எமக்கும் ஒரு காலம் வாரும்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எமக்கும் ஒரு காலம் வாரும்

எமக்கும் ஒரு காலம் வாரும்

தேசம் விடியும் என்றே
தெரு விளக்கு எரிகிறது
காத்திருப்பு தேவை என்பதால்
கண்ணீர் சொரிகிறது

அடங்கி போவதற்கா – தமிழ்
அக்கினியாய் கொதித்தது
ஏறி மிதிப்பதற்கா
செருப்பிங்கு பிறந்தது

வாடி போவதற்கா
வயலில் நெல் விளைந்தது
கழுத்தறுத்து வீழ்வதற்கா
கதிர் மணி தொங்கியது

ஏர் பிடித்து நடந்தவர்
எல்லை இழந்ததால்
கூழ் குடித்து பதுங்கியவர்
குதுகளித்து மகிழ்கிறார்

நாவடக்கி திரிந்தவர்
நக்கல் கதை உரைக்கின்றார்
நாளை ஒரு காலம்
நமக்கும் பிறக்கும் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 16-05-2024

இஸ்ரேல் விமானம் தளதிற்கு சேதம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானம் தளதிற்கு சேதம்

இஸ்ரேல் விமானம் தளதிற்கு சேதம்

இஸ்ரேல் விமானம் தளதிற்கு சேதம் பட்டுள்ளதாக ஈராக் ஈரான் ஆதரவு குழுக்கள் தெரிவித்துள்ளன .

இஸ்ரேலிய இராணுவத்தின் அதி முக்கிய இராணுவ விமானம் தளத்தின் மீதே இந்த வெற்றிகரமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

அதி உயர் பாதுகாப்பு கொண்ட விமானங்கள்

அதி உயர் பாதுகாப்பு கொண்ட விமானங்கள் இந்த விமானதளத்தில் தரித்து நிற்பது வழமையாகும் .

அவ்விதமான விமான தளத்தை தெரிவு செய்து ஈராக்கிய போராளிகள் குழுக்கள் துல்லியமான தாக்குதலை நடத்தியுள்ளன .

எகிப்தின் ரபா எல்லை வழியான தாக்குதலை இஸ்ரேலிய இராணுவம் தீவிரம் ஆக்கியுள்ள இவ்வேளையில் ,இந்த திடீர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

சியோனிச படைகளை நான்கு முனை ஊடாக சுற்றிவளைத்து ஈரான் ஆதரவு குழுக்கள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

சற்றும் எதிர்பாராத ஒன்றிணைந்த தாக்குதல்களை எதிர்கொள்ள முடியா நிலையில் தற்போது .இஸ்ரேலிய இராணுவம் செய்வதறியாது திணறி வருகிறது .

பாலஸ்தீனம் காசா இஸ்ரேலுக்கு இடையிலான இந்த போரில் ,இஸ்ரேலியா இராணுவம் ,அதன் இராணுவ கட்டமைப்பு என்பன பலமாக பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி
Posted in இலங்கை செய்திகள்

பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி

பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி

பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி ,கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 16 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் நான்கு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் கைது

கடத்தல் சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் 119 பொலிஸ் அவசர இலக்கத்திற்கு வழங்கிய தகவலின் பிரகாரம் உடனடியாக செயற்பட்ட

அலதெனிய பொலிஸார் வேனையும் குழுவினரையும் ஒரு மணித்தியாலத்தில் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் நால்வரில் ஒருவர் இந்த மாணவியுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் அவர் திருமணமானவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவிசாவளை பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரான சந்தேக நபர், தனது நண்பர்களுடன் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட வேனை பயன்படுத்தி இந்த பாடசாலை மாணவியை கடத்த வந்துள்ளார்.

காதல் உறவு

பொலன்னறுவை பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபர் மாணவியின் சகோதரர் ஒருவரின் வீட்டிற்கு பல முறை சென்றுள்ள நிலையில் இந்த காதல் உறவு ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் திருமணமானவர் என தெரியவந்ததையடுத்து மாணவி அவரை கைவிட்டுச் சென்றதுடன் சந்தேக நபரின் அழுத்தத்தினால் மாணவியின் பெற்றோர், அவரை குலுகம்மான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்க வைத்துள்ளனர்.

அங்கிருந்தவாறு பரீட்சைக்குத் தோற்றிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மாணவி கடத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலதெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சஜித்அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை
Posted in இலங்கை செய்திகள்

சஜித்அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை

சஜித்அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை

சஜித்அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை ,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார

திஸாநாயக்கவுக்கும் இடையிலான விவாதத்தை மக்கள் பார்க்கும் வகையில் அன்றைய தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டுமென அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஆனால் அது தொடர்பான விவாதத்தை நடத்துவதில் இரு தரப்பினரும் ஆர்வம் காட்டவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இன்று மற்ற இரண்டு முக்கிய வேட்பாளர்களிடம் நான் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன்.

தயவுசெய்து அந்த விவாதத்தை நடத்துங்கள்

தயவுசெய்து அந்த விவாதத்தை நடத்துங்கள். ஏனெனில் இந்த விவாதத்தில் இருவரும் பங்கு பெறாத போக்கே காணப்படுகிறது.

நான் உண்மையில் ஜனாதிபதியிடம் பொது விடுமுறையை அறிவித்து இந்த விவாதத்தைப் பார்க்குமாறு இலங்கை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கோரினேன்.

இவர்கள் இருவரின் விவாதத்தைப் பார்த்து எப்படி நாட்டைக் கட்டியெழுப்ப போகிறார்கள் என்று பார்ப்போம்.

ஏனெனில் சவால்களை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் நாட்டை எவ்வாறு கட்டியெழுப்ப போகிறார்கள் என முதலில் பார்க்க வேண்டும்.

இது ஒரு வாய்ச்சவடாலே.

இதை செய்ய முடியாது என்பது இரு தரப்புக்கும் தெரியும்.

ஒருவர் கடும் சிங்களத்தில் பேசுகிறார்.

மற்றையவர் கடும் ஆங்கிலத்தில் பேசுகிறார்.

இருவரும் பேசுவது இருவருக்குமே புரியாது.

வாய்ச்சவடாலின்றி செயலில் காட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு

விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு

விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு ,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும், பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய அந்த

கட்சியின் அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகள் செயற்படுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (16) நிராகரித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த முறைப்பாட்டைத் திருத்தவும், உரிய தடை உத்தரவுக்கான சமர்ப்பணங்களை உறுதிப்படுத்தவும் வாதிக்கு அவகாசம் உள்ளதாக நீதிபதி சந்துன் விதான தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவினால் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்
Posted in இலங்கை செய்திகள்

இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்

இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்

இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம் ,2030 ஆம் ஆண்டளவில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தை தயார்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்

யுத்தத்தின் பின்னரான தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு இந்த நாட்டுக்கு ஏற்றவாறு இராணுவத்தை தயார்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

“போருக்குப் பின்னர், தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை ஆராய்ந்து எமது நாட்டுக்கு ஏற்ற இராணுவத்தை தயார்படுத்துவது ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு சபையின் நம்பிக்கையாகும்.

அதன்படி, பாதுகாப்பு ஆய்வு 2030 என்ற திட்டத்தின் கீழ் தனி நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எங்களிடம் 208,000 வீரர்கள் உள்ளனர்.

அதனை ஒரு லட்சம் வரை கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

நாங்கள் யாரையும் நீக்குவதற்கு எதிர்பார்க்க பார்க்கவில்லை.

ராணுவத்தினரின் எண்ணிக்கை

எண்ணிக்கையில், ராணுவத்தில் ஏற்படும் இயற்கையான குறைவைக் கணக்கிட்டு, 2030க்குள், ராணுவத்தினரின் எண்ணிக்கையை 100,000 அளவில் வைத்திருப்பதே எங்கள் தற்போதைய எதிர்பார்ப்பாகும்.

மேலும், கடற்படை மற்றும் விமானப்படை பலப்படுத்தப்பட வேண்டும்.

புவியியல் ரீதியாக, நாம் மிகவும் சிக்கலான முக்கியமான இடத்தில் இருக்கிறோம்.

எனவே, கடற்படையை பலப்படுத்துவதையும் ஒரு திட்டமாக செயல்படுத்தி வருகிறோம்” என்றார்.

பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்
Posted in இலங்கை செய்திகள்

பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்

பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்

பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர் ,ஏதாவது வேலை கொடுங்கள் நான் பசி போக்கி கொள்வேன் என கையேந்தி நிற்கும் பரிதாப காட்சிகள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சில நாட்களுக்கு முன்னதாக பிரான்ஸ் வீதியில் மதுபோதைக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டுவர முடியாது ஐந்து தமிழர்கள் காணப்பட்ட காணொளிகள் வெளியாகி இருந்தன .

உண்ண உணவின்றி தவிக்கும் தமிழர்

அவ்வாறான கால பகுதியில் தற்போது ,அதே பிரான்ஸ் நாட்டில் உண்ண உணவின்றி வீதியில் உறங்கும் தமிழர் காட்சிகள் வெளியாகி ,உலக தமிழரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

அகதிகளாக பிரான்ஸ் நாட்டுக்கு வந்து ,பல உளவியலுக்கு பாதிப்புக்கு உள்ளான நிலையில் ,பல தமிழர்கள் வாழ்ந்து வருவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

உணவின்றி வீதியில் தவிக்கும் இந்த தமிழ் , முதியவரை பிரான்ஸ் தமிழர்களே காப்பற்றி கரம் கொடுங்கள் .

சமூக வலைத் தளத்தில் வெளியாகியுள்ள அந்த காணொளியில் வெளியான கைபேசி இலக்கத்தை இங்கே தருகிறோம் .அதன் ஊடாக தொடர்பு கொண்டு உதவுங்கள் மக்களே .0033 753038400

full வீடியோ பார்க்க இதில் அழுத்துங்கள்

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்
Posted in இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில் இன்று இடம்பெறுகிறது .

பிரிட்டன் எதிர்கட்சியாக விளங்கும் தொழில் கட்சியின் மிக முக்கிய அமைச்சர்கள் எம்பிக்கள் கலந்து கொள்ளும் இந்த கூட்ட தொடரில் முக்கிய முடிவுகள் எட்ட படும் என எதிர் பார்க்க படுகிறது .

தமிழ் இனஅழிப்பு

தமிழ் இனஅழிப்பு இடம்பெற்று 14 வருடங்கள் கழிந்துள்ள பொழுதும் , இதுவரை பாதிக்க பட்ட தமிழருக்கான தீர்வு எட்டப்படவில்லை .

அதனை அடுத்து பிரிட்டன் பாரா ளுமன்றில் இடம்பெறும் இந்த நினைவு கூறல் கூட்ட தொடர்பில் ,பாதிக்க பட்ட தமிழருக்கான முள்ளிவாய்க்கால் நினைவுதினமாக இது அமைய பெறும் என எதிர் பார்க்க படுகிறது .

இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான போர்

இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான போரும் அதனால் ஏற்படுத்த பட்ட இன நிலை நிலையில் ,தற்பொழுது அது போன்று தமிழருக்கான அரசியல் விடுதலை பெற்று தர வேண்டும் என எதிர் பார்க்க படுகிறது .

ஒன்று பட்டு தமிழ் அரசியல் கட்சிகள் செயல் படுகின்ற பொழுது தான் ,தமிழருக்கான தீர்வும் ,விடுதலையும் கிட்டும் என உலக மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர் .

விமானம் வீழ்ந்து நொறுங்கியது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

விமானம் வீழ்ந்து நொறுங்கியது

விமானம் வீழ்ந்து நொறுங்கியது

விமானம் வீழ்ந்து நொறுங்கியது ,இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்திட பறந்து சென்ற விமானம் சுட்டு வீழ்த்தல் என இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு.

லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய விமான தாக்குதலில் ,இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகளில் நிறுவ பெற்றுள்ள அடுக்குமாடிகள் பற்றி எரிகின்றன .

இஸ்ரேல் இராணுவத்தின் வான்காப்பு ஏவுகணை

இஸ்ரேல் இராணுவத்தின் வான்காப்பு ஏவுகணைகளுக்குள் சிக்காது ,இந்த விமானங்கள் வெற்றிகரமாக நுழைந்து தாக்குதலை நடத்தியுள்ளன .

அதேவேளை ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய ஏவுகணை மழையில் இஸ்ரேல் மக்கள் வாழ்விடங்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .

கட்டடங்கள் தீப்பற்றி எரிகின்றன

அடுக்கு மாடி கட்டடங்கள் தீப்பற்றி எரிகின்ற பொழுதும் அங்கு மக்களுக்கு உயிர் சேதங்கள் ஏதும் ஏற்பட்டனவா என்பது தொடர்பாக தெரியவரவில்லை .

ரபா மீதன தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் தீவிர படுத்தியுள்ள நிலையிலேயே ,ஹமாஸ் ஹிஸ்புல்லா போராளிகள் தமது தாக்குதல்களையும் தீவிர படுத்தியுள்ளன .

ஹமாஸ் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் ஏழுமாத போரில் ,பாலஸ்தீனம் காசா நகரம் முற்றாக பாதிக்க பட்டு சுடு காடாக காட்சியளிக்கிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist

தனி ஈழம் வெற்றி பெறும்
Posted in இலங்கை செய்திகள்

தனி ஈழம் வெற்றி பெறும்

தனி ஈழம் வெற்றி பெறும்

தனி ஈழம் வெற்றி பெறும் ,தமிழர்களுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் தனி ஈழத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கும் அடிப்படைவாத நோக்கம் வெற்றி பெறும் என்று ஆளும் தரப்பு எம்.பி.யான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்த சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை

இராணுவத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்து உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடுவதாக ஐ. நா. சபையின் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளமை சாதாரண விடயமல்ல என்றார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற பலஸ்தீனத்தின் இனறைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

இஸ்ரேல் நாட்டில் இடம்பெற்ற பொது நிகழ்ச்சியின் மீது பலஸ்தீனம் தாக்குதல் மேற்கொண்டதன் பின்னரே இரு தரப்பினருக்கும் இடையிலான முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. யுத்தம் கொடுமையானது.

யுத்தத்தின் போது இரு தரப்பிலும் இழப்புக்கள் நேரிடும்.அப்பாவி மக்களே கொல்லப்படுவார்கள்.


பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்கா,ஐக்கிய நாடுகள் சபை எவ்வாறு செயற்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

30 வருட கால யுத்தத்தின் போது இஸ்ரேல் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் சிங்களவர்களையும்,முஸ்லிம்களையும் வெட்டிக் கொலை செய்யும் போது புலிகளுக்கு எதிராக அமெரிக்கா எவ்வித

பிரேரணைகளையும் கொண்டு வரவில்லை.அதேபோல் இலங்கை இராணுவத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் பிரேரணைகளை கொண்டு வரவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பு அப்பாவி மக்களை கொலை செய்து கொண்டிருந்த போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தி அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு,அரசியல் தீர்வு குறித்து ஆராயுமாறு அமெரிக்கா அழுத்தம் பிரயோகித்தது.

விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க 29 ஆயிரம் இராணுவத்தினர் தமது உயிரை தியாகம் செய்தார்கள்.இந்த தியாகத்துக்கு தற்போது மதிப்பளிக்கப்படுகிறதா என்பது சந்தேகத்துக்கிடமாக உள்ளது.

இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என்பது

குறித்து உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார் . இது சாதாரணமானதல்ல.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வெளியக பொறிமுறை நீடித்தால் இலங்கையில் சுயாதீனத்துக்கு பாதிப்பு ஏற்படும்.

தமிழர்களுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் தனி ஈழத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கும் அடிப்படைவாத நோக்கம் வெற்றிப் பெறும் என்றார்.

கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு ,பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பை இன்று (15) முதல் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 13 ஆம் திகதி அமைச்சரவைக்கு அனுப்பப்பட்ட 2 அமைச்சரவைப் பத்திரங்களுக்கு உரிய தீர்வு காணப்படவில்லை என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்தார்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

இதற்கமைய பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 14 வது நாளாக இன்றும் தொடர்கிறது.

இந்நிலையில், சகல ஊழியர்களும் பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்தி பணிக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்

இதேவேளை, பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட 3 நாள் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையில் நிர்வாக கிராம அதிகாரிகள் இணைந்து கொள்ள உள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது .

வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்
Posted in இலங்கை செய்திகள்

வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்

வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்

வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம் தேர்தலில் வெற்றி பெற்றிட தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ள சிலருக்கு பணம் வழங்க படுகிறது சஜித்

இன்று மதுபான அனுமதிப் பத்திரங்கள், குறைந்த அளவில் போதையூட்டும் மதுபான வகைகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் அதிக போதையூட்டும் மதுபான வகைகளுக்கான அனுமதிப்பத்திரம் என பெரும் அரசியல் சூதாட்டம் நடந்து வருகிறது.

இதன் மூலம் வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம் கிடைத்தாலும், நாட்டுக்கும், மக்களுக்கும், இளைஞர்களுக்கும் நேர்ந்த பயன் ஏதுமில்லை.

போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகள்

அரசியல்வாதிகள் வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களை வழங்குவதை போல மது மற்றும் போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வெளிப்படையாக பேச வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மதுபான நிறுவனங்கள் இன்று சக்தி வாய்ந்த ஒன்றாக மாறிவிட்டன. இந்நிறுவனங்களால் எந்தவொரு பிரபல நபரையும் பணத்துக்காக எடுத்துக் கொண்டு, அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய முறையான வரிகளை செலுத்தத் தவறிவிடுகின்றனர்.

பண பலம் இருப்பதால் மாத்திரம் வரி

பண பலம் இருப்பதால் மாத்திரம் வரி செலுத்தாமல் இருப்பது ஒருபுறமிருக்க,மறுபுறம் நாட்டு மக்களையும், பிள்ளைகளையும், இளைஞர்களையும் மரணப் படுக்கைக்கு இட்டுச்செல்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இது குறித்து பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெரியவர்கள் இதுபோன்ற செயல்களைச் செய்தாலும் இளைஞர்கள், பிள்ளகைகளை இதிலிருந்து விடுவிக்க வேண்டும்.

கசப்பான உண்மை

இதிலுள்ள கசப்பான உண்மையைப் பேச வேண்டும். வாக்குகளைப் பெறுவதற்காக மதுபான, பியர் அனுமதிப் பத்திரங்களை விநியோகிப்பது உகந்த காரியமல்ல.

தற்போது மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும் பியர் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகின்றன.

எதிர்ப்புகள் வந்தாலும் அவ்வாறான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டே வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மூச்சுத் திட்டத்தின் 60 ஆவது கட்டமாக மஹர, மல்வத்து, ஹிரிபிட்டிய வைத்தியசாலைக்கு 1,300,000 பெறுமதியான Mini Autoclav 1 மற்றும் Pulse Oximeter 1

என்பவற்றை நன்கொடையாக வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று(14) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

யார் என்ன சொன்னாலும்

யார் என்ன சொன்னாலும், யார் என்ன செய்தாலும் பிள்ளைகள், மது, சிகரெட் போதைவஸ்துக்களை அடியோடு ஒழிப்போம். இது குடும்பத்தின் வளர்ச்சிக்கு காரணமாக அமையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இவற்றைச் சொன்னால் வாக்குகளை இழக்க நேரிடும். மனசாட்சிப்படி பேச வேண்டும். பிள்ளைகளை உரிய முறையில் பராமரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில் இளம் தலைமுறையினர் மது, போதைப்பொருள், சிகரெட் போன்றவற்றின் ஆபத்தில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்று பல்வேறு போதைக்கு முற்றுபுள்ளி என பல பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், பாடசாலை பருவத்தில்

பல்வேறு திட்டங்களின் மூலம், ஆரம்பத்திலிருந்தே இயன்றவரை மது ஒழிப்பு திட்டத்தை கடைப்பிடிக்க நாம் அர்ப்பணிப்போடு செற்பட வேண்டும். மதுபானம்,

போதைப்பொருள் போன்றவற்றை பயன்படுத்தாத ஓர் நபராக இதை கைவிட வேண்டும் என்ற எண்ணப்பாட்டை தாம் கொண்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மதுபாவனை கல்லீரலை கடுமையாக சேதப்படுத்தும்

மதுபாவனை கல்லீரலை கடுமையாக சேதப்படுத்தும். ராகம வைத்தியசாலையில் கல்லீரல் மாற்று சிகிச்சை திட்டம் இயங்கி வருகின்றது.

இதன் காரணமாக கசப்பான உண்மையை வெளிக்கொணர வேண்டிய தருணம் வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

LTTE மீதான தடை நீட்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

LTTE மீதான தடை நீட்டிப்பு

LTTE மீதான தடை நீட்டிப்பு

LTTE மீதான தடை நீட்டிப்பு ,தமிழீழ விடுதலை புலிகள் தடையை இந்தியா மேலும் நீடித்துள்ளதக அறிவித்துள்ளது புலிகள் அழிக்க பட்ட பின்னரும் தொடரும் தடை.

விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 1991 ஆம் ஆண்டு இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது.

அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு தடை நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் உயிரோடு இந்தியா

தடை குறித்த அறிவிப்பில், “விடுதலைப் புலிகள் இன்னும் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு கருதுகிறது.

இலங்கையில் நடைபெற்ற போரில் கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட போதிலும், தனி ஈழம் என்ற கருத்தை அவர்கள் கைவிடவில்லை.

பிரச்சாரம் மற்றும் நிதி சேர்க்கை நடவடிக்கை

பிரச்சாரம் மற்றும் நிதி சேர்க்கை நடவடிக்கைகள் என தனி ஈழத்துக்கான நடவடிக்கைகள் தொடர்ந்து ரகசியமாக நடைபெறுகின்றன.

போரில் உயிர் தப்பிய விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகிகள் இலங்கையிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி விடுதலைப் புலிகள் அமைப்பினை மீண்டும் கட்டமைக்க தேவையான முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள்

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் மக்கள் மத்தியில் பிரிவினைவாதப் போக்கைத் தொடர்ந்து வளர்த்து வருவதோடு, இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவுத் தளத்தை மேம்படுத்துகின்றன.

இது இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று கூறி தடைக்கான காரணங்களாக மத்திய உள்துறை சுட்டிக்காட்டியுள்ளது. என இந்து தெரிவித்துள்ளது .

இஸ்ரேல் ஆமி தளபதி பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஆமி தளபதி பலி

இஸ்ரேல் ஆமி தளபதி பலி

இஸ்ரேல் ஆமி தளபதி பலி என இஸ்ரேல் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது .

பாலஸ்தீனம் காசா பகுதியில் ஹமாஸ் போராளிகள் நடத்திய எதிர் தாக்குதலை;ல் சிக்கிய இஸ்ரேல் ஆமி தளபதி பலியாகியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .

எகிப்தின் எல்லையோர ரபா வழிய முற்றாக ஆக்கிமிது அங்குள்ள மக்களை குறைத்திடும் நோக்குடன் இஸ்ரேல் ஆமி தாக்குதலை நடத்திய வண்னம் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது .

படை நடவடிக்கை

அவ்வாறான அகால பகுதியில் முன்னேற்ற படை நடவடிக்கையை இராணுவத்தை வழிமறித்து ,ஹான்ஸ் போராளிகள் வீரம் நிறைந்த தாக்குதலை நடத்தினர் .

இந்த தக்குதலில் இஸ்ரேல் ஆமி படை தளபதி ஒருவர் பலியாகியும் நால்வர் காயமடைந்துள்ளனர் .

அவ்விதம் காயமடைந்தவர்கள் ஆமி தளபதி ஒருவர் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .

பாலஸ்தீனம் காசா மீது தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் வெற்றிகரமாக நடத்திட அப்போது அமெரிக்கா ஒரு பில்லியன் பெறுமதியிலான ஆயுதங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .

எதிர் வரும் வாரங்களில் இந்த ஆயுதங்களை அமெரிக்கா இஸ்ரேல் ஆமிக்கு வினியோகத்தை மேற்கொள்ளும் என எதிர் பார்க்க படுகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்
Posted in இலங்கை செய்திகள்

கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்

கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்

கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் ,காலி தவலம பிரதேசத்தில் பெண் ஒருவரின் கொலை தொடர்பிலான மர்மங்கள் நான்கு வருடங்களின் பின்னர் காலி மாவட்ட குற்றப்பிரிவின் விசாரணைகளில் வௌிக்கொணரப்பட்டுள்ளது.

கொன்று உடலை கழிவறை குழியில் வீசிய கோரம்

பெண்ணின் கள்ளக்காதலனே அவரை கொன்று உடலை கழிவறை குழியில் வீசியது தெரியவந்தது.

இதன்படி, நான்கு வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட 29 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயின் சடலம் காலி தவலம் ஹல்லகந்த பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள கழிவறை குழி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

நிலுஷிகா சந்தமாலி 2020 ஜூன் 6 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவரின் தாயார் அந்த நேரத்தில் பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்தார்.

முதல் திருமணத்திலிருந்து விவாகரத்து

தனது முதல் திருமணத்திலிருந்து விவாகரத்து பெற்ற நிலுஷிகா, தனது இரண்டு குழந்தைகளுடன் “பதல சாந்த” என்ற ஆணுடன் வாழ்ந்து வந்தார், அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை ஒஒன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று பிள்ளைகளின் தாயான இவர் காணாமல் போனமை தொடர்பில் அப்போது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போதும் எவ்வித தகவலையும் வெளிக்கொணர முடியவில்லை.

பொலிஸ் விசாரணைகள்

இவ்வாறானதொரு பின்னணியிலேயே சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் காலி பிரிவு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நான்கு வருடங்களாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், காணாமல் போன பெண்ணின் கள்ளக்காதலனான ஹேனகொடகே சாந்த என்ற 44 வயதுடைய “பதல சாந்த” என்ற நபரை கைது செய்தனர்.

அடித்துக் கொன்று உடல் மறைப்பு

இதன்போது, அவரை அடித்துக் கொன்று உடலை வீட்டின் அருகே உள்ள கழிவறை குழியில் மறைத்து வைத்தது தெரியவந்தது.

குடும்பத் தகராறு காரணமாக மனைவியைத் தாக்கிய “பதல சாந்த”, அப்பகுதியிலுள்ள வீடொன்றில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டதாகவும், அங்கு குழந்தைகள் வந்து தாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது.

அப்போது, குடிபோதையில் இருந்த பதல சாந்த, வீட்டுக்கு வந்து மனைவியை மீண்டும் தாக்கியதாகவும், மறுநாள் காலை உடல் குளிந்து காணபபட்ட நிலையில், துணியொன்றில் உடலை சுற்றி கழிவறை குழியில் போட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், அவர் தனது மனைவியின் வீட்டிற்கு சென்று ஒன்றும் தெரியாதது போது அவர்களிடம் மனைவி தொடர்பில் விசாரித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

சடலம் நிலுஷிகாவின் சடலம் என குழந்தைகளும் உறவினர்களும் அடையாளம் கண்டுள்ளனர்.

அப்போது, ​​அவர் அணிந்திருந்த காதணியும் கிடைத்தது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார்

சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார்

சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார் ,யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்த பின்னர் , சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான

பாடசாலை மாணவியை பொலிஸார் மீட்டுள்ளதுடன் , மாணவியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 25 வயதான இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில்

யாழ்.போதனா வைத்தியசாலையில் 15 வயதான பாடசாலை மாணவி பிரசவத்திற்காக கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்தார். தாயாரும் மாணவிக;கு உதவியாக

நின்றுள்ளார். மாணவிக்கு குழந்தை பிறந்ததும் மறுநாள், தாயும் மாணவியும் குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

யாழ்ப்பாண பொலிஸ்

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம்

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்து , அது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், குழந்தையை பிரசவித்த மாணவியையும் , அவரது தாயாரையும் கண்டறிந்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் , மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கர்ப்பமாக்கிய மல்லாவி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை
Posted in இலங்கை செய்திகள்

 பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை

பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை

பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை மிக கொடூரமாக கொன்று குவித்து வருகிறது .கொலையை கண்டித்து பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரையாற்றினார் .

பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற நக்பா படுகொலை

வரலாற்றியல் தொட்டு நிகழ்கால நிலவரங்கள்வரை மிக பேசியுள்ளார் .செல்வராசா கஜேந்திரன் ஆற்றிய உரையில் ,பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற நக்பா படுகொலை எவ்வாறான கொடூர செயல் என எடுத்துரைத்தார் .

மிகவும் உணர்ச்சி பூர்வாமாக செல்வராசா கஜேந்திரன் ஆற்றிய பேச்சு வலி தோய்ந்த பாலஸ்தீன மக்களின் குரலாக காணப்பட்டது .

முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுகக்கீம் இலங்கை பாராளுமன்றில் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து செல்வராசா கஜேந்திரன் தனது பேச்சை ஆற்றினார் .

இலங்கை புரிந்த படுகொலை

300 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தமிழர் தாயாக பகுதியில் இலங்கை புரிந்த படுகொலைக்கு ஏன் நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பினார் .

தமிழர் மனங்களில் எழுகின்ற கேள்வியை பாரளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் எழுப்பியுள்ளது உலக தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .

அந்த உரையையினை கேட்பதற்கு கீழே இணைப்பு வழங்க பட்டுள்ளது .

full video

வீடியோ பார்க்க இதில் அழுத்துங்க

லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்
Posted in இலங்கை செய்திகள்

லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்

லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்

லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல் இடம்பெறவுள்ளது .குமுதினி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் லண்டன் Harrow பகுதியில் நாளை புதன்கிழமை (15/05/24)நடைபெற உள்ளது.

இலங்கை கடற்படையின் காட்டுமிராண்டித்தனமான படுகொலையின் வெளிப்பாடாகக் குமுதினிப் படுகொலை கருதப்படுகின்றது .

குமுதினிப் படுகொலை

குமுதினிப் படுகொலை இடம்பெற்று 39 வருடங்கள் கடந்த நிலையில் நாளை லண்டனில் இந்த நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற உள்ளது.

குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும்,புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய பொழுது இடம்பெற்றது .

குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட தினமாகும்.

1985 ஆம் ஆண்டு காலை 07 மணி அளவில் சுமார் 67 பேருடன் பயணித்த குமுதினி படகை சுற்றிவளைத்த கடற்படையினர் குழந்தைகள் சிறுவர்கள் முதியவர்கள் என பாராது 36 பேரை குத்தியும் வெட்டியும் கொலை செய்தனர்.

அவ்வாறன இனவாத அரசாள நடத்திய அந்த குமுதினி நினைவு நாள் இடம்பெறுகிறது என்பதை நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிய படுத்தியுள்ளனர் .

தகவல் –ஈழம் ரஞ்சன்

எரியும் கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் கப்பல்

எரியும் கப்பல்

எரியும் கப்பல் தீ பிடித்த கப்பலில் இருந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றம் .

ரஷ்யா பயணிகள் கப்பலில் திடீரென காப்பாற்றி கொண்டதால் அந்த கப்பல் எரிந்து சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .

தீப்பிடித்து கப்பல் எரிந்தது எப்படி ..?

இந்த கப்பல் எவ்விதம் தீப்பிடித்து எரிந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

கப்பல் தீ பற்றி எரிகின்ற காட்சிகள் வெளியாகி மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

கப்பலின் மேல் தளத்தில் தீப்பிடித்ததில் அந்த தளம் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது . .

அதன் பின்னர் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர் .

எரிகிறன்ற கப்பல்

எரிகின்ற கப்பல் தீயினை அணைப்பதற்கு 42 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 12 தீயணைக்கும் இயந்திரங்கள் பயன்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து ,இதுவரையில் இவ்விதமான தீ பரவல் சம்பவங்கள் ,ரஷ்யா உள்ளே அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள்

அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள்

அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள் மீள ஆக்கிரமிக்க பட்ட பகுதிகளில் குடியேற முடியாது ஹிஸ்புல்லா தலைவர் தெரிவித்துள்ளார் .

ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் வடக்கு பகுதிகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா கடும் ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

அவ்வாறான இடைவிடாத ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதலினால் இஸ்ரேல் இராணுவ முகாம்கள் , பகுதிகள் கடும் சேதங்களுக்கு உள்ளாகிய வண்ணம் உள்ளன .

இதனால் ராணுவத்தினருக்கு பெரும் ஆள் ஆயுத இழப்பு ஏற்பட்டு வருகிறது .

பலஸ்தீன மக்களை அகதிகளாக விரட்டி வரும் இஸ்ரேலுக்கு ,அதன் சொந்த மக்கள் ஆக்கிரமித்து வாழும் பகுதிகள் மீது ஹிஸ்புல்லா தக்குதலை நடத்தி ,இஸ்ரேலிய மக்களை விரட்டி வருகின்றனர் .

இதனால் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியேற்ற வாசிகள் மீள வந்து தமது பலாஸ்தீன மண்ணில் வாழமுடியா நிலையில் சிக்கி தவித்து வருகின்றனர் .

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

தொடர்ந்து நடத்த படும் தாக்குதலினால் அகதிகளாக ஓட்டம் பிடித்த இஸ்ரேலியர்கள் மீள தமது வாழ்விடங்கள் திரும்ப முடியா நிலையில் , இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக கடும் கோபத்தில் உறைந்துள்ளனர் .

வீடியோ