Tag: சம்பளத்தை குறைத்த
Posted in சினிமா
சம்பளத்தை குறைத்த முன்னணி நடிகை
Author: நிருபர் காவலன் Published Date: 01/04/2020 Leave a Comment on சம்பளத்தை குறைத்த முன்னணி நடிகை
சம்பளத்தை குறைத்த முன்னணி நடிகை
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹீரோயின் ஒருவர் தற்போது சம்பளத்தை குறைத்துள்ளாராம்.
சம்பளத்தை குறைத்த முன்னணி நடிகை
கிசுகிசு
‘பொம்மாயி’ வேடம் போட்ட அந்த பிரபல கதாநாயகி, ஒரு படத்துக்காக குண்டானாராம். அந்த படம் முடிவடைந்ததும் பழைய
உடம்பை கொண்டுவர முயற்சி செய்தார். உடனடியாக முடியவில்லை. மெலிவதற்கான சிகிச்சை பெற்றபின், அவருக்கு பழைய உடம்பு கிடைத்து இருக்கிறது.
இந்த நிலையில், அந்த நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. கவலை அடைந்த நடிகை, மீண்டும் இழந்த மார்க்கெட்டை பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம்.
முதல்கட்டமாக அவர் தனது சம்பளத்தை குறைத்து இருக்கிறாராம். அவருடைய சம்பள குறைப்புக்கு சில தெலுங்கு பட அதிபர்கள் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்களாம்.







