Posted in Uncategorized இலங்கை செய்திகள்

அரிசி விலை மீண்டும் அதிகரிப்பு

அரிசி விலை மீண்டும் அதிகரிப்பு

பொலன்னறுவை பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் அரிசியின் விலைகளை, மீண்டும் உயர்த்தியுள்ளனர்.

அதன்படி, கீரி சம்பா அரிசியின் விலை கிலோவுக்கு 30 ரூபாயும், சம்பா நாட்டு அரிசி கிலோ 15 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசி 195 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம்சம்பா அரிசி 155 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் நாட்டு அரிசி 130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்

    Posted in Uncategorized

    பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

    பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

    நாட்டிலுள்ள, 200 மாணவர்களை விட குறைந்த பாடசாலைகளை நாளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

    மாணவர்களுக்கு இலவசக் கல்வியை தொடர்வதற்கான சூழலை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை சுத்தம் செய்யும் பணிகள் பெற்றோரின் பங்களிப்போடு

    மேற்கொள்ளப்படுகின்றன. பாடசாலைகளுக்குச் சென்று கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க ஜனாதிபதியும் பிரதமரும் உயர்ந்தபட்ச நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். காய்ச்சல் தடிமன் – சளி

    போன்ற அடையாளங்கள் காணப்படும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்று கல்வி அமைச்சு, பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

      Posted in இலங்கை செய்திகள்

      கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான சேதன பசளை

      கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான சேதன பசளை

      கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு சேதன திரவம், நைதரசன் சாறு, களைநாசினி போன்றவற்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

      கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இரசாயன உரங்களை முழுமையாக தடை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

      இரசாயன உரப் பாவனையை தடை செய்வது என்பது, உடனடித் தீர்மானம் இல்லையெனவும் ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டதன் அடிப்படையில் இரசாயன கலப்பற்ற உணவுகளை மக்களுக்கு வழங்கும் நோக்கத்திலான தீர்மானம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

      அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக சேதனத் திரவம், நைதரசன் சாறு போன்றவற்றை உடனடியாக பெற்று விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

      Posted in சினிமா

      சர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது

      சர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது

      பிக்பாஸ் பிரபலம் ஒருவர், பட்டியலின சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

      சர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது
      யுவிகா சவுத்ரி கைது செய்யப்பட்ட போது எடுத்த புகைப்படம்


      பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் யுவிகா சவுத்ரி. இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தினமும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

      அந்த வகையில் கடந்த மே மாதம் பட்டியலின சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து, இவர் வெளியிட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பியது. நடிகை யுவிகா சவுதிரி மீது போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

      இந்நிலையில், இந்த வழக்கில் நடிகை யுவிகா சவுத்ரியை அரியானா போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டதை அடுத்து ஜாமீன் கோரி அவர், அரியானா ஐகோர்ட்டில் மனு

      தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகை யுவிகா சவுத்ரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நடிகை யுவிகா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

      Posted in சினிமா

      பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து செய்த செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்

      பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து செய்த செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்

      நமீதா மாரிமுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின், தற்போது முதன்முறையாக தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்.

      பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து செய்த செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்
      நமீதா மாரிமுத்து


      பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 3-ந் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 18

      போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் நமீதா மாரிமுத்து என்கிற திருநங்கையும் ஒருவர். தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் திருநங்கை ஒருவர் போட்டியாளராக கலந்துகொண்டது இதுவே முதன்முறை.

      இந்நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து, தான் கடந்து வந்த கஷ்டங்கள் குறித்து பேசியது காண்போரை கண்கலங்க வைத்தது. இதன்மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நமீதா, அந்நிகழ்ச்சியில் இறுதி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மருத்துவ காரணங்களுக்காக ஒரே வாரத்தில் வெளியேறினார்.

      பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின், தற்போது முதன்முறையாக தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில், அவர் ஏழை

      மக்களுக்கு இலவசமாக உணவு வழங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நமீதா மாரிமுத்துவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

      Posted in சினிமா

      சமந்தா ஓரினச் சேர்க்கையாளர் – ஸ்ரீரெட்டி பரபரப்பு கருத்து

      சமந்தா ஓரினச் சேர்க்கையாளர் – ஸ்ரீரெட்டி பரபரப்பு கருத்து

      சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      அவர் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் – சமந்தா விவாகரத்து குறித்து ஸ்ரீரெட்டி பரபரப்பு கருத்து
      சமந்தா, ஸ்ரீரெட்டி


      காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இது தென்னிந்திய திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

      இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் தான் என்று கூறப்பட்டு வந்தது. சமீபத்தில் இதுகுறித்து விளக்கமளித்த பிரீதம் ஜுகல்கர், சமந்தாவை

      தான் சகோதரியாக பார்ப்பதாகவும், தங்களுக்கு இடையே தவறான உறவு இல்லை என்றும் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

      இந்நிலையில், சமந்தா விவாகரத்து விவகாரம் குறித்து நடிகை ஸ்ரீ ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பிரீதம் ஜுகல்கர் உடனான நட்பு காரணமாக சமந்தா விவகாரத்து

      செய்ய வாய்ப்பே இல்லை. ஏனெனில், பிரீதம் ஒரு ஓரினச் சேர்க்கையாளர். அதனால் அவர்களுக்கிடையே எந்தவித தவறான உறவும் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.

      சமீபகாலமாக சமந்தா மிகவும் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். அந்த விஷயத்தில் கூட பிரச்சினை உருவாகி, இருவரின் பிரிவுக்கும் காரணமாகி இருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

      Posted in உலக செய்திகள்

      வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

      வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை


      நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நீர்மூழ்கி கப்பல் மூலம் நடத்தியுள்ளது வடகொரியா.

      வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: இந்த முறை நீர்மூழ்கி கப்பல் மூலம் நடத்தியது

      வடகொரியாவுக்கும், அதன் பக்கத்து நாடான தென் கொரியாவுக்கும் இடையே நிரந்தர பகை உள்ளது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது.

      எனவே தென்கொரியாவையும், அமெரிக்காவையும் மிரட்டும் வகையில் வடகொரியா அடிக்கடி அணுகுண்டு சோதனை, ஏவுகணை சோதனை, நவீன ஆயுத சோதனைகள் போன்றவற்றை நடத்தி வருகிறது.

      கடந்த 2 மாதங்களாக இந்த சோதனைகளை வடகொரியா தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி சில வாரங்களுக்கு முன்பு ரெயிலில் இருந்து ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அணுகுண்டை ஏந்தி செல்லும் சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

      எதிரிகள் விமானத்தை தாக்கும் புதிய ரக ஏவுகணை சோதனையும் நடந்தது. கடந்த 28-ந்தேதி அதிக சக்தி வாய்ந்த மற்றொரு ஏவுகணை சோதனையையும் நடத்தினார்கள்.

      இந்த நிலையில் நேற்று வடகொரியா மற்றொரு புதிய ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது. இந்த முறை நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணையை செலுத்தி பரிசோதனை நடத்தியிருக்கிறது. இந்த ஏவுகணை நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கில் அழிக்கும் திறன் கொண்டதாகும்.

      Posted in உலக செய்திகள்

      இங்கிலாந்தில் 49 ஆயிரம் பேருக்கு கொரோனா

      இங்கிலாந்தில் 49 ஆயிரம் பேருக்கு கொரோனா

      இங்கிலாந்தில் தற்போது குளிர்காலமாக இருப்பதே கொரோனா தொற்று உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

      இங்கிலாந்தில் 49 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு
      கொரோனா வைரஸ்

      இங்கிலாந்தில் 3 மாதங்களுக்கு முன்பு ஊரடங்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின்பு சமீப நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. திங்கட்கிழமை நிலவரப்படி அங்கு ஒரே நாளில் 49 ஆயிரத்து 156 பேருக்கு புதிதாக தொற்று பதிவாகி உள்ளது. குறிப்பாக தொடர்ந்து 6-வது

      நாளாக 40 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இதுவரை மொத்தம் 84 லட்சத்து 97 ஆயிரத்து 868 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். திங்கட்கிழமை 45 பேர் கொரோனாவுக்கு

      பலியானதை தொடர்ந்து இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 629 பேர் இறந்து உள்ளனர். தற்போது அங்கு 7 ஆயிரத்து 97 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

      கொரோனா தடுப்பூசி

      இங்கிலாந்தில் தற்போது குளிர்காலமாக இருப்பதே கொரோனா தொற்று உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தில் 12 வயதுக்கு மேற்பட்ட 85 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும், 78 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

      Posted in உலக செய்திகள்

      நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து 43 பேர் சுட்டுக்கொலை

      நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து 43 பேர் சுட்டுக்கொலை

      பயங்கரவாதிகளுக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டபோதிலும், பயங்கரவாதிகள் கதவுகளை உடைத்து வீடுகளில் இருந்தவர்களை தரதரவென வெளியே இழுத்து வந்து சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.

      நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து 43 பேர் சுட்டுக்கொலை: பயங்கரவாதிகள் அட்டூழியம்
      நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்து 43 பேர் சுட்டுக்கொலை

      மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க முடியாமல் ராணுவம் போராடி வருகிறது.இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி அங்கு மேலும் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் உருவாகியுள்ளன. இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று குவிப்பதோடு, கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

      இந்த நிலையில் வடமேற்கு மாகாணம் சோகோட்டோவில் உள்ள கோரோனியோ நகருக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கரவாதிகள் புகுந்து கொடூர தாக்குதலை நடத்தியதில் 30 பேர் கொன்று குவிப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் சோகோட்டோ மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

      மோட்டார் சைக்களில் வந்த 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். பயங்கரவாதிகளுக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டபோதிலும், பயங்கரவாதிகள் கதவுகளை உடைத்து வீடுகளில் இருந்தவர்களை தரதரவென வெளியே இழுத்து வந்து சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.

      பயங்கரவாதிகளின் இந்த அட்டூழியத்தால் பெண்கள், சிறுவர்கள் உள்பட 43 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

        Posted in உலக செய்திகள்

        செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

        செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

        3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 2,789 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், 77 சதவீத அளவுக்கு நீர் நிரம்பி உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

        புழல்-செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
        புழல் ஏரியை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
        சென்னை:

        சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக இந்த ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

        புழல் ஏரியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ‌ஷட்டர்களும் பழுதுபார்க்கப்பட்டுள்ளன.

        3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,772 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 23 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது.

        புழல் ஏரியை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

        புழல் ஏரியில் 84 சதவீதம் அளவுக்கு நீர் நிரம்பி உள்ளது. முழு கொள்ளளவை விரைவில் எட்ட உள்ளதால் இந்த ஏரியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

        ஏரியின் ‌ஷட்டர்கள் சரியாக இயங்குகிறதா? என்பதை கேட்டறிந்தார். எவ்வளவு தண்ணீர் வருகிறது. குடிநீருக்கு எவ்வளவு தண்ணீர் தினமும் திறக்கப்படுகிறது என்பதனை கேட்டறிந்தார்.

        புழல் ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால் அதில் நடந்து சென்றும் பார்வையிட்டார். அவருக்கு பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா விரிவாக விளக்கி கூறினார்.

        இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ., சென்னை குடிநீர் வாரிய இயக்குனர் விஜயராஜ் குமார், தலைமை என்ஜினீயர் ராமமூர்த்தி உடன் இருந்தனர்.

        புழல் ஏரியை பார்வையிட்ட பிறகு மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் குன்றத்தூர் அருகில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்றார். அவரை அங்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்றார். செம்பரம்பாக்கம் ஏரிக்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது, எவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது என்ற விவரங்களை மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

        3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 2,789 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், 77 சதவீத அளவுக்கு நீர் நிரம்பி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

        அப்போது மு.க.ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும்போது ஏரியை திறப்பது பற்றி முன் கூட்டியே பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும். அவ்வப்போது உள்ள நிலவரத்தை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

        கதவணை பகுதிக்கும் சென்று பார்வையிட்டார். ஏரியின் கரைகள் எந்த அளவு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கேட்டறிந்தார்.

        இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தா.மோ. அன்பரசன், செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, சென்னை குடிநீர் வாரிய இயக்குனர் விஜயராஜ் குமார் மற்ற அதிகாரிகள் உடன் இருந்தனர்.

        Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

        தாயின் கள்ள காதலனால் மகன் குத்தி கொலை

        தாயின் கள்ள காதலனால் மகன் குத்தி கொலை


        முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி – கரிக்கட்டைப் பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

        இச்சம்பவம் மதுரங்குளி கரிக்கட்டைப் பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் முந்தல் பொலிஸார், மதுரங்குளி

        கரிக்கட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

        இச்சம்பம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மதுரங்குளி கரிக்கட்டைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் நீண்ட காலமாக நபர் ஒருவருடன் தவறான தொடர்பை பேணி வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

        இந்நிலையில், நேற்று (18) அறையொன்றில் இருந்துகொண்டு தனது கள்ளக் காதலனுக்கு இரவு நேரச் சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்த போது அங்கு வருகை தந்த குறித்த பெண்ணின் மகன் இதனைப் பார்த்ததுடன்

        கடுமையாகவும் கண்டித்துள்ளதுடன், தாயின் கள்ளக் காதலனை வீட்டை விட்டு வெளியே போகுமாறும் கூறியுள்ளார்.

        தாயின் கள்ள காதலனால் மகன் குத்தி கொலை

        இதையடுத்து தாயின் கள்ளக் காதலனுக்கும், இளம் குடும்பஸ்தரான மகனுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

        அந்த வாய்த்தர்க்கம் முற்றியதால் ஆத்திரமடைந்த தாயின் கள்ளக் காதலன் அருகிலிருந்த கூரிய ஆயுதம் ஒன்றை எடுத்து குறித்த இளம் குடும்பஸ்தரான கள்ளக் காதலியின் மகனை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

        இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி, உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

        மதுரங்குளி கரிக்கட்டைப் பகுதியைச் சேர்ந்த குறித்த இளம் குடும்பஸ்தர் கேகாலை – அலவ பிரதேசத்தில் திருமணம் முடித்துள்ளார்.

        இந்த நிலையில் சுகயீனமடைந்துள்ள தனது தாயை பார்ப்பதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மதுரங்குளியிலுள்ள தனது தாயின் வீட்டுக்கு வருகை தந்துள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

          Posted in Uncategorized

          தாய்க்கு பயந்து குளத்துக்குள் பாய்ந்த சிறுவன் பலி

          தாய்க்கு பயந்து குளத்துக்குள் பாய்ந்த சிறுவன் பலி

          பிபிலை- மெதகம பெல்லன்ஓயாவுக்கு அருகில், மீன் வளர்ப்புக்காக அமைக்கப்பட்டிருந்த குளமொன்றில் விழுந்து 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

          இவ்வாறு உயிரிழந்த சிறுவன் தனது 4 மற்றும் 11 வயதுடைய சகோதரர்களுடன், நேற்று மாலை 3.30 மணியளவில் பெல்லன்ஓயாவுக்கு நீராடச் சென்றுள்ளார்.

          இதன்போது அதற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மீன் வளர்ப்புக்கான குளத்தைப் பார்த்துக்கொண்டிருந்த போது, அவர்களது 27 வயதுடைய தாய் பிள்ளைக் கண்டு சத்தம் போட்டவாறு வந்துள்ளார்.

          இதன்போது தாய்க்கு பயந்து பிள்ளைகள் மூவரும் குளத்துக்குள் பாய்ந்துள்ளதுடன், 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

          ஏனைய சிறுவர்கள் இருவரும் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

            Posted in Uncategorized

            பயணத்தடை மேலும் நீடிப்பு

            பயணத்தடை மேலும் நீடிப்பு

            இலங்கையில் நடைமுறையில் உள்ள பயணத்தடை மேலும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது

              Posted in இலங்கை செய்திகள்

              இந்திய முப்படை தூதுக்குழு-இராணுவத் தளபதி சந்திப்பு

              இந்திய முப்படை தூதுக்குழு-இராணுவத் தளபதி சந்திப்பு

              இராணுவத் தளபதி மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரியைச் சேர்ந்த இந்திய முப்படை தூதுக்குழுவினருக்கிடையில் சந்திப்பு
              இந்திய இராணுவத் தளபதியின் விஜயத்தின் பின்னர் இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பினை தொடரும் பிரதிநிதி குழுவினர் ஐந்து நாள் விஜயத்தினை நோக்கமாக கொண்டு, 18 ஆம் திகதி காலை இலங்கை வந்தடைந்தனர்.

              இலங்கைக்கு வருகை தந்த மேஜர் ஜெனரல் ஹரி பி பிள்ளை தலைமையிலான 18 பேர் கொண்ட குழுவினர், ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் நேரில் சந்தித்தனர்.

              இராணுவத் தலைமையகத்திற்கு வருகை தந்த அக்குழுவினரை பயிற்சி பணிப்பாளர் பிரிகேடியர் கபில டோலகே மற்றும் நடவடிக்கை பணிப்பாளர் பிரிகேடியர் சாந்த ரணவீர ஆகியோர் நுழைவாயிலில் வைத்து வரவேற்றதுடன் அவர்களை இராணுவத் தளபதி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

              பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் ஹரி பி பிள்ளை தலைமையிலான பிரதிநிதிகள் குழுவை அன்புடன் வரவேற்று அவர்களுடன் உரையாடினார். குறித்த கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் இந்திய ஆயுதப் படைகளுக்கு இடையே பல ஆண்டுகளாகத் தொடரும் இராணுவ ஒத்துழைப்பு குறித்து பாராட்டினார்

              இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, நட்புரீதியாக இடம்பெற்ற கலந்துரையாடலின் இறுதியில், இலங்கையில் நட்புறவை தொடரவிரும்பும் பிரதிநிதி தூது குழுவினர்களுக்கு சில நினைவுச்சின்னங்களை வழங்கினார். அதன்பிறகு, இராணுவத் தலைமையகத்தின் பொது பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியங்கர பெர்னாண்டோ, இலங்கை இராணுவம் , அதன் வரலாறு மற்றும் அதன் தற்போதைய பணிகள் தொடர்பான விளக்கக்காட்சியை முன்வைத்தார். இந்த மாநாட்டில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, பிரதி பதவி நிலை பிரதானி சம்பத் கொடுவேகொட மற்றும் இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

              வருகையின் நினைவுச் சின்னமாக அனைவரும் இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவுடன் ஒரு குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டனர். தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சிகளை தொடரும் 18 பேர் கொண்ட தூதுக் குழுவில் அமெரிக்கா, ஈரான், வங்களதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் முப்படை அதிகாரிகள் உள்ளடங்குவதுடன் அவர்கள் ஒக்டோபர் 23 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பர்.

              தூதுக்குழுவினர் புதன்கிழமை (20)ம் திகதி யாழ்ப்பாணத்தில் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு, யாழ். பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களை சந்திக்கவுள்ளதுடன் பலாலியில் அமைந்துள்ள இந்திய அமைதிகாக்கும் படை நினைவு தூபிக்கும் அஞ்சலி செலுத்தவுள்ளனர். அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் போது அனுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

              Posted in Uncategorized

              இலங்கையில் புதிய இராணுவ படையணி உருவாக்கம்

              இலங்கையில் புதிய இராணுவ படையணி உருவாக்கம்

              இலங்கை இராணுவத்தின் சிறப்பு நடவடிக்கை படைப்பிரிவு, விசேட அதிரடிப் படயைணி மற்றும் ஏனைய படையணிகள் ஆகியவற்றினை இணைத்து ஏற்படுத்தப்பட்ட 1 இலங்கை இராணுவ படையணி (Sri Lanka Army as 1 Corps of the Sri Lanka Army)யினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 17 ஆம் திகதி காலை சாலியபுர கஜபா படையணித் தலைமையக வளாகத்தில் இடம்பெற்றது.

              இராணுவத் தளபதியின் “முன்னோக்கு வழி மூலோபாய 2020-2025’’ திட்டக் கொள்கையின் ஒரு அங்கமாகவே இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில், தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளரும் பாதுகாப்பு செயலாளருமான ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு) அவர்கள் ஆரம்ப நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன் அவருக்கு இராணுவ சம்பிரதாய முறையின்பிரகாரம் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

              “வேகம், சக்தி, தைரியம்” என்ற நோக்கக்கூற்றினை அடிப்படையாக கொண்டு ஏற்படுத்தப்பட்ட மேற்படி படையணியின் சின்னத்தினை இலங்கை இராணுவத்தின் 1 படையணி படையினருக்கு பாதுகாப்பு செயலாளர் அவர்கள் பாதுகாப்பு, பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க ஆகியோருடன் இணைந்து அணிவித்தார்.

              அன்றைய விழாவின் போது 1 இலங்கை இராணுவ படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களுக்கான படையணி சின்னத்தினை ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன அவர்கள் அணிவித்து வைத்ததுடன் அப்படையணியின் கொடியையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து கலாச்சார நடனக் கலைகளும் நடைபெற்றது. கிளிநொச்சியில் உள்ள அதன் தலைமையகத்தில் இருந்து செயல்படும் இலங்கை இராணுவ 1 படையணியின் அதிகாரப்பூர்வ வலையமைப்பினை அன்றைய தலைமை விருந்தினர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) ஆரம்பித்து வைத்தார்.

              அதிமேதகு ஜனாதிபதியின் “சௌபாக்கிய” தேசியக் கொள்கைக்கு இணையாக ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கமைய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் இந்த முயற்சிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து விருந்தினருக்கான நினைவுப் பதிவேட்டில் தனது கருத்தினை பதிவிட்டார். கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை இராணுவ 1 படையணியின் தலைமையகத்தில் உள்ள படையினர் இணையவழி தொழில்நுட்பத்தினூடாக சாலியபுரவில் நடைபெற்ற நிகழ்வினை பார்வையிட்டனர்.

              1 படையணியின் புதிய தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்கள் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) மற்றும் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகிய இருவருக்கும் நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தார். இந்த புதிய 1 படையணியானது 53 வது படைப்பிரிவு , 58 வது படைப்பிரிவு , கொமாண்டோ படையணி, சிறப்புப் படையணி பிரிகேட் , எயார் மொமைல் பிரிகேட் , காலாட்படை பிரிகேட் மற்றும் கிளிநொச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஏனைய படையணிகளை உள்ளடக்கி உறுவாக்கப்பட்டுள்ளதோடு, எதிர்பாராத சூழ்நிலைகளை நிவர்த்தி செய்ய அல்லது திடீர் குழப்பங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளவும் மற்றும் முக்கிய இராணுவப் படையில் இருந்து அழைப்பின் பேரில் செயல்பட உதவியாக அமையக் கூடிய வகையில் சிறந்த படையணியாக செயல்படும்.

              கடந்த காலங்களில் இலங்கை இராணுவத்தின் சிறப்பு நடவடிக்கை படைப்பிரிவு மற்றும் சிறப்பு அதிரடி படையணி ஆகிய படையணிகள் தன்னிச்சையாக செயல்பட்டு வந்தாலும் மேற்குறித்த படையணிகள் 1 படையணியுடன் இணைத்து சமகால பாதுகாப்பு இயக்கவியல், இயற்கை பேரழிவுகள், மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள், தொற்றுநோய்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது வேறு எந்த தேசிய அவசர நிலைகளையும் எதிர்கொள்ளும் செயலற்பாடுகளுக்கு ஒரு சக்தியாக உயர்தர இராணுவ படையணியாக உறுவாக்கப்பட்டது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

              இராணுவத் தளபதியின் தொலைநோக்கு ‘முன்னோக்கு வழி மூலோபாயம் 2020-2025’ என்பது போர் ஒத்துழைப்பு மற்றும் போர் சேவை ஒத்துழைப்பு படையினருடன் ஒருங்கிணைந்த மற்றும் தேவையான கூட்டு நடவடிக்கைகளுடன் பொருத்தமாக குழுவாக இருக்கும் முகமாக தேசம் மற்றும் படையினரின் பாதுகாப்பிற்கான சக்தியாக பல்வகைப்பட்ட தற்செயல் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்த சிறப்பு நடவடிக்கை படைப்பிரிவினரை வைத்திருக்கும்.

              இந்நிகழ்வின் போது இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட, இலங்கை இராணுவ தொண்டர் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விகும் லியனகே மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் சிப்பாய்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

              Posted in இலங்கை செய்திகள்

              புலனாய்வு உத்தியோகத்தர்களை பிரதேச செயலகங்களுக்கு நியமிக்க கோரிக்கை

              புலனாய்வு உத்தியோகத்தர்களை பிரதேச செயலகங்களுக்கு நியமிக்க கோரிக்கை

              மாவட்டச் செயலகங்களில் இணைப்புச் செய்யப்பட்டிருக்கும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு விசாரணை உத்தியோகத்தர்களை மீளவும் பிரதேச செயலகங்களுக்கு நியமிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தென்கிழக்கு சமூக அபிவிருத்தி மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

              இக்கோரிக்கையை வலியுறுத்தி, வர்த்தக, வாணிப அமைச்சர், பாவனையாளர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பி வைத்திருப்பதாக மன்றத்தின் செயலாளரும் இலங்கை கல்வி நிருவாக சேவையின் ஓய்வுநிலை கல்விப்
              பணிப்பாளருமான ஏ.எல்.முகம்மது முக்தார், இன்று (20) தெரிவித்தார்.

              இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

              “2018ஆம் ஆண்டு, அமைச்சரவை, முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் மற்றும் திறைசேரி என்பவற்றின் அனுமதியுடன் பிரதேச செயலக மட்டத்தில் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்குடன், நாடளாவிய ரீதியில் சுமார் 200க்கு மேற்பட்ட புலனாய்வு விசாரணை உத்தியோகத்தர்கள், வர்த்தக அமைச்சால் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

              “இந்த நியமனம், நிபந்தனைகளுக்கு முரணான வகையில் திடீரென மாவட்டச் செயலகங்களுக்கு இணைப்புச் செய்யப்பட்டு, அங்கிருந்து கடமை செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களது புலனாய்வுப் பணிகளை சுதந்திரமாக செய்ய முடியாத
              நிலை உருவாகியுள்ளது.

              “தற்போதைய கொவிட் பெருந்தொற்று அசாதாரண சூழ்நிலையில், வர்த்தகர்கள் தாம் நினைத்தவாறு பொருள்களின் விலையை அதிகரித்து விற்பனை செய்வதற்கும் கறுப்பு சந்தை, பதுக்கல் வியாபாரம்
              என்பவற்றில் ஈடுபடுவதற்கும் பிரதான காரணம் யாதெனில், பிரதேச செயலக மட்டத்தில் பொறுப்புக்கூற வேண்டிய பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகள் இல்லாமல் போனமையேயாகும்.

              “பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்களின் நேரடி கண்காணிப்பு, பிரதேச மட்டத்தில் இருந்தால்தான் வணிகக் கொள்ளைகளைத் தடுக்க முடியும்.

              “அதிகாரம் பரவலாக்கப்படுகின்ற இக்காலத்தில் பாவனையாளர் அதிகார சபையின் நிர்வாகம் மாத்திரம் அதிகார குவிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது பாவனையாளர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.

              “இதேவேளை, இவ்வுத்தியோகத்தர்கள் பலர் இதுவரை சேவையில் நிரந்தரமாக்கப்படாமல் இருந்து வருவதுடன், அடிக்கடி இடமாற்றத்துக்கும் உட்பட்டு வருவதன் காரணமாக அதிகமான பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரிகள் தமது பதவிகளை விட்டுச் சென்றுள்ளனர் எனவும் தெரிய வருகிறது.

              “ஆகையால், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அனைத்து புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படுவதுடன், அவர்களது சேவையை பிரதேச செயலக மட்டத்தில் முன்னெடுப்பதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறித்த கடிதங்களில் வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.

              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              இன்றே மன்னித்து விடு

              இன்றே மன்னித்து விடு

              வாயோடு வாய் வைத்து
              வந்து வழி பேசி நின்றேன்
              நீயுரைத்த மொழி கேட்டு
              நீர் விழியோடு யான் தவித்தேன்

              ஆறாத என் மொழிகள்
              ஆறாண்டாய் வாட்டியதோ …?
              சுட்டெரிக்கும் வார்த்தை என்றால்
              சூட்டோடே சொல்லி விடு

              வார்த்தையால் உனை கொன்று
              வாழ்வதென்ன வாழ்வோ …?
              வளர் பிறையின் முழு நிலவே
              வாழும் போதே புரிந்து விடு

              திட்டமிட்டு வாயில் வந்து
              திட்டுவது யான் அல்ல
              திட்டங்களை மூழ்கடிக்க
              திரிபுகளாய் வீழ்ந்திருக்கும்

              உச்சி முதல் உள்ளம் வரை
              உயிரே வலிக்குதடி
              பகுத்தறிவை படித்து வைத்து
              பக்குவத்தை நட்ட பின்னர்

              உன்னை வசை பாட
              உயிரே நான் நினைத்ததில்லை
              என் உயிலில் மாற்றமதை
              எண்ணுறவே கண்டு விடு

              எட்டாண்டு உயிர் வாழும்
              என் உடலோ புரிந்து விடு
              இறக்கும் முன்னர் ஒரு முறை
              இன்றே மன்னித்து விடு

              வன்னி மைந்தன்
              ஆக்கம் 19-10-2021

              வன்னி மைந்தன் கவிதைகள்

                Posted in இலங்கை செய்திகள்

                பேரூந்தில் இருந்து வீழ்ந்த பெண் – சாரதியை தாக்கிய மக்கள்

                பேரூந்தில் இருந்து வீழ்ந்த பெண் – சாரதியை தாக்கிய மக்கள்

                பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பண்டாரவெல, ஹல்பே பகுதியில் வைத்து பண்டாரவெலயில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றின் மிதி பலகையில் இருந்து பெண் ஒருவர் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                இந்த சம்பவம் அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

                பேருந்தில் இருந்து தனது சிறிய மகளை இறக்கி விட்டு குறித்த பெண் இறங்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் பேருந்து முன்னோக்கி சென்றுள்ளது.

                இதன்போது குறித்த பெண் மிதி பலகையில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

                இதனைபடுத்து அங்கிருந்த சிலர் குறித்த பெண்ணை தூக்கிவிட்டு பேருந்து ஓட்டுனர் மீது தாக்கல் நடத்த முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  நெடுந்தீவில் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படை மோதல் – ஒருவர் மரணம்

                  நெடுந்தீவில் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படை மோதல் – ஒருவர் மரணம்

                  நெடுந்தீவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரின் படகு மோதியதில், இந்திய மீனவர்களின் படகு சேதமாக்கப்பட்டுள்ளது.

                  இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்து மீன் பிடித்துக் கொண்ட போது, இந்திய மீனவர்களின் படகை கடற்படையினர் தடுத்து நிறுத்த முற்பட்டபோது , இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் படகை தாக்க முற்பட்டுள்ளனர்.

                  இதன்போது கடற்படையினரின் ரோந்து கப்பல் முட்டியதில், இந்திய மீனவரின் படகு சேதமடைந்துள்ளது. இதில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                  இரண்டு மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

                  குறித்த மீனவர்கள், தமிழ்நாடு – புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

                  நீரில் மூழ்கி காணாமல் போன மீனவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்

                  Posted in Uncategorized

                  இலங்கையில் பசு வதையை தடை செய்ய அமைச்சரவையில் தீர்மானம்

                  இலங்கையில் பசு வதையை தடை செய்ய அமைச்சரவையில் தீர்மானம்

                  இலங்கையில் பசு வதையை தடை செய்வதற்காக ,அதனுடன் தொடர்புபட்ட 05 சட்டங்கள் மற்றும் கட்டளைச்சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான திருத்த சட்ட மூலத்தை அரச

                  வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனைத்தொடர்ந்து அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

                  நேற்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

                  1. இலங்கையில் பசு வதையைத் தடை செய்தல்

                  உள்ளூர் விவசாயத்துறை மற்றும் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பசு வதை செய்வதை தடை செய்வதற்கும், அதற்கு ஏற்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளையும்,

                  விலங்கு அறுப்பு தொடர்பான உள்ளூராட்சி மன்றங்களால் நிறைவேற்றப்பட்டுள்ள துணைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்கும், 2020 செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற

                  அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்கள்ஃகட்டளைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்காக சட்ட வரைஞர் அவர்களால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

                  272 ஆம் அத்தியாயத்தின் 1893 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க பசு வதை கட்டளைச் சட்டம்
                  1958 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க விலங்குகள் சட்டம்
                  252 ஆம் அத்தியாயத்தின் மாநகர சபைகள் கட்டளைச் சட்டம்


                  255 ஆம் அத்தியாயத்தின் நகரசபைகள் கட்டளைச் சட்டம்
                  1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம்
                  குறித்த சட்டமூலம் அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு இணங்கவில்லை என சட்டமா அதிபர்

                  அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். அதற்கமைய, குறித்த சட்டமூலங்களை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காகவும் கௌரவ பிரதமர்

                  அவர்கள்: அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்: மற்றும் விவசாய அமைச்சர் சமர்ப்பித்த கூட்டு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.