பிரிட்டனில் இரு மனித சடலம் வீட்டில் மீட்பு
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் இரு மனித சடலம் வீட்டில் மீட்பு

பிரிட்டனில் இரு மனித சடலம் வீட்டில் மீட்பு

பிரிட்டனில் இரு மனித சடலம் வீட்டில் மீட்பு தனித்தனி வீடுகளில் சிறுவன் மற்றும் ஆணின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

மேற்கு டப்ளினில் உள்ள இரண்டு தனித்தனி வீடுகளில்

மேற்கு டப்ளினில் உள்ள இரண்டு தனித்தனி வீடுகளில் ஒரு சிறுவன் மற்றும் ஆணின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை ஐரிஷ் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் பாலிஃபெர்மோட்டின் செர்ரி ஆர்ச்சர்ட் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

40 வயது மதிக்கத்தக்க அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.

தொடர் விசாரணைகளின் போது, ​​குளோண்டால்கினில் உள்ள ஒரு வீட்டில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

தடயவியல் பரிசோதனைக்காக இரு இடங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன, இது ஐரிஷ் காவல் சேவையான அன் கார்டா சியோச்சனாவின் தொழில்நுட்ப பணியகத்தால் நடத்தப்படும்.

பிரேத பரிசோதனை அதிகாரி

பிரேத பரிசோதனை அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டு, மாநில நோயியல் நிபுணர் அலுவலகத்தின் சேவைகள் கோரப்பட்டுள்ளன.

சம்பவ இடத்திலிருந்து நகர பிணவறைக்கு அந்த நபரின் உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மதியம் சிறுவனின் உடல் சம்பவ இடத்திலேயே இருந்தது.

பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

ரயிலில் மோதி உயிரிழந்த ஆணின் பாகங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ரயிலில் மோதி உயிரிழந்த ஆணின் பாகங்கள் மீட்பு

ரயிலில் மோதி உயிரிழந்த ஆணின் பாகங்கள் மீட்பு

ரயிலில் மோதி உயிரிழந்த ஆணின் பாகங்கள் மீட்பு ,தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி உடல் அவயவயங்கள் துண்டாடப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை (28) அன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர்

சடலமாக மீட்கப்பட்ட நபர், நீர்கொழும்பைச் சேர்ந்த W.M.A. சரத் அந்தோனி (வயது-60) என தெரியவந்துள்ளது.

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி ஞாயிற்றுக்கிழமை (28) அன்று காலை பயணித்த குறித்த புகையிரதம், சௌத் பார் புகையிரத நிலையத்தில்

தரித்து நின்று மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கி பயணித்துள்ளது.

சௌத்பார் -தள்ளாடி புகையிரத வீதி, இரட்டை கண் பாலத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி உடல் பாகங்கள் சிதறிய நிலையில் குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த திடீர் மரண விசாரணை அதிகாரி பி.பிரபா நந்தன் சடலத்தை பார்வையிட்டார்.

இதன் போது அவரது உடமையில் இருந்து மீட்கப்பட்ட தேசிய அடையாள அட்டை,சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றை வைத்து குறித்த நபர் W.M.A.

சரத் அந்தோனி (வயது-60) எனவும் நீர்கொழும்பைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டது .

ஒரு தொகை பணம்

அவரது உடமையில் இருந்து ஒரு தொகை பணம் மற்றும் தலைமன்னாருக்கு சனிக்கிழமை (27) அன்று பயணிப்பதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட 205 ரூபாயாக்கான புகையிரத டிக்கெட் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இரண்டு சடலங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு சடலங்கள் மீட்பு

இரண்டு சடலங்கள் மீட்பு

இரண்டு சடலங்கள் மீட்பு .தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வரும் கைவிடப்பட்ட வீட்டில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நடத்தப்பட்ட சோதனை

அந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் (படிக

மெத்தம்பேட்டமைன்) என்ற போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 10 பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் இருந்த மற்றொரு நபர் திடீரென நோய்வாய்ப்பட்டு தங்காலை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சிகிச்சை பெற்று வந்த அவர் பின்னர் உயிரிழந்தார்.

பொலிஸார் முழு அளவிலான விசாரணை

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் முழு அளவிலான விசாரணையை தொடங்கியுள்ளனர்,

அதே நேரத்தில் இறப்புக்கான காரணங்களைக் கண்டறிய அரசு பகுப்பாய்வாளர் துறை பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

8எலும்பு கூடுகள் மீட்பு செம்மணியில்
Posted in இலங்கை செய்திகள்

செம்மணியில் 240 சடலங்கள் மீட்பு

செம்மணியில் 240 சடலங்கள் மீட்பு

செம்மணியில் 240 சடலங்கள் மீட்பு ,யாழ்ப்பாணம் செம்மணி மயானத்தின் அருகில் தமிழர்கள் கைது செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் 30 வருடங்களின் பின்னர் தற்பொழுது சடலங்கலாங்களாக மீட்க பட்டுள்ளனர் .240 bodies recovered in Semmani

240 க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள் .

சிங்கள அரச பயங்கரமாத ராணுவத்தினரால் கைது Arrested by Sinhala government terror forces

சிங்கள அரச பயங்கரமாத ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு செல்லப்பட்ட தமிழர்கள் மிகக் கொடூரமாக வதைகள் செய்யப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவமாக இது காணப்படுகிறது .

இந்த எலும்புக்கூடுகள் மீட்பு சம்பவங்கள் சாட்சியாக இருக்கிறது .

சர்வதேச விசாரணை மேற்கொண்டு தமிழர்களை தண்டித்தவர்களை நீதியின் நிறுத்துவர்களை எதிர்பார்க்கப்படுகிற பொழுதும் அது இன்னும் கட்டப்படவில்லை.

இலங்கையை ஆண்ட ஜனாதிபதிகள் Presidents who ruled Sri Lanka

தொடர்ந்து 800க்கு மேற்பட்ட சடலங்கள் இருப்பதாகவும் அவை யாவும் போர்க்கால பகுதியில் இலங்கையை ஆண்ட ஜனாதிபதிகளின்

ஆட்சிக்காலத்தில் இராணுவத்தினரால் கொன்று புதைக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

விடுதலைப் புலிகள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டவர்கள்.

பாலியல் துன்பங்களுக்கு பின்னர் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் காணப்படுகிறது.

குளத்தில் இருந்து சடலமொன்று மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

குளத்தில் இருந்து சடலமொன்று மீட்பு

குளத்தில் இருந்து சடலமொன்று மீட்பு

குளத்தில் இருந்து சடலமொன்று மீட்பு ,கண்டி பெரஹெர நிகழ்வில் பங்கேற்பதற்காக யானையுடன் கண்டிக்கு வருகைதந்திருந்த யானைப்பாகனின் உதவியாளர் ஒருவர் இன்று (31) காலை கண்டி குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கண்டி கதிர்காம தேவாலயத்தில்

குறித்த நபர் கண்டி கதிர்காம தேவாலயத்தில் நடைபெறும் பெரஹெர நிகழ்வில் பங்கேற்க அரநாயக்க பகுதியில் இருந்து வந்திருந்தார்.

அவர் யானை பாகன் ஒருவரின் உதவியாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

உயிரிழந்த நபர் 28 வயதான அச்சலங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கண்டி தலைமையக பொலிஸார் விசாரணை

இந்த விவகாரம் குறித்து கண்டி தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடற்கரைப் பகுதியில் மூவரின்சடலங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கடற்கரைப் பகுதியில் மூவரின்சடலங்கள் மீட்பு

கடற்கரைப் பகுதியில் மூவரின்சடலங்கள் மீட்பு

கடற்கரைப் பகுதியில் மூவரின்சடலங்கள் மீட்பு ,மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுதுவாவ் கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய நிலையில், ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

மரணித்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை

மரணித்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, நீல நிற காற்சட்டை மற்றும் சிவப்பு கோடு வந்த நீல நிற டீ-சர்ட் அணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் நேற்று (02) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் குழு குறித்த சடலத்தை கண்டு பொலிஸாரிடம் தகவல் வழங்கியுள்ளனர்.

தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தபோது, குறித்த சடலத்தை அவதானித்த தொழிலாளர்கள், உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் உயிரிழந்தவர் சுமார் 73 வயது கொண்டவராக இருக்கலாம் என பொலிஸார்

சடலம் தற்போது டிக்கோயா ஆதார வைத்தியசாலை

தெரிவித்ததோடு, சடலம் தற்போது டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் கல்கிஸ்ஸ கடற்கரைப் பகுதியிலும் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ ​பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மயக்கமடைந்த பெண்ணிடமிருந்து ஆயுதங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மயக்கமடைந்த பெண்ணிடமிருந்து ஆயுதங்கள் மீட்பு

மயக்கமடைந்த பெண்ணிடமிருந்து ஆயுதங்கள் மீட்பு

மயக்கமடைந்த பெண்ணிடமிருந்து ஆயுதங்கள் மீட்பு ,வத்தளை, ஹேகித்த வீதியில் உள்ள வாடகை விடுதியில் குளியலறையில் மயக்கமடைந்த ஒரு பெண்ணை சோதனை செய்து விசாரித்தபோது, ​​வெளிநாட்டில் வசிக்கும் ஒரு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியால் அவருக்கு வழங்கப்பட்ட T-56 துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும் மெத்தம்பேட்டமைன் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க முடிந்ததாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கியை வைத்திருந்த அவரது காதலன் என்று கூறப்படும் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரான அந்த பெண்ணிடம் இருந்து ஐஸ் என்ற போதைப்பொருள் மற்றும் ஒரு T-56 துப்பாக்கி, 113 தோட்டாக்கள் மற்றும் 4 மகசின்கள்

ஆகியவற்றைக் கண்டுபிடிக்க முடிந்ததாக ​பொலிஸார் கூறுகின்றனர், இவை காதலன் என்று கூறப்படுபவரின் வசம் இருந்தன.

வத்தளை, ஹேகித்த வீதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் பெண் ஒருவர் தூக்கில் தொங்கியதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, வத்தளை பொலிஸார் விசாரணை நடத்தச் சென்றபோது, ​​தங்கும் விடுதியின்

அறையொன்றில் உள்ள குளியலறையில் அந்தப் பெண் மயக்கமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நின்றுகொண்டிருந்த சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

நின்றுகொண்டிருந்த சடலம் மீட்பு

நின்றுகொண்டிருந்த சடலம் மீட்பு

நின்றுகொண்டிருந்த சடலம் மீட்பு ,மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உருக்குலைந்துள்ள சடலம் ஒன்று இருப்பதாக பொதுமக்கள் புதன்கிழமை (05) மாலை தகவல் வழங்கியதாக அக்கரைப்பற்று பொலிஸார்

தெரிவித்தனர். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை முள்ளிமலையடி பிரதேசத்தில் இந்த சடலம் தொங்கிய நிலையில் நின்று கொண்டிருந்தது.

குறித்த பிரதேசத்தில் கடந்த ஒரு கிழமையாக துர்நாற்றம் வீசி வந்துள்ள நிலையில் சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் அந்த பகுதியை சுற்றி

சோதனையிட்டபோது அங்கு மரம் ஒன்றில் தொங்கி உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தனர்

இதனையடுத்து குறித்த பகுதியில் யானைகள் நடமாடுவதால் அங்கு பொலிஸார் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வியாழக்கிழமை (06)

காலையில் சென்று சடலத்தை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள தாகவும் இதுவரை சடலம் அடைiயாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 35 முதல் 38 வரையான வயதுடையதாக மதிக்கப்படும் இச்சடலமானது கடும் நீல நிற ரீசேட் அணிந்து காணப்படுவதுடன் 5 அடி உயரம் கொண்டதாக

காணப்படுவதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டின் சில பகுதிகளில் 3 சடலங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் 3 சடலங்கள் மீட்பு

நாட்டின் சில பகுதிகளில் 3 சடலங்கள் மீட்பு

நாட்டின் சில பகுதிகளில் 3 சடலங்கள் மீட்பு ,நாட்டின் சில பகுதிகளில் மீட்கப்பட்டுள்ள அடையாளம் தெரியாத சடலங்கள் குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவால் அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

இந்த சடலங்கள் நேற்று (18) மீட்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

மில்லனிய பொலிஸ் பிரிவில் உள்ள ஹால்தோட்ட கால்வாயின் கரையில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் காணப்படுவதாக நேற்று மாலை கிடைத்த தகவலைத் தொடர்ந்து மில்லனிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உடலின் மேல் பகுதி மட்டுமே எஞ்சியிருப்பதையும், ஏனைய பகுதியில் எலும்புக்கூடு எச்சங்களே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் நீதவான் விசாரணைக்காக பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், மில்லனிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், நேற்று மதியம், கிரியெல்ல பொலிஸ் பிரிவின் குருகம்மோதர பகுதியில் உள்ள களுகங்கையில் சடலம் ஒன்று மிதப்பதாக கிரியெல்ல பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, முன்னெடுத்த விசாரணையில் சடலத்தின் எலும்புக்கூடுகள் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும், தலை பகுதி இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

இறந்தவர் ஒரு ஆண் என்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இறந்தவர் வெளிர் நீல நிற காற்சட்டை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் இரத்தினபுரி மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கிரியெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்டசின்ன உப்போடை வாவியில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, விசாரணையில் இறந்தவர் 60-70 வயதுக்குட்பட்ட மெலிந்த உடலமைப்பு கொண்ட பெண் என்பது தெரியவந்தது.

அவர் இறுதியாக வெள்ளை மற்றும் பச்சை நிறங்கள் கலந்த கவுன் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலத்தின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், தற்போது மட்டக்களப்பு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வீதியில் மனித சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வீதியில் மனித சடலம் மீட்பு

வீதியில் மனித சடலம் மீட்பு

வீதியில் மனித சடலம் மீட்பு. கொழும்பு புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகத்தில் இன்று காலை ஆணுறுவது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையில் தெரிவித்துள்ளனர் .

மீட்கப்பட்ட சடலம் தற்பொழுது மருத்துவ பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிகமாக பாவனைக்கு உட்படுத்தப்படும் இந்த பகுதியில் இந்த ஆண் எவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இவர் படுகொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது தற்கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது இயற்கை மரணம் ஏதும் எய்தினார் என்பது தொடர்பில் வைசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

வீடியோ

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் உடனடியாக இந்த சடலம் தொடர்பான விடயங்கள் தெரிய வரவில்லை எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர் .

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான மனித சடலங்கள் காடுகள் ,நீர் ஏரிகள் மற்றும் பாழடைந்த வீடுகள் உள்ளிட்டவத்ரில் இருந்து மீட்க பட்டு வருகிறது .

இவ்வாறான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் இவர் அந்த கொலைகள் படுகொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.

அழுகிய நிலையில் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

அழுகிய நிலையில் சடலம் மீட்பு

அழுகிய நிலையில் சடலம் மீட்பு

அழுகிய நிலையில் சடலம் மீட்பு , மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு காவல்துறை பகுதியில் உள்ளிட்ட சிற்பத்து பகுதியில் உள்ள நீர் நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கடந்த தினம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.

காணாமல் போன நபர் ஒருவர் தற்பொழுது ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தீவு பகுதி மக்கள் மத்தியில் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .

இவர் மீன்பிடிக்க சென்றபோது இறந்தாரா அல்லது தற்கொலை செய்தாரா அல்லது படுகொலை செய்யப்பட்டு ஆற்றில் சடலமாக

வீசப்பட்டாரா என்பது தொடர்பாக காவல்துறையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடியோ

நீர் நிலைகளிலிருந்து மனித சடலங்கள் அவ்வப்போது மீட்கப்பட்டு வருகின்ற சம்பவங்களின் பின்புலத்தில் திட்டமிடப்பட்ட படுகொலையாளிகள் மாவியாக்கள் இருப்பதாகவே சந்தேகிக்கப்படுகிறது.

இலங்கையில் நாள்தோறும் காடுகள் நீரேறிகள் வீடுகள் பால் அடைந்த கழிவறைகள் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

சிசுவின் சடலம் பாலத்தில் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

சிசுவின் சடலம் பாலத்தில் மீட்பு

சிசுவின் சடலம் பாலத்தில் மீட்பு

சிசுவின் சடலம் பாலத்தில் மீட்பு , இலங்கை தமிழர் கூட கோபாலத்திற்குள் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் சிசு ஒன்று சுடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியில் பயணித்த ஒருவர் போலீசாருக்கு வழங்கிய விசேட தகவலை அடுத்து திடீரென அங்கு சென்று சுற்றி வளைத்து தேர்தலை நடத்திய போலீசார் அங்கு இறந்த நிலையில் காணப்பட்டசிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது .

தற்பொழுது வீதியில் பழத்தில் மீட்க பட்ட சிசு பேருலை சீமாட்டி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது .

எனினும் அந்த சிசு ஏற்கனவே இறந்துவிட்டதாக சிசுவை பரிசோதித்த வைத்தியர்கள் தெரிவித்தனர் .

கள்ள உறவு காரணமாக இந்த சிசு பிறந்திருக்க கூடும் எனவும் தற்பொழுது இந்த குழந்தையை பெற்று வீசிவிட்டு சென்ற தாயினை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரவாக்கம் ஈடுபட்டு வருகின்றனர் .

இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறு பிள்ளைகளை பெற்று வீதியிலே வீசி செல்கின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.

வீடியோ

தற்பொழுது சிசுவைப் பெற்று எறிந்து விட்டு ஓடிய அந்த தாயினை கைது செய்யும் நடவடிக்கை தாங்கள் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் ஊடகங்களுக்கு செய்திகளை வெளியிட்டு இருக்கின்றனர் .

என்று இந்த சீரழிவுகள் நீர்க்கப்படும் சமூக சீர்கேடுகள் தடுத்து நிறுத்தப்படும் ,மக்கள் பாதுகாக்கப்படுவார்களா..?

பாலியல் கல்வி இலங்கையில் அவசியம் கற்றுக் கொடுக்கப்பட வேண்டிய நிலையை இந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டி உள்ளது.

வாக்களிப்பு நிலையத்தில் இருந்து சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வாக்களிப்பு நிலையத்தில் இருந்து சடலம் மீட்பு

வாக்களிப்பு நிலையத்தில் இருந்து சடலம் மீட்பு

வாக்களிப்பு நிலையத்தில் இருந்து சடலம் மீட்பு ,யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சுபாஷ் எனும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் புதன்கிழமை (13) முதல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த

குறித்த நபர் வியாழக்கிழமை (14) காலை உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

அதனையடுத்து சடலத்தை மீட்ட கோப்பாய் பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் , போதனா வைத்தியசாலையில் சடலத்தை

ஒப்படைத்துள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச் சம்பவத்தினால் இன்றைய தினம் காலை குறித்த வாக்களிப்பு நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன் , பிறிதொரு பொலிஸ்

உத்தியோகத்தர் கடமைக்கு அமர்த்தப்பட்டு , வாக்களிப்பு சுமூகமான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

உலக முடிவிலிருந்து வீசப்பட்ட சாரதியின் சடலம் மீட்பு
Posted in உலக செய்திகள்

உலக முடிவிலிருந்து வீசப்பட்ட சாரதியின் சடலம் மீட்பு

உலக முடிவிலிருந்து வீசப்பட்ட சாரதியின் சடலம் மீட்பு

உலக முடிவிலிருந்து வீசப்பட்ட சாரதியின் சடலம் மீட்பு ,அடித்துக் கொன்று சிறிய உலக முடிவிலிருந்து பள்ளத்திற்கு வீசப்பட்ட ஹாலி எல ரொசெட்வத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதியின்

சடலம் 16 நாட்களுக்கு பின்னர் புதன்கிழமை (16) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மடுல்சீம பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லவாய குடா ஓயா இராணுவ முகாமின் கமாண்டோ அதிகாரிகள் குழுவொன்று கயிறுகளின் உதவியுடன் புதன்கிழமை (16) பிற்பகல் மடுல்சீம சிறிய உலக முடிவின் பள்ளத்தில் இறங்கி மேற்கொண்ட சோதனையின் போது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சடலத்தை உரப் பையில் கட்டி கயிறு, மூலம் பெரும் முயற்சியுடன் மேலே எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு

ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு

ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு ,பாணந்துறை கல்கொட ஸ்ரீ மகா விகாரஸ்த வீதியிலுள்ள வீடொன்றில் ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பெண்ணின் சடலம் வீட்டின் தரையிலும் , ஆணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையிலும் காணப்பட்டதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் தகாத தொடர்பில் இருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் பெண்ணை கொலை செய்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

47 வயதுடைய ஆணும் 42 வயதுடைய பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்ரேல் கைதிகள் 6பேர் சடலமாக மீட்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

இஸ்ரேல் கைதிகள் 6பேர் சடலமாக மீட்பு

இஸ்ரேல் கைதிகள் 6பேர் சடலமாக மீட்பு

இஸ்ரேல் கைதிகள் 6பேர் சடலமாக மீட்பு ,பலஸ்தீனம் காசா பகுதியில் ஹமாஸ் மக்கள் போராளிகளினால் கடத்தி செல்ல பட்ட ஆறு இஸ்ரேலியர்கள் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .

இவ்வாறு சடலமாக மீட்க பட்ட ஆறுபேரில் பெண்களும் உள்ளடக்கம் பெறுகின்றனர் .

இவ்வாறு மீட்க பட்டவர்களில் இராணுவ பெண்கள் உள்ளடக்கம் பெறுகின்றனர் என்கின்ற விடயம் வெளியாகியுள்ளது .

கைதிகளை மீட்க போராடும் , மக்களுக்கு இந்த கைதிகள் சடலமாக மீட்க பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தற்போது இஸ்ரேல் மக்கள் ஏனைய கைதிகளை உடனடியாக மீட்டு தருமாறு கோரி வீதி இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர் .

20கோடிரூபா தங்கம் ஆற்றிலிருந்து மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

20கோடிரூபா தங்கம் ஆற்றிலிருந்து மீட்பு

20கோடிரூபா தங்கம் ஆற்றிலிருந்து மீட்பு

20கோடிரூபா தங்கம் ஆற்றிலிருந்து மீட்பு ,கல்பிட்டி தேரொடி குளத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 20 கோடி ரூபா பெருமதியிலான தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக கடற் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக கடல் வழியாக கடத்தி வரப்பட்ட தங்கம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஆற்றுக்குள் தடாகம் ஒன்றை அமைத்து மறுத்து வைக்கப்பட்டிருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

இராணுவத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி தங்க வேட்டை நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல் நடத்தப்பட்டதாகவும் ,அதன் பொழுதே இந்த தங்கம் அங்கிருந்து முழுக்க பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரதமாக போதைவஸ்து தங்கங்கள் என்பன கடத்தப்பட்டு வருவதாக க தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையிலேயே, தற்போது நான்கு கிலோவுக்கு மேற்பட்ட தங்கங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்துச் செல்லும் இவ்வாறான கடத்தல்களை கடல் வழியான கடற்கரை தடுப்பதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கையை இலங்கை கடற்படை மேற்கொண்டு வருகின்றது.

அவ்வாறு மேற்கொண்டு வருகின்ற பொழுது நடவடிக்கை மேற்கொள்ளாது இலங்கை கடற்படை மவுனமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வந்து நிலையிலே தற்போது இந்த 20 கோடி ரூபா தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் காலத்தில் மறைத்து வைக்கப்பட்ட தங்கங்களை தேடி எழுந்த இராணுவம் போலீசார் கடற்படை இப்பொழுது இந்தியாவில் இருந்து வருகின்றவர்கள் தங்கங்கள் போன்றவை கடத்தி பெறுவதாக கூறி அந்த தங்க கடத்திலே முறியடிப்பதில் ஈடுபட்டுள்ளது இதன் ஊடாக ஆம்பள பட்டுள்ளது.

கை குண்டு காத்தான்குடியில் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கை குண்டு காத்தான்குடியில் மீட்பு

கை குண்டு காத்தான்குடியில் மீட்பு

கை குண்டு காத்தான்குடியில் மீட்பு ,காத்தான்குடி பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான வீட்டின் அருகில் இருந்து கைகொண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பச்சை வீட்டு திட்டம் என அழைக்கப்படும் முகைதீன் யும் பள்ளி வீதியின் வீடு ஒன்றின் முன்னால் உள்ள வடிகானுக்குள் இருந்து .கைக் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் காத்தான்குடியில் மிகப்பெரிய ஆயுத கலாச்சாரங்கள் இடம் பெற்று வருகின்ற சம்பவம் ,

வளமையான பாணியில் இடம் பெறுவதற்கான முடிகின்றது தேவாலயங்கள் தாக்குதல் சம்பவம் காத்தான்குடியை மிகப் பிரபலமான ஒன்றாக காணப்பட்டிருந்தது.

குண்டு தாக்குதல்

தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலின் மிக முக்கியமான நபர் காத்தான்குடி பகுதியில் இருந்து காணப்பட்டார் .

அவரது நபர் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியதும் இதே காத்தான் குடியாகும்.

அவ்வாறான காலப்பகுதியில் இப்பொழுது தேர்தல் இடம்பெற ஆரம்பித்திருக்கின்ற இந்த வேளையில் ,

இதே காத்தான்குடி பகுதியில் சம்பவம் மூலமும் இலங்கையில் ஒரு ரத்த கலவை ஏற்படுத்துவதற்கான முன் அறிவிப்பாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.

மக்கள் மீது தாக்குதலை நடத்தி அதனை புலிகள் தங்கிட வந்துள்ளார்கள் என காண்பித்து, அதன் ஊடாக சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கான ஒரு நடவடிக்கையாக இது காணப்படுகின்றது .

மேலும் ஆளும்கட்சிக்கு எதிரான ஒரு திசை திருப்பி தாக்குதலை நடத்தி தாங்கள் வெற்றி பெறுவதற்கான ,வாய்ப்பையும் இது ஏற்படுத்துவதற்கான ஒரு நகர்வாக உள்ளதா என்கின்ற சந்தேகத்தையும் வெளிப்படுத்தி உள்ளது.

4 சடலங்கள் மீட்பு
Posted in உலக செய்திகள்

4 சடலங்கள் மீட்பு

4 சடலங்கள் மீட்பு

4 சடலங்கள் மீட்பு, அமெரிக்கா தலைநகர் நியூ யோர்க்கில் உள்ள அப்பார்மென்ட் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் இருந்து நான்கு மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

இந்த கொலைகள் எவ்வாறு இடம்பெற்றன என்பது தொடர்பில் குற்ற தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

அமெரிக்காவில் சமீப காலங்களாக அதிகரித்து செல்லும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிக்கி நாள்தோறும் நூற்று கணக்கில் மக்கள் பலியாகி வருவதாக தகவல் வெளியாகி இருந்ததன .

அவ்வாறன சம்பவமாக இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பார்க்க படுவதாக தெரிவிக்க படுகிறது .

ஆயுத பயன்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்தும் படி மக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்ற பொழுதும் ,அதனை செவி மடுக்காத அரசின் கொள்கை காரணமாகவே இந்த விடயங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மேற்படி கொலை சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

யாழில் மனித சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் மனித சடலம் மீட்பு

யாழில் மனித சடலம் மீட்பு

யாழில் மனித சடலம் மீட்பு ,யாழ்ப்பாணம் ஊர் காவல்துறை குறிபட்டுவான் பகுதியில் அடையாளம் தெரியாத ஆன் ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் .

ஊர்காவல்துறை போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு மரணப் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

இறந்தவர் 50 வயதுக்கு உள்ளான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது .

இவர் எவ்வாறு இங்கு வந்தார் எவ்விதம் மரணமானர் என்பது தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

நாள்தோறும் சடலங்கள் மீட்பு

இலங்கையில் நாள்தோறும் நீர் ஏரிகள் குளங்கள் வீடுகள் என்பனவற்றில் மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றது .

ஆண் பெண்கள் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்ட நிலையிலும் சடலங்காக மீட்க ப்பட்டு வருகின்றனர் .

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இந்த மர்மக் கொலைகளின் பின்னால் உள்ளது யார் என்பதை கண்டறிந்து அவர்களை கண்டுபிடித்து கைது செய்வதற்கு இலங்கை குறித்த புலன்களை தாமதித்து வருவதற்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன .

ஆங்காங்கே அவ்வப்போது சில படுகொலை சாட்சிகள் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படுகின்ற பொழுதும் ஏனைய கொலையாளிகளை முக்கியமானவர்களை கண்டுபிடிக்க படவில்லை .

யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை கூறுகட்டுவான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆண் யார் .

எவ்வாறு இவர் படுகொலை செய்யப்பட்டார்

எவ்வாறு இவர் படுகொலை செய்யப்பட்டார் இந்த படுகொலையின் பின்புறத்தில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக இலங்கை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நாள்தோறும் இடம்பெறுகின்ற இவ்விதமான தொடர் படுகொலை காரணமாக மக்கள் மத்தியில் ஒருமிது அச்ச உணர்வு காணப்படுகிறது .

இலங்கையில் தேர்தல் சூடாக இடம் பெற உள்ள காலப் பகுதியில் இவ்வாறு மனித சடலங்கள் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

இது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவது என்பது இயல்பான ஒன்றுதான்.