Posted in சினிமா

கொரோனா நிதிக்கு சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் உதவி

கொரோனா நிதிக்கு சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் உதவி

நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் அளிப்பதாக அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் நிதிக்கு சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் உதவி
சிவகார்த்திகேயன்


கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு

நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் ஸ்தம்பித்துள்ளது. இதில் மீளும் நடவடிக்கைக்காக நிதி உதவி

வழங்கும்படி பிரதமர் மோடியும், தமிழகம் உட்பட பல்வேறு மாநில முதல்வர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஹிந்தியில் அக்ஷய் குமார் ரூ.25 கோடி, தெலுங்கில் பிரபாஸ் ரூ.4 கோடி, மகேஷ்பாபு, சிரஞ்சீவி தலா ரூ.1 கோடி என நிதி உதவி

அளித்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் உள்ள நடிகர்கள் தாங்கள் சார்ந்த சினிமா தொழிலாளர்களுக்கு மட்டும் சிலர் நிதி உதவி

அளித்தனர். பிரதமருக்கோ, முதல்வரின் நிவாரண நிதிக்கோ இதுவரை நிதி வழங்கவில்லை.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் அளிப்பதாக அறிவித்துள்ளார்.

இவர் ஏற்கனவே பெப்சி தொழிலாளர்களுக்கும் ரூ.10 லட்சம் நிதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா நிதிக்கு
கொரோனா நிதிக்கு
Posted in சினிமா

சம்பளத்தை குறைத்த முன்னணி நடிகை

சம்பளத்தை குறைத்த முன்னணி நடிகை

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹீரோயின் ஒருவர் தற்போது சம்பளத்தை குறைத்துள்ளாராம்.

சம்பளத்தை குறைத்த முன்னணி நடிகை
கிசுகிசு
‘பொம்மாயி’ வேடம் போட்ட அந்த பிரபல கதாநாயகி, ஒரு படத்துக்காக குண்டானாராம். அந்த படம் முடிவடைந்ததும் பழைய

உடம்பை கொண்டுவர முயற்சி செய்தார். உடனடியாக முடியவில்லை. மெலிவதற்கான சிகிச்சை பெற்றபின், அவருக்கு பழைய உடம்பு கிடைத்து இருக்கிறது.

இந்த நிலையில், அந்த நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. கவலை அடைந்த நடிகை, மீண்டும் இழந்த மார்க்கெட்டை பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம்.

முதல்கட்டமாக அவர் தனது சம்பளத்தை குறைத்து இருக்கிறாராம். அவருடைய சம்பள குறைப்புக்கு சில தெலுங்கு பட அதிபர்கள் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்களாம்.

சம்பளத்தை குறைத்த
சம்பளத்தை குறைத்த
Posted in சினிமா பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் பிரபல நடிகர் Andrew Jack கொரனோ நோயால் பலி

பிரிட்டனில் பிரபல நடிகர் Andrew Jack கொரனோ நோயால் பலி

பிரிட்டனில் மிக பெரும் புகழ் வாய்ந்த நடிகராக விளங்கிய Andrew Jack
பிரிட்டனில் பரவி வந்த கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இன்று பலியாகியுள்ளார்

இவருக்கு தற்பொழுது 76 வயதாகிறது ,இவரது இழப்பால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

பிரிட்டனில் பிரபல நடிகர்
பிரிட்டனில் பிரபல நடிகர்
Posted in மருத்துவம்

சர்க்கரை நோயை விரட்ட இதை சாப்பிடுங்க

சர்க்கரை நோயை விரட்ட இதை சாப்பிடுங்க

முருங்கை இலையினுடைய இலையை உலர்த்தி, பொடி செய்து அதை கிரீன் டீ போல, டீ போட்டுக் குடித்துக் கொள்ளலாம்.

இந்த டீயை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ
முருங்கை டீ


முருங்கை இலையினுடைய இலையை உலர்த்தி, பொடி செய்து அதை கிரீன் டீ போல, டீ போட்டுக் குடித்துக் கொள்ளலாம்.

ஆனால் இந்த பவுடரை ஒரு நாளைக்கு அரை அல்லது ஒரு ஸ்பூன் அளவுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

தேவையான பொருட்கள்

முருங்கைக்கீரை பொடி – ஒரு தேக்கரண்டி ,
கிரீன் டீ பொடி – ஒரு தேக்கரண்டி ,


புதினா இலைகள் – 4,
எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி,
வெல்லம் – 1 தேக்கரண்டி.

முருங்கை டீ

செய்முறை

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் முருங்கைக்கீரை பொடி, கிரீன் டீ பொடி, புதினா இலை, வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

பின்னர் இந்த டீயை வடிகட்டி எலுமிச்சை சாறு கலந்து பருகவும்.

சூப்பரான முருங்கை டீ ரெடி.

குறிப்பு: டயட்டில் இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி குடிக்கலாம். கர்ப்பிணிகள் இதனை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

நீரிழிவு, இரத்த அழுத்தம், தைராய்டு போன்ற உடல் உபாதைகளுக்கு மருந்துகளை சாப்பிட்டு வந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி குடித்து வரலாம்

சர்க்கரை நோயை விரட்ட
சர்க்கரை நோயை விரட்ட
    Posted in சினிமா

    கல்யாண ஆசையில் மாப்பிள்ளை தேடும் நடிகை

    கல்யாண ஆசையில் மாப்பிள்ளை தேடும் நடிகை

    கல்யாண ஆசையில் மாப்பிள்ளை தேடும் நடிகை

    தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான கேரள நடிகை, தற்போது மாப்பிள்ளை தேடி வருகிறாராம்.

    மாப்பிள்ளை தேடும் நடிகை
    கிசுகிசு


    தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான கேரள நடிகை, தற்போது கொச்சியில் வசித்து வருகிறார்.

    கேரளாவில் இருந்தோ, வெளியே இருந்தோ பொருத்தமான முஸ்லிம் வரன் எனக்கு தேவை என்று கூறியுள்ளாராம்.

    மேலும் கணவராகப்போகிறவர் திருமணத்திற்கு பிறகும் நான் நடிக்க சம்மதிக்கவேண்டும். எனது வளர்ச்சிக்கு அவர்

    துணைபுரியவேண்டும். அதுவே என் நிபந்தனை என்று கூறுகிறார் அந்த நடிகை.

    கல்யாண ஆசையில் மாப்பிள்ளை
    கல்யாண ஆசையில் மாப்பிள்ளை
    Posted in சினிமா

    சினிமா தொழிலாளர்களுக்கு சல்மான்கான் உதவி

    சினிமா தொழிலாளர்களுக்கு சல்மான்கான் உதவி

    கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து இருக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு சல்மான் கான் உதவி செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.

    சினிமா தொழிலாளர்களுக்கு சல்மான்கான் உதவி
    சல்மான் கான்


    கொரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களுக்கு

    உதவ தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் நிதி திரட்டப்படுகிறது. தமிழ்நாட்டில் திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான பெப்சி

    அமைப்புக்கு நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, உதயநிதி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் நிதி வழங்கி உள்ளனர்.

    தெலுங்கில் சிரஞ்சீவி இதற்காக ஒரு அமைப்பையே தொடங்கி நிதி திரட்டி வருகிறார். இதுவரை ரூ.3.8 கோடி சேர்த்துள்ளார். இந்த

    நிலையில் இந்தி நடிகர்களும், சினிமா தொழிலாளர்களுக்கு உதவ பணத்தை வாரி வழங்குகிறார்கள். நடிகர் சல்மான்கான் 25 ஆயிரம் சினிமா தொழிலாளர்களுக்கு உதவுவதாக அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து இந்திய சினிமா ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் பி.என்.திவாரி கூறும்போது, “எங்கள் அமைப்பில் மொத்தம் 5 லட்சம்

    உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் கஷ்டத்தில் உள்ள 25 ஆயிரம் பேருக்கு உதவுதாக சல்மான்கான் உறுதி அளித்துள்ளார்” என்றார்.

    சினிமா தொழிலாளர்களுக்கு
    சினிமா தொழிலாளர்களுக்கு
    Posted in உளவு செய்திகள்

    ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை ஈராக்கிற்கு வழங்கும் அமெரிக்கா

    ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை ஈராக்கிற்கு வழங்கும் அமெரிக்கா

    ஈராக்கில் உள்ள அமெரிக்கா வான் தளங்கள் இரண்டின் மீது

    ஈரானிய இராணுவத்தினர் திடீர் தொடர் ஏவுகணை தாக்குதலை

    மேற்கொண்டனர் ,இதில் நூறுக்கு மேற்பட்ட அமெரிக்கா

    இராணுவத்தினர் பலத்த மூளை காயங்களுக்கு உள்ளாகியதுடன்

    ,அந்த இராணுவ முகாம் தரை மட்டம் ஆகியது .

    ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல் காரணமாக அமெரிக்கா ஈராக்கிற்கு ஈரான் ஏவும் ஏவுகணை வானில் வைத்து இடைமறித்து

    தாக்கும் ஏவுகணை செலுத்திகளை வழங்கியுள்ளது Patriot air defense missile system

    இதன் பின்னர் ஈரானின் ஏவுகணைகள் இதன் மூலம் சுட்டு வீழ்த்த படும் என அமெரிக்கா நம்புகிறது ,

    எனினும் இது போன்ற நாவீன ஆயுதங்களுடன் தரித்து நின்ற

    அமெரிக்கா இராணுவ கோட்டைகளை ஈரான் ஏவுகணை துவாம்சம் செய்து இருந்தன

    விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக அமெரிக்காவின் செயல் பாடுகள் உள்ளன .

    இதன் பின்னர் ஈரான் நடத்த போகும் ஏவுகணை தாக்குதலின் பின்னரே அமெரிக்காவின் ஆயுத பயன்பாடும் ,அவற்றை

    மீள்மாற்றியமைக்க வேண்டிய நிலைக்கு அமெரிக்கா செல்ல வேண்டிய நிர்பந்த நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது .

    ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும்
    ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும்
    Posted in உளவு செய்திகள்

    கொரனோ நோயால் 568 அமெரிக்கா இராணுவம் பாதிப்பு – ஒருவர் பலி

    கொரனோ நோயால் 568 அமெரிக்கா இராணுவம் பாதிப்பு – ஒருவர் பலி

    உலகில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 568 அமெரிக்கா இராணுவத்தினர் பாதிக்க பட்டுள்ளனர் ,

    அதில் முதன் முதலாக ஒரு சிப்பாய் பலியாகியுள்ளார்
    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 280 இராணுவத்தினர் இந்த

    நோயின் தாக்குதலில் சிக்கியுள்ளனர்
    என அமெரிக்கா பாதுகாப்பபு அமைச்சு அறிவித்துள்ளது

    உலகில் அதிகளவான இராணுவத்தை கொண்ட அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த புள்ளி விபரங்களுக்கு மேலான பாதிப்பில்

    இராணுவம் சிக்கி இருக்கும் என நம்ப படுகிறது

    இழப்புக்கள் இதை விட இருமடங்கு அதிகமாக இருக்கலாம் என கருத படுகிறது

    கொரனோ நோயால் 568 அமெரிக்கா
    கொரனோ நோயால் 568 அமெரிக்கா
    https://www.youtube.com/watch?v=VU7R_hL5rWc
    Posted in சினிமா

    லண்டன் மருத்துவமனையில் ராதிகா ஆப்தே

    லண்டன் மருத்துவமனையில் ராதிகா ஆப்தே

    தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ராதிகா ஆப்தே லண்டன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

    லண்டன் மருத்துவமனையில் ராதிகா ஆப்தே
    ராதிகா ஆப்தே
    தென்னிந்திய மொழிகளிலும், இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்தவர் ராதிகா ஆப்தே. தமிழில், ரஜினியுடன்,

    கபாலி, பிரகாஷ் ராஜுடன், தோனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர், லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர், பெனடிக்ட் டெய்லர்.

    இந்நிலையில், சமீபத்தில் லண்டன் மருத்துவமனையில் மாஸ்க் அணிந்தபடி அமர்ந்துள்ள தன் படத்தை, சமூக வலைதள பக்கத்தில் ராதிகா ஆப்தே பகிர்ந்துள்ளார். அதில், ‛தனக்கு கொரோனா

    இல்லை என்றும், வழக்கமான பரிசோதனைக்கே வந்துள்ளேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதில், ரசிகர் ஒருவர் கேட்ட

    கேள்விக்கு பதிலளிக்கையில், ‛இடது விரலில் ஏற்பட்ட காயத்திற்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளேன்’ என, பதிலளித்துள்ளார்.

    கொரோனா பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக ராதிகா ஆப்தே சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    லண்டன் மருத்துவமனையில்
    லண்டன் மருத்துவமனையில்
    Posted in சினிமா

    கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க நர்சாக மாறிய நடிகை

    கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க நர்சாக மாறிய நடிகை

    இந்தி நடிகை ஷிகா மல்கோத்ரா, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நர்சாக மாறி இருக்கிறார்.

    கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க நர்சாக மாறிய நடிகை
    ஷிகா மல்கோத்ரா


    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நடிகர்-நடிகைகள் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு, தங்கள் பங்களிப்பை

    செய்து வருகிறார்கள். கஷ்டப்படும் திரைப்பட தொழிலாளர்களுக்கு நிதி உதவியும் அளிக்கின்றனர்.

    ஆனால் இந்தி நடிகை ஷிகா மல்கோத்ரா, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நர்சாக மாறி இருக்கிறார்.

    இவர் கடந்த மாதம் திரைக்கு வந்த ‘காஞ்ச்லி லைப் இன் எ ஸ்லாஷ்’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இதில் சஞ்சய் மிஸ்ரா நாயகனாக வந்தார். கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு உதவும் பணிகளில் தொண்டு நிறுவனத்தினர்

    இணைய வேண்டும் என்று அரசு அறிவித்து இருந்தது. இதையடுத்து ஷிகா, மும்பையில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் தன்னார்வலராக ‘நர்சு’ பணியில் சேர்ந்துள்ளார்.

    இவர் நர்சிங் பட்டப்படிப்பை முடித்துள்ளார். கதாநாயகி ஆனதால் நர்சு வேலை பார்க்காமல் இருந்தார். இப்போது அந்த பணியை

    ஏற்றுள்ளார். ஆஸ்பத்திரியில் நர்சு சீருடை அணிந்து வேலைபார்க்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில்

    வெளியிட்டுள்ளார். அதில், “இந்த மோசமான தருணத்தில் மக்களுக்கு நர்சாக சேவையாற்ற முடிவு செய்துள்ளேன்.

    அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். அரசுக்கு உதவுங்கள்” என்று கூறியுள்ளார்.

    கொரோனாவுக்கு சிகிச்சை
    கொரோனாவுக்கு சிகிச்சை
    Posted in மருத்துவம் வினோத வீடுப்பு

    சாப்பிட்ட பிறகு சாப்பிட கூடாத உணவுகள்

    சாப்பிட்ட பிறகு சாப்பிட கூடாத உணவுகள்

    ஆப்பிள் சாப்பிட்ட பிறகு சிலவகை உணவுகளை சாப்பிடக்கூடாது. அதை மீறி சாப்பிட்டால் ஆப்பிள் விஷத்தன்மை கொண்டதாகமாறி உடலுக்கு தீங்கு விளைவித்துவிடும்.

    ஆப்பிள் சாப்பிட்ட பிறகு சாப்பிட கூடாத உணவுகள்
    ஆப்பிள்


    ஆப்பிள், எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கும் பழமாக இருக்கிறது. அதனை எப்போது சாப்பிட வேண்டும் என்பது

    முக்கியமானது. ஆப்பிள் சாப்பிட்ட பிறகு சிலவகை உணவுகளை சாப்பிடக்கூடாது. அதை மீறி சாப்பிட்டால் ஆப்பிள் விஷத்தன்மை கொண்டதாகமாறி உடலுக்கு தீங்கு விளைவித்துவிடும்.

    குறிப்பாக ஆப்பிள் சாப்பிட்ட உடன் தயிர் கலந்து சாப்பிடக் கூடாது. இரண்டு மணி நேரம் கழித்து தயிர் சாப்பிடுவதுதான் நல்லது.

    ஆப்பிள், தயிர் இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் கபம் சார்ந்த பிரச்சினை ஏற்படும். ஆப்பிள் சாப்பிட்ட உடன் புளிப்பு சார்ந்த எந்த

    உணவையும் சாப்பிட வேண்டாம். அவை வாயு தொந்தரவு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

    ஆப்பிள் சாப்பிட்டதும் தண்ணீர் பருகவும் கூடாது. உடனே தண்ணீர் குடித்தால் வயிற்றில் உள்ள அமிலத்தை நீர்த்து போகச்செய்து

    பூஞ்சை உயிர்வாழ்வதற்கு சாதகமான சூழலை உருவாக்கிவிடும். அது வாயு தொந்தரவை ஏற்படுத்தும். பொதுவாகவே சிட்ரஸ் மற்றும் இனிப்பு பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் பருகக்கூடாது.

    அது வாயு தொந்தரவு, அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றில் பாக்டீரியா வளரும் சூழலையும் ஏற்படுத்தும். ஆப்பிள் சாப்பிட்ட

    பிறகு முள்ளங்கி சேர்த்த உணவை சாப்பிடுவதும் நல்லதல்ல. அது சரும அலர்ஜியை உருவாக்கும்.

      Posted in சினிமா வினோத வீடுப்பு

      தெருநாய்களுக்கு உணவளிக்கும் நடிகை

      தெருநாய்களுக்கு உணவளிக்கும் நடிகை

      கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு நடிகை ஒருவர் உணவளித்து வருகிறார்.

      தெருநாய்களுக்கு உணவளிக்கும் நடிகை
      சம்யுக்தா ஒரநாடு


      இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

      கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். அதுபோல் திரைப்படம் உள்பட பல்வேறு துறை பிரபலங்களும் வீட்டுக்குள்ளேயே இருந்து வருகிறார்கள்.

      இந்த நிலையில் கன்னட திரைப்பட நடிகை சம்யுக்தா ஒரநாடு, ஊரடங்கால் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் தெருநாய்களுக்கு உணவளித்து வருகிறார்.

      சம்யுக்தா ஒரநாடு

      இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த ஒரு வாரமாக நாய்கள் உணவு இல்லாமல் போராடி வருவதைக் கண்டு மனம் உடைகிறது. நான் உள்பட சிலர் சேர்ந்து

      தெருநாய்களை கண்டறிந்து உணவளித்து வருகிறோம். இதற்கு உதவியாக இருக்கும் பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி

      சூர்யாவுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

      தெருநாய்களுக்கு உணவளிக்கும் நடிகை
      தெருநாய்களுக்கு உணவளிக்கும் நடிகை
      Posted in உளவு செய்திகள்

      வடகொரியா இரு ஏவுகணை சோதனை – ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது

      வடகொரியா இரு ஏவுகணை சோதனை – ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது

      உலக நாடுகள் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி தவித்து கொண்டிருக்க


      வடகொரியாவானது இரு கூறும் தூர ballistic ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவி சோதனை செய்துள்ளது

      ஜப்பானின் கிழக்கு கடல் பகுதியில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

      இரண்டு மாதங்களுக்குள் நடத்திய ஆறாவது ஏவுகனை சோதனையாக இது உள்ளது


      உலகம் பரவி வரும் வைரஸ் நோயினை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர தடுத்து கொண்டிருக்க வடகொரியாவோ தனது

      ஏவுகணை சோதனையை நடத்தி வருவது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

      வடகொரியா இரு ஏவுகணை
      வடகொரியா இரு ஏவுகணை
      https://www.youtube.com/watch?v=VU7R_hL5rWc
      Posted in உளவு செய்திகள்

      சவுதி அரேபியாவில் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் – பதட்டம் அதிகரிப்பு

      சவுதி அரேபியாவில் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் – பதட்டம் அதிகரிப்பு

      உலக நாடுகளை கொரனோ வைரஸ் ஆட்டி படைத்து கொண்டிருக்க Yemen’s Houthi இராணுவத்தால் சவுதியின்

      தலைநகரை இலக்கு வைத்து இரு ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது

      இந்த ஏவுகணைகள் வெடித்த பொழுதும் அதனால் எவருக்கும் சேதங்கள் ஏற்படவில்லை என சவுதி அதிரடியாக அறிவித்துள்ளது

      குறித்த இராணுவத்தின் மீது சவுதியை படைகள் வலிந்து

      தாக்குதலை மேற்கொண்டிருந்தன அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

      சவுதி அரேபியாவில் வீழ்ந்து
      சவுதி அரேபியாவில் வீழ்ந்து
      Posted in சினிமா

      உயிரை விட எதுவும் முக்கியமில்லை – தமன்னா

      உயிரை விட எதுவும் முக்கியமில்லை – தமன்னா

      ஊரடங்கில் யாரும் வெளியே போகவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ள தமன்னா, உயிரை விட எதுவும்

      முக்கியமில்லை என கூறியுள்ளார்.

      உயிரை விட எதுவும் முக்கியமில்லை – தமன்னா
      தமன்னா
      ஊரடங்கில் யாரும் வெளியே போகவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து நடிகை தமன்னா கூறியிருப்பதாவது:-

      “‘பிரதமர் மோடி அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு என்பது, வரும் அழிவில் இருந்து முன்கூட்டியே நம்மை பாதுகாத்து கொள்ளும்

      முயற்சியாகும். இதை அலட்சியமாக நினைக்க வேண்டாம். நம்மை காப்பாற்றுவதற்காகத்தான் இந்த முடிவு. நமக்கான முதல் நல்ல

      அடியாக இதை பார்க்க வேண்டும். நாம் உயிரோடு இருப்பதைவிட எதுவும் முக்கியம் இல்லை.

      தமன்னா

      நான் குடும்பத்தோடு வீட்டில் இருக்கிறேன். நீங்களும் இதையே கடைபிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நல்ல நிலையில்

      இருப்பவர்கள் வீட்டில் இருப்பது வேறு. ஆனால் சாதாரண ஏழைகள், படிப்பறிவில்லாத கிராமத்தினர் வீடுகளுக்கு வேலிபோட்டு அவர்கள்

      வெளியே வராமல், மற்றவர்களையும் ஊருக்குள் வரவிடாமல் தடுத்து வைத்துள்ளார்கள். அவர்களை பார்த்து படித்தவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.”

      இவ்வாறு தமன்னா கூறினார்.

      உயிரை விட எதுவும் முக்கியமில்லை
      உயிரை விட எதுவும் முக்கியமில்லை
      Posted in சினிமா

      கொரோனா நிவாரண நிதி – கோடிக்கணக்கில் வாரி வழங்கிய பிரபாஸ்

      கொரோனா நிவாரண நிதி – கோடிக்கணக்கில் வாரி வழங்கிய பிரபாஸ்

      கொரோனா வைரஸ் பாதிப்புக்காக, பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் கோடிக்கணக்கில் நிதியுதவி வழங்கியுள்ளார்.

      கொரோனா நிவாரண நிதி – கோடிக்கணக்கில் வாரி வழங்கிய பிரபாஸ்
      பிரபாஸ்


      இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும்

      21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று

      பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

      இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும்

      ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்கள். இதுவரை மகேஷ் பாபு, சிரஞ்சீவி,

      பவன் கல்யாண் ஆகியோர் தலா ரூ.1 கோடி, ராம்சரண் ரூ.70 லட்சம், நிதின் ரூ.20 லட்சம் என தொடங்கி பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

      பிரபாஸ்

      இந்நிலையில் பாகுபலி நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். அதில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.3 கோடியும்,

      ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சமும் வழங்கி உள்ளார்.

      கொரோனா நிவாரண நிதி
      கொரோனா நிவாரண நிதி
      Posted in சினிமா

      கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் மரணம்

      கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் மரணம்

      பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு காலமானார்.

      கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்
      மார்க் ப்ளம்


      பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று

      வந்தார். இந்தநிலையில் நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். அவருக்கு வயது 69. இது ஹாலிவுட் திரையுலகினர்

      மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

      மார்க் ப்ளம் 1970-ம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். 1985-ல் வெளியான ‘டெஸ்பரேட்லி சிக்கிங் சூஸன்’ என்ற

      படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததாக பாராட்டப்பட்டார். ‘ஜஸ்ட் பிட்வீன் பிரண்ட்ஸ்’, ‘க்ரொக்கடைல்

      டண்டி’, ‘பிளசண்ட் டே’, ‘லவ்சிக்’, ‘த பிரசிடியோ’ உள்ளிட்ட பல படங்களில் மார்க் ப்ளம் நடிப்பு பேசப்பட்டது.

      தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். ஏற்கனவே ஹாலிவுட் நடிகர்கள் இத்ரிஸ் எல்பா, கிறிஸ்டோபர் ஹிவ்ஜு,

      ஹாலிவுட் நடிகை இந்திரா வர்மா, ஸ்பெயின் நடிகை இட்ஸியார் இட்னோ ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை

      பெற்று வருகிறார்கள். ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், நடிகை

      ஒல்கா குரிலென்கோ ஆகியோர் கொரோனா காய்ச்சலில் சிக்கி சிகிச்சை மூலம் குணமடைந்து உள்ளனர்

      கொரோனா வைரசால்
      கொரோனா வைரசால்
      Posted in சினிமா

      சேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்

      சேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்

      நடிகர் டாக்டர் சேதுராமனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட

      நடிகர் சந்தானம் அவரது உடலை சுமந்து சென்று உள்ளார்.

      சேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்


      சேதுராமன் – சந்தானம்
      தமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வாலி

      ராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் டாக்டர்

      சேதுராமன். இவர் எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த தோல் சிகிச்சை

      நிபுணர். இவர் மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில்

      தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியை பெற்றுள்ளார்.

      இந்நிலையில் நடிகர் சேது ராமன் நேற்று மாரடைப்பு காரணமாக

      காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த

      இரங்கலை தெரிவித்தனர். நடிகரும் சேதுராமனின் நண்பனுமான

      சந்தானம் இவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். மேலும்

      கண்ணீருடன் சேதுராமனின் உடலை சுமந்து சென்றார் சந்தானம்.

      சேதுராமனின் உடலை சுமந்து
      சேதுராமனின் உடலை சுமந்து
      Posted in சினிமா

      கொரோனாவால் இணைந்த வைரமுத்து, எஸ்பிபி

      கொரோனாவால் இணைந்த வைரமுத்து, எஸ்பிபி

      உலக மக்களை அச்சுறுத்தும் கொரோனா பாடலாசிரியர் வைரமுத்து, எஸ்பிபியும் இணைந்திருக்கிறார்கள்.

      கொரோனாவால் இணைந்த வைரமுத்து, எஸ்பிபி
      வைரமுத்து எஸ்பிபி


      தமிழ் திரையுலகின் பாடலாசிரியரும், எழுத்தாளருமான வைரமுத்து கொரோனா குறித்த பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

      அந்த பாடலை பாடி இசை அமைத்து வெளியிட்டுள்ளார் எஸ் பி பாலசுப்ரமணியம்.

      கொரோனா பாடலை எழுதியுள்ள வைரமுத்து அதில் பல வார்த்தை புகுத்தியுள்ளார். அணுவை விட சிறியது, அணுகுண்டை போல்

      கொடியது என அவரின் ஒப்பீடு எவ்வளவு உண்மை.

      கொரோனா சத்தமில்லாமல் நுழைந்து, போரே போடாத நிலையிலும் உலகை நிலைகுலையச் செய்துள்ளது.

      தொடுதல் வேண்டாம், தனிமையில் இருங்கள், தூய்மையாய் இருங்கள், கொஞ்சம் அச்சமும் இருக்கட்டும், அதை பற்றிய

      தெளிவும் இருக்கட்டும் என எழுதியுள்ளார் வைரமுத்து. இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது

      கொரோனாவால் இணைந்த
      கொரோனாவால் இணைந்த
      Posted in சினிமா

      விலங்குகளை அடைத்து வைக்காதீர்கள் – நமீதா,

      விலங்குகளை அடைத்து வைக்காதீர்கள் – நமீதா

      மிருக காட்சி சாலைகளில் விலங்குகளை அடைத்து வைக்க வேண்டாம் என நடிகை நமீதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

      விலங்குகளை அடைத்து வைக்காதீர்கள் – நமீதா வேண்டுகோள்
      நமீதா


      கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் வீட்டில் இருக்கும்படி அரசு கடுமையாக எச்சரித்து உள்ளது.

      இதனையும், விலங்குகளை மிருக காட்சி சாலைகளில் அடைப்பதையும் ஒப்பிட்டு நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராம்

      பக்கத்தில் கூறியிருப்பதாவது:- “இப்போதைய நிலைமையை வைத்து புரிந்துகொள்ள வேண்டும். நான் ஒருபோதும் மிருக காட்சி

      சாலைகளை ஆதரித்தது இல்லை. மிருக காட்சி சாலைகளுக்கு

      சென்று விலங்குகளை பார்க்கும்படி யாரையும் ஊக்குவித்ததும் கிடையாது.

      ஊரடங்கையொட்டி சில நாட்கள் வீட்டில் இருப்பதற்கே நமக்கு சோர்வு ஏற்படுகிறது, வெளியே செல்ல வேண்டும் என்று

      விரும்புகிறோம். நமது சந்தோஷத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் விலங்குகளுக்கும் இந்த உணர்வுதானே இருக்கும்.

      உங்கள் குழந்தைகளுக்கு விலங்குகளை காட்ட விரும்பினால் கம்ப்யூட்டரிலோ அல்லது சரணாலயத்துக்கு அழைத்துச் சென்றோ

      காட்டுங்கள். தயவுசெய்து மிருகங்களை அடைத்து வைப்பதை நிறுத்துங்கள்.

      நமீதா

      மன அழுத்தத்தாலும், கவலையாலும் அவை இறக்கின்றன. நாம் டிக்கெட் வாங்கி போய் பார்ப்பதால்தான் மிருக காட்சி சாலைகள்

      நிரம்பி வழிகின்றன. அங்கு போவதை நிறுத்தினால், விலங்குகளை அடைத்து வைப்பதையும் நிறுத்திவிடுவார்கள். விலங்குகள்

      நம்முடன் வாழ்பவையே தவிர நமக்காக வாழக்கூடியவை அல்ல.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

      விலங்குகளை அடைத்து நமீதா
      விலங்குகளை அடைத்து