Posted in இலங்கை செய்திகள்

வெருகல் ஆற்றில் கவிழ்ந்த படகு

வெருகல் ஆற்றில் கவிழ்ந்த படகு

மட்டக்களப்பு – வெருகல் அற்றை தோணியில் கடக்க முற்பட்ட ஒருவர் தோணி கவிழ்ந்ததில், ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த

நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், இன்று (25) காலையில் இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

சேருநுவர பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குழந்தைவேல் கணேசமூர்த்தி என்ற நபரே இவ்வாறு உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.

இவர், வெருகல் ஆற்றுபகுதிக்கு அப்பால் உள்ள தனது காணியில் சேனைப்பயிர் செய்கை செய்துவருவதாகவும் வழமைபோல

சம்பவதினமான இன்று காலை தோணியில் பயிர்ச் செய்கை பகுதிக்கு

ஆற்றில் ஊடாக தனிமையில் பயணித்தபோது, தோணி கவிழ்ந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு

கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு

கல்முனை கடற்கரை பிரதேசத்தில் இன்று (25) அதிகாலை பெண்ணொருவரின்

சடலம் கரையொதுங்கிக் கிடப்பதை கண்ட பொதுமக்கள், பொலிஸாருக்குத் தகவலை தெரியப்படுத்தினர்.

இதனை அடுத்து, அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார், பொதுமக்கள்

ஒன்றிணைந்து, கரை ஒதுங்கிக் கிடந்த பெண்ணின் சடலத்தை அடையாளம் கண்டு, மீட்டுள்ளனர்.

கல்முனையில் – 02 கிராமசேவையாளர் பிரிவில் வசித்து வந்த 78 வயதுடைய

சின்னத்தம்பி நேசம்மா என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும்

இவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

சடலம், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

கப்பல் உரிமையாளர்340 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க இணக்கம்

கப்பல் உரிமையாளர்340 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க இணக்கம்

தீ பரவலுக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பல் உரிமையாளர்

இலங்கைக்கு நட்டஈடு வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக

தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆரம்ப நட்டஈடாக 340 மில்லியன் ரூபாயை இலங்கைக்கு

வழங்குவதற்கு கப்பல் நிறுவனம், சட்டமா அதிபரிடம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இதனை, சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன கூறியுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

கற்கை நெறியில் அதிரடி மாற்றம் – கோட்டா உத்தரவு

பல்கலைக்கழக பாடவிதானம் தொழிற்சந்தையை நோக்கமாகக்கொள்ள வேண்டும்.

• தொழிநுட்ப விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழிநுட்ப பாடங்களுக்கு கூடிய அவதானம்.

எதிர்கால உலகிற்கு ஏற்ற பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய பிரஜையை உருவாக்குகின்ற கல்வி மறுசீரமைப்பின் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவுபடுத்தினார்.

பல்கலைக்கழகங்கள், பட்டங்களை வழங்கக்கூடிய நிறுவனங்களாக மட்டும் இல்லாமல் நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் அதேபோல் பட்டம் பெறுவோரும்

அதன்மூலம் பயனை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக் காட்டினார். நடைமுறை

தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி, புதிய பாடவிதானங்களை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு அவர் கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைக்கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால

திட்டங்கள் தொடர்பாக நேற்று (24) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

பல வருடங்களாக நாட்டுக்குப் பொருத்தமான கல்வி மறுசீரமைப்பொன்று இடம்பெறாமை தற்போதைய தொழில் சந்தையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளதாக

ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு துறைகளில் தொழில் வாய்ப்புகள்

அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. ஆனாலும் அதற்கு அவசியமான மனித வளத்தை கல்வி முறைமை மூலம் உருவாக்க வில்லை.

‘நாட்டின் எதிர்கால சமூகம் பயனுள்ள பிரஜைகளாக உருவாகுவதற்கு அவர்கள் புதிய அறிவு திறமைகள் மற்றும் திறன்களை விருத்தி செய்வது அவசியமாகும். இளைஞர், யுவதிகள்

கல்வித்துறையில் கைவிடப்படாமல் இருப்பதற்கு முன்பள்ளி கல்வி முதல் உயர் கல்வியை நிறைவு செய்யும் வரை தெளிவான வழிகாட்டல்களை திட்டமிட வேண்டும். அதன் மூலம் தொழிநுட்ப

கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கவும் கல்வி பொறிமுறையில் தொழிநுட்ப பாவனையை விரிவுப்படுத்தவும் முடியும். கல்விசார்

அனைத்து நிறுவனங்களையும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டு வந்ததன் காரணம் இந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்கேயாகுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

சாதி, மத பேதங்களின்றி அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்பை வழங்குவது கட்டாயமாகும் என்றும் நாட்டுக்குப்

பொருத்தமான பயனுள்ள பிரஜையை உருவாக்குவது அரசாங்கத்தின் கடமையாகுமென்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

கல்வியை தொடர முடியாத பிள்ளைகளுக்கு வயதெல்லைகள் இன்றி மீண்டும் எதிர்பார்க்கும் கல்வி இலக்கை அடைந்து கொள்வதற்கு புதிய மறுசீரமைப்பின் மூலம் அதற்கான பின்புலம்

தயாரிக்கப்பட வேண்டும். பரீட்சையை மையப்படுத்திய கல்விக்கு மாற்றமாக மாணவர் மையக் கல்வி முறையொன்றை நடைமுறை

ரீதியாக செயற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

பல்கலைக்கழக பிரவேசத்திற்கு தகுதிபெறும் அனைத்து மாணவர்களும் பட்டம் பெறும் வரை செல்வதற்கு அவசியமான நடவடிக்கையுடன் பட்டதாரிகள் தொழில் கேட்டு வீதிக்கு இறங்காத,

தொழிற்சந்தை பட்டதாரிகளை தேடிச் செல்லக்கூடிய கல்வி முறைமையொன்றின் உடனடி அவசியம் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் வருடத்தில் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கும் எண்ணிக்கை 31,000 த்திலிருந்து 41,000 வரை அதிகரிக்கப்படும். திறந்த பல்கலைக்கழகத்திற்கு மேலதிகமாக 10,000 பேர்

உள்வாங்கப்படுவர். தகவல் தொழிநுட்ப பட்டத்தை பயிலுவதற்காக 10.000 பேரை இணைத்துக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவுசெய்யும்போது

அபிவிருத்தி அடைந்த நாடுகள் பின்பற்றும் பல்கலைக்கழகங்களுக்கே உரிய முறைமையை தயாரித்தல் தொடர்பாகவும் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.

ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையை உடனடியாக கருத்தாடலுக்கு உட்படுத்தி செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர்

பீ.பி.ஜயசுந்தர ஆகியோருடன் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

மீனவர் படகுகளை பதிவு செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

மீனவர் படகுகளை பதிவு செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

யாழ்.மாவட்டத்தில் காணப்படும் பதிவு செய்யப்படாத படகுகளை பதிவு செய்யும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய,

கடற்றொழில் திணைக்கள அதகாரிகளினால் கடந்த சில தினங்களாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்மூலம், கடந்த காலங்களில் பருவகால மீன்வர்களிடமிருந்தும் தெனினிலங்கை பிரதேசங்களில் இருந்தும் யாழ். மாவட்ட

மீனர்வர்களினால் கொள்வனவு செய்யப்பட்ட நிலையில் கடற்றொழில் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாமல் இருந்த

சுமார் 183 படகுகளை பதிவு செய்கின்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அண்மைக்காலமாக அதிகரித்துள்ள கடல் வழியான போதைப் பொருள் உட்பட்ட கடத்தல் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு

அதிகாரிகளினால் மேற்கொள்ளுகின்ற நடவடிக்கைகளின் போது, பதிவு செய்யப்படாத படகுகளை பயன்படுத்துகின்ற

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அசெகரியங்கள் நீங்கவுள்ளது.

அத்துடன் படகுகளைப் பதிவு செய்வதன் மூலம், குறித்த படகுகளுக்கு காப்புறுதி செய்வதற்கும் அவசிய தேவைகளின் போது

வங்கிக் கடன்களைப் பெற்றுக் கொள்ளுதல் உட்பட பல்வேறு நன்மைகளை

கடற்றொழிலாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்று கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, வடக்கின் ஏனைய கடற்றொழில் மாவட்டங்களிலும் பதிவு செய்யப்படாத படகுகள் காணப்படுகின்ற நிலையில், அவை

அனைத்தையும் பதிவு செய்யும் நோக்கில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய விசேட அணி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது

போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது

பேலியகொடை மத்திய மீன் விற்பனை கட்டட தொகுதியில், போலி

நாணயத் தாள்களுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து, 5,000 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நாணயத்

தாள்கள் 13 மற்றும் அலைபேசி, கடன் அட்டை என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகளின் சங்கம் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின்

பட்டதாரிகள் சங்கம் ஆகியன ஆரம்பித்த போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று (24) தொடர்கின்றது.

கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் நேற்று (23) முதல் இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

அரச தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள

பிரச்சினைகள் காரணமாகவே வேலையற்ற பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக எதிர்ப்பாளர்கள் நேற்று காலை ஒன்றுகூடினர்.

அங்கிருந்து அவர்கள் பேரணியாக ஜனாதிபதி செயலகத்தை அண்மித்து செல்லும் போது பொலிஸார் தடையேற்படுத்தினர்.

Posted in இலங்கை செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சில வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு

தடை விதிக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Cotton Bud-க்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிலான சிறிய குழாய்,

ஷெஷே பக்கெட்கள் மற்றும் கிருமிநாசினி அடங்கிய சிறிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.

இதற்கான மாற்றுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு

சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

புத்தளம் மன்னார் பழைய வீதியின், 4ஆம் கட்டைப் பிரதேசத்தில், துப்பாக்கி

மற்றும் ரவைகள், என்பவற்றுடன் சந்தேக நபரொருவர் இன்று (24) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி ஒன்றும் அதற்குப்

பயன்படுத்தக்கூடிய, 113 ரவைகளும் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட 49 வயதுடைய சந்தேக நபரை, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக,

புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

தியாக தீபம் திலீபனின் நினைவஞ்சலிக்கு தடை

தியாக தீபம் திலீபனின் நினைவஞ்சலிக்கு தடை

தியாக தீபம் திலீபனின் நினைவஞ்சலிக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால்

விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு, தொடர்ந்தும் அமலில்

இருக்குமென்று, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்துக்கு விதிக்கப்பட்ட தடைக்கு

எதிராக பிரதிவாதிகள் சட்டத்தரணிகள் ஊடாக பல விண்ணப்பங்கள்

செய்தனர். எனினும் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு தொடர்ந்தும் அமலில் இருக்கும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

லொறியில் இருந்து விழுந்து நபர் பலி – நடந்தது என்ன ..?

லொறியில் இருந்து விழுந்து நபர் பலி – நடந்தது என்ன ..?

ராகலை நோக்கிய பயணித்த மரக்கறிகளை ஏற்றிய வாகனத்தின்

பின்புற பகுதியில் பயணித்த ஒருவர், கீழே விழுந்து

உயிரிழந்துள்ளார்.

46 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். கெப் வாகனத்தின் சாரதி

கைதுசெயயப்பட்டுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

17 வயது பெண் கற்பழித்து கொலை – அதிர்ச்சியில் கிராமம்

பாலங்கொடை ஒலுகன்தோட்ட கிராம சேவகர் பிரிவில் வெலிஹரனாவ பகுதியில், 17 வயது மாணவி ஒருவர் மர்மமான

முறையில் உயிரிழந்துள்ளார் என்றும் இவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் என்று, பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

பலாங்கொடை இ/இந்து கல்லூரியில் கல்விகற்றுவந்த கே.லோசினி என்பவரே, இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி மாணவியை காணவில்லை என அவரது தாய் நேற்று (22) தேடிய

போது, வீட்டிலுள்ள கட்டிலுக்குக் கீழ், மாணவி சுயநினைவின்றி விழுந்து கிடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மாணவியின் உறவினர்கள் அவரை உடனடியாக வைத்தியசாலையில்

அனுமதித்தபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக, வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவியின் முகம் மற்றும் கழுத்தில் காயங்கள் காணப்படுவதாகவும் கழுத்து நெறிக்கப்பட்டதற்கான அடையாளம்

காணப்படுவதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனவே, மாணவி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக, பலாங்கொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

லண்டன் வீதிகளை காப்பி அடித்த இலங்கை – பஸ் பயணிக்க தனி பாதை

லண்டன் வீதிகளை காப்பி அடித்த இலங்கை – பஸ் பயணிக்க தனி பாதை

வீதி நிரல் சட்டத்தில் மற்றுமொரு நடைமுறை இன்று முதல் (23 ஆம் திகதி) பரீட்சார்த்தமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய செனரத்

தெரிவிக்கையில் பஸ் முன்னுரிமை ஒழுங்கின் ஊடாக பயணம் செய்யக் கூடிய பயணிகள் போக்குவரத்து பஸ்கள், அலுவலக

சேவையில் ஈடுபடும் பஸ்கள் மற்றும் அதற்கான அனுமதி பெற்றுள்ள வான்கள், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும்

வான் மற்றும் பஸ்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பஸ் முன்னுரிமை ஒழுங்கு மூலம் வேறு வாகனங்களுக்கு பயணிக்க முடியாது எனவும் பஸ் வண்டி ஒன்றை முந்திச் செல்வதற்காக

மாத்திரம் இரண்டாவது ஒழுங்கிற்கு பிரவேசிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Posted in இலங்கை செய்திகள்

மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி கிராமத்திற்கு விஜயம்

மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி கிராமத்திற்கு விஜயம்

மக்கள் மத்தியில் சென்று அவர்கள் முகங்கொடுத்து வருகின்ற பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக இனங்கண்டு தாமதிக்காமல்

தீர்வுகளை வழங்குவதற்காக கிராமங்களுக்குச் செல்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார்.

மக்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகளை தான் நேரடியாகக் கண்டு அவர்களின் கவலைகளை கேட்டு சரியான

தெளிவொன்றை பெற்று நிவாரணங்களை வழங்குவது அவரின் எதிர்பார்ப்பாகும்.

முதல் விஜயமாக பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை பிரதேச செயலகப் பிரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் சந்திப்பு

ஹப்புத்தளை 100 ஏக்கர் கிராமத்தில், குமாரதென்ன பாடசாலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்.

கிராமிய மக்கள், நீண்டகாலமாக தீர்த்து வைக்கப்படாத பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளினால் அல்லல்பட்டு வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, ஜனாதிபதி தேர்தல் மற்றும்

பொதுத் தேர்தல் காலத்தில் நாடு முழுவதும் மேற்கொண்ட விஜயங்களின்போது அது தெளிவாகியதாகவும் குறிப்பிட்டார்.

வாழ்வாதார பிரச்சினை, காணி மற்றும் வீடின்மை, காணிகளுக்கு உறுதிகள் இல்லாதிருத்தல், சுகாதார மற்றும் போக்குவரத்து சேவைகள் போதுமானதாக இல்லாமை, பிள்ளைகளின் கல்வி

பிரச்சினைகள் மற்றும் பாடசாலையின் குறைபாடுகள், விவசாய மற்றும் குடிநீருக்கான நீரை பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினை,

காட்டு யானைகள் ஊருக்குள் வருதல், விவசாய உற்பத்திகளை விற்க முடியாமை அவ்வாறு இனங்காணப்பட்ட பிரச்சினைகளில் முதன்மையானவையாகும்.

கிராமிய மக்களுக்கு உள்ள கஷ்டங்களை புரிந்துகொண்டு, அவற்றை உடனடியாக தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய

அரச நிறுவனங்களின் ஊதாசீனம் மற்றும் செயற்திறனின்மை போன்றவை பிரிதொரு பிரச்சினையாகும்.

ஜனாதிபதி அவர்கள் மிக முக்கிய கிராமங்களில் கண்காணிப்பு விஜயங்களை மேற்கொள்ளும்போது மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். செலவழிக்கப்படும் பணம்

குறைத்துக்கொள்ளப்படும். கொழும்பிலிருந்து அதிகாரிகள் குழு அழைத்துச் செல்லப்பட மாட்டார்கள். மக்கள் பிரச்சினைகளை

தீர்ப்பதற்கு பிரதேச அதிகாரிகள் மாத்திரம் பங்குபற்றுவர். மக்கள் சந்திப்புக்கு வருகை தந்து, தமக்குள்ள பிரச்சினைகளை அறியத்தருமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு முடியுமான வகையில் உடனடியாக தீர்வுகளை வழங்குவது ஜனாதிபதி அவர்களின்

எதிர்பார்ப்பாகும். தீர்ப்பதற்கு காலம் எடுக்கக்கூடிய பிரச்சினைகள் மாத்திரம் பின்னர் தீர்த்து வைப்பதற்காக குறித்துக்கொள்ளப்படும்.

வேள்ளிக்கிழமை கண்காணிப்பு விஜயத்திற்காக தெரிவு செய்யப்பட்டிருப்பது ஹல்துமுல்லை பிரதேச செயலக பிரிவின் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளாகும். அதில் 222 குடும்பங்கள்

வசிக்கின்றனர். அவர்களின் பிரதான வாழ்வாதாரமாக இருப்பது. நெல், மிளகு மற்றும் கறுவா பயிர்ச் செய்கையுடன்கூடிய கலப்பு

விவசாயம் ஆகும். மக்கள் சந்திப்பு இடம்பெறும் குமாரதென்ன பாடசாலையில் 17 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

60 ரூபாவிற்கு தேங்காய்- குஷியில் மக்கள்

60 ரூபாவிற்கு தேங்காய்- குஷியில் மக்கள்

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பாவனையாளர்களுக்கு

60 ரூபா நிவாரண விலையில் தேங்காயை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

பெருந்தோட்ட தொழிற்துறையுடன் தெங்குச் செய்கை சபை இணைந்து

இந்த வேலைத்திட்டத்தை மேற்கொண்டுள்ளன. இதன் கீழ் கொழும்பு

மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் லொறி மூலம் தேங்காய் விநியோகிக்கும் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தேங்காய் ஒன்றை 60 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள

முடியும். தேங்காயின் விலையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான

சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்

Posted in இலங்கை செய்திகள்

உள்நாட்டு விவகாரங்களில் தலையிட கூடாது – மிரட்டும் கோட்டா -மிரளுமா ஐநா..?

உள்நாட்டு விவகாரங்களில் தலையிட கூடாது – மிரட்டும் கோட்டா -மிரளுமா ஐநா..?

ஏனைய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை உரிய

முக்கியத்துவம் கொடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று (21) இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் உயர் மட்டக் கூட்டத்தில் வீடியோ

தொழிநுட்பத்தின் ஊடாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

‘உலகம் ஒரு பொதுவானதும் நிகரற்றதுமான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ஒரு சந்தர்ப்பத்தில், ‘எமக்குத் தேவைப்படும் ஐக்கிய நாடுகள் சபை’, என்ற சுலோகம் நாடுகளின் இறையாண்மை

சமத்துவத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் ஆள்புல ஒருமைப்பாட்டினை மதித்து அவர்களின் உள்நாட்டு

விவகாரங்களில் தலையிடாதிருக்கும் என்றும் தான் நம்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஒரு சிலரின் நலன்களுக்காக எந்த ஒரு நாட்டையும் பிணையாக வைத்திருக்காததன் மூலம் உறுப்பு நாடுகளுக்கும் ஐ.நா.வுக்கும்

இடையிலான கூட்டாண்மயை மிகச் சிறந்த முறையில் பேண முடியும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

ஐ.நா. தனது 75 ஆவது ஆண்டு நிறைவை ஐ.நா. பொதுச் சபையின் ஒரு நாள் உயர்மட்டக் கூட்டத்துடன் 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் 21 திங்கட்கிழமையன்று பன்முகத்தன்மைக்கான கூட்டு

உறுதிப்பாட்டை மீள் உறுதிப்படுத்தும் வகையில் ‘நாம் விரும்பும் எதிர்காலம்இ எமக்குத் தேவையான ஐக்கிய நாடுகள் சபை’ என்ற

கருப்பொருளின் கீழ் கொண்டாடுவதாக ஐ.நா. உறுப்பு நாடுகள் 2019 ஜூன் மாதம் இணக்கம் கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுச் சபையின் 75 வது அமர்வின் தலைவர் வோல்கன் போஸ்கிர் மற்றும் ஐ நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் ஆகியோர் இக்கூட்டத்தின் ஆரம்ப மற்றும் இரண்டாவது உரைகளை

நிகழ்த்தினர். 180 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக மாநாட்டில் உரைகளை நிகழ்த்தினர்.

‘முன்னெப்போதுமில்லாத வகையில் கொவிட்-19 தொற்றுநோயால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது, இது நமது பொருளாதாரங்கள்

, சுகாதார அமைப்புகள் மற்றும் உண்மையில் நமது சமூகங்களை ஒரு சில மாதங்களுக்குள் பெரிதும் பாதித்துள்ளது’ என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஒரு செயற்திறமான தலையீட்டின் மூலம் கொவிட்-19 இன் சவாலை இலங்கைக்கு வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது. இலங்கையில் முதல் நோயாளி கண்டறியப்படுவதற்கு முன்பே கொவிட்-19 ஐ

தடுப்பதற்கான தேசிய நடவடிக்கைக் குழுவை நாங்கள் அமைத்தோம். இராணுவம், சுகாதாரத் துறை மற்றும் தேசிய மற்றும்

பிராந்திய மட்டங்களில் உள்ள சிவில் அதிகாரிகளை அக்குழு உள்ளடக்கியிருந்தது.

இலங்கையில் கொவிட்-19 நோயில் இருந்து மீளும் வீதம் உலகளாவிய மீட்பு வீதத்தை விட 90மூ அதிகமாக உள்ளது. எமது மிகப் பெரிய பலமாக இருந்த ‘தடமறிதல் மற்றும்

தனிமைப்படுத்தலை’ நாம் சார்ந்திருந்தமை எமது வெற்றிக்கு பெரிதும் உதவியது என்று ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். கடந்த ஒரு மாத காலப்பகுதியில் நாட்டில் கொவிட்

நோய்த்தொற்றுக்கு ஆளான எந்வொருவரும் கண்டறியப்படவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்தவர்கள் என்ற வகையில் இந்த மாபெரும் நிறுவனத்தை வலுப்படுத்தும் முயற்சிகள் நாங்கள்

விரும்பும் எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் அரச தலைவர்களின் உயர் மட்ட கூட்டத்தில் வீடியோ

தொழில்நுட்பத்தின் மூலம் பங்கேற்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய முழுமையான உரை.

பொதுச் சபையின் 75 வது கூட்டத்தொடரின் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. வோல்கன் பொஸ்கர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். இந்த வரலாற்று

சிறப்புமிக்க தருணத்தில் இலங்கை மக்களை பிரதிநிதித்துவம் செய்வதற்கு கிடைத்தமை எனக்கு கிடைத்த மாபெரும் கௌரவமாகும்.

துரதிஷ்டவசமாக இ 75 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கெளரவமான சபையை ஆரம்பித்தவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாற்றமானதாகவே இன்றைய உலகம் காணப்படுகின்றது.

ஒரு சில மாதங்களுக்குள் எமது பொருளாதாரம், சுகாதார கட்டமைப்பு மற்றும் முழுமையாக எமது சமூக செயற்பாடுகளை

இடை நிறுத்திய, முன்னர் எப்போதும் இருக்காத கொவிட் – 19 நோய்த்தொற்றினால் முழு உலகும் பாதிக்கப்பட்டுள்ளது.

அறிவார்ந்த செயற்பாடுகளின் மூலம் கொவிட் – 19 சவாலுக்கு வெற்றிகரமாக இலங்கை முகங்கொடுத்தது. இலங்கையில் முதலாவது நோயாளியை இனங்காண்பதற்கு முன்னராகவே நாம்

கொவிட் – 19 தேசிய நிவாரண செயற்பாட்டுக் குழுவை ஸ்தாபித்தோம். பாதுகாப்பு தரப்பினர், சுகாதார, தேசிய மற்றும்

பிரதேச மட்டத்தில் சிவில் அதிகாரிகள் அனைவரையும் உள்ளடக்கிய வகையிலேயே எமது முன்னெடுப்புகள் அமைந்திருந்தன.

இலங்கையில் கொவிட் – 19 நோயாளிகள் சுகம் அடையும் வீதம் நூற்றுக்கு 90 ஐ விடவும் அதிகமாக உள்ளதுடன் அது உலகின் சுகம் அடையும் வீதத்தின் உயர் நிலையாகும். எமது பலமான சக்தியாக

அமைந்த ‘தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்தல்’ என்பதே எமது வெற்றிக்கான காரணங்களாகும். கடந்த ஒரு மாத காலத்தில்

எந்தவொரு கொரோனா தொற்றுக்குள்ளானவரும் நாட்டினுள் இனங்காணப்படவில்லை.

கௌரவ அரச தலைவர்களே,

பேண்தகு அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை 2030 இல் அடைந்துகொள்வதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன்

செயற்படுகின்றது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி பொருளாதாரத்தின் மூலம் வறுமையை ஒழிப்பது எனது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

நாம் வருடத்தின் ஆரம்பத்தில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்காக எடுத்த பல்வேறு நடவடிக்கைகளான இறக்குமதியை கட்டுப்படுத்தல் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர

தொழிற்முயற்சியாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதன் மூலம் எதிர்பார்த்த பிரதிபலன்களை அடைந்துகொள்ள முடிந்துள்ளது.

இலங்கை ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்று 65 ஆண்டுகளை கொண்டாடுகின்ற இச்சந்தர்ப்பத்தில், நாம் ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சி நிரலுக்கு பங்களிக்க கிடைத்தமையை ஒரு

பாக்கியமாக கருதுகின்றோம். இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையினருடன் இணைந்து செயற்பட்டதோடு சபையின் பலவேறு விசேட நிறுவன திட்டங்களுக்கும் பங்களித்துள்ளது.

‘உலகம் ஒரு பொதுவானதும் நிகரற்றதுமான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ஒரு சந்தர்ப்பத்தில்இ ‘எமக்குத் தேவைப்படும் ஐக்கிய நாடுகள் சபை’, என்ற சுலோகம் நாடுகளின் இறையாண்மை

சமத்துவத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் ஆள்புல ஒருமைப்பாட்டினை மதித்து அவர்களின் உள்நாட்டு

விவகாரங்களில் தலையிடாதிருப்பதற்கும் உரிய கவனம் செலுத்தும் என்று நான் நம்புகின்றேன்.

கௌரவ அதிதிகளே, ஒரு சிலரின் தேவைக்கு எந்தவொரு நாட்டையும் பணயக் கைதியாக்காமல் இருப்பதன் மூலமே அங்கத்துவ நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு

இடையிலான பங்களிப்புக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மேலாண்மையையும் நிலைத்தன்மையையும் இயன்றளவு

அடைந்துகொள்ள முடியுமாக இருக்கும் என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடான இலங்கை எமக்கு அவசியமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக இந்த

சிறப்புமிக்க அமைப்பை பலப்படுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றியளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது.

எமது மக்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் அதன் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோ தொற்று புதிதாக 12 பேர் அடையாளம்

இலங்கையில் கொரனோ தொற்று புதிதாக 12 பேர் அடையாளம்

இலங்கையில் இன்று காலை வரையில் கொவிட் – 19 தொற்று நோயாளர்கள் 12 பேர் புதிதாக அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள் என்று கொவிட் தொற்று தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

துபாயில் இருந்து 290 பேர் இன்று காலை நாட்டுக்கு வருகை தந்தனர். இந்தியாவில் இருந்து மேலும் சிலர் இன்று நண்பகல்

இலங்கை வரவிருந்தனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக இராணுவ மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்படுவர்.

இந்த மத்திய நிலையங்களில் இருந்த 18 பேர் தனிமைப்படுத்தலை பூரத்தி செய்து இன்று வீடுகளுக்கு செல்லவிருந்தனர்.

இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் 66 தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் 6626 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6.00 மணியளவில் 12 பேர் முழுமையாக குணமடைந்து

வைத்தியசாலைகளில் இருந்து வீடுதிரும்பியுள்ளனர். கந்தக்காடு சிகிச்சை

மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3 இனால் குறைவடைந்துள்ளது.

Covid -19 பரம்பலின் புதுப்பிக்கப்பட்ட தரவுகள் 2020-09-22 14:09:19

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் – 3299

சிகிச்சை பெறும் நோயாளிகள் – 168

குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை – 3118

Posted in இலங்கை செய்திகள்

விசாரிக்க படும் மைத்திரி – கைதாவாரா ..?

விசாரிக்க படும் மைத்திரி – கைதாவாரா ..?

இலங்கையி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல்

21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும்

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

இவர் தனது சடடதரணியுடன் அங்கு பிரசன்னம் ஆகியுள்ளார்

கோட்டா அரசில் பழிவாங்கும் அரசியல் இடம்பெற்று வரும்

நிலையில் இவ்விதம் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

சாப்டான இட்லி 10 நிமிடத்தில் சட்டுனு இப்படி செய்து அசத்துங்க - சூப்பரான இட்லிரெடி
Posted in இலங்கை செய்திகள்

முல்லையில் பெரும் புயல் எட்டு வீடுகள் சேதம்

முல்லையில் பெரும் புயல் எட்டு வீடுகள் சேதம்

இலங்கை வடக்கு முல்லைதீவில் பலமாக வீசிய காற்றின்

காரணமாக எட்டு வீடுகள் கடுமையாக சேதமாகியுள்ளன

பாதிக்க பட்ட மக்களுக்கு உதவிட அனர்த்த முகாமைத்துவ அமைச்சு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது

பலமான காற்றும் கரையை கடக்கும் பொழுது

இவ்விதமானநிகழ்வுகள் இடம்பெற கூடும் என முன்னர் எச்சரிக்கை

பட்டிருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

20 ஆவது திருத்தச் சட்டமூல பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

20 ஆவது திருத்தச் சட்டமூல பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

அரசியல் யாப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நீதியமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான மொஹம்மத் அலி சப்ரி இதனை சமர்ப்பித்தார்.

இதன்போது எதிர் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் பதாதைகளையும் சபையில் ஏந்தி நின்று எதிர்ப்பு கோஷம்

எழுப்பினர்.Capture Parliment Oppசட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் எந்தவொரு பிரஜையும் அதற்கு எதிராக

நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்யலாம். அவ்வாறு மனுவொன்று தொடுக்கப்படாத பட்சத்தில், மக்களவையில் 7

நாட்களின் பின்னர் 20 ஆவது திருத்தத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமாகும்.

இரண்டாவது வாசிப்பின் மீதான விவாதத்தின் முடிவில் திருத்தச் சட்டமூல பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்படும். இதன் போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பிரேரணை

அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் குழு நிலை விவாதத்தில் பிரேரணையின் சகல ஷரத்துக்களும்

பரிசீலிக்கப்படும். இந்தச் சமயத்தில் திருத்தங்களை பிரேரிக்கலாம். பின்னர் மூன்றாம் வாசிப்பின் மீதான விவாதத்தை அடுத்து பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.

அரசியல் யாப்பின் மீதான 20 ஆவது திருத்தத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்தும்

பரிசீலிப்பதற்காக பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதற்கு

அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது