Tag: கிளிநொச்சி
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று(30) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்திற்கு முன்பாக A9 வீதியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் படங்களையும் பதாகையும் தாங்கியவாறு சர்வதேச விசாரணை வேண்டும் என கோசங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Featured
கிளிநொச்சியிலும் மனித எச்சங்கள் மீட்பு
கிளிநொச்சியிலும் மனித எச்சங்கள் மீட்பு
கிளிநொச்சியிலும் மனித எச்சங்கள் மீட்பு கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.
இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து பொலிஸார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான்
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், தெரிவிக்க பட்டது .
பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.
Featured
கிளிநொச்சியில் உலக கடற்புல் தினம்
கிளிநொச்சியில் உலக கடற்புல் தினம்
உலக கடற்புல் தினம் (World Sea grass Day) கடல்சார் சுற்றுச்சூழலில் கடற்புல் மற்றும் அதன் முக்கிய செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மார்ச் 1 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
அந்தவகையில், கிளிநொச்சியில் உலக கடற்புற்கள் தினம் நேற்று (02) மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண காரியாலயத்தின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு கிளிநொச்சி, முழங்காவில் மகாவித்தியாலயத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பூநகரி கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தினைச் சேர்ந்த 75 சுற்றாடல் முன்னோடி கழக மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது சுற்றாடல் கீதம் இசைக்கப்பட்டு, சிறப்புரைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, கடற்புற்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டு, நாச்சிக்குடா கடலுக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டு குறித்த விடயங்கள் செய்முறையாக காண்பிக்கப்பட்டன
கிளிநொச்சியில் ட்ரோன் கெமராவினை பறக்கவிட்ட இளைஞன் கைது
கிளிநொச்சியில் ட்ரோன் கெமராவினை பறக்கவிட்ட இளைஞன் கைது
கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் இரணைமடு குளம் அருகில் அனுமதியின்றி ட்ரோன் கெமராவினை வானில் பறக்கவிட்ட இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் அச்சுவேலி பிரதேசத்தை சேர்ந்த 24 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சியில் இரு இளைஞர்கள் சடலங்களாக மீட்பு
கிளிநொச்சியில் இரு இளைஞர்கள் சடலங்களாக மீட்பு
கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் உள்ள நீர்பாசன கால்வாயிலிருந்து இளைஞர்கள் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று இரவு இடம்பெற்ற விபத்தினால் அவர்கள் இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதி குறியீடுகளை உடைத்து நீர்பாசன வாய்க்காலிற்குள் பாய்ந்து விபத்திற்குள்ளாகியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சியில் இரு இளைஞர்கள் சடலங்களாக மீட்பு
இச்சம்பவத்தில் கிளிநொச்சி கல்மடு பகுதியை சேர்ந்த 20 வயதுடைய தயாளன் தனுசன் மற்றும் அழகாபுரி பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கிருஸ்ணன் சதீசன் ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மரண விசாரணை மேற்கொண்ட கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜமீல், உயிரிழந்தவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டதுடன், உறவினர்களிடம் மரணம் தொடர்பான சந்தேகங்களையும் கேட்டறிந்தார்.
உறவினர்களால் சடலங்கள் அடையாளம் காட்டப்பட்டதை தொடர்ந்து, அவை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சியில் அசானிக்கு நடந்த சோதனை
கிளிநொச்சியில் அசானிக்கு நடந்த சோதனை
கிளிநொச்சியில் வைத்து அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் அசானிக்கு பொண்ணாடைகள் போர்த்தி சான்றிதழ்கள் கேடயங்கள் வழங்கி ஹவுரவிக்க பட்டுள்ளார்
தமிழகம் ஜீ தமிழ் தலைக்காட்சியில் கலந்து கொண்டு சரிகமபா நிகழ்வில் பாடி அசத்தி வந்தார் .
அசானி மீது ஏற்பட்ட மக்கள் அனுதாப அலை காரணமாக உலகம் முழுவதும் அவர் அதிக மக்களினால் இரசித்து பார்க்க பட்டார் .
அவரது பாட்டு திறமைக்கு அப்பால் அவர் மீது கொண்ட அனுதாப அலையாகும் .
தமது பிள்ளை மீளவும் இலக்கை வந்தடைந்த நிலையில் அவருக்குரிய நிகழ்வுகளை தற்போது பல காட்சிகள் ,சமுக ஆர்வலர்கள் முன்னெடுத்து செய்து வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது

வீடியோ
கிளிநொச்சியில் 23 குடும்பங்கள் இடம்பெயர்வு
கிளிநொச்சியில் 23 குடும்பங்கள் இடம்பெயர்வு
கிளிநொச்சி – இரணைமடு குளத்தை அண்மித்த ஐயன்கோவில் கிராமத்தை சேர்ந்த 23 குடும்பங்கள் வௌ்ளம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளன.
இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளமையால், தாழ்நிலப் பகுதியிலுள்ள ஐயன்கோவில் கிராம மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐயன்கோவில் கிராமத்தை சேர்ந்த 23 குடும்பங்களின் 70 பேர் அருகிலுள்ள பாடசாலையொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்
வெள்ளத்தில் மிதக்கும் கிளிநொச்சி
வெள்ளத்தில் மிதக்கும் கிளிநொச்சி
கிளிநொச்சியில், பெய்த கடும் மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சியில் வியாழக்கிழமை (14) கடும் மழை பெய்தது.
இதனால், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் புளியம்பொக்கணை ஆகிய பிரதேசங்களில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
வெள்ளத்தில் மிதக்கும் கிளிநொச்சி
இதனால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ள்ளாகியுள்ளனரை். பலர் தங்களின் இருப்பிடங்களிலிருந்து வெளியேறி நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.
அத்தோடு தர்மபுரம் மத்திய கல்லுரி மற்றும் தருமபுரம் இலக்கம் ஒன்று
பாடசாலைக்கு உள்ளும் மழைநீர் உட்புகுந்தமையால் இப் பாடசாலைகளுக்கு இன்று(15) விடுமுறை வழங்கப்பட்டது.
பாதிப்புக்கள் தொடர்ப்பாக கிராம சேவையாளர் பிரதேச செயலகங்கள் விபரங்களை பெற்று வருகின்றனர்.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்
- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு
- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை
- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026
- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்
- இலங்கை இளைஞர்களுக்கு சீனத் தூதர் எழுதிய கடிதம்
கிளிநொச்சி நீதிமன்றில் முதல் மரண தண்டனை
கிளிநொச்சி நீதிமன்றில் முதல் மரண தண்டனை
கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் பெண்ணொருவரை கொலை செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஒன்பது வருடங்களின் பின்னர், வியாழக்கிழமை (09) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
மாத்தளை பகுதியைச் சேர்ந்த இராஜசுலோஜனா என்ற பெண்ணை, 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி கத்தியால் குத்திக் படுகொலை செய்து கிணற்றுக்குள் தள்ளிவிட்டுள்ளார். அதன்பின்னர் அப்பெண் சடலமாக மீட்கப்பட்டார்
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார் மற்றும் CID யினர் சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அயலில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்தில் பணியாற்றிய படுகொலைச் செய்யப்பட்ட பெண்ணின் காதலனை கைது செய்தனர்.
அத்துடன் படுகொலைக்கு பயன்படுத்திய கத்தி, அந்த பெண், இறுதியாக வைத்திருந்த அலைலைபேசி மற்றும் உடைகள் என்பவற்றை நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.
கிளிநொச்சி நீதிமன்றில் முதல் மரண தண்டனை
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குக்கான தீர்ப்பை, கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. எம் .ஏ சகாப்தீன் வழங்கினார்.
தீர்ப்பு வாசித்துக் காட்டப்பட்டது. குற்றவாளியின் இறுதிக் கருத்தும் கேட்கப்பட்டது. தான் நிரபராதி என்றார். அதன்பின்னர், நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்பட்டன. அதன்பின்னர், தீர்ப்பின் கீழ் கையொப்பமிட்டு, பேனையை நீதிபதி உடைத்து வீசினார்.
கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட முதலாவது மரண தண்டனை தீர்ப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் காணி ஒன்றில் கிளிநொச்சியில் புதையல்
தனியார் காணி ஒன்றில் கிளிநொச்சியில் புதையல்
கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி நேற்று அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
17 அடிவரை அகழ்வு நடைபெற்ற போதிலும், எவையும் சிக்கவில்லை. அகழ்வுப் பணியின் போது தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் முன்னிலையில் இருந்தனர்.
தனியார் காணி ஒன்றில் கிளிநொச்சியில் புதையல்
இரண்டு கனரக இயந்திரங்கள் மூலம் அகழ்வு பணி நடைபெற்றது. இதன் போது எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் பணி இடைநிறுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியான பணி நாளை 9.00 மணியளவில் மீண்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்
- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு
- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை
- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026
- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்
கிளிநொச்சியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற பயங்கரம்
கிளிநொச்சியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற பயங்கரம்
கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணாவில் பகுதியில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
28 வயதுடைய புஸ்பராசா தினேஸ் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற பயங்கரம்
சடலம் சம்பவ இடத்தில் உள்ள நிலையில் கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவ இடத்தை நீதவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குழுக்களுக்கு இடையேயான முரண்பாடு இச்சம்பவத்திற்கு வழியமைத்துள்ளதாக
ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
by நிருபர் காவலன் - உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
by நிருபர் காவலன் - நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
by நிருபர் காவலன் - 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
by நிருபர் காவலன் - மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
by நிருபர் காவலன்
கிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு
கிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு
கிளிநொச்சியில் தனியார் கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் நேற்று (20) மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் பகுதியில் கடந்த 19 ஆம் திகதி கிணறு சுத்தம் செய்யும் வேளையில் ஆயுதங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு
இது தொடர்பாக இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து நேற்று (20) பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது பழைய பி.கே.எல்.எம்.ஜி, மற்றும் ஏகே தோட்டாக்கள் 60, செல் 5, டிக்னெட்கள் சாஜர்கள், பழைய இலத்திரனியல் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவுby நிருபர் காவலன்
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடிby நிருபர் காவலன்
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்by நிருபர் காவலன்
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைதுby நிருபர் காவலன்
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுராby நிருபர் காவலன்
கிளிநொச்சி இ.போ.ச ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு
கிளிநொச்சி இ.போ.ச ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு
இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள், இன்று (03) பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
“கிளிநொச்சி சாலையின் வருமானத்தை பாதிக்கும் வகையில், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு வழித்தடத்தில் ஒரே நேரத்தில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
“யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு, புல்மேட்டை ஊடாக திருகோணமலைக்குச் செல்லும் தமது பஸ்களுக்கு முன்னால் விசுவமடுவில் இருந்து திருகோணமலைக்கு செல்லும் தனியாருக்கு சேவையாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இ.போ.ச ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு
“இதுவரை காலமும் கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கு சேவையாற்றும் படி கோரிக்கைகள் இருந்தும் இதுவரை இ.போ.சக்கு அனுமதி
வழங்கப்படவில்லை” என்ற விடயங்களை சுட்டிக்காட்டியே குறித்த பணிப் பகிஷ்கரிப்பில் இன்று காலை
முதல் கிளிநொச்சி இ.போ.ச ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் பொலிஸ் சுற்றிவளைப்பு பலர் கைது
கிளிநொச்சியில் பொலிஸ் சுற்றிவளைப்பு பலர் கைது
கிளிநொச்சி பகுதியில் பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பில் ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .
இவர்கள் யாவரும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியமை ,திருட்டில் ஈடுபட்டமை ,மக்களை அச்சுறுத்தியமை ,வீடுகளை உடைத்தமை போன்ற குற்ற சாட்டுக்கள் சுமத்த பட்ட நிலையில் கைது செய்ய பட்டுள்ளனர் ,
சுருங்க கூறின் ஆறு ரவுடிகள் கைது செய்ய பட்டுள்ளனர் .
Featured
இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற 91 பேர் கைது
இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற 91 பேர் கைது
இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓட முயன்ற 91 பேர் இலங்கை கடல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் ,
இவர் யாவரும் புத்தளம் கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மீன் பிடி படகு ஒன்றை சோதனை செய்தபொழுதே மேற்படி நபர்கள் சிக்கினார்
ஐரோப்பிய நாடுகளுக்கு நுழையும் முகமாக கடல் வழியாக பல லட்சம் ரூபாய்களை செலுத்தி ஆபத்தான கடல் வழியூடாக பயணிக்க முனைந்தவர்களே இவ்வாறு சிக்கினார்
இவர்கள் அனைவரும் இலங்கை சிலாபம் ,மாரவில,முல்லைத்தீவு ,கிளிநொச்சி,திருகோணமலை ஆகிய பகுத்தியை சேர்ந்தவர்களாகும் ,இந்த படகில் ஐந்து பெண்கள் உள்ளிட்ட 91 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
வெளிநாடுகளுக்கு சென்றால் அதிக பணம் உழைக்கலாம் என ஆசை வார்த்தையை கேட்டு பல லட்சம் பணத்தை செலவு செய்து பயணிக்கும் இவர்கள், வெளி நாடுகளில் எவ்விதம் சூழல் உள்ளது அங்கு சென்றால் போரின் பின்னரான காலப்பகுதிகியில் எமக்கு விசா கிடைக்குமா என்பது தொடர்பில் ஆராய்வதில்லை
ஆனாலும் இலங்கையை விட்டு தப்பி சென்றால் நாங்கள் செல்வந்தராகிவிடலாம் என எண்ணுகின்ற சிந்தனை பிழைகளின் செயல்பாடுகள் ஒன்றாக இது உள்ளது
ஆபத்தான கடல் வாழி பயணங்கள் மனித உயிரை கூட மாய்க்கும் நிலையில் உள்ளது ,உணவு குடிநீர் இன்றி கடலில் சிக்க வேண்டிய நிலை ஏற்படும் ,
இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற 91 பேர் கைது
இவ்வாறு இலங்கையை விட்டு தப்பி கடலில் பயணித்த பல நூறு இலங்கையர்கள் கடலில் காணாமல் போன நிலையில் உள்ளமை கவனிக்க தக்கது

இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற அனைவரும் கடற்படையால் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படவுள்ளனர்
இலங்கையை விட்டு தப்பியோட பல நூறு மக்கள் தற்கால சூழலில் தயாராகி
வருகினற்னர் ,
அவ்விதம் இலங்கையை விட்டு தப்பிக்க முனையும் பல மக்கள் இந்தியாவுக்கு
உயிர் பாதுகாப்பு தஞ்சம் தேடி செல்கின்றனர்
ஆனால் இவர்கள் அது தாண்டி உயிரோடு விளையாடி பெரும் கடல்களில் சிறு படகில் பயணிக்க முயல்வது மிக பெரும் ஆபத்தான ஒன்றாகும் என்பது இங்கே சுட்டி கட்ட தக்கது.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி
- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்
- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது
- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு
- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்
கிளிநொச்சியில் ஆலயத்தில் சடலம் மீட்பு
கிளிநொச்சியில் ஆலயத்தில் சடலம் மீட்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர் ஐயப்பன் கோவில் மண்டபத்தில்
ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கிளிநொச்சியை சேர்ந்த 43 வயதுடைய லாலசிங்கம் சங்கர் என்ற 2
பிள்ளைகளின் தந்தையான வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மரணம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் பல்வேறு கோணங்களில்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குண்டு வெடித்து இருவர் மரணம் – கிளிநொச்சியில் துயரம்
குண்டு வெடித்து இருவர் மரணம் – கிளிநொச்சியில் துயரம்
கிளிநொச்சியில் வீடொன்றில் காணப்பட்ட எறிகணை ஒன்றை இரு சகோதரர்கள் இணைந்து
வெட்டியுள்ளனர் ,அப்பொழுது அந்த குண்டு வெடித்து சிதறியதில்
சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் ,மேலும் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் கிளிநொச்சி
மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்
கிளிநொச்சியில் கொரனோவால் 38 பேர் மரணம்
கிளிநொச்சியில் கொரனோவால் 38 பேர் மரணம்
கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் தொற்றினால் 38 இறந்துள்ளதுடன். 4885 தொற்றாளர்களில் 2374 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நேற்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதுதெடார்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,கிளிநொச்சி
மாவட்டத்தில் 4885 பேர் இதுவரை தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 2374 பேர் வீடுகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்றுக்கு உள்ளாகிய 3691 குடும்பங்களுக்கு உலருணவு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று மாவட்டத்தில் இதுவரை கோவிட் தொற்றால் 38 பேர் இறந்துள்ளனர்.
அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு அமைய சதொச கூட்டுறவு சங்கங்கள் ஊடாக சீனி நியாய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.39500 கிலோ கிராம் சீனி எமது மாவட்டத்திற்கு கிடைக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி ,பளை ,விஸ்மடு பகுதியில் சிறிதரன் எம்பி நிவாரண உதவி photo
கிளிநொச்சி ,பளை ,விஸ்மடு பகுதியில் சிறிதரன் எம்பி நிவாரண உதவி photo
கிளிநொச்சியில் 750 குடும்பங்களுக்கு கனடா செந்தில் குமரன் நிவாரண நிதியம் உதவி!
நாட்டில் தற்பொழுது அமுலில் இருக்கும் பயணத்தடை காரணமாக வறிய மக்கள் கடும் சிரமத்தை
எதிர்நோக்கி உள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பட்டினியாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களின் வறுமையை போக்கும் விதமாக புலம்பெயர் உறவுகள் தனிப்பட்ட ரீதியாகவும், ஊர்சங்கங்களின் ஊடாகவும், நிறுவனங்களின் ஊடாகவும் பல விதமாக உதவி வருகின்றனர்.
அந்த ரீதியில், கனடாவில் பல காலமாக தமிழ் மக்களின் பெரும் ஆதரவுடன் இயங்கி வரும் மின்னல் செந்தில் குமரனின் நிவாரண அமைப்பு 11 லட்சம் பெறுமதியான உலர் உணவு பொருட்களை நிவாரணமாக கிளிநொச்சி மக்களுக்கு வழங்கி உள்ளது.
இதனை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்னிலையில் DS அலுவலகத்தால் பரிந்துரைக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்படுகிறது.
மேலும் பல மாவட்டங்களில் செந்தில் குமரனின் நிவாரன உதவி தொடர இருப்பதாக அறியப்படுகிறது…


கிளிநொச்சியில் 3 பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த பெண்
கிளிநொச்சியில் 3 பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த பெண்
இலங்கை கிளிநொச்சி ,வட்டக்கச்சி பகுதியில் கிண்று ஒன்றுக்குள் மூன்று பிள்ளைகளுடன் தாய் ஒருவர் வீசி எறிந்து ,தானும் குதித்து தற்கொலை செய்துள்ளார்
இரண்டு,ஐந்து,எட்டுவயதுடைய மூன்று குழந்தைகளை குளற்றில் தள்ளி மூழ்கடித்த பின்ன தாயார் தானும் குதித்து தற்கொலை செய்துள்ளார்
இந்த தற்கொலைக்கான காரணம் தெரியவரவில்லை .
சிசு ஒன்றினது சடலம் மட்டும் இதுவரை மீட்க பட்டுள்ளது
ஏனைய மூவரது சடலங்களையு தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்ற வண்னம் உள்ளது ,





































