பலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம் ,இஸ்ரேலுடனான மோதலில் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் போராட்டமொன்று கொழும்பில் இன்று நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் எம்.பி. சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்களான முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம். மரிக்கார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் சுதந்திர பலஸ்தீனத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்ளுப்பட்டியில் நடைபெற்ற போராட்டத்தில் சிறுவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதை காணமுடிந்தது.

இப்போராட்டம் Friends of Free Palestine இனால் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது,

இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலை அடுத்து மக்கள் மீது அக்காரி கொண்ட கட்சிகளாக தம்மை அடையாள படுத்த நாடவடிக்கைகைகளை கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன .

அதன் பின்னர் தற்போது முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக பல காட்சிகள் வீதி இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

இஸ்ரேலினால் பலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர் ,இஸ்ரேலுக்கு அடங்காத இஸ்ரேல் சஜித் நடத்திய அடங்க போகிறது என்பதை மக்கள் கவனிக்க வேண்டும் .

யாழில் வெடிமருந்துகள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வெடிமருந்துகள் மீட்பு

யாழில் வெடிமருந்துகள் மீட்பு

யாழில் வெடிமருந்துகள் மீட்பு ,யாழ்ப்பாணம், வேலணை சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 3 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள்

மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட வெடி பொருட்கள்

மீட்கப்பட்ட வெடி பொருட்களையும் , கைது செய்யப்பட்ட நபரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம்

ஒப்படைக்கப்படைத்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேலும் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸார் கோரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாட்டி கடற்கரை பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக, 12 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ

விசேட அதிரடி படையினர்

இடத்திற்கு விரைந்த விசேட அதிரடி படையினர் 03 கிலோ 145 கிராம் வெடி மருந்துக்கள் , ஆர்.பி.ஜி எறிகணைகள் 08 மற்றும் 60 எம்.எம். மோட்டார் எறிகணைகள் 12 என்பவை மீட்டமை குறிப்பிடத்தக்கது.

மீன்பிடி தேவைக்கு குறித்த வெடிபொருட்கள் உடைமையில் வைத்திருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு ,முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு பின் பகுதியிலேயே இவ்வாறு சடலம் அடையாளம் காணப்பட்டுட்டது.

பொலிஸார் விசாரணை

சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா ஊர்மிலாந்தோட்டம் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஆசீர்வாதம் என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலை

சம்பவ இடத்துக்கு சென்ற முல்லைத்தீவு நீதிமன்ற மேலதிக நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து சென்று பிரேத பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு அறிவுறுத்தினார்.

இலங்கையில் நாள் தோறும் இடம்பெறும் இவ்விதமான படுகொலை சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இந்த படுகொலைக்கு பின்னல் யார் உள்ளது ..? என்பதை விசாரிக்க போலீசார் தயங்கி வருவது ஏன் என்ற கேள்வி எழுப்பிபி பட்டுள்ளது ,எனினும் போலீசார் தரப்பில் உரிய பதில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது .

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அரசாங்கம் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பெருந்தோட்ட கம்பனிகள் செயற்பட வேண்டியது அவசியமென வலியுறுத்திய நீர் வழங்கல் மற்றும்

பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், அதற்கு எதிராக கம்பெனிகள் மேற்கொள்ளும் நீதிமன்ற நடவடிக்கைளுக்கு முகம்கொடுக்கத் தயாரெனவும் தெரிவித்தார்.

கூட்டு ஒப்பந்தம் இருந்த காலத்தில் 2 வருடங்களுக்கு ஒரு முறை சம்பளம் அதிகரிப்பு செய்யப்பட்ட நிலையில் கடந்த நான்கு வருடங்களாக தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த

அமைச்சர் ஜீவன் தொண்டமான், டொலரின் பெறுமதி வீழ்ச்சியை சாதகமாக கொண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க கம்பனிகள் முன்வர வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் குறிப்பிட்டதாவது:

“தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் நாள் சம்பள முறைமை பொருத்தமற்றதாகும். அந்த முறைமையில் இருந்து மாற வேண்டியது

அவசியம். அதற்காக நான்கைந்து வருடங்கள் அவசியப்படும். அதற்காக தோட்ட தொழிலாளர்களை 1000 ரூபா சம்பளத்துடன் காத்திருக்கச் வைப்பதை ஏற்றுகொள்ள முடியாது.

தேர்தல் காலத்தில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு தொகையை பெற்றுத்தருவதாக கூறும். எதிர்கட்சிகள் தோட்ட மக்களை சிறுதோட்ட

உரிமையாளர்களாக மாற்றுவதாக கூறினாலும் அதற்காக பொறிமுறை என்னவென்பது கேள்விக்குரியாகும்.

ஆரம்பத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தில் ஒரு ரூபா கூட அதிகரிக்க முடியாதென கூறிய கம்பனிகள், அரசாங்கம் 1700 சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவித்தலை விடுத்த பின்பு அடிப்படைச்

சம்ளத்தில் 200 ரூபாவை அதிகரிக்க முன்வந்துள்ளனர். அதனால் சம்பள அதிகரிப்பை செய்ய முடியும் என்று கம்பெனிகள் காண்பித்துள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொட்டகலை மே தினக் கூட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அறிவித்தார்.

பெருந்தோட்ட மக்களுக்கு 1700 ரூபா சம்பளம்

ஏப்ரல் 30 ஆம் திகதி பெருந்தோட்ட மக்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தொழில் அமைச்சர் மனுஷ நாணாயக்காரவினால் வெளியிடப்பட்டது.

இது குறித்து சிலர் மக்கள் மத்தியில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வதந்திகள் பரப்பினர். ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்த மறு தினமே அது நடக்காது என்றும் கூறினார்கள்.

இதே பெருந்தோட்ட நிறுவனங்கள் 1000 சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென கூறினார்கள். அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலும் இரண்டு தடவைகள் வெற்றி பெற்றிருக்கிறோம். தற்போது மேல்முறையீடு செய்துள்ளனர்.

குறித்த வழக்கு ஏற்கனவே உள்ள சம்பள நிர்ணய சபை மீதே தொடரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்போகும் சம்பள விடயத்தில் நிர்ணயச் சபைக்கு தொடர்பில்லை.

1000 ரூபாவுக்கு மேலதிகமாக ஒரு ரூபாவும் கொடுக்க முடியாது என்று கூறிய பெருந்தோட்ட நிறுவனங்கள் 1700 சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்பு 1200 ரூபாவாக அடிப்படை சம்பளத்தை உயர்த்த முன்வந்துள்ளனர்.

ஒரு ரூபா கூட அதிகரிக்க முடியாது

ஒரு ரூபா கூட அதிகரிக்க முடியாது என்று கூறியவர்கள் அடிப்படைச் சம்பளத்தில் 200 ரூபாவை அதிகரிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வழங்கு இடம்பெறுவதால் சம்பள உயர்வு வழங்க முடியாது என்று சட்டம் இல்லை. அது குறித்த எழுத்துமூல அறிவிப்பு சட்டமா அதிபரினால் தொழில் அமைச்சுக்கு அனுப்பட்டிருக்கிறது.

பெருந்தோட்ட நிறுவனங்கள் இந்த விடயத்தை இழுபரியாக்கவே பார்க்கின்றார்கள். இது குறித்து ஜனாதிபதியிடமும் பேசியிருக்கின்றோம்.

அதன்படி ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் தொழில் அமைச்சரால் இது குறித் ஆவணமொன்று தயாரிக்கப்படுகிறது.

பெருந்தோட்ட நிறுவனங்கள் எந்தெந்த இடத்தில் எல்லாம் சட்டத்தை மீறியிருக்கின்றது? எந்தெந்த இடத்தில் எல்லாம் அவர்கள் இலக்கு இல்லாமல்

வேலை செய்திருக்கின்றார்கள்? மீள் நடுகை செய்யாமலிருப்பதற்கான காரணம் என்ன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படும்.

இவ்வாறிருக்க பெருந்தோட்ட கம்பனிகள் குத்தகை காலத்தை நீட்டித்து தாருமாறு கேட்கிறார்கள்.

மீள் நடுகைச் செய்தால் இலாபமீட்ட 60 வருடங்கள் ஆகும் என்று கூறுகிறார்கள்.

53 வருடங்கள் குத்தகைக்கு காணிகளை பெற்றுக்கொண்டபோது அவர்களுக்கு அது விளங்கவில்லையா என்பது கேள்விக்குரியாகும். அதனால், தற்போது சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்று கூறுவது நியாயமற்றது. பராமரிப்பு இன்மையினாலேயே தோட்டங்கள் காடாக மாறியுள்ளன.

தோட்டத் தொழிலாளர்கள் தொழில் செய்யும் இடத்தில் கௌரவமாக நடத்தப்படுத்துவதில்லை.

அதுவே தொழிலாளர்கள் எண்ணிக்கை குறையக் காரணமாகும். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை.

தேயிலைத் தோட்டத்தில் தேயிலை மாத்திரம் தான் இருக்கும் என்ற நிலை இன்று மாறிவிட்டது. பங்களாக்கள் சுற்றுலா இடங்களாக மாற்றப்பட்டுள்ளன.

அதிலும் நாளாந்தம் 1000 – 2000 டொலர் ஈட்டுகின்றனர். அங்கு தேநீர் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இரு முனைகளில் வருமானம் ஈட்டினாலும் கம்பனிகள் அரசாங்கத்திற்கு வெறும் 500 ரூபாவை மாத்திரமே வழங்குகின்றனர்.

தங்களாலேயே சுற்றுலாத்துறை ஊக்குவிக்கப்படுவதாக கூறிக்கொள்கிறார்கள். இது பெருந்தோட்ட நிறுவனங்களின் சூழ்ச்சியாகும். அதனாலேயே ஜனாதிபதியும் தொழில் அமைச்சரும் எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கடந்த 4 வருடங்களாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கிவில்லை. கூட்டு ஒப்பந்தம் இருக்கும்போது இரண்டு வருடத்திற்கு ஒரு முறை சம்பள உயர்வு கிடைத்தது.

டொலரின் பெறுமதி வீழ்ச்சி கண்டதன் மூலம் பெருந்தோட்ட கம்பனிகள் அதிக இலாபம் ஈட்டியுள்ளன.

அதனால் நிச்சயமாக தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியும்.

மேலும், தற்போது யாழ். குடாநாட்டில் சுத்தமான குடிநீர் 11% ஆனோருக்கு மாத்திரமே கிடைக்கிறது.

தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் உப்புநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்ட பின்னர் யாழ். குடாநாட்டில் 40% ஆனோருக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும்’’ என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க தடை
Posted in இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க தடை

முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க தடை

முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க தடை ,அம்பாறை – பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி

குறித்த சம்பவம் இன்று (14) காலை 8.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதுடன் இச்சம்பவத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட

அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி ஆகியோருக்கு

பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு குறித்த நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் போது கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட வலிந்து

காணாமல் ஆக்கப்பட்ட சங்கம்

காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் பொதுமக்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வினை முன்னெடுத்திருந்தது.

எனினும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான பொலிஸார் கல்முனை நீதிவான் நீதிமன்ற தடை உத்தரவை

காண்பித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் என்பவருக்கு தடை உத்தரவு உள்ளதாகவும் எனவே முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை

நினைவுகூரும் முகமாக ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வினை நிறுத்துமாறு கூறி தடை உத்தரவை வழங்கினர். அத்துடன் ஏனைய அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி

ஆகியோருக்கு பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவ்விடத்தில் இருந்து செல்லுமாறு எச்சரித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது தவிர கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) இரவு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக செயற்பட்ட குற்றச்சாட்டில் திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு

உட்பட்ட சேனையூர் பகுதியில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நால்வர் சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து
Posted in இலங்கை செய்திகள்

யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து

யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து

யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து ,யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றி சென்ற , சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து, விபத்துக்கு உள்ளான சம்பவம் திங்கட்கிழமை (13) இடம்பெற்றுள்ளது .

ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கைதிகளை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு ஏற்றி சென்ற போது , நாரந்தனை

பகுதியில் வைத்து முன்னால் பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் திடீரென நிறுத்தப்பட்டமையால் , பின்னால் பயணித்த சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து அதில் மோதி விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் , ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .

சிறைச்சாலை பேருந்து விபத்து

அதனையடுத்து, சிறைச்சாலை பேருந்தில் இருந்த கைதிகள் வேறு வாகனத்திற்கு மாற்றப்பட்டு , சிறைச்சாலைக்கு கொண்டு

செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் .

யாழில் இவ்வாறான பேரூந்து விபத்து சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவது ,சாரதிகள் அலட்சிய போக்கின் வெளிப்பாடே என சமூக நல ஆர்வளர்கள் தெரிவித்து .

இந்த பேரூந்து விபத்துகளினால் நாள்தோறும் பல மக்கள் பலியாகி தக்கது .

இஸ்ரேல் படையினர் காயம்|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் படையினர் காயம்

இஸ்ரேல் படையினர் காயம்

இஸ்ரேல் படையினர் காயம் என இஸ்ரேல் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் .இவ்வாறு காயமடைந்தவர்களில் இஸ்ரேல் இராணுவ உயர் அதிகாரி ஒருவர் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .

ஹிபுல்லா இராணுவத்தினர் நடத்திய ஏவுகணை தாக்குதலின் பொழுதே இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது

வடக்கு இஸ்ரேல் பகுதியில் நிறுவப்பட்டுள்ள ,இஸ்ரேலிய அதி உயர் பாதுகாப்பு கொண்ட இராணுவ முகாம்கள் தாக்குதலுக்கு உள்ளாகின .

அங்கிருந்த பீரங்கிகள் மற்றும் ஏவுகணை கருவிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இராணுவத்தின் வடக்கு பகுதிகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா இராணுவம் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

லெபனான் ஹிஸ்புல்லா போராளிகளின் தாக்குதலினால் இஸ்ரேல் இராணுவம் மிக பெரும் நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது .

தமது தோல்வியை ஒத்துக்கொள்ள மறுத்து ,அப்பாவி மக்கள் வாழ்விடங்களை தாக்கிவிட்டு,அங்கு இறந்தது ஹிஸ்புல்லா போராளிகள் என இஸ்ரேல் இராணுவம் பரப்புரை புரிந்து வருகிறது குறிப்பிட தக்கது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
Posted in இலங்கை செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

மன்னார் மாவட்ட சிறுபோக நெற்செய்கை

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், மன்னார் மாவட்ட சிறு போக நெற்செய்கை க்கான புலவுகளை தெரிவு செய்வதில் அதிகாரிகளின்

தனிப்பட்ட பழி வாங்களை கண்டித்து இன்று (13) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான சிறு போக செய்கைக்காக நெடுங் கண்டல் புலவை திறந்து தருமாறு கோரி மாந்தை மேற்கு விவசாயிகள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் விவசாயிகள்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மன்னார் மாவட்டச் செயலகத்தின் நுழைவாயிலை முற்றுகையிட்டு,பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அதிகாரிகளின் தனிப்பட்ட பழிவாங்கல்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்,திறந்து விடு திறந்து விடு நெடுங்

கண்டல் புலவை திறந்து விடு,கொல்லாதே கொல்லாதே விவசாயிகளை கொள்ளாதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட மாந்தை மேற்கு விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்ட காலம் தொட்டு இன்று வரை ஒரு போதும் நெடுங்கண்டல் புலவு பூட்டப்படவில்லை.

1974 ஆம் ஆண்டு நீர் தட்டுப்பாடு வந்த போது காலபோகத்தில் செய்கை பண்ணப்படும் 40 ஏக்கருக்கு சிறுபோகத்தில் 1 ஏக்கர் என்ற தீர்மானத்தில் 40:1

என்ற விகிதத்தில் விவசாயம் செய்யப்பட்ட போது சின்ன உடைப்பு துலுசின் கீழ் உள்ள புலவுகள் மாத்திரம் திறக்கப்பட்டது.

இதில் நெடுங்கண்டல் புலவு முதன்மையானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட நீர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து புலவுகளும்

விதை நெல்

பூட்டப்பட்டு மன்னார் மாவட்ட விவசாயிகள் விதை நெல் தேவைக்காக நெடுங்கண்டல் புலவு மாத்திரம் திறந்து விவசாயம் செய்யப்பட்டது.

இம்முறை எமது நெடுங்கண்டல் புலவு இம்முறை பூட்டப் பட்டதற்கான காரணத்தை தனிப்பட்ட முறையில் எமது கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் உரிய அதிகாரிகளை சந்தித்து வினவிய போது 2023 ஆம்

ஆண்டின் புலவு பங்கீட்டில் தனிப்பட்ட நபர் ஒருவருடனான முரண்பாட்டிற்கு பழி தீர்க்கும் வகையில் இம்முறை எமது புலவு பூட்டப்பட்டுள்ளது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளோம்.

குறித்த விஷயத்திற்காக நாம் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மன்னிப்புக் கோரினோம்.

உரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து மிகத் தெளிவாக விளக்கியிருந்தோம்.சாதக பாதக நிலையை தெளிவு படுத்தி எமது புலவை திறந்து தரும் படி பணிவாக வேண்டினோம்.

எனினும் ஏழை விவசாயிகளாகிய நாங்கள் வஞ்சிக்கப்பட்டோம்.இதன் அடிப்படையிலேயே எமது உரிமைகளை பெற்றுக் கொள்ள போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இன்றைய தினம் காலை மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடி போராட்டத்தை முன்னெடுத்தோம்.

2024 ஆம் ஆண்டுக்கான சிறு போக செய்கைக்காக நெடுங்கண்டல் புலவை திறந்து தருமாறு விவசாயிகள் சார்பாக கோரிக்கை முன் வைக்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மாந்தை மேற்கு விவசாயிகள் தெரிவித்தனர்.

கோரிக்கை அடங்கிய மகஜர்

தமது கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

இதன் போது விவசாயிகள் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர்

எஸ்.ஆர்.குமரேஸ்,ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன் ராஜ்,மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் முஜாகிர் உற்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை வேண்டும் சிறீதரன் எம்பி
Posted in இலங்கை செய்திகள்

விடுதலை வேண்டும் சிறீதரன் எம்பி

விடுதலை வேண்டும் சிறீதரன் எம்பி

விடுதலை வேண்டும் சிறீதரன் எம்பி ,விடுதலை வேண்டிப் போராடும் இனமொன்றின் வேட்கைக்கு, அந்த இனம் எதிர்கொள்ள நேரிடும் .

இழப்புகள் ஒருபோதும் தடையாக அமையாது என்பதற்கு, ஈழத்தமிழினம்தான் சமகால சாட்சியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் ஈச்சிலம்பற்று (வெருகல்) பிரதேச மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும்

இடையிலான சந்திப்பொன்று, இ வெருகல் – சீனன்வெளி பகுதியில், ஈச்சிலம்பற்று பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் வாரத்தை நினைவுகூரும் வகையில், முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மக்கள் முன் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேலும் தெரிவித்ததாவது,

சர்வதேசம் பார்த்திருக்க, எங்கள் இனத்தின் மீது வலிந்து புரியப்பட்ட இனப்படுகொலை தான் இந்த நூற்றாண்டின் ஆகப்பெரும் மனிதப்பேரவலம்.

அவலத்தின் விளிம்பில் எங்கள் இனம் சிறீதரன் எம்பி

அந்த அவலத்தின் விளிம்பில் எங்கள் இனத்தின் ஆயுதரீதியான ஆத்மபலத்தை இழந்தபோதும், விடுதலை குறித்த எங்கள் பயணத்தின் வீரியம் இன்னும் குறைந்துவிடவில்லை.

தமிழ்த்தேசிய அரசியல் பயணத்தை அடுத்தகட்டம் நோக்கி நகர்த்துவதற்கான உந்துதலை, இறந்த எம் உறவுகளின் ஆத்மாக்களே தருகின்றன – என்றார்.

குறித்த கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட க்கிளையின் தலைவர் சண்முகம் குகதாசன், ஈச்சிலம்பற்று பிரதேச சபையின் மேனாள் உபதவிசாளர் சங்கர், ஓய்வுநிலை அதிபர் இரத்தினசிங்கம்,

மற்றும் மாவட்டக் கிளை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் மேனாள் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அணுகுண்டு வீசுவோம் ஈரான் மிரட்டல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அணுகுண்டு வீசுவோம் ஈரான் மிரட்டல்

அணுகுண்டு வீசுவோம் ஈரான் மிரட்டல்

அணுகுண்டு வீசுவோம் ஈரான் மிரட்டல் , ஈரானின் இந்த அணுகுண்டு மிரட்டலினால் இஸ்ரேல் இராணுவம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .

இஸ்ரேல் இராணுவம் இனப்படுகொலை

பாலஸ்தீனம் காசா மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் இனப்படுகொலை நடவடிக்கயை தொடர்ந்த வண்ணம் உள்ளது .

இவ்வாறான கால பகுதியில் இஸ்ரேல் இந்த தாக்குதலை தொடர்ந்தால் அணுகுண்டு வீசுவோம் என ஈரான் மிரட்டலை விடுத்துள்ளது .

அணு செறிவார்க்கத்தில் வெற்றி பெற்று ,பத்து அணு குண்டுகளை தயாரித்து ஈரான் வளர்ச்சியடைந்துள்ளது .

ஈரானிடம் அணுகுண்டுகள்

அதனால் ஈரானிடம் அணுகுண்டுகள் உள்ளதாக நம்ப படுகின்ற இவ்வேளையில் ,தற்போது இஸ்ரேல் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்துவோம் என ஈரான் விடுத்துள்ள மிரட்டல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேலிய இராணுவ தளங்களை ,இரேலுக்குள்நுழைந்து ஈரான் தாக்குதலை , நடத்தியதன் பின்னர் ,ஈரான் விடுத்துள்ள மிக பெரும் எச்சரிக்கையாக இது பார்க்க படுகிறது .

உலக சண்டியராக தற்போது வலம் வரும் இஸ்ரேல் ,இந்த பெரும் பேரழிவையும் ,பெரும் இடரையும் இஸ்ரேலுக்கு ஏற்படுத்த போகிறது என்பதற்கான, அறிகுறியாக இது பார்க்க படுகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
மழை வெள்ளதில் மூழ்கிய நாடு
Posted in உலக செய்திகள்

மழை வெள்ளதில் மூழ்கிய நாடு

மழை வெள்ளதில் மூழ்கிய நாடு ,ஆப்கனிஸ்தானில் மழை வெள்ளதில் சிக்கி 1600பேர் காயம் ,316 மக்கள் பலி .

அதிக மழை வெள்ளதில் மூழ்கிய நாடு

திடீரென ஏற்பட்ட அதிக மழை வெள்ளதில் மூழ்கி ,பேரழிவில் சிக்கி தவித்து வருகிறது ஆப்கனிஸ்தான் .

இந்த கன மழை வெள்ளத்தில் சிக்கி டசினுக்கு மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளனர் .

இவ்வாறு காணாமல் போனவர்களை மீட்கும் பணி இடம்பெறுகின்ற பொழுதும் ,வெள்ள பாதிப்பில் இருந்து நாடு முற்றாக மீண்டுவரவில்லை .

மந்த கதியில் ,மீட்பு பணிகள்

வெள்ளத்தல் பாதிக்க பட்ட பகுதிகளில் மந்த கதியில் ,மீட்பு பணிகள் இடம்பெறுவதால் ,மக்கள் உயிரிழப்பு சொத்தழிவு என்பன அதிகரித்து காணப்படுகிறது .

ஆப்கனிஸ்தானில் மூன்று மாகாணங்களில் ஏற்பட்ட அதிக மழைவீழ்ச்சி அதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

தலிபான்கள் ஆட்சியில் ஏற்பட்ட முதல் பெரும் வெள்ள பேரழிவாக இது பார்க்க படுகிறது .

பாதிக்க பட்ட ஆப்கனிஸ்தானில் மக்களுக்கு உதவிட பல சர்வதேச தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன .

எனினும் தலிபான்களின் சில கட்டுப்பாடுகள் காரணமாக, முழுமையாக சர்வதேசம் ,இந்த வெள்ள பெருகிற்க்கு உதவிட தயக்கம் காண்பித்து வருவதனை தகவலும் வெளியாகியுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து வழக்கு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து வழக்கு

இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து வழக்கு

இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து வழக்கு ,ஆட்டத்தை ஆரம்பித்த எகிப்து ,கொதிக்கும் இனப்டுகளை புரியும் இஸ்ரேல் .

எகிப்து காசா எல்லையில் உள்ள ரபா சாலையை வழிமறித்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் போரை நடத்தி கொண்டுள்ளது .

இந்த போரினால் அந்த வீதியில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் .

இதனை அடுத்து தபோது எகிப்து நாடானது இஸ்ரேல் இனப்படுகொலை புரிவதாக ,தென் ஆப்பிரிக்கா தொடுத்த வழக்கில் தன்னையும் எகிப்து இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக மாறியுள்ளது .

நெருக்கடியில் சிக்கியுள்ள இஸ்ரேல்

சற்றும் எதிர்பாராத எகிப்து நாட்டின் இந்த வழக்கு இணைவினால் இஸ்ரேல் மிக பெரும் நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது .

சர்வதேச நீதிமன்றில் தென் ஆப்பிரிவை எகிப்பது இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக தமது கண்டங்கள் ,மற்றும் தீர்மானங்களை வலியுறுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

மக்களை இஸ்ரேலை கொன்று குவித்து கொண்டிருக்க ,அதனை தடுக்க மறந்து சர்வதேச நீதிமன்றம் ,தனது தீர்ப்பை தள்ளி போட்ட வண்ணம் நகர்வது ஏமாற்றத்தை அளிக்கிறது .

வீடியோ

https://www.youtube.com/watch?v=J3RIGIXZxvg
Error: View 9293b2au4w may not exist
காதலனை கொன்ற காதலி கைது
Posted in இலங்கை செய்திகள்

காதலனை கொன்ற காதலி கைது

காதலனை கொன்ற காதலி கைது

காதலனை கொன்ற காதலி கைது ,குளியாபிட்டிய பிரதேசத்தில் இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கு உதவியமை மற்றும் குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய வஸ்ஸாவுல்ல, இலுக்கின்ன, பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளைஞன், கடந்த 22ஆம் திகதி தனது காதலியைப் பார்ப்பதற்காக குளியாப்பிட்டிய வஸ்ஸாவுல்ல பகுதிக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போருந்தார்.

காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

பின்னர் காணாமல் போன இளைஞனின் சடலம் சிலாபம் – மாதம்பே பிரதேசத்தில் மீட்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில், குளியாப்பிட்டிய வஸ்ஸாவுல்ல பகுதியைச் சேர்ந்த காதலியின் தந்தையான ‘சிங்கிதி’ என அழைக்கப்படும் சுஜித் பெர்னாண்டோ மற்றும் அவரது மனைவு டிலானி ரசிகா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காதலனை கொன்ற காதலியின் செயல் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு

வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு

வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு ,பல கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டணி தீர்மானித்துள்ளது.

கோரிக்கைகளுக்கு அரசு உரிய பதில் அளிக்காவிட்டால் எதிர்வரும் 22ம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என கூட்டணியின் இணை ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினை

இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் இன்று (13) அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு முதல் நிலவும் மாதாந்த கொடுப்பனவு மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பிலான முன்மொழிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த “அத தெரண” வினவிய போது தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் 11ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.

தீர்வு வழங்கப்படாவிடின் வேலை நிறுத்தப் போராட்டம்

இன்று தமது பிரச்சினைகளுக்கு திட்டவட்டமான தீர்வு வழங்கப்படாவிடின் வேலை நிறுத்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தி அத்தியாவசிய சேவைகள் வாபஸ் பெறப்படும் என அனைத்து பல்கலைக்கழகங்க தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைச் செயலாளர் கே.எல்.டி.ரிச்மண்ட் எச்சரித்துள்ளார்.

பொலிஸாரால் 14 இளைஞர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாரால் 14 இளைஞர்கள் கைது

பொலிஸாரால் 14 இளைஞர்கள் கைது

பொலிஸாரால் 14 இளைஞர்கள் கைது ,மஹரகமை – டேங்கோ போர்ட் சந்தியிலிருந்து பன்னிபிட்டிய நோக்கி அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பற்ற வகையில் ஓட்டிச் சென்ற 14 இளைஞர்களை மஹரகமை பொலிஸார் நேற்று (12) கைது செய்துள்ளனர்.

இது ஒரு பந்தயப் போட்டி என்றும், இணையத்தில் வெளியான செயலி மூலம் அவர்கள் இதில் இணைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

போட்டியில் வெற்றி பெறுபவருக்கு வழங்கப்படும் பரிசு

போட்டியில் வெற்றி பெறுபவருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகைக்கு மேலதிகமாக அழகான பெண் வேடமணிந்த இளைஞர் ஒருவரும் வழங்கத் தயார் நிலையில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 14 இளைஞர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

போட்டியில் பயன்படுத்தப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை காவல்துறையால் இவ்விதமான கைதுகள் தொடராக பொழுத்தகும் ,பொது போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் இவ்வாறான வாலிபர்கள் செயல்கள் குறைவடையவில்லை என்பது குறிப்பிட தக்கது .

நாடளாவிய ரீதியில் மழை
Posted in இலங்கை செய்திகள்

நாடளாவிய ரீதியில் மழை

நாடளாவிய ரீதியில் மழை

நாடளாவிய ரீதியில் மழை ,இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் கொந்தளிப்பான தன்மை உருவாகியுள்ளதால், நாடளாவிய ரீதியில் மழைபொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் இராணுவ தளபதி காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ தளபதி காயம்

இஸ்ரேல் இராணுவ தளபதி காயம்

இஸ்ரேல் இராணுவ தளபதி காயம் அடைந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது .

பலஸ்தீனம் காசா பகுதியால் இடம்பெற்ற போரில் இஸ்ரேல் இராணுவதின் படையணி கட்டளை தளபதி ,படுகாயமடைந்துள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது .

ஹமாஸ் போராளிகள் ரொக்கட் தாக்குதல்

வடக்கு இஸ்ரேல் பகுதியை இலக்கு வைத்து பாலஸ்தீனம் காசா ஹமாஸ் போராளிகள் கடும் ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

ஹமாஸ் போராளிகள் நடத்திவரும் வீரம் செறிந்த பதிலடி தாக்குதலில், இஸ்ரேல் இராணுவம் பலத்த சேதங்களை சந்தித்த வண்ணம் உள்ளது .

அவ்வாறு கடந்த ஐந்து நாட்களில் லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் மற்றும் ஹமாஸ் போராளிகள் என்பன கூட்டாக இணைந்து தாக்குதலை நடத்தினர் .

அவ்விதம் நடத்திய கூட்டு தாக்குதலில் ஏழு இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலியாகியும், டசினுக்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவ தளபதிகள் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்க படுகிறது .

காணொளியில் பல் நாட்டு செய்திகள் உள்ளடக்க பட்டுள்ளன

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
பெண் கழுத்து நெரித்து கொலை
Posted in இலங்கை செய்திகள்

பெண் கழுத்து நெரித்து கொலை

பெண் கழுத்து நெரித்து கொலை

பெண் கழுத்து நெரித்து கொலை ,துணியினால் கழுத்து நெரிக்கப்பட்டு மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உடுத்துறை வடக்கு, தாளையடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் அதே இடத்தை சேர்ந்த 44 வயதான மூன்று பிள்ளைகளின் தாயொருவர் என தெரியவந்துள்ளது.

கழுத்து துணியால் சுற்றி நெரிக்கப்பட்டு கொலை

வீட்டில் உள்ள கழிவறைக்கு அருகாமையில் உள்ள நீர் நிரம்பிய கொள்கலன்(பரல்) உள்ளே தலைப் பகுதி நீரில் இருக்குமாறு குப்புற விழுந்த நிலையில் அதிகாலை 5.30 மணி அளவில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி கனகசபை வாசுதேவா பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.

இதன்போது கழுத்து துணியால் சுற்றி நெரிக்கப்பட்டு சூட்சுமமான முறையில் கொலை செய்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.

அத்துடன் உயிரிழந்த பெண்ணின், பெண்ணுறுப்புக்கு அண்மையாக தொடைப்பகுதியில் நகக் கீறல் காயங்களும் காணப்பட்டுள்ளதாக மருதங்கேணிப் பொலிசாருக்கு அவர் அறிக்கையிட்டுள்ளார்.

வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா

வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா

வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா இடம்பெற்றுள்ளது .வவுனியா மருக்காரம்பளை அ , த ,க, பாடசாலை அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி ஓய்வு பெறும் பணி சிறப்புற இடம்பெற்றுள்ளது .

55 தாவது வயதில் சுய விருப்ப ஓய்வு பெறும் ,அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி அவர்களது சேவையை பாராட்டி ,மருக்காரம்பளை பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் கௌரவித்தனர். .

அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி

அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி 1990 ஆம் ஆண்டு முதல் ,பாடசாலை அதிபராக பணி புரிந்து வருகிறார் .

அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி அதிபராக விளங்கிய பாடசாலைகள் யாவும் ,அதன் கல்வித்தரம் மற்றும் ,மாணவர்கள் கல்வியல் உயர்வு நிலையில் மிக பெரும் பங்காற்றினார் .

அவ்விதமான சிறந்த சேவை பண்பை கொண்ட அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி பிரியாவிடை வைபவம், கடந்த தினம் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது .

சுயவிருப்ப ஓய்வு

தனது சுய விருப்பத்தின் அடிப்படையில் ஓய்வு பெறுவதாக ,அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி தெரிவித்துள்ளார் .

தமது பாடசாலை அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி பிரிவை எண்ணி, ஆசிரியர்கள் மாணவர்கள் கண்ணீரில் தவழ்ந்தனர் .

சக ஆசிரியர்களை தனது சகோதர ,சகோரிகளாக கருதி அவர்கள் மீது அன்பு செலுத்தி ,பிரியமுடன் நடந்து கொள்வார் என அங்கு பணியாற்றிய சில ஆசிரியர்கள் நமக்கு தெரிவித்தனர் .

அன்பும் அறமும் ஓங்கும் நிலை கொண்ட மிக நேர்த்தியான சேவையை செய்து ,தமது பாடசாலையை முதன்மை நிலைக்கு எடுத்து செல்ல ,முக்கிய தூணாக விளங்கியவர் ,அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி என தெரிவித்துள்ளனர் .

நாட்டுக்கு ஒரு தலைவன் போல தமது பாடசாலையின் முழு வளர்ச்சியிலும், பெரும் பங்காற்றியவர் அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி என தெரிவித்து நெகிழ்ந்தனர் .

வறுமையின் கீழ் தவிக்கும் மாணவர்களுக்கும் தன்னாலான தனிமனித உதவிகளை புரிந்து ,அவர்கள் கல்வியில் அதிக அக்கறை செலுத்திய அதிபர் ,திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி பிரியாவிடையை ,மகிழ்வோடும் ,துயரத்தோடும் மாணவர்கள் ,ஆசிரியர்கள் ஏற்று கொண்டனர் .

கனமான துயரோடு கண்ணீரால் மலர் தூவி ,விடை பெற்ற வேளையதை விழிகள் இன்னும் மறக்கவில்லை எனவும் ,காலத்தால் அழியாத சாதனையின் நாயகியாய் ,எமது பாடசாலையில் தடம் பதித்து கடக்கிறார் அதிபர் திருமதி தனபாலசிங்கம் ஸ்ரீராஜலட்சுமி என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர் .

வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா
வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா
இஸ்ரேலுக்குள் வெடித்தரொக்கட் மக்கள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் வெடித்தரொக்கட் மக்கள் காயம்

இஸ்ரேலுக்குள் வெடித்தரொக்கட் மக்கள் காயம்

இஸ்ரேலுக்குள் வெடித்தரொக்கட் மக்கள் காயம் நூற்றுக்கு மேற்பட்ட இஸ்ரேலிய மக்கள் வீடுகள் சேதம் .

இஸ்ரேலின் ஆக்கிரமிக்க பட்ட பகுதிகளை இலக்கு வைத்து ஹமாஸ் போராளிகள் கடும் ரொக்கட் தாக்குதலை நாடத்தினர் .

இஸ்ரேலிய மக்கள் வீடுகள் சேதம்

இந்த ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேலிய மக்கள் வீடுகள் நூற்று கணக்கில் சேதமாகியுள்ளன .

எகிப்தின் எல்லையோரமான ரபா எல்லையை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது .

இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் காயாமடைந்தும் பலியாகியும் வருகின்றனர் .

வெடிகுண்டு விமான தாக்குதல்

தொடரும் இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலை அடுத்து பாலஸ்தீன ஆதரவு போராளி குழுக்கள் இஸ்ரேலிய நகரங்களை இலக்கு வைத்து ரொக்கட் ,ஏவுகணை ,வெடிகுண்டு விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் .

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் இந்த போரில் பாலஸ்தீனம் காசா பகுதி பலமாக பாதிக்க பட்டுள்ளது .

தமது தோல்வியை ஏற்று கொள்ள மறுக்கும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை தொடர்வதால் ,தற்போது இஸ்ரேல் இராணுவத்தையும் ,அதன் மக்களையும் இலக்கு வைத்து ரொக்கட் தாக்குதல்கள் நடத்த படுகின்றன .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist