தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்

தமிழக மீனவருக்கு விளக்கமறியல்

தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல் ,தமிழக மீனவர்களுக்கு ஒகஸ்ட் 06 வரை விளக்கமறியல்

இலங்கை கடற்படையினரால் கைது

கடந்த ஜூலை 13 ஆம் திகதியன்று நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 7 தமிழக ராமேஸ்வரம் மீனவர்களை

எதிர்வரும் ஒகஸ்ட் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாஸ்கரன் நேற்று (25) உத்தரவிட்டார்.

இந்திய இழுவைப் படகுடன் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இம்மீனவர்கள், இந்திய இழுவைப் படகுடன் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டு, ஜூலை 13 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அன்று முதல் நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்கள், நேற்றைய விசாரணையில் மேலும் ஒகஸ்ட் 06 வரை விளக்கமறியலில் வைக்க

உத்தரவிடப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை 25 படகுகளுடன் 185 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோமாகம கொலை தொடர்பில் 4பேர்கைது
Posted in இலங்கை செய்திகள்

ஹோமாகம கொலை தொடர்பில் 4பேர்கைது

ஹோமாகம கொலை தொடர்பில் 4பேர்கைது

ஹோமாகம கொலை தொடர்பில் 4பேர்கைது ஹோமாகம பொலிஸ் பிரிவில் ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்து கிளை வீதியில் வீசிய குற்றத்தில் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி நடந்த இந்தக் குற்றத்தைத் தொடர்ந்து, நேற்றிரவு (25) மாதம்பிட்டிய மற்றும் கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகளில்

குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள்

மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.

கொழும்பு 14 மற்றும் 15 பகுதிகளைச் சேர்ந்த கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், 18 முதல் 24 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் தற்போது ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபர் பயணித்த கார்

கொலை செய்யப்பட்ட நபர் பயணித்த கார் கேகாலை-மாவனெல்ல வீதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

நீண்ட விசாரணைகளுக்குப் பின்னர், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போதையில் நபரொருவர் தற்கொலை
Posted in இலங்கை செய்திகள்

போதையில் நபரொருவர் தற்கொலை

போதையில் நபரொருவர் தற்கொலை

போதையில் நபரொருவர் தற்கொலை ,யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியைச் சேர்ந்த பற்றிக்கிளே ஜோபாஸ் (வயது 48) என்பவர், நேற்று (25) இரவு அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தி, தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றிரவு மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து உணவு உண்ட பின்னர் உறங்கியுள்ளார்.

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

இந்நிலையில், அதிகாலை 4:15 மணியளவில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.

திடீர் மரண விசாரணை அதிகாரி

சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தியதால் தன்நிலை மறந்து இவர் உயிரை மாய்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம்
Posted in இலங்கை செய்திகள்

கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம்

கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம்

கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம் ,கலேவெல, மகுலுகஸ்வெவ, ஹீனுகல வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட

விசாரணைகளின் போது, மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதாகவும், அனுமதிப்பத்திரம் இல்லாத போர 12 ரக 3

துப்பாக்கிகள் பொலிஸாரினால் பறிமுதல்

துப்பாக்கிகள் பொலிஸாரினால் பறிமுதல் செய்ததாகவும் தம்புள்ளை உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி.எம்.எம். சந்திரசிறி தெரிவித்தார்.

நேற்று (25) கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் உள்ளிட்ட மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, வஹகோட்ட பகுதியைச் சேர்ந்த இருவர் மான்களை வேட்டையாட வந்திருப்பது தெரியவந்தது.

இவர்களில் ஒருவரின் சகோதரர் பொலிஸ் சார்ஜன்ட் எனவும் தெரியவந்துள்ளது.

மானைக் கொன்ற பிறகு அதை கொண்டு செல்வதற்காகவும், பிரதேச மக்கள் சம்பவத்தைக் கண்டதன் காரணமாகவும் சந்தேகநபர்களில் ஒருவரின் சகோதரரான பொலிஸ் சார்ஜனின் உதவியை கோரியுள்ளனர்.

அதன்படி, சம்பந்தப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மற்றொரு சார்ஜனின் உதவியை நாடி, தனது சகோதரரால் சுடப்பட்ட மான் இருக்கும் இடத்திற்கு சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் நால்வரும் கிரானேகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படும் நிலைமை காணப்பட்டதால், அவர்கள் இன்று (26) அதிகாலையில் தம்புள்ளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

இதேவேளை, பிரதேச மக்களால் தாக்கப்பட்டதாகக் கூறி மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் ஜீப் வாகனத்தின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையில் மான் போர 12 ரக துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக துப்பாக்கி

கைது செய்யப்பட்ட நபர்கள் மீது சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்தமை மற்றும் வனப்பகுதியில் உள்ள ஒரு மானை சுட்டுக் கொன்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இன்று (26) தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

பெண்களை குறிவைத்து கொள்ளை
Posted in இலங்கை செய்திகள்

பெண்களை குறிவைத்து கொள்ளை

பெண்களை குறிவைத்து கொள்ளை

பெண்களை குறிவைத்து கொள்ளை பெண்களின் கைப்பைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுமுறையில் இலங்கைக்கு வந்தவர்

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் சுமார் 2 மாதங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவிலிருந்து விடுமுறையில் இலங்கைக்கு வந்தவர், மற்றைய

இளைஞர் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரின் மகன் என்று கூறப்படுகிறது.

சந்தேகநபர்களிடம் இருந்து சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசி, 5 நவீன கையடக்க தொலைபேசிகள், 15 ஸ்மார்ட் தொலைபேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சாதனங்களின் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபா என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட போலி எண் தகடு

கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட போலி எண் தகடுகளைக் கொண்ட மோட்டார் சைக்கிள், முகத்தை முழுமையாக மறைக்கும் இரண்டு

முகக்கவசங்கள், 10,900 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், பெண் கைப்பை மற்றும் இரண்டு பெரிய பைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சந்தேக நபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும், நாள் ஒன்றுக்கு 20 பெக்கட் போதைப்பொருட்களை உட்கொள்வதும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு தப்பிச் செல்லும் நபர்களை இலக்கு வைத்து, முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிந்து மோட்டார்

சைக்கிள்களில் செல்வோரை சோதனை செய்யும் விசேட நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

குறித்த இருவரும் கடந்த 23ஆம் திகதி மாலை பிலியந்தலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, போகுந்தர பகுதியில் பொலிஸாரினால் நிறுத்துமாறு சமிக்ஞை செய்யப்பட்டனர்.

இதன்போது, குறித்த இருவரும் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்ததால் அவர்களை துரத்திச் சென்று, பாதையை தடுத்து பொலிஸார் சோதனையிட்டனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிளின் முன் மற்றும் பின் பக்கங்களில் பொருத்தப்பட்டிருந்த இலக்கத்தகடுகளில் இருவேறு இலக்கங்கள் காணப்பட்டுள்ளது.

மேலும், இவர்களிடம் ஹெரோயின் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு

அழைத்துச் சென்று நீண்ட விசாரணைக்கு உட்படுத்தியதில், கடந்த இரண்டு மாதங்களாக இந்த திருட்டுகளில் இருவரும் ஈடுபட்டது தெரியவந்தது.

பொரலஸ்கமுவ, மிரிஹான, பொரளை, அதுருகிரிய, தலங்கம மற்றும் பிலியந்தலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இரவு நேரங்களில் வேலை முடிந்து

வீடு திரும்பும் பெண்களின் கைப்பைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை திருடி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் பெண்களின் பைகளைக் கொள்ளையடித்து, அதிலிருந்து பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை எடுத்துவிட்டு, பைகளை

பொல்கொட ஆறு மற்றும் பல்வேறு காட்டுப் பகுதிகளில் வீசியுள்ளதாக குறிப்பிட்டனர்.

கொள்ளையடிக்கப்பட்ட இருண்டு பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட 10இற்கும் மேற்பட்ட கையடக்க தொலைபேசிகளை மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையமொன்றிற்கு

உதிரிப் பாகங்களுக்காக விற்பனை செய்துள்ளதாகவும், ஏனைய கையடக்க தொலைபேசிகளில் உள்ள பெறுமதியான பாகங்களை மாத்திரம் அகற்றி அவற்றையும் அங்கு விற்பனை செய்துள்ளதோடு, அதன் ஊடாக பெறப்பட்ட

பணத்தை கொண்டு போதைப்பொருள் வாங்கியுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பெறுமதியான பாகங்கள் கழற்றி அகற்றப்பட்ட நிலையில், கொள்ளையடிக்கப்பட் பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டில் உள்ள மகனின் அறையில் இருந்தும்,

மொரட்டுவ பகுதியில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தில் வைத்தும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான 25 மற்றும் 26 வயதுடைய சந்தேக நபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இனப்படுகொலைக்கு நீதிகோரி செம்மணியில் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இனப்படுகொலைக்கு நீதிகோரி செம்மணியில் போராட்டம்

இனப்படுகொலைக்கு நீதிகோரி செம்மணியில் போராட்டம்

இனப்படுகொலைக்கு நீதிகோரி செம்மணியில் போராட்டம் ,வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் செம்மணி வளைவுப் பகுதியில் இன்றையதினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பு

தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்புக்கு பன்னாட்டு சுதந்திர நீதிப் பொறிமுறை ஊடாக மட்டும் நீதியை வேண்டி நிற்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்

போராட்டத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள்,

அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இரு யானைகளுக்கு இடையே மோதல்
Posted in இலங்கை செய்திகள்

இரு யானைகளுக்கு இடையே மோதல்

இரு யானைகளுக்கு இடையே மோதல்

இரு யானைகளுக்கு இடையே மோதல் மெதிரிகிரிய, கவுடுல்ல நீர்த்தேக்கத்திற்கு அருகில் வெலிதுடு பிரதேசத்தில் இரண்டு காட்டு

யானைகளுக்கு இடையில் ஏற்பட்ட கடுமையான மோதல்

யானைகளுக்கு இடையில் ஏற்பட்ட கடுமையான மோதலில் படுகாயமடைந்த யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

அதன்படி, இன்று (26) காலை கிரிதலே வனவிலங்கு கால்நடை பிரிவின் கால்நடை வைத்தியர் சமீரா கலிகுஆராச்சியால் யானையின் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

சமீபத்தில் யானை ஒன்றுடன் இடம்பெற்ற மோதலின் போது ஏற்பட்ட பலத்த காயங்களே யானையின் மரணத்திற்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

காட்டு யானை

இறந்த காட்டு யானை சுமார் 40 வயதுடையது என்றும் சுமார் 9 அடி உயரம் கொண்டதெனவும் தெரியவந்துள்ளது.

யானையின் உயிரைக் காப்பாற்ற கடந்த சில நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளது.

வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்த இருயானை
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்த இருயானை

வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்த இருயானை

வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்த இருயானை வவுனியா வடக்கு, கரப்புக்குத்தி பகுதியில் இரண்டு யானைகள் கிணற்றில் வீழ்ந்த நிலையில் ஒரு யானை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றைய யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

பாதுகாப்பற்ற விவசாய கிணறு

குறித்த பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற விவசாய கிணறு ஒன்றில் யானைகள் தவறி வீழ்ந்துள்ளதாக அந்த

பகுதியை சேர்ந்த கிராம அலுவலருக்கு இன்று (25) காலை தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கிராம அலுவலர், வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும், பொலிசாருக்கும் உடனடியாக தெரியப்படுத்தியிருந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஒரு யானையினை மீட்டுள்ளனர்.

யானை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அதன் சடலம்

மற்றைய யானை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அதன் சடலம் மீட்கப்பட்டது.

குறித்த இரு யானைகளும் ஒன்றன் பின் ஒன்றாக கிணற்றுக்கள் வீழ்ந்தமையால் ஒரு யானை சேற்றில் புதையுண்டு உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது சிவஞானம் சிறீதரன்
Posted in இலங்கை செய்திகள்

ஈடுசெய்யமுடியாதது சம்பந்தனின் இழப்பு சிறீதரன்

ஈடுசெய்யமுடியாதது சம்பந்தனின் இழப்பு சிறீதரன்

ஈடுசெய்யமுடியாதது சம்பந்தனின் இழப்பு சிறீதரன் ,எளிமையும், நேர்மையும், அறமும் சார்ந்த தூய அரசியற் செல்நெறியில், நெகிழ்வுகளினூடே கட்டிறுக்கத்தைக் கடைப்பிடித்த தலைமைத்துவ வழிகாட்டியாக வாழ்ந்த

சம்பந்தன் ஐயாவின் மறைவென்பது, ஈழத்தமிழினத்தின் இரு தலைமுறை அரசியல் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகவும், அவரது அரசியல் தலைமையை ஏற்றிருந்த எங்களுக்கு இனியொருபோதும் நிரப்பவே முடியாத

அரசியல் வழிகாட்டி

அரசியல் வழிகாட்டியின் இழப்பாகவுமே நிகழ்ந்திருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான

இரா.சம்பந்தனின் மறைவுகுறித்த அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவரது உரையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை பாராளுமன்றத்தின் மேனாள் உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான அமரர்.இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் காலமாகி ஒருவருடம் நிரம்பியுள்ள சூழலிலும், அவரது மறைவினால்

தமிழ்த்தேசிய அரசியற் தளத்தில் ஏற்பட்ட இடைவெளியை உணர்ந்த ஒருவனாக, இந்தச் சபையில் அவரின் மறைவுக்கான ஆழ்ந்த துக்கத்தையும் மரியாதையுடனான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ் மக்களின் நீண்டகால இன விடுதலைப் பயணத்தில்

தமிழ் மக்களின் நீண்டகால இன விடுதலைப் பயணத்தில், அறம், அரசியல் நுண்ணறிவு, அனுபவம் என்பவற்றின் முழுமையான ஆளுமை வடிவமாகத் திகழ்ந்த சம்பந்தன் ஐயா அவர்கள், 1933 பெப்ரவரி 5ஆம் திகதி தமிழர்களின்

தலைநகரான திருகோணமலையில் பிறந்து, தமது கல்வியை திருகோணமலையிலுள்ள புனித வளனார் தமிழ் பாடசாலையில் ஆரம்பித்து, யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரி, குருநாகல் புனித ஆன்ஸ் கல்லூரி,

மொறட்டுவை புனித செபஸ்தியன் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் பயின்று, கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டக் கற்கையைப் பூர்த்திசெய்து, தனது

தொழில்முறை வாழ்க்கையை சட்டவாளராக ஆரம்பித்த போதும், 23 வயது நிரம்பிய 1956 ஆம் ஆண்டிலேயே தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக இணைந்து, தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்திருந்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணைப் பொருளாளர், உப தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவியையும் அலங்கரித்ததோடன்றி, தமிழ்த் தேசியக்

கூட்டமைப்பின் தலைவராகவும், 2015 முதல் 2018 வரையான காலத்தில் இலங்கை பாராளுமன்றத்தின் 14 ஆவது எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து, தமிழின விடுதலைப் போரியல் காலகட்டத்திலும், தமிழர்கள் அரசியல்

வெறுமைக்குள் தள்ளப்பட்ட 2010 முதல் 2024 வரையான கடந்த 14 ஆண்டுகளிலும் சம்பந்தர் என்கின்ற அரசியல் பேராளுமை ஆற்றிய செயல்களின் கனதி மிகப் பெறுமதியானது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினராக இணைந்து முழுமையாக இருபத்தொரு ஆண்டுகளின் பின்னர், 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் திருகோணமலைத் தொகுதியின் தமிழர்

விடுதலைக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டதன் மூலம், தனது நேரடி அரசியற் பிரதிநிதித்துவத்தை ஐயா ஆரம்பித்திருந்தார்.

இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், தனிநாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983இன் இதே ஜுலை

மாதத்தில், மூவாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் சிங்களக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மூன்று மாதங்கள் தொடர்ந்து

பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் புறக்கணித்ததால் பதவியிழந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவராக,

சம்பந்தன் அவர்களும் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை 1983 செப்டம்பர் 7 இல் இழந்தார்.

அதன்பிற்பாடு, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர்.அருணாசலம் தங்கத்துரை அவர்களது மறைவின் பின்னர் ஏற்பட்ட

வெற்றிடத்தின் அடிப்படையில், 1997 இல் மீளவும் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட சம்பந்தன் அவர்கள், 2001.10.20ஆம் திகதி தமிழ்த் தேசியக்

கூட்டமைப்பின் தலைவராக பதவியேற்ற அதே காலப்பகுதியில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்றிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக 2004, 2010, 2015 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அத்தனை பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களிலும் தமிழ்த்

தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட அவரை திருகோணமலை மாவட்ட மக்கள் தமது பிரதிநிதியாக தேர்ந்தெடுத்தனர்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கு அப்பால் தமிழினத்தின் அரசியற்தலைவராக அவரது பிரதிநிதித்துவம் மிகப்பெரியது. இலங்கையின் முன்னாள் அரசுத் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் இனப்

பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக 1984இல் நடைபெற்ற முதலாவது வட்டமேசை மாநாட்டிலும், 1985இல் நடைபெற்ற திம்புப் பேச்சுவார்த்தையிலும் தமிழர் பிரதிநிதியாக கலந்து கொண்டமை, ஈழத்தமிழர்களின் நிரந்தர

அரசியல் தீர்வு குறித்து இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாருடன் பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டமை, பாரதத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது தமிழர்

தரப்பு பிரதிநிதிகளில் ஒருவராக பங்கேற்றமை, இந்திய மற்றும் சர்வதேச இராஜதந்திரிகள் பலருடன் சந்திப்புகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டமை, 13 ஆவது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் தொடர்பிலும்,

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களின் பலவீனங்கள் குறித்தும் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களை

வரைவதில் முக்கிய பங்காற்றியமை உள்ளிட்ட விடயங்கள் அவரது அரசியல் வாழ்வின் மிக முக்கிய செயற்பாடுகள் எனலாம்.

இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு

இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘பிராந்தியங்களின் ஒன்றியம்’ என்ற தீர்வுத் திட்ட

வரைவினை வடிவமைப்பதில் அமரர் நீலன் திருச்செல்வம் அவர்களுடன் சம்பந்தன் ஐயாவின் பங்கும் இருந்திருக்கிறது.

இவற்றுக்கு மேலாக 2010 – 2015வரையான காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இலங்கையின் அரச தரப்புகளோடு நடைபெற்ற 14 பேச்சுவார்த்தைகளையும், மைத்திரிபால – ரணில் விக்கிரமசிங்க

ஆட்சிக்காலமான 2015 – 2019வரையான காலத்தில் நடைபெற்ற அனைத்துப் பேச்சு வார்த்தைகளையும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைவோடு திரு.சம்பந்தன் அவர்களே தலைமை தாங்கி நடத்தியிருக்கிறார்.

விடுதலைப் போராட்ட மௌனிப்பின் பின்னர் திக்குத் தெரியாதிருந்த ஈழத்தமிழர்களின் அரசியல் ஆபத்பாந்தவனாக காலத்தால்

அடையாளப்படுத்தப்பட்ட சம்பந்தன் அவர்களின் தலைமைத்துவ முதிர்ச்சிதான், இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டுப் பயணத்திற்கு அடித்தளமிட்டிருந்தது.

அரசியல் வெறுமை சூழ்ந்த கடந்த 14 ஆண்டுகளை இராஜதந்திர ரீதியாக சரிவரக் கையாண்ட அரசியற் தலைவராகவும், அவரைப் பின்பற்றும் எங்களின் அரசியற் பயணத்திற்கான வழிவரைபடத்தை உருவாக்கித் தந்த

ஒருவராகவும், சம்பந்தன் அவர்கள் சாணக்கியம் மிக்க அரசியற் தலைவராக தனது பயணத்தில் வெற்றிகண்டிருந்தார் என்பதே உண்மை.

ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு

சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளால் மதிக்கப்பட்ட, ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்தும் தமிழினப் படுகொலைக்கான நீதி விசாரணை

குறித்தும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதியாக அணுகத்தக்க அரசியற் தலைவராகவும் சம்பந்தன் அவர்களே அடையாளம் பெற்றிருந்தார்.

அது அவரது அரசியல் அனுபவத்திற்கும், தலைமைத்துவ ஆளுமைக்கும், இனம்சார் அரசியலில் அவர் ஆற்றிய வகிபங்குக்கும் கிடைத்த அடையாளமே.

எளிமையும், நேர்மையும், அறமும் சார்ந்த தூய அரசியற் செல்நெறியில், நெகிழ்வுகளினூடே கட்டிறுக்கத்தைக் கடைப்பிடித்த தலைமைத்துவ வழிகாட்டியாக வாழ்ந்த சம்பந்தன் ஐயாவின் மறைவென்பது,

ஈழத்தமிழினத்தின் இரு தலைமுறை அரசியல் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகவும், அவரது அரசியல் தலைமையை ஏற்றிருந்த எங்களுக்கு

இனியொருபோதும் நிரப்பவே முடியாத அரசியல் வழிகாட்டியின் இழப்பாகவுமே நிகழ்ந்திருக்கிறது.

இருந்தபோதும் அவரது தடங்களைப் பின்பற்றும் ஒருவனாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இருப்பை உறுதிசெய்யவும், ஈழத்தமிழர்களது அரசியல் உரித்துக்கான தமிழ்த் தேசியப் பயணத்தில் எனக்கிருக்கும் தார்மீகப் பங்கை

உறுதிசெய்யவும், இதயசுத்தியோடு பணியாற்றுவேன் என்ற உறுதியோடு ஐயாவின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தித்து, அவரது குடும்பத்தினருக்கான அனுதாபங்களையும் பகிர்ந்து நிறைவுசெய்கிறேன்” என்றார்.

82மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்திவைப்பு
Posted in இலங்கை செய்திகள்

82மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்திவைப்பு

82மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்திவைப்பு

82மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்திவைப்பு ,நாடு முழுவதும் 82 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று (25) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், இந்த மருந்தகங்கள் தேவையான தரநிலைகளைப் பேணாததால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினார்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஜூலை 18 வரை, தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபைக்கு 2039 உரிமப் புதுப்பிப்பு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

இவற்றில் 1,820 மருந்தகங்களுக்கு புதிய உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், 219 மருந்தகங்களின் உரிமங்கள் புதுப்பிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இவற்றில் 137 மருந்தகங்களில் முழுநேர மருந்தாளுநர்கள் நியமிக்கப்படாததால்,

அவர்கள் நியமிக்கப்படும் வரை உரிமங்கள் புதுப்பிக்கப்படாது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

05 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய சந்தன்
Posted in வன்னி மைந்தன் உதவி

05 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய சந்தன்

05 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய சந்தன்

05 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய சந்தன் வவுனியா வா பாரதிதாசன் வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் மாணவர்களுக்கு மிதி வண்டி வழங்கி வைக்க பட்டுள்ளது ,.

லண்டனை சேர்ந்த சந்தன் அவர்கள் வழங்கிய துவிச்சக்கர வண்டிகளில் ஐந்து இங்கே வழங்க பட்டுள்ளது.

வவுனியாவில் மிகச்சிறப்பாக இந்த பாடசாலை

வவுனியாவில் மிகச்சிறப்பாக இந்த பாடசாலையில் இந்த மிதிவண்டி வழங்கல் இடம்பெற்றுள்ளது.

இன்று வவுனியாவில் அதிகம் வறுமைக் கோட்டுங்கள் வாழக்கூடிய பாடசாலையாக இது விளங்குவதாக ஆசிரியர்கள் மாணவர்கள் நமக்கு தெரிவித்தார்கள்.

அவ்விதமான இந்தப் பாடசாலையை தெரிவு செய்து எமது ஏற்பாட்டு குழுவினர் இந்த உதவி திட்டங்களை அள்ளி வழங்கினர்.

பயன் பெற்ற மாணவர்கள் என அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியில்

பாடசாலை நிர்வாகம் மாணவர்கள் ஆசிரியர்கள் பயன் பெற்ற மாணவர்கள் என அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளதை இந்த காணொளி காண முடிகிறது.

அறத்தின் பால் நின்று பல உதவிகளை அள்ளி அள்ளி வழங்கி வருகின்ற லண்டனைச் சேர்ந்த சந்தன் அவர்கள் வழங்கி வைத்த இந்த உதவி என்பது

மிகவும் பாராட்டுதலுக்கும் வரவேற்கத்தக்க விடயமாக அவர்களால் கூறப்பட்டது.

பயன் பெற்ற பல மாணவர்கள் எமது வன்னி மைந்தன் tiktok தளம் youtube உடன் இணைந்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த பெரு உதவி வழங்கி அந்த மாணவர்கள் கண்ணீரை துடைத்து அவர்கள் கல்வியில் மேலும் முன்னேற அடி எடுத்து வைக்க உதவி புரிந்த அன்பு உள்ளம் அண்ணன் சந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .

மீளவும் ஒரு முறை எதிரி இணையம் மற்றும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக எமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி அண்ணா கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

மிக்க நன்றி சந்தன் அண்ணா

இதில் அழுத்தி காணொளி பார்க்க

02 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் இத்தாலி
Posted in வன்னி மைந்தன் உதவி

02 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் இத்தாலி

02 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் இத்தாலி

02 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் இத்தாலி ,இத்தாலியைச் சேர்ந்த மயூரன் ஜேசுதாஸ் அவர்கள் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக வழங்கப்படும் 100 துவிச் சக்கர வண்டி வழங்கும் நிகழ்வில் பங்கேற்று இரு மாணவர்களுக்கு உதவியுள்ளார்.

வன்னி மைந்தன் வானொலியில்

வன்னி மைந்தன் வானொலியில் தனது குரல்களை பதிவு செய்து வருகின்ற அறிவிப்பாளராக விளங்கி வரக்கூடிய மயூரன் ஜேசுதாஸ் அவர்களே,

இந்த இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை பெறுவதற்கு நிதி வழங்கினார்.

இவர் வழங்கிய 55 ஆயிரம் ரூபாய் நிதி பங்களிப்பில் இந்த இரண்டு மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபாய் மேலதிகமாக வழங்கி போக்குவரத்து செலவுக்காக வழங்கிய அவருக்கு இந்த வேளையில் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கற்றல் நடவடிக்கையை மேற்கொள்ள மிகப் பெரும் உதவி

நீங்கள் வழங்கிய இந்த மிதி வண்டிகள் ஊடாக இரு மாணவர்கள் மகிழ்வடைந்துள்ளதுடன், அவர்கள் கற்றல் நடவடிக்கையை மேற்கொள்ள

மிகப் பெரும் உதவியாக அமையும் என, ஆசிரியர்கள் மாணவர்கள் தெரிவித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த உதவியை வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் அவர்களுக்கு வன்னி மைந்தன் டிக் டாக் தளம் மற்றும் எதிரி இணையம் என்பன பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

2 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் மாலா
Posted in வன்னி மைந்தன் உதவி

2 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் மாலா

2 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் மாலா

2 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் மாலா ,வன்னி மைந்தன் டேக் டாக் தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் 100 துவிச்சக்கர வண்டிகள் உதவிக்காக லண்டனைச் சேர்ந்த மாலா அவர்கள் இந்த மிதிவண்டிகளை வழங்கி வைத்துள்ளார்.

வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் இரண்டு மாணவிகளுக்கு உதவி

அதன் அடிப்படையில் வவுனியாவை சேர்ந்த வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் இரண்டு மாணவிகளுக்கு ,இந்த துவிச்சக்கர வண்டிகளை வழங்கி அவர்களது கண்ணீரைத் துடைத்துள்ளார் .

தந்தையின்றி வசிக்கும் மாணவன் மற்றும் ஒரு மாணவி ஆகியோருக்கு இந்த 2 துவிச்சக்கர வண்டிகளை வழங்கி அவர்களை மகிழ்வித்துள்ளார்.

இந்த இரண்டு மாணவர்கள் முகங்களில் பொங்கி வழிகின்ற மகிழ்வு பார்ப்பவர்களை வியப்பிலும் கவலையும் கொள்ள வைக்கிறது.

துவிச் சக்கர வண்டி வழங்கிய லண்டன் மாலா

நீண்ட தூரம் நடை பயின்று இந்த கல்வியைக் கற்று வந்த இந்த இரண்டு சிறார்களுக்குமே ,இந்த துவிச் சக்கர வண்டியை மாலா அக்கா அவர்கள்

வழங்கி வைத்து அவர்களது கண்ணீரைத் துடைத்து அவர்களது கல்வியில் புத்து ஒளியை ஏற்படுத்தியுள்ளார்.

எனவே இந்த பெரும் உதவியை வழங்கி, அந்த மாணவர்கள் கல்விக்கு உறுதுணையாக விளங்கிய மாலா அக்கா அவர்கள் 54,000 இலங்கை ரூபாய்கள் வழங்கி இருந்தார்.

அதன் அடிப்படையில் இந்த இரு மிதிவண்டிகள் குறித்த மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அறத்தின் பால் தன்னை அர்ப்பணித்து நடை பயிலக் கூடிய, ஒரு அற்புதமான மனிதராக மாலா இருக்கிறார்.

எனவே மாலா அக்கா உங்களுக்கு மிக்க நன்றிகளையும் பாராட்டுக்களையும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் மற்றும் எதிரி இணையம் என்பன தெரிவித்துக் கொள்கிறது.

நன்றி அக்கா கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

2 மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் ANN அக்கா
Posted in வன்னி மைந்தன் உதவி

2 மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் ANN அக்கா

2 மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் ANN அக்கா

2 மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் ANN அக்கா .வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் 100 துவிச் சக்கர வண்டி வழங்கி வைக்கும் நிகழ்வின்

உதவு பவராக லண்டனைச் சேர்ந்த ஏ என் என் அக்கா அவர்கள், வழங்கிய 54,000 நிதி பங்களிப்பில் இரண்டு மாணவிகளுக்கு இந்த துவிசக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த இரு மாணவி

வவுனியாவைச் சேர்ந்த இரு மாணவிகளுக்கு, இந்த துவிசக்கர வண்டிகளை வழங்கி அவர்களது பாடசாலை கற்கை நெறிக்கு உதவி அளித்துள்ளார்.

லண்டனை சேர்ந்த ANN அக்கா அவர்கள் வழங்கிய இந்த உதவி என்பது ,அந்த இரண்டு மாணவிகள் கல்வியில் ஒளியை ஏற்படுத்தி உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எனவே மக்கள் அறப்பணியில் தன்னை அர்ப்பணித்திருக்கும், ஏ என் என் அக்கா அவர்களுக்கு மீளவும் இந்த வேளையில் ,நாங்கள் நன்றிகளையும்

வன்னி மைந்தன் டிக் டாக் தளம்

பாராட்டுக்களையும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாகவும் எதிரி இணையத்தின் ஊடாகவும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமது இன்னல்கள் இடையூறுகள் துயரங்களுக்கு மத்தியிலும் தாயக மக்கள் விடியலுக்காக உழைக்கும் உங்களைப் போன்ற அனைத்து உள்ளங்களுக்கும்

இந்த வேளையில் மிக்க நன்றிகளையும் ,பாராட்டுகளையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். மிக்க நன்றி அக்கா.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

115பேர் காசாவில் பட்டினியால் பலி
Posted in உலக செய்திகள்

115பேர் காசாவில் பட்டினியால் பலி

115பேர் காசாவில் பட்டினியால் பலி

115பேர் காசாவில் பட்டினியால் பலி ,காசாவில் இஸ்ரேல் முற்றுகையின் போது பட்டினியால் 115 பேர் இறந்ததாக காசாவில் உள்ள மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் முற்றுகை

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் முற்றுகையால் ஏற்பட்ட பட்டினியால் 115 க்கும் மேற்பட்டோர் இறந்ததாக காசாவில் உள்ள மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.

தொடர்ச்சியாக 145 நாட்களுக்கு அனைத்து கடவைகளும் முழுமையாக மூடப்பட்டதாலும், அத்தியாவசிய மனிதாபிமான உதவி மற்றும் குழந்தை பால்

பொருட்கள் உள்ளே நுழைவதைத் தொடர்ந்து தடுப்பதாலும், மோசமடைந்து வரும் பஞ்சம் முழுப் பகுதியிலும் பரவி வருகிறது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், காசாவில் உள்ள அரசு ஊடக அலுவலகம் உணவு, தண்ணீர் மற்றும் மருந்து கிட்டத்தட்ட முழுமையாக இல்லாதது குறித்து எச்சரித்தது.

காசாவில் உள்ள அரசு ஊடக அலுவலகம்

மொத்த மனிதாபிமான சரிவைத் தவிர்க்க, காசாவில் உள்ள அரசு ஊடக அலுவலகம் வாரத்திற்கு குறைந்தது 500,000 பைகள் மாவு அவசரமாகத் தேவை என்று அது வலியுறுத்தியது.

பஞ்சம் உடைந்துவிட்டதாகவோ அல்லது “நூற்றுக்கணக்கான உதவி லாரிகள்” உள்ளே நுழைந்துள்ளதாகவோ கூறி,

காசாவிற்கு வெளியே சில ஆர்வலர்கள் பரப்பும் கூற்றுகளையும் அலுவலகம் பரிசீலித்தது, கூற்றுக்களை திட்டவட்டமாக மறுத்தது.

“இந்த கூற்றுக்கள் உண்மையில் எந்த அடிப்படையையும் கொண்டிருக்கவில்லை” என்று அறிக்கை வலியுறுத்தியது, அத்தகைய

கதைகள் இஸ்ரேலிய பிரச்சாரத்தை ஆபத்தான முறையில் எதிரொலிப்பதாகவும், நடந்து வரும் மனிதாபிமான குற்றத்தின் உண்மையை சிதைப்பதாகவும் எச்சரித்தது.

லெபனானில் இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

லெபனானில் இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதல்

லெபனானில் இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதல்

லெபனானில் இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதல் ,தெற்கு லெபனானில் இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் வீரமரணம்.

லெபனான் சுகாதார அமைச்சகத்தின்படி

லெபனான் சுகாதார அமைச்சகத்தின்படி, தெற்கு லெபனானில் உள்ள ஐதா அல்-ஷாப் நகரில் ஒரு வாகனத்தை குறிவைத்து இஸ்ரேலிய ட்ரோன் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இஸ்ரேலிய ட்ரோன் நடத்திய தாக்குதலில்

தெற்கு லெபனானில் உள்ள ஐதா ஆஷ் ஷாப் நகரில் ஒரு வாகனத்தின் மீது இஸ்ரேலிய ட்ரோன் நடத்திய தாக்குதலில் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

பின்ட் ஜபீல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஐதா அல்-ஷாப்பில் ஒரு வாகனத்தை குறிவைத்து இஸ்ரேலிய ஆட்சி ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ட்ரோன் தாக்குதலில் ஒருவர் வீரமரணம் அடைந்ததாக லெபனானின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

இஸ்ரேலிய ஆட்சி லெபனானில் தினசரி ஆக்கிரமிப்புகளையும் போர்நிறுத்த மீறல்களையும் தொடர்கிறது, மனிதாபிமான அல்லது நெறிமுறைக் கொள்கைகளை மதிக்கவில்லை.

தாய்லாந்து கம்போடிய மோதல்
Posted in உலக செய்திகள்

தாய்லாந்து கம்போடிய மோதல்

தாய்லாந்து கம்போடிய மோதல்

தாய்லாந்து கம்போடிய மோதல் ,தாய்லாந்து-கம்போடிய மோதல்களில் பதினைந்து பேர் கொல்லப்பட்டனர், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

கம்போடியா எல்லையில் நடந்த மோதல்களில்

தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லையில் நடந்த மோதல்களில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

கம்போடியாவுடனான எல்லையில் நடந்த ஆயுத மோதல்களில் தாய்லாந்தில் ஒரு சிப்பாய் உட்பட குறைந்தது 15 பேர்

கொல்லப்பட்டனர் மற்றும் 46 பேர் காயமடைந்தனர் என்று தாய் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுரின் மாகாணத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்

அந்த நிறுவனத்தின்படி, சுரின் மாகாணத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர், சிசாகெட் மாகாணத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

டாஸ் செய்தி நிறுவனத்தின்படி, உபோன் ரட்சதானி மாகாணத்தில் ஒரு குடிமகனும் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

கம்போடியாவின் ஒட்டார் மீஞ்சே மாகாணத்தில் உள்ள சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிக்கு அருகில் ஜூலை 24 ஆம் தேதி காலை மோதல்கள் வெடித்தன.

ஈரான் ஏவுகணைகள் உலகின் சாதனை
Posted in உலக செய்திகள்

ஈரான் ஏவுகணைகள் உலகின் சாதனை

ஈரான் ஏவுகணைகள் உலகின் சாதனை

ஈரான் ஏவுகணைகள் உலகின் சாதனை ,ஈரான் ஏவுகணைகள் உலகின் மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகளை கடந்து சென்றன.

ஈரானிய ஏவுகணைகள் உலகின் மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு

12 நாள் இஸ்ரேல் விதித்த போரின் போது ஈரானிய ஏவுகணைகள் உலகின் மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் வழியாக சென்றதாக ஈரானிய

ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் அபோல்பஸ்ல் ஷேகார்ச்சி கூறுகிறார்.

கோமில் நடந்த ஒரு விழாவில், பிரிகேடியர் ஜெனரல் அபோல்பஸ்ல் ஷேகார்ச்சி, போரின் முதல் இரவில் முக்கிய தளபதிகளை இழந்த போதிலும்,

ஈரானின் விண்வெளிப் படை மேற்கத்திய ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர்த்து, ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் ஆழமாகத் தாக்கியது என்று கூறினார்.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படை

“நடவடிக்கையின் முதல் இரவில் முதல் அடுக்கு கட்டளையின் தியாகம் இருந்தபோதிலும், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் விண்வெளிப்

படைகள் தலைவரின் ஞானத்துடனும் விரைவான மறுகட்டமைப்புடனும் உலகின் மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகளைக் கடந்து செல்வதில் வெற்றி பெற்றன,” என்று அவர் கூறினார்.

ஈரானிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ள அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான போர் விமானங்கள்,

மேம்பட்ட ரேடார்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு 1,200 கிலோமீட்டர் பாதையில் நிறுத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், ஈரானிய ஏவுகணைகள் இந்த பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டிச் சென்று, ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் வடக்கிலிருந்து தெற்கே உள்ள இலக்குகளைத் தாக்கின.

ஷெகார்ச்சியின் கூற்றுப்படி, அமெரிக்காவின் முழு ஆதரவுடன், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட மேம்பட்ட மேற்கத்திய ஆயுதங்களைப் பயன்படுத்தி,

சியோனிச ஆட்சி, மூத்த இராணுவத் தளபதிகளைக் கொன்று, நாட்டை துண்டு துண்டாகப் பிரிப்பதன் மூலம் ஒரு வாரத்திற்குள் ஈரானின் உள்கட்டமைப்பை குறிவைக்க திட்டமிட்டது.

புதிய கல்விச் சீர்த்திருத்தம்
Posted in இலங்கை செய்திகள்

புதிய கல்விச் சீர்த்திருத்தம்

புதிய கல்விச் சீர்த்திருத்தம்

புதிய கல்விச் சீர்த்திருத்தம் ,உத்தேச கல்வி சீர்திருத்தம் வெறும் பாடத்திட்டத்தை திருத்துவதற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும், அதே நேரத்தில் நாட்டின் முழு சமூக மட்டத்தையும் பொருளாதார

மட்டத்தையும் ஒரேயடியாக உயர்த்தும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

அரசியல் நோக்கிலான திட்டமன்றி ஒரு சமூக நோக்கம்

இது ஒரு அரசியல் நோக்கிலான திட்டமன்றி ஒரு சமூக நோக்கம் கொண்டது என்பதால் அதற்கு ஆதரவளிக்குமாறும் ஜனாதிபதி கோரினார்.

எந்தவொரு பிள்ளையும் 13 வருட கட்டாயக் கல்வியை எந்த காரணத்திற்காகவும் நிறைவு செய்யாமல் பாடசாலையை விட்டும் செல்லக் கூடாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று (24) நடைபெற்ற கல்வி சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முழு உரை:

கல்வி சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்தில் பல விடயங்களை முன்வைக்க நம்புகிறேன். இந்த கல்வி முறையின் ஊடாக உருவாக்கப்பட்டுள்ள இளம் தலைமுறை மற்றும் இந்த கல்வி முறை உருவாக்கிய பொருளாதாரம் குறித்தும்

நம்மில் யாரும் திருப்தி அடைய முடியாது. எனவே, எங்களுக்கு மிகவும் விரிவான கல்வி சீர்திருத்தம் அவசியம். கல்வி சீர்திருத்தம் குறித்த கலந்துரையாடல் எழுந்தபோது, வரலாறு சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா

போன்ற பிரச்சினைகளைப் பற்றி ஆராயத் தொடங்கினோம். உண்மையில், இது பாடத்திட்டத்தின் திருத்தம் செய்வது தொடர்பான சீர்திருத்தம் மட்டுமல்ல.

இது நமது முழு சமூகம், பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் நமது நாட்டின் புதிய மாற்றத்திற்கான ஒரு புதிய கல்வி சீர்திருத்தமாகும். பொருளாதார ரீதியாக, மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் நமது நாடு உலகில் சுமார்

38 ஆவது இடத்தில் உள்ளது. அதன்படி, நாம் அதிக மக்கள் தொகை அடர்த்தியைக் கொண்ட நாடாகும். நமது மக்கள் தொகை அடர்த்தி சீனாவை விட அதிகமாக உள்ளது.

இயற்கை வளங்களைப் பொறுத்தவரை, நமக்கு பெரிய வணிக வளங்கள் குறைவாக உள்ளன. எண்ணெய், எரிவாயு, தங்கச் சுரங்கம், போன்றவை எம்மிடம் இல்லை. எனவே, நம்மிடம் உள்ள மிகவும் மதிப்புமிக்க வளமாகவும்

இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு கூர்மைப்படுத்தப்பட்டு மெருகூட்டப்பட வேண்டிய வளமாக இந்த மனித வளம் காணப்படுகிறது. எனவே, நமது பொருளாதார மூலோபாயங்களில், இந்த மனித வளத்தை மேம்படுத்துவதன்

மூலம் நமது நாட்டை எவ்வாறு உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வது என்பதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பொதுவாக, தொழில்வாய்ப்பிற்காக வெளிநாடு செல்வோர் வீட்டுப் பணிப்பெண்கள், பயிற்றப்படாத, பாதியளவு பயிற்றப்பட்ட, பயிற்றப்பட்டவர்கள் என தொழில்முறையில் வகைப்படுத்துகிறோம்.

தொழில் ரீதியாக, நமது வெளிநாடு செல்லும் தொழிலாளர்களில் சுமார் 3% பேர் மட்டுமே தொழில்முறையான வேலைகளில் பிரவேசிக்கின்றனர்.

97% பேர் பயிற்றப்பட்ட, பயிற்றப்படாத மற்றும் பாதியளவு பயிற்றப்பட்டவர்களாகும். அதிலும் உலகில் இரண்டு சந்தைகள் இருப்பதைக் காணலாம். பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஒரு சந்தை உள்ளது.

உலகில் ஒரு தொழிலாளர் சந்தை உள்ளது. உலகின் மிகக் கீழ்மட்டத்திலுள்ள தொழிலாளர் சந்தைகளில் ஒன்றை நாம் அடைந்துள்ளோம்.

எனவே, பொருளாதார ரீதியாக, உலகில் ஒரு முன்னேற்றகரமான தொழிலாளர் சந்தையை நாம் அடைய வேண்டும். அதற்காக சிறந்த, உலகில் அந்த சமயத்தில் வெளிப்படும் அறிவைப் பெற்ற, பகிர்ந்து கொள்ளும் கல்வி முறை

நமக்குத் தேவை. மறுபுறம், சமூக ரீதியாக நோக்கினால், நமது கல்வியறிவின்மையும் வறுமையும் ஒன்றாகச் செல்கின்றன.

நீங்கள் கல்வியறிவற்றவராக இருந்தால், நீங்கள் குறிப்பிட்டளவு ஏழையாக இருப்பீர்கள்.

எனவே, வறுமையை ஒழிப்பதற்கான திட்டமாக நோக்கினால் கல்வி அதை ஒழிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒரு குடும்பத்தில் ஒருவர் கல்வி கற்றால், முழுக் குடும்பமும் மீட்சி பெறும் என்று நம் கிராமங்களில் பொதுவாகக் கூறுவார்கள்.

எனவே, இந்த வறுமையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள கல்வி மிகவும் முக்கியமானது.

மறுபுறம், நம் நாட்டில் குற்றம். சிறையில் உள்ளவர்களில் சுமார் 80% பேர் சாதாரண தர மட்டத்தை விடக் கீழ் மட்டத்தில் உள்ளனர்.

போதைக்கு அடிமையானவர்களில் சுமார் 70% பேர் எட்டாம் வகுப்பை விட குறைவாக கற்றவர்களாக உள்ளனர்.

அதன்படி, இந்த சமூகக் குற்றங்களுக்கும் போதைப்பொருள் மற்றும் கல்விக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது.

எனவே, இந்த பொருளாதார தேகத்திலும் இந்த சமூகத்திலும் சிறந்த மாற்றத்தை நாம் எதிர்பார்ப்பதாக இருந்தால், கல்விதான் அந்த மாற்றத்தின் வேர், ஆரம்பம், அடித்தளம் கல்வியாகும்.

அதனால்தான் இந்தக் கல்வியின் விரிவான மாற்றத்தின் அவசியத்தை எங்கள் கொள்கைப் பிரகடனத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம்.

முதலில், இந்தக் கல்வியில் உள்ள சிக்கல்களின் அளவை நாம் அடையாளம் காண வேண்டும்.

ஏனென்றால் பொதுவான சமூகத்தில் இல்லாத பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு தேடுவதில் பலனில்லை. நமது கல்வி தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு நாம் தீர்வு காண வேண்டும்.

அதன்படி, எமது பிள்ளைகள் பாடசாலைகளை விட்டும் செல்வது முக்கிய சிக்கலாகும். 2019 ஆம் ஆண்டில் சுமார் 16,673 மாணவர்கள் பாடசாலைகளை விட்டுச் சென்றுள்ளனர்.

2022 ஆம் ஆண்டில் 20,759 பேர் பாடசாலைகளை விட்டுச் சென்றுள்ளதோடு 2024 ஆம் ஆண்டில் 20,755 பேர் இவ்வாறு சென்றுள்ளனர்.

அதாவது, அவர்கள் இன்னும் கற்க வேண்டியிருக்கும் நிலையில் பாடசாலையை விட்டு வெளியேறுகிறார்கள்.

அதாவது, 13 வருட கட்டாயக் கல்வியை நிறைவு செய்யாமல் எந்தப் பிள்ளையும் பாடசாலையை விட்டு வெளியேறக்கூடாது.

மேலும், 2006 ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகள் 2011 ஆம் ஆண்டில் பாடசாலை சென்றனர். 2011 ஆம் ஆண்டில், 358,596 பிள்ளைகள் பாடசாலை சென்றனர்.

அந்தப் பிள்ளைகள் 2021 ஆம் ஆண்டில் சாதாரண தரப் பரீட்சையை எதிர்கொண்டனர்.

ஆனால், மூன்று இலட்சத்து பதினொறாயிரம் மாணவர்கள் மட்டுமே சாதாரண தரப் பரீட்சையை எதிர்கொண்டுள்ளனர்.

அதன்படி, சுமார் 47,000 பேர் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர். இந்தப் பிள்ளைகளைப் பாதுகாக்க, 13 வருட கட்டாயக் கல்வியை வழங்குவதற்கு கல்வி சீர்திருத்தங்கள் தேவை.

நமது பிள்ளைகள் பாடசாலை செல்வதைப் பாதியில் நிறுத்தக்கூடாது. எந்தப் பிள்ளையும் அந்த நிலை ஏற்படக் கூடாது.

அவர்களின் பொருளாதார பின்னணி, பெற்றோரின் மோதல்கள், பெற்றோர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது, பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் போன்றவை பிள்ளைகள் பாடசாலையை விட்டு வெளியேறுவதற்கு காரணமாக

அமைந்துள்ளன. நாங்கள் கல்வித் திட்டத்தை உருவாக்கும் அதே வேளையில், மாணவர் ஒருவர் தொடர்ந்து மூன்று நாட்கள் பாடசாலைக்கு செல்லவில்லை என்றால், ஒரு அரச அதிகாரி அந்தப் பிள்ளையை நேரில் சென்று விசாரிக்க

வேண்டும். ஒவ்வொரு பிள்ளையும் 13 ஆண்டுகள் கல்வி கற்கும் வரை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். அந்த பரிந்துரையும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, நம் நாட்டில் உயர்கல்வி பெரும்பாலும் கலந்துரையாடலுக்குரியதாக உள்ளது. ஆனால் நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை பாடசாலைக் கல்வி முறையில் உள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஒரு

மாணவர் கூட சேர்க்கப்படாத 98 பாடசாலைகள் உள்ளன. 10 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 115 பாடசாலைகளும் உள்ளன. 20 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 406 பாடசாலைகள் உள்ளன. 30 க்கும் குறைவான

மாணவர்களைக் கொண்ட 752 பாடசாலைகள் உள்ளன. 40 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 1141 பாடசாலைகள் உள்ளன. 50 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 1506 பாடசாலைகள் உள்ளன.

இது மொத்த பாடசாலைக் கட்டமைப்பில் சுமார் 15% ஆகும்.

அதுமட்டுமல்லாமல், 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 3144 பாடசாலைகள் உள்ளன. அரச பாடசாலைகளில் ஏறத்தாழ 1/3 பங்கு 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ளன.

இந்த நிலைமை நல்லதா? இந்தப் பாடசாலைகளில் இலக்கிய விழா, விளையாட்டுப் போட்டி, சுற்றுலா அல்லது சம வயது பிள்ளைகளுடன் பழகுவது போன்ற எதுவும் நடப்பதில்லை.

எனவே, இந்தப் பாடசாலைக் கட்டமைப்பு குறித்து மீண்டும் மீளாய்வு செய்ய வேண்டும். நாம் நிச்சயமாக இது தொடர்பில் முடிவு எடுக்க வேண்டும்.

சில பாடசாலைகள் மூடப்பட வேண்டும். சில பாடசாலைகள் இணைக்கப்பட வேண்டும். சில பகுதிகளில் புதிய பாடசாலைகள் தொடங்கப்பட வேண்டும். பாடசாலைகள் நிலைநிறுத்துவது குறித்து நாம் பரிசீலிக்க வேண்டும்.

ஒரு பிள்ளை ஒரு புதிய சமூகத்தையும், புதிய அனுபவங்களையும், புதிய வாய்ப்புகளையும் பெற வேண்டும்.

ஒரு சமூக சூழ்நிலையில் உள்ள பிள்ளைகள் கிராமத்திலிருந்து பாடசாலைக்கு, பாடசாலையிலிருந்து கிராமத்திற்கு என காணமல் போய்விடுகின்றனர் எந்தப் பிள்ளைக்கும் இத்தகைய நிலை ஏற்படக்கூடாது.

தங்கள் பிள்ளையை கிராமப் பாடசாலைக்கு அனுப்பாத சில பெற்றோர்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளை நகரப் பாடசாலைக்கு அனுப்ப போராடுகிறார்கள்.

ஆனால், அவர்கள் கிராமப் பாடசாலையைத் தக்க வைத்துக் கொள்ளவும் போராடுகிறார்கள். அதன் அர்த்தம் என்ன? ஒவ்வொரு பாடசாலையாகச் சென்று அந்த பாடசாலை குறித்து ஆராய்வது தொடர்பில் கல்வி அமைச்சுடன் நீண்ட கலந்துரையாடல் நடத்தியுள்ளோம்.

போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஏனென்றால், கட்டிடங்கள் மற்றும் மனித வளங்கள் இருந்தாலும், பாடசாலையில் 10 மாணவர்கள் இருந்தால், அந்தக் பிள்ளைகள் நகரப் பாடசாலைக்குச் செல்வதற்கு பஸ் வசதியை வழங்குவது பயனுள்ளதாக இருக்கும்.

பாடசாலைக் கட்டமைப்பில் எழுந்துள்ள சிக்கலை மேலும் ஆராய்ந்தால், இங்கு எவ்வளவு மனித வளங்கள் வீணடிக்கப்படுகின்றன? நமது நாட்டில் சராசரி ஆசிரியர் – மாணவர் விகிதம் 1:18 ஆகும். அந்த விகிதம் மிகவும் உகந்த

விகிதமாகும். ஆனால் இன்றும் கூட,சில மாவட்டங்களுக்குச் சென்று பார்த்தால், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. 50 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் விகிதம் 1:5 ஆகும். ஹம்பாந்தோட்டையில், ஒரு

பாடசாலையில் 30 மாணவர்கள் உள்ளனர். 9 ஆசிரியர்கள் உள்ளனர். மனித வளங்கள் வீணடிக்கப்படுகின்றன. திருகோணமலை குச்சவெளி பகுதியில் ஒரு பாடசாலை உள்ளது. இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இரண்டு ஆசிரியர்கள்

உள்ளனர். பண்டாரவளை ஹல்துமுல்ல கல்விப் பிரிவில் மூன்று பிள்ளைகள் மற்றும் மூன்று ஆசிரியர்களைக் கொண்ட ஒரு பாடசாலை உள்ளது.

திருகோணமலையில் உள்ள மற்றொரு பாடசாலையில் நான்கு பிள்ளைகள் மற்றும் நான்கு ஆசிரியர்கள் உள்ளனர். இந்த பிள்ளைகளுக்கு எந்த பிரதிபலனும் இல்லை. ஆசிரியர்களுக்கும் எந்த பிரதிபலனும் இல்லை.

எமது இந்த கல்வி சீர்திருத்தத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு பிள்ளைக்கும் உகந்த அளவிலான பாடசாலைக் கல்வியை வழங்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது.

இந்தக் கல்வி சீர்திருத்தத்தின் மூலம், இந்த நாட்டில் பாடசாலைக் கட்டமைப்பை மறுபரிசீலனை செய்வது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். அது இங்கே ஒரு முக்கியமான காரணியாகும்.

வசதிகளுடன் கூடிய பாடசாலை, தேவையான மனித வளங்களைக் கொண்ட பாடசாலை, அவர்கள் வாழும் சூழலைத் தாண்டி சமூக செயல்பாடுகளைக் கொண்ட ஒரு பாடசாலை பிள்ளைகளுக்கு அவசியம். அப்படிப்பட்ட பாடசாலை

தேவையில்லையா? நமது கல்வி குறிப்பிடத்தக்க அளவிற்கு எமது பிள்ளைகளை இயந்திரமயமாக்கியுள்ளது. இன்று, கிராமங்களில் கரப்பந்தாட்ட மைதானம் கூட இல்லை.

அறுவடை முடிந்ததும், வயல்களில் எல்லே விளையாடுவார்கள். கிராமத்தின் குளங்களில் நீந்துகிறார்கள். வெசாக் பண்டிகையின் போது, கிராமத்தின் பிள்ளைகள் ஒன்றுகூடி, சித்திரங்கள் வரைந்து தோரணங்கள் போடுவார்கள்.

இன்றைய பிள்ளைகளிடையே இதுபோன்ற செயல்பாடுகள் காணப்படுவதில்லை.

இயந்திரங்களைப் போன்ற பிள்ளைகளை நாம் வளர்க்க விரும்புகிறோமா

இயந்திரங்களைப் போல, ஈரம் இல்லாத, இரக்கம் இல்லாத, சமூகத்தின் மீதான பொறுப்பற்ற ஒரு தலைமுறை இன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது பிள்ளைகள் எமது காலத்தைப் போன்று இல்லை என்று சில நேரங்களில் பெற்றோர்கள் சொல்வதைக் கேட்கிறேன்.

அது உண்மைதான். எமது காலத்தைப் போன்று, அதை விடச் சிறந்த பிள்ளைகள் இருக்க வேண்டும். டியூஷன் அதிகாலை 4 மணிக்குத் தொடங்குகிறது.

வகுப்புகள் முடிந்த பிறகுதான் அவர்கள் பாடசாலைக்குச் செல்கிறார்கள். அந்த பிள்ளையின் வாழ்க்கை எப்படிப்பட்டது? பாடசாலைக்குப் பிறகு அவர்கள் மீண்டும் வகுப்பிற்குச் செல்கிறார்கள்.

அந்தக் பிள்ளைக்கு ஒரு பிள்ளைப் பருவம் தேவை இல்லையா? ஒரு கவிதையையோ பாடலையோ இரசிக்காத, ஒரு நாவலைப் படிக்காத, இலக்கியத்தால் வளர்க்கப்படாத, எந்த சமூக செயல்பாடும் இல்லாத

இயந்திரங்களைப் போன்ற பிள்ளைகளை நாம் வளர்க்க விரும்புகிறோமா

இயந்திரங்களைப் போன்ற பிள்ளைகளை நாம் வளர்க்க விரும்புகிறோமா? இது போன்ற ஒரு நாடு முன்னோக்கிச் செல்ல முடியாது.

இந்தப் பிள்ளையின் மீது சுமத்தப்பட்டுள்ள கல்விச் சுமையைக் குறைக்க வேண்டும், அது நமது பொறுப்பு. பிள்ளை எழுப்பும்போது தூக்கம்,

வாகனத்திலும் தூக்கம்,பாடசாலையிலும் தூக்கம். அந்தப் பிள்ளைகள் பாவம் இல்லையா? ரோபோக்கள் போல வளர்க்கப்படும் பிள்ளைகளின் தலைமுறையை நாம் மாற்ற வேண்டாமா?

பிள்ளைக்கு சுறுசுறுப்பான வாழ்க்கையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், முழுமையான கல்வி, பாடவிதானம், கற்பித்தல், அதற்கு உள்ள எடை மற்றும் அளவை நிர்ணயம் செய்தல் ஆகியவற்றில் சீர்திருத்தங்களை நாம் கொண்டு வருவோம்.

பாடசாலையில் சேரும் பிள்ளைகளில் பெரும்பாலானோர் வைத்தியராகவோ, பொறியியலாளராகவோ மாற ஆசைப்படுகிறார்கள். கல்வி என்பது ஒற்றை நேர்கோட்டுப் பாதை அல்ல.

சமூக மரியாதை மற்றும் தொழில்முறை மதிப்பு

கல்வி என்பது ஒரு பரந்த பாதை. ஆனால் என்ன நடந்துள்ளது? சமூக மதிப்புகள், சமூக மரியாதை மற்றும் தொழில்முறை மதிப்புகள் என இரண்டு அல்லது மூன்று துறைகளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளை ஒரு நல்ல வாழ்க்கையை வாழவேண்டுமானால், அவர்கள் ஒரு மருத்துவராகவோ அல்லது பொறியியலாளராகவோ மாற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

உங்கள் குடும்பத்தை கௌரவிக்க, அவர்கள் ஒரு மருத்துவராகவோ அல்லது பொறியாளராகவோ மாற வேண்டும் என்று நினைப்பது தவறு. மருத்துவர் அல்லது பொறியாளாலரிடம் ஒரு சமூகம் தங்கியில்லை.

பல்வேறுபட்ட தொழிற்துறைகளின் கூட்டாகவே ஒரு சமூகம் இருக்கிறது. இந்த சமூகத்திற்கு சகல துறையிலும் தொழில்வாண்மை தேவை. ஒவ்வொரு தொழிலுக்கும் தொழில்வாண்மை வழங்கப்பட வேண்டும்.

பாதைகள் பரந்து விரிந்துள்ளன, இந்தப் பல பாதைகள் வழியாக நாம் பிளை்ளையை தொழில்வாண்மை நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

நமது கல்வி சீர்திருத்தங்கள் அந்த இலக்கைக் கொண்டுள்ளன. ஒரு பிள்ளை பின்பற்ற ஒரு பாதை தேவை.

இன்று எது பாதையாக மாறியுள்ளது? ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் இடையிலான கலந்துரையாடல் இல்லாமல் ஒரு பிள்ளை ஒரு பாதையைப்

புரிந்து கொள்ள முடியாது. இன்று, பாதைகள் என்பது அதிக சமூக மதிப்புள்ள விடயங்களைக் கற்றுக்கொள்வதாக மாறிவிட்டன.

மருத்துவ பீடத்திற்கு செல்ல முடியாத பிள்ளை விவசாய பீடத்திற்கு வருகிறது. மருத்துவராக முடியாததால் தான் அவர் ஒரு விவசாய விஞ்ஞானியாக மாறுகிறார். இன்று, சாதாரண தரத்திற்கும் உயர் தரத்திற்கும் இடையே ஒரு

பாரிய இடைவெளி உள்ளது. கல்வி சீர்திருத்தத் திட்டம் 2026 ஆம் ஆண்டு முதல் 06 ஆம் வகுப்பில் ஆரம்பிக்கிறது, 2027 ஆம் ஆண்டில் 07 ஆம் வகுப்பில், 2028 ஆம் ஆண்டில் 08 ஆம் வகுப்பு மற்றும் 2029 ஆம் ஆண்டில் 09 ஆம் வகுப்பில்

தொடங்கும். 9 ஆம் வகுப்புக்கு இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. இந்த சீர்திருத்தங்கள் 2026 இல் தொடங்கினால், 2029 இல் தான் தெரிவுப் பாதை பற்றிய கலந்துரையாடல் ஆரம்பிக்கும். மனித நாகரிகத்தைப் படிக்கும் ஒரு

வரலாற்றாசிரியராக மாறுவதற்கும் வழி இருக்கிறது. மதங்களைப் பற்றிய ஆழமான அறிவைக் கொண்ட ஒரு பிரஜையை உருவாக்குகிறது. அவ்வாறு

அல்லவா தேவைப்படுகின்றது? ஒவ்வொரு பிள்ளையும் புவியியல், சமூகவியல், மதங்கள் மற்றும் வரலாறு பற்றி அடிப்படை அடித்தளங்களைப் பெறுகிறது.

இருப்பினும், அதையும் தாண்டிய ஒரு விசேட அறிவை நாம் உருவாக்க வேண்டும். அதற்கு ஒரு வழி இருக்கிறது.

கிராமங்களில், மக்கள் தங்கள் பிள்ளைகள் உயர் தரம் வரை படித்தால் போதும் என்று நினைக்கிறார்கள். அந்தப் பெற்றோர்கள் உயர் தரம் என்பது தங்கள் பிள்ளையின் கல்வியின் இறுதி நிலை என்று நினைக்கிறார்கள்.

உயர் தரம் என்பது கல்வியின் இறுதி நிலை அல்ல. அதற்கு அப்பால், ஒரு தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். உயர் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

தற்போதுள்ள தொழில் பயிற்சி கல்வி நிறுவனங்கள் நவீன உலகுக்கு ஏற்றதாக இல்லை.

சில தொழிற்கல்வி மையங்கள் தச்சுப் பட்டறைகள் போன்றவை. இரும்பு பட்டறைகள் போன்றவை. அப்படிப்பட்ட இடத்துக்கு பிள்ளைகள் வருவதில்லை.

அரசின் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் பிள்ளைகள் எத்தனை பேர் இறுதி வரை படித்துள்ளனர் என கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இது மிகவும் சிறிய எண்ணிக்கையாக இருக்கும்.

பலர் தொழிற்பயிற்சி கல்விக்கு வந்து மூன்று நான்கு மாதங்கள் கழித்து விட்டு விடுகின்றனர். பல்கலைக் கழகத்தில் படிக்கும் பிள்ளைக்கும், தொழிற்பயிற்சி மையத்தில் சேரும் பிள்ளைக்கும் ஒப்பீட்டு ரீதியில் வேறுபாடு உள்ளது.

தொழிற் பயிற்சி நிலையம் பல்கலைக் கழகப் பட்டம் பெற முடியாதவர்களுக்கான இடம் அல்ல. தொழில் பயிற்சி என்பது தெரிவுக் கல்வி அல்ல. அடிப்படைக் கல்வி என்பது எங்கள் கொள்கை ஆகும்.

2033க்குள் அறிவு மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய 40 நவீன தொழில் பயிற்சி மையங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

ஒரு மாவட்டத்திற்கு இரண்டு அமைக்கப்படும். 13 வருட கல்விக்குப் பிறகு, பிள்ளைக்கு திறந்த தொழிற்கல்விக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

13 வருட கல்வியில் இருந்து எந்த ஒரு பிள்ளையும் வெளியேறவோ அல்லது கல்வியில் தொலைந்து போகவோ நாங்கள் இடமளிக்க மாட்டோம்.

சராசரியாக, ஒரு பிள்ளை 13 ஆண்டுகள் பாடசாலைக்குச் செல்கிறது. ஒரு ஆசிரியர் 30 ஆண்டுகள் பாடசாலைக்குச் செல்கிறார்.

என்னுடன் உயர்தரம் படித்தவர்கள் இன்னும் பாடசாலைக்குச் செல்கிறார்கள். எனவே, இந்த நவீன கல்வியை வழங்குவதற்குத் தேவையான அறிவும் அனுபவமும் நம்மிடம் உள்ளதா என்பதை நாம் மறுபரிசீலனை செய்ய

வேண்டும். ஆசிரியர்களிடம் உள்ள அறிவு போதுமானதாக இல்லை. அவர்களின் அறிவு புதுப்பிக்கப்படவில்லை. பிறகு எப்படி ஒரு நவீன பிள்ளையை உருவாக்க முடியும்? அதற்கு, நமக்கு ஒரு வலுவான ஆசிரியர்கள்

தலைமுறை தேவை. இந்தக் கல்வியில் பிள்ளைகளுக்கு சுதந்திரமும் இல்லை. ஆசிரியர்களுக்கு சுதந்திரமும் இல்லை.

எனவே, கல்வியில் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு தரமான மாற்றம் தேவை. எனவே, ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டமும் தொடங்கப்படும். அப்போது நாம் மேலதிகமான

ஆசிரியர்களை வைத்திருக்க வேண்டும். தற்போதுள்ள ஆசிரியர் மனித வளங்களை நாங்கள் முகாமைத்துவம் செய்வோம். பாடங்களை அரசியல்வாதிகள் தேர்வு செய்யக்கூடாது. அது கல்வி சீர்திருத்தத்திற்குத்

தேவையான நிபுணர்களால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களின்படி செய்யப்படும் ஒன்று. பாடங்களைத் தேர்ந்தெடுக்கும் சீர்திருத்தத்தை கல்வி

நிபுணர்களிடம் நாம் ஒப்படைத்துள்ளோம். அரசியல் அதிகாரம் காலக்கெடுவையே நிர்ணயிக்க வேண்டும். வெற்றிகரமான கட்டமைப்பு மாற்றத்தை அடைய அரசியல் அதிகாரம் உள்ளது.

கல்வியில் என்ன மாதிரியான கட்டமைப்பு மாற்றம் தேவை என்பதை நாங்கள் விவாதிப்போம். அது குறித்த உள்ளடக்கம், பாடங்களுக்கான காலம் தொடர்பில் நாம் கவனத்தில் கொள்ளலாம். நாம் ஒவ்வொரு துறையிலும்

நிபுணர்கள் அல்ல. எனவே, நாம் அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைத்து இந்தப் பயணத்தில் ஈடுபட வேண்டும். இலங்கையின் பொருளாதார அமைப்பின் வலுவான இருப்புக்கு இந்தக் கல்வி சீர்திருத்த செயல்முறை

மிகவும் முக்கியமானது. எனவே, இந்தப் பணியை மேற்கொள்வதில் அனைத்து அரசியல் குழுக்களும் கைகோர்க்க வேண்டும். கிராமத்தில் இந்தக் கல்வி

முறையைத் தொடங்கும்போது, அதற்கு எதிரான குழுவில் இணையாது, நல்ல விடயங்களுடன் முன்னோக்கிச் செல்ல ஒத்துழைப்பு வழங்குங்கள்.

சில பாடசாலைகள் பாரிய கட்டிடங்களையும் பாரிய நடன அரங்குகளையும் கட்டியுள்ளன. ஆனால் அது கல்விக்கு பயனளிக்கவில்லை. ஒவ்வொரு பிள்ளைக்கும் உகந்த கல்வியை வழங்க, இந்த கல்வி முறை சீர்திருத்தப்பட

வேண்டும். தேசிய பாடசாலை கட்டமைப்பை விட மாகாண பாடசாலை கட்டமைப்பில் அரசியல் அதிகமாக நுழைந்துள்ளது. மாகாண பாடசாலைகளில் ஆசிரியர்கள் தங்கள் அரசியல் நடவடிக்கைகளுக்காக

இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். பிள்ளைகள் அரசியல் நலன்களுக்கு பலியாகிவிட்டனர். மாகாண பாடசாலைகளை விட தேசிய பாடசாலைகளுக்கு

அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்ற கருத்து பெற்றோர்களிடையே உள்ளது. இது மாற்றப்பட வேண்டும். எனவே, புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஒரு நல்ல கருத்தாடல் தோற்றுவிக்கப்பட வேண்டும்.

இலங்கையின் தற்போதுள்ள மனிதவளப் பிரச்சினை, தேவையான திறன் கொண்ட குழுக்கள் இல்லாமையாகும். தொழில்முறை அதிகாரிகள் இல்லை. எனவே, இந்த அரச அமைப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. சிறந்த

மனிதவளமும் தொழிற்படையும் தேவை. எனவே, இந்த கல்வி சீர்திருத்தம் உறுதியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இது ஒரு அரசியல் நோக்கம் அல்ல. இது ஒரு சமூக நோக்கம். அனைவரும் இதற்கு பங்களிக்க வேண்டும்.

விமான நிலையத்தில் கனடாபிரஜை கைது
Posted in இலங்கை செய்திகள்

விமான நிலையத்தில் கனடாபிரஜை கைது

விமான நிலையத்தில் கனடாபிரஜை கைது

விமான நிலையத்தில் கனடாபிரஜை கைது ,கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 400 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்களுடன்

கனடா பிரஜை

52 வயது கனடா பிரஜை ஒருவர் இன்று (25) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர், கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் கனடாவிலிருந்து கட்டாரின் தோஹா வழியாக கட்டுநாயக்கவிற்கு வந்திருந்தார்.

சந்தேகநபரின் பயணப் பொதிகளை சோதனையிட்டபோது

சந்தேகநபரின் பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, அதில் 12 கிலோ 196 கிராம் ஹஷீஷ் மற்றும் 5 கிலோ 298 கிராம் கொக்கேய்ன் ஆகிய போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.