சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தற்காலிக தடை
சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தற்காலிக தடை
வெல்லவாய – வெலியார பிரதேசத்திற்கு சுற்றுலாப் பிரயாணிகள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பிரதேச சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசத்திற்கு கடந்த சில தினங்களில் சென்ற சிலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதன் காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றுலா செயற்றிட்டத்தின் கீழ் பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட பின்னர் குறித்த பிரதேசம் மீண்டும் சுற்றுலாப் பிரயாணிகளுக்குத் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்
உயிர் குடித்த வேகம் – கண்ணீரில் கண்கள்
உயிர் குடித்த வேகம் – கண்ணீரில் கண்கள்
தவரன்குளம் – அனுராதபுரம் வீதியின் வங்கி ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
20 வயதுடைய குருன்தன்குளம் பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிக வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின் கம்பம் ஒன்றில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நயன்தாராவை காதலித்து ஆறு வருடம் – காதலன் நெகிழ்ச்சி
நயன்தாராவை காதலித்து ஆறு வருடம் – காதலன் நெகிழ்ச்சி
இயக்குனர் பாடலாசிரியராக இருக்கும் விக்னேஷ் சிவன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
6 ஆண்டுகள் ஆகிவிட்டது – விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி
நயன்தாரா – விக்னேஷ் சிவன்
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான படம் போடா போடி. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு ‘நானும் ரவுடி தான்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இதில் நயன்தாரா
மற்றும் விஜய் சேதுபதி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படமும் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தது.
நானும் ரவுடி தான் படத்தின் மூலம் ஒன்றாக இணைந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிஜ வாழ்க்கையிலும் இணைய முடிவு செய்தனர்.
பின்பு இருவரும் காதலிப்பதாக கூறினார்கள். மேலும் இருவரும் அடிக்கடி ஒன்றாக இணைந்து வெளிநாடுகளுக்கு சென்று நேரத்தை செலவிடுவார்கள்.
விக்னேஷ் சிவன், நயன்தாரா வெளிநாட்டுக்கு மட்டுமில்லாமல் கோயில்களுக்கும் அடிக்கடி செல்வார்கள். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இருக்கும் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர்.
நயன் தாரா – விக்னேஷ் சிவன்
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘ நானும் ரவுடி தான்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவுப்பெற்றுள்ளது. இதனால் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில்
நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ‘ 6 ஆண்டுகள் ஆகியது போல் தெரியவில்லை’ என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜிப்ரானின் வீரவணக்கம் பாடலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
ஜிப்ரானின் வீரவணக்கம் பாடலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
மக்களுக்காக உயிர் நீத்த காவல்துறை வீரர்களின் நினைவை போற்றும் வகையில், வீரவணக்க நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
ஜிப்ரானின் வீரவணக்கம் பாடலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
வீரவணக்கம் குழுவினர் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21 ஆம் நாள், இந்திய இறையாண்மையை காக்க உறுதிமொழி ஏற்று, மக்களுக்காக உயிர் நீத்த காவல்துறை வீரர்களின் நினைவை போற்றும் வகையில்,
வீரவணக்க நாள் கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி, வெள்ளம், சுனாமி, கொரோனா என எந்த பேரிடரிலும், களத்தில் முன் நின்று பணியாற்றிய காவல்துறைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்நாள் கொண்டாடப்படுகிறது.
ஜிப்ரான்
இந்த ஆண்டு இவ்விழாவை இன்னும் சிறப்பிக்கும் பொருட்டு, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், தலைமை காவல் அலுவலர் சசிகலா மற்றும் வெஸ்லி எழுத்தில், சசிகலாவும்,
பார்வையற்ற கலைஞரான திருமூர்த்தியும் இணைந்து பாடிய, “வீரவணக்கம்” ஆல்பம் பாடலை இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார்
நண்பர் மீது மோசடி புகார் கொடுத்த சஞ்சனா
நண்பர் மீது மோசடி புகார் கொடுத்த சஞ்சனா
போதை பொருள் வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் சஞ்சனா கல்ராணி, நண்பர் மீது மோசடி புகார் கூறியிருக்கிறார்.
நண்பர் மீது மோசடி புகார் கொடுத்த சஞ்சனா கல்ராணி
சஞ்சனா கல்ராணி
கடந்த ஆண்டு போதை பொருள் விற்பனை மற்றும் போதை பொருள் பயன்படுத்தியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் கன்னட நடிகை
சஞ்சனா கல்ராணி. தற்போது அந்த வழக்கில் இருந்து ஜாமீனில் விடுதலையாகி படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு ஒரு கால் டாக்சி டிரைவர் சஞ்சனா மீது போலீசில் புகார் அளித்தார். கார் பயணத்தில் தன்னை ஆபாசமாக திட்டியதாக அவர் புகாரில் கூறியிருந்தார். இந்நிலையில், தனது
நண்பர் ராகுல் டான்சி என்பவர் மீது நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கோவா மற்றும் கொழும்பில் இருக்கும் முதலீட்டு நிறுவனத்தின்
நிர்வாக இயக்குநராக பணியாற்றுவதாக என் நண்பர் ராகுல் டான்சி கூறியிருந்தார். அவரது பேச்சை நம்பி, கடந்த 3 ஆண்டுகளாக பணத்தை முதலீடு செய்தேன்.
சஞ்சனா கல்ராணி
ராகுல் டான்சி உள்பட 3 பேரின் வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பினேன். ஆனால், முதலீட்டுக்கான எந்தவித வட்டியையும் கொடுக்கவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டால்
மிரட்டுகின்றனர். ராகுல் டான்சி உள்ளிட்டோர் என் பணத்தை சட்டவிரோத செயல்களில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கின்றனர். என் கவுரவத்தை பாதிக்கும் வகையில் பொய்யான
குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக் தற்கொலை நேரலை புரிந்த நாபர் – மடக்கிய காவல்துறை
பேஸ்புக் தற்கொலை நேரலை புரிந்த நாபர் – மடக்கிய காவல்துறை
இந்தியா டில்லி பகுதியில் 45 வயதுடைய நபர் ஒருவர் பேஸ்புக்கில் நேரலையில் தான் தற்கொலை செய்ய போவாகக தெரிவித்துள்ளார்
இதனை பார்வையிட்ட பேஸ்புக் உடனடியாக காவல்துறைக்கு மெயில் அனுப்பியது ,இதனை தொடர்ந்து உஷாரான காவல்துறையினர் அந்த நபர் உள்ள இடத்தை கண்டு பிடித்தனர்
அப்போது அவர் வீட்டுக்குள் மயங்கிய நிலையில் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார்
இவர் மனைவியை பிரிந்து வசித்து வருவதாலும் ,உடல் நல குறைபட்டாலும் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது
கடும் வெள்ளம் 101 பேர் மரணம் – 50 பேரை காணவில்லை
கடும் வெள்ளம் 101 பேர் மரணம் – 50 பேரை காணவில்லை
நேபால் நாட்டில் பொழிந்து வரும் கடும் மழையால் அங்கு பாரிய வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது
இதில் சிக்கி இதுவரை ன் 101 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் காணமல் போயுள்ளனர்
ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன
மின்சாரம் ,நீர் விநியோகம் பல பகுதிகளில் முற்றாக தடை பட்டுள்ளது
எனினும் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
நாயகியாக களமிறங்கும் கோவை சரளா
நாயகியாக களமிறங்கும் கோவை சரளா
பல படங்களில் காமெடி வேடம் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்திய கோவை சரளா, தற்போது நாயகியாக களமிறங்க இருக்கிறார்.
நாயகியாக களமிறங்கும் கோவை சரளா
கோவை சரளா
தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் கோவை சரளா. ‘வெள்ளி ரதம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர்,
‘முந்தானை முடிச்சு’ ‘வைதேகி காத்திருந்தாள்’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இவர் கமல்ஹாசன் நடித்த ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இந்நிலையில் மைனா, கும்கி உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய பிரபு
சாலமன் இயக்கும் புதிய படத்தில் கதையின் நாயகியாக கோவை சரளா நடிக்கவுள்ளார். பாட்டி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள கோவை சரளா, தனது பேத்திக்கு நிகழ்ந்த அநீதிக்கு, நீதி வாங்கித்தரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கோவை சரளா
பிரபு சாலமன், தனது வழக்கமான படங்கள் போன்று முழுக்க முழுக்க மலை சார்ந்த பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார். விரைவில் இப்படத்தின் முழு விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உயிர் பிரியும் மர்மம்
உயிர் பிரியும் மர்மம்
ஏ மனிதா உன் உடலில்
ஏழடுக்கு தோலிருக்கு
ஓர் அடுக்கு தடுத்து விட்டால்
ஓர் உயிரும் பிரியாது
கட்டை விரல் ஊடக
கடைசி உயிர் பிரிந்திடுமாம்
கட்டை விரல் கட்டி போடும்
காரணங்கள் இதுவொன்றாம்
நாடி பிடித்து பார்த்த பின்னே
நல்ல மனிதன் செத்தான் என்பார்
இறந்து விட்டால் கருவிழியோ
இரண்டாக வெடித்திடுமாம்
அரவம் மனிதன் தீண்டி விடின்
அட இரண்டரை மணி முன் பிழைப்பார்
கவிழ் தும்பை சாறெடுத்து
காதோடு மூக்கு வழி
உயிர் பிரியும் மர்மம்
விட்டு பாரு பிழைத்திருப்பான்
வீரனாக உயிர்த்தெழுவான் – இல்லை
ஒற்றை காது உள் புகுந்து மறு காது வடிந்து விடின்
மரணித்தான் என்பாராம்
இறந்தவர்கள் மூன்று நாளின்
இடைவெளிக்குள் உயிர்த்திடுவார்
அதனாலே மூன்று நாள்
அவர் உடலை வைத்திருப்பார்
பண்டைய மருத்துவத்தின்
பறை சாற்றல் இதில் இருக்கு
இக்குறிப்பை எடுத்து வைத்து
இரண்டொருவர் பகிர்ந்து விடு
விலங்குகள் உயிர் பிழைக்கும்
விசித்திரம் இதில் இருக்கு
கானகத்தில் இம் மூலிகையை
கண்டு உண்டு உயிர் வாழும்
பார்த்தாயா என் மனிதா
படைத்தவனின் படையலதை
வீரப்பன் காட்டில் வாழ்ந்த
விசித்திரம் இது தானோ ..?
கடாறிந்த பழங்குடியின
கை வைத்தியம் இதுவன்றே
ஏ மனிதா கை கூப்பி
எமை படைத்தவனை வணங்கி விடு …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 21-10-2021
வன்னி மைந்தன் கவிதைகள்
வெடித்து சிதறிய காஸ் – 3 பேர் மரணம் – 33 பேர் காயம்
வெடித்து சிதறிய காஸ் – 3 பேர் மரணம் – 33 பேர் காயம்
சீனாவின் காஸ் வெடித்து சிதறியதால் இதுவரை மூவர் பலியாகியுள்ளனர் ,மேலும் முப்பத்தி மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
குறித்த விபத்து தொடபில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
எமது புதிய ஏவுகணை – அமெரிக்காவை தாக்காது – வடகொரியா
எமது புதிய ஏவுகணை – அமெரிக்காவை தாக்காது – வடகொரியா
நாம் புதிதாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து சோதனை புரிந்த ஏவுகணையானது அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்டதல்ல எனவும், இது தம்மை தாமே பாதுகாத்து கொள்ள உருவாக்க பட்ட சக்தி வாய்ந்த ஏவுகணை என வடகொரியா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
அமெரிக்கா அரேபிய நாடுகளை அடக்கி ஒடுக்கியது போன்று சிரியா ஈரானை அடக்கிவிட நினைத்தது ,ஆனால் அது தோற்று போன நிலையில் வாலை சுருட்டி கொண்டது
இதற்கு அமைவாக தம்மை தாமே நிலை நிறுத்தி கொள்ள வடகொரியா தொடர் ஏவுகணை சோதனையை புரிந்து வருகின்றமை குறிப்பிட தக்கது
வைரலாகும் அமலாபாலின் புதிய புகைப்படங்கள்
வைரலாகும் அமலாபாலின் புதிய புகைப்படங்கள்
பிரபல நடிகையாக இருக்கும் அமலாபால், தனது சமூக வலைத்தள பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.
வைரலாகும் அமலாபாலின் புதிய புகைப்படங்கள்
அமலாபால்
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். ஆனால் அவரது முதல் படமே சர்ச்சையை ஏற்படுத்தியது. மைனா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன் பின்னர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த அமலாபால் பிரபல இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின்னர்
விவாகரத்து பெற்றார். இதையடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம் போன்ற படங்கள் உள்ளன.
அமலாபால்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலாபால், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது புதிய புகைப்படங்களை பதிவு செய்து இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை சமந்தா
மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை சமந்தா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை சமந்தா
சமந்தா
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 4 ஆண்டுகளாக நீடித்து வந்த இவர்களது திருமண உறவு, அண்மையில் முடிவுக்கு வந்தது.
இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆனது. இதைத் தொடர்ந்து சமந்தா-வின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டன.
சமந்தா
இந்நிலையில், விவாகரத்து விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறாக தகவல்களை பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் வெங்கட்
ராவ் என்கிற வழக்கறிஞர், தனது திருமண வாழ்க்கை குறித்தும், தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் தவறாக பேசியதால், அவர்மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சமந்தா
ஷாருக்கான் ஜெயிலுக்கு சென்று மகனை நேரில் பார்த்து ஆறுதல்
ஷாருக்கான் ஜெயிலுக்கு சென்று மகனை நேரில் பார்த்து ஆறுதல்
போதைபொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யான் கானை, அவரது தந்தை ஷாருக்கான் இன்று நேரில் சந்தித்தார்.
நடிகர் ஷாருக்கான் ஜெயிலுக்கு சென்று மகனை நேரில் பார்த்து ஆறுதல்: தைரியமாக இருக்கும்படி கூறினார்
ஷாருக்கான்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கடந்த 3-ந்தேதி சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது கூட்டாளிகள் 7 பேரும் பிடிபட்டனர். அவர்களை கைது செய்த போதை தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சிறைக்குள் ஆர்யன்கான் மற்ற குற்றவாளிகளுடன் சேர்த்து அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு அவரது கை செலவுக்காக ரூ.4 ஆயிரத்து 500-ஐ நடிகர் ஷாருக்கான் அனுப்பி இருந்தார்.
ஆர்யன்கானை ஜாமீனில் எடுப்பதற்காக நடிகர் ஷாருக்கான் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க சிறப்பு கோர்ட்டு மறுத்துவிட்டது. வாட்ஸ்அப் தகவல்களில் ஆர்யன்கான் முதன்மை குற்றவாளி என்பதற்கு ஆதாரம் இருப்பதாக கூறி அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆர்யன்கான் மும்பை ஐகோர்ட்டில் தன்னை விடுதலை செய்யக்கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது ஆர்யன்கான் விடுதலை ஆவாரா? என்பது தெரியவரும்.
ஆர்யன்கானுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் அவரை அவரது குடும்பத்தினர் சந்தித்து பேச அனுமதி வழங்கப்படுவதாக மும்பை ஆர்தர் ஜெயில் நிர்வாகம் நேற்று அறிவித்தது. ஆர்யன்கான் வெளியில் இருந்து சட்ட விதிக்கு உட்பட்டு உதவிகளை பெறலாம் என்றும் சிறைத்துறை கூறி இருந்தது.
இதன் காரணமாக நடிகர் ஷாருக்கான் இன்று காலை 9 மணிக்கு மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறைச்சாலைக்கு சென்றார். அங்கு அவர் அனுமதி பெற்று ஆர்யன்கானை சந்தித்து பேசினார். சுமார் 10 நிமிடங்கள் மகனுடன் ஷாருக்கான் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அவர் கண்ணீர் மல்க தைரியமாக இருக்கும்படி ஆர்யன்கானிடம் கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பு மிகவும் உருக்கமானதாக இருந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
9.35 மணிக்கு ஷாருக்கான் அங்கிருந்து விடைபெற்று காரில் புறப்பட்டு சென்றார். ஷாருக்கான் சிறைக்கு வந்திருக்கும் தகவல் அறிந்ததும் ஏராளமானோர் ஆர்தர் சாலையில் குவிந்தனர். இதையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.
சமூக வலைதளம் உருவாக்கிய டொனால்டு டிரம்ப்
சமூக வலைதளம் உருவாக்கிய டொனால்டு டிரம்ப்
சமூக வலைதளங்கள் டொனால்டு டிரம்ப் கணக்குகளை முடக்கிய நிலையில், தனி சமூக வலைதளத்தை உருவாக்கியுள்ளார்.
தனி சமூக வலைதளம் உருவாக்கிய டொனால்டு டிரம்ப்
டொனால்டு டிரம்ப்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜோ பைடன் களம் இறங்கினார். இந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார்.
தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். இதனால் சமூக வலைதளங்கள் இவரது கணக்குகளை முடக்கின. ஆகவே, சமூக வலைதளங்களுக்கும் டிரம்பிற்கும் இடையில் பனிப்போர் நடைபெற்றது.
இந்த நிலையில் தனி சமூக வலைதளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதற்கு Truth Social (உண்மை சமூகம்) எனப் பெயரிட்டுள்ளார். இதன் பீட்டா பதிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
டொனால்டு டிரம்ப்
மேலும், தலிபான்கள் டுவிட்டரில் மிகப்பெரிய அளவில் செயல்முறையில் இருக்கையில் நாம் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுவரை உங்களுக்கு பிடித்தமான அமெரிக்க ஜனாதிபதி அமைதியாக இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.
70 வயதில் குழந்தை பெற்ற பெண்மணி
70 வயதில் குழந்தை பெற்ற பெண்மணி
குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஜிவுன்பென் ரபாரி செயற்கை கருத்தரிப்பு மூலம் ஆண் குழந்தையை பெற்றுள்ளார்.
70 வயதில் குழந்தை பெற்ற பெண்மணி
குழந்தையுடன் ஜிவுன்பென் ரபாரி
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் மோடா கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதி வல்ஜிபாய் ரபாரி (வயது 75). ஜிவுன்பென் ரபாரி (70), இந்த தம்பதிக்கு திருமணமாகி 45 ஆண்டுகளாக குழந்தை இல்லை. வயதானாலும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பிய அவர்கள் செயற்கை கருத்தரிப்பு மையத்தினை அணுகினர்.
இந்நிலையில் ஜிவுன்பென் ரபாரி செயற்கை கருத்தரிப்பு மூலம் ஆண் குழந்தையை பெற்றுள்ளார். வயதான நிலையிலும் குழந்தை பெற்ற அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், குழந்தையுடன் அவர்கள் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.
இரட்டை குழந்தைகள்
இதற்கு முன்னதாக, 2019-ம் ஆண்டில், ஆந்திராவை சேர்ந்த 74 வயதான மங்கையம்மா என்பவர் செயற்கை கருத்தரிப்பு மூலம் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்பத்திரியில் எடப்பாடி பழனிசாமி
ஆஸ்பத்திரியில் எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னை எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் எடப்பாடி பழனிசாமி சிகிச்சைக்காக அனுமதி
எடப்பாடி பழனிசாமி
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை 6.30 மணிக்கு சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் ரோட்டில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் முதல்-அமைச்சராக இருந்த போது இந்த ஆஸ்பத்திரியில் ஏற்கனவே குடல் இறக்கம் அறுவை சிகிச்சை செய்திருந்தார்.
இந்த நிலையில் உடல் பரிசோதனைக்காக மீண்டும் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் என்டோஸ்கோபி பரிசோதனை மேற்கொண்டதாக தெரிகிறது.
உடல் பரிசோதனை முடிந்த நிலையில் இன்று அவர் வீடு திரும்பினார்.
தம்பியை அடித்து கொன்ற அண்ணன்
தம்பியை அடித்து கொன்ற அண்ணன்
கிரான்பாஸ், கஜீமா தோட்டம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளது.
சகோதரர்கள் இருவருக்கு இடையில் இடம்பெற்ற பணப்பிரச்சினை காரணமாக இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் 28 வயதுடைய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரான்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
குண்டை காட்டி மனைவியை மிரட்டிய கணவன்
குண்டை காட்டி மனைவியை மிரட்டிய கணவன்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசன் தீவு பகுதியில் கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த நபரை, இம்மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.பி.அன்பர், நேற்று (20) உத்தரவிட்டார்.
கிண்ணியா,பூவரசந்தீவு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவில் சேவையாற்றிய இவர், முறையான அங்கிகாரத்துடன் இராணுவ சேவையில் இருந்து விலகிவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கணவனுக்கும் மனைவிக்குமிடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், கணவரான முன்னாள் இராணுவ வீரர், தனது மனைவியை கைக்குண்டை காட்டி பயமுறுத்துவதற்காக பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் தொடர்பாக கிண்ணியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபரை கைக்குண்டுடன் கைது செய்து, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
வீட்டில் நித்திரையில் இருந்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்
வீட்டில் நித்திரையில் இருந்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்
தூங்கிக் கொண்டிருந்த யுவதி ஒருவரின் தங்கச் சங்கிலியை திருடன் ஒருவன் அறுத்துச் சென்றுள்ள சம்பவமொன்று, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – பதுரியா நகரிலுள்ள வீடொன்றிலே நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளது.
வீட்டார் தூங்கிக் கொண்டிருக்கும் போது, கதவை உடைத்து உள்நுழைந்த திருடன், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 10,000 ரூபாய்க்கும் மேற்பட்ட பணத்தையும் நகையையும் திருடிவிட்டு, தூங்கிக்
கொண்டிருந்த யுவதியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியையும் அறுத்துச் சென்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு திருட்டில் ஈடுபட்ட திருடன், அலுமாரியில் இருந்த விலையுயர்ந்த கையடக்கத் தொலைபேசியை திருடாமல் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இத் திருட்டுச் சம்பவத்தை கண்டுபிடிக்க வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்..







