு இருந்த போது தன்னை மூவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இளம் தாய் ஒருவர் செய்த முறைப்பாடு தொடர்பில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

கணவன் வேலைக்குச் சென்றபோது வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் பாலூட்டிக்கொண்டிருந்த தனது குழந்தையை பறித்து தரையில் அடித்து கொலை செய்வோம் என மிரட்டி தன்னை பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 21 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 25 வயதுடைய மற்றுமொரு இளைஞர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளம் தாய் துஷ்பிரயோகம் மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி

கைது செய்யப்பட்ட பின்னர், சந்தேகநபர்கள் கம்பஹா பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டதுடன்,

சந்தேகநபர்கள் பெண்ணொருவரை வல்லுறவுக்கு உட்படுத்தியதற்கான அடையாளங்கள் எதுவுமில்லை என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் பெண் தற்போது கம்பஹா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று

வருவதாகவும், அவர் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் இதுவரை மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடு செய்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக பெண்ணின் கணவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூகொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

புறக்கோட்டையில் பாரிய தீ 17 பேருக்கு தீ காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

புறக்கோட்டையில் பாரிய தீ 17 பேருக்கு தீ காயம்

புறக்கோட்டையில் பாரிய தீ 17 பேருக்கு தீ காயம்

கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெருவில் உள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ பரவியுள்ளது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 7 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

புறக்கோட்டையில் பாரிய தீ 17 பேருக்கு தீ காயம்

தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

எனினும் குறித்த தீ விபத்தில் சுமார் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

https://www.youtube.com/watch?v=zy8t-8Evn4I
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானை சுற்றிவளைக்கும் அமெரிக்கா|US troops Middle Eas|US Pentagon|

ஈரானை சுற்றிவளைக்கும் அமெரிக்கா|US troops Middle Eas|US Pentagon|

ஈரானை சுற்றிவளைக்கும் அமெரிக்கா படைகள் ,
ஈரான் அண்டைய நாடுகளில் அமெரிக்கா இராணுவம் மேலதிகமாக குவிப்பு ,

ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை|Biden warning iran|Biden|Ayatollah Ali Khamenei
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை|Biden warning iran|Biden|Ayatollah Ali Khamenei

ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை|Biden warning iran|Biden|Ayatollah Ali Khamenei|

ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது ,
எமது இராணுவம் மீது தாக்குதல் நடத்த பட்டால் ,விளைவுகளை சந்திக்கும் என்பதாக அமெரிக்கா கடும் தொனியில் எச்சரிக்கை ,|Biden warning iran|

வீடியோ

https://www.youtube.com/watch?v=tOUixBWNlvc
இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை

மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை செயலிழக்கச் செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

மின்சார உற்பத்தி மூலப்பொருட்களை சேகரிப்பது தொடர்பாக அதன் சப்ளையர்களுடன் சில முடிவுகள் எட்டப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் மின் கட்டண குறைப்பு திட்டத்தை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

அநுராதபுரத்தில் கோர விபத்து தாயும் மகளும் பலி
Posted in இலங்கை செய்திகள்

வீதி விபத்தால் 115 சிறுவர்கள் பலி

வீதி விபத்தால் 115 சிறுவர்கள் பலி

இந்த ஆண்டில் சுமார் 115 சிறுவர்கள் வீதி விபத்துகளில் இறந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வருடம் ஜனவரி 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரையில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.

சாரதிகளின் கவனக்குறைவாக வாகனம் செலுத்துவதே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

“2022ஆம் ஆண்டில் 2,539 வீதி விபத்துகள் பதுவாகியுள்ளன. அத்துடன் இந்த வருடம் 10/15/2023 வரை 1,790 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இதில் 18 வயதுக்குட்பட்ட 129 பேர் உயிரிழந்தனர். அதேநேரம் 115 சிறுவர்களையும்

வீதி விபத்தால் 115 சிறுவர்கள் பலி

இழந்துள்ளோம். இது மிகப் கவலைக்குரிய விடயமாகும். வீதி விபத்துக்களில் அதிக தொழிலாளர்களை நாம் இழக்கிறோம். மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகம். குறிப்பாக சிறுவர்களும் வீதி விபத்துக்களில்

இறக்கின்றனர். தாய் மற்றும் தந்தை ஹெல்மெட் அணிந்து தங்கள் மகனையோ மகளையோ நடுவில் ​வைத்து ஏற்றிச் செல்கிறார்கள்.

நடுவில் செல்லும் அவருக்கு ஹெல்மெட் இல்லை, அன்புள்ளவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள். விபத்து ஏற்பட்டால் அந்த பிள்ளைக்கே அதிக பாதிப்பு என்பதை உணர்ந்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை

வட்டக்கச்சி பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி – 5 வீட்டுத்திட்டம் பகுதியில் குறித்த சம்பவம் இரவு 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கல்மடுநகர் – சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

வெற்றிலை வாங்குவதற்காக கடைக்கு சென்ற குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை

குறித்த அழைப்பின் பின்னர் அந்த நபர் கடையை விட்டு மோட்டார் சைக்கிள் ஒன்றை கடந்து சென்றுள்ளார்.

சற்று நேரத்தில் சத்தம் கேட்டது. அதன் பின்னர் இருவர் சம்பவ இடத்தை விட்டு ஓடினர்.

இரவு என்பதால் அடையாளம் காண முடியவில்லை என பொலிசாரின் விசாரணைக்கு சம்பவத்தை அவதானித்தவர்கள் சாட்சியம் வழங்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அவர் கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மரணம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்று நீதவான் விசாரணைகள் முன்னெடுத்த பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி

வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் எனவும், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை கைது செய்ய குற்றத்தடுப்பு பொலிசாரும் ஈடுபட்டுள்ளனர்

வீடியோ

இஸ்ரேல் உலங்குவானூர்த்தி சுட்டு வீழ்த்தல்|helicopter shot down|isreal Gaza war news in tamil
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் உலங்குவானூர்த்தி சுட்டு வீழ்த்தல்|helicopter shot down|isreal Gaza war news in tamil


இஸ்ரேல் உலங்குவானூர்த்தி சுட்டு வீழ்த்தல்|helicopter shot down|isreal Gaza war news in tamil

இஸ்ரேல் உலங்குவானூர்த்தி ஒன்று சுட்டு வீழ்த்தல்,காசாவுக்குள்
நுழைந்த இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல் உலங்குவானூர்த்தி.


சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக காசா தரப்பினரால் அறிவிப்பு ,
வெற்றியுடன் திரும்பி விட்டோம் இசுரேல் படைகள் முழக்கம் .

வீடியோ

காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் ஆமி பின்வாங்கி ஓட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் ஆமி பின்வாங்கி ஓட்டம்


காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் ஆமி பின்வாங்கி ஓட்டம்

காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் ஆமி பின்வாங்கி ஓட்டம் ,
உள்ளே நுழைந்து பின் வாங்கிய இஸ்ரேல் இராணுவம் சொல்வது இது தான் .

video

நுழைகிறது அமெரிக்க டெல்டா படையின் கமாண்டோ|US Delta Force commandos|US chemical weapons
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

நுழைகிறது அமெரிக்க டெல்டா படையின் கமாண்டோ|US Delta Force commandos|US chemical weapons


நுழைகிறது அமெரிக்க டெல்டா படையின் கமாண்டோ|US Delta Force commandos|US chemical weapons

நுழைகிறது அமெரிக்க டெல்டா படையின் கமாண்டோ.
கைதிகளை மீட்டு வர அமெரிக்கா சிறப்பு டெல்டா படையின் கமாண்டோ
தாக்குதல் ,காசாவில் உள்ள கமாஸ் சுரங்கத்துக்குள் நுழைந்து கைதிகளை மீட்க திட்டம் ,|US Delta Force commandos|US chemical weapons

கசாவில் நடத்த படுவது இஸ்ரேல் மேற்கு நாடுகளின் இனவெறி தாக்குதல் ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

கசாவில் நடத்த படுவது இஸ்ரேல் மேற்கு நாடுகளின் இனவெறி தாக்குதல் ஈரான்

கசாவில் நடத்த படுவது இஸ்ரேல் மேற்கு நாடுகளின் இனவெறி தாக்குதல் ஈரான்

காசா பகுதியில் இஸ்ரேல் ஆட்சி செய்து வரும் மக்கள் மீதான தாக்குதல் குற்றங்கள் ,
மேற்கத்தியர்களின் இனவெறியையும் ,நவீன காலனித்துவத்தையும் எடுத்து
காட்டுவதாக ஈரான் ஆளும் அதிபர் தெரிவித்துளளார் .

தன்மைத்து நாட்டுக்குள் இடம்பெற்றவை பொற்குயிற்றம் என குறிப்பிடும் மேற்குலகம் ,ஸ்ரேல்,தாம் புரிந்து வருவதை தரம யுத்தம் என்கிறார்கள் என்ற தொனியில் தனது கருத்தை பகிர்ந்துளளர் .

கசாவில் நடத்த படுவது இஸ்ரேல் மேற்கு நாடுகளின் இனவெறி தாக்குதல் ஈரான்

உணவை ஆயுதமாக எடுத்து ,அதனை வைத்து அப்பவி மக்கள் உயிருடன் இஸ்ரேல் விளையாடி வருகிறது
என்கின்ற விடயத்தை அவர் தெளிவாக எடுத்து விளக்கியுளளார் .

பாலஸ்தீனம் தனது இலட்சியம்,நோக்கிய பாதையில் இவற்றை கடந்து செல்ல வேண்டிய தேவை நமக்குள்ளது .
அதனால் அதற்கு ஏற்ப நாங்கள் பயணித்து எமது விடுதலையை பெறுவோம் என அவர் சூளுரைத்துளளார்

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
Posted in இலங்கை செய்திகள்

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

தற்கொலை தாக்குதலுக்கு நிகரான தாக்குதலை நடத்தி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய இருவரையும்

மீட்பதற்கான திட்டம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று முன்தினம் (24) கோட்டை நீதவான் நீதிமன்றித்திற்கு அறிவித்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு முன்னாள் கமாண்டோக்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர்கள் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இவர்கள் இருவரின் ஒலி நாடாவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்; பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

இதேவேளை, குறித்த இரண்டு கொமாண்டோக்களும் ஒழுக்காற்று அடிப்படையில் இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த இரண்டு கமாண்டோக்களும், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குள் பொலிஸ் சீருடை அணிந்து சுயநினைவற்ற நச்சுப் புகையைப் பயன்படுத்தி பிரவேசிக்க தயாராகி இருந்ததாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு படையினர் தாக்குதல் நடத்தும் வகையில் ஆறு பேர் கொண்ட குழுவொன்று தயாராக இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

முன்பு திட்டமிட்டவாறு ஹரக் கட்டாவின் நெருங்கிய உறவினரான வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மிதிகம சுட்டி, ஹரக் கட்டாவையும் குடு சலிந்துவையும் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திலுருந்து மீட்பதற்காகவே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பிரபுக்கள் பாதுகாப்பு குழுவொன்றையும் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செயலிழந்திருந்த சிசிடிவி கெமரா அமைப்பும் இதன் காரணமாக மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது

ஐ.ம.சவால் தொடரும் ஆர்ப்பாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ஐ.ம.சவால் தொடரும் ஆர்ப்பாட்டம்

ஐ.ம.சவால் தொடரும் ஆர்ப்பாட்டம்

நாட்டில் மின்கட்டண அதிகரிப்புக்கு எதிரான தொடர் ஆர்ப்பாட்டங்களில் இன்றும் (26) வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதனடிப்படையில்,

01.கொழும்பு மேற்கு-பம்பலப்பிடி சந்தி-இரவு 06.30 மணி

02.குளியாப்பிட்டி-குளியாப்பிட்டி நகரம் -6.30

03.கம்பளை-கம்பளை மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னாள்-இரவு 07.00 மணி

04.உடுநுவர-கெலிஓய நகர்-மாலை 06.00 மணி

05.ரஜ்கம சீனிகம தேவாலய முன்னாள்-இரவு 07.00 மணி

இலங்கையில் சாராயம் சிகரெட் விலை ஏற்றம் குடி மகன்கள் அவதி
Posted in இலங்கை செய்திகள்

வீடொன்றில் சட்டவிரோத மதுபான சாலை

வீடொன்றில் சட்டவிரோத மதுபான சாலை

வீடொன்றில் சட்டவிரோத மதுபான சாலை இயங்கி வருவதாகவும் குறித்த சட்டவிரோதமான மதுபானசாலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (26) நடைபெற்று கொண்டிருக்கும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்து அங்கஜன் இராமநாதன், உடுப்பிட்டி மக்கள் வங்கிக்கு அருகில் உள்ள ஒரு வீடொன்றில் சட்டவிரோதமான மதுபானசாலை இயங்கி வருகின்றது.

அதாவது மதுபானசாலைக்கு செல்வோர் ‘பெல்’ அடித்து உள்ளே சென்று மதுபானத்தை கொள்வனவு செய்ய முடியும். எனவே, அதனை தடுத்துநிறுத்துமாறு கோரினார்.

இதன்போது குறித்த பிரிவுக்கான பொலிஸ் பொறுப்பாதிகாரியினை உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு குழுத்தலைவரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

முன்னாள் இராணுவத் தளபதி காலமானார்
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் இராணுவத் தளபதி காலமானார்

முன்னாள் இராணுவத் தளபதி காலமானார்

இலங்கையின் 16 வது இராணுவத் தளபதி ஜெனரல் (ஓய்வு பெற்ற) லயனல் பலகல்ல காலமானார்.

அவர் இறக்கும் போது அவருக்கு வயது 75 என இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது இறுதிச் சடங்குகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

நிர்வாணப் படங்களை பகிர்ந்தவர் கைது

நிர்வாணப் படங்களை பகிர்ந்தவர் கைது

தனது பொறுப்பிலிருந்த பெண் ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்களை பரப்பிய குற்றச்சாட்டில் சுகாதார உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

34 வயதுடைய பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணிணி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் ஒக்டோபர் 24ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது புகைப்படங்களைக் குறித்த நபர் பரப்புவதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.