Tag: சடலங்களாக மீட்பு
கிளிநொச்சியில் இரு இளைஞர்கள் சடலங்களாக மீட்பு
கிளிநொச்சியில் இரு இளைஞர்கள் சடலங்களாக மீட்பு
கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் உள்ள நீர்பாசன கால்வாயிலிருந்து இளைஞர்கள் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று இரவு இடம்பெற்ற விபத்தினால் அவர்கள் இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதி குறியீடுகளை உடைத்து நீர்பாசன வாய்க்காலிற்குள் பாய்ந்து விபத்திற்குள்ளாகியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சியில் இரு இளைஞர்கள் சடலங்களாக மீட்பு
இச்சம்பவத்தில் கிளிநொச்சி கல்மடு பகுதியை சேர்ந்த 20 வயதுடைய தயாளன் தனுசன் மற்றும் அழகாபுரி பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கிருஸ்ணன் சதீசன் ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மரண விசாரணை மேற்கொண்ட கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜமீல், உயிரிழந்தவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டதுடன், உறவினர்களிடம் மரணம் தொடர்பான சந்தேகங்களையும் கேட்டறிந்தார்.
உறவினர்களால் சடலங்கள் அடையாளம் காட்டப்பட்டதை தொடர்ந்து, அவை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்
- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa
பிரான்ஸில் குழந்தைகள் உள்ளிட்ட ஐவர் சடலங்களாக மீட்பு
பிரான்ஸில் குழந்தைகள் உள்ளிட்ட ஐவர் சடலங்களாக மீட்பு
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் தாயும் அவரது நான்கு பிள்ளைகளும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸில் குழந்தைகள் உள்ளிட்ட ஐவர் சடலங்களாக மீட்பு
சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
09 மாதங்கள் முதல் 10 வயது வரையான நான்கு குழந்தைகளே நேற்று இரவு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகாத நிலையில், இது குறித்த மேலதிக விசாரணைகளை பிரான்ஸ் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு குளத்தில் இருந்து மூவர் சடலங்களாக மீட்பு
முல்லைத்தீவு குளத்தில் இருந்து மூவர் சடலங்களாக மீட்பு.
முல்லைத்தீவு வவுனிக்குள குளக்கட்டில் கப் வாகனம் தடம் புரண்டு
விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
வானகத்தை செலுத்திய 37 வயதுடைய தந்தை, 3 வயதுடைய மகள் ஆகியோரின் சடலங்கள், இன்று (20) காலை கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன.
விபத்தில் 13 வயதுடைய சிறுவன் நேற்று மீட்கப்பட்டு மாங்குளம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
வாகனத்தில் சாரதியான 37 அகவையுடைய கிருஸ்ணபிள்ளை ரசீந்திரன்,
அவரது மூன்று வயது மகளாக ரசீந்திரன் சார்ஜனா ஆகியோரை நேற்று (19)
இரவிரவாக தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு இன்று(20) காலை கடற்படையினரின் உதவியுடன் குறித்த இருவரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.



















