Posted in இலங்கை செய்திகள்

சகல அரச ,தனியார்துறை சேவைகள் வழமைபோல் இயக்கம்

சகல அரச ,தனியார்துறை சேவைகள் வழமைபோல் இயக்கம்

நாடு திறக்கப்பட்டதையடுத்து இன்றிலிருந்து சகல அரச மற்றும் தனியார்துறை சேவைகள் வழமைபோல் இடம்பெறவுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கமைவாக இந்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவன சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென, அதன் தலைவர் வைத்தியர் சசீந்திர கமகே தெரிவித்தார்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைகளைப் பெறுவதற்கு முன்பு அதற்கான முற்பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக, றறற.வெஅi.டம எனும் அதன் உத்தியோகபூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய,
www.ntmi.lk இணையத்தளம் அல்லது கையடக்கத் தொலைபேசி ஊடாக 225 எனும் இலக்கத்தின் ஊடாகவும், 1225 தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் அதற்கான பதிவுகளைமேற்கொள்ள முடியும்.

இதேவேளை ,ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்களிலும் இன்று முதல் பொதுமக்களுக்கான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இருப்பினும் ஒரு நாள் சேவை முன்னெடுக்கப்படாதென ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கிராம அலுவலர்களால் உறுதிப்படுத்தப்பட்டு, உரிய பிரதேச செயலகத்தில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் அல்லது இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பில் அவசர தேவையின் அடிப்படையில்இ தேசிய அடையாள அட்டைகளைப் பெற விரும்புவோர் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அல்லது காலி மாகாண அலுவலகத்திற்கு வரும் பொருட்டு வாரத்தின் அலுவலக நாட்களில் உரிய பிரதேச செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள ஆட்பதிவு பிரிவின் மூலம் அல்லது கீழுள்ள தொலைபேசி இலக்கம் மூலம் முற்பதிவு செய்து நாளொன்றை பெறுவது அவசியமாகும் எனவும் ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

பத்தரமுல்ல தலைமை அலுவலகம் 0115 226 126ஃ 0115 226 100
வட மாகாண அலுவலகம் 024 222 7201
கிழக்கு மாகாண அலுவலகம் 065 222 9449
வடமேல் மாகாண அலுவலகம் 037 555 4337ஃ037 222 4337
தென் மாகாண அலுவலகம் 091 222 8348

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட மற்றும் வெரஹெர அலுவலகங்கள் மூலமான பொது மக்களுக்கான சேவைகள் கடந்த முதலாம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கை பயணிகளுக்கு தடை நீக்கம்

இலங்கை பயணிகளுக்கு தடை நீக்கம்

இலங்கை பயணிகளுக்கு கட்டார் அரசாங்கம் விதித்திருந்த தடையை நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 6 ஆம் திகதியில் இருந்து இலங்கை மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட சில நாட்டவர்கள் தமது நாட்டிற்குள் பிரவேசிக்கலாம் என கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.

12 வயதிற்கு மேற்பட்ட முழுமையாகத் தடுப்பூசி ஏற்றியவர்கள் 2 நாட்கள் தனிமைப்படுத்தலின் பின்னர் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கட்டார் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

Posted in Uncategorized

மனைவியை அடித்து கொன்ற கணவர் – சோகத்தில் உறைந்த கிராமம்

மனைவியை அடித்து கொன்ற கணவர் – சோகத்தில் உறைந்த கிராமம்

குடும்ப பிரச்சினை காரணமாக கணவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் களவஞ்சிக்குடி பகுதியில் பதிவாகியுள்ளது.

மஹிலுர் பகுதியை சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவரின் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்கும் சந்தர்ப்பத்தில் அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கணவன் கடந்த 14 ஆம் திகதி வௌிநாட்டில் இருந்து வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வௌிநாட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் அவர் குரல் பதிவு ஒன்றின் மூலம் மனைவியை கொலை செய்வதாக தெரிவித்திருந்ததாக உயிரிழந்த பெண்ணின் சகோதரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு திருமணமான 8 வருடங்கள் ஆவதுடன் 7 வருடமாக கணவர் வௌிநாட்டில் இருந்ததாகவும் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் களவஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    Posted in Uncategorized

    பேரூந்துகள் பறிக்க படும் – அவசர எச்சரிக்கை

    பேரூந்துகள் பறிக்க படும் – அவசர எச்சரிக்கை

    ஆசனங்களின் எண்ணிக்கையை மீறி, அதிகளவான பயணிகளை பஸ்களில் ஏற்றிச் சென்றால், குறித்த பஸ்களை மறு அறிவித்தல் வரை, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியதாகத் தெரிவித்த அவர், குறித்த பஸ்களின் அனுமதிப்பத்திரமும் இரத்துச் செய்யப்படும் என்றார்.

    மேலும் நேற்றைய தினம் மேல் மாகாணத்தில் 6,000 தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட வேண்டிய நிலையில், 900 பஸ்களே சேவையில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளதுடன், இதற்கான காரணம் பஸ்களில் சேவையில் ஈடுபட்டவர்கள்,தற்போது வேறு தொழில்களில் ஈடுபடுகின்றமையே காரணம் என்றார்.

    அத்துடன், 3,000 இ.போ.ச பஸ்கள் சேவையில் ஈடுபட தயார்படுத்தப்பட்ட நிலையில், 1,500 பஸ்களே சேவையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

      Posted in Uncategorized

      வவுனியாவில் மக்களை வாள் – கோடரியால் வெட்டிய கும்பல்

      வவுனியா – கோவில்குளம் பகுதியில், இளைஞர் குழு ஒன்று, வீதியால் செல்பவர்களை வழிமறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில், நால்வர் காயமடைந்துள்ளனர்.

      மதுபோதையில் நின்றிருந்த குறித்த நபர்கள், வீதியால் செல்பவர்களை தாக்கியதுடன், வீடுகள் சிலவற்றுக்குள் புகுந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.

      இதனால் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில், அவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

      சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனுக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற அவர், நிலைமை தொடர்பாக ஆராய்ந்ததுடன், தாக்குதலை மேற்கொண்டவர்களை கைதுசெய்யுமாறு, பொலிஸாருக்கு பணித்தார்.

      பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

        Posted in Uncategorized

        கொரனோ அட்டை – வெடிக்கும் சர்ச்சை

        கொரனோ அட்டை – வெடிக்கும் சர்ச்சை

        பொது இடங்களுக்குச் செல்லும்   போது  கொரோனா தடுப்பூசியின் இரண்டையும் பெறப்பட்டதாக உறுதிப்படுத்தப்படும் அட்டையை பொதுமக்கள் வைத்திருப்பதை கட்டாயமாக்குவதற்கான முடிவை, மேலும் தாமதப்படுத்தலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

         இரண்டு அளவுகளும் பெறப்பட்டதாகக் குறிப்பிடும் தடுப்பூசி அட்டையை, கட்டாயமாக்கப்பட்டு,  பரிசோதிக்கும் நடவடிக்கை செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

         எனினும், அத்தகைய சட்டத்தை ஒரே நேரத்தில் அமல்படுத்த முடியாது என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறினார்.

          Posted in Uncategorized

          வீட்டுக்குள் நுழைந்து நபரை அடித்து கொன்ற ரவுடிகள்

          வீட்டுக்குள் நுழைந்து நபரை அடித்து கொன்ற ரவுடிகள்

          வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

          பதுளை, லிதமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

          இரும்பு கம்பியால் குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

          தாக்குதலில் பலத்த காயமடைந்த நபரை பதுளை வைத்தியசாலையில் அனுமதித்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

          பதுளை, லிதமுல்ல பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

          சம்பவம் தொடர்பில் பதுளை பகுதியை சேர்ந்த 21, 24 மற்றும் 31 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.

            Posted in Uncategorized

            மனித உரிமைகள் குறித்த ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை இடையில் பேச்சு

            மனித உரிமைகள் குறித்த ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை இடையில் பேச்சு

            1. நல்லாட்சி, சட்டம் மற்றும் மனித உரிமைகள் குறித்த ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை செயற்குழு 2021 செப்டம்பர் 29ஆந் திகதி கொழும்பில் ஒன்று கூடியது.
            2. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கைக்கு இடையேயான வழக்கமான இருதரப்புப் பரிமாற்றங்களின் பின்னணியில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஒரு நாள் சந்திப்பின் போது, இருதரப்பு மற்றும் திறந்த சூழ்நிலையில், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சியைக் கடைபிடித்தல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தமது உறுதிப்பாட்டை இரு கூட்டாளர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பான பொதுவான நலன்கள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடியதுடன், சம்பந்தப்பட்ட விடயங்களில் ஒத்துழைப்பைத் தொடருவதற்கு ஒப்புக்கொண்டனர்.
            3. கோவிட்-19 தொற்றுநோயை நிர்வகிப்பதில் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் தமது அனுபவங்களைப் பரிமாறிக்கொண்டன. சமமான தடுப்பூசி மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு நன்மைகளை அளித்தல் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் கோவெக்ஸ் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அளித்த பங்களிப்பை இலங்கை பாராட்டியது.
            4. நீதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளடக்கத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியது. 20வது திருத்தம், நீதித்துறையின் சுதந்திரம், அதிகாரங்களைப் பிரித்தல் மற்றும் சுயாதீன நிறுவனங்களின் தற்போதைய பணிகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர். சுயாதீன நிறுவனங்களின் திறமையான செயற்பாட்டின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர்.
            5. அதிகாரிகள், துறைசார் வல்லுநர்கள் மற்றும் உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற சட்ட உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் ஆலோசனை செயன்முறைகள் ஆகியவற்றின் மூலம், நீதி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட விரிவான சட்ட சீர்திருத்தத் திட்டம் குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை வழங்கியது. இந்த முயற்சியில் பரந்த ஆலோசனை செயன்முறையொன்றை பரிசீலினை செய்வதற்குஇலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் ஊக்குவித்தது.
            6. சிவில் சமூகத்தை ஈடுபடுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் அதன் அனைத்து பன்முகத்தன்மையிலும் செயற்படத் தேவையான இடத்தை வழங்குவதை ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஒப்புக்கொண்டன. இந்த முயற்சிகளில் இலங்கையை தொடர்ந்தும் ஆதரிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது தயார்நிலையை வெளிப்படுத்தியது.
            7. சிறுபான்மையினர் தொடர்பான விடயங்கள் மற்றும் வெறுப்புணர்வைத் தீர்க்கும் நடவடிக்கைகள் குறித்து செயற்குழு கலந்துரையாடியது. அனைத்து சமூகங்களினதும் உரிமைகளுக்கும் அரசியலமைப்பால் சமமாக உத்தரவாதமளிக்கப்படும் நாட்டின் பன்முக அமைப்பை இலங்கை முன்னிலைப்படுத்தியது.
            8. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கான நடவடிக்கை குறித்த அறிவிப்பை இலங்கை வழங்கியதுடன், சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப காலவரையறையொன்றுக்குள் கொண்டுவருவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் அடுத்த சந்திப்பின் மூலம் இது தொடர்பான முன்னேற்றத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஒப்புக்கொண்டன. பயங்கரவாதம் மற்றும் வன்முறைத் தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் போது சர்வதேச விதிமுறைகள் மற்றும் மனித உரிமைகளின் தரங்களை நிலைநிறுத்த வேண்டியதன் அவசியமும் சுட்டிக் காட்டப்பட்டது.
            9. அனைத்து சூழ்நிலைகளிலும் மரண தண்டனைக்கான தனது எதிர்ப்பை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியது. தொடர்ச்சியான தடையை வரவேற்ற ஐரோப்பிய ஒன்றியம், மரண தண்டனையை முறையாக ஒழிக்க நடவடிக்கை எடுப்பதற்காக இலங்கையை ஊக்குவித்தது.
            10. உடன்படிக்கை அமைப்புக்கள், சிறப்பு நடைமுறைகள் மற்றும் உலகளாவிய காலாந்தர மீளாய்வு உட்பட மனித உரிமைகள் பேரவையுடனான ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர். ஐக்கிய நாடுகள் கட்டமைப்பில் 2030ஆம் ஆண்டுக்குள் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வது உட்பட, பலதரப்பு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பணியாற்றுவதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
            11. இலங்கை வெளிநாட்டு அமைச்சின் ஐரோப்பா பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி. மனிஷா குணசேகர மற்றும் ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவர் திரு. இயோனிஸ் கியோகரகிஸ்-ஆர்கிரோபோலஸ் ஆகியோர் இந்த செயற்குழுவிற்கு இணைத்தலைமை தாங்கினர்.
            Posted in உலக செய்திகள்

            கொரனோவுக்கு அமெரிக்காவில் 7 லட்சம் பேர் மரணம்

            கொரனோவுக்கு அமெரிக்காவில் 7 லட்சம் பேர் மரணம்

            உலக நாடுகளை உலுப்பி வந்த கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி அமெரிக்காவில் மட்டும்

            இதுவரை சுமார் ஏழு லட்சம் பேர் மரணமாகியுள்ளனர் என சுகாதர அமைச்சு திடுக்கிடும் புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது

            இழப்பு இதைவிட இருமடங்கு அதிகமாக இருக்கலாம் என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              25 ஐ எஸ் தீவிரவாதிகளை மடக்கி பிடித்த இராணுவம்

              25 ஐ எஸ் தீவிரவாதிகளை மடக்கி பிடித்த இராணுவம்

              ஈராக்கிய இராணுவத்தினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தாக்குதலில் இருபத்தி ஐந்து ஐ எஸ் தீவிரவாதிகள் கைது செய்ய பட்டுள்ளனர்

              கைதானவர்கள் மீது தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                Posted in Uncategorized

                தலிபான்கள் ஆட்சியில் இரட்டை குண்டு வெடிப்பு

                தலிபான்கள் ஆட்சியில் இரட்டை குண்டு வெடிப்பு

                ஆப்கான் நாட்டில் தற்போது தலிபான்கள் ஆண்டு வருகின்றனர் ,இவர்களது ஆட்சியில் தற்போது இரட்டை குண்டு தாக்குதல் ஒரே நாளில் இடம் பெற்றுள்ளது

                சம்பவ இடத்தில் பத்து பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
                மேற்படி தாக்குதல்கள் அதிகரித்து செல்கின்றமை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது

                Posted in சினிமா

                படம் இயக்க பணம் இல்லாததால் வீட்டை விற்றேன் – நடிகர் அர்ஜுன்

                படம் இயக்க பணம் இல்லாததால் வீட்டை விற்றேன் – நடிகர் அர்ஜுன்


                நடிகர் அர்ஜுன் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சினிமாவில் பணம் இல்லாமல் பட்ட கஷ்டங்களை உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

                படம் இயக்க பணம் இல்லாததால் வீட்டை விற்றேன் – நடிகர் அர்ஜுன்
                அர்ஜுன்


                தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் அர்ஜுன். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சில படங்களை இயக்கியும் உள்ளார். தற்போது குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார்.

                இந்நிலையில், நடிகர் அர்ஜுன் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சினிமாவில் பணம் இல்லாமல் பட்ட கஷ்டங்களை உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

                அவர் கூறும்போது, ‘‘தமிழ் சினிமாவில் நான் ஒரு நல்ல இடத்தில் இருந்தேன். அப்போது எனக்கே தெரியாமல் என்னுடைய சில படங்கள் தோல்வி அடைந்தன. அதன் பிறகு நானே படங்களை இயக்க ஆரம்பித்தேன். நானே தயாரிக்கவும் செய்தேன்.

                அர்ஜுன்

                அப்படி ஒரு படம் இயக்கி கொண்டு இருந்தபோது கிளைமாக்ஸ் சண்டை காட்சி மட்டும் பாக்கி இருந்தது. அதை படமாக்க எனது கையில் பணம் இல்லை. வீட்டை விற்று எல்லா பணத்தையும்

                செலவு செய்துவிட்டேன். எனது அம்மா பெங்களூருவில் இருந்த சிறிய வீட்டை விற்று எனக்கு பணம் அனுப்பி வைத்தார்” என்றார்

                  Posted in சினிமா

                  விசா பெறுவதற்காக தான் திருமணம் செய்தேன்- ராதிகா ஆப்தே

                  விசா பெறுவதற்காக தான் திருமணம் செய்தேன்- ராதிகா ஆப்தே

                  தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே, தனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளார்.

                  விசா பெறுவதற்காக தான் திருமணம் செய்தேன்- ராதிகா ஆப்தே
                  ராதிகா ஆப்தே


                  தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

                  ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில், ‘‘நான் 8 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த பெனட்டிக் டைலர் என்ற இசைக்கலைஞரை திருமணம் செய்து கொண்டேன்.

                  ஆனாலும் எனக்கு திருமண முறைகள் மீது நம்பிக்கையே இல்லை. அப்படியென்றால் எதற்காக நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள் என்று என்னை கேட்கலாம்.

                  ராதிகா ஆப்தே

                  நான் விசா வாங்குவதற்காக மட்டும்தான் திருமணம் செய்து கொண்டேன். இங்கிலாந்து இளைஞரை மணந்தாலும் இப்போது நான் இந்தியாவில்தான் இருக்கிறேன். அவ்வப்போது

                  இங்கிலாந்துக்கு சென்று எனது கணவரை சந்தித்துவிட்டு வருகிறேன். சினிமாவில் நடிப்பதற்காக எனது கணவரை பிரிந்து நான் தனியாக இருக்கிறேன் என்று தகவல்கள் பரவுகிறது.

                  அதில் உண்மை இல்லை. வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தால் விரைவாகவும், எளிதாகவும் விசா கிடைக்கும் என்றனர். அதற்காகத்தான அவரை மணந்தேன்.

                  அதன்பிறகு எனது வேலையை நான் செய்து கொண்டு இருக்கிறேன். அவசியம் ஏற்படும்போது கணவரை சந்திக்க செல்கிறேன்” என்றார்.

                    Posted in Uncategorized

                    கணவரை பிரிந்தார் சமந்தா

                    கணவரை பிரிந்தார் சமந்தா

                    முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவை பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

                    திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது – கணவரை பிரிந்தார் சமந்தா
                    நாக சைதன்யா – சமந்தா


                    தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள்

                    ஆகும் நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக பிரியப் போகிறார்கள் என்று வெகுநாட்களாகவே செய்திகள் உலவுகிறது. இதுகுறித்து இருவரும் எந்தவித

                    கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தனர்.
                    நாக சைதன்யா – சமந்தா

                    தற்போது சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் தாங்கள் பிரிந்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்கள். அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், நாங்கள் இருவரும் கடந்த 10 வருடங்களாக

                    நட்பாக பழகி வருகிறோம். இந்த நட்பு எங்கள் திருமணம் வரை சென்றது. தற்போது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். இந்த இக்கட்டான

                    சூழ்நிலையில் எங்கள் முடிவுக்கு ரசிகர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் மதிப்பு கொடுக்கும் படி கேட்டுக் கொள்கிறோம் என்று பதிவு செய்து இருக்கிறார்கள்.

                      Posted in உலக செய்திகள்

                      தமிழகத்துக்கு உலக வங்கி.1100 கோடி ரூபாய் கடன்

                      தமிழகத்துக்கு உலக வங்கி.1100 கோடி ரூபாய் கடன்

                      சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் திட்டத்துக்கு உலக வங்கி 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்கியுள்ளது.

                      தமிழகத்துக்கு உலக வங்கி சார்பில் ரூ.1100 கோடி ரூபாய் கடன் உதவி

                      சென்னை மாநகரத்தை உலகத்தரம் வாய்ந்த தூய்மையான நகரமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசுக்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய் கடன் வழங்க, உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

                      சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் திட்டத்துக்கு உலக வங்கி 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்கியுள்ளது.

                      இதனுடன் சேர்த்து, மேகாலயா மாநிலத்தில் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் திட்டத்துக்காக 296 கோடி ரூபாய் கடன் வழங்க உள்ளது.

                      தமிழக அரசு

                      இந்த வங்கியின் செயல் இயக்குனர்களின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக உலக வங்கி நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

                      இந்தக் கடன் தொகை கல்வி நிலையங்கள், சுகாதார சேவை மையங்கள், குடிநீர் சப்ளை, கழிவுநீர் மேலாண்மை, போக்குவரத்து, சுகாதார வசதிகள் அதிகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றை பலப்படுத்த உதவியாக இருக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        ஆபாச காணொளி – தம்பதிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

                        ஆபாச காணொளி – தம்பதிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

                        பெலிஹுல்ஓய பஹன்துடாவ பிரதேசத்தில் ஆபாச காணொளி ஒன்றை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய தம்பதிக்கு 7 வருட ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                        அதேபோல் குறித்த தம்பதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளுக்கு 10,800 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                        பஹன்துடாவ நீர்வீழ்ச்சியில் பதிவு செய்யப்பட்ட குறித்த ஆபாச காணொளி கடந்த ஆகஸ்ட் மாதம் குறித்த தம்பதியினால் இணையத்தளத்தில் வௌியிடப்பட்டிருந்தது.

                        இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளினால் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

                        மஹரகம மற்றும் எல்பிட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் இவ்வாறு கைது செய்யப்பட்டு கடந்த 16 ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் வழக்கினை நேற்றைய தினத்திற்கு (01) ஒத்தி வைத்து குறித்த இருவரும் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

                        இந்நிலையில், நேற்று குறித்த தம்பதி பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து 7 வருட ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

                        Posted in Uncategorized

                        இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு

                        இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு

                        கொவிட்- 19 ஜனாதிபதி செயலணியின் பிரதானியும் இராணுவ தளபதியுமான இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா முக்கிய அறிப்பொன்றை விடுத்துள்ளார்.

                        மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

                        அதனால் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை இன்னும் தளர்த்த எதிர்பாத்துள்ளதாக அவர் மேலு‌ம் தெரிவித்தார்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையின் மீன்பிடி சட்டத்தில் திருத்தம் – அமைச்சர் டக்ளஸ்

                        இலங்கையின் மீன்பிடி சட்டத்தில் திருத்தம் – அமைச்சர் டக்ளஸ்

                        சர்வதேச கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற இலங்கையின் மீன்பிடிக் கலன்கள் பின்பற்ற வேண்டிய கடப்பாடுகள் மற்றும் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்த முன்வரைபு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

                        குறித்த கலந்துரையாடல், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்கா,

                        கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் கடற்றொழில் அமைச்சில் (01) நடைபெற்றது.

                        தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் இலங்கை கடற்றொழிலாளர்களின் நலன்களை பாதுப்பதையும் இலங்கை கடற்றொழில் செயற்பாடுகளை வினைத் திறனுடன் மேற்கொள்வதையும் உறுதிப்படுத்தும் வகையில், குறித்த சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                        Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                        ஜந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

                        ஜந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

                        பலத்த மழையின் காரணமாக ஜந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

                        காலி , களுத்துறை , கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

                        இந்த அறிவிப்பு மாலை 06 மணிவரை ஏற்புடையது என அறிவிக்கப்பட்டுள்ளது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபர் உயிரிழப்பு

                        பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபர் உயிரிழப்பு

                        மன்னாரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

                        மன்னார் – எருக்கலம்பிட்டி, புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் முச்சக்கரவண்டியை சோதனைக்குட்படுத்திய போது, போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இருவரை பொலிஸார் நேற்றிரவு கைது செய்தனர்.

                        சந்தேகநபர்களில் ஒருவர் இன்று காலை திடீர் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

                        இதன்போது, அந்நபர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

                        எருக்கலம்பிட்டி – தர்கா நகர் பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

                        உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

                        மேலதிக விசாரணைகளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்