மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் ,தமது கோரிக்கைகளுக்கு வழங்கப்பட்ட இணக்கப்பாடுகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் இன்று (09) முதல் மாகாண மட்டத்தில் வைத்தியசாலைகளில் தொழிற்சங்க
நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அனைத்து வைத்தியசாலைகளிலும் 4 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பு
அதன்படி இன்று காலை 8.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் 4
மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தாதியர்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடமாட்டார்கள் என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி.மெதிவத்த தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கை அமுலப்படுத்தப்பட்டுள்ள மருத்துவமனைகளின் விபரங்கள் பின்வருமாறு
09 – வட மத்திய மாகாணம்
13 – மத்திய மாகாணம்
14 – சப்ரகமுவ மாகாணம்
15 – வடமேல் மாகாணம்
16 – தென் மாகாணம்
20 – ஊவா மாகாணம்
21-மேல் மாகாணம் போன்றவற்றில் தொழிற்சங்க நடவடிக்கை அமுல்படுத்தப்படும்.
டயானாவிற்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு
டயானாவிற்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு
டயானாவிற்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு ,இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்றத்தில் அமர்வதற்கு சட்டரீதியாக தகுதியற்றவர் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பூரண உயர் நீதிமன்ற அமர்வில் சவாலுக்கு உட்படுத்த முடியும்
என கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தின் பீடாதிபதி பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
இந்த டயானா கமகேவுக்கு உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு என்பதால், அதனை பூரண நீதிமன்ற அமர்வில் சவாலுக்கு உட்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டயானா கமகே பிரித்தானியப் பிரஜையாக இருப்பதால்
டயானா கமகே பிரித்தானியப் பிரஜையாக இருப்பதால் இந்நாட்டு நாடாளுமன்றத்தில் அமர்வதற்கு சட்டரீதியாக தகுதியில்லை என உயர் நீதிமன்றம் நேற்று (08) தீர்ப்பளித்துள்ளது.
சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த பின்னர், இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
குறித்த தீர்ப்பு தொடர்பில் டயானா கமகேவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு இருப்பதாக பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.
“அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது, பூரண உயர் நீதிமன்ற அமர்வில் கோரிக்கை விடுப்பதற்கு.
ஏனெனில் மூன்று பேர் கொண்ட அமர்வில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய தீர்ப்பை பூரண அமர்வில் சவால் செய்யலாம்.
அவருக்கு இன்னும் அந்த வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் அதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்தால் அக்கட்சியைச் சேர்ந்த எவரும் தேசியப்பட்டியலில் இருந்து வரலாம்.
எனவே இந்த இரண்டில் எது முதலில் வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்றார்.
பாராளுமன்றத்தில் அமருவதற்கு சட்டப்பூர்வ தகுதி இல்லை
இதேவேளை, பாராளுமன்றத்தில் அமருவதற்கு சட்டப்பூர்வ தகுதி இல்லை என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புடன் டயானா கமகேயின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டப்பூர்வத்தன்மை குறித்தும், பிரதிபா மஹாநாமஹேவா கருத்து வௌியிட்டார்.
“இந்தக் கட்சி தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்போது இந்தக் கட்சிக்கு ஒரு தலைவர் இருக்கிறார். செயலாளரும், கட்சித் தவிசாளரும் உள்ளனர்.
இந்த தீர்ப்பின் ஊடாக இந்த கட்சிப் பதிவு சட்டவிரோதமா என்ற அடுத்த கேள்வி வரும்.
அத்தகைய பதிவைச் சவாலுக்கு உட்படுத்து வேண்டுமானால், வேறு பல தரப்பினரும் பிரதிவாதிகளாக முன்வைக்கப்பட வேண்டும்.
இதை இன்னொரு வழக்காக கொண்டு வர வேண்டும். இந்த எம்.பி, 4 ஆண்டுகளாக சம்பளம் பெற்றுள்ளார்.
அவர் இலங்கை பிரஜை இல்லை என்றால் மோசடியாகவே சம்பளம் பெற்றுள்ளார்.
எனவே அவற்றையும் வசூலிக்க வேண்டும். பின்னர் அது ஒரு தனி வழக்கில் வர வேண்டும்” என்றார்.
போதைப்பொருளுடன் ஒருவர் கைது
போதைப்பொருளுடன் ஒருவர் கைது
போதைப்பொருளுடன் ஒருவர் கைது ,2 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதி கொண்ட குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இருந்து இலங்கை வந்துள்ள நிலையில், அவரது பயணப்பையில் சூட்சுமமாக பொதி செய்யப்பட்டிருந்த 5 கிலோ 278 கிராம் குஷ் போதைப்பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேக நபர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை இன்று போதைவஸ்து சந்தையாக மற்றம் .
பெற்றுள்ளது ராஜபக்ச ஆட்சிகாலத்தில் போதைவஸ்து மிக அதிகமாக இலங்கையில் பாவனைக்கு உள்ளாக்க பட்டது .
அதன் நீட்சியாகவே இன்று இலங்கை எங்கும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்ற்னர் .
அரசியல்வாதிகள் போதை வஸ்து வியாபாரிகளாகவும் மாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்
இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்
இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல் நடத்திய போராளி குழுக்கள் ,நெருக்கடியில் திணறும் இஸ்ரேல் இராணுவம் .
இஸ்ரேலிய நாட்டின் நிறுவ பெற்றுள்ள கோலன் குன்று கண்காணிப்பு ,உயர் பாதுகாப்பு அடுக்கு கொண்ட இராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் அந்த கோலன் குன்று மலை முகாம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
கோலன் குன்று
கோலன் குன்று பகுதியில் நிறுவ பெற்றுள்ள இந்த உயர் பாதுகாப்பு முகாமில் இருந்து வழங்க படும் தகவலை அடுத்தே ,சிரியாவில் உள்ள ஈரான் ,சிரியா இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்த படுகிறது .
சிரியா போர் படை
அவ்விதமான தாக்குதல் நடத்தும் நெருக்கடியை ஏற்படுத்தும் இஸ்ரேல் இராணுவ தளத்தை தெரிவு செய்தே இப்பொழுது சிரியா போர் படை புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளன .
இடி மின்னல் தாக்குதலாக இந்த அதிரடி தாக்குதல் அமைய பெற்றுள்ளது .
இஸ்ரேல் உள்ளே நுழைந்து ஹமாஸ் போராளிகள் நடத்திய அசாத் நடவடிக்கை ,கோலன் குன்று முகாம் ,லெபனான் ஹிஸ்புல்லா ,ஹமாஸ் ,சிரியா போராளிகள் மற்றும் ஹவுதிகள் ,ஈராக்கிய படைகளினாலும் தாக்குதலுக்கு இலக்காகியது .
கோலன் குன்று இராணுவ கட்டளை உளவு மையம்
அவ்வாறு என்றால் இந்த கோலன் குன்று இராணுவ கட்டளை உளவு மையத்தின் செயல்பாடுகள் காணப்பட்டன என்பததை இந்த கூட்டு தாக்குதல்கள் ,மூலம் கணித்து கொள்ள முடியும் .
சியோனிச படைகள் நடத்தும் அதே தாக்குதல் தந்திரோபாயங்களை ,அப்படியே திருப்பி அதே இஸ்ரேலியா இராணுவத்தினருக்கு எதிராக ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்தி வருகின்றன .
அதனால் இஸ்ரேல் இராணுவத்தின் வடக்கு கட்டளை உளவு கண்காணிப்பு இராணுவ மையங்கள் செயல் இழந்த நிலையில் அல்லது இயங்க முடியா நெருக்கடி நிலைக்குள் பாலஸ்தீன அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றன .
எனினும் வழமை போன்று எமது வான்காப்பு படைகளினால் தாக்குதல் நடத்திட பறந்து வந்த விமானங்கள் ,சுட்டு வீழ்த்த பட்டதாக அறிவித்துள்ளது குறிப்பிட தக்கது .
எதிரிகளுக்கு டிக்டாக் ராசன் சவால்
எதிரிகளுக்கு டிக்டாக் ராசன் சவால்
எதிரிகளுக்கு டிக்டாக் ராசன் சவால் விட்டுள்ளார் ,இலங்கையில் முடிந்தால் என்னை தூக்கி பார் என பகிரங்க சவால் .
பிரான்ஸ் டிக்டாக் ராசன் மக்களுக்கு உதவி செய்வதாக தெரிவித்து ,மக்கள் வழங்கும் பணத்தை பெற்று அதன் ஊடக உதவிகளை செய்து வருகிறார் .
புளியங்குளம் காவல்நிலையத்தில் தாக்குதல்
வவுனியாவை சேர்ந்த பொது மகன் சிலரை ,புளியங்குளம் காவல் நிலையத்தில் வைத்து ,போலீசாருக்கு லஞ்சம் வழங்கி தாக்குதல் நாடத்தியதாக பாதிக்க பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .
அதனை அடுத்து தற்போது இந்த பிரான்ஸ் டிக்டாக் ராசன் மீது ,பாதிக்க பட்டவர்கள் புகார் வழங்கியதுடன் ,மனித உரிமை அமைப்பிலும் முறையீடு செய்ய பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மக்களுக்கு உதவி செய்வது என்ற போர்வையில் இந்த பிரான்ஸ் டிக்டாக் ராசன் சில சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக ,பாதிக்க பட்ட தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர் .
மக்கள் ராசன் மோதல்
இதுவரை 117 குழாய் கிணறுகளை பாதிக்க பட்ட மக்களுக்கு இவர் நிறுவி கொடுத்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .அது வரவேற்க தக்க ,பாராட்ட பட வேண்டிய செயல் .
மனித நீதி நேர்மையை மதிக்கும அன்பர்கள் எவரும் இதனை வரவேற்பார்கள் ,
ஆனால் பிரான்ஸ் டிக்டாக் ராசன் சமீபகால செயல்பாடுகள் அருவருக்க தக்க நிலையில் மாற்றம் பெற்று செல்கிறது .
அவையாவன .பொலிஸ் நிலையத்தில் வைத்து ,மக்களை தாக்கியமை ,பிரான்ஸை வசிப்பிடமாக கொண்ட ராசன் ,பிரான்ஸ் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான செயல் பாடுகளை செய்து வருகின்றார் .
இலங்கையில் ,இலங்கை காவல்துறை போன்றவர்களை தனக்கு சார்பாக பயன் படுத்தி ,சமூக விரோத செயலில் ஈடுபடுவது அதிகரித்து காணப்படுகிறது .
பச்சை மிளகாய் என்ற டிக் டாக் வாலிபன் மீதான வன்முறை தாக்குதல் .வவுனியாய் சேர்ந்த இருவர் மீதன தாக்குதல் .
அதனை அடுத்து, இதோ இந்த படத்தில் உள்ளவருடன் எட்டாம் திதி வெளியிட்ட காணொளியில் ,இலங்கையில் ஒருவரும் என் தலைமுடியை கூட புடுங்க முடியாதுஎன இந்த நபர் தெரிவிக்கின்றார் .
பிரான்ஸ் டிக்டாக் ராசன் விடும் எச்சரிக்கை
இது ஒட்டுமொத்த தமிழருக்கு இந்த பிரான்ஸ் டிக்டாக் ராசன் விடும் எச்சரிக்கையாக காணப்படுகிறது .
இவரை நம்பி வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பியவர்கள் விபரங்களை ,பிரான்ஸ் பொலிஸார் பெற்று, பிரான்ஸ் டிக் டாக் ராசானை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்க பாடலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இவருக்கு பின்புலத்தில யார் உள்ளது என்பதை ,பிரான்ஸ் ,இலங்கை தூதரகம் பதில் அளிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் முன்வைக்க சிலர் தயாராகி வருவதாக தெரிவிக்க படுகிறது .
பிரான்ஸ் அரசின் கவனத்திற்கு இந்த பிரான்ஸ் டிக்டாக் ராசன் விடுத்துள்ள ,சமூக விரோத மிரட்டல் பேச்சுக்கள் எடுத்து செல்ல தயாராகி வருகிறது .
மேலும் லண்டன் சாரு என்கின்ற பெண் பல கோடிகளில் இலங்கையில் ,நிலங்கள் ,சொத்துக்கள் என்பன வாங்கி விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
அதனை அடுத்து பிரான்ஸ் டிக்டாக் ராசன் வெளியிட்ட இந்த காணொளிகளை ஆதாரங்களாக வைத்து ,பிரான்ஸ் டிக் டாக் ராசான் மற்றும் லண்டனை சேர்ந்த சாறு என்ற தமிழ் பெண் மீது நாடவடிக்கை மேற்கொள்ள சில தரப்பு தயாராகி வருவதாக தகவல்கள் சமுகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது .
ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் மிரட்டல் விடும் ராசன்
பொதுமக்களுக்கு சேவை என்கின்ற அடிப்படையில் இவ்வாறான சமூக விரோத சக்திகளுடன் ஒன்றிணைந்து ,ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் மிரட்டல் விடுகின்ற செயல்கள் ,
பிரான்ஸ் டிக்டாக் ராசன் மீது நன்மதிப்பை வைத்திருந்த மக்கள் ,இவ்வாறான கீழ் நிலை செயல்பாடுகளினால் அவரை வெறுக்கும் நிலை காணப்படுகிறது .
பிரான்ஸ் அரசு ராசனை இது தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக முன் வைக்க படுகிறது .
இலங்கையில் கடத்தல் ,காணாமல் போதல் ,படுகொலை என்பன தொடராக இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இலங்கையில் உயிருக்கு ஆபத்து என தெரிவித்து பிரான்சில் அகதி தஞ்சம் கோரிய இதே பிரான்ஸ் டிக்டாக் ராசன், எவ்வாறு ,இலங்கையில் எனது முடிய கூட புடுங்க முடியாது என கூறுவார் என்ற கேள்வி எழுப்ப படுகிறது .
பிரான்ஸ் குடிவரவு குடியகல்வு அமைச்சு
எனவே பிரான்ஸ் குடிவரவு குடியகல்வு அமைச்சு ,இவரது இந்த காணொளிகளில் வெளியிட்ட பேச்சுக்களை ஆராய வேண்டும் என்பதே பாதிக்க பட்ட மக்கள் கருத்தாக உள்ளது .
இலங்கையில் மக்களுக்கு உதவி செய்கின்ற எந்த யுடுப்பர்களோ ,அல்லது தனியார் நிறுவனங்களோ பணியாளர்களோ ,இவ்விதம் மக்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுவது இல்லை .
ஆகையால் இப்பொழுது பாதிக்க பட்ட மக்கள் தரப்பினர் முன் வைத்த குற்ற சாட்டுக்கள் ஏற்புடையவை என்கின்ற நிலையை காண்பித்துள்ளளது .
மக்களுக்கு உதவி செய்திடும் சமூக நல ஆர்வளர்கள் எனக்கூறும் பிரான்ஸ் டிக்டாக் ராசன்,மக்கள் வீடுகளுக்கு சென்று கறி சட்டிக்குள் விரலை விட்டு நக்கி பார்க்கும் அருவருப்பான செயலை செய்துள்ளது ,அவர் வெளியிட்ட காணொளியில் காண படுகிறது .
பிரான்சில் வசித்ததாக கூறும் இவர் ,பிரான்ஸ் நாட்டில் எந்த ஒரு குடிமகனின் செய்திடாத இழிவான செயலை செய்துள்ளார் ,அது காணொளியை பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது .
அத்துடன் தான் மதுகுடிக்கும் காட்சிகளை காணொளியாக வெளியிடுவது என்பன காணபடுகின்றன .
இலங்கை சட்டத்தை கையிலெடுத்து மக்களை தாக்குவது ,அதன் நீட்சியாகி எட்டாம் திகதி வெளியிட்ட வீடியோவில் , பிரான்ஸ் டிக் டாக் ராசானுடன் ஒருவர் வந்து நின்று தலை முயடியை கூட இலங்கையில் புடுங்க முடியாது என சூளுரை விடுவது ,
இதன் ஊடாக தான் ஒரு மாபியாவாக தன்னை அடையாளம் காட்டியுள்ளார் .அதுவே சட்டங்களை மதிக்கும் மக்களுக்கு மிக பெரும் அச்சுறுத்தலாக உள்ளது .
சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ராசன்
இது சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளின் அடாவடியின் செயலாக மக்கள் சமூகம் கருதுகிறது .
மக்களை தொடராக அச்சுறுத்தும் நடவடிக்கையில் பிரான்ஸ் டிக்டாக் ராசன் ஈடுபட்டுளள்து அம்பலாகியுள்ளதால் ,பிரான்ஸ் போலீசார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வார்கள் என எதிர் பார்க்க படுகிறது .
மக்களுக்கு உதவி செய்திடும் பிரான்ஸ் டிக் டாக் ராசான் ,செய்திடும் சிந்திக்கும் தன்மை அற்ற இவ்வாறன கீழ் நிலை செயல்பாடும் இவரை ஏற்று வரவேற்றவர்கள் இவரை வெறுக்கும் நிலைக்கு தள்ளி செல்கிறது .
இலங்கை போலீசார் கைது செய்திட மறுத்தால் ,பிரான்ஸ் பொலிசார் இவரது இந்த காணொளிகளை பார்வையிட்டு மேற் கூற பட்ட விடயங்களில் ராசனை விசாரிக்க வேண்டும் என்பது பாதிக்க பட்ட மக்கள் விருப்பமாக உளள்து .
Featured
இராணுவ அதிகாரிகள் இருவர் கைது
இராணுவ அதிகாரிகள் இருவர் கைது
இராணுவ அதிகாரிகள் இருவர் கைது ,முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரும் முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஒருவரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநாகல் பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள கூலி இராணுவப் படை முகாம்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்களை கடத்திய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஸ்யாவில் இலங்கை இராணுவத்தினர் கூட்டமாக நின்று போரிடும் காணொளி ஒன்று வெளியாகியிருந்தது .
அந்த காணொளி உலகளாவிய ரீதியில் பெரும் பேசுபொருளாக மாற்றம் பெற்றது .
இது போன்ற காணொளி ஒன்றும் உக்ரைன் இராணுவ தரப்பில் இருந்தும் வெளியாகியது ,
இதன் ஊடக உக்ரைன் மற்றும் ரஷ்ய இராணுவத்தில் , இலங்கை இராணுவம் செயல்படுவதான விடயம் அம்பல பட்டுள்ளது .
இவை ஆளும் ரணில் அரசின் இரட்டை நாடகமாக இந்த விடயம் காணப்படுகிறது .
இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா
இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா
இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா அதிரடி அறிவிப்பால் கதிகலங்கியுள்ள இஸ்ரேல் .
ஆயுதங்கள் வழங்க மாட்டோம் எனவும் ஆயுத கப்பல் இப்பொழுது இஸ்ரேலுக்கு வந்து சேராது என அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது .
இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்
எகிப்தின் எல்லையோர ரபா மீது ,இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்களை நடத்திட ஆரம்பித்துள்ள இவ்வேளையில் ,வேறு வழியின்றி இஸ்ரேல் திணறி வருகிறது .
அமெரிக்கா வழங்கும் இந்த மிக பெரும் ராட்சத குண்டுகளையாயே, இஸ்ரேல் இராணுவம் அப்பாவி பலஸ்தீன மக்கள் தலைமேல் வீசி வருகிறது .
இப்பொழுது பாலஸ்தீனம் காசா இஸ்ரேல் போரை அமெரிக்காவே நடத்தி செல்கிறது என்பது ,இந்த ஆயுத தாமதம் மூலம் அம்பலமாகியுள்ளது .
தேர்தலை பைடன் நிராவகம் சந்தித்துள்ளதால் இஸ்ரேலுக்கு நேரடியாக உதவிகளை செய்த்திட முடியா நிலையில் சிக்கி தவித்து வருகிறார் .
ஆயுத உதவி வாழங்குவதில் தாமதம்
அதனால் தற்போது இந்த ஆயுத உதவி வாழங்குவதில் தாமதம் ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
வெள்ளைமாளியின் ஆயுதங்களை நம்பியே போரை நடத்தி வந்த இஸ்ரேல் இப்பொழுது பொறிக்குள் சிக்க வைக்க ப்பட்டுள்ளதா இல்லை ,இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து நாடகம் நாடத்துகிறதா என்பதை சில நாட்களில் தெரிய வந்து விடும் .
பேச்சுக்கு தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ள நிலையில் ,ஹமாசுடன் பேச்சை நடத்திட மறுத்து அடம் பிடிக்கும் நெதன்யாகுவிற்கு ,அமெரிக்கா வைத்துள்ள இந்த ஆப்பு நியம் என்றால் ,இஸ்ரேல் காசா போர் முடிவுக்கு வரும் என நம்பலாம் .
கைங்கிங் பிரிட்டன் விமான சேவைகள் பாதிப்பு
கைங்கிங் பிரிட்டன் விமான சேவைகள் பாதிப்பு
கைங்கிங் பிரிட்டன் விமான சேவைகள் பாதிப்பு என பிரிட்டன் விமான நிலையங்கள் தெரிவித்துள்ளன .
பிரிட்டன் நாடு தழுவிய நிலையில் விமான சேவைகள் பாதிக்க பட்டுள்ளன ,இதனால் பயணிகள் மிக பெரும் நெருக்கடியைசந்தித்ததாக தெரிவிக்க பட்டது .
பிரதான கணனிகள் கைக்கிங்
பிரிட்டன் விமான நிலையங்களின் பிரதான கணனிகள் கைக்கிங் குழுவொன்று தாக்குதல் நடத்தியதால் , அதன் வலையமைப்பபை சீர் குழைத்ததினால் மிக பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது .
கணனிகள் வலையமைப்பு செயல் இழந்த நிலையில் ,மனித வலுவை பயன்படுத்தி சோதனைகள் இடம்பெற்றதாகவும், இதனாலயே மிக பெரும் நெருக்கடி ஏற்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
கீத்திரோ விமான நிலையம் முடக்கம்
இங்கிலாந்தின் முத்தாலாவது அதிக விமானங்கள் பயணிக்கும் கீத்திரோ விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களின் ,சேவைகளில் தாமதம் ஏற்பட்டதாக அறிவிக்க பட்டுள்ளது .
இந்த திடீர் கைக்கிங் தாக்குதலிங்ல பிரிட்டனுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது .
ஈரான் கைக்கிங் குழுவினர் இந்த தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இஸ்ரேல் தளபதி பலி
இஸ்ரேல் காவல்துறை தளபதி பலி
இஸ்ரேல் தளபதி பலி என இஸ்ரேல் அறிவித்துள்ளது .இந்த தாக்குதலானது இஸ்ரேல் கட்டுப்பாட்டு பகுதியான மேற்குக்கரை பகுதியில் நடத்த பட்ட தாக்குதலில் Chief Inspector Yitav Lev Halevi, 28 என்பவர் பலியாகியுள்ளார் .
எலியாட் பகுதியை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா ,ஹமாஸ் மற்றும் ஈராக்கிய போர் படைகள் என்பன கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
அவ்வாறன இடைவிடாத தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது .
இழப்பை இஸ்ரேல் இராணுவம் மூடி மறைப்பு
ஆனால் தமக்கு ஏற்பட்ட இழப்பை இஸ்ரேல் இராணுவம் மூடி மறைத்து வருகிறது .
எனினும் அது கடந்து தற்போது தமது தளபதிகள் பலி என்பதை ,இஸ்ரேல் இராணுவம் தெரிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளது .
எலியாட் பகுதியில் அமைய பெற்றுள்ள கப்பல் துறைமுக பகுதிகளையும் ,ஈராக்கிய படைகள் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதல் நடத்தின .
அந்த தாக்குதலில் தமது படைக்கும் ,முகாம்களுக்கு சிறு சேதம் மட்டுமே ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டது .
காசா மேற்கு கரையில் மோதல்
அவ்வாறான நிலையில் பாலஸ்தீனம் காசா மேற்கு கரையில் தமது காவல்துறை தளபதி பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது .
ஹமாஸ் மற்றும் ,அல்குட்ஸ் படைகள் இணைந்து கடும் தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளன .அவ்வாறான தாக்குதலிலேயே இந்த உயர் காவல்துறை தளபதிகள் பலியாகியுள்ளனர் .
ஹமாஸ் துல்லியமாக மிக முக்கிய இஸ்ரேல் இராணுவ தளபதிகள் ,காவல்துறை தளபதிகள் யாவரையும் தெரிவு செய்து கனகச்சிதமாக போட்டு தள்ளியுள்ளது .
இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட இஸ்ரேல் படைத்துறை சார் தளபதிகள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .
இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல்
இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல்
இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் இராணுவ தளங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குடியேற்றங்கள் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
எகிப்தின் எல்லையோர ரபா வழியாக தாக்குதல் நடத்த பட்டு வரும் நிலையில் .தற்போது இஸ்ரேலிய வடக்கு எல்லையோரமாக உள்ள இஸ்ரேல் தளங்கள் மீது கடும் தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .
பெரும் வெற்றி
பெரும் வெற்றி பெறுவதன் ஊடாக தனது ஆட்சி அதிகாரத்தை நிலை நாட்டி கொள்ள முடியும் என்ற நிலையில் ,தற்போது இஸ்ரேல் இராணுவத்தை ஏவி தாக்குதலை நடத்தி வருகிறார் நெதன்யாகு .
அவ்விதமான நிலையில் தமது மண்ணை பாதுகாக்க பாலஸ்தீனம் போராடி வருகிறது .
இனப்படுகொலை நடத்தும் இஸ்ரேல்
தமது மண்ணையும் மக்களையும் காப்பாற்ற போராடும் மக்களுக்கு எதிரான பெரும் இனப்படுகொலையை நடத்திய வண்ணம் உள்ளது இந்த ,இஸ்ரேல் அரச பயங்கரவாதம் .
இஸ்ரேலிய சியோனிச பாயங்கரவாதம் மேற்கொள்ளும் தாக்குதலை அடக்க மறுத்து அப்பாவிகளை தாக்க முற் பட்டால் ,போராடும் அந்த அமைப்புக்ளும் இவ்விதம் விமானம் மூலம் தாக்குவது இயல்புதானே என சொல்ல படுகிறது .
விலை கேட்டவரை துரத்திய கடைக்காரர்
விலை கேட்டவரை துரத்திய கடைக்காரர்
சாப்பாட்டு விலை கேட்டவரை துரத்திய கடைக்காரர் ,நீர்கொழும்பு பீச்சில் தவகரன் ,சங்கவி யூட்டுபருக்கு நடந்த சங்கடமான செயல் .
நமது அன்பு நண்பர்கள் thavakaran view youtuber நீர் கொழும்பில் மிக பிரபலமான பீச்சுக்கு காணொளி பாதிவாக்க சென்றிறுந்தனர்
அப்பொழுது அங்கே பல கடைகள் காணப்பட்டன .இந்த கடைகளில் அழகிய பொருட்கள் காணப்பட்டுள்ளன .அப்பொழுது அந்த பொருள்களின் விலையை அந்த thavakaran view youtuber கேட்டுள்ளார் .
thavakaran view யூடுப்பரை கெட்ட வார்த்தையால் பேசிய கடைக்காரர்
அதற்கு அந்த உணவாக கடைக்காரரோ விலையினை கேட்காதே விரும்பினால் வாங்கி போ என,தரம் கெட்ட நிலையில் thavakaran view ,சங்கவி ஆகிய வடிக்கையாளாருக்கு பேசுகிறார் .
எமது கடைக்கு தேடி வருபவர்களிடம் எப்படி பேச வேண்டும் என தெரியாத விழிப்புணர்வு அற்ற நிலையில், இலங்கையில் வர்த்தக நிலையங்கள் ,உணவகங்கள் இயங்குகின்றன என்பதற்கு இவை சான்றாக உள்ளது .
அருவருப்பான சம்பவங்கள்
இரண்டு மாதத்தில் இலங்கையில் இவ்வாறான அருவருப்பான சம்பவங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன .
இதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் ,மாநகரசபை உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்து செயல்பட்டதாக தெரியவரவில்லை .
இலங்கையை தேடி வரும் உல்லாச பயணிகள் ,மற்றும் உள்ளூர் மக்களிடம் இவ்வாறு தரம் தாழ்ந்த நிலையில் செயல் படும் ,இவ்வாறான கடை காரர்கள் கைது செய்யப்படல் வேண்டும் .
அத்துடன் இவர்களுக்கு உயர் வார்தாக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த பட்டு அதில் .எவ்விதம் வாடிகையாளர்களுடன் உரையாட வேண்டும் என்ற விடயத்தை கற்று கொடுக்க வேண்டும், என்பதே நமது வேண்டுதல் .
thavakaran view போன்ற யூடுப்பர்கள் உங்கள் காடைகளை காணொளி பிடித்து வெளியிட்டால், அதனை பார்க்கும் மக்கள் உங்கள் கடை தேடி வருவார்கள் .
எனவே இதனை உங்களுக்கான விளம்பரமாக பார்க்க வேண்டும் .அதனை விடுத்தது இவ்வாறு நாகரிகமற்ற முறையில் செயல்படுவது கண்டிக்க தக்கது .
இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல் பலத்த சேதம் என நடத்தியவர்கள் தெரிவிப்பு .
அதி உச்ச பாதுகாப்பு கொண்ட இஸ்ரேல் நாட்டின் எலியாட் துறைமுகத்தை இலக்கு வைத்து ஈராக் போர் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன .
இந்த தாக்குதலில் எலியாட் துறைமுகம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ரபா எல்லை வழியில் கடும் யுத்தம்
எகிப்து எல்லையோர ரபா எல்லை வழியில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இஸ்ரேலிய அரச இராணுவத்தினர் ஆரம்பித்திருக்கும் இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை வழங்கும் முகமாகவே ,தற்போது போராளி குழுக்கள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன .
பாலஸ்தீனம் காசா மக்கள்
பாலஸ்தீனம் காசா மக்கள் அகதிக இடம்பெயர்ந்து ரபா வீதிகள் தங்கியுள்ளனர் .
இவ்வாறு தங்கியுள்ள மக்கள் மற்றும் இஸ்ரேல் இனப்படுகொலை இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இஸ்ரேலிய படைகள் அவ்வாறு தாக்குதல் ,ஆரம்பிக்க அதற்கு தாக்குதல்களை இஸ்ரேல் உள்ளே ஈராக் ,சிரியா ,ஹிஸ்புல்லா ,ஹமாஸ் படைகள் நடத்திய வண்ணம் உள்ளன .
இரு தரப்பிற்கும் இடையில் தற்போது கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்காக 100 மில்லியன்
விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்காக 100 மில்லியன்
விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்காக 100 மில்லியன் ,இலங்கையில் விவசாய மற்றும் வனப் பாதுகாப்புத் திட்டமொன்றில் இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கையின் காலநிலை மாற்ற செயலகம் சார்பாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, காலநிலை இடர் மன்றம் (CVF) சார்பாக அதன் பொதுச் செயலாளர் முன்னாள்
மாலைதீவு ஜனாதிபதி
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஷிட் மற்றும் போர்த்துக்கலின் Nativa Capital நிறுவனம் சார்பில் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி கார்லோஸ் கோமஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
.
விவசாய விளைச்சல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட மற்றும் நிலைபேறான விவசாய முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கையில் உள்ள கிராமப்புற
சமூகங்களின் வீட்டு விவசாயத்தை மேம்படுத்துவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கையில் உள்ள பல விவசாய நிலங்கள் தற்போது சிறிய அளவில் உள்ளன. எனவே, குறைந்த விளைச்சல் மற்றும் குறைந்த வருமானம் ஆகியவற்றால் இவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதன் காரணமாக 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் 15,000 விவசாயிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பையும் தொழில்நுட்ப அறிவையும் வழங்கும் முன்னோடித் திட்டம் அனுராதபுரம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட
விவசாயம் மற்றும் காடுவளர்ப்புத் திட்டங்கள்
உள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளடங்கியுள்ள விவசாயம் மற்றும் காடுவளர்ப்புத் திட்டங்கள், காலநிலை பாதிப்பு மன்றத்தின் (CVF)
ஆதரவுடன் இலங்கையால் வரையப்பட்ட இலங்கையின் காலநிலை தாங்கும் திட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நிலையான விவசாயத்தின் மூலம் வலுவான ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின்
சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன,
நவீன விவசாயத்தை உருவாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
“ நவீன விவசாயத்தை உருவாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்தின் பிரகாரம்,
விவசாயத்திற்கான நவீன தொழில்நுட்பத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க போர்த்துக்கேய நிறுவனம் ஒன்று முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
இது சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக அநுராதபுரம் மாவட்டத்தில் 15,000 குடும்பங்களும் 15,000 ஏக்கரும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த முன்னோடித் திட்டத்தில் 15 குடும்பங்களும் பதினைந்து ஏக்கர்களும் இணைக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒரு குடும்பத்திற்கு சுமார் 6000 அமெரிக்க டொலர்கள்
ஒரு குடும்பத்திற்கு சுமார் 6000 அமெரிக்க டொலர்கள் செலவை முதலீட்டு நிறுவனம் ஏற்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி அடுத்த 25 ஆண்டுகளுக்கு விவசாயத்திற்கு தொழில்நுட்ப உதவி வழங்கப்படும்.
விவசாயம் தொடர்பான நவீன தொழில்நுட்ப உபகரணங்களை வழங்குவதும் இத்திட்டத்தின் மூலம் செய்யப்படுகிறது. மேலும், விவசாயிகளுக்கு பிரச்சினையாக இருந்த அவர்களின் விளைச்சலுக்கு சந்தையை உருவாக்க
முடியும். இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொள்வனவு செய்ய முதலீட்டு நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
தற்போது மிளகாய், தக்காளி, தர்பூசணிபயிர்ச்செய்கையில் கவனம் செலுத்தி வருகின்றது.
ஏனைய பயிர்களின் உற்பத்தியில் கவனம்
எதிர்காலத்தில், ஏனைய பயிர்களின் உற்பத்தியில் கவனம் செலுத்தப்பட்டவுள்ளது. இந்த முன்னோடித் திட்டம் வெற்றியடைந்ததையடுத்து, ஏனைய மாவட்டங்களுக்கும் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த
அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்த நவீன விவசாயத்தின் மூலம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதே சமயம்
விவசாயிகளின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தவும் முடியும்” என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
விவசாயத்தை நவீனமயமாக்குவது தொடர்பான மிகவும் இலட்சியமான மற்றும் பயனுள்ள திட்டத்தை இலங்கை கொண்டுள்ளது என்று இங்கு கருத்துத்
தெரிவித்த முன்னாள் மாலைத்தீவு ஜனாதிபதி, காலநிலை இடர் மன்றத்தின் (CVF) பொதுச் செயலாளர் மொஹமட் நஷிட் தெரிவித்தார்.
இலங்கையின் காலநிலை சுபீட்சத் திட்டத்தை ஆரம்பிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
காலநிலை இடர் மன்றத்தின் தலைமையில் செயற்படுத்தப்படும் இந்த திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் பொருளாதார வளர்ச்சியை சமநிலைப்படுத்தும் குறைந்த கார்பன் மேம்பாட்டு உத்திகளை ஊக்குவிப்பதுடன்,இலங்கை,
பங்களாதேஷ் மற்றும் கானாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதாகவும், மேலும் ஏழு நாடுகள் ஆர்வம் காட்டும் நிலையில் இந்தத் திட்டங்கள் உலகளவில் பிரபல்யம் அடைந்து வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அவுஸ்திரேலியாவின் கொன்சல் ஜெனரல் சந்தீப் சமரசிங்க, கஸ்தூரி அனுராதநாயக்க மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு
வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு
வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு ,ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவலகொட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் எனவும், வீட்டின் படுக்கையில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனிமையில் வசித்த பெண் கொலை
விசாரணையில் குறித்த பெண் வீட்டில் தனியாக இருப்பதும், கணவர் வேலை நிமித்தமாக வௌியே சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் சமீப காலங்களாக தனிமையில் வசித்து வரும் பெண்கள் பலர் சடலமாக மீட்க பட்டுள்ள சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
தொடரும் இவ்வாறான மர்ம கொலைகளினால் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது .
யாழ்ப்பாணத்தில் அதிகவெப்பம் ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் அதிகவெப்பம் ஐவர் உயிரிழப்பு,யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார்.
யால்.போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில்அதிக வெப்பமான காலநிலை
யாழ்ப்பாணத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலை காணப்படுகிறது. ஒரு மனிதனின் உடலானது 40.5 சென்டிகிரேட் அல்லது 105 பரனைட் வெப்பத்தையே தாங்கும். அதனை தாண்டும் போது, தீவிரமான பாதிப்புகள் ஏற்படும்.
அதனால் வியர்வை அதிகரிப்பு , வியர்குருக்கள் போடுதல் , போன்றவை ஏற்படும். வியர்வை அதிகரிப்பால் , உடலில் நீரின் அளவு குறைவடைந்து , மயக்கம் ஏற்படும்.
இந்நிலை தொடர்கின்ற போது “ஹீட் ஸ்ரோக்” ஏற்படும். அத்துடன் , சிறுநீரகம் , இருதயம் , சுவாசப்பை போன்றவை செயல் இழக்கும்.
மூளை செயல் இழந்து மயக்கம்
அதேவேளை குருதி சிறுதட்டுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து , உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்படும். மூளை செயல் இழந்து மயக்கம் ஏற்படும் சம்பவங்களும் நிகழும்.
யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 05 பேர் “ஹீட் ஸ்ரோக்” காரணமாக உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அதிகவெப்பம் ஐவர் உயிரிழப்பு
அவர்களின் உயிரிழப்புக்கு அவர்களுக்கு ஏற்கனவே இருந்த நோய் நிலைமைகள் காரணமாக இருந்தாலும் , அதிகரித்த வெப்ப நிலையே நோயினை தீவிரப்படுத்தி அவர்களின் உயிரிழப்புக்கு காரணமாகும்.
வெப்பத்தின் பேராபத்தான நிலை
எனவே, எம்மை வெப்பத்தின் பேராபத்தான நிலையில் இருந்து எம்மை காப்பாற்றி கொள்ள வேண்டும்.
” ஹீட் ஸ்ரோக்” வரமால் தடுக்க குளிர்மையான பானங்களை அருந்த வேண்டும். வீட்டில் உள்ள வயோதிபர்களுக்கு போதிய நீராகாரங்களை வழங்க வேண்டும்.
வயதானவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுப்பது தெரியாது. எனவே அவர்களுக்கு தொடர்ச்சியாக நீராகாரங்களை வழங்க வேண்டும்.
குறிப்பாக தர்ப்பூசணி , வெள்ளரிப்பழம் , தோடம்பழம் போன்ற பழங்களை உண்ண வேண்டும். குளிர்ந்த நீரினால் , முகத்தை கழுவ வேண்டும்.
கண் புருவங்களை அடிக்கடி நீரினால் கழுவிக்கொள்ள வேண்டும். அதன் ஊடாக உடலின் வெப்ப நிலையை தணிக்க முடியும்.
உடலின் வெப்ப நிலையை குறைப்பதன் ஊடாகவே “ஹீட் ஸ்ரோக்” வராமல் தடுக்க முடியும் என தெரிவித்தார்
பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம்
பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம்
பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் ,பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்ட மகளின் குடும்பத்திற்கு மகளின் தந்தை கடும் அழுத்தத்தை கொடுத்த சம்பவம் ஒன்று பன்னிபிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
திருமணத்தின் பின்னர் இருவரும் பன்னிப்பிட்டிய வீரமாவத்தையில் உள்ள இளைஞனின் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இதன்போது, தந்தையின் தொடர் அழுத்தங்களை தாங்க முடியாமல் இருவரும் துபாய் சென்றுள்ளனர்.
பெண்ணின் தந்தை மிரட்டல்
அந்த நாட்டுக்கும் வந்து பெண்ணின் தந்தை தங்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
பின்னர் இந்த இளம் தம்பதியினர் மீண்டும் நாட்டுக்கு வந்து வீரமாவத்தை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்தப் பின்னணியில் கடந்த 29ஆம் திகதி பிற்பகல் பன்னிப்பிட்டியவில் உள்ள இளைஞனின் வீட்டுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் எனக் கூறிக்கொள்ளும் மூவர் வந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அப்போது வீட்டில் இருந்த தாயின் கையடக்கத் தொலைபேசியை சோதனையிட்டதாகவும், தாயாரை அச்சுறுத்தியதாகவும், அந்த இளைஞனின்
புகைப்படங்கள் சிலவற்றை தமது அலைபேசிக்கு அனுப்பி வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அன்று பிற்பகல், அந்த இளைஞனின் தந்தை, அதிகாரிகள் என்று கூறிக்கொண்டவர்களின் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பின்னர், மகளின் தந்தைக்கு சொந்தமானது என கூறப்படும் தலவத்துகொடையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மூவரும் மது அருந்தியுள்ளனர்.
காரில் தப்பிச் சென்ற அதிகாரிகள்
பின்னர் மூன்று அதிகாரிகளில் இருவர் ஹோட்டல் வளாகத்தில் மறைந்திருந்த நிலையில், மற்றைய நபர் காரில் தப்பிச் செல்லும்போது பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு மஹரகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்தவராகக் காட்டிக் கொண்ட குறித்த சந்தேகநபர் துறைமுகப் பணியாளர் எனவும், மற்றைய இருவரும்
பயங்கரவாத விசாரணைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அரசாங்கத்தின் செயலை தோற்கடிக்க வேண்டும்
அரசாங்கத்தின் செயலை தோற்கடிக்க வேண்டும்
அரசாங்கத்தின் செயலை தோற்கடிக்க வேண்டும் ,பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்து-பசிபிக் பிராந்திய
பணிப்பாளர் பென் மேலருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (07) கொழும்பில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் இலங்கை தற்போது எதிர்நோக்கும் வங்குரோத்து நிலை குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன்,
இதில் இருந்து விடுபட தாம் மற்றும் தமது குழுவினர் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விளக்கினார்.
அதேபோன்று தற்போதைய அரசாங்கத்தின் படுமோசமான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, மக்கள் சார் ஆட்சியை எதிர்பார்க்கும், மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழித்து தேர்தலை ஒத்திவைக்கும்
அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்க வேண்டும் எனவும், மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியை உருவாக்குவதே தனதும் தனது குழுவினதும் நோக்கமாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரித்தானி
ய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்து பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மேலர் உள்ளிட்ட தூதுக்குழுவிடம் சுட்டிக்காட்டினார்.
பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இலங்கைப் பிரதானி Humairaa Hatia மற்றும் இலங்கைக்கான
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக், முதல் செயலாளர் டொம் சோப்பர் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். மேலும், ஐக்கிய
மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நிரோஷன் பெரேரா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
பெண்ணால் உறவில் யுத்தமா
பெண்ணால் உறவில் யுத்தமா
பெண்ணால் உறவில் யுத்தமா
பேரழிவில் வாழ்வு நித்தமா
மண்டை உடைந்து இரத்தமா
மனதில் என்ன பித்தமா
கட்டிய தாலி துச்சமா
கண்டவள் உனக்கு சித்தமா
எல்லாம் ஒருநாள் முற்று பெறும்
என்னவாழ்வென விரக்தி வரும்
வந்தவள் இடையில் சென்றிடுவாள்
வாழ்வில் உள்ளாள் துணையிருப்பாள்
முந்தைய நிலைகள் பிழையாகும்
முதிர்வில் விழியில் நீராகும்
இடையில் நாட்கள் இடராகும்
இதயம் கூட வேறாகும்
அடி வாங்கி வாழ்வு அழுகையில்
அந்தோ செயல்கள் தவறாகும்
அழகில் மயங்கி அலையாதே
அக்கினியில் நீயோ ஏரியாதே
வலிகள் தாங்கிய மனைவியவள்
வாழ்வில் உனக்கு பேறாகும் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 07-05-2024
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஆறுதல் கூறி விடு

- வீர மகன் அர்ச்சுனா

- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு

- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

- என்னை அழைப்பாயா

இஸ்ரேல் இராணுவம் பலி
இஸ்ரேல் இராணுவம் பலி
ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் இராணுவம் பலி என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
ஒரே நாளில் இஸ்ரேல் இராணுவத்தினர் ஆறுபேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
லெபனான் ஹிஸ்புல்லா மற்றும் பாலஸ்தீனம் காசா ஹமாஸ் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் இந்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
இஸ்ரேலுக்கு உள்ளே நுழைந்து ஹமாஸ் தாக்குதல்
இஸ்ரேலுக்கு உள்ளே நுழைந்து ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் ,பலநூறு மக்கள் பலியாகினர் .
மேலும் இருநூற்றுக்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவத்தினர் சிறை பிடித்து செல்ல பட்டனர் .
அதனை அடுத்து கடந்த ஏழுமாதங்களாக இந்த போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
இஸ்ரேலிய வடக்கு பகுதிகள் மீது ஹிஸ்புல்லா போராளிகள் வெடிகுண்டு விமானங்கள் தாக்குதலை நடத்தியதில் ,இஸ்ரேல் இராணுவ முகாம்கள் சேதங்களை உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ரபா எல்லையை இஸ்ரேலை இராணுவம் சுற்றிவளைத்து ,இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வரும் வேளையில் ,தற்போது ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன .
ரபா வீதியை கைப்பெற்றிய இஸ்ரேல்
ரபா வீதியை கைப்பெற்றிய இஸ்ரேல்
ரபா வீதியை கைப்பெற்றிய இஸ்ரேல் , இஸ்ரேலிய அரச இராணுவம் எகிப்தின் எல்லையோர ரபா எல்லையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது .
ஹமாஸ் போராளிகளினால் சிறை பிடித்து செல்ல பட்ட கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் தாக்குதலாக இந்த நடவடிக்கை உள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
பாலஸ்தீனை மண்ணை ஆக்கிரமிக்கும் இஸ்ரேல் போர்
பாலஸ்தீன மக்கள் முற்றாக அங்கிருந்து அகதிகளாக விரட்டியடித்து ,அந்த மண்ணை தமது கட்டு பாட்டுக்கொள் கொண்டு வரும் நோக்கமாக இது உள்ளது .
மேலும் 30 வருடத்திற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் படைகள் தமது நாட்டின் மீது தாக்குதல் நடத்த முடியாத நிலைக்கு ,இட்டு செல்ல வேண்டும் என்பதே இஸ்ரேல் நோக்கமாக உள்ளது .
அதனை கருத்தில் வைத்தே இந்த தாக்குதல் இஸ்ரேல் அரச இராணுவத்தினரால் திட்டமிட்டு நடத்த படுகிறது .
ரபா சாலையின் முக்கிய பிரதான வீதியை தாம் கைப்பற்றியுள்ளதாகவும் ஹமாஸ் போர் படைகளை தாம் நெருங்கி விட்டதாக ,இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .






































