Tag: பொலிஸாரால்
பொலிஸாரால் ஆட்டோ திருடியவர்கள் கைது
பொலிஸாரால் ஆட்டோ திருடியவர்கள் கைது
பொலிஸாரால் ஆட்டோ திருடியவர்கள் கைது , கொழும்பு மத்திய குற்றத்த தடுப்பு பிரிவினால் ஆட்டோ திருடர்கள் ஈடுபாட்டை ஐந்து பேரை கைது செய்துள்ளதாக கொழும்பு குற்ற திணைக்கள பிரிவினர் தெரிவித்து இருக்கின்றது .
இவர்கள் கடந்த காலங்களில் கொழும்பின் பல பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களை திருடி சென்ற சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து .
விசேட குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர் வீதியோர கேமராக்கள் கடைகளில் பொருத்தப்பட்ட கமராக்கள் என்பனவையும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வந்தன.
அவ்விதம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட வந்த கேமராக்கள் மற்றும் சிவில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உளவுத்துறையினர் கூட்டத்தோடு பிரிவினர்களால் இந்த திருடர்கள் தற்பொழுது மடக்கி பிடிக்கப்பட்டனர் .
இந்த ஐந்து பேரும் பல ஆட்டோக்களை திருடி விற்றுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது .
ஆட்டோக்குள் திருடி அதன் உதிரி பாகங்கள் விற்பனை செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
அதனை அடுத்து தற்பொழுது தொடர்ந்து விசாரணைகள் பெற்று வருவதாகவும் ,எத்தனை ஆட்டோக்கள் இவர்கள் திருடினார்கள் என்பது தொடர்பாக முழுமையாக தெரிய வரவில்லை.
பொலிஸாரால் மீட்பு ஆயுதங்கள்
பொலிஸாரால் மீட்பு ஆயுதங்கள்
பொலிஸாரால் மீட்பு ஆயுதங்கள் ,யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய வியாழக்கிழமை (24) அன்று மேற்கொண்ட சுற்றிவழைப்பின் போது
வீடொன்றில் இருந்து ஐந்து வாள்கள் உள்ளிட்ட எழு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்பட்டவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
வன்முறையில் ஈடுபடுவதற்கு தயாராக குறித்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் வீட்டில் வசித்த சந்தேக நபர் தலைமறைவான நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரால் 14 இளைஞர்கள் கைது
பொலிஸாரால் 14 இளைஞர்கள் கைது
பொலிஸாரால் 14 இளைஞர்கள் கைது ,மஹரகமை – டேங்கோ போர்ட் சந்தியிலிருந்து பன்னிபிட்டிய நோக்கி அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பற்ற வகையில் ஓட்டிச் சென்ற 14 இளைஞர்களை மஹரகமை பொலிஸார் நேற்று (12) கைது செய்துள்ளனர்.
இது ஒரு பந்தயப் போட்டி என்றும், இணையத்தில் வெளியான செயலி மூலம் அவர்கள் இதில் இணைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
போட்டியில் வெற்றி பெறுபவருக்கு வழங்கப்படும் பரிசு
போட்டியில் வெற்றி பெறுபவருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகைக்கு மேலதிகமாக அழகான பெண் வேடமணிந்த இளைஞர் ஒருவரும் வழங்கத் தயார் நிலையில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 14 இளைஞர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
போட்டியில் பயன்படுத்தப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை காவல்துறையால் இவ்விதமான கைதுகள் தொடராக பொழுத்தகும் ,பொது போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் இவ்வாறான வாலிபர்கள் செயல்கள் குறைவடையவில்லை என்பது குறிப்பிட தக்கது .
Featured
இலங்கையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நபர்கள் துபாயில் கைது
இலங்கையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நபர்கள் துபாயில் கைது
இலங்கையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 13 சந்தேகநபர்கள் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸாருடன் இணைந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார்.
குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படு வருவதாக அவர் கூறினார்.
நாடட்டில் இடம்பெறும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள், கடத்தல்கள், கொலைகள் என்பவற்றுக்கு டுபாயிலிருந்துதான் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வன்முறையில் ஈடுபட்டார்கள் என கூறி 230பேர் பொலிஸாரால் கைது
வன்முறையில் ஈடுபட்டார்கள் என கூறி 230பேர் பொலிஸாரால் கைது
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் வன்முறை
இடம்பெற்றது ,இந்த வன்முறை தாக்குதலில் ஈடுபட்டனர் என கூறி 230 பேரை காவல்துரையினர் கைது செய்துள்ளனர்
இந்த கைது நடவடிக்கை போராட்ட காரர்களை மிரட்டும் நகர்வாக உள்ளது























