Tag: வீழ்ந்த பெண்
Posted in இலங்கை செய்திகள்
பேரூந்தில் இருந்து வீழ்ந்த பெண் – சாரதியை தாக்கிய மக்கள்
Author: நலன் விரும்பி Published Date: 19/10/2021 Leave a Comment on பேரூந்தில் இருந்து வீழ்ந்த பெண் – சாரதியை தாக்கிய மக்கள்
பேரூந்தில் இருந்து வீழ்ந்த பெண் – சாரதியை தாக்கிய மக்கள்
பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பண்டாரவெல, ஹல்பே பகுதியில் வைத்து பண்டாரவெலயில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றின் மிதி பலகையில் இருந்து பெண் ஒருவர் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
பேருந்தில் இருந்து தனது சிறிய மகளை இறக்கி விட்டு குறித்த பெண் இறங்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் பேருந்து முன்னோக்கி சென்றுள்ளது.
இதன்போது குறித்த பெண் மிதி பலகையில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதனைபடுத்து அங்கிருந்த சிலர் குறித்த பெண்ணை தூக்கிவிட்டு பேருந்து ஓட்டுனர் மீது தாக்கல் நடத்த முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.






