Tag: பேரூந்து
பயணிகள் பேரூந்து கவிழ்ந்தது 18 பயணிகள் படுகாயம்
பயணிகள் பேரூந்து கவிழ்ந்தது 18 பயணிகள் படுகாயம்
இலங்கையில் மட்டக்களப்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த ,பயணிகள் பேரூந்து ஒன்று, வலப்பனை பகுதியில் கவிழ்ந்ததில் ,அதில் பயணித்த பயணிகள் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
பேரூந்தில் பயணித்த காயமடைந்த பயணிகள் யாவரும் , வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
சாரதியின் அலட்சிய போக்கே ,இந்த பயணிகள் பேரூந்து விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது .
இலங்கையில் பயணிகள் பேரூந்துகள் இவ்வாறன விபத்தில் ,சமீப காலங்களாக அதிகம் சிக்கி வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .
இலங்கையில் நடந்தேறிய கோர பேரூந்து விபத்திகள் யாவும் இதில் அழுத்தி பார்க்க
பேரூந்தில் இருந்து வாலிபன் வீழ்ந்து மரணம்
பேரூந்தில் இருந்து வாலிபன் வீழ்ந்து மரணம்
இலங்கை பலாங்கொடைக்கு பேரூந்தில் பயணித்த வாலிபர் ஒருவர் பேரூந்தில் இருந்து தவறி வீழ்ந்து பலியாகியுள்ளார் .
பேரூந்தில் பயணித்த இவர் ,எச்சில் துப்பிட கீழ் இறங்கிய பொழுது தவறி வீழ்ந்துள்ளார்.
அதன் பின்னர் வீடு சென்ற அவர் அங்கு மயங்கி வீழ்ந்து மரணமாகியுள்ளார், .தலையில் உட் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், இவர் மரணித்து இருக்க கூடும் என தெரிவிக்க படுகிறது.
இலங்கையில் இவ்விதம் பேரூந்து மிதி பலகையில் தவறி வீழ்ந்து, பலர் பலியாகியள்ளமை குறிப்பிட தக்கது.
எரிபொருள் தட்டு பாடு பேரூந்து போக்குவரத்து குறைப்பு
எரிபொருள் தட்டு பாடு பேரூந்து போக்குவரத்து குறைப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள, எரிபொருள் தட்டு பாடு காரணமாக, தற்போது பேரூந்து போக்குவரத்து சேவைகள் குறைக்க பட்டுள்ளன.
தனியார் பேரூந்துகள், எரிபொருள் பெற்று கொள்வதில் ,ஏற்பட்டுள்ள சிரமம் காரணமாக, ஐம்பது வீதமான போக்குவரத்து குறைக்க பட்டுள்ளதாக, தனியார் பேரூந்து சங்கம் அறிவித்துள்ளது.
ஐம்பது வீதமான எரிபொருள் நிலையங்கள் , அடித்து மூட் பட்டுள்ள நிலையில் ,இந்த போக்குவரத்து சேவையும் முடக்க படுவதால் ,மக்கள் பெரிதும் துயர்களை சந்தித்த வண்ணம் உள்ளனர்.
தொடர்ந்து எரிபொருள் ,பற்றாக்குறை நீடித்து செல்லும் என்றால், மக்கள் போராட்டம் மீள வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது.
இலங்கையில் பேரூந்து கட்டணங்கள் திடிரென குறைப்பு
இலங்கையில் பேரூந்து கட்டணங்கள் திடிரென குறைப்பு
இலங்கையில் இன்று நள்ளிர முதல் பேரூந்து கட்டணங்கள் குறைக்க படுவதாக அறிவிக்க பட்டுள்ளது.
மக்கள் எழுச்சியை தடுக்க இவ்விதமான விலை குறைப்பு நடவடிக்கையில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார்.
எரிபொருள் விலையினால் பேரூந்து கட்டணங்களை விலை அதிகரித்தது.
ஆனால் தபோது அதே பேரூந்து விலை கட்டணங்கள் இன்று நாளிரவு குறைக்க படும் என அறிவிக்க பட்டுள்ளது.
தனியார் பேருந்து உரிமைத்தை இரத்து செய்யும் அரசு
தனியார் பேருந்து உரிமைத்தை இரத்து செய்யும் அரசு
இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் எரிபொருள் தட்டு பாடு காரணமாக சேவையில் ஈடுபடாமல் தனியார் பேரூந்துகள் உள்ளன .
இவ்வாறு சேவையில் ஈடுபடாமல் உள்ள தனியார் பேருந்துகளின் உரிமங்களை இரத்து புரியும் படி பந்துல குணவர்த்தன உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவரது இந்த அறிவிப்பு தனியார் பேரூந்து உரிமையாளர்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
யாழ்ப்பாணத்தில் பேரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பின
யாழ்ப்பாணத்தில் பேரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பின
இலங்கை ,யாழ்ப்பாணம் ; இலங்கை யாழ்ப்பாணத்தில் தனியார் பேரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன .
எரிபொருள் இல்லாமை போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்கள் தற்போது ஐம்பது வீதமான பேருந்துகளை செலுத்தி செல்கின்றனர் .
இதனால் தடைப்பட்டிருந்த மக்கள் போக்குவரத்து மீள இயங்கு நிலைக்கு திரும்பியுள்ளது.
எனினும் பேருந்துகளில் வழமைக்கு மாறாக மக்கள் அதிகமாக ஏற்றி செல்ல படுவதால் பலத்த நெருக்கடிகளை பயணிகள் சந்தித்து வருகின்றனர்.
ஆற்றில் வீழ்ந்த பேரூந்து 30 பேர் மரணம்
ஆற்றில் வீழ்ந்த பேரூந்து 30 பேர் மரணம்
கென்யா ; கென்யா நிதி ஆற்றின் மேலாக பாலத்தில் பயணித்து கொண்டிருந்த ஆடம்பர பயணிகள் பேரூந்து ஆற்றின் பள்ளத்தாக்கில் வீழ்ந்தது சிதறியதில் சுமாரா 30 பேர் மரணமாகியுள்ளனர்.
இந்த பேருந்து நிதி ஆற்றின் மேலால் உள்ள பாலத்தில் வேகமாக பயணித்த பொழுதே இந்த விபத்து சமபவித்துள்ளது.
ஆற்றின் பள்ளதாக்கில் வீழ்ந்து நொறுங்கிய பேரூந்தில் பயணித்தஅணைத்து பயணிகளும் மரணித்த துயரம் இடம்பெற்றுள்ளது.
சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் சடலங்களை மீட்டு மருத்துவ மனையில் வைத்துள்ளனர் .
கென்யாவில் ஆற்றின் பள்ளதாக்கில் வீழ்ந்து சிதறிய பேரூந்து செய்திகள் உலக ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக இடம்பிடித்துள்ளன .
பேரூந்துக்கு கல்வீச்சு தாக்குதல் நடத்திய பெண் கைது
பேரூந்துக்கு கல்வீச்சு தாக்குதல் நடத்திய பெண் கைது
வவுனியா புளியம் குளம் பகுதியில் பயணித்த அரச பேரூந்து ஒன்றை இளம் பெண் ஒருவர் வழிமறித்துள்ளார் .
அவ்வேளை அந்த பேரூந்து நிற்காது புறப்பட்டு சென்றுள்ளது .
இதனால் ஆத்திரமுற்ற இளம் பெண் அந்த அரச பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளார் .
பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதலை புரிந்த குற்றத்திற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரிதும் அவதியுற்று வரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது.
எரிபொருள் வாங்க காத்திருந்தவர்கள் மீது பேரூந்து மோதி விபத்து
எரிபொருள் வாங்க காத்திருந்தவர்கள் மீது பேரூந்து மோதி விபத்து
மட்டக்களப்பு ; மட்டக்களப்பு ஊரணி பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் வாங்கிட கடத்திருந்த மக்கள் மீது பேரூந்து ஒன்று மோதியுள்ளது.
பேரூந்து சாரதியின் காட்டு பாட்டை இழந்த பேரூந்து மக்கள் மீது மோதி விப்பதுக்குள்ளானது .
இந்த பேரூந்து விபத்தில் காயமடைந்த ஐந்து பேர் மருத்துவனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .,
இவ்வாறான விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்
- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது
- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு
- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை
- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய
- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை
- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு
- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு
- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்
ஆட்டோ ,பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு -திணறும் மக்கள்
ஆட்டோ ,பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு -திணறும் மக்கள்
இலங்கையில் எரிபொருள் விலையில் ஏற்பட்ட விலை அதிகரிப்பை அடுத்து பேரூந்து ,மற்றும் ஆட்டோ
பயண செலவுகள் அதிகரிக்க பட்டுள்ளது ,ஆட்டோ ஒன்றின் முதலாவது கிலோ மீட்டருக்கு நூறு ரூபா
அறவிட தீர்மானிக்க பட்டுள்ளது
இந்த கடுகதி விலை உயர்வினால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
டீசல் தட்டுப்பாட்டால் முடங்கிய பேரூந்து சேவை
டீசல் தட்டுப்பாட்டால் முடங்கிய பேரூந்து சேவை
இலங்கையில் டீசல் விலை அதிகரிக்க பட்ட நிலையில் பேரூந்து போக்குவரத்து முடங்கியுள்ளது ,
மீள இந்த சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்ப எரிபொருள் வழங்குதலை அரசு வழங்க வேண்டும் என்பது
போரூந்து ஓட்டுனர்கள் கருத்தாக உள்ளது
இராணுவ பேரூந்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணை – சிதறிய பேரூந்து
இராணுவ பேரூந்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணை – சிதறிய பேரூந்து
சிரியா வடக்கு அலப்போ பகுதியில் பேரூந்தில் பயணித்து கொண்டிருந்தக அரச
இராணுவத்தினரை இலக்கு வைத்து நடத்த பட்ட ஏவுகணை தாக்குதலில் , அதில்
பயணித்த 12 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,பேரூந்து தீ பற்றி எரிந்துள்ளது
இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை
இலங்கை அரச பேரூந்து இரண்டாக கழன்று ஓட்டம் – மக்கள் கொதிப்பு
இலங்கை அரச பேரூந்து இரண்டாக கழன்று ஓட்டம் – மக்கள் கொதிப்பு
இலங்கை அரசுக்கு சொந்தமான பேரூந்து ஒன்று அனுராத புரத்தில் இருந்து கொழும்பு
நோக்கி புறப்பட்டது ,இவ்வேளை இந்த பேரூந்து சில்லு அச்சுடன் கழன்று தனியாகவும் ,அதன் பாடி தனியாகவும் ஓடியுள்ளது
இதனால் அதி பயணித்த மக்கள் பெரும் பீதியடைந்தனர்
இன்று ஆளும் லஞ்ச ஊழல் பெருச்சாளி கோட்டாவின் ஆட்சியின் அசிங்கத்தில் ஒன்றாக
இது பார்க்க படுகிறது


தனியார் பேரூந்து சேவைகள் முடக்கம் – கொதிக்கும் மக்கள்
தனியார் பேரூந்து சேவைகள் முடக்கம் – கொதிக்கும் மக்கள்
இலங்கையில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார நெருக்கடியால் தற்போது நாடு
பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதுடன் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போரட்டம் வெடித்துள்ளது
தற்போது மேலும் எரிபொருள் விலை அதிகரிக்க பட்ட நிலையில் தனியார் பேரூந்து சேவைகள் முடக்க பட்டுள்ளன
இந்த சேவைகள் முடக்கத்தினால் மக்கள் போக்குவரத்து பாதிக்க பட்டு இயல்பு வாழ்க்கை முடக்க பட்டுள்ளது ,
இதனை அடுத்து போராட்டம் மேலும் அதிகரித்துள்ளது
பேரூந்துகள் பறிக்க படும் – அவசர எச்சரிக்கை
பேரூந்துகள் பறிக்க படும் – அவசர எச்சரிக்கை
ஆசனங்களின் எண்ணிக்கையை மீறி, அதிகளவான பயணிகளை பஸ்களில் ஏற்றிச் சென்றால், குறித்த பஸ்களை மறு அறிவித்தல் வரை, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியதாகத் தெரிவித்த அவர், குறித்த பஸ்களின் அனுமதிப்பத்திரமும் இரத்துச் செய்யப்படும் என்றார்.
மேலும் நேற்றைய தினம் மேல் மாகாணத்தில் 6,000 தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட வேண்டிய நிலையில், 900 பஸ்களே சேவையில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளதுடன், இதற்கான காரணம் பஸ்களில் சேவையில் ஈடுபட்டவர்கள்,தற்போது வேறு தொழில்களில் ஈடுபடுகின்றமையே காரணம் என்றார்.
அத்துடன், 3,000 இ.போ.ச பஸ்கள் சேவையில் ஈடுபட தயார்படுத்தப்பட்ட நிலையில், 1,500 பஸ்களே சேவையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.
பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல் – ரவுடிகள் அட்டகாசம்
பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல் – ரவுடிகள் அட்டகாசம்
வவுனியா முருகனூர் பகுதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு இளைஞர் குழுவொன்று தப்பிச் சென்றுள்ளனர்.
முருகனூர் பகுதியில் இன்று (12) காலை 7.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிதம்பரபுரம் பகுதியிலிருந்து வவுனியா இராசேந்திரகுளம்
ஆடைத்தொழிற்சாலை நோக்கி ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்திற்கு முருகனூர் விவசாய பண்ணைக் அருகே முகங்களை மறைந்தவாறு நின்ற இளைஞர் குழுவினர் கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கல்வீச்சு தாக்குதலையடுத்து பேரூந்தினை சாரதி நிறுத்திய போது பேரூந்தினுள் புகுந்த அவ் இளைஞர் குழுவினர் சாரதி மீதும் தாக்குதல் மேற்கொண்டு அவ்விடத்தில் இருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.
வெளிநாட்டு பயணிகளை காவியபடி பயணித்த பேரூந்து விபத்தில் சிக்கியது
வெளிநாட்டு பயணிகளை காவியபடி பயணித்த பேரூந்து விபத்தில் சிக்கியது
வவுனியா ஓமந்தை பனிக்கன் நீராவிப் பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து ஒன்று இன்று (08) அதிகாலை விபத்திற்கு உள்ளாகியது.
குறித்த பேரூந்து வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்துக்கொண்டு கிளிநொச்சி பூநகரி தனிமைப்படுத்தல் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இதன்போது ஓமந்தை பனிக்கன் நீராவிப் பகுதியில் வீதிக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் மோதியதில் விபத்திற்கு உள்ளாகியது.
விபத்தின் போது பேருந்தில் 7 பேர் பயணம் செய்த நிலையில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்..
கவிழ்ந்த பயணிகள் பேரூந்து -15 பேர் காயம்
கவிழ்ந்த பயணிகள் பேரூந்து -15 பேர் காயம்
இன்று காலை இரத்தினபுரி பகுதியில் இருந்து தேயிலை தோட்ட பணியாளர்களை ஏற்றிய
வண்ணம் புறப்பட்ட பேருந்து ஒன்று சாரதியின் கட்டு பட்டாடை இழந்து விபத்தில் சிக்கியததில் அந்த பேரூந்து கவிழ்ந்தது
இதன் பொழுது அதில் பயணித்த சுமார் பதின் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் அனைவரும் இரத்தினபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேற்படி விபத்து தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கவிழ்ந்த பேரூந்து – 20 பேர் காயம்
கவிழ்ந்த பேரூந்து – 20 பேர் காயம்
நுவரெலியாவில் இருந்து பயணிகளை காவிய படி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று சாரதியின்
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் தலைகீழாக வீழ்ந்ததில் அதில் பயணித்த இருபது பேர் படு காயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,குறித்த
விபத்து தொடர்பான விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளனர்

புத்தாண்டை முன்னிட்டு 3000 பேரூந்துகள் விசேட சேவையில்
புத்தாண்டை முன்னிட்டு 3000 பேரூந்துகள் விசேட சேவையில்
இலங்கையில் நிகழவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மூவாயிரம் பேரூந்துகள் மக்கள்
போக்குவரத்தை இலகுபடுத்த விசேடமாக இயக்க படுகின்றன
இந்த சேவையில் தனியார் பேருந்துகளும் உள்ளடக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் முப்பதாயிரம் பொலிசாரும் காவல் கடமையில் ஈடுபட்டுள்ளனர்
வீதிகளில் திடீர் சோதனைகளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது
















