Posted in இலங்கை செய்திகள்

புத்தாண்டை முன்னிட்டு 3000 பேரூந்துகள் விசேட சேவையில்

புத்தாண்டை முன்னிட்டு 3000 பேரூந்துகள் விசேட சேவையில்

இலங்கையில் நிகழவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மூவாயிரம் பேரூந்துகள் மக்கள்

போக்குவரத்தை இலகுபடுத்த விசேடமாக இயக்க படுகின்றன

இந்த சேவையில் தனியார் பேருந்துகளும் உள்ளடக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

மேலும் முப்பதாயிரம் பொலிசாரும் காவல் கடமையில் ஈடுபட்டுள்ளனர்

வீதிகளில் திடீர் சோதனைகளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    வவுனியாவில் பேரூந்து சாரதியை தாக்கிய பெண்

    நேற்று (02) மதியம் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் நபர் ஒருவர் தொலைபேசியினை வவுனியாவில் உள்ள தனது நண்பரிடம் கொடுக்குமாறு குறித்த நடத்துனரிடம் வழங்கி சென்றுள்ளார்.

    பேருந்து வவுனியாவை சென்றடைந்ததும் தொலைபேசியை வழங்கியவரின் நண்பர் பேருந்து நடத்துனரிடம் தொலைபேசியினை வாங்கி சென்றுள்ளார்.

    அவர் தொலைபேசியினை வாங்கி சென்ற பின்னர் அதே தொலைபேசியினை தருமாறு கூறி மற்றுமொரு பெண் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.

    அப்போது நடத்துனரின் தொலைபேசியினை கேட்ட போது தொலைபேசியினை அவர் கொடுத்து விட்டதாக கூறியுள்ளார்.

    அதன் போது அப்பெண்ணுடன் வந்த சில நபர்கள் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கியதுடன் நடத்துனரை முச்சக்கரவண்டியில்

    ஏற்றிச்சென்று வவுனியா நகரை அண்டிய தோணிக்கல் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    தாக்குதல் நடத்திய பின்னர் முச்சக்கரவண்டியில் ஏற்றிச்சென்று மீண்டும் பழைய பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு

    தொலைபேசி கிடைத்து விட்டது தவறுதலாக நடந்து விட்டது மன்னித்து விடுங்கள் என்று கூறு நடத்துனரை அவ்விடத்தில் விட்டு சென்றுள்ளார்கள்.

    காயமடைந்த நடத்துனர் , சாரதி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தமையுடன் வவுனியா மாவட்ட பொது

    வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

    தாக்குதல் நடத்திய நபர்கள் தொடர்பில் சி சி டிவியின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

    Posted in Uncategorized

    ஓடும் பேரூந்தில் இருந்து வாலிபர் தள்ளி படுகொலை

    ஓடும் பேரூந்தில் இருந்து வாலிபர் தள்ளி படுகொலை

    கடந்த தினம் இலங்கை கண்டி Udawela பகுதியில் பயணிகள் பேரூந்தில்

    பயணித்து கொண்டிருந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு கொலையில் முடிவடைந்துள்ளது

    ஓடிக் கொண்டிருந்த பேரூந்தில் இருவருக்கும் வாய்த்தகராறு

    ஏற்பட்டுள்ளது ,அதில் சீற்றம் உற்ற மறு நபர் குறித்த நபரை அதில் இருந்து தள்ளி வீழ்த்தியுள்ளார் .

    இதன்பொழுது பேரூந்தில் இருந்து வீழ்ந்த நபர் அவ்விடத்திலே மரணித்துள்ளளார் ,

    மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

    Posted in இலங்கை செய்திகள்

    மரணவீட்டுக்கு சென்ற பேரூந்து கவிழ்ந்தது – 13 பேர் காயம்

    மரணவீட்டுக்கு சென்ற பேரூந்து கவிழ்ந்தது – 13 பேர் காயம்

    இலங்கை நுவரெலியா நானு ஓயா பகுதியில் பயணித்து கொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்று

    சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து விபத்தில்சிக்கியது ,இதன்பொழுது

    அதில் பயணித்த 13 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்


    மரண வீடொன்றுக்கு சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்த பொழுதே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

    Posted in உலக செய்திகள்

    இந்தியாவில் ஆற்றுக்குள் பாய்ந்த பஸ் – 37 பேர் மரணம்

    ஆற்றுக்குள் பாய்ந்த பஸ் – இந்தியா மத்திய பிரதேஸ் பகுதியில் நடந்த கோர சம்பவம் – கண்ணீரில் குடும்பம்

    ஆற்றுக்குள் பாய்ந்த பஸ்

    இந்திய மத்திய பிரதேச பகுதியில் பயணிகளை காவியபடி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பட்டாடை

    இழந்து ஆற்றுக்குள் பாய்ந்ததால் அதில் பயணித்த முப்பத்தி ஏழு பயணிகளும் மூச்சடக்கி பலியாகினர்

    நீரில் மூழ்கிய தொடரூந்து கனரக பாரம் தூக்கிகள் வரவழைக்க பட்டு மீட்க பட்டன

    விபத்துக்காண காரணம்
    சாரதியின் அலட்சிய போக்கே மேற்படி விபத்துக்கு கரணம் என தெரிவிக்க பட்டுள்ளது

    ஐம்பது பேருடன் பயணித்த பேரூந்தில் 37 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் ஏனையவர்கள் மீட்க பட்டுள்ளனர்

    முதல்வர் உதவி

    இறந்த குடும்பத்தினர் ஒருவருக்கும் ஐந்து லட்சம் வழங்க படும் என ஆளும் முதல்வர் அறிவித்துள்ளார்

    உலக செய்திகள் 20 படிக்க இதில் அழுத்துங்கள்

    இலங்கை செய்திகள் 20 படிக்க இதில் அழுத்துங்கள்

        Posted in இலங்கை செய்திகள்

        40 பேரூந்துகள் லைசன்ஸ் இரத்து – அமைச்சர் அதிரடி நடவடிக்கை

        40 பேரூந்துகள் லைசன்ஸ் இரத்து – அமைச்சர் அதிரடி நடவடிக்கை

        இளங்காலையில் ஆளும் கோத்தபாயவின் அரசில் பரவி வரும்

        வைரஸ் நோயினை தடுக்கும் முகமாக பல கட்ட நடவடிக்கை

        மேற்கொள்ள பட்டு வருகிறது

        இதன் பிரகாரம் தனியார் பேருந்துகளில் சமூக இடைவெளி கடை

        பிடிக்காது மக்களை ஏற்றி பயணித்த பேரூந்துகள் சுமார் நாற்பதின் போக்குவரத்து

        உரிமங்கள் இரத்து செய்துள்ளதாக போக்குவற்துறை அமைச்சர் தடலடியாக அறிவித்துள்ளார்

        Posted in இலங்கை செய்திகள்

        கொழும்பு கம்பஹாவில் வாகன நெரிசல் – பஸ்களில் மக்களை காணவில்லை photo

        கொழும்பு கம்பஹாவில் வாகன நெரிசல் – பஸ்களில் மக்களை காணவில்லை photo

        கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 23 மாவட்டங்களில் இன்று (11) காலை 5 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

        இதனைத்தொடர்ந்து கொழும்பு மற்றும் அதனையடுத்துள்ள பகுதிகளில் இன்று காலை வாகன நெரிசல் காணப்பட்டது. தனியார் வாகனங்களே இவ்வாறு காணப்பட்டன

        பொது போக்குவரத்து பஸ்களில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே காணப்பட்டனர்.


        கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில்; ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த போதிலும் நிறுவன செயற்பாடுகள் வழமை நிலைக்கு திரும்பியுள்ளன.

        கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த போதிலும் அத்தியாவசிய பொதுமக்கள்

        சேவையை வழங்கும் பொழுது உணவு பொருள் மற்றும் பொருள் விற்பனையை மேற்கொள்ளும் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக

        பொலிஸ் மா அதிபர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

        இதன் கீழ் மருந்தகங்கள் பலசரக்கு , தொலைபேசி விற்பனை நிலையங்கள், புடவை விற்பனை நிலையங்கள், புத்தகம் மற்றும்

        பத்திரிகை விற்பனை நிலையங்கள் மற்றும் அதிஷ்ட இலாபசீட்டு விற்பனை கூடங்களுக்கும் அனுமதி வழங்கப்படும்.

        மேலே குறிப்பிட்ட வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்ட போதிலும் இந்த வர்த்தக நிலையங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளை

        கொள்வனவு செய்வது தாம் பதிவைக்கொண்டுள்ள அல்லது தங்குமிடத்தைக் கொண்டுள்ள இடத்திற்கு அருகில் உள்ள வர்த்தக

        நிலையத்தில் அல்லது சேவையை வழங்கும் நிலையத்தில் மாத்திரமாகும் என்றும் சுட்டிக்காட்டபட்டுள்ளது.

        பொதுமக்களின் தேவைக்காக வெளியில் செல்வதற்கு ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரதை பெற்றுள்ள தனியார் வாகனம் மணித்தியாலம் 10.30 இற்கும் மணித்தியாலம் 15.00 இற்கு

        இடையிலான காலப்பகுதியில் மாத்திரம் பயணிப்பதற்கான அனுமதி வழங்க்கபடும் .இருப்பினும் இதற்கமைவாக வீட்டிற்கு

        வெளியே தனியான நடவடிக்கைகளுக்காக செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை முன்னெடுத்தல்

        உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

        மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தல் , அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக் கொள்ளுதல் அல்லது மருந்து வகைகளை கொள்வனவு செய்தல் போன்ற

        தனிப்பட்ட தேவைகளுக்காக அவசரகால அனுமதிப்பத்திரமின்றி வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவது தேசிய அடையாள அட்டையில் இறுதி இலக்கத்திற்கு அமைவாகவே ஆகும்.

        இதற்கமைவாக 1,2 இலக்கங்களைக்கொண்டவர்கள் திங்கட்கிழமைகளிலும் , 3,4 செவ்வாய்க்கிழமைகளிலும், 5,6 புதன்கிழமைகளிலும், 7,8 வியாழக்கிழமைகளிலும் மற்றும் 9,0

        சனிக்கிழமைகளிலும் ஆகும். இருப்பினும் தனிமைப்படுத்தலுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சுகாதார வைத்திய

        அதிகாரிகளின் சான்றிதழ் கிடைக்கும் வரையில் மேற்குறிப்பிட்ட வகையில் பயணிக்க முடியாது.

        சிறிய உணவகங்கள், உணவை வழங்கும் சிறிய பெட்டிக்கடைகள் மற்றும் ரெஸ்டுரண்டுகளை திறந்து முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. அத்தோடு இவற்றை திறப்பது தொடர்பில்

        காலத்திற்கு அமைவாக எதிர்காலத்தில் கவனத்தில் கொள்ளப்படும்.
        தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டுள்ள உணவு விநியோகம்

        (Delivery Service ) சேவை நிறுவனத்திற்காக தொடர்ந்தும் செயலபட முடியும்.

        சுப்பர் மார்க்கட்டுகளை திறந்து முன்னெடுப்பதற்கு முடிவதுடன் இதில் சம்பந்தப்பட்ட சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்தல் அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களின்

        பொறுப்பாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..
        இதேவேளை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு

        அறிவித்தல் வரை ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

        குறித்த 23 மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு தற்காலிகமாக தளர்த்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவினால்

        வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
        கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 23

        மாவட்டங்களில் இரவு 8 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        யாழ்ப்பாணதில் கொரனோ கிருமி ஒழிப்பு நடவடிக்கையில் இராணுவம்

        யாழ்ப்பாணதில் கொரனோ கிருமி ஒழிப்பு நடவடிக்கையில் இராணுவம்

        யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51, 52 மற்றும் 55 ஆவது

        படைப் பிரிவில் உள்ள இராணுவத்தினரால் சுன்னாகம், கொகுவில், சன்னகன்னை,

        தெல்லிப்பளை, நல்லூர், உடுவில், திருநல்வேலி, வல்வட்டிதுறை, கொடிகாமம், சாவகச்சேரி, அச்சுவேலி, நெல்லியடி, பளை,

            கோயில்வயல், ஐய்யகச்சி, முகாவில், முல்லியன், அம்பன், வெத்திலைகேணி,

            போக்கருப்பு மற்றும் மருதங்கேனி பிரதேசங்களில் பொது இடங்களில் கிருமிநாசிகளை விசிறினர்.

            இந்த பணிகள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய

            அவர்களது வழிக்காட்டலின் கீழ் புகையிரத நிலையங்கள், பாடசாலைகள்

            பல்கலைக்கழகம், தபால் கந்தோர், வைத்தியசாலைகள், பஸ் தரிப்பு நிலையங்கள்,

            மருந்து கடைகள் சேம நல நிலையங்கள்,பொருளாதார நிலையங்கள்,

            தனியார் வங்கி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டன என அரசு தெரிவித்துள்ளது

            யாழ்ப்பாணதில் கொரனோ
            யாழ்ப்பாணதில் கொரனோ
                Posted in இலங்கை செய்திகள்

                கடல்படை பேரூந்து விபத்து -ஐவர் காயம் – பொலிஸ் அதிகாரி பலி

                கடல்படை பேரூந்து விபத்து -ஐவர் காயம் – பொலிஸ் அதிகாரி பலி

                கடற்படை தலைமையக்கத்திற்கு சிப்பாய்களை ஏற்றிய படி பயணித்த

                பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த ஐந்து சிப்பாய்கள் காயமடைந்தனர்

                காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,

                    மேலும் வீதி விபத்தில் சிக்கி காவல்துறை அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார் .

                    விபத்து தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


                    கடந்த நான்கு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது கடற்படை வாகன விபத்து இதுவாக பதியம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                    கடல்படை பேரூந்து விபத்து
                    கடல்படை பேரூந்து விபத்து
                        Posted in இலங்கை செய்திகள்

                        மோதி சிதறிய கடற்படை பேரூந்து -ஒருவர் பலி -28 பேர் காயம்

                        மோதி சிதறிய கடற்படை பேரூந்து -ஒருவர் பலி -28 பேர் காயம்

                        இலங்கை வரக்காப்பொலை பகுதியில் இரண்டு கடற்படை பேரூந்துகள் மரக்கறி ஏற்றி சென்ற லொறி ஒன்றுடன் மோதியதில்

                        அதில் பயணித்த ஒருவர் பலியானார் ,மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                        சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

                        சம்பவ இடத்தில பேரூந்து மற்றும் லொறி என்பன பலத்த சேதமடைந்த நிலையில் மீட்க பட்டுள்ளது


                        தொடர்ந்து நாட்டில் இராணுவ வாகனகள் மூலம் பலர் கொலை செய்யப்பட்டும் ,காயப்படுத்த பட்டும் வருகின்றன

                        இவ்வாறான சம்பவங்கள் விபத்து என்ற போர்வையில் முடிக்க பட்டு விடுகிறது ,இவை ஓசை படமால் இடம்பெறும் திட்டமிட்ட பாடுகொலைகள் என தெரிய வருகிறது .

                        மோதி சிதறிய கடற்படை
                        மோதி சிதறிய கடற்படை
                        Posted in இலங்கை செய்திகள்

                        கைதிகளுடன் கவிழ்ந்த சிறைச்சாலை பேரூந்து

                        கைதிகளுடன் கவிழ்ந்த சிறைச்சாலை பேரூந்து

                        இலங்கை அம்மன்பில பகுதியில் சிறைச்சாய் பேரூந்து ஒன்று கைதிகளை ஏற்றிய வண்ணம் நீதி மன்றுக்கு சென்றவேளை பேரூந்து லொறியுடன் மோதி விபத்தில்

                        சிக்கியதால் அதில் பயணித்த ஒன்பது பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                        லொறி சாரதி கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன

                        இந்த விபத்தில் ஒன்பது கைதிகள் உள்ளிட்ட 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                        Posted in இலங்கை செய்திகள்

                        நேரெதிர் மோதிய பேரூந்து -23 பேர் காயம்

                        நேரெதிர் மோதிய பேரூந்து -23 பேர் காயம்

                        இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

                        ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும், கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற பஸ்ஸும் கினிகத்தேனை,

                        தியகல பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என விசாரணைகளை

                        மேற்கொண்டு வரும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

                        இந்நிலையில் பஸ்ஸில் பயணித்த 23 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

                        நேரெதிர் மோதிய பேரூந்து
                        நேரெதிர் மோதிய பேரூந்து
                        Posted in இலங்கை செய்திகள்

                        கூரை இல்லாத -பஸ் நிலையாம் -அரசின் சாதனை

                        பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருக்க
                        கட்டாயம் குடை வேண்டும்

                        கண்டி நுவரெலியா பிரதான பாதையில் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட குடாஒயா பிரேதேசத்தில் நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி செல்லும் பஸ்கள்

                        நிறுத்துவதற்காக மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் அமைக்கபட்ட பஸ் நிலையமே இது.

                        தற்போது இந்த பஸ் நிலையம் உடைவடைந்து கூரைகள் இன்றி பாதிக்கபட்ட நிலையில் காணப்படுகின்றது.

                        இதனை திருத்தி அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கபட்ட போதும்

                        . இது வரைக்கும் திருத்தி அமைக்கபடவில்லை. இந்த பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டுமானால் மழைக்காலங்களில் குடையுடனே செல்ல வேண்டும்கூரை இல்லாத பஸ் நிலையாம்

                        இந்த பிரதேசத்தில் குடாஓயா வித்தியாலயம் காணப்படுகின்றது. இங்கு கல்வி கற்க வரும் நூற்றுக் கணக்கான மாணவர்களும் ஆசிரியர்களும் கிராம

                        மக்களும் லபுக்கலை தோட்ட மக்களும் நாளாந்தம் இந்த பஸ் நிலையத்தை பாவித்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் இந்த பஸ் நிலையத்தை உடனடியாக திருத்தி

                        அமைத்து கொடுக்க வேண்டியது மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபையின் கடமையாகும்.

                        இதனை உடனடியாக திருத்தி அமைத்து தருமாறு இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

                        கூரை இல்லாத பஸ் நிலையாம்

                        கூரை இல்லாத பஸ் நிலையாம்
                        Posted in இலங்கை செய்திகள்

                        இடிந்து விழும் நிலையில் பஸ் நிலையம்

                        இலங்கையில் =-இடிந்து விழும் நிலையில் பஸ் நிலையம்

                        துண்டாடப்படும் பயணிகளின் பஸ் நிலையம்

                        கண்டி நுவரெலியா பிரதான பாதையில் தவலந்தன்ன நகரத்தில் காணப்படும் பஸ் நிலையமே இது.

                        இந்த பஸ் நிலையமானது பல நூறு வருடங்களாக மக்களின் போக்குவரத்துக்காக பாவிக்கபட்டு வருகின்றது.

                        இந்த பஸ் நிலையத்தை வீதி போக்கவரத்து அதிகாரபை நிர்வகித்து வந்த போதும் தற்போது பஸ் நிலையம் உடைந்த நிலையில் மக்களின் தேவைக்கு ஏற்ப செயற்படாமல் காணப்படுகின்றது.

                        குறிப்பாக இந்த பஸ் நிலையத்தில் நுவரெலியா வெளிமடை கதிர்காமம் பண்டாரவலை பதுளை போன்ற நகரங்களுக்கு

                        செல்லும் அனைத்து பிரதான பஸ்களும் மேலும் அருகில் உள்ள சிரிய நகரங்களுக்கும் பல கிராமங்களுக்கும் செல்லும் பஸ்களும் நிருத்தப்படுகின்றன.

                        இந்த நகரத்திற்கும் அருகில் உள்ள பதிய நகரமான கொத்மலை நகரத்திற்கும் நாளாந்தம் பிரதேச மக்கள்

                        தங்கள் தேவைகளுக்காவும் மாணவர்கள் தங்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளுக்கும் ஆயிரம் கணக்கில் வந்து செல்கின்றனர்.

                        இந்த நகரத்தில் பிரதேச செயலகம்¸ பொலிஸ் நிலையம்¸ தபால் காரியாலயம்¸ கமத்தொழில் காரியாலயம்¸ போன்ற அரச மற்றும் தனியார் காரியாலயங்களும் அரச மற்றும் இடிந்து விழும்

                        வங்கியும் பலதரப்பட்ட வர்த்தக நிலையங்களும் காணப்படுகின்றன. இவற்றின் தேவைகளுக்காக வருபவர்கள் தங்களின் ஊர்களுக்கு பஸ்சிற்காக இந்த பஸ்

                        நிலையத்திலேயே காத்து நிக்கின்றனர். மழை காலங்களில் நிற்க கூட முடியாது. இந் நிலையில் இதனை திருத்தி அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்..

                        இடிந்து விழும்
                        Posted in இலங்கை செய்திகள்

                        வாக்கு பெட்டிகளை காவி செல்ல 1000 பேரூந்துகள் பணியில்

                        வாக்கு பெட்டிகளை காவி செல்ல 1000 பேரூந்துகள் பணியில்

                        இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்கு பெட்டிகளை காவி செல்ல அரச பேரூந்துகள் ஆயிரம் சேவையில் ஈடுபடுத்த படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது