யாழில் பேருந்து மோதி பெண் பலி
யாழில் பேருந்து மோதி பெண் பலி
யாழ். மத்திய பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்ற பேருந்து விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். மத்திய பேருந்து நிலையத்தினுள் இன்று காலை நுழைந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து , பேருந்து நிலைய வளாகத்தினுள் நின்ற வயோதிப பெண்ணொருவரை மோதி விபத்துக்கு உள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
வைத்தியசாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் குறித்த வயோதிப பெண்ணுக்கு அதிதீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் , சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மிரட்டும் வடகொரியா -ஒரு கிழமையில் 4 ஏவுகணை சோதனை
மிரட்டும் வடகொரியா -ஒரு கிழமையில் 4 ஏவுகணை சோதனை
வடகொரியா உலக சண்டியர் அமெரிக்காவுக்கு சவாலாக வலம் வருகிறது ,பலத்த பொருளாதார
தடை விதிக்க பட்ட பொழுதும் அது தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு என கூறிய படி ஏவுகணை சோதனையை புரிந்து வருகிறது
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நான்காவது ஏவுகணை சோதனையை புரிந்துள்ளது
இது வடகொரியாவின் பலத்தில் நான்கு மடங்கு உயர்வானது என சர்வதேச நிபுணர்கள்
கருத்துரைத்துள்ளனர் ,மேற்படி ஆயுத சோதனைக்கு அமெரிக்கா பலத்த கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது
ரசிகர் மன்றத்தை விரிவுபடுத்துகிறார் சிம்பு
ரசிகர் மன்றத்தை விரிவுபடுத்துகிறார் சிம்பு
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
ரசிகர் மன்றத்தை விரிவுபடுத்துகிறார் சிம்பு
சிம்பு
நடிகர் சிலம்பரசன் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இது அரசியல் பின்னணி உள்ள கதை என்பதால் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார் சிம்பு. அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நீண்ட நாள்களாக இயற்கையின் செயல்களால் உங்களிடம்
நேரடியாக உறவாடாமல். தொலைபேசி வழியாக உறவு கொண்டோம். மேலும் இளைஞர் அணி, வழக்கறிஞர்கள் அணி, மருத்துவ அணி, தொழில்நுட்ப அணி, கலை இலக்கிய அணிகள் மூலம் மன்றத்தை விரிவுபடுத்த உள்ளோம்.
ஆகவே நம் மன்றத்தின் அகில இந்திய தலைவர் டி.வாசு தலைமையில் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஆகாவே மாநில, மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள்
தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கலந்து கொள்ள பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நடிகைக்கு கோல்டன் விசா வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்
நடிகைக்கு கோல்டன் விசா வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்
நடிகை ஊர்வசி ராவ்துலா, தற்போது தமிழில் உருவாகும் புதிய படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
லெஜண்ட் சரவணன் பட நடிகைக்கு கோல்டன் விசா வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்
ஊர்வசி ராவ்துலா, லெஜண்ட் சரவணன்
அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு
வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும்.
ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், பிருத்விராஜ், துல்கர் சல்மான், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா
மிர்சா ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு, தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்துலாவுக்கு கோல்டன் விசா வழங்கி உள்ளது. இவர் தற்போது தமிழில் உருவாகும் புதிய படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
ரஜினிக்காக எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல்… ரிலீஸ் தேதி அறிவிப்பு
ரஜினிக்காக எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல்… ரிலீஸ் தேதி அறிவிப்பு
ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
‘அண்ணாத்த’ ரஜினிக்காக எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல்… ரிலீஸ் தேதி அறிவிப்பு
ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்
ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வருகிற அக்டோபர் 4-ந் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். இப்பாடல் வரிகளை விவேக் எழுதி உள்ளார்.
இப்பாடலை மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி உள்ளார். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி உயிரிழந்த எஸ்.பி.பி, அதற்கு முன்னரே இப்பாடலை பாடிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா செல்லும் பிரிட்டன் மக்கள் 10 நாள் தனிமை – அதிரடி அறிவிப்பு
இந்தியா செல்லும் பிரிட்டன் மக்கள் 10 நாள் தனிமை – அதிரடி அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி சான்றிதழ் விவகாரத்தில் இங்கிலாந்து முடிவுக்கு, இந்திய அரசு பரஸ்பர நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டினர் 10 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள்: இந்தியா பரஸ்பர நடவடிக்கை எனத் தகவல்
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் மிகப்பெரிய அளவில் செலுத்தப்பட்டு வருகிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து
வருகிறது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்து நிறுவனம் கண்டுபிடித்தது. ஆனால் இந்தியாவில் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டு நபர்கள் இங்கிலாந்து வந்தால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்லும் தொழில் அதிபர்கள், மாணவர்களுக்கு சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து இந்திய அரசு பலமுறை இங்கிலாந்திடம் பேசி பார்த்தது. ஆனால், இங்கிலாந்து அரசு இந்தியாவின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டினர் இந்தியாவுக்கு வந்தால் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பரஸ்பர நடவடிக்கை எடுக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடைமுறை அக்டோபர் 4-ந்தேதியில் இருந்து அமலுக்கு வர இருப்பதாக தெரிகிறது.
கல்லூரி வளாகத்திற்குள் மாணவியை குத்திக் கொலை செய்த நபர்
கல்லூரி வளாகத்திற்குள் மாணவியை குத்திக் கொலை செய்த நபர்
தேர்வு எழுதச் சென்ற மாணவி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சோக சம்பவம் கேரள மாநிலம் கோட்டயத்தில் நடந்துள்ளது.
கேரளாவில் கொடூரம்: கல்லூரி வளாகத்திற்குள் மாணவியை குத்திக் கொலை செய்த நபர்
கேரள மாநிலம் கோட்டயம் அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் 21 வயதான மாணவி ஒருவர் படித்து வந்தார்.
இவர் தேர்வு எழுதுவதற்காக கல்லூரி சென்றுள்ளார். அபிஷேக் என்ற நபர் கல்லூரி
வளாகத்திற்குள் வைத்து அந்த மாணவியிடம் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
திடீரென அபிஷேக் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த மாணவியின் கழுத்து பகுதியில் குத்தினார்.
இதில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த பெண்ணிற்கும் அபிஷேக்கிற்கும் இடையில் ஏற்கனவே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது,
இதேபோன்ற சம்பவத்தால் சமீபத்தில் சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விமான இறக்கையில் நடந்து செல்லும் பயணி – வைரலாகும் காட்சி
விமான இறக்கையில் நடந்து செல்லும் பயணி – வைரலாகும்
காட்சி
அமெரிக்காவின் விமான நிலையத்தில் அதில் பயணித்த பயணி ஒருவர் அந்த விமானத்தின்
அவசரகால கதவினை திறந்து அதன் வழியூடாக இறக்கையில் நடந்து செல்லும் காட்சி வெளியாகியுள்ளது
மேற்படி சம்பவம் போலீசாருக்கு அறிவிக்க பட்ட நிலையில் பறந்து வந்த போலீசார் அவரை கைது செய்தனர் ,மேற்படி காணொளியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
20 மாதங்களில் ரூ. 125,747 கோடி பணம் அச்சடிப்பு
20 மாதங்களில் ரூ. 125,747 கோடி பணம் அச்சடிப்பு
ஆளும் கோட்டா அரசில் இலங்கை பெரும் பணத்தட்டுபாட்டை சந்தித்து வருகிறது
இதற்கு அமைவாக கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 125,747 கோடி பணம் அச்சடிக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது
இதுவே இலங்கையின் தற்கால நிதி நெருக்கடியை எடுத்து கடடுவதாக உள்ளது
சுவாமி இலங்கை வருகிறார் – ஆப்பு வைக்க படுமா ..?
சுவாமி இலங்கை வருகிறார் – ஆப்பு வைக்க படுமா ..?
இலங்கை அரசுடன் ஒட்டி உறவாடி வரும் சுப்பிரமணிய சுவாமி இலங்கைக்கு அவசர பயணம் ஒன்றை மேற் கொள்கிறார்
இவரது இந்த பயணத்தின் பொழுது இலங்கை எதிர் காலத்தில் ஆற்ற வேண்டிய செயல் திட்டங்கள் தொடர்பாக பேச படும் என எதிர்பார்க்க படுகிறது
14 வயது சிறுமியை கற்பழித்த 65 வயது தாத்தா
14 வயது சிறுமியை கற்பழித்த 65 வயது தாத்தா
இலங்கை கவிரவில பாக்றோ தோட்டத்தில் வைத்து 14 வயது மாணவி ஒருவரை அறுபத்தி ஐந்து வயது தாத்தா ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உபடுத்தியுள்ளார்
மேற்படி நபர் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்
சிறுமை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
ஏழை குடும்பத்திற்கு உணவு வழங்கிய சிறி எம்பி
ஏழை குடும்பத்திற்கு உணவு வழங்கிய சிறி எம்பி
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களது ஆலோசனைக்கு அமைவாக கரைச்சி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் வேளமாலிகிதன் அவர்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி
மாவட்டத்தில் வாழும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சட்டத்தினால் பாதிக்கப்பட்டு அரசியல் கைதிகளாக உள்ள 19 குடும்பங்களுக்கு கரைச்சி பிரதேச சபை மற்றும் கனடிய தேசத்து நண்பர்
ஒருவரின் பங்களிப்புடன் சுமார் மூவாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் நேற்றும் இன்றும் வழங்கிவைக்கப்பட்டது.




இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே?
இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே?
சர்வதேச சிறுவர் தினமான இன்று இலங்கை இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே? என் கேட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் மழைக்கு மத்தியிலும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்
கடந்த 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 1669 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது
இந்நிலையில் இன்று சர்வதேச சிறுவர் தினத்தில் இலங்கை இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே? என் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எமது குழந்தைகளுக்கு உயிர் வாழும் உரிமை இல்லையா?, இலங்கை இராணுவத்திடம் கையளித்த சிறுவர்கள் எங்கே?, உங்கள் சிறைக்கூடம் எங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடமா?, தமிழ் குழந்தைகள் பயங்கரவாதிகளா?, ஓமந்தையில்
இராணுவத்திடம் கையளித்த உறவுகள் எங்கே?, உறவுகள் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும், எமது உறவுகளை எங்களிடம் தா, சர்வதேசமே பதில் சொல், சின்னஞ்சிறார்களும் பயங்கரவாதிகளா?, நட்ட ஈடும் வேண்டாம் மரண சான்றிதழும் வேண்டாம், பயங்கரவாத தடைச்
சட்டத்தை நீக்கு, வட்டுவாகலில் கையளித்த எமது உறவுகள் எங்கே?, விடுதலை செய் விடுதலை செய் எமது உறவுகளை விடுதலை செய், omp வேண்டாம் உள்ளக விசாரணை வேண்டாம்,
கடத்தாதே கடத்தாதே காலத்தை கடத்தாதே, உள்ளக பொறிமுறை சர்வதேசத்துக்கான கண்துடைப்பே, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி வேண்டும், போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம்
இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம்
இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது
பல்வேறு பட்ட விடயங்களை சுட்டி காட்டி இந்த அவசர நிதியை இலங்கை கடனாக பெறுகிறது
கடந்த ஆட்சியில் பல கோடி ரூபாய்களை சுருட்டியது மகிந்த குடும்பம், அதே போல தற்பொழுதும் பெரும் பணத்தை ஆளும் அரசு கொள்ளையடித்து வருவதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது
ஒரு பெண் பாம்பிற்கு சண்டை போட்ட மூன்று ஆண் பாம்பு
ஒரு பெண் பாம்பிற்கு சண்டை போட்ட மூன்று ஆண் பாம்பு
அவுஸ்ரேலியாவில் வீடொன்றுக்குள் நுழைந்த பெண் பாம்பு ஒன்றுக்கு மூன்று ஆண் பாம்புகள் சண்டை போட்ட சுவாரசியம் நடந்துள்ளது
கோல்டன் வகை என குறிக்க படும் இந்த பாம்புகள் மிக அரிதானவை என தெரிவிக்க படுகிறது
மனிதன் மட்டும் அல்ல பாம்புகளும் பெண்ணுக்கு அடிமை என்பது இதன் மூலம் தெரிகிறது
உடல் எடையை குறைத்தது எப்படி? – ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு
உடல் எடையை குறைத்தது எப்படி? – ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு
ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறியுள்ள நடிகை குஷ்பு, உடல் எடையை குறைத்தது எப்படி என்ற ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.
உடல் எடையை குறைத்தது எப்படி? – ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு
குஷ்பு
90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. இவர் பெயரில் கோவில் கட்டும் அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். வெள்ளித்திரை
மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்ததைப் போல தற்போது அரசியலிலும் படு பிசியாக செயல்பட்டு வருகிறார் குஷ்பு.
கடந்த சில மாதங்களாகவே உடல் எடையை குறைக்க தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார் குஷ்பு. தற்போது அதன் பலனாக, இன்றைய கதாநாயகிகளுக்கு சவால் விடும் அளவிற்கு இளமையான தோற்றத்திற்கு மாறியுள்ளார்.
குஷ்பு
இதையடுத்து ‘உடல் எடையை எப்படி குறைத்தீர்கள்’ என ரசிகர்கள் பலரும் அவரிடத்தில் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது அந்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார் குஷ்பு.
அதன்படி, நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையை குறைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். தினமும் நடைப்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் வேகமாக குறைந்துவிடும் என குஷ்பு கூறியுள்ளார்.
பிகினி உடையில் பூனம் பஜ்வா
பிகினி உடையில் பூனம் பஜ்வா
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூனம் பஜ்வா, அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
பிகினி உடையில் பூனம் பஜ்வா – வைரலாகும் புகைப்படங்கள்
பூனம் பஜ்வா
‘சேவல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் பூனம் பஜ்வா. இதைத்தொடர்ந்து ஜீவாவின் ‘தெனவாட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’ படங்களில் நடித்த இவர், சுந்தர்.சி
இயக்கிய ‘அரண்மனை 2’ படத்தின் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது.
பின்பு சுந்தர்.சி-யுடன் ‘முத்தின கத்திரி’ படத்தில் நடித்தார். அதுக்கு அடுத்தப்படியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். படவாய்ப்பு குறைந்தாலும்,
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
பூனம் பஜ்வா
பூனம் பஜ்வா
இந்நிலையில், தற்போது பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது
இளையராஜா இசையில் உருவாகும் 1417வது படம்
இளையராஜா இசையில் உருவாகும் 1417வது படம்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் இசையமைத்து இருக்கும் இளையராஜாவின் 1417வது படத்தின் புதிய அப்டேட்.
இளையராஜா இசையில் உருவாகும் 1417வது படம்
இளையராஜா
இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது.
இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். இதில் நேரடி படங்கள், டப்பிங் படங்கள்,
இசையமைத்து ரிலீசாகாத படங்கள், அடுத்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படங்கள் என இதுவரை மொத்தம் 1416 படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா.
இந்தநிலையில் அவரது இசையில் உருவாகும் 1417 படமாக ‘நினைவெல்லாம் நீயடா’ என்கிற படம் உருவாகிறது. இசைஞானியின் இசையில் உருவாகும் இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம்
எழுதி இயக்குகிறார் இயக்குநர் ஆதிராஜன். இவர் சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கியவர்.
பிரஜன்
நாயகன் பிரஜன் – இயக்குநர் ஆதிராஜன்
லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக ஒரு முன்னணி நடிகை நடிக்க, மற்றொரு
நாயகியாக புதுமுகம் சினாமிகா அறிமுகமாகிறார். இவர்கள் தவிர முக்கிய வேடத்தில் அப்பா படத்தில் நடித்த யுவலஷ்மி நடிக்கிறார். அவருடன் தோழியாக மூக்குத்தி அம்மன் புகழ் அபிநயஸ்ரீ நடிக்கிறார். மற்றும் மனோபாலா, காளி வெங்கட், மதுமிதா, ரஞ்சன்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாடல்கள் பாண்டிச்சேரி, கூர்க், இடுக்கி ஆகிய இடங்களில் படமாக்கப்பட இருக்கிறது.
கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த நடிகை
கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த நடிகை
உடல்நலக் குறைவாலும் சினிமா துறையில் தற்போதைய சூழல் காரணமாகவும் நடிகை ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.
கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த நடிகை
சௌஜன்யா
கன்னட தொலைக்காட்சி சீரியல் நடிகை சௌஜன்யா பெங்களூரு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
சௌஜன்யா கன்னடப் படத்திலும் பணியாற்றியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது வீட்டில் இருந்து ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் எழுதப்பட்ட நான்கு பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தில், உடல்நலக் குறைவாலும் சினிமா துறையில்
தற்போதைய சூழல் காரணமாகவும், கடந்த பல நாட்களாக சிரமப்பட்டு வந்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் இந்த முடிவை எடுப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்று சௌஜன்யா குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில் செப்டம்பர் 27, 28 மற்றும் 30ஆகிய மூன்று தேதிகள் எழுதப்பட்டுள்ளன. இதில் இருந்து சௌஜன்யா மூன்று நாட்களுக்கு முன்பே தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்ததாக போலீசார் கருதுகின்றனர்.
போலீசாரின் குழந்தைகள் விளையாட பூங்கா அமைக்க நடவடிக்கை
போலீசாரின் குழந்தைகள் விளையாட பூங்கா அமைக்க நடவடிக்கை
போலீஸ் நிலையத்தில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரின் இருக்கையில் அமர்ந்த முதலமைச்சர் பொது நாட்குறிப்பு, தினசரி பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டார்.
போலீசாரின் குழந்தைகள் விளையாட பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்- முதலமைச்சர் உறுதி
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்த முதலமைச்சர் முக ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் நேற்று இரவு காரில் தர்மபுரிக்கு புறப்பட்டார். அதியமான்கோட்டை பகுதியில் அவருக்கு தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பளித்தனர். அந்த பகுதியின் அருகே உள்ள அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு 8.17 மணிக்கு முதலமைச்சரின் கார் திடீரென நுழைந்தது.
காரிலிருந்து இறங்கிய முதலமைச்சர் அந்த போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரின் இருக்கையில் அமர்ந்த
முதலமைச்சர் பொதுநாட்குறிப்பு, தினசரி பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டார். நேற்று போலீஸ் நிலையத்திற்கு எத்தனை புகார்கள் வந்தன? அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் கேட்டறிந்தார்.
போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்த முதலமைச்சர்
போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள வார விடுமுறை சரியாக அமல்படுத்தப்படுகிறதா? என்றும் கேட்டார். போலீசாருக்கு வார விடுமுறை வழங்கப்பட்டிருப்பதும், இடி.ஆர். குறைப்பு கைவிடப்பட்டிருப்பதும் மிகவும் உதவியாக உள்ளது என்று அப்போது அங்கிருந்த போலீசார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து புகார் மனுக்களை விசாரிக்கும் முறை, முதலமைச்சர் தனிப்பிரிவு மூலம் அனுப்பப்படும் புகார் மனுக்கள் மீது எப்படி விசாரணை நடத்தப்படுகிறது என்று அப்போது கேள்வி எழுப்பினார். இத்தகைய மனுக்கள் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரடி விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று போலீசார் பதிலளித்தனர்.
இதைத் தொடர்ந்து குறைகள், கோரிக்கைகள் ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டறிந்தார். சுமார் 10 நிமிடங்கள் போலீஸ் நிலையத்தில் ஆய்வு நடத்திய முதலமைச்சர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.
அப்போது போலீஸ் நிலைய வளாகத்தின் வெளிப்பகுதியில் திரண்டிருந்த, போலீசாரின் குடும்ப உறுப்பினர்களிடம் நலம் விசாரித்தார். மேலும் முதலமைச்சரிடம் காவலர்கள் குடியிருப்பில் உள்ள குழந்தைகள் சில நிமிடங்கள் பேசினர். அப்போது குழந்தைகள், காவலர் குடியிருப்பின் பின்புறம் விளையாடுவதற்காக ஒரு பூங்கா வேண்டும் என கோரிக்கை வைத்தனர், அதனை உடனடியாக செய்து கொடுப்பதாக தெரிவித்தார், இதனை தொடர்ந்து அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
இந்த ஆய்வின்போது, கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) தாமரைக்கண்ணன், நுண்ணறிவுப் பிரிவு ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முதலமைச்சரின் திடீர் ஆய்வு காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர் உட்பட மொத்தம் 27 போலீசார் பணிபுரிகின்றனர். ஆனால் அதியமான் கோட்டை காவல் எல்லை மற்றும்
மக்கள்தொகையை கணக்கிடும் பொழுது பாதுகாப்பு பணிகள் மற்றும் ரோந்து பணியில் உள்ளிட்டவற்றுக்கு மொத்தம் 60 போலீசார் பணிபுரிய வேண்டும். இந்த ஆனால் அதியமான்
போலீஸ் நிலையத்தில் போலீசார் பற்றாக்குறை பல ஆண்டுகளாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.







