Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் மேலும் பொலித்தீன் ,பிளாஸ்டிக் உற்பத்திகளை தடை செய்திட உத்தேசம்

இலங்கையில் மேலும் பொலித்தீன் ,பிளாஸ்டிக் உற்பத்திகளை தடை செய்திட உத்தேசம்

இலங்கையில் பொலித்தீன் ,மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதை தடுக்கும் புதிய

சட்டம் ஒன்று ஏற்படுத்த தீவிர கவனம் செலுத்த பட்டு வருகிறது ,

சுற்று புற சூழல் மற்றும் உயிரினங்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக இந்த கவனம் செலுத்த

பட்டு வருவதாக அதிகார வர்க்கம் தெரிவித்துள்ளது

    Posted in Uncategorized

    பிளாஸ்டிக் ,பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனைக்கு தடை.

    எதிர்வரும் ,மார்ச் 31 முதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனையை தடை செய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

    ஒருமுறை மாத்திரம் பயன்படுத்திவிட்டு அகற்றப்படுகின்ற பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல், மைக்ரோ இருபதுக்கும் குறைவான பொலித்தீன், பெட் போத்தல் (PET Bojttle) ,செம்போ பக்கெட், காட்டன் பட் மற்றும் காற்று நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்கள் என்பன இதனுள் அடங்கும்.

    இந்த பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பொருட்கள் அதிகமானவை சூழலுடன் சேர்வதியால் இந்நாட்டில் அதிகமாக சூழல் மாசடைவு ஏற்படுவதுடன், குடிநீர் மற்றும் நீர் மாசடைவதாகவும் தெரியவந்துள்ளது.

    எனவே இவ்வாறான பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் உற்பத்திகள் சிலவற்றை மார்ச் 31 முதல் இலங்கையில் உற்பத்தி செய்ய மற்றும் விநியோகிக்க தடை செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கு பதிலாக

    சூழலுக்கு உகந்த பொருட்களை அறிமுகப்படுத்து தொடர்பாக சுற்றாடல் அமைச்சு பல்வேறு பிரிவினர்களுடன் கலந்துரையாடியுள்ளது.

    இதன்படி கடந்த வாரம் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் பல தனியார் வியாபார நிறுவனங்களுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதில் இலங்கை பல

    முதல்தர ஹோட்டல்களில் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பாவனைக்கு பதிலான மாற்று பொருட்கள் பயன்படுத்தப்படுவது

    குறித்து வியாபாரிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.மேலும் அவர்கள் பயன்படுத்துகின்ற சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்கள் சிலவற்றை அமைச்சரிட் சமர்ப்பித்தனர்.

    இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, மார்ச் 31 ஆம் திகதியிலிருந்து தடை செய்யப்படுகின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களுடன்இ இந்த வருட இறுதிக்குள்

    மேலும் 350 உற்பத்திப் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்வதற்கு சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றார்.

    எனவே முடிந்தவரை சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர வியாபாரிகளிடம் கேட்டுக்கொண்டார்

    Home » பிளாஸ்டிக்
    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் பிளாஸ்டிக் பொலித்தின் உற்பத்திக்கு தடை – கோட்டா வேட்டை

    இலங்கையில் பிளாஸ்டிக் பொலித்தின் உற்பத்திக்கு தடை – கோட்டா வேட்டை

    ஒரு தடவை பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் உற்பத்திகளை தடை செய்வதற்கான வர்த்தமானி

    அறிவித்தல் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

    நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்த அறிவித்தலின் நகல் மேலதிக

    ஆலோசனைகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதன் கீழ், காதை குடைய பயன்படுத்தும் குச்சிகள், மிதக்கக்கூடிய விளையாட்டுப் பொருட்கள், 20 மில்லிலீற்றரை விட குறைந்த

    கொள்ளளவுடைய ஸஷே பக்கட்டுக்கள் முதலான ஆறு உற்பத்திகள் தடை செய்யப்படவுள்ளன.

    இந்தத் தடையை ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அமுல்படுத்தக்கோரி தாம் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்ததாக அமைச்சர் கூறினார். இதற்காக குறித்த

    பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியாளர்களுக்கு நிவாரண காலம் ஒன்றை வழங்க அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டது.

    அதேவேளை, அரசியல்வாதிகளுக்கு மண், மணல், கருங்கல் அகழ்வு அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில்லை என சுற்றாடல்

    அமைச்சு மேற்கொண்ட தீர்மானம் பற்றிய கேள்விக்கு, மக்கள் வாக்குகளால் ஆட்சிபீடம் ஏறும் அரசியல்வாதிகளுக்கு அத்தகைய

    காரியங்களுக்காக விண்ணப்பிக்கக்கூடிய தார்மீக உரிமை கிடையாதென அமைச்சர் பதிலளித்தார்.

    Posted in இலங்கை செய்திகள்

    பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

    பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

    எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு

    தடை விதிக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

    Cotton Bud-க்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிலான சிறிய குழாய்,

    ஷெஷே பக்கெட்கள் மற்றும் கிருமிநாசினி அடங்கிய சிறிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.

    இதற்கான மாற்றுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு

    சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.