மின்னல் தாக்கத்தினால் அவசரசிகிச்சைப் பிரிவுநாசம்
மின்னல் தாக்கத்தினால் அவசரசிகிச்சைப் பிரிவுநாசம்
மின்னல் தாக்கத்தினால் அவசரசிகிச்சைப் பிரிவுநாசம் ,வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு (ETU) கடும் மழையுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் முற்றாக சேதமடைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற மின்னல் தாக்கத்தினால் வைத்தியசாலையில் இருந்த அனைத்து மின் உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளதுடன், மின்னல் தாக்கத்தினால் கட்டிடமும் சேதமடைந்துள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (11) வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்தியசாலைக்கு ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார்.
மின்னல் தாக்கத்தால் ETU க்கு ஏற்பட்ட சேதங்கள் சுமார் ரூ. 50 மில்லியன் ஆகுமென அவர் தெரிவித்தார்.
தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா
இச்சம்பவம் தொடர்பில் நேற்று (11) தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய அமைச்சர், இந்த அவசர சிகிச்சைப் பிரிவை புனரமைப்பதற்கு பணம் ஒதுக்கப்படும் எனவும், ஆளுநர் இன்று வைத்தியசாலையை பார்வையிடுவார் எனவும் தெரிவித்தார்.
இந்த மின்னல் தாக்கத்தின் போது பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூன்று நோயாளர்கள் காயமடையவில்லை. எவ்வாறாயினும், மின்னல் தாக்கத்தின்
பின்னர் தீ பரவியமையினால் நோயாளிகளை வெளியேற்ற பெரும் முயற்சிகளில் ஈடுபட வேண்டியிருந்ததாக வைத்தியசாலை ஊழியர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி
காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி
காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் உறுமய 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை
வழங்கும் பணிகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் தமது ஆவனங்களை வழங்கி உறுதிகளைப்பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார்.
ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தினை விரைவில்
நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயும் விசேட கூட்டம் இன்று (11) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர்களுமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்
வியாழேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக காணிக்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ந.முகுந்தன்,காணி பிரிவிற்கான பணிப்பாளர்
திருமதி கு.ஈஸ்பரன் மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள்,நில அளவை திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டது.
இந்த திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 27,595 உறுதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
அதிகாரிகள் மட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினை
குறிப்பாக இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக அதிகாரிகள் மட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் அவற்றினை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் தீர்ப்பதற்கான வழிகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இந்த திட்டத்தினை விரைவில் நினைவுசெய்து மக்களுக்கான உறுதிகளை வழங்க நடடிவக்கைகள் எடுக்குமாறு இங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.
கதிர்காம பாதயாத்திரை
கதிர்காம பாதயாத்திரை
கதிர்காம பாதயாத்திரை ,55 நாட்களில், 98 ஆலயங்களைத் தரிசித்து, 815 கிலோமீற்றர் தூரம் நடை வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல்விழாவினை முன்னிட்டு யாழ்ப்பாணம், தொண்டமானாறு செல்வச் சந்நிதி
ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரை இன்று (11) காலை 7.30 மணிக்கு தவத்திரு .நா.க.சி .கணபதி கதிர்வேலு திருநீற்று சித்தர்
தலைமையில் தொண்டைமானாறு ஶ்ரீ செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியது.
அதன் முதல் அங்கமாக நேற்று (10) கார்த்திகை நன்நாளில் ஆலயத்தில் மருதர்காமர் வழி வந்த முருகனின் அம்சமான ஐயாக்களிடம் வேல்
விசேட பூசைகள்
கையளிக்கப்பட்டு கருவறையில் வைக்கப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமை வேலுக்கான விசேட பூசைகள் இடம்பெற்று தலைமை தாங்கும் திருநீற்று
சித்தர் அவர்களிடம் வேல் கையளிக்கப்பட்டு 150 மேற்பட்ட யாத்திரீகர்களுடன் முருக நாமம் எங்கும் ஒலிக்க பாதயாத்திரை ஆரம்பமாகியது.
வடக்கு, கிழக்கு, ஊவா ஆகிய 3 மாகாணங்களையும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை 7
மாவட்டங்களையும் இணைத்து 55 நாட்களில் 98 ஆலயங்களைத் தரிசித்து 815 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கும் இப் புனித பாதயாத்திரை இலங்கையின் மிகமிகநீண்ட தூர கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரையாக கருதப்படுகின்றது.
கண்டியில் ஆசிரியர் ஒருவர் கைது
கண்டியில் ஆசிரியர் ஒருவர் கைது
கண்டியில் ஆசிரியர் ஒருவர் கைது ,க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட புலனாய்வுப் பிரிவினர்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் குறித்த ஆசிரியரை கண்டியில் வைத்து இன்று (12) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதற்கட்ட விசாரணையில் வாட்ஸ்அப் குழுவில் 1,025 உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
க.பொ.த சாதாரண தர பரீட்சையின் ஆங்கில வினாத்தாள் கடந்த 9ம் திகதி நடைபெற்றதுடன், கால அட்டவணைப்படி காலை 8.30 மணிக்கு மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது.
எனினும், சந்தேகத்திற்குரிய இந்த ஆசிரியரால் காலை 9.11 மணியளவில் வாட்ஸ்அப் குழுவில் ஆங்கில வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் வகுப்பு ஆசிரியர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தனியார் வகுப்பு ஆசிரியர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பரீட்சை திணைக்கள அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை கடந்த 06 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
புத்தரின் போதனைகள் பற்றிய ஆராய்ச்சி
புத்தரின் போதனைகள் பற்றிய ஆராய்ச்சி
புத்தரின் போதனைகள் பற்றிய ஆராய்ச்சி ,புத்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு அடுத்த வருடம் ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
புத்தரின் போதனைகள்
புத்தருடைய போதனைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை இவ்வருடத்தில் ஆரம்பிக்க எதிர்பார்த்த போதிலும், செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சட்டங்கள்
இதுவரை சமர்ப்பிக்கப்படாததால், அடுத்த வருடம் வரை புத்தரின் போதனைகள் பற்றிய ஆராய்ச்சி அந்தப் பணிகளை ஒத்திவைக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய சட்டங்களை நிறைவேற்றிய பிறகு அடுத்தகட்ட பணிகள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மொரட்டுவ பௌத்த மன்ற மண்டபத்தில் நேற்று (11) நடைபெற்ற மொரட்டுவ இலங்கை பௌத்த சங்கத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
1924 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி ஆர்தர் வி.தியெஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட மொரட்டுவ இலங்கை பௌத்த சங்கத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மொரட்டுவ பௌத்த மண்டபத்திற்கு 1925 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்தக் கட்டிடம் 1929 ஜூன் 24 ஆம் திகதி மொரட்டுவ பௌத்தர்களின் பௌத்த தலைமையகமாக அப்போதைய இலங்கை ஆளுநர் ஹெர்பர்ட் ஜே. ஸ்டென்லி இதனைத் திறந்து வைத்தார்.
மொரட்டு மகா வித்தியாலயத்திற்கான அடிக்கல்லும் அன்றைய தினம் நடப்பட்டது.
நூறு வருடங்களைப் பூர்த்தி செய்யும் மொரட்டுவ பௌத்த மண்டபத்தின் திருத்தப் பணிகள் அரசாங்க செலவில் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் மொரட்டுவ பௌத்த விகாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இந்த மொரட்டுவ பௌத்த சங்கத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வளாகத்தில் சந்தன மரச்செடியை நடும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
இவ்விதம் மொரட்டுவ பௌத்த சங்கத்தின் உப தலைவர் தம்மிக்க சந்திரநாத் பெர்னாண்டோ, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நூற்றாண்டு நினைவுப் பதிப்பை வழங்கி வைத்தார்.
மொரட்டுவை பௌத்த சங்கத்தின் மூத்த உறுப்பினர் ரஞ்சித் கமநாயக்க, உப தலைவர்களான பிரதீப் ஸ்ரீயந்த பெர்னாண்டோ, தம்மிக்க சந்திரநாத்
பெர்னாண்டோ, காமினி பெரேரா, பிரதேச செயலாளர் கீர்த்தி பெரேரா ஆகியோர் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசை வழங்கி வைத்தனர்.
அதன்பின்னர் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ,
நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, தேசிய பாதுகாப்பு ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான
சாகல ரத்நாயக்க மற்றும் மொரட்டுவை முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ ஆகியோருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் மொரட்டுவ மகா வித்தியாலயத்தின் டபிள்யூ. ஏ. இமாஷ சாவிந்திர ஆஷிங்ஷன என்ற மாணவனால் வரையப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உருவப்படத்துடன் கூடிய மொரட்டு பௌத்த மண்டபத்தின் படமும் இங்கு வழங்கி வைக்கப்பட்டது.
அதன் பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது:
”இன்று முழு உலகமும் காலநிலை மாற்றத்தால் பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகிறது. இந்நாட்களில் நாம் எதிர்கொள்ளும் கடுமையான சூரிய வெப்பம் நாம் இதுவரை சந்திக்காத ஒரு சூழ்நிலை.
இந்தக் காலநிலை வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டிய கடினமான சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது.
கடும் நீர் பிரச்சினை
இத்துடன், கடும் நீர் பிரச்சினையையும் சந்திக்க வேண்டியுள்ளது. பௌத்த தர்மத்தின்படி இந்த சிக்கலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களில் உலகின் முக்கிய பிரச்சினையாக காலநிலை மாற்றப் பிரச்சினை மாறும்.
புத்தபெருமானின் போதனைகளின்படி பார்த்தால் நாகரீகத்தின் பேராசையின் காரணமாகவே நாம் இந்த நிலையை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. அனைவரும் வேகமாக முன்னேற விரும்பினர்.
வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அதன்படி மனித சமுதாயம் சுற்றுச்சூழலுக்கு பெரும்
கேடு விளைவித்துள்ளது. எனவே, காலநிலை மாற்றத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதில் நாம் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் உலகம் இன்று விரைவான தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. குறிப்பாக 1945 இல் அணுகுண்டு வெடித்தபோது, இனி தொழில்நுட்ப முன்னேற்றம் இருக்காது என்று கருதப்பட்டது.
ஆனால் தற்போது அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
நாங்கள் பாடசாலையில் படிக்கும் போது கணனி, கையடக்கத்தொலைபேசி எதுவும் இருக்கவில்லை.
ஆனால் தற்போது, நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், இன்று செயற்கை நுண்ணறிவு வரை சென்றுள்ளோம்.
செயற்கை நுண்ணறிவு
இப்போது இருப்பது செயற்கை நுண்ணறிவின் ஆரம்பமாகும். அடுத்த இரண்டு தசாப்தங்களில் செயற்கை நுண்ணறிவு எங்கே செல்லும் என்ற கேள்வியை நாம் எதிர்கொள்கிறோம்.
ம் செயற்கை நுண்ணறிவுக்கும் புத்த மதத்துக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
நம் மனதால் அனைத்தும் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதே புத்தரின் போதனைகள் சுட்டிக்காட்டுகிறது. மனதைக் கட்டுப்படுத்தினால் முன்னேறலாம்.
மனதைக் கட்டுப்படுத்தாவிட்டால் நமக்கு எதிர்காலம் இல்லை. மனதைக் கட்டுப்படுத்துவது மனிதனுக்கு மட்டுமே உள்ளது.
அதனால்தான் புத்தரின் போதனைகள் மனித குலத்திற்காக செய்யப்பட்டது. மனதைக் கட்டுப்படுத்தினால் பேராசையை ஒழிக்க முடியும். இந்த மனித மனதிற்கு இணையாக செயற்கை நுண்ணறிவு தற்போது வந்துவிட்டது.
மா செயற்கை நுண்ணறிவுக்கு பல்வேறு தகவல்களை
இணைக்க முடியும். செயற்கை நுண்ணறிவு அதற்கேற்ப செயல்படுகிறது. அப்படியானால், பு த்தரின் போதனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
இ செயற்கை நுண்ணறிவு வேறு மதத்தைப் போதிக்குமானால் அது பௌத்தத்திற்கு அச்சுறுத்தலாக அமையும்.
அனுராதபுர காலத்தில் பௌத்தம் இலங்கைக்கு வந்தது
எனவே, நாம் அது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுர காலத்தில் பௌத்தம் இலங்கைக்கு வந்ததுடன், அதன் பின்னர் பௌத்தம் பல்வேறு அழுத்தங்களைச் சந்தித்தது.
இந்து மதம், மஹாயான தர்மம் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் அதில் தாக்கம் செலுத்தியுள்ளன. இக்காலத்தில் செயற்கை நுண்ணறிவும் அதில் இணைகிறது.
அப்படியானால் செயற்கை நுண்ணறிவு வேறு ஒரு தர்மத்தைப் போதிக்குமா என்று சிந்திக்க வேண்டும். மக்கள் தங்கள் கையில் இருக்கும் கைபேசியுடன்
தர்மத்தை இணைத்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சிந்திக்க வேண்டும். இது பௌத்தம் மட்டுமன்றி ஏனைய மதத்தினரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக மாறியுள்ளது.
எனவே, செயற்கை நுண்ணறிவை கட்டுப்படுத்தவும் புதிய சட்டவிதிகளை நாம் கொண்டு வருகிறோம். தொழில்நுட்ப மேம்பாட்டு சட்ட வரைவை தொழில்நுட்ப அமைச்சு தயாரித்துள்ளதுடன், அதன் கீழ் செயற்கை
நுண்ணறிவு மையம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே செயற்கை
b நுண்ணறிவை நிர்வகிக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. நாமும் அதையே செய்ய வேண்டும்.
மேலும், புத்தரின் போதனைக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சியைத் தொடங்க அடுத்த ஆண்டு ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதை இந்த ஆண்டு நிறைவேற்ற
எதிர்பார்க்கப்பட்டாலும், செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இன்னும் நிறைவேற்றப்படாததால், அடுத்த ஆண்டுக்கு அது ஒத்திவைக்கப்பட்டது.
அதற்கேற்ப புதிய சட்டங்களை முன்வைத்து அந்த செயற்பாடுகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றோம்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
வெல்ல தம்ம நிகேதன சர்வதேச பௌத்த நிலையத்தின் தலைவர் அமரபுர கல்யாணிவங்சிக ஸ்ரீ சத்தம்ம யுக்திக நிகாயவின் மகாநாயக்க வண, மாகால்லே நாகித தேரர், பாணந்துறை சங்க சபையின் நீதித்துறை சங்க
நாயக்க கொரலவெல்ல வாழுகாராம மகா விஹாராதிபதி வண, நெகின்னே ஆரியஞான தேரர், மொரட்டுவ ஒழுக்காற்று அதிகார சபையின் தலைவர்,
, இந்திபெத்த ஸ்ரீ சுதர்ம ரத்னாராம விகாராதிபதி வண, கம்பளை சுகுணதஜ தேரர், மொரட்டுவ ஹொரேதுடுவ புரான சங்கிகாரமயவின் விகாராதிபதி, அங்குலானே ஞானவிமல பௌத்த நிலையத்தின் தலைவர்
வண, உடுகம விமலகித்தி தேரர் உட்பட மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத்தலைவர்கள், மொரட்டுவ இலங்கை பௌத்த சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் ,ஹமாஸ் சிறை பிடித்து சென்ற உறவுகளை மீட்டு தரும்படி கோரி நெதன்யாகுவிற்கு எதிராக போராட்டம் இடம்பெற்றுள்ளது .
எகிப்தின் எல்லையோரமான ரபா எல்லையி, இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை நடத்திகொண்டிருக்க அதனை நிறுத்தி ,உடனே கைதிகளை விடுவிக்கும் படி கோரி இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது .
ஹமாஸ் ,.ஹிஸ்புல்லா தாக்குதல்
ஹமாஸ் ,.ஹிஸ்புல்லா படைகள் நடத்திய தாக்குதலில் பெரும் இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
கடந்த 72 மணித்தியாலத்தில் பல தளபதிகளை இஸ்ரேல் இழந்துள்ளது .
ஆள் ஆயுத இழப்பின் காரணமாக ,பெரும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இஸ்ரேல் இராணுவம், அப்பாவி காசா மக்கள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இஸ்ரேல் மக்கள்
ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் , இராணுவ முகாம்கள் என்பன சேதமாகியுள்ளன .
தொடரும் நெதன்யாகுவின் இனஅழிப்பும் ,அதனால் ஏற்படும் இழப்புக்களை தடுத்து நிறுத்தி கைகிகளை விடுவித்து தரும் படி கோரி 200 நாட்கள் கடந்து மக்கள் போரட்டம் நடத்துகின்றனர் .
ஆனால் மக்கள் கோரிக்கையை ஏற்க நெதன்யாகு மறுத்து ,தனது ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் அரசியல் இராணுவ தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளார் .
போரில் காயமடைந்த இராணுவத்தினருக்கு சம்பளம்
போரில் காயமடைந்த இராணுவத்தினருக்கு சம்பளம்
போரில் காயமடைந்த இராணுவத்தினருக்கு சம்பளம் ,யுத்தத்தின் போது உயிரிழந்த மற்றும் முற்றாக அங்கவீனமடைந்த சிவில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு 55 வயது பூர்த்தியான பின்னர் நிறுத்தப்படும் சம்பளத்தை தொடர்ந்தும் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சிவில் பாதுகாப்புப் படைவீரர்களுக்கு சம்பளம்
யுத்தத்தின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படை வீரர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு மற்றும் யுத்தத்தினால் முற்றாக அங்கவீனமடைந்த சிவில் பாதுகாப்புப் படைவீரர்களுக்கு 55 வயது வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது 55 வயதின் பின்னர் அவர்களுக்கு சம்பளமோ ஓய்வூதிய கொடுப்பனவோ வழங்கப்படாததினால் அவர்கள் முகங்கொடுக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதி அவர்களுக்கு இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியதை அடுத்து, அவ்வாறான சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிறுத்தப்படும் கொடுப்பனவை மேலும் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.
அத்துடன் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சிவில் பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில ஆகியோர் இது தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச் சூடு பெண் படுகாயம்
துப்பாக்கிச் சூடு பெண் படுகாயம்
துப்பாக்கிச் சூடு பெண் படுகாயம் ,மதவாச்சி மஹதிவுல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெண் மதிவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஹெட்டவீரகொல்லேவ பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய பெண் ஒருவரே காயமடைந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று (10) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகரிக்கும் துப்பாக்கி சூடு
இலங்கை அதிகரிக்கும் துப்பாக்கி சூடு தாக்குதல்களினால் மக்கள் மத்தியில் நாள் தோறும் ஒருவித அச்ச நிலை ஏற்பட்டுள்ளது .
கோட்டபாய ஆட்சி காலத்தில் ஆயுத வியாபாரத்தால் ஆவர் ஈடுபடடர் . வியாபாரம் மூலம் அதிக இலாபத்தை பெற்றார் .
சோமாலியா போன்றா நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை சேட்டு வந்தார் .
அவ்வாறு வழங்க பட்ட ஆயுதங்களை வைத்தே தற்போது இவ்விதமான கொலை குற்ற செயல்களில் ,மர்ம நபர்கள் ஈடுபட்டு வருவதாக மன்றம் கருத்துரைத்துள்ளது .
குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி
குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி
குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
கர்ப்பம் தரித்திருந்த 15 வயது சிறுமியொருவர் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்று (10) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி துன்னாலை
இதன்போது, வடமராட்சி துன்னாலை பகுதியை அவர்கள் விலாசமாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பிரசவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று (11) காலை முதல் தாய், சிறுமி என இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் செல்வதற்கு கரணம் என்ன அறிந்து .
பாதுகாப்பான பாலியல் கல்வி முறையை இலங்கையில் மாணவர்களுக்கு வாழங்குவதன் ஊடாகவே ஒரு சண்டஹ்தியின் துன்பியல் வாழ்வியலை தடுக்க முடியும்
திருமணத்திற்கு சென்று உயிரைவிட்ட பெண்
திருமணத்திற்கு சென்று உயிரைவிட்ட பெண்
திருமணத்திற்கு சென்று உயிரைவிட்ட பெண்
,தம்புள்ளை ஹபரணை வீதியில் திகம்பத்தஹ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தம்புள்ளையில் இருந்து ஹபரணை நோக்கி பயணித்த கெப் வண்டியொன்று அதே திசையில் பயணித்த காரை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த கெப் வண்டியில் பயணித்த பெண் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஹபரணை ஹிரிவடுன்ன பிரதேசத்தில் வசித்து வந்த சந்தியா குமாரி என்ற 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திருமண நிகழ்வு
அவர் மேலும் சிலருடன் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு மீண்டும் வீடு திரும்பும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் இதில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த இருவரில் மூன்று வயது சிறுமி ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
சீகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு
இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு
இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு , ஹிஸ்புல்லா இராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ,இஸ்ரேல் இராணுவத்தின் ஏவுகணை ,பீரங்கி தளம் அழிக்க பட்டுள்ளது .
லெபனான் மற்றும் ரபா எல்லையோர மக்களை இலக்கு வைத்து பீரங்கி தாக்குதல் நடத்த பட்டு வந்தன .அந்த தாக்குதல்கள் இதே முகாமில் இருந்து மேற்கொள்ள பட்டன .
அவ்வாறன பீரங்கி தளத்தை முற்றுகையிட்டு கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தின.
பீரங்கி தளம் அழிப்பு
இதில் இஸ்ரேல் இராணுவத்தின் 155 மில்லி மீட்டர் பீரங்கிகள் ,மற்றும் ஏவுகணை செலுத்திகளை என்பன அழிக்க பட்டுள்ளதாக லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அறிவித்துள்ளன .
காசா இஸ்ரேலுக்கு இடசையில் போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து ,இஸ்ரேல் வடக்கு பகுதி அணைத்து இராணுவ முகாம் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .
ஹிஸ்புல்லா போராளிகள் ஏவுகணை
தொடர்ச்சியாக ஹிஸ்புல்லா போராளிகள் ஏவுகணைகள் மூலம் ,இஸ்ரேல் ஏவுகணை தளங்களை அழித்துள்ளதால் ,இஸ்ரேல் இராணுவம் உளவியல் நிலையில் பலத்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
வட்டிவீதம் தொடர்பில் அதிரடி தீர்மானம்
வட்டிவீதம் தொடர்பில் அதிரடி தீர்மானம்
வட்டிவீதம் தொடர்பில் அதிரடி தீர்மானம் ,சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புக்காக சுமார் 80 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இதற்கு முன்னர் வழங்கப்பட்ட பணத்திற்காக 105 பில்லியன் ரூபா கடனை திறைசேரியிலிருந்து செலுத்த உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி இந்த விடயத்தில் தெளிவாக உள்ளார்
ஜனாதிபதி இந்த விடயத்தில் மிகவும் அக்கறையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் செயற்பட்டு வருவதாகவும், பல்வேறு வயதினருக்கான வட்டி வீதங்கள்
தொடர்பாக கிடைக்கப்பெற்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நிலவும் பணப்புழக்கங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கேற்ப தெளிவான அறிக்கை ஒன்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தில் வீச்சியுற்றுள்ள இலங்கையை மீள பழைய நிலைக்கு கட்டியெழுப்ப பலமுயற்சிகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .
அதனடிப்படையில் மக்களுக்கு ஆசை காட்டும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது .
நூற்று கணக்கான இராணுவம் சரண்
நூற்று கணக்கான இராணுவம் சரண்
நூற்று கணக்கான இராணுவம் சரண் அடைந்துள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .உக்ரைன் இந்த அறிவிப்பை ரஷ்யா இராணுவம் மறுத்துள்ளது
உக்ரைன் முன்னரங்க போர் முனையில் எதிர்ப்பு சமரில் ஈடுபட்டு கொண்டிருந்த ரஷ்யா தொண்டர் படைகளை சேர்ந்த இராணுவத்தினரே, தற்போது சரண் அடைந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது .
இரண்டு ஆண்டு முடிவுற்ற நிலையில் ரஷ்ய உக்ரைன் இராணுவத்தினருக்கு பலத்த ஆளணி ,ஆயுத இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன .
தொடரும் போர்
ஆனால் அது கடந்து தொடர்ந்து போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இடைவிடாது ரஷ்யா நடத்தும் தாக்குதலினால் உக்ரைன் உள் கட்டமைப்பு சிதைந்து காணப்படும் நிலையில் ,தாங்களே வெற்றியாளர்கள் என உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
சரண் அடைந்த ரஷ்யா இராணுவத்தினருக்கு சகல மரியாதைகளும் வழங்க பட்டு, அவர்கள் வாழ்நாள் முழுவதும் உயிர் வாழும்படியான ,வசதிகள் செய்து தரப்படும் என உக்ரைன் அரச இராணுவம் தெரிவித்துள்ளது .
எனினும் உக்ரைன் இராணுவத்தின் இந்த கூற்றை ரஷ்யா மறுத்து வருகிறது .
துப்பாக்கிச் சூடு காயமடைந்தவர் உயிரிழப்பு
துப்பாக்கிச் சூடு காயமடைந்தவர் உயிரிழப்பு
துப்பாக்கிச் சூடு காயமடைந்தவர் உயிரிழப்பு ,அஹுங்கல்ல மரதான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவ மேற்கொண்ட இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் காயமடைந்தனர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் .
மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 54 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வயிற்றை துளைத்து பாய்ந்த குண்டு
வயற்றுப்பகுதியில் தோட்டாக்கள் தாக்கியதாகவும்,அதானல் ஏற்பட்ட இரத்த போக்கு காரணமாகவே ,குறித்த நபர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டு காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
குறித்த நபரை சுட்டு கொலை செய்த மர்ம நபர்களை கைது செய்திடும் நடவடிக்கையில் ,காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
இலங்கையில் சமீப காலங்களாக இவ்விதமான துப்பாக்கி சூட்டு படுகொலைகள் அதிகரித்து காணப்படுகின்றன .
ஆனால் இந்த கொலைகளின் சூத்தரதரிகள் இலங்கை காவல்துறை கண்டுபிடிக்க முட்டியாது திணறி வருகின்றனர் .
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் கொத்தாக அவுட்
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் கொத்தாக அவுட்
இஸ்ரேல் இராணுவ தளபதிகள் கொத்தாக அவுட். போராளிகள் இஸ்ரேல் இராணுவத்தின் மிக முக்கிய கோட்டையை இலக்கு வைத்து ரொக்கட் தாக்குதல் .நடத்தினர்
இந்த ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தின் நான்கு தளபதிகள் பலியாகியுள்ளனர் .
ஹமாஸ் தாக்குதல்
ஹமாஸ் தாக்குதலில் பலியான நான்கு இராணுவ தளபதிகளும் 19 வயதுடையவர்கள் என இஸ்ரேல் இராணுவம் உத்தியோக பூர்வாமாக தெரிவித்துள்ளது .
பால்குடிகளை பிடித்து நடத்தும் போர் என்பதற்கு ,இந்த பிஞ்சுகள் பலிகள் காணமுடிகிறது .
போர் அனுபவம் அற்றவர்களுக்கு , தளபதி பதவி வழங்கி போர் முனைக்கு அனுப்பிய இஸ்ரேல் இராணுவத்தின் ,இந்த நிலை கண்டு அரபிய தேசம் ,அதன் போர் படைகள் சிரிக்கிறது .
உலக வல்லாதிக்க இராணுவமாக தம்மை அடையாளம் காண்பித்த இஸ்ரேல் படைகளுக்கு ,, ஹிஸ்புல்லா ,வழங்கும் நெருப்படியினால் நிலை குலைந்து போயுள்ளனர் .
நெதன்யாகுவின் போர் பசிக்கு அப்பாவி பிஞ்சுகள் காவு கொடுக்க படுகின்றனர் .
பதுளை விபத்தில் ஒருவர் பலி
பதுளை விபத்தில் ஒருவர் பலி
பதுளை விபத்தில் ஒருவர் பலி ,பதுளை – மஹியங்கனை வீதியின் புவக்கொடமுல்ல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ள்ளார் .
மேலும் இந்த விபத்தில் சிக்கி நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் ஆட்டோ விபத்து
தெஹியத்தகண்டிய டிப்போவுக்குச் சொந்தமான பஸ் ஒன்று தெஹியத்தகண்டிய சிறிபுரவிலிருந்து பதுளை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அதற்கு முன்னால் பதுளையிலிருந்து ரிதிபன நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் பெண் ஒருவரும் மூன்று ஆண்களும் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம்
விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பஸ்ஸின் அடிப்பகுதியும் சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்
இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்
இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல் ,சுற்றவளைத்து தாக்கும் போர் படைகள்,வெடித்த உச்ச கட்ட போர் .
ஆக்கிரமிக்க பட்ட பாலஸ்தீன பகுதியில் நிறுவப்பட்டுள்ள ,இஸ்ரேலிய இராணுவத்தின் ஒவ்டா விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
ஈராக்கிய போர்படைகள் வெடிகுண்டு விமானங்களை பயனப்டுத்தி இந்த தாக்குதலை நடத்தியுள்ளன .
விமான தளம் பலத்த சேதம்
துல்லியமாக நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த விமான தளம் பலத்த சேதங்களை உள்ளாகியுள்ளது .
இவ்வேளை அங்கு தரித்து நின்ற விமானகள் பாதுகாப்பு தேடி பறந்து ஓடியுள்ளன .
தமது தாக்குதல்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக ஈராக்கிய போராளிகள் குழுக்கள் தெரிவித்துள்ளன .
ஆனால் இஸ்ரேல் இராணுவமய வளமையான பாணியில் ,ஈராக்கிய போர் படைகள் வெடிகுண்டு விமானங்கள் யாவும் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவித்துள்ளன .
எகிப்து எல்லையான ரபா வெளியான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்திய நிலையில் ,மூன்று நாடுகளில் இருந்து ,இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்கள் முடுக்கிவிட பட்டுள்ளன .
பலவீனமடை ந்துள்ள இஸ்ரேல் இராணுவம் தோல்விகளை மறைத்து தாமே வெற்றியாளர்கள் என கொண்டாடி வருகின்றனர் .
அகதிகளாக ஓடும் மக்கள்
அகதிகளாக ஓடும் மக்கள்
அகதிகளாக ஓடும் மக்கள். இஸ்ரேல் இராணுவம் ரபா எல்லையில் தாக்குதலை ஆரம்பித்துள்ளதால் அங்குள்ள மக்களை தற்போது அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர் .
பாலஸ்தினம் காசா மக்கள் மீது தாக்குதல்
அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தி இஸ்ரேல் இராணுவம் ,தற்போது பாலஸ்தினம் காசா மக்கள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
சர்வதேச சட்டங்களை மதித்து தாம் வழங்கிய ஆயுதங்களை இஸ்ரேல் பயனப்டுத்த வேண்டும், என அமெரிக்கா இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது .
இஸ்ரேல் அமெரிக்காவுக்கு இடையில் முறுகல்
இதனால் இஸ்ரேல் அமெரிக்காவுக்கு இடையில் முறுகல் போக்கு உச்சம் பெற்று காணப்படுகிறது .
இதேவேளை இஸ்ரேல் வடக்கு இராணுவ நிலைகளை இலக்கு வைத்து லெபனான் ஹிஸ்புல்லா போர் படையினர் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர் .
இரவு முழுதும் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவ முகாம்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஹிஸ்புல்லா இராணுவம் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் படைகளுக்கு ஏற்பட்ட முழுசேத விபரங்கள் தெரியவரவில்லை .
தனியாருக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு
தனியாருக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு
தனியாருக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு ,மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா, பாவிலான்பாட்டன் குடியிருப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான
சுமார் 160 ஏக்கர் பனை மரங்களை கொண்ட காணிகள் சட்ட விரோதமான முறையில் இந்திய தனியார் கம்பெனி ஒன்றிற்கு கனிய மணல் அகழ்வுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வரும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த காணியில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனை மரங்கள் அழிக்கப்பட்டு கனிய மணல் அகழ்வு இடம் பெற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது குறித்த காணிக்கான சுற்று வேலி அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் குறித்த காணியின் உரிமையாளர்கள் அங்கு சென்ற நிலையில் பொலிஸார் கைது செய்வோம் என அச்சுரூத்துவதாகவும் அடாவடித்தனத்துடன் காணி அபகரிப்பு இடம் பெற்று வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது பூர்வீக காணிகளே அடாத்தாக பிடிக்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.இவ்விடயம் குறித்து தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை.
சமூகமும் பாரிய அளவில் பாதிப்பை
இதனால் எமது சமூகமும் பாரிய அளவில் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர். பனை உற்பத்தியை நம்பி வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பனை மரங்கள் உள்ள காணி அபகரிக்கப்பட்டு பனை மரங்களும் வெட்டப்பட்டு வருகிறது.
தற்போது எமது வாழ்வாதாரத்திற்கான பனை மரங்களும் வெட்டப்பட்டுள்ளது.தனியார் நிறுவனம் ஒன்றிற்கு மணல் அகழ்வுக்காக குறித்த காணியை விற்பனை செய்துள்ள நிலையில் தற்போது எங்களை உள்ளே நுழைய விடாது காணிக்கு சுற்று வேலி அடைக்கப்பட்டு வருகின்றது.
எனவே உரிய உயர் அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு எமக்கு எமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த காணியை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
O/L பரீட்சையில் முறைகேடு
O/L பரீட்சையில் முறைகேடு
O/L பரீட்சையில் முறைகேடு ,நடைபெறும் கல்விப் பொதுத்தராதர பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடு செய்யவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள 2 பரீட்சை நிலையங்களிலும் ஹசலக்க பிரதேசத்தில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்திலும் இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தேர்வு எழுதியவர்கள் நேற்று வழங்கப்பட்ட ஆங்கில வினாத்தாளை கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி படம் எடுத்து மற்ற தரப்பினருக்கு அனுப்பி விடை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த நேரத்தில் பரீட்சை நிலையங்களில் இருந்த அதிகாரிகள் கையடக்கத் தொலைபேசிகளைக் கைப்பற்றியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை நிலையங்கள்
பரீட்சை நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கல்வியால்கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி புதிய சிந்தனை ஊடாகவே ,இலங்கையில் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும் .
ஆனால் அதனை தவிர்த்து இலங்கை அரசு கல்வியால் கொள்கையில் சீரான மாற்றநகை ஏற்படுத்து மறுத்து வருவதால் இவ்விதமான குற்ற சத்துக்கள் மோசடிகள் முன்வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
































