Posted in Uncategorized இலங்கை செய்திகள்

மகிந்த மகனுக்கும் சிறிதரனுக்கும் இடையில் சண்டை video

மகிந்த மகனுக்கும் சிறிதரனுக்கும் இடையில் சண்டை video

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எனக்கும், நாமல் ராஜபக்ஷவிற்கும் இடையில் வாதப்பிரதிவாதம்!

இன்றைய தினம் 09.10.2018 பாராளமன்றில் வரவுசெலவுத்திட்ட
குறைநிரப்பு விவாத வேளையில், தமக்கான நீதி வேண்டி உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில்

ஈடுபட்டுள்ள அரசியல்க் கைதிகளின் விடயங்களை அவையின் கவனத்துக்கு மீண்டும் ஒருமுறை கொண்டுவந்த போது.

click here vieo

Posted in இலங்கை செய்திகள்

அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு

அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் முள்ளிச்சேனை தோட்டம் ஒன்றின் வாடியில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் சடலமாக இன்று (19) மீட்கப்பட்டடுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் உயிரிழந்தவரின் நண்பன் ஒருவரை கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

மரப்பாலம் முள்ளிச்சேனையைச் சேர்ந்த 56 வயதுடைய கிருஷ்ணபிள்ளை நேசராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரும் அவருடைய நண்பனும் சம்பவதினமான நேற்று (18) இரவு வீட்டிற்கு அருகாமையிலுள்ள தோட்டம் ஒன்றில் உள்ள வாடியில் மதுபானத்துடன் சென்று மது அருந்தியுள்ளனர்.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நண்பனை தாக்கியதாகவும் அதனையடுத்து தான் அங்கிருந்து தப்பி ஓடி காட்டில் ஒளிந்திருந்ததாகவும். யானை பயத்தினால் அங்கிருந்து இன்று காலையில் வெளியேறி நண்பனின் வீட்டிற்கு சென்று நண்பனை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவித்து அவர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்த்ததாக கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு தடவியல் பிரிவினர் மற்றும் மேப்ப நாய் கொண்டுவரப்பட்டு தீவிர விசாரணையினை பொலிசார் முன்னெடுத்துவருகின்றதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் நாள்தோறும் 25 சிறுவர்கள் கற்பழிப்பு

    இலங்கையில் நாள்தோறும் 25 சிறுவர்கள் கற்பழிப்பு

    நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

    இந்த துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற சிறுவர்களில், சுமார் 21 வீதமானோர் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

    பேருவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

    மேலும், “இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலும், 180 நாட்களில் (6 மாதங்களினுள்) சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 4,743 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகளின் எண்ணிக்கையை 180 ஆல் வகுக்கும்போது, ​​ நாளொன்றிற்கு 25 க்கும் மேற்பட்ட

    சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். அதாவது, ஒரு மணித்தியாலத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளில் பாதிக்கின்ற சிறுவர்களை வயதுக்கு ஏற்ப பிரிந்தால், 21%மானோர் 5

    வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள், 17% மானோர் 5 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் , 38% வீதமானோர் 11 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் . 75 வீதமானோர் 15 வயதிற்குட்பட்டவர்களாகவும் பதிவாகியுள்ளனர்.

    இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 13 வீதமானோரின் பிரதிவாதியாக தந்தை அடுத்ததாக தாய் மற்றும் மதகுருமார்கள் இருக்கின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

    இதேவேளை, நாளாந்தம் சுமார் 6 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகின்றார்கள் என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தெரிவித்தார்.

      Posted in Uncategorized

      லண்டனில் லொறியில் இருந்து குதித்து ஓடும் அகதிகள்

      லண்டனில் லொறியில் இருந்து குதித்து ஓடும் அகதிகள்

      லண்டன் கென்ட் பகுதியில் உள்ள வேக சாலை ஒன்றில் பயணித்த லொறி ஒன்றுக்குள் பதுங்கி

      வந்த சட்ட விரோத குடியேற்ற வாசிகள் அதில் இருந்து குதித்து தப்பி ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன

      மேற்படி சம்பவம் தொடர்ப்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

        Posted in Uncategorized

        அமெரிக்காவில் கத்தி வெட்டு மூவர் காயம் – சுட்டு கொன்ற போலீசார்


        அமெரிக்காவில் கத்தி வெட்டு மூவர் காயம் – சுட்டு கொன்ற போலீசார்

        அமெரிக்கா Arkansas State பகுதியில் நடத்த பட்ட திடீர் கத்தி வெட்டு தாக்குதலில் சிக்கி மூவர் படுகாயமடைந்துள்ளனர் ,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை ஊழியர் மீதும் கத்தி

        வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இதனை அடுத்து அவர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

        சமீப காலங்களாக இவ்வாறான குற்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          வெடித்து சிதறிய குண்டு 17 பேர் காயம்

          வெடித்து சிதறிய குண்டு 17 பேர் காயம்

          பாகிஸ்தான் நாட்டின் காவல்துறை வாகனத்தை இலக்கு வைத்து நடத்த பட்ட ஊந்துருளி குண்டு தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்

          இதில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதகாக சுயாதீன தகவல்கள் தெரிவித்துள்ளன


          தலிபான்கள் ஆட்சி பீடம் ஏறியதன் பின்னர் பாகிஸ்தானில் இந்த குண்டு தாக்குதல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            30 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

            30 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

            நையீரியாவில் தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் முப்பது பேரை சுட்டு படுகொலை செய்துள்ளனர்


            தீவிரவாதிகளின் வெறியாட்டத்தில் சிக்கி பலநூறு மக்கள் பலியாகிவருகின்றனர்

            இராணுவத்தினர் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்ற போதும் இவ்வாறான அதிரடி

            தாக்குதல்களில் மக்கள் பலியாகி வருவதாக இராணுவம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              அமெரிக்காவின் முன்னாள் அமைச்சர் கொலின் பவூல் மரணம்


              அமெரிக்காவின் முன்னாள் அமைச்சர் கொலின் பவூல் மரணம்

              அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு மற்றும் இராயங்க செயலராக விளங்கிய கொலின் பவூல் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி தனது 84 வது வயதில் மணமாகியுள்ளார்

              கறுப்பின மக்களின் முதலாவது அதி உயர் அதிகாரியாக இவர் அமெரிக்கா வரலாற்றில் இடம் பிடித்து சாதனை படைத்தவர்

              இவர் கடும் போக்கு நிலையை கொண்டவர் என்பதும் ,புலிகள் தொடர்பில் அதே நிலையை கட்டிபிடித்து வந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                Posted in சினிமா

                திருமணத்தை தள்ளிப்போடும் நடிகை

                திருமணத்தை தள்ளிப்போடும் நடிகை

                கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர், திருமணத்தை தள்ளிப்போட்டு வருகிறாராம்.

                திருமணத்தை தள்ளிப்போடும் நடிகை
                கிசுகிசு


                தமிழில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக இருப்பவர், தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறாராம். அதே சமயம், வயது அதிகமாகி வருவதால் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் நடிகையை திருமணம் செய்ய வற்புறுத்துகிறார்களாம்.

                ஆனால், நடிகையோ திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வருகிறாராம். நடிகை நடித்த பல படங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கிறதாம். அந்த படங்கள் வெளிவந்த பிறகும்,

                ஒப்பந்தமான படங்களில் நடித்து முடித்த பிறகு தான் கல்யாணம் என்று நெருங்கியவர்களிடம் சொல்லுகிறாராம்.

                Posted in மருத்துவம்

                குதிக்கால் வலியை போக்கும் மருத்துவ குறிப்புகள்

                குதிக்கால் வலியை போக்கும் மருத்துவ குறிப்புகள்

                30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் குதிக்கால் வலியை தடுப்பதற்கு கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

                பெண்களின் வீட்டு வேலைகளை செய்வது குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான பணி புரிவது போன்றவற்றில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள்.

                அதே நேரம் தங்களது ஆரோக்கியத்தை பேணுவதில் தவறி விடுகிறார்கள். இதன் மூலம் எண்ணற்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.

                அதில் முக்கியமானது 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் குதிக்கால் வலி. இதை தடுப்பதற்கு கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

                குதிக்கால் வலிப்பதற்கான காரணங்கள்

                • உடல் பருமன் அதிகரிப்பதாலும் குதிக்கால் வலி ஏற்படும்
                • காலணிகளை காலுக்கு தந்தவாறு அணியாமல் பெரிதாக ஹீல்ஸ் வைத்து அணிவதன் மூலம் குதிக்கால் வலி உண்டாகும்.
                • ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தாலும் குதிக்கால் வலி வரலாம்.
                • அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்வதாலும் குதிக்கால் வலி ஏற்படும்.

                குதிக்கால் வலியை போக்கக்கூடிய எளிய மருத்துவ குறிப்புகள்

                • ஒரு வாணலியில் அரிசித்தவிடு மற்றும் உப்பை நன்றாக வறுத்துகொள்ள வேண்டும். அதை பருத்தி துணியில் மூட்டையாக கட்டிக்கொள்ள வேண்டும்.
                • இதைக்கொண்டு குதிக்கால் பகுதியில் தினமும் ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கும்.
                • நொச்சி இலை சாற்றில் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சூடுபடுத்த வேண்டும்.
                • இரவில் உறங்க செல்வதற்கு முன்பு இந்த எண்ணெயை குதிக்காலில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் குதிக்கால் வலி நீங்கும்.

                உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதற்கான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் எடையை குறைக்கலாம். இதன் மூலம் குதிக்கால் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

                குதிக்கால் வலியை போக்கும் மருத்துவ குறிப்புகள்

                திராட்சை பழச்சாறில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. அதை தொடர்ந்து பருகுவதன் மூலம் குதிக்கால் வலி கட்டுப்படும்.

                • வில்வக்காயை நெருப்பில் சுட்டு அதை கொண்டு குதிக்கால் வலி உள்ள பகுதியில் தொடர்ந்து ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.
                • பாதங்களுக்குரிய எளிய பயிற்சிகளை செய்வதன் மூலம் குதிக்கால் வலியில் இருந்து விடுபடலாம்.
                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  இன்றே இவரை விரட்டு

                  இன்றே இவரை விரட்டு

                  சுட்டு வீழ்த்தடா பகைவனை – இந்த
                  சுட்டு காட்டை ஒழியடா நாட்டிடை
                  ஒற்றுமை பேனா தமிழனை – தலை
                  ஒடித்து போடடா காட்டிடை

                  லட்சங்கள் வீசும் பகைவனின் – கால்
                  நக்கியே பிழைக்கும் நாய்களை
                  கொத்தியே எறிதல் முறையடா – தமிழ்
                  கோடிகள் வாழ்ந்திட புரியடா

                  அறத்தினை கொன்றவன் நாட்டிடை
                  அண்டியே வைத்தால் தீட்டடா
                  வாலாட்டும் இந்த நாய்களால்
                  வையத்தில் முளைக்குத்து கேடடா

                  வீடே முதலெனே நினைப்பவர் – இன
                  விடியலுக்கு வேலியாய் நிற்பவர் – முகத்தில்
                  தூவெனெ துப்படா – இந்த
                  துரோகியை இன்றே வீழ்த்தடா

                  கோபத்தில் களையாய் பொங்கடா
                  கொடியோர் செயல் விழ பாயடா
                  நாளை தமிழர் ஆளவே
                  நம்பிக்கை நட்டு வையடா ….!

                  வன்னி மைந்தன்
                  ஆக்கம் 18-10-2021

                  வன்னி மைந்தன் கவிதைகள்

                    Posted in சினிமா

                    செல்வராகவன் உடன் கூட்டணி அமைத்த யோகிபாபு

                    செல்வராகவன் உடன் கூட்டணி அமைத்த யோகிபாபு

                    தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, அவ்வப்போது ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.

                    முதன்முறையாக செல்வராகவன் உடன் கூட்டணி அமைத்த யோகிபாபு
                    செல்வராகவன், யோகிபாபு
                    தனுஷ் – செல்வராகவன் கூட்டணிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர்கள் கூட்டணியில் வெளியான ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

                    இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்த இவர்கள், தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்துக்கு ‘நானே வருவேன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

                    இந்நிலையில், ‘நானே வருவேன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே தனுஷுடன் கர்ணன் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ள யோகிபாபு, செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

                      Posted in சினிமா

                      ஹாலிவுட்டுக்கு செல்லும் பிரகாஷ் ராஜ்

                      ஹாலிவுட்டுக்கு செல்லும் பிரகாஷ் ராஜ்

                      பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகருமான பிரகாஷ் ராஜ், தற்போது மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வருகிறார்.

                      ஹாலிவுட்டுக்கு செல்லும் பிரகாஷ் ராஜ்
                      பிரகாஷ் ராஜ்
                      தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ்.

                      தற்போது இவர் கைவசம் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் ‘அண்ணாத்த’, பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎப் 2’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்டப் படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

                      பிரகாஷ் ராஜ்

                      இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் பிரகாஷ் ராஜ், விரைவில் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். சமீபத்திய பேட்டி மூலம் அவர் இதனை உறுதி செய்துள்ளார். ஏற்கனவே தமிழ்

                      திரையுலகை சேர்ந்த தனுஷ், நெப்போலியன், ஜிவி பிரகாஷ் ஆகியோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது பிரகாஷ் ராஜும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

                        Posted in சினிமா

                        பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் பிரியா பவானி சங்கர்

                        தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

                        பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் பிரியா பவானி சங்கர்?
                        பிரியா பவானி சங்கர்


                        தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது.

                        18 போட்டியாளர்களுடன் தொடங்கிய ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில், நமீதா மாரிமுத்து மற்றும் நதியா சங் வெளியேறியதால் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

                        இந்நிலையில், இந்த வாரத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் படத்தின் புரமோஷனுக்காக அங்கு செல்ல உள்ளதாக

                        கூறப்படுகிறது. பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் வருகிற அக்டோபர் 22-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

                        அப்படத்தின் புரமோஷனுக்காகத் தான் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளாராம். அவருடன் நடிகர் ஹரீஷ் கல்யாணும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ஹரீஷ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

                          Posted in Uncategorized

                          வீட்டில் தீப்பிடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி

                          வீட்டில் தீப்பிடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி


                          தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

                          பாகிஸ்தானில் வீட்டில் தீப்பிடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
                          தீ விபத்து

                          பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் வீடு முழுவதிலும் பரவியது.

                          அதிகாலை நேரம் என்பதால் வீட்டில் இருந்த அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். வீட்டில் தீப்பற்றி எரிவதை உணர்ந்து அவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர்.

                          ஆனால் அதற்குள் வீட்டின் நாலாபுறமும் தீ சூழ்ந்ததால் அவர்களால் தப்பிக்க முடியாமல் போனது. இதனால் தீயின் கோரப்பிடியில் சிக்கி 2 பெண்கள் மற்றும் 2 மாத பச்சிளம் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

                          வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

                            Posted in Uncategorized

                            வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு

                            வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு

                            வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றங்கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

                            ஆக்ரோஷமாக பாயும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு
                            வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு
                            கோட்டயம்:

                            கேரளாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் ஆறுகளில் திறந்துவிடப்பட்டுள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆற்றங்கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

                            இந்நிலையில், கேரளாவின் கோட்டயம் மாவட்டம் முண்டகாயம் பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

                            வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலரைக் காணவில்லை. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

                              Posted in Uncategorized

                              சென்னை உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

                              சென்னை உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

                              கடந்த 10 ஆண்டுகளில் விஜயபாஸ்கரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

                              சென்னை உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை- சிக்கலில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்
                              கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தங்கி உள்ள அப்பார்ட்மெண்ட்.
                              சென்னை:

                              அ.தி.மு.க. ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக அமைச்சர்கள் சொத்துக்களை சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

                              இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

                              முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோரது வீடுகளில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது.

                              இந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி. விஜயபாஸ்கர் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

                              சென்னையில் கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய 2 இடங்களில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

                              கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோடு, சேத்துப்பட்டு ஹாரிங்டன்ரோடு ஆகிய 2 இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள் உள்ளன. இந்த 2 வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தினார்கள்.

                              இந்த சோதனையொட்டி அடுக்குமாடி குடியிருப்பு முன்பு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

                              இதே போன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர்கள், உறவினர்கள் ஆகியோரது வீடுகளிலும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

                              விஜயபாஸ்கர்

                              விஜயபாஸ்கரின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் ஆகும். அமைச்சராக இருந்த காலத்தில் அவர் தனது சொந்த மாவட்டமான புதுக்கோட்டை உள்பட பல இடங்களில் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை வாங்கி இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

                              விஜயபாஸ்கரின் சகோதரர் நடத்தி வரும் மதர் தெரசா அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மதர் தெரசா பாலிடெக்னிக், கல்வி நிறுவனங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

                              விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, கொரோனா கால கட்டங்களில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

                              சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் 43 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். விஜயபாஸ்கரின் சொந்த ஊரான இலுப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 29 இடங்களில் சோதனை நடைபெற்றது.

                              இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு, மதர் தெரசா கல்வி நிறுவனங்கள், திருவேங்கைவாசலில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல் குவாரி, புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களான முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் சேட் என்ற அப்துல் ரகுமான் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது.

                              திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாருக்கு சொந்தமான வீடு, கிராப்பட்டி பகுதியில் உள்ள விஜயபாஸ்கரின் உறவினர் குருபாலன் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை தொடர்கிறது.

                              செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் புதுப்பட்டில் விஜயபாஸ்கரின் சகோதரி வீடு மற்றும் மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

                              காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் விஜயபாஸ்கரின் முன்னாள் உதவியாளர் அஜய்குமார் வீட்டில் சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது.

                              அஜய்குமார் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தேவேரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

                              கோவை ராமநாதபுரம் எஸ்.என்.வி. கார்டனில் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். கூடுதல் டி.எஸ்.பி. திவ்யா தலைமையில் 8 பேர் கொண்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

                              அனைத்து இடங்களிலும் இன்று காலை 6.30 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

                              சேத்துப்பட்டில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்படுவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

                              கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

                              கடந்த 10 ஆண்டுகளில் விஜயபாஸ்கரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

                              இன்று நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

                              இது தொடர்பான விரிவான தகவல்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மாலை வெளியிட உள்ளனர்.

                              43 இடங்களில் இன்று நடைபெற்ற சோதனையில் நூற்றுக்கணக்கான லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு இடங்களிலும் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

                                Posted in Uncategorized

                                பாலத்தில் தவறி விழுந்த எம்.பி

                                பாலத்தில் தவறி விழுந்த எம்.பி

                                பதுளை- ஹாலிஎல- ரஜமாவத்தையில் வெள்ளையர்களால் நிர்மாணிக்கப்பட்ட பாலத்தை கண்காணிக்கச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெர்ணான்டோ குறித்த பாலத்தில் தவறி விழுந்துள்ளார்.

                                113 அடி நீளமான குறித்த பாலம் பயணிக்க முடியாதளவு பழுதடைந்து உள்ளதால், இதனூடாகப் பயணிக்கும் ஹாலிஎல மற்றும் ஊவாபரணம விவசாயிகள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்துள்ளனர்.

                                குறித்த பாலத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நேற்று இடம்பெற்ற போது, அதனை கண்காணிப்பதற்காக, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கு வருகைத் தந்துள்ளார்.

                                இதன்போது, பிரதேசவாசிகளின் கோரிக்கைக்கமைய, பாலத்தில் நடந்த டிலான் எம்.பி, இவ்வாறு தவறி விழுந்துள்ளார்.

                                அப்போது அருகிலிருந்த மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் சாமிக புத்ததாச உள்ளிட்டவர்கள் டிலானை காப்பாற்றியுள்ளனர்.

                                இந்த நிலையில்,கீழே விழுந்து இந்த பாலத்தின் நிலைமையை தான் நன்றாக புரிந்துக்கொண்டதால், விரைவில் இதனை புனரமைக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

                                  Posted in Uncategorized

                                  பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கீறிய சிறுவன்

                                  பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கீறிய சிறுவன்

                                  இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல்கரனோயா தோட்டத்தில் (16) வயதுடைய சிறுவன் ஒருவரை இராகலை பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

                                  அல்கரனோயா தோட்டத்தில் வசிக்கும் இச் சிறுவன் தனது பக்கத்து வீட்டில் வசித்துவரும் ஐந்து வயதுடைய சிறுமியின் அந்தரங்க உறுப்பை நகரங்களால் கீறி காயப்படுத்தியுள்ளார்.

                                  இதுதொடர்பில், தன்னுடைய பெற்​றோருக்கு தெரிவிக்கவே, இராகலை பொலிஸில் சிறுமியின் பெற்றோர் முறையிட்டுள்ளனர். அதன்பின்னர், பொலிஸாரின் உதவியுடன் அச்சிறுமி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

                                  அதன்பின்னர் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். அவ்வாறு கைது செய்யப்பட்ட சிறுவனிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், அச்சிறுவனை வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

                                    Posted in Uncategorized

                                    பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

                                    பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

                                    எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.

                                    அத்துடன் 25ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு செல்லவும், மாற்று தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                    எதிர்வரும் 21ஆம் திகதியிலிருந்து படிப்படியாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.