Author: நிருபர் காவலன்
மரக்கறிகளின் விலை தொடர்ந்து விலை ஏற்றம்
மரக்கறிகளின் விலை தொடர்ந்து விலை ஏற்றம்
நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறிகளுக்கான விலைகள் தொடர்ச்சியாக விலை ஏற்றம் கண்டு வருகிறது.
அதேநேரத்தில் கரட்டுக்கான விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு செல்லப்பட்டுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
அந்த வகையில் நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய சந்தையில் நுவரெலியா கரட்டுக்கு தொடர்ச்சியாக தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இன்று (24.01.2023) காலை நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் மரக்கறிகளுக்கான விலை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் கரட கிலோ கிராம் ஒன்றின் மொத்த விற்பணை விலை 1250/=ரூபா என அறிவித்துள்ளது.
அதேபோல கோவா 470 ரூபாய்,
லீக்ஸ் 480 ரூபாய்,
ராபு 170 ரூபாய்,
இலை பீட்ரூட் 420 ரூபாய்,
இலை இல்லா பீட்ரூட் 520 ரூபாய்
கறி உருளை கிழங்கு 320 ரூபாய்
நோக்கோல் 340 ரூபாய் எனவும் மோத்த விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
7 மீனவர்களுக்கு மரணத் தண்டனை
7 மீனவர்களுக்கு மரணத் தண்டனை
கொழும்பு மேல் நீதிமன்றம் 7 மீனவர்களுக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு மீனவ படகொன்றை கடத்தி மூவரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
துருக்கி விமானம் இலங்கையில் தரையிறக்கம் தப்பிய பயணிகள்
லண்டனில் தமிழ் கடையை எரிக்க வந்த திருடன் விழுந்த தர்ம அடி
ஐரோப்பிய எல்லையில் ரஷ்யாவின் 360 000 ராணுவம் குவிப்பு
வானில் வெடித்து சிதறிய ரஷியா இராணுவ விமானம்
கோடி பணம் கொள்ளை அடித்து பதுக்கிய அனுரா
லண்டனில் தமிழர் கடைகளுக்கு ஆப்படிக்கும் அனுரா அரசு
வீட்டு முற்றத்தில் சிறுமியை கடித்து குதறிய குரங்குகள்
வீட்டு முற்றத்தில் சிறுமியை கடித்து குதறிய குரங்குகள்
வீட்டின் முற்றத்தில் இருந்த ஒன்பது வயது சிறுமி ஒருவரை குரங்குகள் சில கடித்த சம்பவம் ஒன்று மாவனெல்லை பிரதேசத்தில் நேற்று (23) பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் மாவனெல்லை, வெரகே பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மகளின் தாயார் கூறியதாவது:
“அப்போது நான் முற்றத்தில் நெல்லை காயவைத்துக் கொண்டிருந்தேன். பாடசாலை செல்லும் எனது மகன் நெல் சாப்பிட வரும் குரங்குகளை விரட்டிக் கொண்டிருந்தார்., அப்போது எனது மகள் முற்றத்தில் இருந்தார்.
வீட்டு முற்றத்தில் சிறுமியை கடித்து குதறிய குரங்குகள்
திடீரென மகள் இருக்கும் இடத்திற்கு வந்த நான்கு குரங்குகள் அவரின் மீது பாய்ந்தன. மகள் ஓட முற்பட்ட போது அங்கு விழுந்து விட்டார். அப்போது அவர் காலின் தொடை பகுதியை குரங்குகள் கடித்தன.
பின்னர் மகன்தான் குரங்குகளை விரட்டியடித்தார். சம்பவத்தின் பின்னர் மகளை உடனடியாக மாவனெல்லை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். குரங்குகளுக்கு இரத்த ருசி பட்டால் குழந்தைகள் போன்று பெரியவர்களையும் குரங்குகள் கடிக்கக்கூடும் என்று வைத்தியர் தெரிவித்தார்.”
தற்போது குரங்குகள் அதிகமாக பெருகியுள்ள கேகாலை மாவட்டத்தின் பல பகுதிகளில் குரங்குகள் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் எத்தனை முறை தெரிவித்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, கேகாலை மாவட்டத்தில் மாத்திரம் குரங்குகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக மாவட்ட செயலகம் அண்மையில் தெரிவித்திருந்தது.
புகையிரத சிற்றுண்டிச்சாலைக்கு 14 நாட்கள் பூட்டு
புகையிரத சிற்றுண்டிச்சாலைக்கு 14 நாட்கள் பூட்டு
மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்கான பாடுமீன் நகர்சேர் கடுகதி புகையிரத வண்டியிலுள்ள சிற்றுண்டிச்சாலையில் உணவு பாதுகாப்பு இல்லாமல் வியாபாரம் செய்தமை தொடர்பாக அதன் உரிமையாளருக்கு
எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கையடுத்து எதிர்வரும் 8 ஆம் திகதி வரை தற்காலிகமாக சிற்றுண்டிச்சாலையை மூடுமாறு நேற்று (23) நீதவான் உத்தரவு விட்டுள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தலமையில் த.மிதுன்ராஜ், சோதிராஜா அமிர்தன், சோமசுந்தரம் யசோதன் ஆகியோர் கொண்ட பொது சுகாதார பரிசோதகர்கள்
கொண்ட குழுவினர் திங்கட்கிழமை (22) இரவு நகரிலுள்ள பிரபல ஹோட்டல்கள் மற்றும் புகையிரத வண்டி சிற்றுண்டிச்சாலை போன்றவற்றை திடீர் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பிரயாணிக்க இருந்த பாடுமீன் நகர்சேர் கடுகதி புகையிரத வண்டியிலுள்ள சிற்றுண்டிச்சாலை சோதனையிட்ட போது அங்கு
பாதுகாப்பற்ற முறையில் உணவு வியாபாரம் செய்தமை மற்றும் சிற்றுண்டிச்சாலையில் துப்பரவு இல்லாமை போன்றவற்றை கண்டறிந்து சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்றில் நேற்று (23) வழக்கு தாக்கல் செய்ததையடுத்து நீதவான் குறித்த புகையிரத வண்டி சிறுண்டிச்சாலையை எதிர்வரும் 8ம் திகதிவரை 14 நாட்களுக்கு மூடுமாறு கட்டளை பிறப்பித்தார்.
விஸ்வ புத்தர் மீண்டும் விளக்கமறியலில்
விஸ்வ புத்தர் மீண்டும் விளக்கமறியலில்
விஸ்வ புத்தர்” என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட துறவியை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று (24) ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர் இந்த உத்தரவை வழங்கினார்.
சந்தேக நபரை எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
விஸ்வ புத்தர் மீண்டும் விளக்கமறியலில்
சந்தேக நபரான துறவி கடந்த வாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேகநபரை இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும், எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தார்
5 500 ஆசிரியர் நியமனம்
5 500 ஆசிரியர் நியமனம்
தெரிவு செய்யப்பட்ட சில பாடங்களுக்கு 5,500 புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
வேதியியல், இயற்பியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் விசேட மொழிகளுக்கு இந்த ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட உள்ளன.
இதேவேளை, 22,000 பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை 9 மாதங்களாக விசாரணைக்கு உட்படுத்தி நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கப்படும் என நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆனால், அந்த நபர்கள் தற்போது பாடசாலைகளில் இருப்பதால், 40,000 ஆசிரியர் வெற்றிடங்களில் இருந்து அவர்களை நீக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், அனைத்து மாகாண சபைகளும் 13,500 ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ள போதும், இது தொடர்பில் நிலவும் நீதிமன்ற செயற்பாடுகள் காரணமாக அது தாமதமாகியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இன்றைய தினத்திற்குள் அது தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கக்கூடும் என தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கு முஸ்லீம் நாடுகள் பொருளாதார தடையை ஏற்படுத்துக ஈரான் அழைப்பு
இஸ்ரேலுக்கு முஸ்லீம் நாடுகள் பொருளாதார தடையை ஏற்படுத்துக ஈரான் அழைப்பு
இஸ்ரேலுக்கு முஸ்லீம் நாடுகள் பொருளாதார தடையை ஏற்படுத்த வேண்டும் எனஇரான் மத தலைவர் அழைப்பு விடுத்துள்ளார் .
இஸ்ரேல் 25.000 மக்களை கொன்று விட்டது அதற்கு தகுந்த தண்டனையை வேண்டும் என ஈரான் வேண்டுதல் .
இஸ்ரேலுக்கு முஸ்லீம் நாடுகள் தண்டனை வழங்குவதன் ஊடாகவே எமது நாடுகளின் பாதுகாப்பை உறுதி படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்
ஹவுதி ஏவுகணை தளங்கள் 25 அழிப்பு அமெரிக்கா அறிவிப்பு
ஹவுதி ஏவுகணை தளங்கள் 25 அழிப்பு அமெரிக்கா அறிவிப்பு
ஏமன் ஹவுதி அன்ஸர் அல்லா ஏவுகணை தளங்களை இலக்கு வைத்து ,
வான்வழி ஊடாக தாக்குதல் நடத்த பட்டதில், இவர்களது 25 ஏவுகணை தளங்கள் முற்றாக அழிக்க பட்டுள்ளதாக அமெரிக்கா கூட்டு படைகள் அறிவித்துள்ளன .
செய்மதி ஊடாக வானில் இருந்து தகவலை திரட்டிய அமெரிக்கா உளவுத்துறை ,
அடையாளம் காணப்பட்ட ஹவுதி முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது
ஹவுதி ஏவுகணை தளங்கள் 25 அழிப்பு அமெரிக்கா அறிவிப்பு
இந்த தாக்குதல்கள் யாவும் துல்லியமாக இடம்பெற்றது எனவும்,
இதன் பொழுது ஹவுதி ஏவு தளங்கள் அழிக்க பட்டதால் ,
ஏவுகணை ஏவும் திறன் மாட்டு படுத்த பட்டுள்ளது அல்லது
முடக்க பட்டுள்ளது எகிறது அமெரிக்கா .
செங்கடல் வழியாக பயணித்த கப்பல்கள் மீது ஹவுதிகள் இடைவிடாத
தாக்குதலை நடத்தி ,அந்த கப்பல் வழி போக்குவரத்தை சீர்குலைத்து .
மிக பெரும் பொருளதார இழப்பை ஏற்படுத்திய ஏமன் ஹவுதி படைகள்,
மீதே தாக்குதல் நடத்தி அவர்களது இராணுவ தளங்கள் அழிக்க பட்டுள்ளது என்கிறது .
எமது நாட்டுக்குள் தாக்குதல் நடத்த பட்டால்,
அமெரிக்கா அதன் கூட்டு படைகள் மிக பெரும் இடரை சந்திக்க நேரிடும் என,
ஏமன் ஹவுதி படைகள் தெரிவித்து இருந்த.
இவ்வாறான நிலையில் ,இந்த தாக்குதல் ஹவுதி நிலைகள் மீது இடம்பெற்றுள்ளது ,போர் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது
ரஷ்யா உக்ரைன் மீது கடும் ஏவுகணை தாக்குத்தல் 21 பேர் காயம்
ரஷ்யா உக்ரைன் மீது கடும் ஏவுகணை தாக்குத்தல் 21 பேர் காயம்
ரஷ்யா இராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டு
,உக்ரைன் தலைநகர் கீவ்வை இலக்கு வைத்து கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தினர் .
இந்த ஏவுகணை தாக்குதலில் அந்த பகுதி பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .
தொடராக ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 21 அப்பாவி பொது மக்கள் காயமடைந்துள்ளனர் .
இவ்வாறு காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில்
காணப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
இரண்டு வருடங்களை அண்மித்து பயணிக்கும்
உக்ரைன் ரஷ்யா போரில் உக்ரைன் உள்கட்டமைப்பு
பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .
இடைவிடாது தொடரும் உக்ரைன் ரஷ்யா தாக்குதல்களினால்
பலத்த ஆயுத,.ஆளணி ,சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன .
இஸ்ரேல் விமான கட்டளை தலைமையகம் அழிப்பு
இஸ்ரேல் விமான கட்டளை தலைமையகம் அழிப்பு
இஸ்ரேல் விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் கட்டளை தலைமையகம் அழிப்பு , இஸ்ரேல் விமான தளத்தை நொறுக்கிய ஹிஸ்புல்லா ,
இஸ்ரேல் விமான தளம் மீது கடும் ஏவுகணை தாக்குதல் ,
இந்த ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் விமான கட்டளை தலைமையக கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையம் சேதமாகியுள்ளது .
இந்த இஸ்ரேல் விமான தளத்தை இலக்கு வைத்து 15 ஏவுகணைகள் வீச பட்டன,அதிலேயே பலத்த இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஹமாஸ் அதிரடி தாக்குதல் இஸ்ரேல் இராணுவத்தின் 81 தளபதிகள் பலி
ஹமாஸ் அதிரடி தாக்குதல் இஸ்ரேல் இராணுவத்தின் 81 தளபதிகள் பலி
ஹமாஸ் போராளிகள் அதிரடி தாக்குதல்,
இஸ்ரேல் இராணுவத்தின் 21 தளபதிகள் பலி உள்ளே விட்டு கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ்.
இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்ற தாக்குதலில்களில் பெரும் தொகையில் இஸ்ரேல் தனது தளபதிகளை ஒரே நாளில் பறிகொடுத்துள்ளது .
சற்றும் எதிர்பாராத தாக்குதல் ,காத்திருந்து பழிதீர்த்துள்ள ஹமாஸ் விடுதலை போராளிகள் .
இஸ்ரேல் தமது மிக பெரும் இராணுவ தளபதிகளை இழந்து சோகத்தில் உறைந்துள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய தாக்குதலில் 200 மக்கள் பலி
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய தாக்குதலில் 200 மக்கள் பலி
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய இராணுவ தாக்குதலில் 200 மக்கள் பலியாகியுள்ளனர் ,இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீன மக்களை இலக்கு வைத்து நடத்தி வரும் தாக்குதலில் 25500 மக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
105 க்கு மேற்பட்ட நாள் கடந்து பயணிக்கும் இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் ,இதுவரையான கால பகுதியில் இந்த பெரும் தொகையில் மக்கள் பலியாகியுள்ளனர் .
அப்பவி மக்களை கொன்றுவிட்டு ,அவர்கள் யாவரும் பாலஸ்தீன போராட்டக்காரர்கள் என, இஸ்ரேல் இராணுவம் அதன் அரசு அறிவித்து வருகிறது .
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய தாக்குதலில் 200 மக்கள் பலி
கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்த பட்ட தாக்குதலில் 200 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக ,பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
மேலும் இஸ்ரேல் தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்து உள்ளனர் .
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி கொண்டிருக்கும் திறந்த வெளி இன அழிப்பை ,உலகம் கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டுள்ளது கவலை தருகிறது .
ஹிஸ்புல்லா இஸ்ரேல் நகரங்கள் மீது கடும் ஏவுகணை தாக்குதல்
ஹிஸ்புல்லா இஸ்ரேல் நகரங்கள் மீது கடும் ஏவுகணை தாக்குதல்
ஹிஸ்புல்லா இராணுவத்தினர் இஸ்ரேல் வடக்கு பகுதி நோக்கி கடும் ஏவுகணை தாக்குதலை நடாத்தியுள்ளனர் ,இதில் இஸ்ரேல் இராணுவ முகாம்கள் பாதிக்க பட்டுள்ளன .
லெபனான் எல்லையோரமாக உள்ள இஸ்ரேல் இராணுவத்தின் இராணுவ தளங்கள் ,மற்றும் ஆக்கிரமிக்க பட்ட குடியேற்ற திட்டங்களை இலக்கு வைத்து கடும் ஏவுகணை தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்திய வண்ணம் உள்ளது .
லெபனான் ஹிஸ்புல்லா இராணுவம் நடத்தி கொண்டிருக்கும் இந்த ஏவுகணை தாக்குதலில் பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
எதிரிகள் கோட்டைகள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகளை லெபனான் ஹிஸ்புல்லா இராணுவம் காணொளி பிடித்து வெளியிட்டு ,இஸ்ரேல் இராணுவத்தினருக்கு ஏற்படுத்த பட்ட இழப்பு விகிதத்தை காண்பித்துள்ளது .
எனினும் ஹிஸ்புல்லாவின் தாக்குதலில், இஸ்ரேல் இராணுவத்தினருக்கு ஏற்படுத்த பட்ட ஆள் மற்றும் ஆயுத இழப்பு தொடர்பாக தெரியவரவில்லை .
கெஹலிய ரம்புக்கெல்லவை கைது செய்ய கோரி மக்கள் போராட்டம்
கெஹலிய ரம்புக்கெல்லவை கைது செய்ய கோரி மக்கள் போராட்டம்
கெஹலிய ரம்புக்கெல்லவை கைது செய்ய கோரி மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் அமைச்சர் கெஹலிய ரம்புக்கெல்ல மோசடியில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
ஆளும் அரசில் சுற்றாடல் துறை அமைச்சராக கெஹலிய ரம்புக்கெல்ல விளங்கி வருகிறார் ,இவர் மக்கள் நலனை மறந்து சமூக அநீதியிலே ஈடுபட்டுள்ளார் என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
ராஜபக்ச அரசின் அங்கமாக விளங்கும் கெஹலிய ரம்புக்கெல்ல மோசடியில் கதாநாயகனாக அன்றில் இருந்து இன்றுவரை விளங்கி வருவதாக மக்கள் குற்ற சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர் .
அமைச்சர் கெஹலிய ரம்புக்கெல்ல பொலிசாரை ஏவி விட்டு போராட்டம் நடத்தியவர்களை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளார் .
இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை
இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை
இஸ்ரேல் இராணுவத்தினர் பாலஸ்தீனம் காசா பகுதிக்குள் நுளைந்தனர் ,அவ்வாறான 21 இஸ்ரேல் இராணுவத்தினர் கொத்தாக போட்டு தள்ளியுள்ளது ஹமாஸ் படைகள் .
பாலஸ்தீனம் காசா பகுதிக்குள் நுழைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் கமாண்டோ படைகளைஇலக்கு வைத்து, அல்கஸாம் படை பிரிவு ஏவுகணை தாக்குதலை நடத்தியதில் இஸ்ரேல் கமாண்டோ படைகள் 21 பேர் கொத்தாக பலியாகியுள்ளனர் .
உடைந்த கட்டடம் ஒன்றுக்குள் மறைந்திருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் படைகளை, உள்ளே நுழைய விட்டு ஏவுகணை தாக்குதலை நடத்தி அப்படியே அழித்துள்ளனர் .
இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை
இவர்கள் முன்பாக நின்ற டாங்கிகள் மீதும், ஊந்துகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,அதில் அந்த டாங்கிகள் பலதும் அழிக்க பட்டுள்ளது .
காசா பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் வெற்றி கொடி கட்டி தமது வீர தீரத்தை நிலை நாட்டியுள்ளது .
105 நாட்கள் கழிந்து நடக்கும் இந்த இஸ்ரேல் பாலஸ்தீன காசா போரில் ஹமாஸ் போரளிகள் சாதனை படைத்தது வருகிறதை இந்த இழப்பின் ஊடக இஸ்ரேல் இராணுவமே ஒப்பு கொண்டுள்ளது .
சிறிதரனுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வாழ்த்து தெரிவிப்பு
சிறிதரனுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வாழ்த்து தெரிவிப்பு
சிறிதரனுக்கு ஆளும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை தமிழரசு கட்சி புதிய தலைவர் சிறிதரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருக்கு இடம்பெற்ற தெரிவில் சிவஞானாம் சிறிதரன் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் .
அவ்வாறு வெற்றி பெற்ற சிவஞானாம் சிறிதரனுக்கே வெளிநாட்டு பயணம் முடித்து இலங்கை ,வந்தடைந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வாழ்த்தினை தெரிவித்துள்ளார் .
இலங்கை பொலிசாரால் 955 பேர் கைது தொடரும் பொலிஸ் வேட்டை
இலங்கை பொலிசாரால் 955 பேர் கைது தொடரும் பொலிஸ் வேட்டை
இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடும்பெற்ற யுக்திய நடவடிக்கையில் பொலிசாரால் 955 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ,தொடரும் பொலிஸ் வேட்டையால் குற்றவாளிகள் பீதியில் உறைந்துள்ளனர் .
போதைவஸ்து குழுவினர் மற்றும் நீதிமன்றினால் தேட படும் குற்றவாளிகளை கைது செய்து வருவதாக யுக்திய நடவடிக்கை தலமை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார் .
பொலிசாரால் கைது செய்ய பட்ட குற்றவாளிகள் யாவரும் நீதிமன்றின் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் .
இலங்கையில் பெருகி வரும் போதைவஸ்து வர்த்தகத்தை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .
யாழில் அரச பேரூந்து தனியார் பேரூந்து மோதி விபத்து
யாழில் அரச பேரூந்து தனியார் பேரூந்து மோதி விபத்து
யாழில் அரச பேரூந்து மற்றும் தனியார் பேரூந்து என்பன நேரெதிர் மோதி விபத்தில் சிக்கின ,இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் .
யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பகுதியில் நபர் ஒருவரை ஏற்றுவதற்கு நின்ற பேரூந்து மீது வேகமாக பயணித்த அரச பேரூந்து திடீரென மோதி விபத்து சம்பவத்தை ஏற்படுத்தியது .
இதன் பொழுதே நான்கு பேர் காயமடைந்தனர் ,இந்த பேரூந்து விபத்தில் காயமடைந்த நால்வரும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
குறித்த பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் தொடர்ச்சியாக இவ்விதமான பேரூந்து விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தனது வெளிநாட்டடது பயணத்தை முடித்து இலங்கை திரும்பினார் .
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வெற்றிகரமாக தனது வெளிநாட்டு பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இலங்கையின் பொருளாதாரத்தை முன்னிலை படுத்த வெளிநாடுகளிடன் கடன் உதவிகள் கோரியதாக தெரிவிக்க பட்டுள்ளது .
அவ்விதமான கடன் உதவிகள் இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வெற்றிகரமான பயணத்துடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் கைது
இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் கைது
இந்தியா மீனவர்கள் ஆறு பேர் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் ,நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்ளையே தாம் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது .
இந்தியா மீனவர்கள் இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி நாள்தோறும் மீன்பிடியில் ஈடு படுவதாகவும் ,இதனால் இலங்கை மீனவர்கள் கடல்தொழில் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக இலங்கை மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .
தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் ,இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது .
இலங்கை கடற்படையால் கைது செய்ய பட்ட ஆறு மீனவர்கள் மற்றும் இரண்டு படகுகள் யாவும் நீதிமன்றில் ஒப்படைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மீனவர்கள் பிடித்த மீன்கள் யாவும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது குறிப்பிட தக்கது .












































