Posted in சினிமா

41 வயதில் கர்ப்பமான நமீதா

41 வயதில் கர்ப்பமான நமீதா

பிரகாசமான மஞ்சள் சூரியன் என் மீது பிரகாசிக்கும்போது, ​​புதிய வாழ்க்கை, புதிய உயிர் என்னை அழைத்தது என நமீதா கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார்.

41 வயதில் கர்ப்பமான நமீதா.. வைரலாகும் புகைப்படம்
மீதா


2004-ம் ஆண்டு வெளியான நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல் படத்திலேயே தமிழ்

ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த அவர் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார்.

விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நமீதா, கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார். ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார். மன அழுத்தத்தால் தான் தனது உடல் அவ்வாறு மாறியதாக, நமீதா குறிப்பிட்டு இருந்தார்.

பட வாய்ப்புகள் குறைந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைக்காட்டி வந்த நமீதா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அதிலிருந்து வெளியில் வந்ததும் தனது காதலர் வீரேந்திர சவுத்ரி என்பவரை மணந்து கொண்டார்.

2017-ம் ஆண்டு நமீதா-வீரேந்திர சவுத்ரி திருமணம் நடந்தது. இந்நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தனது பிறந்தநாளில் அறிவித்திருக்கிறார் நமீதா. ”தாய்மை… புதிய அத்தியாயம் தொடங்கியதும், நான் மாறினேன், மிகவும்

மென்மையாக என்னுள் ஏதோ மாறியது. பிரகாசமான மஞ்சள் சூரியன் என் மீது பிரகாசிக்கும்போது, ​​புதிய வாழ்க்கை, புதிய உயிர் என்னை அழைத்தது. நான் விரும்பியதெல்லாம் நீ தான், உனக்காக இவ்வளவு நாள் வேண்டினேன். உன்

மென்மையான உதைகள் மற்றும் உன் படபடப்புகள், அனைத்தையும் என்னால் உணர முடிகிறது. நான் இதுவரை இல்லாத ஒன்றாக என்னை நீ உருவாக்குகிறாய்” என்று

குறிப்பிட்டு அந்த மகிழ்ச்சியான செய்தியை நமீதா அறிவித்திருக்கிறார்.
இது பற்றி அறிந்ததும் நமிதாவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    Posted in சினிமா

    அரசியலில் குதித்த நடிகை நமீதா- பாஜகவில் பொறுப்பு

    அரசியலில் குதித்த நடிகை நமீதா- பாஜகவில் பொறுப்பு


    தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமித்து எல்.முருகன் உத்தரவிட்டுள்ளார்.

    நடிகை நமீதாவுக்கு தமிழக பாஜகவில் பொறுப்பு
    நடிகை நமீதா

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் நிர்வாகிகளை மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

    திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமியை தமிழக மாநில துணைத்தலைவராக நியமித்து எல்.முருகன் உத்தரவிட்டுள்ளார்.

    பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசனை தமிழக பாஜக துணைத்தலைவராகவும் நியமித்துள்ளார்.

    பாரதிய ஜனதாவில் சேர்ந்த பால் கனகராஜ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராகவும், மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன்

    தமிழக பாஜகவின் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் மத்திய சென்னை கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமித்துள்ளார்.

        Posted in சினிமா

        விலங்குகளை அடைத்து வைக்காதீர்கள் – நமீதா,

        விலங்குகளை அடைத்து வைக்காதீர்கள் – நமீதா

        மிருக காட்சி சாலைகளில் விலங்குகளை அடைத்து வைக்க வேண்டாம் என நடிகை நமீதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

        விலங்குகளை அடைத்து வைக்காதீர்கள் – நமீதா வேண்டுகோள்
        நமீதா


        கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் வீட்டில் இருக்கும்படி அரசு கடுமையாக எச்சரித்து உள்ளது.

        இதனையும், விலங்குகளை மிருக காட்சி சாலைகளில் அடைப்பதையும் ஒப்பிட்டு நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராம்

        பக்கத்தில் கூறியிருப்பதாவது:- “இப்போதைய நிலைமையை வைத்து புரிந்துகொள்ள வேண்டும். நான் ஒருபோதும் மிருக காட்சி

        சாலைகளை ஆதரித்தது இல்லை. மிருக காட்சி சாலைகளுக்கு

        சென்று விலங்குகளை பார்க்கும்படி யாரையும் ஊக்குவித்ததும் கிடையாது.

        ஊரடங்கையொட்டி சில நாட்கள் வீட்டில் இருப்பதற்கே நமக்கு சோர்வு ஏற்படுகிறது, வெளியே செல்ல வேண்டும் என்று

        விரும்புகிறோம். நமது சந்தோஷத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் விலங்குகளுக்கும் இந்த உணர்வுதானே இருக்கும்.

        உங்கள் குழந்தைகளுக்கு விலங்குகளை காட்ட விரும்பினால் கம்ப்யூட்டரிலோ அல்லது சரணாலயத்துக்கு அழைத்துச் சென்றோ

        காட்டுங்கள். தயவுசெய்து மிருகங்களை அடைத்து வைப்பதை நிறுத்துங்கள்.

        நமீதா

        மன அழுத்தத்தாலும், கவலையாலும் அவை இறக்கின்றன. நாம் டிக்கெட் வாங்கி போய் பார்ப்பதால்தான் மிருக காட்சி சாலைகள்

        நிரம்பி வழிகின்றன. அங்கு போவதை நிறுத்தினால், விலங்குகளை அடைத்து வைப்பதையும் நிறுத்திவிடுவார்கள். விலங்குகள்

        நம்முடன் வாழ்பவையே தவிர நமக்காக வாழக்கூடியவை அல்ல.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

        விலங்குகளை அடைத்து நமீதா
        விலங்குகளை அடைத்து