Posted in சினிமா

போலீசாருக்கு முக கவசம் வழங்கிய விஜய் ரசிகர்கள்,

போலீசாருக்கு முக கவசம் வழங்கிய விஜய் ரசிகர்கள்

ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு

விஜய் மக்கள் இயக்கத்தினர் இலவசமாக முக கவசங்களை

வழங்கினர்.

போலீசாருக்கு முக கவசம் வழங்கிய விஜய் ரசிகர்கள்
விஜய்


கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு

பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் போலீசார் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முக கவசம் தட்டுப்பாடு

ஏற்பட்டுள்ளதால் போலீசாருக்கும் போதிய அளவில் முக கவசங்கள் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு

முன்பு இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் 200 முக கவசங்கள் தயார் செய்யப்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்

வழங்கப்பட்டது.

விஜய்

இந்நிலையில், தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வியை நேற்று

நேரில் சந்தித்து விஜய் ரசிகர்கள் சார்பில் 200 முக கவசங்களை வழங்கினார்.

அப்போது தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் உடன் இருந்தார்.

விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன

போலீசாருக்கு முக கவசம்
போலீசாருக்கு முக கவசம்
Posted in சினிமா

கொரோனா பிடியில் இருந்து மக்களை காக்க சிறப்பு யாகம் நடத்திய நடிகை ரோஜா,

கொரோனா பிடியில் இருந்து மக்களை காக்க சிறப்பு யாகம் நடத்திய நடிகை ரோஜா

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பிடியிலிருந்து மக்களை காக்க நடிகை ரோஜா தனது வீட்டில் சிறப்பு யாகம்

ஒன்றை நடத்தி உள்ளார்.

கொரோனா பிடியில் இருந்து மக்களை காக்க சிறப்பு யாகம் நடத்திய நடிகை ரோஜா


குடும்பத்தினருடன் வீட்டில் யாகம் நடத்திய ரோஜா
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது

கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு

உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. ஆந்திர மாநிலத்திலும் ஊரடங்கு

கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா தனது கணவரும், இயக்குனருமான

ஆர்.கே.செல்வமணியுடன் இணைந்து தனது வீட்டில் பண்டிதர்கள் மூலம் ருத்ராபிஷாகம் என்ற யாகத்தினை நடத்தினர்.

கொரோனாவின் பிடியில் இருந்து கடவுள் பொதுமக்களை காத்திட

வேண்டி இந்த யாகத்தை தனது வீட்டில் நடத்தியதாக ரோஜா தெரிவித்தார்

கொரோனா பிடியில்
கொரோனா பிடியில்
Posted in மருத்துவம் முக்கிய செய்திகள்

கொரோனாவை சரி செய்ய இதை தினம் குடியுங்கள்,

கொரோனாவை சரி செய்ய இதை தினம் குடியுங்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்ய இதை குடித்தாலே போதும் என மருத்துவர் தெரிவித்ததாக தகவல் ஒன்று சமூக

வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனாவை சரி செய்ய இதை குடித்தால் போதுமா?

கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள மருத்துவ நிபுணர்கள் 24×7 பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சமூக

வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய நகைச்சுவை தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில், தற்சமயம் வைரலாகும் பதிவுகளில், கொரோனா வைரஸ் பாதிப்பை முதலில் கண்டறிந்த மருத்துவர் சில ஆய்வு

அறிக்கைகளில் பார்த்து விட்டு கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்வதற்கான தீர்வை தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் கொரோனை வைரஸ் கிருமியை கொல்லும் பண்புகள் இரசாயண கலவைகள் தேநீரில் அதிகம் நிறைந்து இருப்பதாக

மருத்துவர் தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்திகள் வெளியாகி இருப்பதாகவும் வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது.


இதே தகவல்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில், இதன்

உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த இணையத்தில் இதுபற்றிய தேடல் நடைபெற்றது.

அதில் தேநீர் குடித்தால் கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்துவிட முடியும் என்பதை நிரூபிக்கும் தகவல் எதுவும்

கிடைக்கப்பெறவில்லை. அந்த வகையில் கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்ய தேநீர் குடித்தால் போதும் என வைரலாகும்

தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயத்தில் போலி செய்தி தாக்கம்

காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கிறது. உலகில் கொரோனா அச்சம் மக்களை வதைத்து கொண்டிருக்கும்

நிலையில், உண்மையற்ற தகவல்களால் அவர்களை மேலும் அச்சுறுத்த வேண்டாம்.

கொரோனாவை சரி செய்ய
கொரோனாவை சரி செய்ய
Posted in உளவு செய்திகள்

மக்களை சிறை பிடித்து சுட்டுகொல்லும் தீவிரவாதிகள்,

மக்களை சிறை பிடித்து சுட்டுகொல்லும் தீவிரவாதிகள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்பொழுது மக்கள்

நாடமாடும் பிரபல நகர கட்டிடம் ஒன்றுக்குள் உலவிய மக்களை

சிறை பிடித்துள்ள தீவிரவாதிகள் நால்வரை சுட்டு படுகொலை

செய்துள்ளனர் .
இவ்வாறு சுட்டு படுகொலை செய்யப் பட்டவர்களில் சிறுவர்களும்

அடங்கு கின்றனர்

தொடர்ந்து குறித்த கட்டிடத்திற்குள் துப்பாக்கி சண்டைகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன,


விசேட இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளது

கட்டிடத்தின் உள்ளே ஆயுத தாரிகள் ,மற்றும் தற்கொலை தாரிகள்

உள்ளனர் ,தொடர்ந்து சண்டை இடம்பெற்ற வண்னம் உள்ளது

குறித்த கிளர்ச்சி படைகளை தாம் சுட்டு கொன்று ஏனைய மக்களை

மீட்டு விடுவோம் என அரசு அறிவித்துள்ளது


இந்த மக்கள் சிறை பிடிப்பு ஏன் இடம்பெறுகிறது என உடனடியாக

தெரியவரவில்லை

இந்த ஆலயத்திற்குள் 150 மக்கள் .வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்


, அவர்கள் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,கைக்குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,


இதில் ஆலயத்தின் கூரைகள் இடிந்து தன் மீது வீழ்ந்து இந்த காயம் ஏற்பட்டதாக பாதிக்க பட்டவர் தெரிவித்துள்ளார்

மக்கள் பயத்தில் மேசையின் கீழே பதுங்கினர் எனினும் அவர்கள் மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன ,


இந்த தாக்குதலுக்கு உலகமகா கொடிய ஐஸ் எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது

தற்பொழுது முழுமையான கட்டு பாட்டுக்குள் இராணுவம் கொண்டு வந்துள்ளது ,


எனினும் முழுமையானசேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை ,

இணைப்பு இரண்டு

இந்த தாக்குதலில் சிக்கி இதுவரை பதினொரு பேர் பலியாகியுள்ளனர் ,

தற்கொலை தாக்குதலும் இடம்பெற்றுள்ளது ,மேலும் பல டசின் மக்கள் பாடுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் புள்ளி விபரம் இதுவரை வெளியாகவில்லை

விரிவான செய்திகள் இதே பகுதியில் இணைக்க படும் …..

மக்களை சிறை பிடித்து
மக்களை சிறை பிடித்து
Posted in மருத்துவம்

கொரோனா வைரஸ் நீரிழிவு நோயாளிகளை அதிகம் தாக்குவது ஏன்

கொரோனா வைரஸ் நீரிழிவு நோயாளிகளை அதிகம் தாக்குவது ஏன்

நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள், ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், நுரையீரல் சார்ந்த நோய்கள் கொண்டவர்கள் மற்றும்

நாள்பட்ட நோய்கள் உள்ள முதியவர்கள் போன்றவர்களை கொரோனா வைரஸ் அதிகம் தாக்கும் ஆபத்து உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து அவன் சந்தித்துவரும் முக்கியமான சவால்களில் ஒன்று வைரஸ்கள் மூலம் பரவும்

உயிர்கொல்லி நோய்கள். தற்போது மக்களை மிரட்டும் கொரோனா வைரஸ் நம்மைத் தாக்கிவிடாமல் தடுக்க ஒரு நாளில் பலமுறை கை

கழுவுவதுதான் மிகச்சிறந்த வழி என்கிறது மருத்துவ உலகம்.

இருப்பினும் நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள், ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், நுரையீரல் சார்ந்த நோய்கள்

கொண்டவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ள முதியவர்கள் போன்றவர்களை இந்த வைரஸ் அதிகம் தாக்கும் ஆபத்துஉள்ளது

என்கிறார்கள் மருத்துவர்கள். இவர்களில் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் உள்ள நோயாளிகளை கொரோனா வைரஸ் தாக்கும்

வாய்ப்பு மிகவும் அதிகம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு என்ன காரணம் என்பது குறித்த தெளிவான புரிதல் இதுவரை இல்லாமல் இருந்தது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டு இறந்துபோன மற்றும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள்

மீதான ஒரு சமீபத்திய ஒரு ஆய்வில் நீரிழிவு நோய் உள்ளவர்களை கொரோனா வைரஸ் அதிகம் தாக்குவது ஏன் என்பதற்கான

கொரோனா வைரஸ் நீரிழிவு நோயாளிகளை அதிகம் தாக்குவது ஏன்

காரணத்தை கண்டுபிடித்துள்ளதாக லெய் பாங் தலைமையிலான சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வாளர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த நோயாளிகளில் பலருக்கு நீரிழிவு

மற்றும் பெருமூளை ரத்தக்குழாய் சார்ந்த நோய்கள் (Cerebrovascular diseases) இருந்தது கண்டறியப்பட்டது.

சீனாவில் நடந்த மற்றொரு ஆய்வில், கொரோனா வைரஸ் தாக்கிய 173 பேர்களில் சுமார் 41 நோயாளிகளுக்கு ரத்தக்கொதிப்பு

இருந்ததும், சுமார் 28 நோயாளிகளுக்கு நீரழிவு நோய் இருந்தது என்றும், 10 நோயாளி களுக்கு இதய நோய் இருந்தது என்றும், 4

நோயாளிகளுக்கு பெரு மூளை ரத்தக்குழாய் சார்ந்த நோய்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது.

இறுதியாக, மூன்றாவது ஆய்வில், இந்த நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுமார் 140 நோயாளிகளில், 42

பேருக்கு ரத்தக்கொதிப்பு இருந்ததும், 17 பேருக்கு நீரிழிவு நோய் இருந்ததும் கண்டறியப்பட்டது.

இந்த மூன்று ஆய்வுகளிலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள் அனைவரும் ஒரு வகை மருந்துகளை (angiotensin-

கொரோனா வைரஸ் நீரிழிவு நோயாளிகளை அதிகம் தாக்குவது ஏன்

converting enzyme (ACE) inhibitors) எடுத்துக்கொண்டார்கள் என்பது கண்டறியப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, மனிதர்களைத் தாக்கும்

கொரோனா வைரஸ்கள் ஒருவகையான என்சைம் (angiotensin-converting enzyme 2 (ACE2) மூலமாகவே மனித உயிரணுக்களைத்

தாக்கி அவற்றினுள்ளே நுழைகின்றன என்றும், இந்த என்சைமை நுரையீரல், குடல், சிறுநீரகம் மற்றும் ரத்த நாளங்கள் ஆகிய

அனைத்து உடல் பாகங்களும் உற்பத்தி செய்கின்றன என்றும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

முக்கியமாக, இந்த என்சைம் செயல்பாட்டை தடை செய்யும் மருந்தை உட்கொள்ளும் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு

நோயாளிகளின் உடலில் இந்த என்சைம் உற்பத்தியானது மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுபோல ரத்தக் கொதிப்பு நோயாளிகள் உட்கொள்ளும் சில மருந்துகள் கொரோனா வைரஸ் மனித உயிரணுக்களுக்கு உள்ளே

நுழைய உதவும் என்சைம் உற்பத்தியை அதிகரிக்கும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தத்தில், நீரிழிவு நோயாளிகளை கொரோனா வைரஸ் அதிகம் தாக்குகின்றன என்கிறது இந்த ஆய்வு. இது தவிர, நீரிழிவு

நோயாளிகளின் உடலில் உள்ள (ACE2) மரபணுவும் மாற்றங்களுக்கு உள்ளாகி என்சைம் (ACE2) உற்பத்தி அதிகமாகலாம் என்பதும் இங்கு

கவனிக்கத்தக்கது. அதனால், நீரிழிவு நோயாளிகளை கொரோனா வைரஸ் தாக்குவதை தடுக்க வேண்டுமானால், நீரிழிவு

நோயாளிகள் தாங்கள் வழக்கமாக எடுக்கும் மருந்துகள் எடுப்பதைத் தவிர்த்து வேறு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாமா

என்று மருத்துவர்களை ஆலோசித்து முடிவு செய்தால் கொரோனா வைரஸ் தாக்குதலை அவர்களால் தவிர்க்க முடியும் என்று இந்த ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Posted in சினிமா

நயன்தாரா, அனுஷ்கா பாணியில் காஜல் அகர்வால்,

நயன்தாரா, அனுஷ்கா பாணியில் காஜல் அகர்வால்

வழக்கமான கதாநாயகியாக நடிப்பதை விட கதைக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களிலும் நடிக்க காஜல் தயாராகி வருகிறாராம்.

நயன்தாரா, அனுஷ்கா பாணியில் காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்


ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில முதிர்ந்த வேடத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால். இதையடுத்து

நடன மாஸ்டர் பிருந்தா இயக்கும் படத்தில் துல்கர் சல்மானுடன் நடிக்க உள்ளார். தென்னிந்திய மொழி படங்களில் நடன

இயக்குனராக பணியாற்றிய பிருந்தா, முதல்முறையாக இயக்கும் படத்துக்கு ஹே சினாமிகா என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதை ஜியோ ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு,

பிரீத்தா ஜெயராமன். இசை, கோவிந்த் வசந்தா. சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது. பாலிவுட்டில் அவர் நடித்துள்ள படமும்

இந்த ஆண்டில் திரைக்கு வருகிறது. இதையடுத்து அவர் ஒரு முடிவெடுத்துள்ளார்.

காஜல் அகர்வால்

வழக்கமான கதாநாயகியாக நடிப்பதை விட ரிஸ்க்கான வேடங்களிலும், கதைக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களிலும்

நடிக்க தயாராகி வருகிறாராம். மேலும் டாப் ஹீரோக்களுடன் தான் நடிப்பேன் என்ற கொள்கையையும் தளர்த்தி உள்ளார்.

நயன்தாரா அனுஷ்கா
நயன்தாரா அனுஷ்கா
Posted in சினிமா

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையாக என் வீட்டை தருகிறேன் -பார்த்திபன்,

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையாக என் வீட்டை தருகிறேன் -பார்த்திபன்

இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையாக என் வீட்டை தருகிறேன் என்று கூறியுள்ளார்.

என் வீட்டை தருகிறேன் – பார்த்திபன்

உலக மக்களை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். தினம்

தினம் இறப்புகள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், இப்படி உலகம் முழுக்க இந்த நோய்

பரவி வருகிறது. 24 மணி நேரமும் இதை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பதால் எனக்கு ஒரு யோசனை வருகிறது.

24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனைகளை நாமே உருவாக்கணும். அதாவது இரண்டு வீடுகள் இருந்தால் அதில்

ஒன்றை இந்த கொரோனா மருத்துவமனையாக கொடுக்க முன் வரலாம் . எனக்கு 3 பிளாட் இருக்கு அதையும் கொடுக்க தயார்.

அதுபோல தெருவுக்கு தெரு இப்படி பட்ட மருத்துவ வசதி செய்து கொள்வது பெரிய உதவியாயிருக்கும்” என்று கூறியுள்ளார்.

கொரோனா வைரஸால்
கொரோனா வைரஸால்
Posted in சினிமா

நான் வீட்டில் இருக்கிறேன் – மாஸ்டர் பட நடிகை,

நான் வீட்டில் இருக்கிறேன் – மாஸ்டர் பட நடிகை

கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், என் அம்மா அப்பாவிற்காக நான் வீட்டில் இருக்கிறேன் என்று மாஸ்டர் பட நடிகை கூறியுள்ளார்.

என் அம்மா அப்பாவிற்காக நான் வீட்டில் இருக்கிறேன் – மாஸ்டர் பட நடிகை
மாளவிகா மோகனன்


கொரோனா வைரஸ் உலக மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது உலகம்

முழுவதும் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு விடப்பட்டது. தற்போது தமிழகத்தில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் பலர் பல இடங்களுக்கு சென்று வருகிறார்கள்.

யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்று திரைத்துறையினர் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின்

மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன், என்னுடைய அம்மா அப்பாவிற்காக நான் வீட்டில்இருக்கிறேன் என்று எழுதி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்

நான் வீட்டில் இருக்கிறேன்
நான் வீட்டில் இருக்கிறேன்
Posted in சினிமா

பார்ட்டிகளுக்கு அழையா விருந்தாளியாக செல்லும் நடிகை,

பார்ட்டிகளுக்கு அழையா விருந்தாளியாக செல்லும் நடிகை

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர், பார்ட்டிகளுக்கு அழையா விருந்தாளியாக செல்கிறாராம்.

பார்ட்டிகளுக்கு அழையா விருந்தாளியாக செல்லும் நடிகை
கிசுகிசு


சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர், ஒருகாலத்தில் உடன் நடிப்பவர்களை மதிக்காமல் ஓவர் பந்தா காட்டி வந்தாராம்.

தற்போது திருமணத்துக்கு பின் மீண்டும் திறமையை காட்ட வந்துள்ள அந்த அம்மணியை மாஜி ஹீரோக்கள் ஏறெடுத்து கூட பார்ப்பதில்லையாம்.

இருப்பினும், நான் இப்போது பழைய பந்தா நடிகை இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில், அவர்களை வலிய சென்று

நட்பு வளர்க்கிறாராம் அந்த நடிகை. அதோடு பார்ட்டிகளிலும் அழையா விருந்தாளியாக விசிட் அடித்து வாய்ப்பு கேட்டு

வருகிறாராம். இதன்மூலம் வாய்ப்புகள் குவியும் என நம்புகிறாராம் அந்த நடிகை

பார்ட்டிகளுக்கு அழையா
பார்ட்டிகளுக்கு அழையா
Posted in சினிமா

கொரோனாவை விரட்ட சுகாதாரமே மருந்து – பாரதிராஜா,

கொரோனாவை விரட்ட சுகாதாரமே மருந்து – பாரதிராஜா

கொரோனாவை கொன்று விரட்ட சுகாதாரம் ஒன்றே, தற்போதைய மருந்து என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

கொரோனாவை விரட்ட சுகாதாரமே மருந்து – பாரதிராஜா

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சுய ஊரடங்கை

கடைபிடிக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். அதனை ஏற்று மக்கள் சுய ஊரடங்கை பின்பற்றி

வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது: “என் இனிய தமிழ் மக்களே, இயற்கைக்கும், விஞ்ஞானத்திற்கும் நடக்கும், போராட்ட யுத்தத்தில்

, பல சூழ்நிலை காலக்கட்டங்களில் மிகக் கொடிய அபாய தொற்று நோய்களை கண்டது, நம் பாரத பூமி. நிபா வைரஸ், சிக்கன்குனியா,

டெங்கு, பன்றிக்காய்ச்சல், ப்ளேக்நோய், ஆந்த்ராக்ஸ், எச்.ஐ.வி. என பல ஒட்டுண்ணிகள் நம் தேசத்தை அச்சுறுத்தியை நாம் அறிந்தோம் , கடந்து வந்தோம்.

பாரதிராஜா

அதுபோலவே வளரும், விஞ்ஞானத்தில் கொரோனா போன்ற வைரஸ்கள் ஆச்சிரியமானவை தனிமனித, சுகாதாரமே, தேச நலன் என


நம் பாரதபிரதமர் மோடி அவர்களின் ஊரடங்கு உத்தரவிற்கும், விழிப்புணர்வு ஏற்பாட்டிற்கும், கைகொடுப்போம். நம் தமிழக அரசின் முயற்சியின் ,வேகங்களும், பாரட்டுக்குறியவை.

இன்று ஓர் நாள் சூரிய ஒளி படாமல் தங்களை பாதுகாத்து கொள்ளுங்கள். எதிர்ப்பு சக்தியால், பலபோராட்டங்களை

வென்றவர்கள் நாம். உடல் எதிர்ப்பு சக்தியால் கொரோனாவை கொன்று , விரட்டுவோம். சுகாதாரம் ஒன்றே, தற்போதைய மருந்து”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவை விரட்ட
கொரோனாவை விரட்ட
Posted in சினிமா

தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட மணிரத்னம் மகன்

தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட மணிரத்னம் மகன்

இயக்குனர் மணிரத்னத்தின் மகன் நந்தன், லண்டனில் இருந்து வந்ததும் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட மணிரத்னம் மகன்
சுஹாசினி, மணிரத்னம், நந்தன்


இயக்குனர் மணிரத்னம்-சுஹாசினி தம்பதியின் மகன் நந்தன், கடந்த ஐந்து நாட்களாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக்

கொண்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் இவ்வாறு இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சுஹாசினி

வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கண்ணாடி அறையில் தனிமைப்படுத்திக்கொண்ட தனது மகனுடன் உரையாடுவதை அவர் வீடியோவாக எடுத்துள்ளார்.

அதில் தனது மகன் கடந்த 18ந் தேதி லண்டனில் இருந்து வந்ததாகவும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக

அவன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் நந்தன் கூறுகையில், தற்போது 5 நாட்களாக

தான் தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதாகவும், மேலும் 9 நாட்கள் இதேபோல் தான் இருக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தங்களைத்தானே தனிமைப்படுத்தி கொள்வது நல்லது என நந்தன்

கூறியுள்ளார். இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ள குஷ்பு, நந்தனை பாரட்டியுள்ளார்.

தன்னைத்தானே தனிமைப்படுத்திக்
தன்னைத்தானே தனிமைப்படுத்திக்
Posted in மருத்துவம்

உடல் சூட்டை தணிக்க இதை சாப்பிடுங்க

உடல் சூட்டை தணிக்க இதை சாப்பிடுங்க

சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும். வெப்ப நோய்கள் தாக்காமல் காக்கும். உடல்

சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும்.

உடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய்
சுரைக்காய்
கொடி இனத்தைச் சார்ந்த தாவரமான சுரைக்காய் சுவையான உணவு மட்டும் இல்லை. பல உயர்ந்த நற்குணங்கள் கொண்ட ஒரு

மருந்தாகும். சுரைக்காய் குக்குபைஸ் புடலை இனத்தைச் சார்ந்தது ஆகும். ‘இனிப்புச் சுரை’ அல்லது காட்டுச் சுரை’ என்றும் பிரித்துப்

பார்ப்பது வழக்கம். சுரைக் காயை ஆசியா கண்டத்தில் உள்ள மக்கள் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அறிந்து

அதைப்பயன்படுத்தி வருவதாக வரலாறு கூறுகிறது. சுரையை கறிச்சுரை என்றும் குறிப்பதுண்டு.

பொதுவாக கசப்பில்லாத சுரையே கறியாக சமைப்பதற்குப் பயன்படும். சுரைக் கொடியை மழைக்காலங்களில் வீட்டுத்

தோட்டத்திலும் கொல்லைப் பகுதியிலும் பயிராக வளர்ப்பது வழக்கம். கிராமப்புறக் கூரைகளின் மேல் இதைப் படரவிட்டு

வளர்ப்பதை நாம் இன்றும் பார்க்கலாம். சுரைக்காய் ஒரு குடத்தைப் போல உருண்டை வடிவுடையதாகும். பருமனாகவும்,

பளபளப்பாகவும், மேல் தோல் மிகவும் மிருதுவானதாகவும் இருக்கும். உட்பகுதியில் மிக்க சதைப்பற்றோடு விதைகள்

வெண்மையாகவும் காணப்படும். சுரைக்காய் மிகுந்த நீர்ச்சத்து உடையது.

இது சீதளத்தை உண்டாக்க வல்லது. சுரைக்கொடியின் கீரையைக் கூட சமைத்து (கடைந்து) உபயோகப்படுத்துவது உண்டு. நன்கு

முற்றிய சுரைக் காயை ஒரு துளையிட்டு உள்ளிருக்கும் சதைப் பகுதியை நீக்கிவிட்டு ‘சுரைக்குடுக்கை’ என்ற பேரில் ஒரு பாத்திரம்

போல் திட, திரவ பண்டங்களை வைப்பதற்காக இன்றும் பயன் படுத்துகின்றனர்.

சுரைக்காயின் மருத்துவ குணங்கள்:-

இது சீதளத்தை உண்டாக்கக் கூடியது. உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கென இதை உபயோகப்படுத்தலாம். இது சிறுநீரைப்

பெருக்கக்கூடிய சிறந்த உணவுப் பொருள். உடலில் நீரேற்றத்தால் வந்த வீக்கத்தை கரைக்க வல்லது. பூசணிக்காயை அல்வா என்னும்

இனிப்புப் பண்டம் செய்வது போல சுரைக்காயையும் துருவி இனிப்பான அல்வா செய்யப் பயன்படுத்தலாம்.

வீக்கம், கட்டிகளைக் கரைக்கவும், கொப்புளங்களை ஆற்றவும் இதை நசுக்கி மேற்பற்றாகப் பயன்படுத்துவர். சுரைக்கொடியின்

இலை சுடுநீர் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகத் தருவதுண்டு. சுரை இலையினால் நீர்க்கோர்வை, உடல் வீக்கம், முத்தோஷம்

(வாத, பித்த, சிலேத்தும் குற்றங்கள்) போகும். சுரையின் இலை மலத்தை இளக்கவல்லது என்பதால் மலச்சிக்கல் உடையவர்கள்

இதை கீரையாகக் கடைந்து சாப்பிடலாம். இது சீரணத்தையும் துரிதப்படுத்தவல்லது. சுரைக்கு பைத்தியத்தைத் தணிவிக்கும் தன்மையும் உண்டு.

சுரையில் அடங்கியுள்ள மருத்துவப் பொருட்கள்:-

புதிதாக எடுக்கப்பட்ட 100 கிராம் சுரைக்காயில் கீழ் வரும் சத்துக்கள் அடங்கியுள்ளதாக அமெரிக்கத் தாவரவியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.


எரிசக்தி (எனர்ஜி)-14 கலோரி, மாவுச்சத்து-3.39 கிராம், புரதச்சத்து–0.62கிராம், கொழுப்புச் சத்து- 0.02கிராம், நார்ச்சத்து- 0.05கிராம்,

வைட்டமின்களான ‘போலிக் அமிலம்’ 6 மைக்ரோ கிராம், ‘நியாசின்’ 0.320மி.கிராம், பேண்டோதெனிக் அமிலம் 0.152மி.கிராம்,

பைரிடாக்ஸின் 0.040மி.கிராம், ரிபோப்ளேவின் 0.0220மி.கிராம் தயாமின் 0.029மி.கி., வைட்டமின் ஏ-16 ஐசி., வைட்டமின் ‘சி’ 10.1மி.கி.

மற்றும் நீர்ச்சத்துக்களான சோடியம்-2மி.கி. பொட்டாசியம்-150மி.கி., தாது உப்புக்களான சுண்ணாம்புச் சத்து- 26மி.கி., தாமிரம்

(காப்பர்)-0.034மி.கி., இரும்புச்சத்து- -0.020மி.கி., மெக்னீசியம்-11மி.கி., மேங்கனீசு–0.089மி.கி., பாஸ்பரஸ்-13மி.கி., செலினியம்-0.2மி.கி., துத்தநாகம் (ஸிங்க்)-0.70மி.கி.

உள்ளடங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவ வேதிப் பொருட்களை உள்ளடக்கி உள்ளதால் சுரைக்காய் ஓர்

அருமையான மருந்தாக விளங்குகிறது.

சுரைக்காயின் மருத்துவ குணங்கள்:-

இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால்தான் நம்

முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில்

உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும். வெப்ப நோய்கள் தாக்காமல் காக்கும். உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக்

குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும். சுரைக்காயை கோடைக் காலத்தில் அதிகமாக சாப்பிட்டால் பிரச்சினையை எளிதில் சமாளிக்கலாம்.

சமைத்த சுரைக்காய் சிறுநீரை நன்கு பிரிக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி தந்து உடல் உறுதியைப் புதுப்பிக்க இக்காய்

பயன்படுகிறது. சில சமயங்களில் சிறுநீர் வெளியேறாமல் மீண்டும் ரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடலுக்கு பலவகையான இன்னல்களை

ஏற்படுத்தும். இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் உதவுகிறது. எனவே சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள்

பழுத்த சுரைக்காயை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை ரசத்தையும் சேர்த்து அருந்தினால் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.

சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இது தாகத்தை கட்டுப்படுத்தும். கொழுப்புச்சத்துள்ள உணவு வகைகளையும்

வறுத்த உணவு வகைகளையும் சாப்பிட்டவர்களுக்கு அதிகமாய் தண்ணீர் தாகம் எடுக்கும். வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழிவு

நோயாளிகளுக்கும் இதே போன்று பிரச்சினை உண்டு. இவர்கள் அனைவருக்கும் ஏற்படும் நாக்கு வறட்சியை சுரைக்காய் நீக்கிவிடுகிறது.

கோடை காலத்திலும் நாக்கு வறட்சி ஏற்படும் போதும் பச்சையான சுரைக்காய் ரசம் சாப்பிட விரும்பினால் ஒரு கப் ரசத்தில் ஒரு

சிட்டிகை உப்பு போட்டு அருந்தினால் அதிகத்தாகம் தடுக்கப்படும். உப்பு போடாமல் இந்த ரசத்தை அருந்தக்கூடாது. சுரைக்காய்

தன்னுள் 96 சதவீதம் நீர்ச்சத்தை பெற்றிருக்கிறது. இதனால் இதனுடைய சாறு எடுப்பது மிகவும் எளிதாகிறது. சுரைக்காய்ச்சாறு வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘பி’, சோடியம், இரும்பு, பொட்டாசியம்

ஆகிய சத்துக்களையும் பெற்றுள்ளதால் புத்துணர்வு தரக்கூடிய, சோர்வைப் போக்கக் கூடிய உணவாகப் பயன்படுகிறது.

ஒரு கப் சுரைக்காய் சாற்றில் 18மி.கி. துத்தநாகச்சத்து இருப்பதால் அது செல்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் உட்சுரப்பிகள் (ஹார்மோன்கள்) ஒழுங்காகச் சுரப்பதற்கும் உறுதுணையாகிறது.

உடல் பருமன் கொண்டவர்கள் சுரைக்காய்ச்சாறு ஒரு கப் அளவு எடுத்து அன்றாடம் காலையில் குடிப்பதால் உடல் எடை குறைந்து அழகான மெலிந்த தேகத்தைப் பெறுவர்.

பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் செறிந்த சுரைக்காய்சாறு ஒரு ஊட்டச் சத்துமிகுந்த உணவு மட்டுமின்றி

பசியை அடக்கித் தேவையின்றி உணவு உண்பதைத் தவிர்த்து உடலை மெலியச் செய்யவும் உதவுகிறது. சுரைக்காய் தன்னுள்

கரையக்கூடிய மற்றும் கரையா நார்ச்சத்துக்களை அபரிமிதமாகப் பெற்றுள்ளது. இது உணவாகும்போது சீரண உறுப்புகளுக்குப் பலம்

தந்து அவற்றைச் செம்மைப்படுத்தி மலச்சிக்கலை மறையச் செய்கிறது.

மலச்சிக்கல் இல்லாதபோது இயற்கையாகவே வயிற்றில் அமிலம் சேர்ந்து புண் ஆகுதல், வயிற்றில் காற்று செரிந்து வயிற்றை

அடைத்ததுபோல் தோன்றுதல் ஆகிய பிரச்சனைகள் சுரையை உண்பதால் இல்லாமல் போகும். மலச்சிக்கல் இல்லாதபோது

ஆசனவாய்ப்புற்று வருவதும் அறவே தடுத்து நிறுத்தப்படுகிறது.
சுரைக்காயில் 95 விழுக்காடு நீர்ச்சத்து உள்ளதால் தர்ப்பூசணி சாறு

போல் கோடைக்கால வெயிலினால் வரும் உஷ்ணத்தைத் தவிர்க்க உதவுகிறது. உடலிலிருந்து வெளிப்பட்டு வியர்வையாய் சென்ற நீர்ச்சத்து குறையை ஈடுகட்டுவதாகவும் உள்ளது.

சுரைக்காய் சிறுநீற்றைப் பெருக்கவல்லது. சாறு உடலில் தேங்கிய நீரை வெளித்தள்ளி வீக்கத்தையும் கரைக்க

உதவுகிறது. சிறுநீரகத்துக்கும் துணையாய் நிற்கிறது. சுரைக்காய் லேசான உறக்கத்தை வருவிப்பதாகவும் அமைகிறது. இதனால் தூக்கமின்மை, தலைவலி ஆகியன தவிர்க்கப்படுகின்றன.

அதிகமான வியர்வை, சோர்வு, மயக்கம், பேதி என ஏதேனும் ஓர் துன்பம் உற்றபோது ஒரு கப் சுரைக்காய் சாறு உடனடித் தீர்வாக

உதவுகிறது. இழந்த நீர்ச்சத்தை சமன்படுத்துகிறது. சுரைக்காய் சாறு பருகுவதால் ஈரல் வீக்கத்தை தவிர்க்கலாம்.

சுரைக்காய் சாறு தயாரிக்கும் முறை:-

சுமார் 300 கிராம் எடையுள்ள ஒரு சுரைக்காயை எடுத்துக் கொள்ளவும். முற்றாத பழுக்காததாக இருப்பது நல்லது.

மேற்புறத்தை நீர்விட்டு சுத்திகரித்துக் கொள்ளவும். பிறகு மேற்தோலை சீவி நீக்கிவிட்டு சதைப்பற்றை மட்டும் எடுத்து சிறு துண்டுகளாக்கி, அதனுடன் 6 புதினா இலைகளைச் சேர்த்து

மிக்ஸியில் இட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனோடு சிறிது சீரகப் பொடியையும் சேர்த்துக் கொள்ளவும். இறுதியாக

தேவைக்கு ஏற்ற உப்பு சேர்த்துக் கொள்ளலாம். குளிர்விக்கும் பொருட்டு ஐஸ்கட்டிகள் சிலவற்றையும் சேர்த்து எடுத்துக் கொள்ள லாம். சுரைக்காய் சாறு இப்போது பருகத் தக்கதாக இருக்கும்.

சுரைக்காய் மருந்தாகும் விதம்:- சுரைக்காய்ச்சாறு பசுமையாக எடுத்து அன் றாடம் குடித்து வருவதால் உடல் எடை குறைவதோடு

மார்பு தொடர்பான நோய்கள் பலவும் மறைந்துவிடும். சுரை இலையைச் சாறாக்கிக் குடிப்பதாலோ அல்லது சுடுநீரிட்டு

சர்க்கரை சேர்த்துக்குடிப்பதாலோ வாந்தியை உண்டாக்குவதற்கும், மஞ்சள் காமாலை நோயைப் போக்குவதற்கும், ஈரல் வீக்கத்தை வற்ற வைப்பதற்கும் பயன் தருவதாக அமையும்.

சுரை இலையை மைய அரைத்து தலையில் நன்றாகத் தேய்த்து வைத்திருந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு குளித்துவிடுவதால் தலை

வழுக்கை தவிர்க்கப்படுவதோடு தலை முடியும் வளரும். தலை வலியும் தணியும். சுரை விதைகளைக் காய வைத்துப் பொடித்து

வைத்துக்கொண்டு 5 கிராம் அளவு எடுத்து தேனுடன் சேர்ந்தோ அல்லது நீரிலிட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்தோ குடிப்பதால் வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியேறிபோகும்.

சுரைக்காய்ச் சாறு ‘அல்சர்’ என்னும் வயிற்றுப் புண்ணை ஆறச் செய்வதோடு அமிலச் சுரப்பை அடக்கிவைத்து செரிமானத்தைத்

தூண்டிவிடும். சுரைக்காயை நசுக்கிப் பசையாக்கி மேற்ப் பற்றாகப் போடுவதனால் தீக்கொப்புளங்கள், நீர்க்கோத்து நோகச் செய்யும் கொப்புளங்கள் வந்த வடு தெரியாமல் விலகிவிடும்.

கோடைக்கால வெப்பத்தால் உண்டான தலைவலிக்கு சுரைக்காயை அரைத்து நெற்றிப் பத்தாகப் போட்டு வைக்க குணமாகும்.

சுரைக்கீரையோடு பூண்டு சேர்த்து ஒரு மண்டலம் சமைத்து சாப்பிட்டு வர நீரேற்றம் கரைந்து போகும்.

சுரைக்காய் விலை மலிவானது உன்னத மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது. உஷ்ணத்தைத் தணிப்பது. உடல் எடையைக்

குறைப்பது, சிறுநீரகம், இரைப்பை, இதயம் இவற்றுக்கு பலம் சேர்ப்பது கொப்புளங்களை குணப் படுத்துவது, தலைவலியைத்

தணிப்பது, புத்துணர்வைத் தருவது எனத் தெரிந்து கொண்டோம். சீரான உடல்வாகு உள்ளவர்கள் தவிர அனைவருக்கும் இது உகந்தது என உணர்ந்து பயன்படுத்தி உய்வோம்.

சுரைக் காய்ச்
சுரைக் காய்ச்
Posted in சினிமா

தனுஷுடன் டேட்டிங்… விஜய்யுடன் திருமணம் – பிரபல நடிகை

தனுஷுடன் டேட்டிங்… விஜய்யுடன் திருமணம் – பிரபல நடிகை

சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துக் கொண்ட நடிகையிடம் தனுஷுடன் டேட்டிங்… விஜய்யுடன் திருமணம் என்று கூறியிருக்கிறார்.

தனுஷுடன் டேட்டிங்… விஜய்யுடன் திருமணம் – பிரபல நடிகை
விஜய் – தனுஷ்


இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ஜிப்ஸி. இப்படத்தில் ஜீவாவிற்கு

ஜோடியாக நடிகை நடாஷா சிங் நடித்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நடிகை நடாஷா சிங்கிடம் ஒரு சில கேள்விகள் கேட்கப்பட்டது.

அதாவது நீங்கள் யாரை கில் பண்ண நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் நடிகர் ஜீவாவை தான் என்று கூறியுள்ளார். மேலும் அவரிடம் யாருடன் டேட்டிங் செல்ல ஆசைப் படுகிறீர்கள்.

அதற்கு உடனே அவர் நடிகர் தனுசுடன் என்று பதிலளித்துள்ளார்.

நடாஷா சிங்

அதுமட்டு மின்றி நீங்கள் யாரை திருமணம் செய்ய ஆசைப் படுகிறீர்கள் என்பதற்கு அவர் தளபதி விஜய் தான் என்று கூறியுள்ளார்

தனுஷுடன் டேட்டிங்
தனுஷுடன் டேட்டிங்
Posted in சினிமா

கொரோனா குறித்து ரஜினி பேசிய வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியது

கொரோனா குறித்து ரஜினி பேசிய வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியது

கொரோனா குறித்து ரஜினிகாந்த் பேசிய வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா குறித்து ரஜினி பேசிய வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியது ஏன்?
ரஜினிகாந்த்


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி

இருந்தார். இதனை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறி நடிகர் ரஜினிகாந்த், நேற்று டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் நிலையில் உள்ளது, அது மூன்றாம் நிலைக்கு

சென்றுவிடக் கூடாது. இத்தாலியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது மக்கள் உதாசீனப்படுத்தியதால் தான் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ரஜினிகாந்த்

கொரோனா பரவுவதை தடுக்க பிரதமர் மோடி கூறியபடி நாளை வீட்டிலேயே இருக்க வேண்டும். சுய ஊரடங்கின் போது மக்கள்

ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். மக்கள் நடமாடும் பகுதிகளில் 14 மணி நேரம் கொரோனா பரவாமல் இருந்தாலே 3வது நிலைக்கு செல்வதை தடுத்து விடலாம். என பேசியிருந்தார்.

இந்நிலையில், ரஜினி பதிவிட்ட வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது. ஏனெனில் ‘மக்கள் நடமாடும் பகுதிகளில் 14 மணி

நேரம் கொரோனா பரவாமல் இருந்தாலே 3வது நிலைக்கு செல்வதை தடுத்து விடலாம். இத்தாலியில் ஊரடங்கு உத்தரவு

பிறப்பிக்கப்பட்டபோது மக்கள் அதை உதாசீனப்படுத்தியதால் தான் பலி எண்ணிக்கை அதிகரித்ததாக ரஜினி கூறிய கருத்துகள்

ஆதாரமற்றதாக இருப்பதால் அந்த வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது.

கொரோனா குறித்து ரஜினி
கொரோனா குறித்து ரஜினி
Posted in சினிமா

காசுக்கு ஆசைப்பட்டு என்னோட படத்த இப்படி பண்ணிட்டாங்க – சேரன்

காசுக்கு ஆசைப்பட்டு என்னோட படத்த இப்படி பண்ணிட்டாங்க – சேரன்

காசுக்கு ஆசைப்பட்டு என்னோட படத்த இப்படி பண்ணிட்டாங்க என இயக்குனர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காசுக்கு ஆசைப்பட்டு என்னோட படத்த இப்படி பண்ணிட்டாங்க – சேரன் ஆதங்கம்
சேரன்


பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றி கொடிகட்டு, பாண்டவர் பூமி என்ற தரமான படங்களை இயக்கியவர் சேரன். அவர் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் பெரிய வெற்றி பெற்றது.

படத்தில் இடம்பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே ’ பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த நிலையில் சேரன் கதாநாயகனாக நடித்த ‘ராஜாவுக்கு செக்’ படம் கடந்த ஜனவரியில் வெளியானது.

இதில் சிருஷ்டி டாங்கே, சாரயு, நர்மதா வர்மா ஆகியோர் நடித்து இருந்தனர். சாய் ராஜ்குமார் இயக்கினார்.

இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும், எதிர்பார்த்த வசூல் இல்லை

. ராஜாவுக்கு செக் படம் தற்போது இணைய தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகை ஒருவர் ராஜாவுக்கு செக் படத்தை பார்த்தேன்.

நல்ல திகில் படமாக இருந்தது என்று பாராட்டி சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டார்.

சேரன்

இதற்கு சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில், “அநியாயமாக கொன்னுட்டாங்கம்மா படத்தை.

எங்க ஆத்தா கொடுத்த பால் எல்லாம் ரத்தமா போகுதேன்னு தேவர் மகன் படத்தில் வசனம் இருக்கும்.

அப்படி கஷ்டப்பட்டு உழைத்ததை காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க கொன்னுட்டாங்கம்மா.

அவர்கள் நல்லா இருப்பாங்கன்றீங்க. வயிறு எறியுதும்மா. சும்மா விடாது எங்களோட உழைப்பு” என்று ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.

காசுக்கு ஆசைப்பட்டு
காசுக்கு ஆசைப்பட்டு
Posted in உளவு செய்திகள்

வடகொரியா ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

வடகொரியா ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

உலகை கொரனோ வைரஸ் ஆட்டி படைத்து கொண்டிருக்க

வடகொரியா தனது குறும் தூர ஏவுகணை சோதனையை

வெற்றிகரமாக நடத்தியுள்ளது

இந்த மாதத்தில் இடம்பெற்ற நான்காவது சோதனை இதுவென

தெரிவிக்க படுகிறது

அமெரிக்காவுடன் இடம்பெற்ற பேச்சுக்கள் முறிவடைந்த நிலையில்

வடகொரியா தனது அணு ஆயுதங்களை தாங்கி செல்லும்

ஏவுகணை சோதனையை தொடராக நடத்தி வருகின்றமை குறிப்பிட

தக்கது

எனினும் இந்த ஏவுகணையின் தூர வீச்சு தொடர்பாக உடனடியாக

தெரியவரவில்லை

வடகொரியா ஏவுகணை சோதனை
வடகொரியா ஏவுகணை சோதனை
Posted in மருத்துவம்

கழுத்தின் பின்புறத்தில் இருக்கும் கருமையை போக்கும் இயற்கை வழிமுறைகள்

கழுத்தின் பின்புறத்தில் இருக்கும் கருமையை போக்கும் இயற்கை வழிமுறைகள்

கழுத்து கருமையடைந்து அதன் பின் அதனைப் போக்க சகல வித்தையும் கையாள வேண்டியது இருக்கும். ஆகவே வந்தபின்

காப்பதை விட எப்போதுமே கழுத்தை பராமரித்தால், அது கருமையடையாமல், அழகாக இருக்கும்.

கழுத்தின் பின்புறத்தில் இருக்கும் கருமையை போக்கும் இயற்கை வழிமுறைகள்


கழுத்தின் பின்புறத்தில் இருக்கும் கருமையை போக்கும் இயற்கை வழிமுறைகள்


பெரும்பாலான பெண்கள் தங்கள் முகம், கால் கை என பார்த்து பார்த்து அழகுப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் கழுத்தை

மறந்துவிடுவார்கள். இன்னும் சிலர் கழுத்திற்கு சோப்பு கூட போட மாட்டார்கள்.

இப்படி கவனிப்பாரின்றி இருக்கும்போது, கழுத்து கருமையடைந்து அதன் பின் அதனைப் போக்க சகல வித்தையும் கையாள

வேண்டியது இருக்கும். ஆகவே வந்தபின் காப்பதை விட எப்போதுமே கழுத்தை பராமரித்தால், அது கருமையடையாமல்,

அழகாக இருக்கும்.

உங்கள் கழுத்து கருமையடைய நிறைய காரணங்கள் உள்ளது. சரியான பராமரிப்பு இல்லாதிருத்தல், கர்ப்ப காலத்தில்,

ஹார்மோன் மாற்றங்களால், சூரிய கதிர்களால், தோலழற்சி, அலர்ஜி, தோல் கடினமாதல். ஆகியவற்றால் தோல் கருமையாகும்.

தோல் உங்களின் பழைய நிறத்திற்கு கொண்டு வர வீட்டிலேயே முயற்சிக்கலாம்.

தேவையானவை:

ஓட்ஸ் -2 டேபிள் ஸ்பூன்
தயிர் அல்லது யோகார்ட் -2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு சில சாறு

ஓட்ஸ் கழுத்திலுள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. கருமையை போக்கி நிறத்தினை கூட்டுகிறது. தயிர் ஒரு இயற்கையான ப்ளீச்

ஆகும். கருமையையும் சருமத்தில் படியும் அழுக்குகளையும் சீக்கிரம் அகற்றிவிடும். கழுத்தில் தொற்று இருந்தாலும்,

கருமையாகும். தொற்றினை நீக்குவதில் தயிரின் பங்கு முக்கியமாகும். எலுமிச்சையும் இயற்கையான ப்ளீச் ஆகும். கருமை

நிறத்தை போக்கி, அழுக்கு, எண்ணெய் பசையை போக்குகிறது.

மேற்கூறிய பொருட்களை நன்றாக ஒன்றுடன் ஒன்று கலந்து, கலவையாக கழுத்தில் போட்டு, சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய

வேண்டும். 20 நிமிடங்களுக்கு பிறகு,வெதுவெதுப்பான நீரினில் கழுவவும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால், கருமையற்ற,

மிருதுவான கழுத்து திரும்ப உங்களுக்கு கிடைக்கும். அதனுடன் கழுத்திற்கு முறையான பயிற்சி செய்தால், கழுத்தில் எக்ஸ்ட்ரா

சதை தொங்காமல், அழகாய் வைத்திருக்கலாம்.

கழுத்தின் பின்புறத்தில்
கழுத்தின் பின்புறத்தில்
Posted in சினிமா வினோத வீடுப்பு

பாலியல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மறுநாளே தூக்கு – நமீதா

பாலியல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மறுநாளே தூக்கு – நமீதா

பாலியல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மறுநாளே தூக்கிலிட வேண்டும் என்று நடிகை நமீதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாலியல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மறுநாளே தூக்கு – நமீதா வேண்டுகோள்
நமீதா


நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டது பற்றி நடிகை நமீதா பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ”நான் ரொம்ப

சந்தோ‌ஷமாக இருக்கிறேன். ஆனால், 7 ஆண்டுகளாகி விட்டன. எதற்காக நமது நாட்டில் இந்தத் தீர்ப்புக்கு இவ்வளவு தாமதம் என்பதைப் பார்க்க வேண்டும்.

நமீதா

கண்டிப்பாக வரும் காலத்தில் இது மாதிரியான குற்றங்களுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும். அதுவும் கடுமையான

தண்டனை வழங்க வேண்டும். இதே மாதிரி இன்னொரு சம்பவம் நடைபெறக்கூடாது. நமது அரசாங்கம் இது தொடர்பாகச்

சட்டத்தைக் கடுமையாக்குவார்கள் என நம்புகிறேன். பாலியல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட மறுநாளே தூக்கிலிட

வேண்டும்’’ என்றார்.

பாலியல் குற்றவாளி
பாலியல் குற்றவாளி
Posted in சினிமா வினோத வீடுப்பு

கர்ப்பத்தை கலைத்த நடிகை –

கர்ப்பத்தை கலைத்த நடிகை –

நடிகை லாவண்யா திரிபாதி கருக்கலைப்பு செய்ததாக கூறிய நடிகர் ஸ்ரீராமோஜூ சுனிஷித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை லாவண்யா கர்ப்பம் கலைத்ததாக அவதூறு – நடிகர் மீது வழக்குப்பதிவு
லாவண்யா திரிபாதி


பிரம்மன், மாயவன் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தெலுங்கு நடிகை லாவண்யா திரிபாதி. பிரபலங்கள் மீது

சர்ச்சையான கருத்துக்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தும் நடிகர் ஸ்ரீராமோதஜூ சுனிஷித், ஒரு பேட்டியில் லாவண்யா திரிபாதியை

தான் 2015-ல் திருமணம் செய்ததாகவும், தன்னுடன் வாழ பிடிக்காமல் விவாகரத்து பெற்றதாகவும், மூன்று முறை

கருக்கலைப்பு செய்ததாகவும் கூறி இருந்தார். இது தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

லாவண்யா திரிபாதி, ஸ்ரீராமோஜூ சுனிஷித்

இந்த நிலையில் லாவண்யா மலிவான விளம்பரத்திற்காக தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்

தகவல்களை கூறிய சுனிஷித் மீது நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட

காவல்துறை ஸ்ரீராமோஜூ மீது வழக்குப் பதிந்தது. இந்தநிலையில் தலைமறைவாகிவிட்ட அவரை காவல்துறை தேடி வருகிறது.

கர்ப்பத்தை கலைத்த நடிகை
கர்ப்பத்தை கலைத்த நடிகை
Posted in சினிமா

அடுத்த படத்துக்கு தயாராகும் விஜய்

அடுத்த படத்துக்கு தயாராகும் விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், தற்போது அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

அடுத்த படத்துக்கு தயாராகும் விஜய்
விஜய்
விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ்

இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும்,

வில்லனாக விஜய்சேதுபதியும் நடித்துள்ளனர். கொரோனா பரவல் முடிவுக்கு வந்தால், அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந்தேதி மாஸ்டர் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

நடிகர் விஜய், தனது 65-வது படத்தில் நடிக்க தயாராகி வருவதாகவும், இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில்

தொடங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதன்படி விஜய் மீண்டும் லோகேஷ்

கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக பேசப்பட்டது. இயக்குனர்கள் பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜ், பார்த்திபன்,

சுதா கொங்கரா, அஜய் ஞானமுத்து ஆகியோரில் ஒருவர் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்பட்டது.

விஜய்

இறுதியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே துப்பாக்கி,

கத்தி, சர்கார் போன்ற படங்கள் வந்து வசூல் குவித்தன. துப்பாக்கி 2-ம் பாகத்தை எடுப்பேhttp://ethirinews.com/ன் என்று முருகதாஸ் ஏற்கனவே

கூறியிருந்தார். எனவே விஜய்யின் அடுத்த படம் துப்பாக்கி 2-ம் பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது

அடுத்த படத்துக்கு தயாராகும்
அடுத்த படத்துக்கு தயாராகும்