தவறிவிழுந்து வெளிநாட்டுப் பெண்
Posted in இலங்கை செய்திகள்

தவறிவிழுந்து வெளிநாட்டுப் பெண்

தவறிவிழுந்த வெளிநாட்டுப் பெண்

தவறிவிழுந்து வெளிநாட்டுப் பெண் ,ரயிலில் தவறிவிழுந்து வெளிநாட்டுப் பெண் காயம் ,ஒகியா பட்டி போல தொடர்ந்து நிலையங்களுக்கு இடைப்பட்ட பத்தாவது சுரங்க பகுதியில் தொடர்ந்திருந்து வெளிநாட்டு பெண்மணி காயவடந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் .

இலங்கையின் உல்லாச பயணியாக வருக தந்திருந்த இந்த பெண்மணியே இவ்வாறு காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காயமடைந்தவர் உக்கரை நாட்டைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்த பெண் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் ஊடாக அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சுரங்கத்தில் காயம் அடைந்த நிலையில் பின்னர் நோயாளி அமைப்புலன்ஸ் மூலமாக தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்து அதனால் வருகின்ற வருமானத்தில் தனது நாட்டை ஓட்டி செல்கின்றது .

அவ்வாறு வருகின்ற உல்லாச பயணிகளை பாதுகாப்பாகவும் கவனமாகவும் கையாள வேண்டிய தேவை இலங்கை வெளியுறவு அமைச்சுக்கும் ,உல்லாச துறைக்கும் காணப்படுகின்றது .

அதனால் வெளிநாட்டு உல்லாச பயணிகள் வடிவத்தில் இலங்கை ஆளுகின்ற அரசுகள் மிக கவனமாக செயலாற்றி வருவது இதன் ஊடாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெண் மீது துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

பெண் மீது துப்பாக்கிச் சூடு

பெண் மீது துப்பாக்கிச் சூடு

தனிமையில் வசித்த பெண் மீது துப்பாக்கிச் சூடு , இலங்கை காத்தான்குடி பகுதியில் தனிமையில் மகுடன் வசித்து வந்த பெண் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் குறித்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் திடீரென அவர் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார் .

காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குறித்த இளம் பெண் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் .

இளம் பெண் மீது துப்பாக்கி சூடு

32 வயதுடைய இந்த இளம் பெண் உடைய கணவர் ஒரு ஆஸ்திரேலிய நாட்டில் வசித்து வருவதாகவும் அவ்வாறான அந்த இளம் தாய் மீது மர்ம நபர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை மேற்கொண்டார் .

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான காரணம் தொடர்பாக உடனடியாக எதுவும் தெரியவில்லை.

துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்திய மர்ம நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடத்தில் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தனிநபர் பகமை காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

எனினும் துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தியவர் தொடர்பான விடயங்கள் தற்பொழுது கிடைக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என விசாரிக்க படுகிறார்கள் .

கூலிக்கு படுகொலை துப்பாக்கி சூடு

கூலிக்கு படுகொலையினை இவர் மேற்கொள்ள முயன்றாரா அல்லது இவரது தனிப்பட்ட பகைமை காரணமாக மேற்கொண்டாரா என்பது தொடர்பாக பல்வேறுபட்ட விடயங்கள் ஊடாக இந்த விசாரணங்கள் இடம் பெற்று வருகின்றன.

இலங்கையில் என்றும் இல்லாதவாறு படுகொலை கள் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் எகிறி காணப்படுகின்றது .

நாள்தோறும் அல்லது வாரத்தில் இரண்டுக்கு அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இலங்கை எங்கும் காணப்படுகின்றது .

அமெரிக்காவில் இடம்பெறுகின்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போன்று இலங்கையிலும் தற்பொழுது காணப்படுவது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது .

இடம்பெற்று வருகின்ற விசாரணை பின்னரே முழுமையான விடயங்கள் தெரிய வருமென காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

துப்பாக்கி சூட்டை நடத்தியவருக்கு துப்பாக்கி எப்படி வந்தது என்பது தொடர்பாகவும் ,விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்ற இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

பெண் வெட்டி படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

பெண் வெட்டி படுகொலை

பெண் வெட்டி படுகொலை

உறங்கிய பெண் வெட்டி படுகொலை .ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் மற்றும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது அந்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மறு சகோதரி மர்மநபர் ஒருவரினால் பெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

ஹொரண மீவனபலான சிரில்டன் தோட்டத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண்ணே இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் பங்களாதேஷ் நாட்டவரை திருமணம் முடித்து வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது .

அவ்வாறானவரை தற்பொழுது தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்த வேளையில் மர்ம நபர் ஒருவரினால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

முகமூடி அணிந்த நிலையில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அவரை வெட்டி கொன்றுவிட்டு தப்பி சென்றுள்ளார் .

இந்த படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இரு சகோதரிகளும் இரு அறையில் எவ்வாறு துவங்குகிறார்கள் என்பது கொலைகாரருக்கு எப்படி தெரியும் என்ற வகையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது குடும்பத்தினால் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட படுகொலையா ,அல்லது எதிரிகளால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட படுகொலையா என்பது தொடர்பான கோணத்தில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன .

இந்த படுகொலை சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .

இலங்கை ஒரு பாதுகாப்பற்ற நாடாக உள்ளதினை ,இலங்கை நாடளாவியரீதியில் இடம் பெற்று வருகின்ற ,இவ்வாறான மர்ம படுகொலைகள் கடத்தல்கள் கொள்ளை என்பன எடுத்து காட்டுகின்றன.

பாலத்தில் விழுந்து பெண் பலி
Posted in இலங்கை செய்திகள்

பாலத்தில் விழுந்து பெண் பலி

பாலத்தில் விழுந்து பெண் பலி

பாலத்தில் விழுந்து பெண் பலி ,பாலத்தில் இருந்து விழுந்து பெண் ஒருவர் மரணமான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இரத்தினபுரி பிரதேசத்தில் பெண் ஒருவர் பாலத்தில் இருந்து தவறி விழுந்து மரணமாகியுள்ளார் .

பாலத்தின் மேலிருந்தபொழுது தவறி விழுந்து நீருக்குள் மூழ்கி மரணமாகி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இவ்வாறு இறந்தவர் 33 வயதில் இளம் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .

சடலம் மீட்பு

இறந்தவரது சடலம் மீட்கப்பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது .

இந்த பெண் தவறி விழுந்தது எப்படி ஏன் அந்த பாலத்தில் அவர் தங்கி இருந்தார் என்பது தொடர்பான, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டாரா அல்லது இயல்பாகவே தவறி விழுந்தாரா ,என்பது தொடர்பான விசாரணைகளை ,போலீசார் மேற்கொண்டு வருகின்றனர் .

இலங்கையில் நாளுக்கு நாள் நீர் ஏரிகள் , காடுகள், குளங்கள், பற்றை வெளிகள் ,பாழடைந்த வீடுகளுக்குள், மனித சடலங்கள் தொடர்ந்து கண்டெடுக்க பட்டு வருகின்றது.

மர்ம படுகொலையின் பின்னால் உள்ளது யார்

இந்த மர்ம படுகொலையின் பின்னால் உள்ளது யார் என்பது தொடர்பாக இதுவரை கண்டறியப்படவில்லை .

பலர் இவ்விதம் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் .

இந்த படுகொலைக்கு பின்னால் உள்ள மர்ம நபர்கள் யார் அல்லது இது சீரியல் படுகொலையா என்பது தொடர்பாகவும் இதுவரை எதனையும் கண்டுபிடிக்கப்படவில்லை .

இவ்வாறான நிலையில் தற்போது பாலத்திலிருந்து 33 வயதுடைய இளம் பெண் நீரில் விழுந்து மூழ்கி மரணமாகியுள்ளது ,பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நகை திருடிய பெண் கைது
Posted in இலங்கை செய்திகள்

நகை திருடிய பெண் கைது

நகைகள் திருடிய பெண் கைது

நகை திருடிய பெண் கைது, யாழ்ப்பாணம் கன்னா திட்டி காளி கோவில் கும்பாபிஷேகத்துக்கு வருகை தந்திருந்த மக்களிடத்தில் நகை திருடிய பெண் கைது .

பல்வேறுபட்ட மக்கள் மத்தியில் பல பவுன் நகைகளை கொள்ளை அடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

யாழ்ப்பாணம் பிராந்திய போலீஸ்

யாழ்ப்பாணம் பிராந்திய போலீஸ் குற்ற பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலினை அடுத்து அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் திருட்டில் ஈடுபட்டிருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் .

பெண்ணை கைது செய்து, யாழ்ப்பாணம் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்த பொழுதே ,பெண்ணின் உள்ளாடைகளுக்கு இருந்து திருடப்பட்ட தாலிக்கொடி மற்றும் நகைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

போலீசார் விசாரணை அடுத்து தற்பொழுது மேலதிக விசாரணைகள்மேற்கொள்ள நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் நடவடிக்கையில் யாழ்ப்பாணம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

நகைகளை திருடுவதற்கென்றே ஒரு கூட்டம்

யாழ்ப்பாணத்தில் ஆலயத்திற்கு செல்லும் மக்களின் நகைகளை திருடுவதற்கென்றே ஒரு கூட்டம் திட்டமிட்டு நகர்ந்து வருகின்றது .

அதே போலவே பேருந்துகளிலும் இவ்விதமான திருட்டு சம்பவங்கள் நூதனமான முறையில் இடம்பெற்று வருகிறது .

அதனை அடுத்து தற்பொழுது இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் .மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

நகைகளை இழந்தவர்கள் அந்த நகைகளை காவல்துறையில் சென்று பெற்றுக்கொள்ள முடியுமா என்கின்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது.

பெண்களை வைத்து நடந்த மோசடி
Posted in இலங்கை செய்திகள்

பெண்களை வைத்து நடந்த மோசடி

பெண்களை வைத்து நடந்த மோசடி

பெண்களை வைத்து நடந்த மோசடி ,வேலை பெற்று தருவதாக தெரிவித்து பெண்களை அடைத்து வைத்து பாலியல் வீடியோக்கள் எடுத்து விற்பனை செய்த தம்பதிகள் மடக்கி பிடிப்பு .

இலங்கையில் வெளிநாடு செல்வதற்கான வேலைவாய்ப்பு நிலையம் ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக விளம்பரத்தை நடத்தி கவர்ச்சிகரப் பெண்களை தமது வீட்டுக்கு அழைத்து தம்பதிகள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளது கண்டுபிடிக்க பட்டுள்ளது .

பாலியல் தொல்லை

இவ்வாறு பாலியல் தொல்லைகளில் தொந்தரவுகளை வழங்கி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

சில நாட்களுக்கு முன்னதாக இந்த விளம்பரத்தை கண்ணுற்ற பெண்கள் இருவர் அந்த நிறுவனத்துக்கு சென்று தமது விண்ணப்பங்களை கோரி இருந்தனர் .

அதனை அடுத்து வீட்டுக்கு அழைத்த அந்த தம்பதியினர் அவர்களுக்கு வேலை பார்ப்பதாக வேலை பெற்று தருவதாக தெரிவித்து பாலியல் வீடியோக்களை எடுத்து பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து இவர்கள் இருவரும் வழங்கிய முறைப்பாட்டினை அடுத்து நுகோடை போலீசார் தமது விசாரணகளை ஆரம்பித்து கைது செய்திருக்கின்றனர் .

பெண்களை இவ்வாறு விற்பனை

இதுவரை இவர்கள் பல்வேறுபட்ட பெண்களை இவ்வாறு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கடந்த நான்கு வருடங்களாக வேலை வாய்ப்பு விளம்பரங்களை செய்து பெண்களை ஏமாற்றி பாலியல் காணொளிகளை பிடித்து, சந்தையில் பெற்று பல கோடிகளை சம்பாதித்துள்ள தான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது .

இந்த சம்பவத்தை அடுத்து தற்பொழுது இலங்கை போலீசார் குற்றப்பிரிவினை இணைந்து பாரிய விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றனர் .

விசாரணை முடிவிலேயே எத்தனை பெண்கள் இவர்களால் பாதிக்கப்பட்ட என்பது தொடர்பாகவும், எவ்வாறு வீடியோக்கள் எடுத்து எங்கு விற்பனை செய்தது என்பது தெரிய வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விடயம் தற்பொழுது இலங்கை மக்கள் மத்தியில் வரும் பர பரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது

இலங்கை வந்த பெண் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வந்த பெண் படுகொலை

இலங்கை வந்த பெண் படுகொலை

இலங்கை வந்த பெண் படுகொலை வெளி நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் நேற்று (06) இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலஸ்ஸ பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குள் கூரிய ஆயுதத்தினால் கொலைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் 62 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படுகொலை தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இவளை பார்க்க யாரும் இல்லை
Posted in இலங்கை செய்திகள்

இவளை பார்க்க யாரும் இல்லை

இவளை பார்க்க யாரும் இல்லை

பார்வையிழந்த இவளை பார்க்க யாரும் இல்லை ,வவுனியாவில் தனிமையில் கதறும் இளம் தமிழ் பெண் .

போரினால் பாதிக்க பட்ட ஆதரவற்ற நிலையில் ,வவுனியா கணேசபுரம் பகுதியில் தனிமையில் வசித்து வரும் இந்த பெண் ,வறுமையில் பல இன்னல்களை அனுபவித்த வண்ணம் .உள்ளார்

சுய தொழில் செய்து வாழ விரும்பும் இவர் ,குடி நீர் இன்றி தவித்து வருகின்றார் .

இவருக்கு குழாய் கிணறு ஒன்று நிறுவி கொடுத்தால் அதனை வைத்து குடி நீரை பூர்த்தி செய்வதுடன் ,தனது சுய தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி அதன் ஊடாக அவர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்வார் .

கண் பார்வையின்றி தவிக்கும் இந்த இளம் பெண்

அதனால் ஒரு கண் பார்வையின்றி தவிக்கும் இந்த இளம் பெண்ணுக்கு வெளிநாடுகளில் வசிக்கும் எம் தமிழ் உறவுகளே உங்கள் ,அன்பையும் ஆதரவையும் இந்த பெண்ணுக்கு வழங்கிடுங்கள் .

கடல் கடந்து வந்த போதும் தாய் மண்ணையும் ,அந்த மக்களையும் தாங்கி பிடித்து பேருதவி புரிந்து ,பெரும் இன்னல்களை சந்தித்த மக்கள் கண்ணீரை துடைக்கும் தாயகத்து உறவுகளை ,நல்ல மனங்களே இந்த பார்வை அற்ற பெண்ணுக்கு வாழ்வு கொடுங்கள் .

எம ,சோதரி எம் அக்கா கதறுகிறாள் ,அவள் கண்ணீரை துடைத்து ,உங்கள் அன்பை செலுத்தி உண்பதற்கான ஒரு உத்தரவாத உழைப்பை ஏற்படுத்தி கொடுங்கள் .

இந்த இளம் பெண்ணுக்கு உதவிட விரும்பும் அன்பர்கள் கீழ் வரும் கைபேசி ஊடாக தொடர்பு கொண்டு உதவலாம் ,வாட்சப் ,வைபர் ஊடாகவும் அழைப்பை ஏற்படுத்தி உதவுங்கள் மக்களே .0094 77111 8129

வீடியோ

அலரி விதையை உட்கொண்டபெண் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

அலரி விதையை உட்கொண்டபெண் உயிரிழப்பு

அலரி விதையை உட்கொண்டபெண் உயிரிழப்பு

அலரி விதையை உட்கொண்டபெண் உயிரிழப்பு ,காதல் தொடர்பை நிறுத்த கோரியதால் அலரி விதையை உட்கொண்ட யுவதி சிகிச்சை பலனளிக்காமையினால் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் தெற்கு பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

18 வயது மதிக்கத்தக்க மகேந்திரன் புவிதா பலி

சம்பவத்தில் 18 வயது மதிக்கத்தக்க மகேந்திரன் புவிதா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை (30) இரவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த யுவதி நேற்று (31) அதிகாலை 2.45 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

யுவதியின் தாயார் வெளிநாடு

உயிரிழந்த யுவதியின் தாயார் வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்த நிலையில் இலங்கைக்கு வந்து 3 மாதங்கள் சென்றுள்ளதாகவும்,

யுவதி 2 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புனர்வாழ்வு நிலையம் ஒன்றில் தங்கி இருந்த நிலையில் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற உத்தரவிற்கமைய யுவதியின் தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யுவதி இளைஞன் ஒருவருடன் காதல்

இந்நிலையில், யுவதி இளைஞன் ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்ததை அறிந்த தாயார் யுவதியை கண்டித்துள்ளார்.

இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேறி சென்ற யுவதி மீண்டும் 15 நிமிடங்களில் வீடு திரும்பியுள்ளார்.

இவ்வாறு வந்த யுவதி வீட்டினை சுத்தம் செய்த பின்னர் தனது தாயாருடன் சிறிது உரையாடிய பின்னர், தான் அலரி விதை உட்கொண்டு விட்டதாக தெரிவித்தனை அடுத்து உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரணம் தொடர்பில் விசாரணை

உயிரிழந்த யுவதியின் மரணம் தொடர்பில் கல்முனை நீதிமன்ற நீதிவானின் உத்தரவின் படி, மரண விசாரணை அதிகாரி முகமட் இப்றாகீம் நஸ்றுல் இஸ்லாம் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை

அத்துடன், சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெற்ற பின்னர் அரச பகுப்பாய்விற்காக சில உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்என்பது குறிப்பிட தக்கது .

பெண் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

பெண் ஒருவரின் சடலம் மீட்பு

பெண் ஒருவரின் சடலம் மீட்பு

பெண் ஒருவரின் சடலம் மீட்பு ,கொழும்பு பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகானிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (29) பிற்பகல் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ்புர பகுதியில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில்

அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 45 முதல் 50 வயதிற்கு இடைப்பட்ட 4 அடி 09 அங்குல உயரமுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் பூக்கள் கொண்ட சிவப்பு நிற ஆடையை (கவுன்) அவர் அணிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கையில் நாள் தொடரும் இடம்பெற்று வரும் இவ்விதமான மர்ம படுகொலைகள் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது .

இந்த கொலைகளின் பைபுலத்தில் உள்ளவர்கள் யார் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .

பெண் ஒருவர் வெட்டி படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

பெண் ஒருவர் வெட்டி படுகொலை

கொழும்பில் பெண் ஒருவர் வெட்டி கொலை

பெண் ஒருவர் வெட்டி படுகொலை ,சீதுவை லியனகேமுல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

காலி நெலுவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரிந்து வந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 06 வருடங்களாக குறித்த பெண் வர்த்தக வலயத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் லியனகேமுல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளார்.

நீர்கொழும்பு பதில் நீதவான்

நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்க சில்வா, சம்பவ இடத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் நாள்தோறும் தொடராக இடம்பெற்று வரும் இவ்வாறான படுகொலை நடவடிக்கை காரணமாக ,மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இந்த கொலைகளை நடத்துவது யார் ஏன் இடம்பெறுகிறது என்கின்ற கேள்வியே இப்பொழுது எழுப்ப பட்டுள்ளது .

மந்திரவாதியால் பெண் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

மந்திரவாதியால் பெண் படுகொலை

மந்திரவாதியால் பெண் படுகொலை

மந்திரவாதியால் பெண் படுகொலை ,பாதுகாப்பிற்காக அணிந்திருந்த தயத்தினால் எந்தப் பலனும் இல்லை எனத் திட்டிய பெண்ணொருவர், மந்திரவாதியால் கொல்லப்பட்டுள்ளார்.

அந்த மந்திரவாதி யின் ஆலோசனைக்கு அமைய அவரது சீடரால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

எஹலியகொடை, எருபொல பிரதேசத்தில் வசித்து வந்த சந்திரிகா பெரேரா என்ற 57 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடந்த காலத்தில் நிறைய பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருந்தது, அதற்கு பரிகாரமாக, தொடர்ந்து சாந்திகர்மா பூஜைகள் செய்த போதும், தலை நிமிர முடியாத அளவுக்கு தன் குடும்பத்திற்கு யாரோ சூனியம் செய்து விட்டார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.

அந்த சூனியத்தை அகற்றி பாதுகாப்பைப் பெறுவதற்காக கிரியெல்ல பிரதேசத்தில் உள்ள மந்திரவாதியிடம் அண்மைக்காலமாக அவர் சென்றுள்ளார்.

லட்ச ரூபாய் செலவு

ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்து அந்த சூனியத்தை போக்க முயன்றுள்ளதுடன், மந்திரவாதியால் அந்த பெண்ணுக்கு தங்கத்திலான தாயத்து வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி காலை அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததால், தனது தாய் காணாமல் போனதாக அவரது மகன் எஹலியகொடை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதன்படி விசாரணைகளை ஆரம்பித்த எஹலியகொடை பொலிஸார் சந்திரிகாவின் கையடக்கத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையைப் பெற்றுள்ளனர்.

அங்கு ஒரு தொலைபேசி எண்ணைக் கவனித்த பொலிஸார், ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி காலை, அவரது தொலைபேசிக்கு அந்த எண்ணிலிருந்து பல அழைப்புகள் வந்துள்ளன.

மேலும், அதே எண்ணுக்கு அவர் அழைப்பு விடுத்ததையும் பொலிஸார் அவதானித்துள்ளனர்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்

குறித்த தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளர் கிரியெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பொலிஸார்

கண்டறிந்து, மேலதிக தகவல்களைத் தேடிய போது, குறித்த நபர் தங்கப் பொருட்களை கொள்வனவு செய்யும் இடத்தில் தங்க தாயத்தினை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

குறித்த நபரை கைது செய்த பொலிஸார், விசாரணையின் போது குறித்த தாயத்து காணாமல் போன பெண்ணுடையது என தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணை கிரியெல்லவிற்கு அழைத்து வந்து கொன்றதாகவும், தான் மந்திரவாதியின் சீடன் எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சூனியத்தை அகற்றுவதாக குறித்த பெண்ணுக்கு வழங்கிய தாயத்து பலனளிக்கவில்லை என பல தடவைகள் குறித்த மந்திரவாதியை தொலைபேசியில் அழைத்து திட்டியதாகவும் சந்தேகநபர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் சந்தேக நபர் குறித்த பெண்ணிடம் “தாயத்தை பலப்படுத்தி மீண்டும் தாயத்தை போடுவதாக மந்திரவாதி கூறியுள்ளதால் கிரியெல்லவுக்கு வருமாறு கூறியுள்ளார்.

பெண்ணால் நிறைய பிரச்சனைகள்

பின்னர் ஏப்ரல் 24ஆம் திகதி காலை அந்த பெண் எஹெலியகொடையில் இருந்து கிரியெல்லக்கு வந்துள்ள நிலையில், மந்திரவாதி தனது சீடனிடம், “இந்தப் பெண்ணால் நிறைய பிரச்சனைகள் உள்ளது, ஏதாவது செய் என்று கூறியுள்ளார்.

அதன்படி, குறித்த நபர், குறித்த பெண்ணிடம் குறுக்குவழி இருப்பதாக கூறி, காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கழுத்தை நெரித்து படுகொலை

கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க தாயத்தை எடுத்துக் கொண்டு, உடலை காட்டில் நிறைய கிளைகளுக்கு அடியில் மறைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், பொலிசார் குறித்த இடத்தில் இருந்து சடலத்தை மீட்டுள்ள போதும் விலங்குகளால் சடலம் சேதப்படுத்தப்பட்டதால் உடல் சிதைந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது மகன் சடலத்தை அடையாளம் கண்ட பின்னர் பொலிஸார் மந்திரவாதியையும் கைது செய்துள்ளனர்.

யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் கொலை செய்யப்பட்ட பெண்

யாழில் கொலை செய்யப்பட்ட பெண்

யாழில் கொலை செய்யப்பட்ட பெண் ,யாழ்ப்பாணம், தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மருதங்கேணி பொலிஸ்

மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுத்துறை வடக்கு தாளையடி பகுதியில் கடந்த 10 ஆம் திகதி பெண் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார்.

கடற்றொழிலுக்கு சென்று அதிகாலை வீடு திரும்பியபோது, வீட்டின் கழிப்பறைக்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான முறையில் மனைவி சடலமாகக் கிடந்துள்ளார் என தெரிவித்து உயிரிழந்த பெண்ணின் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

அவரின் முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.

உயிரிழந்த பெண் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

பெண் ஒருவர் கொலை

மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதான பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டார்.

பொலிஸாரின் விசாரணையில் உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவனுக்கும் அடிக்கடி முரண்பாடு ஏற்படுவதாக தெரியவந்தநிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் 52 வயதான பெண்ணின் கணவர் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

கைதான சந்தேக நபரை நேற்று (16) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்
Posted in இலங்கை செய்திகள்

கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்

கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்

கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் ,காலி தவலம பிரதேசத்தில் பெண் ஒருவரின் கொலை தொடர்பிலான மர்மங்கள் நான்கு வருடங்களின் பின்னர் காலி மாவட்ட குற்றப்பிரிவின் விசாரணைகளில் வௌிக்கொணரப்பட்டுள்ளது.

கொன்று உடலை கழிவறை குழியில் வீசிய கோரம்

பெண்ணின் கள்ளக்காதலனே அவரை கொன்று உடலை கழிவறை குழியில் வீசியது தெரியவந்தது.

இதன்படி, நான்கு வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட 29 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயின் சடலம் காலி தவலம் ஹல்லகந்த பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள கழிவறை குழி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

நிலுஷிகா சந்தமாலி 2020 ஜூன் 6 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவரின் தாயார் அந்த நேரத்தில் பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்தார்.

முதல் திருமணத்திலிருந்து விவாகரத்து

தனது முதல் திருமணத்திலிருந்து விவாகரத்து பெற்ற நிலுஷிகா, தனது இரண்டு குழந்தைகளுடன் “பதல சாந்த” என்ற ஆணுடன் வாழ்ந்து வந்தார், அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை ஒஒன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று பிள்ளைகளின் தாயான இவர் காணாமல் போனமை தொடர்பில் அப்போது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போதும் எவ்வித தகவலையும் வெளிக்கொணர முடியவில்லை.

பொலிஸ் விசாரணைகள்

இவ்வாறானதொரு பின்னணியிலேயே சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் காலி பிரிவு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நான்கு வருடங்களாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், காணாமல் போன பெண்ணின் கள்ளக்காதலனான ஹேனகொடகே சாந்த என்ற 44 வயதுடைய “பதல சாந்த” என்ற நபரை கைது செய்தனர்.

அடித்துக் கொன்று உடல் மறைப்பு

இதன்போது, அவரை அடித்துக் கொன்று உடலை வீட்டின் அருகே உள்ள கழிவறை குழியில் மறைத்து வைத்தது தெரியவந்தது.

குடும்பத் தகராறு காரணமாக மனைவியைத் தாக்கிய “பதல சாந்த”, அப்பகுதியிலுள்ள வீடொன்றில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டதாகவும், அங்கு குழந்தைகள் வந்து தாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது.

அப்போது, குடிபோதையில் இருந்த பதல சாந்த, வீட்டுக்கு வந்து மனைவியை மீண்டும் தாக்கியதாகவும், மறுநாள் காலை உடல் குளிந்து காணபபட்ட நிலையில், துணியொன்றில் உடலை சுற்றி கழிவறை குழியில் போட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், அவர் தனது மனைவியின் வீட்டிற்கு சென்று ஒன்றும் தெரியாதது போது அவர்களிடம் மனைவி தொடர்பில் விசாரித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

சடலம் நிலுஷிகாவின் சடலம் என குழந்தைகளும் உறவினர்களும் அடையாளம் கண்டுள்ளனர்.

அப்போது, ​​அவர் அணிந்திருந்த காதணியும் கிடைத்தது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பெண் கழுத்து நெரித்து கொலை
Posted in இலங்கை செய்திகள்

பெண் கழுத்து நெரித்து கொலை

பெண் கழுத்து நெரித்து கொலை

பெண் கழுத்து நெரித்து கொலை ,துணியினால் கழுத்து நெரிக்கப்பட்டு மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உடுத்துறை வடக்கு, தாளையடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் அதே இடத்தை சேர்ந்த 44 வயதான மூன்று பிள்ளைகளின் தாயொருவர் என தெரியவந்துள்ளது.

கழுத்து துணியால் சுற்றி நெரிக்கப்பட்டு கொலை

வீட்டில் உள்ள கழிவறைக்கு அருகாமையில் உள்ள நீர் நிரம்பிய கொள்கலன்(பரல்) உள்ளே தலைப் பகுதி நீரில் இருக்குமாறு குப்புற விழுந்த நிலையில் அதிகாலை 5.30 மணி அளவில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி கனகசபை வாசுதேவா பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.

இதன்போது கழுத்து துணியால் சுற்றி நெரிக்கப்பட்டு சூட்சுமமான முறையில் கொலை செய்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.

அத்துடன் உயிரிழந்த பெண்ணின், பெண்ணுறுப்புக்கு அண்மையாக தொடைப்பகுதியில் நகக் கீறல் காயங்களும் காணப்பட்டுள்ளதாக மருதங்கேணிப் பொலிசாருக்கு அவர் அறிக்கையிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு பெண் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு பெண் படுகாயம்

துப்பாக்கிச் சூடு பெண் படுகாயம்

துப்பாக்கிச் சூடு பெண் படுகாயம் ,மதவாச்சி மஹதிவுல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெண் மதிவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஹெட்டவீரகொல்லேவ பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய பெண் ஒருவரே காயமடைந்துள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று (10) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகரிக்கும் துப்பாக்கி சூடு

இலங்கை அதிகரிக்கும் துப்பாக்கி சூடு தாக்குதல்களினால் மக்கள் மத்தியில் நாள் தோறும் ஒருவித அச்ச நிலை ஏற்பட்டுள்ளது .

கோட்டபாய ஆட்சி காலத்தில் ஆயுத வியாபாரத்தால் ஆவர் ஈடுபடடர் . வியாபாரம் மூலம் அதிக இலாபத்தை பெற்றார் .

சோமாலியா போன்றா நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை சேட்டு வந்தார் .

அவ்வாறு வழங்க பட்ட ஆயுதங்களை வைத்தே தற்போது இவ்விதமான கொலை குற்ற செயல்களில் ,மர்ம நபர்கள் ஈடுபட்டு வருவதாக மன்றம் கருத்துரைத்துள்ளது .

திருமணத்திற்கு சென்று உயிரைவிட்ட பெண்
Posted in இலங்கை செய்திகள்

திருமணத்திற்கு சென்று உயிரைவிட்ட பெண்

திருமணத்திற்கு சென்று உயிரைவிட்ட பெண்

திருமணத்திற்கு சென்று உயிரைவிட்ட பெண்
,தம்புள்ளை ஹபரணை வீதியில் திகம்பத்தஹ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தம்புள்ளையில் இருந்து ஹபரணை நோக்கி பயணித்த கெப் வண்டியொன்று அதே திசையில் பயணித்த காரை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த கெப் வண்டியில் பயணித்த பெண் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஹபரணை ஹிரிவடுன்ன பிரதேசத்தில் வசித்து வந்த சந்தியா குமாரி என்ற 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திருமண நிகழ்வு

அவர் மேலும் சிலருடன் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு மீண்டும் வீடு திரும்பும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் இதில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த இருவரில் மூன்று வயது சிறுமி ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

சீகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு

வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு

வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு ,ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவலகொட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் எனவும், வீட்டின் படுக்கையில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தனிமையில் வசித்த பெண் கொலை

விசாரணையில் குறித்த பெண் வீட்டில் தனியாக இருப்பதும், கணவர் வேலை நிமித்தமாக வௌியே சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் சமீப காலங்களாக தனிமையில் வசித்து வரும் பெண்கள் பலர் சடலமாக மீட்க பட்டுள்ள சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

தொடரும் இவ்வாறான மர்ம கொலைகளினால் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது .

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது ,ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட தனது கணவரை விடுவிக்க களுத்துறை தெற்கு ஊழல் ஒழிப்பு பிரிவு நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 03 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்க முற்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஒழிப்புப் பிரிவு

களுத்துறை தெற்கு இலஞ்ச ஒழிப்புப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் டி.ஸ்ரீ ரங்கா, ஹெரோயின் போதைப் பொருளுடன் அவரது கணவரை கைது செய்து களுத்துறை தெற்கு பொலிஸுக்கு அழைத்து வந்துள்ளார்.

சந்தேக நபர் சட்டையை எடுத்து வருமாறு மனைவிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்ததாகவும், சுமார் 20 நிமிடங்களின் பின்னர் மனைவி பொலிஸ் நிலையம் வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரிக்கு 3 இலட்சம் ரூபாய் பணத்தை வழங்கி ஹெரோயின் வழக்கில் இருந்து சந்தேகநபரை விடுவிக்குமாறு குறித்த பெண் கோரியதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில், இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி, தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவிற்கு அறிவித்ததை அடுத்து சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் மானிப்பாயில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

யாழ்ப்பாணம் மானிப்பாயில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் நிர்வாணமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

63 வயதுடைய சாந்தினி எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிள்ளைகள் மற்றும் கணவரை பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்ததாகவும், நேற்றைய தினம் வீட்டில் சடலமாக காணப்பட்டதை அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்